RSS

வைரஸ் / குட்டிக்கதை

மாம்ஸ். என்னோட பர்சனல் இமெயில்ல வைரஸ் தாக்கிருச்சு தெரியுமா ...காலையில் அலுவலகம் வந்தவுடன் மென்மையாக அரற்றினான் க்ருஷ்.

ஏன் என்ன ஆச்சு ? எப்படி ஆச்சு ? என்ன செய்யுது ? கேள்விமேல் கேள்விகளை அடுக்கினான் சுதாகர்..

என்னோட கடவுச்சொல்லை (பாஸ்வேர்ட்)தெரிஞ்சு வச்சுக்கிட்டு எனக்கு வரும் இமெயில் எல்லாத்தையும் படிச்சுடுது டா...

அப்புறம் ?

மொக்கையான இமெயிலை மட்டும் விட்டு வெச்சுட்டு மத்ததை டெலீட் பண்ணிடுது.

அட ?

என்னோட தங்கச்சி, அண்ணன் யார்க்கிட்ட இருந்தாவது இமெயில் வந்தா அதையும் டெலீட் பண்ணிடுது..

இங்கபார்ரா ??

யாராவது பணம் கடன் கேட்டு மெயிலோ சேட்டோ செய்தா அதை அப்படியே த்ராஸுக்கு அனுப்பிடுது...

அட...ஏன் இந்த கொலைவெறி ?

இதுக்கே அசந்துட்டா எப்படி...இதைக்கேளு...பழைய க்ளாஸ்மெட் ஒருத்தி அனுப்பின மின்னஞ்சலுக்கு ஏதோ திட்டி கூட பதில் அனுப்பியிருக்கு..

நிஜம்மாவா ? என்ன வைரஸ்டா அது ? யாருடா உருவாக்கியிருப்பா அதை ?

வேற யார் ? என்னோட மாமனார்தான்...

..

..

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறுங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறுங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

சிகரெட். இன்னொரு ஒரு பக்க கதை.

என்னுடைய காதலியின் முறைப்பின் சூடு தாங்காமல் இரண்டடி பின்னேறினேன்.

டேய் ? ஏன்டா இப்படி பண்ண ? எங்கிட்ட செய்துகொடுத்த சத்தியம் என்னாச்சு ?

ஹோல்ட் ஆன். கூல். சொல்றேன்மா. சொல்றேன்...

நான் செய்தது என்ன என்று உங்களுக்கும் சொல்லிவிடுகிறேன். ஒரு ரெண்டு நிமிடம் முன்னால்.

அவள் அற்புதமான அழகி. எங்களைப்போலவே பார்க் பெஞ்சில். தனியாக. பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட் எடுத்து பற்றவைத்தாள்.

நான் தடாலென எழுந்தேன். பத்தே வினாடிகளில் அவளை சமீபித்தேன். அவளிடம்..

மேம். ஒரு சிகரெட் கிடைக்குமா ? என்றேன்.

அவள் பெரிதாக யோசித்ததாக தெரியவில்லை. பாக்கெட்டை நீட்டினாள். ஒன்றை உருவிக்கொண்டு, ஒரு தாங்யூ உதிர்த்துவிட்டு, அவளது ஸ்மைலியை பெற்றுக்கொண்டு என் இடத்துக்கு திரும்பினேன்..

இப்போ மறுபடி நிகழ்காலத்தில். முறைப்பு கொஞ்சமும் குறையாமல் மீண்டும் என்னவள் கடித்தாள்..

டேய் ? ஏன்டா இப்படி பண்ண ? எங்கிட்ட செய்துகொடுத்த சத்தியம் என்னாச்சு ?

நான் கொஞ்ச நாளா இதைத்தான்மா பண்றேன். யாராவது ஸ்மோக் பண்ணா அவங்கக்கிட்ட அப்ரோச் பண்ணி, ஒரு சிகரெட் கேட்பேன். அதை கொடுத்தால் வாங்கிக்கிட்டு வந்திடுவேன். நான் அதை ஸ்மோக் பண்ணமாட்டேன். உன்னோட பெயரை ஒருமுறை மனசுல நெனைச்சுக்கிட்டே தூக்கி எறிஞ்சுடுவேன்.

அதான் ஏன் ??? இப்போது ஆச்சர்யக்குறியான கண்களுடன் என்னவள்.

ஸ்மோக் பண்றதால வர்ர கெடுதல் எல்லாம் நீ எனக்கு புரியவெச்ச. ஆனா உன்னை மாதிரி தங்க கட்டி எல்லோருக்கும் கிடைக்குமா ? ஆனா அவங்க ஸ்மோக் பண்றதை பார்த்தால் அவங்க இதயமும் நுரையீரலும் காயப்படுறதை நினைச்சு வருத்தப்படுவேன். அப்புறம் இந்த ஐடியா தோனுச்சு. அவங்கக்கிட்ட ஒரு சிகரெட் வாங்கி, அதை தூக்கி எறிஞ்சுடுவேன். அட்லீஸ்ட் அவங்களோட சாவை ஒரு நாளைக்காவது தடுக்கலாம் இல்லையா ?

அதற்குமேல் நாங்கள் எதுவும் பேசவில்லை. நச் நச். இச்.இச்..

ழ + சாட் லவ் இரண்டு ஒரு பக்க கதைகள்

'ழ'

***************************************************

துறைத்தலைவர் சொன்னார்..கல்வி அமைச்சர் அவசரமாக கேட்டதால் அழைப்பிதழில் கூட என் பெயரை அச்சடிக்க அனுப்பிவிட்டாராம்.. ஒருமுறை கிள்ளிப்பார்த்துக்கொண்டேன். அரசின் உலக தமிழ் மாநாட்டில் பேச எனக்கு அனுமதியா ? நான் இரா.சிவராசு. வருமானத்துக்கு வழியில்லாத மாநிலக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்.

மனைவிக்கும் மகளுக்கும் தாளமுடியாத சந்தோஷம்..விடயத்தை கூறியதும்..மகள் இரண்டு அடிக்கு மேல் துள்ளினாள்...அப்பா..மூன் டிவியில லைவ்வா காட்டுவாங்க இல்லையா ?.

'நேரலை'ன்னு சொல்லு..ம்..கண்டிப்பாக காட்டுவாங்க...

தமிழின் தனிச்சிறப்பான 'ழ' என்று பெயரிட்டு இரவு பகலாக அமர்ந்து தமிழின் சிறப்பை கட்டுரையாக தயார் செய்தேன்.

அந்த நாளும் வந்தது. விழா மேடை. உலகத்தமிழர்களால் அரங்கு நிரம்பியிருக்க..எனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு சில வினாடிகளுக்கு முன் விழா அமைப்பாளர் என்னை ஓரமாக தள்ளிக்கொண்டு போனார்.

அப்புறம் சிவராசு, கல்லூரி பணியெல்லாம் எப்படி இருக்கு ?

அய்யா, என்னுடைய நேரம் வந்துவிட்டது, நான் கட்டுரை வாசிக்க செல்லவேண்டும்.

அது வந்து...சிவராசு...அமைச்சர் வீட்ல 'தம்பி' மேடைல பேசனும்னு அவர் வீட்டம்மா ஆசைப்பட்டாங்க. அதனால...என்று கொஞ்சம் தர்மசங்கடமாக இருப்பது போல முகத்தை வைத்துக்கொண்டு....இழுத்தார்..

அங்கே மேடையில்,

'தம்பிக்கு' தகுந்தபடி கூன் வளைத்து நிறுத்தப்பட்ட ஒலிப்பெருக்கியில்.

குட்மார்னிங் டு ஆல். நான் இப்போ திருக்குறல் சொல்லப்போறேன்.

அகர முதல எலுத்தெல்லாம் ஆதி
பகவன் முதர்ட்டே உயகு

பலத்த கரகோரங்களுடன் 'திருக்குறல்' சொல்லிக்கொண்டிருந்தார் மாண்புமிகு கல்வி அமைச்சரின் ஆறு வயது பேரர்.

***************************************************

சாட் லவ்.
***************************************************

அவன் - ஹாய்

அவள் - ஹாய். எஸ்ஸ்.

அவன் - வாட்ஸ் யுவர் நேம் யா ?

அவள் - ஸ்வேதா

அவன் - ஸ்வீட் நேம்.

அவள் - எங்கே இருந்து பேசுறீங்க ?

அவன் - நான் சென்னையில் தான். ஒரு ஐடி எம்.என்ஸியில் டீம் லீடர்.

அவள் - சோ நைஸ். நானும் சென்னை தான்.

அவன் - ஆர் யூ ஹிண்டு

அவள் - எஸ். ஸ்வேதான்னா ஹிண்டுன்னு தெரியாதா ? பட் உங்க நேம் நாகப்பன் அப்படீன்னு இருக்கு ?

அவன் - எஸ். வீ ஆர் செட்டியார்ஸ்.

அவள் - செட்டியார். வெரி குட். நாங்களும் தான்..என்ன சப் கேஸ்ட்?

அவன் - வீ ஆர் நாட்டு கோட்டை செட்டியார்ஸ். யூ ?

அவள் - வீ ஆல்சோ நாட்டுகோட்டை செட்டியார்ஸ்.

அவன் - ஐ லவ் யு.

அவள் - மீ டூ.

***************************************************

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி - ரஷ்ய அதிபர் திமித்ரி திடீர் அங்கீகாரம்

டெல்லி பிப் 8 2025: இலங்கை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று ரஷ்ய அதிபர் டிமித்ரி விளாடிமிர் திடீரென அங்கீகாரம் அளித்துள்ளார்.

இந்தியாவில் விஜயம் செய்து வரும் புடின் டெல்லியில் இந்திய அதிபர் ராகுல் காந்தியை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இலங்கை என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அதேசமயம், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு விரைவில் பேச்சுவார்த்தைகள் தொடங்க வேண்டும் என்பதையும் ரஷ்யா விரும்புகிறது.

இந்தத் தலைமுறையின் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து ரஷ்யா மீளுவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பும் உதவியுள்ளது என்றார்.

பின்னர் ராகுல்ஜி பேசுகையில், இந்தியாவின் இறையாண்மை குறித்த விவகாரங்களில் ரஷ்யா சிறப்பான நிலையை வெளிப்படுத்தியுள்ளது மகிழ்ச்சி தருகிறது. இதற்காக அதிபர் டிமித்ரியை நாங்கள் பாராட்டுகிறோம்.

ஒரே இந்தியா என்ற தத்துவத்தை ரஷ்ய அதிபர் வலியுறுத்துவதையே இலங்கை குறித்த அவரது கருத்து வெளிப்படுத்துகிறது என்றார்.

முன்னதாக சமீபத்தில் சரத் பொன்சேகா மாஸ்கோ வந்தபோது அவரை பார்க்க மறுத்து விட்டார் திமித்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இலங்கையை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ரஷ்யா அங்கீகரித்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

நன்றி / தட்ஸ்தமிழ்