தேடுங்க !

Friday, June 30, 2006

பின்னூட்ட நாயகர் கோவி.கண்ணன்

எப்போ பார்த்தாலும் ஒரு நக்கல்...நையாண்டி...எத்தல்...எகத்தாளம்...நாகப்பட்டினத்துல இருந்து புல் பூஸ்டுல வந்தமாதிரி இங்கும் இருக்கார்..அங்கும் இருக்கார்...எங்கேயும் இருக்கார்...ஆனால் நக்கலுக்கு மட்டும் பஞ்சமில்லை...

அவர்தான் கோவி.கண்ணன்...ஏற்க்கனவே பின்னூட்ட நாயகி பட்டத்தை துளசியக்கா கொத்திக்கிட்டு போயிட்டாங்க...அதனால கோவி.கண்ணனை பின்னூட்ட நாயகராக அறிவிக்கிறேன்...

அதாவது நான் முன் மொழிகிறேன்...வழிமொழியறவங்க பின்னாலே பன்னலாம்..

கவிதையும் எழுதுவார்..ஒரு பின்னூட்டத்துல கோடு கவிதை (புள்ளியை கோடாக்கினார்)

எஸ்.கேவை கலாய்த்த யதார்த்த நக்கல் ...

யதார்த்ததின் யதார்த்தம் என்னவென்றால்யதார்த்தம் யதார்த்த வாழ்க்கைக்குயதார்த்தமாக இருப்பதில்லை :)

பதிவுல தலை போற பிரச்சினை ஓடிக்கிட்டு இருக்கும்...இவர் நடுவுல பூந்து யாரையாவது கலாய்ப்பார்..

திம்மித்துவத்திற்க்கு கொடுத்த நக்கல் விளக்கம்...

அப்பு யோரோ பம்முறப்ப தும்மிட்டாங்க ... தும்மல மறைக்க மறுபடியும் பம்ம வேண்டியாத போச்சு அன்னிக்கு வந்துதான் பம்மத்துவம் ... சாரி திம்மித்துவம்
என்னுடைய இந்த பதிவுக்கு அதிக பின்னூட்டம் வந்ததுக்கு அவர் செய்த கலாட்டா...

ரவி,இது கொஞ்சம் ஓவரா இல்லை ?நாளு வரி எழுதிவிட்டு 40+ பின்னூட்டம். ஓ இதுக்குத்தான் 'தீ' பிடிக்கும் பதிவா எழுதனுமா ?

வெறுமே கலாய்ப்பதோடு தின்னையிலும் எழுதி இருக்காரு போல..கூகுள் கூட்டிப்போகுது...

என்ன பட்டம் கொடுத்திடலாமா இல்லை ஏதும் மாற்று கருத்து இருக்க ??

அன்புடன்,
செந்தழல் ரவி

என் செல்போன் தொலைந்த கதை -1

செல்போன் தொலைந்து போகாமல் இருப்பதற்க்கு என்ன செய்யவேண்டும் என்று கார்த்திகேயன் தனது தமிழ்ப்பூவில் ஐடியாக்களை கொட்டி இருக்கிறார்....அங்கு பின்னூட்டமிடப்போய் அது நம்ம வாழ்க்கை வரலாற்று சாறாகிடுத்து...அதனால போட்டேன் ஒரு தனிப்பதிவு...

நான் தொலைத்தது மொத்தம் மூனு செல்போன்...இது முதல் பதிவு..மத்தது ( மலேசியா ஏர்போர்ட் / பெங்களூர் ) பின்னாலியே வருது...

இத்தை மின்னாடியே சொல்லுறதுக்கென்ன அப்பு...47D பஸ்ஸுல என் செல்லை தொலைச்சி இருக்கமாட்டேன் இல்லையா...
என் சொந்தக்கதை சொல்லுறேன் கேளுங்க...

கி.பி 2000 ஆண்டு அப்படின்னு நினைக்கிறேன்..சென்னையில் அதிக செல்போன் புழங்காத நேரம்...ஆண்டனோவுடன் கூடிய - இன்கம்மிங் சார்ஜ் ஆகக்கூடிய - பேனாசோனிக் போன் வைத்திருந்தேன்..(எங்க அப்பாவிடம் சுட்டது)...

ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு போய்க்கிட்டு இருக்கேன்..பஸ்ஸுல அவ்வளாவா கூட்டம் இல்லை..எஸ்.ஆர்.சி காலேஜ் பக்கம் நல்லதா நாலு பிகர் பஸ்ஸுல ஏறுச்சி...நமக்கு தான் சீன் போடலனா உடம்பு தாங்காதே...

விளையாடியது விதி...செல்லை எடுத்து (கால் எதுவும் சத்தியமா வரவில்லை) அப்படியே பந்தாவா ஒரு லுக்கு விட்டுட்டு - மேல் பாக்கெட்டுல போட்டேன்...

அப்பத்தான் கடைசியா பாத்தது...அந்த நடவடிக்கையால் பிகர்களின் கவனத்தை ஓரளவு திசை திருப்ப முடிந்தது...ஸ்டாப் வந்தவுடன் இறங்கி பாக்கெட்டை தடவி பார்த்தால் - போயே போச்சு...செல்லு கானாமே போச்சு...
ஆட்டோக்காரன் ஒருவனிடம் வண்டியை துரத்தச்சொல்லி 50 ரூ ஆட்டோ சார்ஜ் போனது தான் மிச்சம்..ஆட்டோவாலா சொல்லியபடி டிப்போவுக்கே போய் பார்த்தேன்..

கண்டக்டர் சொன்னாரு...அது ஆறிப்போயிட்டிருக்கும் தம்பி...இப்ப வந்து தேடுற..(ரிலையன்ஸ் போன் பேசினா சூடாகும் என்று கணித்த தீர்க்கதரிசி)

அப்புறம் என்ன - செல்போனை மேல்பாக்கெட்டுல வைக்கிறது இல்லை என்று முடிவுசெய்தேன்...அப்படியே வெச்சாலும் சீன் போடுறதுக்காக எடுக்கறது இல்லைன்னும் முடிவெடுத்தேன்....

திம்மித்துவம் அப்படின்னா என்ன ?

நானும் மண்டையை உடைச்சி யோசிச்சு பாற்க்கிறேன்...எனக்கு புரியவே மாட்டேங்குது...இன்னாபா அது திம்மி....

டம்மி கேள்விப்பட்டிடுக்கேன்..

வெளிய சூப்பரா இருக்கும்...ஆனா உள்ளார எதுவும் சரக்கு இருக்காது....

அம்மி கேள்விப்பட்டிருக்கேன்..

கல்லுமாதிரி இருக்கறத கூட எல்லாம் வழவழன்னு மாவுமாதிரி ஆக்குறது...அரைச்சி அரைச்சி...

பம்மி கேள்விப்பட்டிருக்கேன்..

பிரச்சினை பெருசாயிடுச்சின்னா அப்படியே பம்முறது...அதாவது எல்லாத்தையும் பன்னிட்டு அப்பாவிமாதிரி மூஞ்சிய வச்சிக்கறது...அல்லது எனக்கு எதுவும் தெரியாது அப்படிங்கறது...

நம்மி கேள்விப்பட்டிருக்கேன்..

பச்சக்குதிரை நமீதாவுக்கு பார்த்தீபன் வச்சி இருக்க செல்லப்பேரு...

ஆனா இந்த திம்மிதான் என்னன்னே புரியமாட்டேங்குது....யாராவது கொஞ்சம் சொல்லுங்களேன் பா பிளீஸ்...

கைப்புள்ளை காலிங் பெப்சி உமா

சங்கத்து ஆட்கள் எல்லாம் கோவிச்சுக்காதீங்க...இன்னைக்கு கைப்பு என்கிட்ட வசமா மாட்டிக்கிட்டார்....

ஓசியில் டீயும் சிகரெட்டும் கிடைக்குமான்னு பார்க்க டீக்கடைப்பக்கம் ஒதுங்குனாரு நம்ம கைப்பு....கடையில இருக்க கடனுக்கு ஒரு பொறை கூட சும்மா தரமாட்டான்னு தெரியும்...ஆனா சும்மா ஒரு லந்துக்காக நாலு அரை டவுசர் பசங்களோட - பக்கத்தூரு திருவிழாவுல் சுட்ட கட்டைசெருப்பு தரையில் தேஞ்சு தீப்பொறி கிளம்ப வந்துட்டாரு...

அங்க நம்ம தலை கைப்பு டென்சன் ஆகுறமாதிரி ஒரு சம்பவம் நடந்த்து...இந்த சம்பவம் கைப்பு மனதுல ஒரு வெறியை ஏற்ப்படுத்திருச்சி...சங்கத்து பயலுக எல்லாம் அவமான பார்வை பாக்குறானுங்க தலையைப்பார்த்து...இந்த சம்பவத்தால தலை கைப்புவை யாரும் மதிக்காத நிலை உருவாகுற சூழ்நிலை...

சம்பவம் - சம்பவம் அப்படீங்கறேனே - அது என்ன சம்பவம் அப்படீங்கு கேக்குறீங்களா...அதாவது என்னன்னா, கட்டதுரையோட ஒரு ஆளு டீ கடையில இப்படி பீத்திக்கிட்டான்...எப்படின்னு கேக்குறீங்களா...அட சொல்லுறேங்க...அவன் பெப்சி உமாவோட போனுல பேசி அது டிவீயிலயும் வந்திடுத்து....

இதுல பிரச்சினை என்னான்னா தலை கைப்பு பலநாளா பெப்சி உமாவோட போனுல பேச டிரை பன்னிக்கிட்டுதான் இருக்காரு...ஆனா லைன் கிடைக்கல...அவனுக்கு லைன் கிடைச்சது - அதுவும் அவன் டிவீயில பாட்டு கேட்டு - அதை ஒலிபரப்புனது எல்லாம் சேந்து சங்கத்து சிங்கங்களை உசுப்பிருச்சி....

தலையை அப்ப அப்ப செத்து செத்து விளையாட கூப்பிடும் சின்ன சிங்கம், ஒரு ஐடியாவை சொல்லுச்சி...அது என்னன்னா யோக்கியனுக்கு இருட்டுல என்ன வேலை அப்படீங்குற தத்துவத்தை மொழிந்த ஆளு அதே ஊர்ல தான் இருக்கான்..அவனை சங்கத்துல சேத்துட்டா - அவன் புத்திசாலித்தனத்தால எப்படியாவது பெப்சி உமாகூட பேசிடுறது அப்படின்னுதான்...

சின்ன சிங்கம் - பேசி கரெக்ட் பன்னி கூட்டாந்து கைப்புவோட ஒரு மீட்டிங் ஏற்ப்பாடு பன்னபிறகுதான் தெரியுது...தலை கைப்பு இவ்வளவு நாள் நம்பருக்கு முன்னால எக்ஸ்ட்ரா நம்பர் போடாம் டிரை பன்னிக்கிட்டு இருக்கறது...

அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே அப்படின்னு நொந்துபோயி, தலை முதல் முறையா எஸ்.டி.டி போட்டு பெப்பிசி உம்மாவுக்கு போன் போடுது....

ஹல்லோ....ஹல்லோ...ஹல்ல்ல்லோ....

யோவ் யாருய்யா அது லோ லோ னு கத்துறது....

ஆகா...லைன் கிடைச்சிடுச்சிய்யா...கிடைச்சிடுச்சிய்யா...

(சங்கத்து சிங்கங்கள் உற்சாக துள்ளல் போடுறாங்க)

அலோ...உங்க வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்ட இருக்குங்க...

மறுமுனையில் - உமா

அப்படியா ரொம்ப தேங்ஸ்..இன்னும் நான் பேசவே ஆரம்பிக்கல..அதுக்குள்ள வாய்ஸ் சுவீட்டா இருக்குன்னு சொல்றீங்க...

கைப்பு : அப்படி ஆரம்பிச்சாத்தான் பேசுவீங்கன்னு சங்கத்து சிங்கம் சொல்லுச்சி மேடம்..ஹி ஹி

உமா : உங்க டி.வி. வால்யூம் கம்மிபன்னிக்கோங்க..

கைப்பு : நான் பேசுறது எஸ்.டி.டி பூத்துல இருந்து - எக்ஸ்ட்ரா நம்பர் போட்டு மேடம்..

உமா : ஓ அப்படியா எனக்கு சொல்லி சொல்லி பழக்கமாயிடுச்சி...இனிமே நான் பெப்சி உமா இல்லை..ஆச்சி உமா...சரி சொல்லுங்க....உங்க பேர் என்ன - எந்த ஊர் என்ன வேலை பாக்குறீங்க...

கைப்பு : ஓ..நீங்க பாட்டியாயிட்டீங்கன்னு சொல்லவேயில்லையே..நான் ஆட்டையாம்பட்டியில இருந்து கைப்புள்ள பேசுறேன் மேடம்..உங்களுக்கு 12 வருஷமா டிரை பன்னுறேன்...எக்ஸ்ட்ரா நம்பர் போடாத்தால பேசமுடியாம போச்சு...நான் சங்கத்தலைவரா இருக்கேன் மேடம்..

உமா: நக்கலா...(வைக்கிறேன் ஆப்பு) சங்கம் எல்லாம் வச்சிருக்கீங்களா...சரி இன்னைக்கு சிறப்பு விருந்தினரா ஒரு நடிகர் வந்திருக்கார்...

அவர்தான் நடிகர் பார்த்தீபன்...அவர்கிட்ட பேசுங்க....

டீவிக்குள்ளகூடியும் வர ஆரம்பிச்சுட்டானா...கைப்பு பட்டென போனை துண்டித்து அப்பீட் ஆகிறார்...

Wednesday, June 28, 2006

வலைப்பதிவரை காணவில்லை

என்னுடைய இந்தப்பதிவில் ஒரு முக்கியமான வலைப்பதிவர் தன்னிலை விளக்கம் அளிப்பார் என்று காத்திருந்தோம்...

இன்று வரவில்லை.....அவர் அன்னை தெரசாவை அவதூறு செய்யவில்லை என்று சில - பல வலைப்பதிவர்கள் கூறுகின்றனர்...அவர் தன்னிலை விளக்கம் அளித்தால் தானே உண்மை தெரியும்....

ஆனால் வரவும் இல்லை...விளக்க பின்னூட்டம் தரவும் இல்லை....அவரை தேடி இந்த பதிவு...

வாப்பா மின்ன்ன்ல்லு....

அன்புடன்,
செந்தழல் ரவி

Tuesday, June 27, 2006

திருந்தவே மாட்டீங்களாப்பா நீங்க..

ஜெயராமன் அவர்களுடைய பதிவில் அன்பர் மியூஸ் போட்ட பின்னூட்டம்..

சிலர் புனிதர் பட்டத்திற்காக கேமராக்களின் முன்பு தொழுநோயாளிகளுக்குச் செய்யும் சேவைகளின் மதிப்பும் உண்மையில் குறைவுதான் என்கிற வகையிலும் நான் இந்தக் கதையைப் புரிந்து கொண்டேன்.

என்ன கொடுமை அய்யா இது...நான் ஒரு பின்னூட்டம் இட்டு இருந்தேன்...அதாவது மியூஸ் அவர்களே...நீங்கள் அன்னை தெரசாவைதான் சொல்லுகிறீர்கள் என்று முதலில் சொல்லுகிறேன்...பிறகு என் வாதங்களை எடுத்து வைக்கிறேன் என்று...இது வரை வெளிவரவில்லை...ஆகவே பதிவு போடவேண்டிய கட்டாயம்....

என்ன ஒரு அவதூறு மனோபாவம் பாருங்கள்....இதை படிக்கும் ஒவ்வொருவரிடமும் நியாயம் கேட்கிறேன்...இதுபோன்ற புழுதியை வாரி தூற்றும் முயற்ச்சி எப்படி நியாயமாகும் ?

வருத்தத்துடன்,
செந்தழல் ரவி

Monday, June 26, 2006

ஆறு போடுங்க ஆறு போடுங்க

ஆறு போடுங்க ஆறு போடுங்க அப்படீன்னு ஆயிரக்கனக்கான பேர் அழைச்சிட்டாங்க..(உண்மையில இரண்டு பேர்தான் அழைத்தார்கள்)..முதலில் நாரியா...பொறவு நவீன் பிரகாஷ்....கொஞ்சம் யோசித்து பார்க்கையில் ஏற்க்கனவே ஆறு போட்டது நியாபகம் இருக்கு...ஆனால் அது காமெடிக்காக செய்தது...உரல் இங்கே..

ஆனால் சீரியஸாக யோசித்ததில் மண்டை காய்ந்தது...எப்படியோ கஷ்டப்பட்டு எழுத ஆரம்பித்தாயிற்று....

பிடித்த ஆறு சினிமா நடிகர்கள்.

ரஜினி
கமல்
ஜிம் கேரி
அர்னால்டு
மேட் டேமோன் (Matt Damon) - தி பர்ன் ஐடென்ட்டிட்டி படத்தில் அசத்திவிட்டார் என்னை...அதுமுதல் அவரது ரசிகன்...
சத்தியராஜ்....இவரோட நக்கலும் லொள்ளும் யப்பா....ஒரு படத்தில் - மாமன் மகள் என்று நினைக்கிறேன் - கவுண்டருடன் சேர்ந்து ஒரு லூட்டி அடிப்பார் பாருங்கள்...வாத்திய கோஷ்டியை விதம் விதமா வாசிக்க சொல்லி - அதுக்கு சேர்ல உக்காந்தபடியே டேன்ஸ் வேர...யப்பா....

பிடித்த ஆறு நாயகிகள்

சினேகா
அஸின்
ஜோ
சதா
கேத்தரின் ஸீட்டா ஜோன்ஸ் (Zeta Jones, Catharine)
கேத் வின்ஸ்லெட்... - டைட்டானிக்குல கூடைத்தொப்பியை விலக்கிட்டு ஒரு லுக்கு விடுவாங்க பாருங்க....யப்பா...சூப்பரப்பு

பிடித்த ஆறு திரைப்படங்கள்

நாயகன்
உள்ளத்தை அள்ளித்தா...
ஜுராசிக் பார்க் - முதல் பாகம்
ஈவில் டெட் - மூன்றாம் பாகம்
டெர்மினேட்டர் - இரண்டாம் பாகம்
லார்டு ஆப் த ரிங்ஸ் - மூன்றாம் பாகம் - இது மாதிரி ஒரு படம் எடுக்க யாராவது பிறந்து தான் வரனும்...என்ன பிரம்மாண்டம்...சென்னை சத்யம் தியேட்டரில் பார்த்து ஆடிட்டேன்...அட எவ்வளவு பிரம்மாண்டம் அப்படின்னா...தன்னியக்கூட சொம்புல குடிக்காம அப்படியே குண்டானோட குடிபாங்க - ஹுக்கும்...

பிடித்த தலைவர்கள்

ராஜீவ் காந்தி
இந்திரா காந்தி
ஜெயலலிதா - இவரிடம் உள்ள தில் ரொம்ப பிடிக்கும்
ஸ்டாலின் - அட கலைஞர் மகன் தானுங்க....அவர் மேயராக இருந்தபோது அப்பாவுடைய தோழராகிய ஒரு அரசியல் தலையுடன் சென்று அவரது அறையில் சந்தித்தேன்...ரொம்ப எளிமை...வயசு இருக்கு...எப்படியும் முதல்வராக வருவார்...
கி.வீரமணி - இவரும் எளிமையில் சிகரம் - சில கருத்துகளை பிடிக்காமல் போனாலும் தனிப்பட்ட முறையில் பிடிக்கும்
எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) - அதிகமாக சொல்ல தேவை இல்லை...பட்டம் பதவியை அனுபவித்த யாரும் மீண்டும் சராசரி வாழ்க்கையை வாழ முடியாது...வாழ்ந்து காட்டிய போராளி...

பார்க்க விரும்பும் நாடுகள்

நியூஸிலாந்து
ஸ்விஸ்
நார்வே - ஸ்பெஷல் காரணம் இருக்கு
லக்ஸம்பர்க்
கனடா
இலங்கை

தமிழ்நாட்டில் பிடித்த ஊர்கள்

புத்தனாம்பட்டி - கல்லூரி இருந்த ஊருங்க...பல நினைவுகள் அடிக்கடி சுத்தி சுத்தி வரும் இடம்
மதுரை - ஒருமுறை கூட போனது கிடையாது ஆனால் ஜில் ஜில் ஜிகர்தண்டா பத்தி கேள்விப்பட்டதில் இருந்து எப்படியாவது ஒருமுறையாவது குடிச்சாகனும் என்று ஆவல்...பார்ப்போம் எப்போது நிறைவேறுதுன்னு...
திருக்கோவிலூர் - சொந்த ஊர்....வீட்டுவாசலில் தென்பென்னை ஆறு...கபிலர் வடக்கிறுந்து துஞ்சிய கோவில்...அதியமான் மகள்களுக்கு திருமணம் நடந்த மண்டபம்...மூல பிருந்தாவனம் கோவில்....தபோவனம் என்ற பழைமையான மடம்+கோவில்...துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வேட்டைக்கு போகும் ஏரிக்கரை என்று - எல்லா இடங்களும் பிடிக்கும்
திருநெல்வேலி - ஒரே முறை நன்பர் வீட்டில் தங்கி இருக்கேன்...கிளம்பும்போது சூடா அல்வா வாங்கிதந்தார்...இன்னும் மறக்க முடியவில்லை
நாகர்கோவில்
வேளாங்கன்னி - வருடா வருடம் போவதுதான்...ஆனால் அங்கு போனதும் மனதில் ஒரு அமைதி குடிகொள்ளும்

பிடித்த எழுத்தாளர்கள்

அமரர் கல்கி (பொன்னியின் செல்வன்)
சாண்டில்யன் (கடல்புறா)
ராஜேஷ்குமார்
அமரர் ராஜேந்திர குமார்
இந்திரா சவுந்திரராஜன்
ஷேக்ஸ்பியர்

பிடித்த ஆறு தமிழ் பாடல்கள்

பூங்காற்று - புதிதானது
பனிவிழும் - மலர்வனம்
வளையோசை
அன்னக்கிளி நீவாடி - 4 ஸ்டூடன்ஸ் படத்தில் -ஜாய்ஸி கிப்ட் குரலில்..அருமை..
நெஞ்சாங்கூட்டில் - டிஷ்யூம் படப்பாடல்
விழிகளின் அருகினில் வானம் - வெகுதொலைவினில் தொலைவினில் தூக்கம்

பிடித்த ஆறு தமிழல்லாத பாடல்கள்

செலே ஜேய்சே ஹவானே ( மே ஹூ னா - ஹிந்தி பட பாடல் ) - பணிவிஷயமாக மும்பை சென்றேன்..அங்கு ஜுஹு பீச்சில் - கோலா ஐஸ் என்று ஒன்று விற்ப்பார்கள்...அந்த கடையில் கேட்ட பாடல்...எந்த திரைப்படம் என்று நேற்று தான் தெரிந்தது...இப்போது லேப்டாப்பில் தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கிறது
வேங்கா பாய்ஸ்
அக்வா
போனி எம் - ரஸ்புட்டீன்
மைக்கல் ஜாக்ஸ்ன் - பேட்
ரிக்கி மார்ட்டின் - மு - தோஸ் - திரேஸ்

பிடித்த வலைப்பதிவுகள்

டோண்டு (கற்பு பற்றி எழுதியது பிடிக்காது)
லக்கி லூக்
கானா பிரபா - உலாத்தல் என்றுகூட ஒரு பதிவு வைத்திருக்கார்...பெங்களூர் லீலா பேலஸ் ஓட்டலில் தங்கி இருந்தவரை நன்பர் ஆதியோடு சேர்ந்து சந்தித்தபோது - ஆதியின் அடுக்கடுக்கான ஈழம் பற்றிய கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொன்னார்...
முத்து - தமிழினி
சிந்து
விடாது கருப்பு

இனையத்தில் அடிக்கடி செல்லும் ஆறு இடங்கள்

தமிழ்மணம்
கூகுள்
நிலாமுற்றம்
என் பதிவு - தனித்திரு விழித்திரு பசித்திரு
என் பதிவு - இம்சை
ஜி.எஸ்.எம் அரெனா (GSM Arena) - வேற வழியில்லை - வேலையோடு சம்பந்தப்பட்டது - போய்த்தானே ஆகனும்

அடிக்கடி சொல்லும் ஆறு வார்தைகள்

அய்ய...
சீ...
ம்ம்ம்ம்ம்....
அடப்பாவி....
ஓ....
பனியன் போட்ட சனியனே...(யாரையாவது திட்டும்போது மட்டும்)

அம்புட்டுத்தேன் இப்போதைக்கு....வேற யாராவது ரிக்வஸ்ட் செய்தால் அந்த தலைப்பு ஆறு கிடைக்கும்...இதை எழுவதுக்குள் தாவு தீந்துடுச்சி...

Thursday, June 22, 2006

ஜெயராமன் கக்கிய விஷம்

அன்பர் ஜெயராமன் பதிவு என்ற பெயரில் கக்கிய விஷம் இங்கே

சாம்பிளுக்கு சில.
1.மேல்சாதி கிருத்துவர்கள் தலித் பாதிரியின் கையால் புனித நீர் வாங்க எதிர்க்கிறார்கள்
2.பலப்பல கிருத்துவ கல்லறைகளிலும் தலித்துக்களுக்கும், மேல்சாதி கிருத்துவர்களுக்கும் சுவரெழுப்பி பிரிக்கப்பட்டுள்ளது. சாவிற்கு பின்னும் அவர்கள் மேல்சாதி கிருத்துவர்களின் மண்ணை கூட மிதிக்க முடியாது.

என் பின்னூட்டம் இங்கே...வெளியிடுவார்கள் என் நம்பிக்கை இல்லை...அதனால் என் பதிவு...

நீங்கள் கூறியுள்ள பல செய்திகளில் உண்மை இல்லையே என்ன செய்ய...இது போன்ற அவதூறு பிரச்சாரம் செய்ய உங்களை தூண்டுவது எது ??

ஏன் இந்த உணர்வு எழுகிறது உங்களுக்கு ?
எதோ ஒரு இடத்தில் நடப்பதை / அல்லது நடவாததை உண்மை போல் திரித்து எழுதி இருக்கிறீரே ??

உங்களுக்கு தலித் கிறிஸ்தவர்மேல் இவ்வளவு கரிசனம் எழுந்தது ஏன் ? அவர்களை மாராப்பு அணிய தடைவிதித்தது யார் ? கிறிஸ்தவ மிஷினரிகளா ??

மேலும் கிறிஸ்தவரின் இறை நம்பிக்கையையும் புண்படுத்தி எழுதி உள்ளீரே ?

யாரோ ஒருவர் (மனம்பிழன்றவர்) சொல்வதை வைத்துக்கொண்டு எல்லாரையும் இகழ்ந்து விஷம் போல கக்கும் தீய சிந்தனையை எங்கிருந்து பெறுகிறீர்..

ஆண்டவன் உங்களை மன்னிப்பாராக..

Tuesday, June 20, 2006

உவமைக்கவிஞர் சுரதா காலமானார்

அவரது மறைவுக்க அஞ்சலி செலுத்துகிறென்...அவர்பற்றி பாஸ்டன் பாலா எழுத்தில் வந்த பதிவு கீழே...அதற்க்கு பின்னூட்டம் இட்டு இருந்த ஆசாத் மற்றும் வெற்றியின் பின்னூட்டங்களையும் இனைத்துள்ளேன்..


உவமைக் கவிஞர் சுரதா கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சிறிது காலமாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவரின் உடல் நிலை மோசமானதையடுத்து ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரதாவின் சிகிச்சைக்காக முதலமைச்சர் கருணாநிதி தனிப்பட்ட முறையில் ரூ.50,000 நிதியுதவி செய்திருந்தார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மீது பற்று கொண்டு அவருடைய இயற்பெயரோடு தாசன் என்கின்ற அடைமொழியையும் சேர்த்து (சுப்பு ரத்தினதாசன்) தனது பெயரை சுரதா என்று மாற்றிக்கொண்ட கவிஞர் சுரதா அவர்கள், தனி கவிதைப் பாரம்பரியத்தையே உருவாக்கியவர்.

பல்லாயிரக்கணக்கான கவிதைகளை யாத்த சுரதா உருவாக்கிய கவிஞர்களின் எண்ணிக்கையும் பல நூறைத் தாண்டும். "கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்" எனும் இனிய திரைப்படப் பாடலை எழுதிய சுரதா, பல திரைப்படங்களுக்கு பாடல் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசாத்

பாலா,சட்டென்று நினைவிற்கு வரும் திரைப்பாடல்களை எழுதுகிறேன்.
1.ஆடி அடங்கும் வாழ்க்கையடா (நீர்க்குமிழி)
2.அமுதும் தேனும் எதற்கு (போலீஸ்காரன் மகள் ? - சந்தேகந்தான்)3.விண்ணுக்கு மேலாடை (நாணல்)
4.தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
5.முகத்தில் முகம் பார்க்கலாம்
அன்புடன்
ஆசாத்

வெற்றி

பாலா,தகவலுக்கு நன்றி.

இச் செய்தியைப் படிக்கும் போதே மிகவும் வேதனையாக உள்ளது. கவிஞர் சுரதா நலம் பெற இறைவனப் பிரார்த்திகிறேன்.

கவிஞரின் மருத்துவச் செலவுக்கு நிதியுதவி செய்த கலைஞருக்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும்.

இவரின் " அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே" எனும் பாடலைப் பல தடவை கேட்டு இரசித்திருக்கிறேன்.

இப் பாடலை நீங்களும் கேட்டு மகிழ கீழ்க் காணும் இணையத்தளத்திற்குச் செல்லுங்கள்.

http://www.musicindiaonline.com/p/x/Q4X2G5wFDS.As1NMvHdW/

நன்றி
அன்புடன்
வெற்றி

எண்பத்தாறு அகவையில் இறையிடம் சேர்ந்த அவரின் ஆன்ம சாந்திக்காக இறைஞ்சுகிரேன் இறைவனிடம்.....

Wednesday, June 14, 2006

பேய்,பிசாசு,ஆவி,மோகினி..

பேய் இருக்கிறதா இல்லையா என்று பலருக்கும் பல கருத்து இருக்கும்...சாமிய நம்புற இல்லடா..அப்புறம் பேயயும் நம்பு...என்று சின்ன வயதில் என்னை மடக்கிவிட்டார் எங்க அய்யா..அப்போது கூகுளாண்டவர் இருந்திருந்தால் அவரிடம் கேட்டிருப்பேன்...

விழுப்புரம் மாமா வீட்டில் - 13 வயதில் - ஈவில் டெட்(Evil Dead) படம் பார்த்தபோதுதான் பேய்களோடு நல்ல அறிமுகம் ஏற்ப்பட்டது...அந்த படத்தின் தாக்கம் சுமார் 5 ஆண்டுகள் இருந்தது...

பத்தாம் வகுப்பு படிக்கும்போது 25 ரூபாய் டில்லிக்கு மனியார்டர் செய்து GHOST என்ற புத்தகத்தை வாங்கினேன்...ஆங்கில புத்தகமான அதில் மேட்டர் சரியாக புரியாவிட்டாலும், படிகட்டில் ஆவிமாதிரி நிற்க்கும் பேய் படம் எல்லாம் போட்டு பயமுறுத்திவிட்டார்கள்...ஆறுமணிக்கு மேல் வெளியே போக சிலநாள் தடா போட்டது...

பிற்பாடு கல்லூரி காலத்தில் நன்பனோடு பந்தயம் கட்டி, சிகரெட் பாக்கெட் சகிதம் 12 மணிக்கு சுடுகாட்டில் வழவழ பளிங்கு கல்லறையில் கால்மணி நேரம் உட்கார்ந்து இருந்தது இரண்டு நாள் கடும் காய்ச்சலுக்கு வழிவகுத்தது...பந்தய பணமும் அம்பேலானது...

கல்லூரி காலத்தில் என் அறை தோழர் மணிவண்ணன், பேயால் பாதிக்கப்பட்டார்..இரவு திடீரென எழுந்து...அய்யோ அம்மா...பேய் அமுக்கியது..கையை காலை ஆட்ட முடியல..என்று பீதியை கிளப்புவார்...அப்புறம் நமக்கு தூக்கம் ஏது...

ஊரில் கேள்விப்பட்ட கதை ஒன்று வேறு அடிவயிற்றில் கிலியை கிளப்பியது...போலீஸ் துறையை சேர்ந்தவர் மனைவியின் ஆவி ஒரு பெண்ணின் மீது புகுந்துவிட்டதாகவும், அவந்தான் என்னை கொன்றான் என்று அவரது இறந்துபோன முதல் மனைவியின் குரலிலேயே பேசியதாகவும்...பல இரவுகள் தூக்கத்தை கெடுத்தது...

ஆவியுலக அனுபவங்கள் அப்படின்னு விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் எழுதிய புத்தகத்தை கூட சிலசமயம் படிச்சி நொந்து இருக்கிறேன்..அதில் உள்ள செய்முறை விளக்கத்தை வைத்து ஆவிபிடிக்க போர்டு வைத்து / நம்பர் எல்லாம் வரைந்து மெழுகுவர்த்தி கொளுத்தி சில்வர் டம்ளரால் பட்டுனு அமுக்கி எஸ் - நோ என்று தானாகவே போகுது பார் என்று பீலா விட்ட கதை எல்லாம் நடந்தது...

நாரியப்பனூர் கோவில் சென்றபோது அங்கு தலைவிரி கோலமாக ஆடும் இளம் பெண்களையும் கண்டு இருக்கேன்..

இப்போது விக்கிபீடியாவில் பேய்களுக்கு தனி லிங்க் உள்ளது...http://en.wikipedia.org/wiki/Ghostபேய் புகைப்படம்கூட பப்ளிஷ் செய்துள்ளார்கள்..ரென்ஹாம் ஹால் என்னும் இடத்தில் மேஜர் லாப்டஸ் மற்றும் அவரது நன்பர் ஹாப்கின்ஸ் இருவரும் கண்ணால் கண்டதாக சான்று பகர்கின்றனர்..(The Brown Lady of Raynham Hall)..
உரல் இங்கே..

பேய்களை பற்றி ஆராய ஒரு அமைப்பு ஒன்று இயங்கி வருகிறது..
உரல் இங்கே
பேயை படமாக்குவதற்க்கு எல்லா பணிகளையும் செய்துவருகிறார்கள்...

நம்ம ஊரில கொள்ளிவாய் பிசாசு ராத்திரியில கிளம்புமாம்..கிட்ட போனா பொட்டுன்னு ஆளை அடிச்சிடுமாம் என்று சொல்லுவதுண்டு....பிறகு நமக்கு கொஞ்சம் அறிவு தெளிஞ்சவுடன் மீத்தேன் வாயுதான் கொள்லிவாய் பிசாசாக டபுள் ஆக்டு கொடுக்குது என்று தெரிந்தது...

இப்போது சொல்லுங்க...பேய் இருக்கா இல்லையா...நம்பலாமா நம்பப்படாதா ? பாத்திருக்காங்களா பாக்கலையா...

அப்படி விவரம் தெரிஞ்சவங்க எனக்கு இன்னுமெரு தகவலையும் சொல்லுங்க...ஏன் இந்த மோகினி பிசாசு வெள்ளை சாரியை மட்டும் யூஸ் பன்னுது..அதுக்கு காஞ்சிபுரம் / பணாரஸ் பட்டுபத்தியெல்லாம் யாரும் சொல்லவில்லையா??

ஆவியை பார்த்தவங்க ( அட இட்லி குக்கரில புஸ்சுன்னு வர்ர ஆவியை சொல்லலீங்க..) நிஜ ஆவி...யாரும் இருந்தா அது சிகரெட் புடிக்காம, பீடிய மட்டும் லைக் பண்ற காரணத்தையும் சொல்லுங்க...

Monday, June 12, 2006

ஜோதிடம் உண்மையா - பொய்யா....

சந்திரமுகி படத்தில் வடிவேலு ரஜினியை பார்த்து கேட்பதுபோல் கேட்க தோன்றுகிறது...

இருக்கா இல்லையா....பாத்திருக்காங்களா...பாக்கலையா....என்று...

இன்று செய்தித்தாளில் படித்த ஒரு செய்தியும், இரண்டு நாட்களுக்கு முன் ஒரு நன்பர் கூறிய செய்தியும் இப்படி ஒரு பதிவு எழுத தூண்டுகிறது என்னை...

இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஜோதிட தேர்வு எழுதுகிறார்...இது பற்றி அதிகம் கூற விரும்பவில்லை...என்ன ஒரு பகுத்தறிவு...

என் நன்பர் ஒருவர் ராமநாதபுரத்தில் ஒருவர் ரூ 21 பெற்றுக்கொண்டு கடந்தகாலம், நிகழ்காலம், வருங்காலத்தினை புட்டு புட்டு வைக்கிறாராம்...

அவர் புகைப்படத்தினையும் காட்டினார் ( மொபைல் காமிராவில் எடுத்தது ) - கைலி அணிந்த ஒரு ஒல்லிப்பிச்சான் நபர்...

நன்பரிடம் நான் கட்டிய பந்தயம், நான் வருகிறேன் ராமநாத புரத்திற்க்கு...என்னை பற்றி ஒரு விஷயம் சொல்ல சொல்லு...நான் நம்புகிறேன் ஜோசியத்தினை...அப்படி நீ தோற்று விட்டால், ஜோசியம் பொய் என்று ஒத்துக்கொள்ளவேண்டும்...

சில ஆண்டுகளுக்கு முன் சிதம்பரம் நாடி ஜோதிடம் என்பதினை பற்றியும் கேள்விப்பட்டேன்...நமது தலைஎழுத்து ஏற்க்கனவே டாக்குமண்டேஷனாகி இருப்பதாக சொன்னார்கள்...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்....

Friday, June 09, 2006

தனிமை
என்னுயிரே வா...என்னருகே.....

Friday, June 02, 2006

காதலர்களுக்கு(?) இடையில் உரையாடல்...

ஒருவர் காதலில் விழுகிறார்.....முதல் முதலாக அவரது இதயத்தினை காதலியிடம் வெளிப்படுத்துகிறார்...அப்போது

நடக்கும் உரையாடலை தருகிறேன்....

காதலன்: அன்பே...என் முழு இதயத்தோடும் முழு ஆன்மாவோடும் உன்னை விருப்புகிறேன்...
காதலி: என்ன எதாவது சினிமா டயலாக்கா ?

காதலன்: இல்ல..உண்மையாவே உண்னை விரும்புகிறேன்...
காதலி: என்ன எதாவது சினிமா பட தலைப்பா..

காதலன்: ம்ஹும்...உன்னை லவ் பன்ரேன்னு சொல்ல வந்தேன்...
காதலி: சீரியசாவா ?

காதலன்: சத்தியமா சொல்லுறேன்...
காதலி: நான் யாரையும் காதலிக்கறதா இல்ல...

காதலன்: என்னை காதலிக்கலாமே..
காதலி: வேனாம் விட்டுடுங்க...

காதலன்: ஏன் ?
காதலி: பிடிக்கல...

காதலன்: என்னையா ?
காதலி: இல்ல...காதலிப்பதை...

காதலன்: காதலிப்பதையேவா...
காதலி: இல்லை..உங்களை காதலிப்பதை....நாம வழக்கமா நண்பர்களாகவே இருப்போமே....

காதலன்: இல்லை..நான் உன்னை காதலிப்பதில் உறுதியாக இருக்கேன்...
காதலி: என்னை பத்தி தெரியும் இல்லையா...அப்படி இருந்துமா என்னை காதலிக்கரேன் என்று சொல்லுறீங்க ?

காதலன்: நல்லா தெரியும்...
காதலி: என்ன தெரியும்...

காதலன்: எல்லாமே தெரியும்...
காதலி: சரி...இப்ப நான் சொல்லுறேன்...அதுக்கு நீங்க பதில் சொல்லுங்க... நான் ஒரு சோம்பேறி...சுடுநீர் தவிர எதையும் சமைக்க தெரியாது...

காதலன்: ( மனதுக்குள் : அது ஒரு சமையலா.. கொடுமைடா சாமீ ) பரவாயில்லை..நானே எல்லா சமையலையும் பன்னுறேன்..

காதலி: நான் இங்கிலீஷ் புக் தான் படிப்பேன்...டாவின்சி கோடு, சிட்னி ஷெல்டன் நாவல்ஸ், இந்த மாதிரி...

காதலன்: ( மனதுக்குள் : என்ன ஏதாவது கெட்ட வார்த்தையில திட்டுறாளா ) சரி..நானும் இனிமே இங்கிலீஷ் நாவல்தான் படிப்பேன்...(மனதுக்குள் : ஒழிஞ்சோம்...குமுதம் நடு பக்கம் இனிமே பாக்க முடியாது...ஹும்...)

காதலி: நான் காலையில பதினோரு மணிவரை தூங்குவேன்...
காதலன்: பரவாயில்லையே....நான் வேண்டுமானா கால அமுக்கி விடட்டுமா...

காதலி: ரொம்ப வழியாதீங்க..நான் 5 குல்பி ஐஸ் டெய்லி சாப்பிடுவேன்...
காதலன்: வாங்கிதந்துட்டா போச்சு....

காதலி: நான் டிவியில இந்தி சானல் தான் பார்ப்பேன்...தமிழ் சேனல் கனவுல கூட பார்க்க மாட்டேன்...

காதலன்: சத்தியமா எனக்கு கூட சாரூக்கான் தான் பிடிக்கும்...அவர் ஜம்ப் பன்னி டைவ் அடிச்சி டச்சா டச்சா னு சண்டை போடுறது ரொம்ப பிடிக்கும்..( மனதுக்குள் : இனிமே பெப்சி உமாவையும், காசுமேல புரோகிரம்ல வர சூப்பர் பிகரையும், சன்.மியூசிக் அட்டுக்களையும் பாக்குற பாக்கியம் கிடைக்காது...ம்ம்ம்...)

காதலி: ஜாக்கிசானுக்கும் சாரூக்கானுக்கும் வித்தியாசம் தெரியாத மொக்கையா இருக்கீங்களே...
காதலன்:ஹி ஹி

காதலி: வழிசல் தான் போங்க...என்னை கல்யாணாம் பண்ணிக்கிட்டீங்கன்னா, நான் உங்களை விட ஹாரி பாட்டருக்குதான் முக்கியத்துவம் கொடுப்பேன்..

காதலன்: அது யாரு, உன்னோட ஆன்சைட் கோஆர்டினேட்டரா (வெளிநாட்டு மேனேஜர்) ? பரவாயில்ல..நீ ஆபீஸ்ல இருந்து லேட்டா வர்ரது ஒரு பிரச்சினை இல்ல...

காதலி: ஹாரி பாட்டர் ஒரு நாவல்னுகூட தெரியாத வெண்ணையா இருக்கீங்களே...அந்த நாவலோட 5ஆவது பதிப்புக்காக வெய்ட்பண்ணிக்கிட்டு இருக்கேன்...அதுல ஒரு முக்கியமான் சஸ்பென்ஸ் இருக்கு...

காதலன்: ஓ இங்கிலீஷ் நாவலா ? சரி சரி...என்ன சஸ்பென்ஸ் ? யார் கொலை செய்ததுன்னா ?
காதலி: இல்லை...சாப்பாட்டு மேஜையில இருந்த முட்டைய யார் உடைச்சதுன்னு...

காதலன்: (மனதுக்குள் : கொடுமைடா சாமீ..) சரி வேற என்ன பண்ணனும் உன்னோட லவ்வர் ஆகனும்னா?

காதலி: காலையிலயும் சாயங்காலமும் என்னோட வாக்கிங் வரனும்...

காதலன்: அப்படியா...எனக்கு கூட வாக்கிங் ரொம்ம்ப பிடிக்கும்...உன்கூட வேற யாரெல்லாம் வாக்கிங் வருவாங்க...

காதலி: இப்போதைக்கு எங்க வீட்டு டாமி வந்துக்கிட்டு இருக்கு...நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் டாமி வராது...நீங்க தான் வரனும்..

காதலன்: (மனதுக்குள் : கொடுமைடா சாமீ...நம்ம பொழப்பு நாய்பொழப்பு தான் இனிமே)..கண்டிப்பா...வந்துட்டா போச்சு...அப்புறம் வேறென்ன பன்னனும் ?

காதலி: ஞாயித்து கிழமை தலைக்கு எண்னை தேச்சி குளிப்பாட்டனும்..நல்லா தலைய மசாஜ் செய்து விடனும்...

காதலன்: (மனதுக்குள் ஜொள்ஸ்) ஹி ஹி...அது கண்டிப்பா செய்திடலாம்..
காதலி: ரொம்ப அலையாதீங்க...எனக்கு இல்ல...என் தம்பிக்கு....

காதலன்: (புஸ்ஸாகிறார்...ஆனால் முகத்தில் சலனமில்லாமல்) நான் கூட அதை தான் நினைத்தேன்...சரி வேறென்ன செய்யனும் நீ என்னை லவ் பன்றதுக்கு...

காதலி: கல்யாணம் பன்னிக்க சொல்லி கேட்கக்கூடாது...

காதலன்:(மனதுக்குள்: இதென்ன கொடுமை) அய்யய்யோ...அப்புறம்....
காதலி: எனக்கு தோனும் போது சொல்லுவேன்.....அப்புறம் தான் கல்யாணம்...

காதலன்: (மனதுக்குள்: இவளுக்கு எப்ப தோனுறது...அதுக்குள்ள நமக்கு முடியெல்லாம் கொட்டிரும்...தினத்தந்தி டாக்டர்கிட்ட போகவேண்டியதுதான்...நம்ம போட்டோவ விளம்பரத்துல உபயோகப்படுத்துவானுங்க...சிகிச்சைக்கு முன்..சிகிச்சைக்கு பொறவு அப்படீன்னு...) ஹி ஹி...உன்னோட இஷ்டம்டா செல்லம்...வேறென்ன செய்தா என்ன லவ் பன்னுவ...

மேட்டர் சீரியசாகிறது...கவனியுங்கள்...

காதலி: நீங்க என் வீட்டோட மாப்பிள்ளையா மாறுவதுக்கு சம்மதம் சொல்லனும்...
காதலன்: இது தான...ஒரு ப்ரச்சினையே இல்ல...நிம்மதியா ஓக்கே சொல்லிடுரேன்...

காதலி: நீங்க என்னோட மதத்துக்கு மாறனும்...
காதலன்:(சிறிது நேர மவுனம்)..சரி...மாறிடுறேன்...

காதலி: ஒரே ஒருவிஷயம் பாக்கி...அது சரின்னா இப்பவே "சரி" ன்னு சொல்லிடுறேன்...
காதலன்: சொல்லு கண்ணா சொல்லு....என்ன சொன்னாலும் ஓக்கே தான் சொல்லப்பேறேன்...

காதலி: உங்க சாதியை மாத்திக்குங்க...நீங்க என் சாதிக்கு மாறிடுங்க.....
காதலன்: இது முடியாது....என்னால முடியாது....தயது செய்து வேண்டாம்...ப்ளீஸ்...என்னை மன்னிச்சிடு...இந்த விஷயம் வேண்டாமே...இது நடக்கவே நடக்காதும்மா...விட்டுடு....சாதி பிறப்பால் வருகிறது...நானே நினைத்தாலும் மாற்ற முடியாத விஷயம்...மீண்டும் பிறந்தால் மட்டுமே சாத்தியம்....

காதலி கோபமாகிறார்......அதெல்லாம் கிடையாது...நான் ரொம்ப பிடிவாதக்காரின்னு தெரியும் இல்லையா...என் சாதிக்கு மாறுங்க....அப்பதான் லவ் பன்னுவேன்...

காதலன் நொந்து நூலாகி நூடுல்ஸ் ஆகிறார்........

சாதியை வெறுப்போம்...அதுதான் இந்த பதிவின் மெஸேஜ்....

Thursday, June 01, 2006

சிங்கப்பூரில் சினேகா....!!!!!!!!மிக முக்கிய செய்தி:

நடிகை சினேகா நேற்று சிங்கப்பூரில் நடந்த ஒரு திறப்பு விழாவில் கலந்துகொண்டார்..முன்னதாக அவர் சிங்கை வானொலியில் உரையாற்றினார்..அப்போது ரசிகர்களா கடும் தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது..

பாதுகாப்பு படையினர் அழைக்கப்பட்டு, சினேகா ஓட்டலுக்கு அழைத்துச்செல்லப்பட்டார்...

இதுபற்றி சினேகா ஆச்சர்யத்த்கூறும்போது, அதிக ரசிகர்களை கொண்டிருப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது..அதே சமயம் மூச்சுத்தினறல் எற்ப்படும் என்ற பயம் வந்தது என்று குறிப்பிட்டார்..

பி.கு.

சினேகா படத்தினை பதிவுல போட இத்த விட்டா வேற நல்ல சான்ஸ் கிடைக்காது...