Monday, June 12, 2006

ஜோதிடம் உண்மையா - பொய்யா....

சந்திரமுகி படத்தில் வடிவேலு ரஜினியை பார்த்து கேட்பதுபோல் கேட்க தோன்றுகிறது...

இருக்கா இல்லையா....பாத்திருக்காங்களா...பாக்கலையா....என்று...

இன்று செய்தித்தாளில் படித்த ஒரு செய்தியும், இரண்டு நாட்களுக்கு முன் ஒரு நன்பர் கூறிய செய்தியும் இப்படி ஒரு பதிவு எழுத தூண்டுகிறது என்னை...

இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஜோதிட தேர்வு எழுதுகிறார்...இது பற்றி அதிகம் கூற விரும்பவில்லை...என்ன ஒரு பகுத்தறிவு...

என் நன்பர் ஒருவர் ராமநாதபுரத்தில் ஒருவர் ரூ 21 பெற்றுக்கொண்டு கடந்தகாலம், நிகழ்காலம், வருங்காலத்தினை புட்டு புட்டு வைக்கிறாராம்...

அவர் புகைப்படத்தினையும் காட்டினார் ( மொபைல் காமிராவில் எடுத்தது ) - கைலி அணிந்த ஒரு ஒல்லிப்பிச்சான் நபர்...

நன்பரிடம் நான் கட்டிய பந்தயம், நான் வருகிறேன் ராமநாத புரத்திற்க்கு...என்னை பற்றி ஒரு விஷயம் சொல்ல சொல்லு...நான் நம்புகிறேன் ஜோசியத்தினை...அப்படி நீ தோற்று விட்டால், ஜோசியம் பொய் என்று ஒத்துக்கொள்ளவேண்டும்...

சில ஆண்டுகளுக்கு முன் சிதம்பரம் நாடி ஜோதிடம் என்பதினை பற்றியும் கேள்விப்பட்டேன்...நமது தலைஎழுத்து ஏற்க்கனவே டாக்குமண்டேஷனாகி இருப்பதாக சொன்னார்கள்...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்....

20 comments:

லக்கிலுக் said...

கொஞ்ச நாளைக்கு முன்னாடி இங்கே வலைப்பூக்கள்ள நிறையப் பேர் காழியூர் நாராயணின் தேர்தல் ஜோதிடக் கணிப்பினைப் போட்டிருந்தார்கள்.... அது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு தான் ஜோதிடமும் உண்மை.....

அனுசுயா said...

கடைசியா ராமநாதபுரம் போனீங்களா இல்லையா?

ரவி said...

லக்கி...அருமையாக அரசியலை நுழைத்துவிட்டீரே...

:)

இனிமேல் தான் போகப்போகிறேன் அனு அவர்களே..

Anonymous said...

துக்ளக் 2ம் பக்கத்தில் "வரதன் "எனும் 92 வயதுப் பெரியவர்,சாத்திர விளம்பரம் போடுகிறார்; அவரிடம் சென்று வந்து; சொல்லுங்க!! நான் ஒருவிடயம் சாத்திரத்தை நம்புவதா??,,,, விடுவதா??? என்பது பற்றிச் சொல்லுகிறேன்.
யோகன் பாரிஸ்

நான் துக்ளக் படித்ததே கிடையாது யோகன் அவர்களே...சின்ன வயதில் அப்பா கொண்டுவருவார்...

நீங்கள் சொல்லுங்களேன்...சோதிடம் எந்த அளவுக்கு உண்மை ??

Anonymous said...

தன்னை நம்பும் தைரியம் இருந்தால்; நாளேன்ன ??? பொழுதேன்ன,,,,???;படுக்குப் போது,அன்று பூரா நீங்கள் அடுத்தவர்களுக்குச் செய்த கூடாததைப் பட்டியலிடுங்க!!!; மீண்டும் அவற்றைச் செய்வதில்லை எனும் முடிவுக்கு வாங்க!!!!,நீங்க சாஸ்திரமென்ன,,, கோவிலைக் கூட (கோபுர அழகையோ,,,,பிகரோ,,,,!!தாராளமாகப் பார்க்கலாம்!!)பார்க்கத்தேவை இல்லை.
யோகன் பாரிஸ்

Muthu said...

ரவி,

உங்கள் அரசியல் நிலைகளின் மேல் எனக்கு கடுமையான விமர்சனம் இருந்தாலும் இந்த பதிவு பிடித்திருந்தது. இதைப்பற்றி என் பதிவை பார்க்கவும்.

http://muthuvintamil.blogspot.com/2006/02/blog-post_114018007788846400.html

ரவி said...

முத்து, உங்களிடம் இருந்து வந்த பின்னூட்டத்தை பெருமையாக கருதுகிறேன்....

யோகன்...சூப்பரா அடிச்சீங்க...

Anonymous said...

ஜோதிடத்தினை நம்பாதவர் உருப்பட்டதா சரித்திரமே இல்லை

ரவி said...

பகுத்தறிவோடு சிந்திப்பவர் அழிந்ததாகவும் சரித்திரம் இல்லை அன்பரே...

கோவி.கண்ணன் said...

சோசியக்காரன் சோசியம் பார்த்துத்தான் வயிறு வளர்க்க மேண்டுமென்பது உண்மை.
சோசியம் உண்மையா பொய்யான்னு தெரிய வேண்டுமென்றால் ஒரு கிளியை வளர்த்துத் தான் பாருங்களேன். :)

ரவி said...

அடிச்சாரு பாரு நெத்தியடி...

மிதக்கும்வெளி said...

ஜோசியம் மாதிரியான டுபாக்கூர் விஷயங்களுக்காக எல்லாம் பக்கத்தை வீணடிக்கலாமா?

ரவி said...

என்ன செய்வது மிதக்கும் வெளி...மூட பழக்கவழக்கங்களில் ஊறித்திளைத்த தலைமுறை, இனிவரும் தலைமுறையை விட்டுவைக்காது போலிருக்கே...

Anonymous said...

Hi Ravi
Sorry..i do not have tamil unicode installed, so writing in English.

it is a belif...trust...faith of the individual

We all know abt Saturn Transit,Jupiter Transit
and all poojas done at places like Thirunallar
Scientific reason behind this (as far as i know) is on that particular
day the rays will fall in that particular place.

But astrology now a days has become business....except for some

If we are interested upon the planets and its impact on human beings
definitely we can take it as an hobby or carrer and can read abt it

so i dont feel any wrong in election commissioner writing the exam.
it is his belif...thrust...faith

Anonymous said...

Sorry..i do not have tamil unicode installed, so writing in English.

it is a belif...thrust...faith of the individual

We all know abt Saturn Transit,Jupiter Transit
and all poojas done at places like Thirunallar
Scientific reason behind this (as far as i know) is on that particular
day the rays will fall in that particular place.

But astrology now a days has become business....except for some

If we are interested upon the planets and its impact on human beings
definitely we can take it as an hobby or carrer and can read abt it

so i dont feel any wrong in election commissioner writing the exam.
it is his belif...trust...faith of the individual

ரவி said...

தமிழில் தருகிறேன்..

it is a belif...trust...faith of the individual

(ஜோதிடம் தனிப்பட்ட ஒருவரின் நம்பிக்கை அடிப்படையிலானது)

We all know abt Saturn Transit,Jupiter Transit
and all poojas done at places like Thirunallar
Scientific reason behind this (as far as i know) is on that particular
day the rays will fall in that particular place.

சனி பெயர்ச்சி / வியாழன் பெயர்ச்சி பற்றி அனைவரூம் அறிவோம்..திருநள்ளாரு சனீஸ்வரன் கோயில் பற்றி குறிப்பிடுகிறார்..ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சூரியக்கதிர்கள் விழுகின்றன..

But astrology now a days has become business....except for some

இப்போது சோதிடம் ஒரு பிசினஸ் ஆகிவிட்டது..ஒரு சிலவற்றினை தவிர

If we are interested upon the planets and its impact on human beings
definitely we can take it as an hobby or carrer and can read abt it

ஆகவே கோள்கள் தனிப்பட்ட முறையில் மனித வாழ்க்கையை பாதிக்கின்றன என்றும், அதை படிப்பதில் தவறில்லை என்றும் கூறுகிறார்..

so i dont feel any wrong in election commissioner writing the exam.

அதனால் எலக்ஷன் கமிஷனர் ஜோதிடப்பாடம் படிப்பதில் தவறில்லை என்கிறார்..

it is his belif...thrust...faith

அது அவர் நம்பிக்கை என்றும் கூறுகிறார் அனானி நன்பர்.

ரவி said...

அனானி அவர்களே...நான் பல சோதிடப்புத்தகங்களை பார்த்திருக்கிறேன்...அதில் எல்லாம் கோள்கள் ஒன்பது என்று உள்ளன...

ஆனால் அமெரிக்க நாஸா 12 கோள்கள் வரை கண்டறிந்துவிட்டார்களே...ஒரு வேளை நாஸா கதை விடுறாங்களா ?

திருநள்ளாறு கோயிலில் விழுவதுபோல் கன்யாகுமரி விவேகானந்தர் கோயிலிலும் விழுவதாக நன்பர் கூறுகிறார்...

சோதிடம் இறை நம்பிக்கையுடன் சம்பந்தம் கொண்டது தமிழகத்தில்..ஆகவே இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்...

அரவிந்தன் நீலகண்டன் said...

//திருநள்ளாறு கோயிலில் விழுவதுபோல் கன்யாகுமரி விவேகானந்தர் கோயிலிலும் விழுவதாக நன்பர் கூறுகிறார்..//

கன்னியாகுமரியில் இருப்பது விவேகானந்தர் பாறை - நினைவுச்சின்னம் கோவில் அல்ல. இரண்டாவது சூரிய ஒளி அக்டோபர் 2 அன்று கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள ஒரு இடத்தில் சரியாக விழும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வானியலும் பொறியியல் நிபுணத்துவமும் சார்ந்தது. இதற்கும் சோதிடத்துக்கும் தொடர்பு இல்லை.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....