தேடுங்க !

Wednesday, January 31, 2007

சென்னை !! பார்வையற்றவர்ளுக்கு எழுதுங்கள் !!!

பல பார்வையற்ற மாணவர்கள், பல்துறைகளில் சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் கல்வி பயில்கிறார்கள்...இது அவர்களின் இண்டர்னல் தேர்வுக்காலம்.....நீங்கள் எப்படி உதவலாம் ?? வழி இருக்கிறது...அவர்களின் தேர்வின்போது அவர்கள் அருகில் அமர்ந்து அவர்கள் வாயால் சொல்வதை எழுதி கொடுப்பதின் மூலம்...இது Scribe என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும்....பார்வையற்ற மாணவர்களின் கல்விக்கு உதவும் இந்த சேவை உண்மையில் மன நிறைவை கொடுக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது...

http://photos1.blogger.com/x/blogger/3075/2751/400/865699/Scribe.jpg

நீங்கள் எந்த நாள் செல்ல முடியும் என்பதை கூறினால் அதற்கு தகுந்த ஒரு ஸ்லாட்டை உங்களுக்கு ஒதுக்குவாங்க...ஸ்லாட்கள் பற்றிய விவரம் அறிய இங்கே அழுத்தவும்

இந்த பணியை முன்னின்று செய்யும் sadhana sundararajan அவகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...நீங்கள் எந்த நாள் செல்லமுடியும் என்பதை sadhana.sundararajan@wipro.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தினால் அவர் உங்களுக்கு சரியான தேதி, நேரம் மற்ற விவரங்களை தருவார்...

அப்படி விவரங்கள் இல்லை என்றாலும் இங்கே பார்த்து, தகுந்த நேரம் மற்றும் இடத்துக்கு சென்றாலும் மிகவும் சிறப்பு...

சென்னை வலைப்பதிவர்கள் இந்த பதிவை பார்த்தால் உங்கள் நன்பருக்கு / தோழிக்கு அனுப்பி இந்த விஷயம் பரவ வகைசெய்யுங்கள்...

நன்றி...!!!!!!!!!

Monday, January 29, 2007

ஜப்பானில் தமிழும் பரதமும் !!!!

இவ்வளவு அழகாக படங்களுடன் கட்டுரை வடிக்க முடியுமா என்று என்னை ஆச்சர்யப்படவைத்த ச.கமலக்கண்ணனின் கட்டுரை...சாம்பிள் கொஞ்சம் கீழே...

"அணுகுண்டின் பாதிப்பு வெகுநாட்களுக்குத் தொடர்ந்தது. சடாக்கோவும் பள்ளிக் குழந்தைகளும் மனதை விட்டு அகல மறுத்தனர். ஒருவழியாக, ஜூலை கடைசி வாரத்தில் ஓஸகாவில் நடைபெற்ற தென்ஜிம் திருவிழா மனதுக்கு ஆறுதலளித்து, வேறு திசையில் கவனம் செலுத்த உதவியது. ஜப்பானில் திருவிழாக்களுக்குப் பஞ்சமே இல்லையென்றாலும், மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வருடத்துக்கு இரண்டோ மூன்றோதான். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு திருவிழா. ஒவ்வொரு திருவிழாவுக்கும் ஒவ்வொரு புராணம். பள்ளியில் படிக்கும் காலத்தில், கோபிசெட்டிபாளையம் அருகே பாரியூர் என்ற ஊரில் கோலாகலமாக நடக்கும். சுற்றியிருக்கும் பதினெட்டு பட்டிகளிலிருந்தும் மக்கள் வந்து குவிவார்கள். பிறகு கல்லூரி, வேலை என்று வெளியூர் வாசத்தினால் பாரியூர் செல்வது குறைந்து விட்டது. இந்தத் தென்ஜிம் திருவிழா அதை நினைவூட்டியது.

டோக்கியோவில் காண்டா (Kanda), கியோட்டோவில் கியோன் (Gion) மற்றும் ஓஸகாவில் தென்ஜிம் ஆகிய மூன்று திருவிழாக்களும் ஒரே நேரத்தில் கொண்டாடப்படும். ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கு பெற்றும், லட்சக்கணக்கானோர் பார்த்தும் மகிழக்கூடிய ஒரு பிரம்மாண்டமான திருவிழா. இதன் பின்னணியில் ஒரு கதை சொல்லப்படுகிறது. கி.பி 845 முதல் 903 வரை திரு. சுகாவரானொமிச்சிஸானே என்று ஒரு அறிஞர் ஓஸகாவில் வாழ்ந்து வந்தார். அவர் இறந்த பிறகு தோஜிமா (Dojima) ஆற்றங்கரையில் தகனம் செய்யப்பட்டார். அதன் பின்னர் சில நாட்கள் கழித்து, ஓஸகாவில் பெரும் இயற்கைச் சீற்றம் ஏற்பட்டது. இடி, மின்னல், மழை, புயல், சூறாவளி, சுனாமி என அல்லும் பகலும் ஓய்வு ஒழிச்சலின்றி இயற்கையால் துன்புறுத்தப்பட்டனர். இவையனைத்தும் சுகாவரானொமிச்சிஸானேவின் மரணத்தையொட்டியே நடந்ததால், அவர்தான் காற்றுக் கடவுளாக மாறியிருக்கிறார் என நம்பத் தொடங்கி விட்டனர்."

மேலும் படிக்க

பாலபாரதிக்கு வாழ்த்து, ஹரிஹரனுக்கு நன்றி!

சிலபேர் சொல்லுவாங்க....கொஞ்சநாள் செய்யவும் செய்வாங்க...ஆனால் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியாது....சிலபேர் விட்டுட்டேன் அப்படீம்பாங்க...எத்தனையாவது முறைன்னு கேட்டா 28 ஆவது முறைன்னுவாங்க....சீனப்பிரதமருக்கு மூட்டுவலி, ஆயாவோட ஏழாவது டெத் டே, துக்கம் தொண்டையை அடக்குது அப்படீன்னு மறுபடியும் ஆரம்பிச்சுருவாங்க...

சிலபேர் யார் சொல்லியும் கேட்கமாட்டாங்க...அப்துல்கலாமே மின்னஞ்சல் அனுப்பினாலும் போய்யா வேலையை பாத்துக்கிட்டுன்னு சொல்லிருவாங்க...வீட்ல இருக்கிறவங்க, வீட்டுக்கு வரப்போறவங்க தேஞ்சுபோன ரிக்கார்ட் ப்ளேயர் தட்டுமாதிரி திரும்ப திரும்ப ஒலிபரப்பினாலும் ஒரு பயனும் இருக்காது..

அட புகைப்பழக்கத்தை தான் சொல்லுகிறேன்...ஆனால் பாருங்க, நம்ம நண்பர் ஹரிஹரன் சொல்லி நம்ம கவிஞர் பாலபாரதி புகைப்பழக்கத்தை விட்டு இன்னையோட அஞ்சாவது நாள் ஆகுது...விஷயம் தெரிய இங்கே கொலைவெறியோடு அமுக்குங்க..

புகைப்பழக்கத்தை விடுறதுக்கு முதல் படியே, அதை எல்லாருக்கும் சொல்லுறது தான்...பாலா அதை செஞ்சுட்டார்...தீவிர பா.க.ச உறுப்பினர்களான நம்மளோட கடமை என்ன தெரியுமா ? அவர் புகைப்பழக்கத்தை விட்டுட்டார் என்பதை அப்பப்போ நினைவுபடுத்திக்கிட்டே இருப்பது தான்...கொஞ்சநாளைக்கு...பிறகு அதுபற்றி நினைப்பே வராது...

அதே சமயம் அப்பபோ ஒரு ட்ரீட் மாதிரி வெச்சு, புகைப்பழக்கத்தை விட்டதுக்காக குஷிப்படுத்தரது நல்ல பலன் தரும்...(யாருப்பா அது...நீங்களும் புகைப்பழக்கத்தை விடுங்க, உங்களுக்கும் ட்ரீட்..)

ஆக இந்த பதிவின் மூலமா, என்னோட பிப்ரவரி முதல் வார சென்னை விசிட் அப்போ, பனகல்பார்க் அஞ்சப்பரில் நெஞ்செலும்பு சூப்பும், திருவல்லிக்கேனி மசூதி தெரு ரத்னா கபேயில் நன்னா ஒரு பில்டர் காபியும் வாங்கித்தருவேன் என்று உறுதி அளிக்கிறேன்..!!!

பா.க.ச எல்லாரும் ஓடிவாங்கப்பா...!!! இங்க ஒருத்தன் வகையா சிக்கிட்டான்...பிஸியா இருந்தீங்கன்னா பரவாயில்லை...ஒரு மீன்பாடி வண்டியில போட்டு அங்கேயே அனுப்பிடுறேன்...நான் ஜூட்...இனிமே நீங்க கவனிச்சுக்கோங்க...

Thursday, January 25, 2007

அய்யய்யோ அல்லேலூயா !!!!!

ஒரு பாபா பதிவுக்கு விளம்பரம் கொடுத்ததுக்கு பாவம் எல்லாரும் நெஞ்செரிச்சலாகிறாங்க...என்ன நீ கிறித்தவ / முஸ்லீம் மதத்தை பற்றி எழுதமாட்டியா என்று ? சில அரை லூசுகள் நல்ல பல பின்னூட்டமும் கொடுத்தாங்க...சந்தோஷம், மகிழ்ச்சி...பதிவு எழுதுற அளவுக்கு நேரம் கிடைக்கலைன்னாலும் நன்பர் ஹரிஹரன் வேலை மெனக்கெட்டு பதிவு போட்டிருக்கார்...அதை அப்படியே அடிக்கவேண்டியது தான் காப்பி....யாராவது இனிமே மிட்நைட்ல வர்ற சாமியார்கள் / அதிஷ்டக்கல் / நியூமராலஜி / நேமாலஜி (உலகிலேயே முதல்முறையாக கண்டறிந்த டாக்டர்.ராஜராஜன், ABC(ஜெர்மனி), EFG (லண்டன்) போன்றவைகளள பற்றியும் எழுதினால் அதையும் பதிவில் போடுவேன்) இனி ஓவர் டூ ஹரிஹரன்..

**********************************************************


செந்தழலார் ரெண்டு ரூபாய்க்கு பாபா மேஜிக் காட்டினார். இந்த மேஜிக்ல கிடைக்கிறது ஒரு பவுன் மோதிரம், வீபூதி, ரோசாப் பூ என மேக்ஸிமம் வேல்யூ மொத்தமே 10,000 ரூபாய்தான். அதுவும் உங்களுக்குக் கிடைப்பது வீபூதி, ரோசாப்பூ மட்டும்தான். துரைமுருகன், தயாநிதி ரேஞ்சில் இருந்தால் ஒருபவுன் மோதிரம். நாமெல்லாம் ஏழைபாழைங்க நமக்கு மோதிரம் மாதிரி மதிப்பான பொருள் கிடைக்க சான்ஸ் கம்மிதானே!

நான் சொல்லும் இன்னொரு சூப்பர் மேஜிக் ஷோக்கு டிக்கெட் ரெண்டுரூபாய்க்குக்கூட எடுக்க வேண்டியதில்லை. சும்மா ரெண்டுவாட்டி அல்லேலூயா அல்லேலூயான்னு கத்துங்க போதும்.


*குருடர்கள், சரியா கண்ணுத் தெரியாதவருக்கு பார்வை வர கண்தானம் பெற்றுச் சிகிச்சைன்னு விஞ்ஞான ரூட்டில் போனா பஸ், டிரெய்ன், தங்குமிடம்னு அது மட்டுமே 10,000/- செலவாகும்

லேசர் டிரீட்மெண்ட் ரூட்ல போனா 25,000/- விஜயா அகர்வால்ன்னு அலைஞ்சு அல்லோலப்படணும்.

*செவிடர்கள் செவிட்டு மிஷின், செவி அறுவை சிகிச்சைன்னு 10,000/- க்கு மேலெ செலவு செய்யணும். ஈ.என்.டி ஆஸ்பத்திரியா ஏறி இறங்கி ஈனப்பொழப்பாத் திரியவேண்டிவரும்.

*முடவர்கள் ஜெய்ப்பூர் செயற்கைக்கால், தாங்குகட்டை, வீல் சேர்ன்னு ஏகப்பட்ட செலவு குறைந்தது 10,000/- செலவழிக்கணும்

ஜெய்ப்பூர் செயற்கைக் கால்கள் எடைமிகுந்ததாய் இருப்பதால் ஊனமுற்றவர்கள் படும் அவதியை விஞ்ஞானிஅப்துல்கலாம் எடைகுறைந்த செயற்கைக் கால்களைக் கண்டுபிடித்துத் தீர்த்தார்.

அப்துல்கலாம் மாதிரியான விஞ்ஞானிகள் உலகமறியாத முட்டாள்.

நம்மூர் சென்னை மெரீனாகடற்கரை சீரணி அரங்கில் நடக்கும் "அற்புத சுகமளிக்கும் சுவிசேஷக் கூட்டத்தில்" பங்கேற்கும் முடவர்கள் நடக்கின்றார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள்,
குருடர்கள் பார்க்கின்றார்கள்.. பெங்களூருவில் அமெரிக்காவில் இருந்து வந்து பாதிரிமார்கள் சென்ற ஆண்டு இப்படி பெரிய அளவில் அற்புத சுகமளிக்கும் கூட்டம் நடத்தினார்கள். நீங்களும் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.


இந்த அற்புத சுகமளிப்புக்கூட்டத்தில் டிவிகேமெராவில் பார்க்கவேண்டிய சிரமமும் இருக்காது நேரிலேயே முட,செவிட்டு,குருட்டுக் குறைபாடுள்ளவர்கள் அல்லேலூயா...அல்லேலூயான்னு கண்ணைமூடிக் கத்தியபடியே சரியாகி மேடையிலேயே பார்த்து, கேட்டு, நடந்து குறைபாடு சரியாகி பரவசப்பட்டு ஆனந்தமாவார்கள்.

மக்களே உங்கள் ஊரில் இருக்கும், உங்களுக்குத் தெரிந்த இந்த உடல் குறைபாடுள்ளவர்களை டி.ஜி.எஸ் தினகரன், காருண்யா நிறுவனத்தையோ ஜோஷுவா நிறுவனத்தையோ அணுகும்படி செய்வீர். பாபாவின் தங்க மோதிர மதிப்பை விட பன்மடங்கு மதிப்புள்ள மருத்துவ சிகிச்சை கிடைக்கும் அவர்களுக்கு இங்கே.

இல்லையேல் இந்துமத வெறிகொண்ட ஜெயலலிதாவால் இடிக்கப்பட்டு, பகுத்தறிவுக் கருணாநிதியால் புனரமைக்கப்பட்ட மெரீனா கடற்கரை சீரணி அரங்கில் நடைபெறும் ஆண்டுத் திருவிழாவான " அற்புத சுகமளிக்கும் சுவிசேஷக் கூட்டங்களுக்கு" வந்து நேரடியாகப் பலன் பெற்று வாழும் நேர்மையான சீரிய வழி இருப்பதைத் தெரிவிக்கவும்.

குறிப்பு-1:
தியேட்டர் ஆர்டிஸ்டாக கூத்துப்பட்டறை / பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இடம் கிடைக்காதவர்கள் நேரடியாகத் திறமையான நடிப்புப் பயிற்சி பெற சீரணி அரங்க அற்புத சுவிசேஷக் கூட்டங்களில் பங்கேற்கவும். இழந்ததைப் பெறுவீர்கள்.

குறிப்பு-2:
இந்தப் பதிவு எண் 111 என்று அமைந்தது தற்செயலான விஷயம் :-)))

இப்படிக்கு,

ஹரிஹரன்

சாய்பாபா மேஜிக் ஷோ!! டிக்கெட் ரெண்டு ரூபாய்!!

மீண்டும் ஒரு விளம்பர பதிவு !!!! ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இருந்தால் நான் பொறுப்பல்ல...( அட, இப்படி கூட டிஸ்கி போடலாமோ !!! ) வீடியோ லிங்க் இருந்தது, அதை இப்போது தான் சிந்தாநதி சொல்லி பார்த்து அப்டேட் செய்தேன். இப்போ வீடியோவும் இருக்கு...பாருங்கப்பு...

தெலுங்கு கங்கை திட்டத்திற்காக 200 கோடி வழங்கிய சாமியார் சாய்பாபாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் "ஆன்மீக சக்தியால் மொதிரம் வரவழைத்து கொடுத்தார் பாபா" என்று பெருமிதம் கொண்டாராம். செய்தி வெளியிட்டிருக்கிறது 'தினமலர்'.

அதே கூட்டத்தில் (21.1.2007 காலை நிகழ்ச்சியில்) மத்திய அமைச்சர் மாண்புமிகு தயாநிதி மாறன் பேசும் போது, "அருள்மிகு பாபா முதலமைச்சர் வீட்டிற்கு வந்தபோது, எனக்கு மோதிரம் வரவழைத்துக் கொடுத்தார். அப்போது அவருக்கு மோதிரம் கொடுத்துவிட்டீர்கள், எனக்கும் ஒரு மோதிரம் தாருங்கள் என்று அமைச்சர் துரைமுருகன் கேட்டார். உடனே அவருக்கும் மோதிரம் வரவழைத்துக் கொடுத்தார். எங்களுக்குக் கொடுத்து விட்டீர்கள்; கலைஞருக்குக் கொடுங்கள் என்று (துரைமுருகன்) கேட்டபோது, அவருக்கு என் மனதையே தருகிறேன் என்றார். அவர் மனதில் நானும், என் மனதில் அவரும் இருக்கிறார் என்று பாபா தெரிவித்தார்.’’ (`தினத்தந்தி’, 22.1.2007) என்று கூறியுள்ளார்.

ஆகா! அற்புதம்...அற்புதம்....மோதிரம் ஸ்டாக் தீர்ந்து போச்சுங்கிறதை எவ்வளவு அழகா சமாளிச்சிருக்கிறாரு பாபா! இல்லாட்டி இவ்வளவு காலம் தப்பிச்சிருக்கமுடியுமா? எத்தனை கொலைகள், எத்தனை பாலியல் வன்முறைகள் (நடமாடும் கடவுளுக்கு பேதம் கிடையாது.. அதனால் இருபாலரும்...)... அத்தனையையும் சமாளித்து வருபவருக்கு இதெல்லாம் ஜுஜுபி..தான்! என்னமோ... என்ன மாயமோ தெரியல... அவருக்கு ஒன்னுமே ஆவறதில்ல.... இன்னும் நடத்திக்கிட்டே இருக்காரு!

பொதுப்பணித்'துரை' தான் புளகாங்கிதம் அடையுதுன்னா, தகவல் தொழில்நுட்பம் அதுக்கும் மேல! இந்திய வாய்க்காலை அறிவியலை நோக்கித் திருப்பிக்கிட்டிருக்கிற தயாநிதி மாறன் என்னடான்னா, எனக்குதான் 'முதல் மரியாதை'... அவருக்கு 'அடுத்த மரியாதை'ன்னு உரிமை கொண்டாடுறாரு!

வெறுங்கையை நீட்டினால் மோதிரம் வருதுன்னா, சாய்பாபாவை அரசுடமையாக்கி வெறுங்கையை விசுக் விசுக்குன்னு நீட்டச் சொல்லி தங்கம் வரவழச்சு, இந்தியப் பொருளாதாரத்தை வளர்த்து, இந்தியா வாங்குன கடனை எல்லாம் அடைச்சு, அப்துல் கலாம் போறதுக்குள்ள வல்லரசாக்கிட வேணாமா? அரசுடமையாக்கலைன்னாலும் குறைந்தபட்சம் சன் குழும உடமையாகவாவது ஆக்கி, குங்குமம் 'பெஸ்ட் கண்ணா பெஸ்ட்'-ல சாக்லெட், முட்டாயி, எவர்சில்வர் டம்ளரெல்லாம் குடுக்கிறதுக்கு பதிலா... வாரம் 7 தங்க மோதிரம் பரிசுன்னு விளம்பரம் பண்ணவாவது ஏற்பாடு பண்ண வேண்டாமா?

அதென்னையா.. வெறுங்கையை நீட்டினா விபூதி குங்குமமும், செயினு மோதிரமும்... இப்படி வெறும் கைக்கு அடங்குற பொருளாத்தான் வருமா? பத்து பைசாக்கு பெறாத விபூதிக்கு பதிலா, ஒரு புடலங்காயோ, ஒரு பூசணிக்காயோ குடுத்து வாயடைக்க வேண்டாமா?

பருத்தி புடவையாக்காய்ச்ச மாதிரி 'செய்கூலி இல்லாம', 'சேதாரம் இல்லாம' சும்மா கம்ப்யூட்டர் கட்டிங்கோட தங்க செயினும், மோதிரமும் வருதே... அட கூறுகெட்ட கூபேக்களா... இந்நேரம், கோலார் தங்கச் சுரங்கத்துக்கு பதிலா பாபா தங்கச்சுரங்கம்-னு ஆரம்பிச்சு அதுக்கு சாய்பாபாவையே சி.இ.ஓ. வாப் போட்டு, புரொடக்சனை டெவலப் பண்ணக்கூடாதா?

கொஞ்சமாவது அறிவுன்னு ஒன்னு இருந்து அதையும் கொஞ்சமே கொஞ்சம் பயன்படுத்தினாலும் போதுமே! விபூதி வருதுன்னா சரி, அது பக்தி புராடக்ட், டைரக்டா நடமாடாத கடவுள்கிட்ட இருந்து நடமாடும் கடவுளுக்கு சப்ளை ஆகுதுன்னு சொல்லலாம். கோலார்ல கிடைக்கிற தாதுக்களிலயே, எவ்வளவுதான் சுத்தப்படுத்திப் பார்த்தாலும் பக்கத்து ஏரியால சின்னப்புள்ள தொலைச்ச தோடுதான் கிடைக்குதே தவிர, தங்கத் துகள்கள் கிடைக்க மாட்டேங்குதுங்கறான். இங்க என்னடான்னா பாபா நினைச்சா தங்கம் வருது... அதுவும் பிரிச்செடுத்து, சுத்தப்படுத்தி, உருக்கி, செம்பு கலந்து 22 காரட் அளவுக்கு வந்து, அதுவும் கரெக்ட்டான சைஸ்ல, 916 ஹால்மார்க் முத்திரை தரத்தில தயாராகி வருதுன்னா சாய்பாபா எவ்வளவு பெரிய தங்க பேக்டரியா இருப்பாரு! என்னங்க சாதாரண காரியமா? இந்த தங்கம் எங்க தயாரானது, சரவணா ஸ்டோர் தரமா... சென்னை தங்கமா? மும்பை தங்கமா? இல்ல சிங்கப்பூர் சரக்கா? கஸ்டம்ஸ் கஷ்லமெல்லாம் இல்லாம எப்படிப்பா இந்த தங்கம் பரந்து வருது?

ஆமா! அதென்ன மோதிர சைஸ் எல்லாம் மீடியம் சைஸ்லயே வருது.. லார்ஜ், ஸ்மால் எல்லாம் புரொடக்சன்-ல இல்லயோ? துரைமுருகன் கேட்டதால தப்பிச்சாரு... இதுவே கலைஞர் பேரன் எனக்கு ஒரு மோதிரம் குடுங்கன்னு கேட்டிருந்தா... என்ன செஞ்சிருப்பாரோ? பணக்காரன் பதவிக்காரன்-க்கு மட்டும் தங்க செயின். மத்தவன் கேட்டா பிரயோஜனத்துக்கு இல்லாத விபூதியைத் தர்றாரு.

இப்படிதான் ஒருதடவை பி.வி.நரசிம்மராவ்-னு ஒரு பிரதமர் இருந்தாரே (ஞாபகம் வருதா?) அவர் கலந்துக்கிட்ட ஒரு விழாவில ஒரு பிரமுகருக்கு தங்க செயினை திடீர்னு வரவச்சுக் கொடுத்தாரு. அதை படமெடுத்த டிடி தொலைக்காட்சி கேமராமேன் திரும்பப் போட்டுப்பார்த்தா, மனிசன் வெறுகையால செயினு கொடுக்கிற லட்சணம் தெரியுது.... அதை நீங்களும் இங்க பாருங்க! இந்த மாதிரி தான் துரைமுருகனுக்கும், தயாநிதி மாறனுக்கும் மோதிரம் கொடுத்தது..(இந்த மோதிரம் இந்த வருசத்து இன்கம் டாக்ஸ் கணக்கில வருமா மத்திய அமைச்சர் சார்?)

இப்படி சின்னப்புள்ளத்தனமா, ரொம்ப சாதாரண மேஜிக் கத்துக்கிறவன் கூட நல்லாச் செய்வான் போல, அந்தளவுக்கு கேவலமா செய்யிற வித்தைக்கே இவ்வளவு இளிச்சவாய்க்கூட்டம், பாராட்டு, பணம், பவிசு, பாதுகாப்புன்னா பி.சி.சர்க்காரெல்லாம் சாமியார் வேஷம் போட்டா, இந்தியாவையே கொண்டு வந்து அடகு வச்சிடுவாங்க போலிருக்கே!

சரி, சரி இப்போததக்கு அந்த சிக்கல் இல்ல... சாய்பாபாவோட சின்னப்புள்ள விளையாட்டுக்கள்..... like விபூதி கொடுக்கிறது, லிங்கம் கக்குறேங்கிற பேரில காமெடி பண்றது... இதையெல்லாம் பார்க்க ரெண்டு ரூபா! ரெண்டு ரூபா! ரெண்டு ரூபா! சார்........!!

முக்கிய டிஸ்கி : இந்த பதிவால் யார் மனதாவது புண்படுகிறது என்று ஒரே ஒரு பிண்னூட்டம் வந்தால் கூட பதிவை நீக்குவது பற்றி யோசிப்பேன்...

Wednesday, January 24, 2007

சுட்ட ரவி !!!!!! ஒரு உதவிக்காக விளம்பரம் !!!

பொன்ஸ் பதிவை அப்படியே சுட்டாச்சு...!!!! விழியன் அவர்களை பற்றி நன்பர் திருமால் மூலமாக கேள்விப்பட்டிருக்கேன்...அவரிடம் ஜே.ஜே சில குறிப்புகளை சுடலாம் என்றுகூட திட்டம்...சரி அதை விடுங்க...இப்போ ஓவர் டூ விளம்பரம்...

முத்தமிழ் குழுமம் பற்றி நண்பர்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். நண்பர் மஞ்சூர் ராசா, மற்றும் நம்பிக்கை குழுமத்தின் பாசிடிவ் ராமா, முதலியோர் இணைந்து நடத்தும் யுனித்தமிழ் கூகிள் குழுமம்.

பதிவெழுதத் தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே முத்தமிழ்க் குழுமத்தில் இணைய எனக்கும் அழைப்பு வந்தது. நண்பர் மஞ்சூர் ராசா புதுப் பதிவர்களை அவ்வப்போது பார்த்து இது போல் அழைப்பு அனுப்பி விடுகிறார். குழுமத்தில் சேர்ந்த புதிதில் அங்கே நடக்கும் விவாதங்களை வெறுமே படிப்பதோடு சரி. நமது ரசிகவ் ஞானியார், கீதா சாம்பசிவம், செல்வன், ஸ்ரீஷிவ், நாமக்கல்லார் எல்லாரும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த முத்தமிழ்க் குழுமத்தின் அமைதிப்படையிலேயே என்னுடைய முதல் மூன்று மாதம் கழிந்தது.

அப்புறம் நமது நண்பர் அசுரன் மற்றும் நண்பர் ராஜாவனஜ்ஜும் வந்து சேர்ந்த பின்னர் கொஞ்சம் விறுவிறுப்பான விவாதங்களுடன் பொறிபறந்து கொண்டிருந்தபோதும் முத்தமிழ்க் குழுமத்தில் நான் வெறும் அமைதிப்படை உறுப்பினர் தான். சில சிறுவர் கதைகளைத் தாண்டி எதுவும் எழுதவில்லை அங்கே.

ஆனால், முத்தமிழ்க் குழுமம் இந்த ஜனவரி 20ஆம் தேதியன்று தான் முதல் ஆண்டு முடிவைக் கொண்டாடுகிறது என்பது மிக மிக ஆச்சரியமான தகவல் எனக்கு. ஒரு வருடத்தில் எத்தனை உறுப்பினர்கள், மடல்கள், விவாதங்கள்!!! வியப்பு அகலும் முன்னரே அவர்களின் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங்கள் நல்லதொரு அறிவிப்பாக வந்தது.

இதோ முத்தமிழின் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களின் அறிவிப்பு:

* இந்தப் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் முத்தமிழ் குழுமத்தில் கடந்த ஒரு வருடத்தில் எழுதப்பட்ட முக்கிய கட்டுரைகள் முத்தமிழ் வலைப்பதிவிலும், நண்பர் செல்வனின் வலைப்பதிவிலும் தொடர்ந்து இடப்படுகிறது. இதன்மூலம் பல படைப்பாளர்களுக்கு வலைப்பதிவுகளின் அறிமுகமும் அவர்களின் படைப்புகள் பரவலாக அறியப்படவும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாது முக்கிய படைப்புகள் விக்கிப்பீடியாவிலும் இணைக்கப்படும்.

* ஆண்டுவிழாவை ஒட்டி, புதுமையான கட்டுரை , கவிதை மற்றும் சிறுகதை போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டிக்காக அனுப்பப்படும் கவிதை, கட்டுரை மற்றும் சிறுகதைகளுக்கு தலைப்பு எதுவும் கிடையாது, தமிழ்மொழி மற்றும் தமிழ்நாட்டைப்பற்றி இருந்தாலே போதுமானது; சொந்த அனுபவங்களையும் கூட எழுதலாம். 400 வார்த்தைகளுக்கு மிகாத படைப்புகள் படைப்புகள் முத்தமிழ் குழுமத்திற்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள் பிப்ரவரி 10, 2007. படைப்புகளில் ஆங்கில வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது.

படைப்புகளை muththamiz@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவையுங்கள்

சிறந்த படைப்புகளுக்கு சிறப்பான பரிசுகள் காத்துக்கொண்டிருக்கின்றன.

* மிக மிக முக்கியமான அடுத்த அறிவிப்பு, தமிழ்நாட்டு நூலகங்களை மேம்படுத்துதல். அதாவது தமிழ்நாட்டிலுள்ள சில கிராம பள்ளிக்கூடங்களுக்கு நூலகங்கள் அமைத்து தரலாம் என முத்தமிழ்க் குழுமம் முடிவுசெய்துள்ளது. நண்பர் உமாநாத் (விழியன்) அவர்கள் பொறுப்பில் நடக்க இருக்கும் இந்த நல்ல காரியத்திற்கு புத்தகங்களாகவோ அல்லது பணமாகவோ அனுப்பி உதவ விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:
Citibank Account
Bangalore - Koramangala

A/c No. 5637000804 - Umanath

Ph numbers : 09886217301/ 09894110534 (Tn number)


Mailing Address

S.Umanath
Bluestar Infotech Limited
#7, 18th Main Road,
7th Block
Koramangala -
Bangalore - 560095

ஆக, போட்டிகள், பரிசுகள், கிராமப்புற பிள்ளைகளின் படிப்புக்கு உதவ ஒரு வாய்ப்பு... வாருங்கள் நாமும் சேர்ந்து முத்தமிழின் ஆண்டுவிழாவைக் கொண்டாடி சிறப்பாக்க உதவுவோம்..

முத்தமிழ்க் குழுமத்தின் முதல் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்களுடன், இந்த அறிவிப்பை வெளியிட அமைதிப்படை உறுப்பினரான எனக்கும் வாய்ப்பளித்தமைக்கும் என் நன்றிகள்.. இன்னும் பல பிறந்த நாள் கண்டு சிறக்கட்டும் முத்தமிழ்க் குழுமம்.

தூக்கமே டேபிள்மேலே...வகுப்பறையில் தூங்குவது எப்படீன்னு தலைப்பு வைக்கலாம் என்று தான் நினைத்தேன்...அப்போ அலுவலகத்தில் தூங்குறவங்களை எந்த கணக்கில் சேர்க்கிறது.....நான்கூட இப்போ தூங்கி எழுந்து தான் இந்த பதிவே எழுதறேன்....இந்த தலைப்பு வெச்சதுக்கு காரணம் ஆசையே அலைபோலே அப்படீன்னு ஒரு பாடல் சட்டென என்னோட கனவுல (ஆமா - பத்து நிமிஷம் முன்னாடி) வந்தது தான்...

அதுக்கு முன்னாடி வகுப்பறையில் நான் தூங்கறது ஒரு கனவுமாதிரி (!?) வந்து கொசுவர்த்தி சுத்துது...( அட இங்கேயும் தூக்கத்துக்கு தேவையான ஐட்டம் தானா)

நான் அப்படியே கடைசி பெஞ்சுல உக்காந்திருப்பேன்...அதிலேயும் மூலையா ( ஈசானி மூலை) ஒரு சீட் கிடைச்சா வாஸ்துபடி அந்த இடத்தை முதல் நாளே ஹோய் ஹோய் இது என்னோட எடம் என்று சவுண்டு கொடுத்து ரிசர்வ் செய்யுறது தொட்டில் பழக்கம்...அப்போத்தானே நிம்மதியா தூங்கமுடியும்...

பாருங்க, படிக்கிற நமக்கு இந்த ஊர் சுத்துறது, படிக்காம சினிமாவுக்கு போறது, சைட் அடிக்கறது எல்லாம் பிடிக்காது..ஐயம் குட் பாய்...ஆனா க்ளாஸ்ல தூங்குறதுக்கு தனியா ஒரு செமஸ்டர் வெச்சா அதுல யூனிவர்சிட்டி பர்ஸ்ட்டை எங்க கல்லூரிக்கு வாங்கிதந்திருப்பேன்...

அதுல பாருங்க...ஒரு கையை படக்குன்னு மடக்கி, அதுமேல தலையை போட்டு, இன்னோரு கையை கொஞ்சம் வாகா மடக்கி, அதே இரண்டாவது கை முஷ்டியால கன்னத்துக்கு ஒரு சப்போர்ட் கொடுத்து அப்படியே சாய்ஞ்சா, அடா அடா அடா, என்ன அழகா தூக்கம் வரும்ன்றீங்க...புத்தகம் கொஞ்சம் பெருசா இருக்கறது என்ன அழகா யூஸ் ஆகும் தெரியுமா...இதுல சிம்'ரம்'ன் படமோ, சினேகா படமோ சமீபமா பார்த்திருந்தா போதும்...ஒரே "நிலவை கொண்டுவா, பெஞ்சில் சேர்த்துவை, மேகம் கொண்டுவா, புத்தகத்தின் மேலேவை" பாட்டுத்தான்...

சிலசமயம், தமிழ் வாத்தியார் "கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்" என்று ஏதாவது எலக்கிய பாடம் நடத்திக்கிட்டு இருக்கச்சே, நாம இங்கெ "கையில் தலைவைத்து மாணவர்கள் தூங்கிவிட்டால், வகுப்பில் இவர்க்கு தமிழ்பாடமும் ஓர் இரவாம்" என்று தூங்கிக்கிட்டு இருப்போம்...

இதுல பெரிய விஷயம் டேபிள் மேலே தலைவெச்சு தூங்கும்போது குடகு மலையில் கிளம்பி தஞ்சைத்தரணிக்கு வாழ்வளித்த காவிரி ஆறாக நம்ம வாயில் இருந்து பெருகும் புதிய காவிரியாக ஒரு ஜொள்ளு...
அதுபாட்டுக்கு அதோட வேலையை பார்த்துக்கிட்டிருக்கும்...தலைவெச்சு படுக்கிற புத்தகம் தான் ஓரே ஈரமா...

அப்படியே வீட்டுக்கு போனா, "ஏண்டா மழையில நனைஞ்சுக்கிட்டே வர்றே, கொஞ்சம் காலேஜில நின்னு வரக்கூடாதா" என்று அம்மா கேட்குமளவுக்கு கொண்டுபோய் விட்டிடும்...( மே மாசத்துல எந்த காலத்துல மழை பேஞ்சுருக்கு, எங்க அய்யன் அவ்ளோ அசமஞ்சமா வளத்துட்டார்...நான் என்ன செய்யறது...)

எங்க தமிழய்யாவுக்கு நான்னா ஒரு இளக்காரம்தான்...பேரைச்சொல்லி கூப்பிடமாட்டாரு...நெம்பர் 28. இதுதான் அவர் வெச்ச பேரு...என்னோட கல்லூரி ரெஜிஸ்டர் நெம்பர்தான்...திடீர் திடீர்னு என்னை எழுப்பி ஏதாவது கேட்பாரு...நானும் பட்டுனு எழுந்திருச்சு, ஸ்பைடர்மேன் முதல் காட்சியில அவர் விடும் வலை ஒரு சாப்பாட்டு தட்டோட ஒட்டிக்கற மாதிரி, நோட்டுக்கும் வாய்க்கும் ராமர் பாலம்(ஆடம் பாலம்) மாதிரி ஒரு ஜொள் இணைப்பை கொடுத்துக்கிட்டு எழுந்திரிச்சு நிப்பேன்...

மொக்கையா ஏதாவது கேட்டு கிண்டல் செய்துட்டு உக்கார சொல்லுவாரு...அது என்னன்னு ஒரு எழவும் புரியாதுன்னாலும், ஆமாங்கய்யா, சரிங்கய்யா மாதிரி ஏதாவது சொல்லி சமாளிச்சுட்டு மறுபடியும் வேலையை பார்க்க போயிருவேன்...

கணக்கு வாத்தியார் டஸ்டராலேயே அடிச்சிருக்காரு...அதுக்கப்புறம் நான் எழுந்து காதல்கொண்டேன் தனுசு மாதிரி போர்டை நாஸ்திசெஞ்சு கணக்கெல்லாம் போடலை...மறுபடியும் தூக்கம்தான்...எனக்கு என்ன கணக்கு தெரியும்....கணக்கு பண்ண கொஞ்சம் தெரியும்...அவரிடம் டியூசன் போயும் ஒன்னும் தேறலை...அந்த சோகக்கதையை கேட்காதீங்க ப்ளீஸ்...
சிலவகுப்பு டேபிள் தூங்கறதுக்கு அழகா, ரொம்ப பாந்தமா, பொருத்தமா இருக்கும்...ஏசி இல்லாமலே ஒரு சில்ல்ல்லுனு கூலிங் எபெக்ட் கிடைக்கும்..."சில்லுன்னு ஒரு பெஞ்சு" அப்படீன்னு வெச்சுக்கோங்களேன்...

சிலசமயம் படுத்தவுடனே தூக்கம் வந்திடும்...ஆனா சிலசமயம் வாத்தியார் பாடம் ஆரம்பிச்சாத்தான் மூடே வரும்னா பார்த்துக்கோங்களேன்...அதுலேயும் எங்க தமிழ்வாத்தியார் எனக்கு கிடைச்சது ஏதோ போன ஜென்ம பிறவிப்பலன்...என்னதான் அவருக்கு "காண்டாமிருகம்" அப்படீன்னு பட்ட பேரு வெச்சிருந்தாலும், இந்த விஷயத்தால அவர்மேல எனக்கு தனி மரியாதை...எப்போ அவரை வெளியிலே பார்த்தாலும் "அய்யா, நமது வகுப்பு எப்போது அய்யா" என்று பணிவோட கேட்டுக்கிட்டிருப்பேன்...பொறவு ? குவாட்டர் அடிச்சாலும் வராத தூக்கம் அவர் பீரியட்ல மட்டும் வருதே !!!

ஜன்னல் வழியா வரும் வேப்ப மரத்து காற்று, இனிமையான சில்லுனு ஒரு பெஞ்சு, தாலாட்டும் மெல்லிசையாக அய்யா நடத்தும் பாடம்...ஆகா...இனி ஒருமுறை வருமா அது வாழ்வில்...என்னதான் இப்போ ஆபீஸ்ல ஏசி இருந்தாலும், அந்த காலத்தில் வந்த தூக்கம் வரமாட்டேங்குது...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பாபாபாபா...மறுபடியும் கண்ணைக்கட்டுதே....இண்டர்நெட் வேலை செய்யலை மத்தியானத்துல இருந்து...அப்படியே இருப்பிடத்திலேயே ஒரு குட்டித்தூக்கம் போட்டேன்...அப்போ எழுந்த சிந்தனை இப்படி பதிவு எழுத வெச்சிருச்சி...நீங்க ஒன்னும் கோ கோ வி விச்சுக்க்க்காஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

சாமி இருக்கா இல்லையா ? நீங்க ஓட்டு போடுங்க

எல்லோருக்கும் வணக்கம்...சாமி இருக்கா இல்லையா என்று ஒரு கேள்வியை கேட்பது கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் என்றாலும், உண்மையை தெரிஞ்சுக்கனும்னா ஒரு சர்வே / ஒரு வாக்கெடுப்பு இப்படி வெச்சாத்தானே தெரியும்...

சிலபேர் கடவுளை நம்புறாங்க...ஆழமான நம்பிக்கையுடன் எல்லாமே அவன் செயல் என்று சொல்லுறாங்க...

சிலபேர் ஏதோ ஒரு சக்தி இருக்கு, ஆனால் நான் அவ்வளவு இண்ட்ரஸ்ட் காட்டுறதில்லை என்று சொல்லுறாங்க...

சிலபேர், தன்னுடைய சிந்தனை,பகுத்தறிவு சிந்தனை என்று சொல்லி கடவுள் மறுக்கிறாங்க...

சிலருக்கு, இப்படி ஒரு கேள்வி கேட்டாலே ப்ரீஸ் ஆகுற மனநிலை...

சர்வேசன் ஒரு வாக்கெடுப்பு போட்டிருக்கார்...இங்கே நீங்க அங்கே போய் உங்களோட வாக்கை பதிவு செய்தீங்கன்னா கொஞ்சம் தெளிவு பெறலாம்...

Tuesday, January 23, 2007

இந்து,தமிழ்,கிறித்தவம்,ஜடாயு,ஜல்லி,பகுத்தறிவு

ஜடாயு எழுதிய "உலகப்பொதுமறை பொங்கல் என்ற பதிவுக்கு" பகுத்தறிவு சுரேஷ் பதில் எழுதி இருக்கிறார். நானும் ஒரு பதிவு எழுதத்தான் போகிறேன். அதற்கு முன் பகுத்தறிவின் பதிவுக்கு இலவச விளம்பரம் தருகிறேன். ஓவர் டூ பகுத்தறிவு...

"தமிழ்நாட்டில் பொங்கல் பொங்கல் என்ற பெயரில்தான் கொண்டாடப்படுகிறது. எனக்குத் தெரிந்து பிராமணர்கள் மட்டும்தான் பொங்கலை மகர சங்கராந்தி என்று கூறுவது வழக்கம். எனக்கு ~20 வயது வரை பொங்கலுக்கு இப்படி ஒரு பெயர் இருப்பதே தெரியாது. "

மேலும் படிக்க

Friday, January 19, 2007

வீராசாமி - திரை விமர்சனம்

சிம்பு சினி ஆர்ட்ஸ், மற்றும் குறள் டி.வி பி.லிட் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் வீராசாமி திரைப்படத்தின் இணை தயாரிப்பு உஷா ராஜேந்தர்..

பெயரை விஜய டி.ராஜேந்தர் என்று மாற்றிக்கொண்டுவிட்டபிறகு வந்துள்ள முதல் திரைப்படம்....கதை,திரைக்கதை,வசனம்,பாடல்கள்,இசை,ஒளிப்பதிவு,டைரக்ஷன், ஹீரோயின் மேக்கப், லைட்டிங், புரொடக்சன் மானேஜர், யூனிட்டில் சமையல் ஆகிய பணிகளை ஏற்றுள்ளார் விஜய டி.ராஜேந்தர்..அதைவிட மிகவும் கொடிய பணியான ஹீரோ வேடமும் ஏற்று நடித்து பீதியை கிளப்பியுள்ளார் டி.ஆர்..

மும்தாஜ் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்...படத்துக்கு டபுள் ஹீரோயின் என்று யாராவது சொன்னால் அது உண்மைதான்...மும்தாஜே டபுளாக காட்சியளிக்கிறார்...இவரது காஸ்ட்யூமுக்கு முன்பெல்லாம் அதிகம் செலவாகாது என்பது உண்மை...ஆனால் இந்த படத்தில் அடுப்பு மாதிரி உள்ள மும்தாஜ் இடுப்புக்கே இரண்டு மீட்டர் துணி செலவாகும் என்று சொன்னால் அது மிகையல்ல...கட்டிப்புடி கட்டிப்புடிடா என்று பாடியவர் இப்போது பாடினாலும் கட்டிப்புடிக்கலாம்தான், ஆனால் ஒருவரால் முடியாது...

விமர்சனத்துக்கு இவ்வளவு பில்டப் தேவையில்லைதான்...இருந்தாலும் வேறுவழி இல்லையே...படத்தின் ஆரம்பக்காட்சிகள் பார்வையாளர்களை கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன...என்னுடைய தனிப்பட்ட அனுபவம் என்னவென்றால் நான் சீட் நுனிக்கே வந்துவிட்டேன்...ஆம்...ஸ்க்ரீனில் விஜய டி.ஆர் தோன்றியதும் தொண்டைக்குழி வறண்டு நாபி கமலத்தில் இருந்து உருண்டையாக பந்துபோல் ஒன்று தோன்றி உடனே தியேட்டரை விட்டு வெளியேறு என்று மிரட்டுகிறது...

கையில் அரிவாளுடன், சிகப்பு மஞ்சள் நிற சட்டைகளில் கொடுமையாக காட்சியளிக்கும் விஜய டி.ஆரை பார்த்தவுடன் கொஞ்சம் பிரட்டுகிறது...அவரது வசனம் மிரட்டுகிறது...எதிரில் இருப்பவரை அல்ல..நம்மையே...

கதை இதுதான்...விஜய டி.ஆர் ஒரு கொலைப்பதிவர்...அதாவது கூலிக்கு கொலைசெய்து,அதை ஒரு ரெஜிஸ்டரில் பதிவு செய்துகொள்கிறார்....அது ஏன் என்று கிளைமாக்ஸில் சொல்கிறேன் என்று இடைவேளையின்போது சொல்லி பயங்கரமான பீதியை கிளப்பி இண்டர்வெல் விடுகிறார்...நெம்பர் 1 அடிக்க கூட போகாமல் சீட்டிலேயே காத்திருக்கவேண்டியதாயிற்று...பாப்கார்னுக்கு பக்கத்து சீட்டில் உக்காந்திருந்த பாப்பாவின் டப்பாவில் கைவைக்க வேண்டியதாயிற்று...

விஜய டி.ஆர் மற்றும் மும்தாஜ் ( படத்தில் மும்தாஜின் பெயர் அழகுதமிழ் கலைச்செல்வி மனோகரி) இடம்பெறும் காதல்காட்சிகள் கிழவிகள் கூட ரசிக்ககூடியவை...அதிலும் ஹீரோ ஹீரோயினை பார்த்து, அடுக்கு மொழியில், முத்தம் வேனுமா, சுத்தமா வேனுமா, மொத்தமா வேனுமா என்று சத்தமாக கேட்கும்போது தமிழ் ஊற்றாக பெருகி காலை நனைக்கிறது ( எதிர் சீட்டில் குழந்தை)...

படத்தில் இடம்பெறும் பாடல்கள் காதிலேயே ஒலித்துக்கொண்டிருக்கின்றன இன்னும்..அவ்வளவு சத்தம்...அமர்ந்திருந்த இடத்துக்கு மேலேயே ஸ்பீக்கர் சாமி...பாடல்காட்சிகளில் மிக பிரம்மாண்டமான செட்டுகள்...செட் போடுவது கொஞ்சம் அரதப்பழசான ஐடியாவாக இருந்தாலும் ரசிக்கவைக்கிறது...அதிலும் பெரிய சாம்பார் கரண்டியின் உள்ளே மும்தாஜ் ஆடுவது போன்ற செட் அருமை...சாம்பாரே சாப்பிட்டதுபோல் இருந்தது...

காமெடி காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை...டி.ஆர் திரையில் வந்தவுடன் வெடிச்சிரிப்பு ஆரம்பமாகிவிடுகிறது...ஏன் எதற்கு என்று இல்லாமல் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது போங்கள்...பின்னால் உட்கார்ந்திருந்த தாத்தாவின் பல்செட் என்னோட மடியில் வந்து விழுந்தது என்றால் பாருங்கள்..எவ்வளவு ரசித்திருப்பார்...

படத்தில் எவ்வளவு அருமையான பஞ்சு டயலாக்குகள் மற்றும் அடுக்கு மொழிகள் இடம்பெறுகின்றன தெரியுமா ? மொத்த வசனமுமே அடுக்கு மொழியில் அமைந்திருப்பது மிகவும் அருமை...உதாரணம், டீ.ஆர் ஒருவரை கொல்லச்செல்லும்போது

டேய் லூசு..
உன்னோட பேரு தாசு..
இப்ப போடப்போறேன் டாசு..
நான் வெட்னா நீ பீசு..
ஆகாது இது போலீஸ் கேசு.
எனக்கு இருக்குது மக்கள் மாஸு..

என்று கடுமையான அடுக்கு மொழியை சொல்ல, கொல்லப்படவேண்டிய அரசியல்வாதி, தானாக மாரடைப்பில் செத்து விழுகிறார்...

படத்தில் மைனஸ் பாயிண்டுகள் என்று சொல்லப்போனால் ஏகே.47, 56, .33 பிஸ்டல், என்று பல நவீன ஆயுதங்கள் வந்துவிட்ட இந்த காலத்தில் டீ.ஆர் வெறும் அரிவாளை தூக்கிக்கொண்டு கொல்ல செல்வது மிக அரதப்பழசு டெக்னிக்..

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா கண்னைக்கட்டுதே...தினத்தந்தியில் வந்துள்ள வீராசாமி விளம்பரத்தை காலையில் எழுந்ததும் பார்த்ததினால் வந்த வினை...அடுக்கு மொழியை அதிகம் சொல்லி அறுக்கவில்லை...காரணம், படிக்கறவங்க பின்னூட்டம் அடுக்குமொழியிலேயே போடப்போறீங்க இல்லையா...!!!! இப்போதைக்கு நான் எஸ்கேப்...

Wednesday, January 17, 2007

வலைப்பதிவர் கதை விவாதம் !!!!

ஆ ஆ ஆ வாங்க வாங்க வாங்கப்பா...வாங்கம்மா....கதை விவாதம் நடக்குது வாங்க வாங்க என்று விஜய் டிவி லியோனி - இலவச பட்டிமன்றம் கல்யாண மண்டபத்தில் நடக்கிற மாதிரி வாசல்ல நின்னு ஒருத்தர் எல்லாரையும் உள்ளார கூப்பிட்டுக்கிட்டு இருக்கார்...அது யாருமில்லைங்ணா...செந்தழல் தான்...

முதலில் உள்ளே வருகிறார் பொன்ஸ்...எக்ஸ்கியூஸ் மீ, இங்கே யானைக்கெல்லாம் அனுமதி உண்டா, நான் கையோட ரெண்டு யானைக்குட்டியை கூட்டிவந்திருக்கேன்...சேர்த்துக்கோங்க ப்ளீஸ்...

அய்யோ தாயே...இது சின்ன கல்யாண மண்டபம்மா...இங்கே யானைக்குட்டிக்கெல்லாம் சேர் கிடையாது...நீங்க வேனா உள்ளே எண்ட்ரி கொடுத்துக்கோங்க...அதுக்கு முன்னால. கதை விவாதம் செய்ய வலைப்பதிவர் வந்துக்கிட்டிருக்காங்க...அவங்களை வாசல்ல நின்னு கொஞ்சம் ஸ்மைலோட வரவேற்பு கொடுங்க...

பொங்கல் தமிழர் திருநாள் அல்ல...வாலண்டைண்ஸ் டே தமிழர் திருநாள்....கர்நாடகத்தில் காந்தி ஜெயந்தியை கன்னடர் திருநாளாக கொண்டாடுகிறார்கள்..அமெரிக்கர் எல்லாம் இந்துக்களாக மாறவேண்டும்...இந்து மதம் முன்னூறு கோடி வருடங்களாக உள்ளது...ஆர்.எஸ்.எஸ் ஒரு சிறந்த புட்பால் டீம்...என்று ஒருவர் ஷாக் கொடுத்தபடி உள்ளே நுழைகிறார்...அட நம்ம ஜடாயு....வாங்க சார் வாங்க....என்று அவருக்கு உரிய இருக்கையில் அமரவைத்துவிட்டு திரும்ப எத்தனிக்கையில் தோளைத்தொடும் கரம்...

ரவி, இஸ்ரேலில் எல்லாரும் சுகம்..இங்கே எல்லாரும் சுகமா ? மேலதிக தகவலுக்கு http://seen.edu.co.islerl.boom.innovation.com என்ற லிங்கை பார்த்துக்கோங்க என்கிறார் வஜ்ரா...அட...வாங்க...இவ்ளோதூரம் வந்ததுக்கு தேங்ஸ்...என்று பேசியபடியே நின்றபோது, வாசலில் ஒரே ஆரவாரம்...

ஓட்டமாக ஓடினால், கையில் க்ரிக்கெட் பேட்...ஜீன்ஸ், டீஷர்டில் டோண்டு.....ஆனால் கையில் பந்துக்கு பதில் போண்டா.....ஏதாவது பேசினால் வம்பாகிருமோ என்று வலையுலக சச்சினை கப்பென பிடித்து இடத்தில் அமரவைக்குமாறு ஹாரி பாட்டர் முகமது யூனுஸ் அவர்களை கேட்டுக்கொண்டுவிட்டு.....திரும்பி பார்த்தால்....

கவிஞர் பாலபாரதியும் வலப்பூ சுனாமி லக்கியும் தோளில் கைபோட்டபடி உள்ளே வந்துகொண்டிருக்கிறார்கள்...கூடவே அருள் மற்றும் வீ.த.பீப்பிள் ஜெயசங்கர்...என்னப்பா கூட்டணி பலமாயிருக்கு....கதைவிவாதம் நடக்கப்போறது தெரிஞ்சுதான் வந்தீங்களா என்றேன்...மையமாக பாலபாரதி வழிசல் சிரிப்பு சிரித்துவைத்தார்.....அப்போ இது சன்.டி.வி அரட்டை அரங்கம் இல்லையா ? என்றார் லக்கி......அட சும்மா சொன்னேன்...ஏதாவது கதை கதையா காரணமா கிடைக்கும், வ.வா சங்கத்துல அட்லாஸ் வாலிபர் மேட்டர் எழுத எதுனாச்சும் சிக்குதான்னு பார்க்க வந்தேன்..என்றார்...

அதுக்கு பேசாம நீங்க தமிழ்மண கனவு கண்டா போதுமே என்றேன்...அப்புறம் சொல்லுங்க செந்தமிழ் மணி என்று பினாத்தலார் உள்ளே நுழைந்தார்...சார், நான் செந்தழல் ரவியாக்கும்...நீங்க முதலில் உங்க இடத்தில் போய் இருங்க...என்றேன்...

செக்குமாடு ஜனநாயகமும் பாலகுமாரனும்னு அப்படீன்னு ஒரு டாப்பிக் யோசிச்சிருக்கேன்...அதுக்கு ஏதாவது மேட்டர் தேறுமா என்று கேட்டபடி எண்ட்ரி கொடுக்கிறார் சிந்தாநதி.....

கதை விவாதத்தில் கதை கிடைக்குமா
கதை விவாதத்தில் உதை கிடைக்குமா
இல்லை ரெண்டும் கிடைக்குமா
என்று ஒரு சர்வே வெச்சா என்ன என்று கேட்டபடி சர்வேசன் உள்ளே நுழைகிறார்..

இங்கே கதை மட்டும்தானா, கச்சேரி இல்லையா, என்று கேட்டபடி தேவ் மற்றும் இளா உள்ளே நுழையுறாங்க......

அன்பான கூலிக்கார கதைமாந்தர்களே, நீங்கள் அவலச்சுவையில் கூறினாலும், அடுப்படி சுவையில் கூறினாலும், நான் கோக் குடிப்பது முடியாத காரியம் என்று புரியாத விஷயங்களை பேசியபடி அசுரன் ஆஜர்...

தமிழக புத்தகங்களில் கதை தேவைதானா ? வெறும் காமெடி மற்றும் கவிர்ச்சி படம் போட்டா பத்தாது என்று ஏற்கனவே உள்ளே வந்து வசதியாக சாய்ந்து உட்கார்ந்திருக்கும் ராம் கேட்கிறார்...

தம்பி,இன்னும் கதை விவாதம் ஆரம்பிக்கலை...எல்லாரும் வந்துரட்டுமே ப்ளீஸ்...என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, கதை விவாதம் என்றால் ஆஜராவான் கண்ணன், கோவி.கண்ணன், என்று ஜேம்ஸ்பாண்டு ஸ்டைலில் சொல்லிக்கொண்டு சின்னப்பிள்ளை மாதிரி ஸ்கேட்டிங் விட்டுக்கொண்டு வருகிறார் பின்னூட்ட நாயகர் கோவியார்...

என்ன குட்டிகலாட்டா செய்யப்போறானோ என்ரு வெட்டிப்பயலும்,கப்பிப்பயலும் உள்ளுக்குள் பயந்து நடுங்கியபடியே வராங்க...ஆட்டத்தை கடுமையா ஆரம்பிப்பாங்க போலிருக்கே இவங்க என்று நினைத்தபடி சந்தோஷ் சந்தோஷமா உள்ளே வரார்...

என்னைய வெச்சு எதுவும் காமெடி கீமடி பண்ணல்லியே என்று கையில் காமிராவோடு கைப்புள்ள ஆஜர்...லேட்டா வரும் வலைப்பதிவாளர்களை அறிமுகம் செய்யுமாறு கைப்புள்ளையை கேட்டுக்கொண்டு...

எல்லாரும் கொஞ்சம் கூட்டமா உட்காருங்கப்பா....என்று கொஞ்சம் தொண்டயை கணைத்தபடி பேச ஆரம்பிக்கலாம் என்று நினைத்தால்....

*********** தொடரும் ***************

Monday, January 08, 2007

நன்றி நன்றி !!! மகாலட்சுமி கல்விக்கு உதவியாச்சுங்க !!!

முதலில் மகாலட்சுமி கல்விக்கு உதவிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்...மனது நிறைவாக உள்ளது...இதுபோன்ற பல உதவிகளை பின்னாளில் நான் ஆர்கனைஸ் செய்யவும், மற்ற பதிவர்கள் ஆர்கனைஸ் செய்யவும் இந்த முயற்சி (என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு அடுத்து) எடுத்துக்காட்டாக இருக்கும் என்பதில் ஐயம் சிறிதும் இல்லை எனக்கு...

இந்த முயற்சியை முன்னெடுத்து செல்ல உதவியவர்களுக்கு நான் நன்றி என்று சொன்னால் அது முறையாகவோ பொருத்தமாகவோ இருக்காது...வேறு ஏதாவது வார்த்தை இருக்கிறதா என்று அகராதியில் தேடித்தான் சொல்லவேண்டும்...அந்த அளவுக்கு சிறப்பாக உதவினார்கள்...

பண உதவி செய்ததோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமான விவாதத்துக்கும், இந்த விஷயம் பலருக்கு தெரிவதற்கும் உதவியவர் பொன்ஸ்...அவர் பதிவில் கேள்வி எழுப்பி இருந்த பலருக்கு (எல்லேராம் உட்பட- என்ன காரணமோ தெரியவில்லை, இவர் என்னிடம் ஒன்றுமே கேட்கவில்லை) சிறப்பாக பதில் அளித்து நாங்கள் கையில் எடுத்திருப்பது உருப்படியான விஷயம் என்று புரியவைத்தார்...

அடுத்ததாக ஞானவெட்டியான் ஐயா அவர்கள்...இளைஞர் போல களப்பணி ஆற்றினார்...அந்த மாணவியின் சர்டிபிக்கேட் எல்லாம் வெரிபை செய்ததில் இருந்து, பணத்தை கொண்டு சென்று கல்லூரியில் கட்டியது வரை, சிரமம் பார்க்காமல் எல்லாவற்றை தோளோடு தோள் நின்று நிறைவேற்றினார்..

அடுத்ததாக நான் நன்றி சொல்லவேண்டியது நிலாவுக்கு...ஒரு ஏழைத்தமிழன் தன்மானத்தை ஆழம் பார்க்க அவர் கேள்விகள் உதவியது என்றால் அது மிகையாகாது....எங்களுக்கு இலவசம் வேண்டாம்..கடனாக கொடுங்கள், நாங்கள் திருப்பிவிடுகிறோம் என்று அந்த ஏழைத்தகப்பனும், அவர் மகள் மகாலட்சுமியும் கரைந்தபோது, தமிழன் தன்மானம் காற்றில் போய்விடவில்லை என்று உச்சந்தலையில் உறைத்தது...நிலா கூறியது தவறானது அல்ல என்று எங்களுக்கும் புரிந்தது...நிலா சொல்கிறார்...நீங்கள் ஒரு சுவருக்கு வெள்ளை நிறம் பூசவேண்டும் என்று கூறுகிறீர்கள்...நான் நீல நிறம் பூசவேண்டும் என்று கூறுகிறேன்...நமது பார்வையில் தான் வேறுபாடு என்று....ஒரு வகையில் சரிதான்....ஆழியூரான் பதிவி இதற்கு பதில் இருந்தது...மலைநாடன் அதனை எடுத்து இயம்பி இருந்தார்...

பசியால் துடிப்பவனுக்கு முதலில் ஒரு துண்டு மீனைக் கொடுத்து அந்த வேளை பசியாற்றுங்கள்.அப்போதுதான் நீங்கள் மீன் பிடிக்கும் டெக்னிக்கை கற்றுத்தரும்போது அதைக் கற்றுக்கொள்வதற்கான சக்தியாவது அவனுக்குக் கிடைக்கும் என ஆழியுரான் தனது பதிவில் கருத்தாளர்களும், களமாடிகளும், புரிதலில் வேறுபடும் புள்ளியினை, அருமையாகச்சுட்டியுள்ளார்.

இப்போது இந்த விஷயம் குறிந்து பதிவிட்டவர்கள், உண்மையில் மிக அருமையான உதவியை செய்தார்கள் என்றால் அது மிகையான ஒரு விஷயமாக இருக்க முடியாது...!! பாருங்களேன் யார் யார் என்று !!!

பதிவர்கள்

நிலா
பொன்ஸ்
ஆழியூரான்
யாழிசைச்செல்வன்
கோவி.கண்ணன்
நட்சத்திரமாயிருந்த வெட்டிப்பயல்
தருமி அய்யா
பாஸ்டன் பாலா
தேவ் (Dev)
ஓசை செல்லா
லக்கிலூக்
மற்றும்
ரிச்மாண்ட் தமிழ் சங்கம்..

(யாருடையதாவது பதிவாவது விடுபட்டிருந்தால் தெரிவிக்கவும்)......

இறுதியாக, உதவி செய்தவர்கள் மற்றும் ஊக்கப்படுத்தியவர்கள் விவரம் தருகிறேன்...

எஸ்.கே அய்யா..

தான் உதவியதோடு மட்டும் இல்லாமல் தனக்கு தெரிந்தவர்களிடமும் சொல்லி மிகப்பெரிய உதவியை செய்தார்..

ராமச்சந்திரன் உஷா...

உடனடியாக உதவி செய்வதாக மடல் அனுப்பியதோடல்லாமல் அவர் சொல்லிய வார்த்தைகள் மிகவும் நம்பிக்கை அளித்தது.." ஊர் கூடி தேர் இழுப்போம் வாருங்கள்"....இது தான் அந்த வார்த்தைகள்...!!!

என்றென்றும் அன்புடன் பாலா, அவர் ஏற்க்கனவே மருத்துவ மாணவிக்காக சேர்த்த தொகையிலிருந்து மற்றவர்கள் அனுமதியுடன் குறிப்பிட்ட தொகையை அளித்தார்..

மற்றும் வெட்டிப்பயல், புதுமைக்கவிஞன் அருட்பெருங்கோ, அறிவியல் தமிழன் செந்தில் குமரன், துபாய் தம்பி, ராஜபாட்டை வெங்கட்ராமன், மகேஷ், ஷங்கர், மலைநாடன், பெயர் வெளியிட விரும்பாத இருவர் ( அனானி), அப்பாண்டி ராஜ், மற்றும் பலர்...இங்கே பார்த்தால் மேலும் தெரியும்

சில பெயர்கள் விடுபட்டிருக்கலாம். அவை அனைத்தும் இன்று இரவு அப்டேட் செய்கிறேன்...

ஆக மொத்தம் நாங்கள் கலெக்ட் செய்தது 58,000 (எஸ்கே ஐயா சேகரித்து வெட்டிப்பயல் மூலமாக இன்னும் வர இருப்பதையும் சேர்த்து). முப்பதாயிரத்தை கல்விக்கட்டணமாக ஞானவெட்டியான் ஐயா மூன்றாம் தேதி கட்டிவிட்டார்...மீதி இருப்பது இருபத்தெட்டாயிரம்..எட்டாயிரத்தை தேர்வுக்கட்டணம், புத்தகங்கள் ஆகியவற்றுக்காக நிறுத்திக்கொண்டு, மீதமுள்ள இருபதாயிரத்தை என்றென்றும் அன்புடன் பாலா, ரஜினி ராம்கி, ஷங்கர் ஆகியவர்கள் தற்போது இறங்கி இருக்கும் முயற்சியாகிய குழந்தை லோகநாயகியின் மருத்துவ செலவுக்கு தந்துவிடலாம் என்று அபிப்ராயம் உள்ளது...உங்கள் கருத்தை இந்த விஷயத்தில் அறிய ஆவல்..

இந்த விஷயத்தில் எனக்கு முழுமையான ஆலோசனை தந்த பொன்ஸ் மற்றும் ஞானவெட்டியான் அய்யா, மற்றும் கவிஞர் பாலபாரதி ஆகியவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்...அனைவருக்கும் எளிமையான வகையில் பிரச்சினையை மீண்டும் எடுத்து சொல்லியது சரியான புரிந்துகொள்ளலுக்கு உதவியது...

இன்னுமொருமுறை கல்விக்கண் தந்த அனைவருக்கும் நன்றிகூறி விடைபெறுகிறேன்...!!!!