தேடுங்க !

Monday, February 26, 2007

ஒரு செஸ் ஆர்வலரின் அருமையானதொரு பதிவு

கொயந்தயா இருக்கச்சே நான் நன்னா செஸ் வெளாடுவேன்...

நம்ம ராமநாதன் கண்ணன் ஒரு கலக்கலான செஸ் ஆர்வலர்...அவரோட எனர்ஜியையும் செஸ் நாலேஜையும் பாக்கும்போது பொறாமையா கீது...

பதிவில் இருந்து சில வரிகள்:

"இன்னிக்கு ரவுண்ட்டின் ஷாக் டோப்பலோவ் தோத்து போனதுதான், இவான்சுக் கொஞ்சம் offbeat மூவ்ஸ்லாம் விளையாடி ஒரு பொசிஷனல் அட்வாண்ட்டேஜ் கொண்டு வந்துண்டார். 22. h4 க்கு அப்புறம், Black எவ்வளவு restricted-டா இருக்கு பாருங்க, கீழ படத்துல."

மேலும் படிக்க இங்க கொலைவெறியோடு அமுக்குங்க..

Wednesday, February 21, 2007

அசிங்கப்படுத்திட்டீங்களே...

இதுக்கு மேல நான் என்ன சொல்றது...இந்த லிங்கை பாருங்க...வீடீயோவோட பேச்சையே கேட்டுடுங்க..

தினமலரில் அருட்பெருங்கோ !!!!!ஒவ்வொரு கவிதையிலும் ஒரு குட்டி இன்ப அதிர்ச்சி தரும் அருட்பெருங்கோவின் பதிவையும் சில குட்டி சர்ப்ரைஸ் கவிதைகளையும் வெளியிட்டு தினமலர் இன்று மலர்ந்திருக்கிறது...

எங்கே போய் நிப்பானோ இந்த பய...பின்னால பெரிய கவிஞர் ஆகிருவாம்..(இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் உடம்பு ரணகளமா கிடக்கு..)

சிலருக்கு திறமை வளர்த்துக்கொண்டால் வளரும்...ஆனால் கவிதையும் கற்பனையும் பை பர்த் வரும்போல..இதை அருட்பெருங்கோவின் காதலர் தின கவிதை நறுக்குகளில் பார்க்கலாம்...இவருடைய (மரியாத மரியாத) முதல் கவிதை புத்தகம் என் கையில் தவழும் நாள் என்னாளோ !!! அது ஒரு பொண்நாளாம்...!!! (நியும் இப்பல்லாம்...)

இன்றைய இளைஞர்களை பார்த்து உலகம் வியக்கும் நிலை இருக்கு இல்லையா...அதுல ஒரு பீஸ் தான் இந்த அருட்பெருங்கோ என்னும் சிவ சாம்ராஜ்...!!! கவிதை சாம்ராஜ்யம் படைக்க வாழ்த்துக்கள்....

இங்கே பின்னூட்டமிட்டும் வாழ்த்தலாம்...இல்லைன்னா டேரக்டா அவர் வலைப்பதிவுக்கே போய் ஒரு செல்லக்குட்டு வைக்கலாம்..(பெட்டர்)...இல்லைன்னா வாழ்த்தி ஒரு மடல் கூட அனுப்பலாம்...(arutperungo@arutperungo.com).......

வாழ்த்துக்கள் இன்னோருமுறை...!!!!

Tuesday, February 20, 2007

நைல் நதி நீரை வாங்கித்தருவார்களா உலக ஜல்லிகள்

உலகம் உலகம் என்று இல்லாத ஒரு வடையாளத்தை உருவாக்கி இந்தியாவுக்கென இருந்த இந்தியன் என்ற அடையாளத்தை தொலைத்து நின்றதன் முழு பலனையும் இந்தியன் இன்று அனுபவிக்கிறான். நம்மை சுற்றி உள்ள 'உலக' நாடுகளான பாக்கிஸ்தான், வரீசிஸ்தான், ஆப்கானிஸ்தான், தமிழ் ஈழம், இலங்கை, பர்மா, சிங்கை, வங்காளதேசம் (மற்றும் கோபால் பல்பொடி விற்கும் அனைத்து நாடுகளும்), நமக்கு அல்வாவை கிண்டித்தர, நாம் ஜெய்ஹிந்த் என்று முழங்கிக்கொண்டு வாயில் அரை ஆழாக்கு சைஸ் வாழை பழத்தை வைத்து சப்பிக்கொண்டிருக்கிறோம்...

உலக அளவில் இந்தியனுக்கென்று ஒரு கட்சியாவது இருக்கிறதா தெரியவில்லை...அமெரிக்க ரிபப்ளிக் பார்ட்டிக்கு கழுதையா, யானையா சின்னம் என்றே தெரியவில்லை...பெனாசிர் புட்டோ லண்டனில் தஞ்சமடைந்துள்ள நிலையில், கலீதா ஜீயா எப்போது ஊர்வலம் நடத்தினாலும் குண்டு வெடிக்கிறது.....இலங்கை நிலவரம் சொல்லவே தேவை இல்லை...அகில உலக இந்தியன் கட்சி என்று இல்லாதாதன் பலனை நாம் இப்போது அனுபவிக்கிறோம்..அவ்வளவு ஏன், இண்டிப்ளாக்ஸ் விருதென்று சொல்லும் இவர்கள் உலக அளவிலான வலைப்பதிவுகளை நடத்து போட்டி நடத்தாதான் மூலம், தங்களை "உலக இந்தியன்" என்று சொல்லும் தகுதியை இழந்து தனிமரமாக நிற்கிறார்கள்..

இந்தியாவில் தூங்கும் பிரதமர், சிரிக்காத பிரதமர், நொண்டி பிரதமர், ஜல்லி பிரதமர், ஜால்ரா பிரதமர் என்று எல்லாரும் வந்து தொலைந்துவிட்டார்கள்....அனைவரையும் இந்தியர்கள் என்று ஏற்றுக்கொண்டுவிட்டோம்..ஆனால் எகிப்தில் ஓடும் நைல் நதியை இந்த பக்கம் திருப்பி விடும் எண்ணம் கூட எந்த பிரதமருக்கும் இல்லாதது கேவலத்திலும் கேவலம்..

முன்பு இந்திய பகுதியான பி.ஓ.கே, கச்சத்தீவு, எல்லாவற்றையும் நாம் இழந்துவிட்டோம்...விட்டால் அஸ்ஸாமையும் சீனா அடித்துச்செல்லும் போலிருக்கிறது...

எப்படி இருக்கிறது பிழைப்பு பாருங்கள் ?

இளிச்சவாயன் இந்தியனை தவிர வேறு எவனும் உலகம் பேசுவதாயில்லை...அவனவன் கைப்புள்ளைத்தனமாக புகைப்படம் எடுத்து திரிந்துகொண்டிருக்கின்றனர்...

இனியாவது பிரதமர் சென்று எகிப்து பிரதமர் ரூபர்ட் முர்டோக்கிடம் சென்று பேசவேண்டும்...( டேய் நீ மாறித்தொலைக்கலியே )...அப்போதுதான் உலகம் உலகம் என்று இத்தனை நாள் உளறியதற்கு பலன் கிடைக்கும்...இத்தனை நாள் இந்தியனை ஏமாற்றியதற்கு உலக லூசுகள் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்...

செய்வார்களா ?

(ஆமா, அவனுக்கு வேற வேல வெட்டி இல்லை பாரு...நீ கப்பித்தனமா வேல வெட்டி இல்லாம ( நானுந்தான்) வலையில் மொக்கை போடுறதுக்கு...நல்லா வருது வாயில...)

பெண்ணியமும் பெருங்காய டப்பாவும் !!!

அந்த நேரக்கொடுமையை ஏன் கேக்குறீங்க....ரெண்டு வாரம் முந்தி ஒரு போன் அழைப்பு...

தல, வணக்கம்...

வாவ், சொல்லுங்க...

நம்ம $$$$$ அக்கா கிட்டயிருந்து போன் வந்துச்சு..

அதை ஏன் எங்கிட்ட சொல்றீங்க தலைவா...

எதோ ஆபாச மடல் வந்துச்சாம் அவுங்களுக்கு...

அடப்பாவி...நான் 'நாத்திகமேன்னு' கெடக்கேன்...என்னை சந்தேகப்படுறீயளா ?

சின்னக்காகிட்ட இருந்து ஒரு மடல் கூட வந்துச்சு...

அதுக்கு...

நீங்க எங்கேயிருக்கீங்க...

வேற எங்க, ஆபீஸ்லதான்..ஏன் கேக்குறீங்க...

எந்த ப்ரவுஸர் யூஸ் செய்யுறீங்க...

ஏன், இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தான்...

அதுக்கில்லை, ஆனியன் புரவுஸர்னு ஒன்னு ஐ.பி தெரியாமே மடல் அனுப்பலாமாமே, அதுபற்றியதான சிந்தனை உனக்கிருக்கா ?

யோவ் போதும்...எதையாவது பார்த்து பயந்துட்டியா ? யராவது ஏடாகூடமா மடல் அனுப்பித் தொலைஞ்சாங்களா ? இல்லை அரை லூசுங்க எழுதின பதிவெதாவது படிச்சு கடனேன்னு ஒரு பின்னூட்டம் போட்டுத்தொலைஞ்சியா ?

அப்படியெல்லாம் இல்லை தல...ஏற்கனவே உன்னை வேறமாதிரி அடையாளப்படுத்திட்டாங்க...இதுக்குமேல..

என்ன நாண்டுக்கிட்டு சாகனுமா ?

என்ன தல இப்படி எல்லாம் பேசுற...நீ உருப்புடனும்னுதான்...

நான் உருப்புடியாத்தானிக்கேன்.."பார்வைகள்" சரியில்லைன்னா நானனென்ன செய்யுறது ?

என்ன சொல்லுறீங்க...

ஒன்னும் விளங்கலியே ?

அதான், காமாலை கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் அப்படீன்னேன்...

அதுக்கில்ல தல, நல்ல பேரை கெடுத்துக்காதீங்க...

அந்த பேரை வெச்சு எனக்கு சேலரி ஹைக் விழப்போவுதா ? இல்லை சிங்கப்பூர் டூருக்கு ரெண்டு டிக்கெட் ப்ரீயா கொடுக்கப்போறானுங்களா ?

என்ன எழவோ, பெண்ணீயம்னா என்னான்னு கொஞ்சம் விளக்கலாம்னு போன் போட்டேன்...நீங்க நைண்டி சாப்ட்டுட்டு இருப்பீங்க போலிருக்கு..நான் அப்புறமா பேசுறேன்..

பீப்....பீப்...பீப்...

********************************************************************

படத்தை க்ளிக் செய்து பார்த்தால் ஒரு உண்மையை கண்டறியலாம்.....
*********************************************************************

நானும் கொஞ்ச நாளா பார்த்துக்கிட்டே தான் இருக்கேன்...இந்த பெண்ணீய வியாதிகள் கொஞ்சம் பெருசாத்தான் பொங்குது இப்போ...

எது பெண்ணீயம் என்பது குறித்தான என்னோட கருத்து ( ஆமா, பெருசா சொல்லிட்டாலும்)...என்னான்னா....

பெண்ணீயத்தை பெண்களே தீர்மானிக்கட்டும் என்பது தான் என் கருத்து...

அனானியா பின்னூட்டமோ, திட்டி மடலோ அனுப்புகிற நாய்க்கு எப்போது தோல்வி ? அதை இக்னோர் செய்யும்போது தான்...

ஜல்லியடிக்கனுமா ? அடிங்க...யார் கேட்டா ?

கலாய்க்கனுமா ? கலாய்ங்க..யார் தடுத்தா..

யாருக்குமே புரியாததொரு பதிவு போடனுமா ? போடுங்க...யார் நொந்தா ?

கருத்து தளத்தில் வரும் எதிர்ப்புகளை தயங்காமல் புறந்தள்ளி நடைபோடுங்க, அது தான் உண்மையான வெற்றி, இப்பவே நீங்க அப்படித்தான் இருக்கீங்க (இது என்னோட தோழிக்கு)

பெண்ணீயம் ஆண் பித்தளை எல்லாம் தன்னால் புறமுதுகிடும்...

அப்புறம் ஏன் இந்த தலைப்புன்னு கேக்கிறேளா, சும்மா ஒரு எதுகை மோனைக்கு..

Saturday, February 17, 2007

URGENT....கல்வெட்டு படிக்கலாம் வாங்க....+ ஊர்ப்பெருமை

உங்க ஊரு கோயிலுக்கு போறீங்க...சுவத்துல ஏதோ கிறுக்கியிருக்கு...அது கல்வெட்டு, பழந்தமிழ் எழுத்துன்னு தெரியும்...ஆனால் அது உங்களுக்கு புரியாது....என்னான்னு பார்க்கலாம்னு நினைச்சாலும் அதை படிக்க தெரியாது...

அட இப்படி வெச்சுக்கோங்க...ஒரு பழைய ஓலைச்சுவடியோ இல்லை கல்வெட்டோ உங்க கைல கிடைக்குது...அதுல என்ன மேட்டர் இருக்குன்னு தெரிஞ்சுக்க ஆர்வம் இருக்கும் இல்லையா உங்களுக்கு...அப்படி ஆர்வம் இருந்தா மட்டும் போதும்...இந்த பதிவை அப்படியே யூஸ் பண்ணி படிக்கலாம் நீங்க...நாங்கல்லாம் அப்படித்தான் எங்கூரு கோவில்ல நேரத்தை செலவிடுவோம்...(சைட் அடிக்கிற விஷயத்தை இதுல இழுக்காதீங்க..)

நாங்க உபயோகப்படுத்தின விவரம் அப்படியே ஒரு இணைய தளத்தில் இருந்தது..அப்படியே கடிச்சு இங்கே பதிவிடுறேன்...பழந்தமிழ் எழுத்துக்களை பார்த்தா இனிமே கொலைவெறியோட படிங்க...விக்கி பசங்க, எதாவது தப்பிருந்தா சொல்லுங்க...

எண்கள் / உயிர் / மெய் எழுத்துக்கள் நூற்றாண்டுகளில் எப்படி மருவி வந்ததுன்னு இங்கே படமா கொடுத்திருக்கேன், பாருங்க...எங்க ஊர் திருக்கோவிலூர்ல உலகலந்த பெருமாள் கோவில்ல கடையெழு வள்ளல்களில் ஒருத்தர் 'காரி'யை பற்றி பல விஷயங்கள் கல்வெட்டுல இருக்கும்...( யாருக்காவது எல்லா ஏழு வள்ளல்கள் பெயரையும் சொல்லத்தெரியுமா ? சேலஞ்ச் !!! ) படிக்க அவ்வளவு அருமையா இருக்கும்...சும்மாவா, கபிலர் உறைந்த இடமாச்சே...அதை விட குட்டி குட்டி கோவில்களில் இன்னும் அழகான கல்வெட்டுகள் இருக்கும்....பல கல்வெட்டுகள் முன்னூறு நானூறு வருஷத்துக்கு முந்தையதா இருக்கும், கொஞ்சம் எரிச்சல் ஊட்டும், ஆனா மிகச்சிலது + மிக பழையது ஆர்க்கியாலஜி டிப்பார்ட்மெண்ட்காரன் கண்ணில் படாமல் அழகாக உட்கார்ந்திருக்கும்...படிக்க அவ்வளவு சுவாரசியமா இருக்கும்..

ஏதாவது புதையல் ரகசியம் ஓலைச்சுவடியில கெடச்சுதுன்னா, எனக்கு மட்டும் சொல்லுங்க...பதிவு பத்தி இப்போதைக்கு கருத்து மட்டும் சொல்லுங்க.

Friday, February 16, 2007

தலைப்பு வைங்கோ !!! தலைப்பு வைங்கோண்ணா !!!

கலாய்க்கறதுக்காகத்தான் இந்த பதிவுன்னாலும், சில பல பழைய அருமையான பதிவுகளுக்கு அப்படியே ஒரு லிங்கை கொடுத்துட்டா, மக்கள்ஸ் ஜாலியாவாங்க...!!!

ஆனாலும் இந்த தலைப்பு வைக்கறதுல ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனி ஸ்டைலே இருக்குங்க...எத்தனை வருஷம் ஆனாலும் அது மாறாது போல இருக்கு...இனி, ஓவர் டூ தலைப்புகள் மற்றும் பதிவின் முதல் ரெண்டு வரிகள்..(காப்பிரைட் பிரச்சினை வராதுன்னு நினைக்கிறேன்...)

******************************************
மெலட்டூர் இரா நடராஜன்

எனது 395 ஆவது சிறுகதை (!!)

கோவையில் இருந்து வந்த கோலங்கல் 2010 மார்ச் 19 குங்குமம். " ஸார் டிக்கெட் ப்ளீஸ், என்றார் ரயில் கண்டக்டர். அப்படியே பாக்கெட்டை தடவிப்பார்த்தேன்..........

********************************************
விடாது கருப்பு

அமெரிக்காவில் பார்ப்பணர்கள் அட்டகாசம்

கைபர் போலன் கணவாய் வழியாக ஆடுமாடு மேய்த்தபடி வந்த பார்ப்ஸ்களால் இந்தியாவில் தான் வருணாசிரம கொள்கை பரப்பப்பட்டதென்றால் இப்போது அமெரிக்காவிலும் அவர்கள் வருணாசிரமத்தை தாங்கி பிடிக்கிறார்கள் என்று தெரிகிறது, அய்யாவின் சீடனான நான் இதுகுறித்து......

***********************************************
வெட்டிப்பயல்

கன்னாடிகா..........

இது கண்டிப்பாக என்னோட கதை கிடையாது...நான் பெங்களூரில் வொர்க் பண்ணிக்கிட்டிருந்தப்போ இது நடந்தது...ஆக்சுவலி அவள் தமிழ்னு தான் நெனைச்சுக்கிட்டிருந்தேன்..அவள் கொஞ்சம் நெருங்கி வந்து "சொல்ப போன் கொடி" என்று என்னோட எக்ஸ்டென்ஷன் போனை கேட்டதும்தான் அவர் கன்னடா காரி என்று தெரிந்தது....தமிழ் சுட்டுப்போட்டாலும் வராத அவள் தமிழில் வெண்பா / ஹைக்கூ எழுதுமளவுக்கு போவாள் என்று.........

************************************************
வடுவூர் குமார்

காங்கிரீட் தளத்தில் ஜல்லி போடும்போது....

பொதுவாக ஜல்லியை முதலிலேயே சிமிண்டோடு குழைத்து வைத்துக்கொள்ளவேண்டும்...அப்போதுதான் சிமிண்ட் அதில் நன்றாக ஊறி கொழகொழவென இருக்கும்...அதை அப்படியே தளம் போட பயன்படுத்தக்கூடாது...சிறிது நேரம் ஆறவிட வேண்டும்....இந்த சிறிது நேரத்தை நீங்கள் சித்தாளுடன் கடலைபோட பயன்படுத்தலாம்..அதற்குள் சிமிண்ட் நன்றாக ஊறிவிடும்...இங்கே சிங்கப்பூரில் இப்படித்தான் சிமெண்டை ஊறவிடுகிறோம்....மேலும்....

************************************************
சர்வேசன்...

குழந்தை சட்டையில் மூச்சா போனால் - அதிரடி சர்வே

அதாவது என்னாங்னா...மேட்டர் இதுதாங்னா...நான் எந்த வித்த காட்டவும் வர்லேங்னா :). உங்க வீட்டு குழந்த உங்க சட்டையில மூச்சா போச்சுன்னா என்ன செய்யலாம்னு ஒரு சர்வே வெச்சுருக்கேன்...இங்கே சொடுக்கவும்..

சர்வே

* மேற்கொண்டு ஆய் போறவரை வெயிட் பண்ணலாம்
* லைட்டா சூடானவுடனே வேற யாரையாவது கூப்பிட்டு குடுக்கலாம்
* புல்லட் ப்ரூப் ஜாக்கெட் மாதிரி ஏதாவது ஒன்னை போட்டுக்கிட்டே புள்ளையை தூக்கலாம்
* யோவ், கப்படிக்குது, போய் கழுவிட்டு வந்து சர்வே போடுய்யா.

*********************************************
பாஸ்டன் பாலா

Dont know what to do : someone proposed me STORY

சமீபத்தில் "காதலர் தினம்" வந்தது எல்லருக்கும் தெரியும்.தினுசு தினுசான மின்னஞ்சல்கள் வந்து குவிந்திருக்கும். அதில்தான் இதுவும் வந்தது. குழப்பத்தில் ஆழ்த்தாமல் சுருங்க சொல்லிவிடுகிறேனே..நேற்று வந்ததொரு மின்னஞ்சலில்., "பாபா" ஐ லவ்யூ என்று வந்தது...

குழப்பினேன் நான்...பிறகுதான் தெரிந்தது, அது மனீஷா கொய்ராலா ரஜினிக்கு ஆண்டுகளுக்கு முன்னால் அனுப்பியதென்பது...நான் ஏழெட்டு புத்தகத்தை ஒன்றின்மேல் ஒன்றாக போட்டு படித்துக்கொண்டிருந்ததில் சற்றே.....

***********************************************
அருட்பெருங்கோ

இது காதல் பிடுங்கி அடிக்கும் மாதம் (350)

வகைவகையாக வந்தாள்
வரிசைக்கொன்றாக வந்தாள்..
ஆனால் எனக்கானவள் வந்தாளா ?

கடந்தவாரம் சிங்கப்பூருக்கு ஒரு நன்பன் திருமணத்திற்காக சென்றபோது, அங்கே இருந்த எம்.ஆர்.டி நிலையத்தில் நின்றிருந்தேன்....வெள்ளைதோசா ->> 15 கி.மீ என்று எழுதி இருந்தது..காதலர்களின் சொர்க்கபூமியோ என்று எண்ணியிருந்தேன்...

பூங்காவில் நீயா அல்லது உன்னில் பூங்காவா ? குழப்பம்...குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம்...மீனாவை பிடிக்க முடியுமா ?

அழியாத அன்புடன்
அருட்பெருங்கோ..

*********************************************
லக்கிலூக்

எலிக்குட்டியை வறுக்கலாம் வாங்கோன்னா !!

திராவிடம் பேசும் காளைகள் சிலபேர் தறிகெட்டு குதிக்கிறோம் என்று தப்புக்கணக்கு போடுபவர்களுக்கு சாட்டையடி அல்ல இந்தப்பதிவு..

இது அனானி முன்னேற்ற கழகத்தினர் கும்மாங்குத்து குத்த எழுதப்பட்ட ஸ்பெஷல் மசாலா பதிவு. எந்த போட்டோஷாப் ட்ரிக் ஷாட்டும் இல்லை..வெறும் டெக்ஸ் பதிவு....டெக்ஸ் வில்லர் பதிவல்ல...மேலும்....

**********************************************
டி.பீ.ஆர். ஜோசப்

சூரியன் ( 2304856558)

நான் ஒருமுறை வங்கியில் என்னுடைய மானேஜர் இருக்கையில் அமர்ந்துகொண்டு இருந்தபோது, வேட்டி சட்டை அணிந்த ஒரு நபர் வங்கியை ஆட்டையை போடும் கண்களோடு உள்ளே வந்துகொண்டிருந்தார்..

என்னுடைய அஸிஸ்டெண்ட் மானேஜர் அப்போது ஒரு வவுச்சர் போடும் பணியில் இருந்தார்...வவுச்சர் போடுவது என்னவென்றால், முதலில் ஒரு லெட்ஜரை எடுக்கவேண்டும்...அதில் தூசி இருந்தால் அதை துடைக்க வேண்டும்...பிறகு டங் என்று மேஜையில் வைக்கவேண்டும்...

அப்போது அங்கே ஏற்கனவே இருக்கும் அழுக்கு டீ டம்ளரை நகர்த்திவிட்டுத்தான் வைக்கவேண்டும்...இல்லை என்றால் எப்படி வவுச்சர் போட முடியும்...

மேலும்,

**********************************************
மோகன்தாஸ்

சில ஜல்லிகளும், சில விளங்கங்களும், சில க்ரிப்டோகிராபிக்கதைகளும்

சில விளக்கங்களை கொடுத்தால்தான் சில விலக்கங்களை பெறமுடியும் என்றால் அது நியாயம் தான் உண்மையில். ஆயா என்று நான் கதையில் குறிப்பிட்டது உண்மையில் செந்தழல் ரவியின் செத்துப்போன ஆயா என்று அவர் நினைத்து பதிமூன்று பக்கத்துக்கு என்னை திட்டி எழுதிய கடிதம் ஆயாசம் தந்தது...

ஆனால் அவர் நினைப்பதுபோல அவருடைய ஆயாவை என்றும் நான் குறிப்பிட்டதில்லை...மேலும் வெத்திலை பாக்கு போட்டு புளிச் என்று முகத்தில் துப்பியதாக நான் எழுதியது, வெற்றிலைப்பாக்கு போடாத அவர்ருடைய செத்துப்போன ஆயா கோபிப்பார் என்று பி.கே.எஸ் அய்யா கூறுவது முறையல்ல..

இனிமேல்தான் அடிக்கத்தான் போகிறேன் க்ரிப்டோகிராபி ஜல்லி...அதாவது...மேலும்....

*********************************************

போதும் போதும் என்று நீங்கள் கதறுவது புரிகிறது...இன்னும் பொன்ஸ், பாலபாரதி, வரவணை, சுகுனா திவாகர், கப்பி பய, கோவியார், ஜி.ரா, இளா, தேவ், சிபி, ராம், மங்கை, ஞானவெட்டியான், சிரில் அலெக்ஸ், பினாத்தல், கொத்தனார், கால்கரியார், மகேந்திரன் பெ, உங்கள் நன்பன், நெல்லை சிவா எல்லாம் இருக்காங்களே...

அவுங்களை எப்போ கலாய்க்கறது ? ஓ சரி அப்பாலே பாத்துக்கலாம்....இப்போ வர்ட்டா...

Tuesday, February 13, 2007

அன்பின் சாகரன் !!!! அமைதியில் உறங்குங்கள் !!!

அன்பின் சாகரன், சென்ற வலைப்பதிவு கூட்டத்துக்கு நீங்கள் வந்தீர்களாமே ? என்னால் வர இயலவில்லை...வந்திருந்தால் உங்களை கண்டு பேசியிருப்பேனோ ?

ஒரு வலைத்திரட்டியை முகம் காட்டாமல் நடத்திவந்தீரே ? எத்தனை சோதனைக்களுக்கும் இடையே வெற்றிகரமாக செயல்படுத்திவந்தீரே !!!

இருபத்தொன்பது அகவையில் இன்னுயிரை நீத்துவிட்டீர் என்ற தகவல் அறிந்து நான் சொல்லொன்னா துயரடைத்தேன்...!!!

உம்மை இழந்து வாடும் உமது குடும்பத்தார் மனம் இந்த இழப்பிலிருந்து எப்படி மீளும் என்பதற்கு பதிலில்லையே என்னிடம் !!!!!

குடும்பத்திற்கு தகுதியாவைகளை செய்துவைத்திருப்பீர் என்று நம்புகிறேன், அப்படி இல்லை என்றாலும் நாங்கள் கண்டிப்பாக உதவுவோம் சாகரன்..

நீங்கள் அமைதியில் உறங்குங்கள்...!!!!!

Tuesday, February 06, 2007

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு துளிகள்

வணக்கம் எல்லோருக்கும்...

வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை வலைப்பதிவர் சந்திப்பு பற்றிய பதிவு இது...உடனே பதிவிடலாம் என்று நினைத்தபோது பணிச்சுமை காரணமாக முடியவில்லை...இப்போது தான் சிறிது நேரம் கிடைக்கிறது...

இப்படி எழுத ஆசைதான்...ஆனால் வழக்கமாக எழுதறமாதிரியே எழுதி தொலைக்கலாம்...இதுல என்ன பார்மாலிட்டி வேண்டிக்கிடக்கு ?

பெங்களூரில் நான் சென்ற "என்னோட" விமானம், பனிப்பொழிவு காரணமா 4 மணி நேரம் தாமதமா மதியம் மூன்று மணிக்கு தான் சென்னைக்கு போய் சேர்ந்தது...பசி வயத்தை கிள்ளியது...பிரதர் ப்ளாட் இருக்கும் வேளச்சேரிக்கு போய் சேர மணி மூணு முப்பது...அப்படியே விஜயநகர் பக்கத்தில் இருக்க ரத்னா கேப் போனா, அங்கே இட்லி தோசை மட்டும் தான் இருக்கு என்றார் சர்வர்...

சரி ரெண்டு முறை சாம்பார் இட்லியும், ஒரு தோசையையும் உள்ளே தள்ளிவிட்டு அண்ணன் வீட்டில் படுத்து ஒரு குட்டி தூக்கம் போடுவதற்குள் வலைப்பூ சுனாமியிடம் இருந்து ( அதான் லக்கிலூக்) ஒரு குறுஞ்செய்தி...இன்னா வரியா வர்லியா ? என்று...அப்படியே கவிஞர் பாலபாரதிக்கு ஒரு போனை போட்டேன்...'ந்தா கிளம்பிக்கிட்டே இருக்கேன் தல' என்றார்..

அப்படியே எழுந்து ஒரு குளியல் போட்டு, (அட அட அட, சென்னையில் ஹீட்டர் போடாமலேயே சுடத்தண்ணி விடுறானுங்கப்பா), அண்ணனின் "சொந்த" பைக்கை எடுத்துக்கொண்டு நடேசன் பார்க்கை நோக்கி விரைந்தேன்...முதுகில் லக்கிலூக் / பத்மகிஷோர் / சந்தனமுல்லைக்கு கொடுக்க வேண்டிய பரிசுகள் (இங்கே பாருங்க ஏன் பரிசுன்னு). அப்புறம் "லாபிங் புத்தா" குட்டி ஸ்டேச்சுயூக்கள் ஐந்து...அப்புறம் நான் மிகவும் விரும்பும் சில எழுத்தாளர்களுக்கு சில புத்தக பரிசுகள்...!!! அப்புட்டுத்தேன்...

இதில் சந்தனமுல்லையை மின்னஞ்சல் மூலமாக அழைத்திருந்தேன்...அவங்களுக்கு வேலை இருப்பதால் வரவில்லை என்று சொல்லிவிட்டார்கள்...பத்மகிஷோரையாவது அழைத்திருக்கலாம்...சென்னை கிளம்பும்போது நான் இருந்த அவசரத்தில் எதையும் செய்யமுடியவில்லை...(பேட்டரி ப்ரச்சினையான ஒரு போனை சுனாமிக்கு எடுத்து சென்றுவிட்டேன் - அதை அடுத்தவாரம் தான் ரீப்ளேஸ் செய்யனும்)...

என்ன சென்னை வலைப்பதிவர் சந்திப்பு துளிகள்னு வெச்சுட்டு ஒரே சொந்த கதையா இருக்குன்னு பாக்குறீங்களா ? சத்தியமா இது என்னோட பதிவுங்க...நானே போலி பெயர்ல கூட பின்னூட்டம் போடுவேன்...ஆமாம்...

நடேசன் பார்க்கில் நுழைந்தவுடன் லக்கிக்கு போன் அடித்தேன்...அவர்கள் உள்ளே அமர்ந்திருப்பதாக சொன்னார்கள்...அப்படியே முன்னேறி சென்றால் கவிஞர் பால பாரதி, முத்து (தமிழினி),மா சிவக்குமார், லக்கிலூக் அமர்ந்திருந்தார்கள்...மிக நீண்ட நாளாக சந்திக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த மா.சிவக்குமார், மிகவும் மென்மையாக, இளமையாக தெரிகிறார்...நான் இதுவரை பார்த்திராத பாலராஜன் கீதா அமர்ந்திருந்தார்...அப்படியே அவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கையில் நமது "சுந்தர்" வந்து சேர்ந்தார்...

மிதக்கும் வெளியும், வரவணையானும் வெளியே சென்றதாக தகவல் கிடைத்தது...அவர்கள் சரக்கு ஏற்ற போய்விட்டார்கள் என்ற கடுமையான வதந்தி உலவியது...

இன்னும் சற்று நேரம் மொக்கை போட்டுக்கொண்டிருக்கையில் விக்கி வந்து சேர்ந்தார்...நான் நினைத்ததை விட இளமையாக இருந்தார்...டெக்னிக்கல் குழுவில் இவர் ஆக்டிவாக இருப்பது தெரிந்தது தான்..பார்க்கவே டெக்னிக்கல் பர்சன் மாதிரி இருந்தார்..

பிறகு டோண்டு வந்துசேர்ந்தார்...கீழே உட்காரவியலாமல் சற்று நொந்தார்...எப்போதும் வாடகைக்காரில் வருபவர் "தன்னுடைய" எலக்ட்ரிக் ட்ரெயினில் வந்ததாக சொன்னார்...இவர் எப்போது எலக்ட்ரிக் ட்ரெயின் வாங்கினார் என்று தெரியவில்லை...தான் எப்படி அடித்து பிடித்து தன் க்ளையண்டிடம் பணம் வாங்கினார் என்று எழுதி உள்ளார்..இப்படி சம்பாதித்தால் கட்டாயம் வாங்கினாலும் வாங்குவார்..மேற்சொன்ன பதிவில் கட்டாயம் பின்னூட்டங்களை படிங்க...சின்னதாக ஒரு முறை சாட்டையை சுழற்றினேன்...பிறகு ஜகாவும் வாங்கினேன்..

பிறகு ஈழ சகோதரர் சோமி வந்தார்....உருப்படியாக பேசியவர் இவர்தான்...நிறைய சிந்தனை...ஆழமான அறிவு....வாழ்வில் நன்றாக உயர்வார்...

பிறகு சிவஞானம்ஜி வருகிறார்...தும்பைப்பூ நிற வேட்டி, அதே நிற மீசை...பார்க்கும்போதே ஒரு மருவாதி வந்து ஒட்டிக்கொள்கிறது..."உங்கள் பதிவெல்லாம் படிப்பேன்....நானும் கலாய்ச்சு பின்னூட்டம் போடலாம் என்று தான் நினைப்பேன்...ஆனால் டி.பி.ஆர் எல்லாம் சொல்கிறார், இவ்ளோ வயசுக்கு பிறகு உனக்கு இது தேவையா என்று" என்று சொன்னார்...அட நீங்க போடுங்க சார்...சும்மா ஜாலியா...கடலூரில் (பிறந்த இடம்) நான் பிறக்காத முன்னாடியே வேலை பார்த்ததாக சொன்னார்...மூத்த வலைப்பதிவராக இருப்பதும், அந்த வயதுக்கு தகுந்ததுபோல் மிக அழகாக நடந்துகொள்வதும் இவர் மீது ஒரு தனி மரியாதையை அனைவருக்கும் ஏற்படுத்தி இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல....(டி.பி.ஆரை மூத்த வலைப்பதிவர் லிஸ்டில் இருந்து தூக்கி, வாலிபர் சங்கத்தில் சேர்த்துட்டாங்க, மனுசன் கலக்குறாரு)...

குடுகுடுவென ஜெய சந்திரசேகரன் வந்தார்...படபடவென எல்லாரிடமும் அறிமுகம் ஆனார்...பொலிவிழந்த கோயில்களுக்கு ரீச் பவுண்டேஷன் சார்பாக கைங்கர்யம் செய்வது பற்றி பேசினார்...என்னை வழக்கமா எங்க வீட்ல "உருப்புடாத கோயில்ல உண்டை சோறு வாங்கி தின்றவனே" என்று திட்டுவாங்க...ஏனோ அது நியாபகம் வந்து தொலைத்து லைட்டாக சிரித்துக்கொண்டேன்..

பிறகு அப்படியே ஒரு டீ அடிக்க போகலாம் என்று வெளியேறினால் அங்கே 'தம்' போட்டுக்கொண்டு மிதக்கும் வெளியும், வரவணை செந்திலும் நின்றிருந்தாங்க...அப்படியே ஆளுக்கொரு டீ...எல்லா டீயையும் ஸ்பான்ஸர் செய்தது பாலராஜன் கீதா...ஒரு தண்ணி(வாட்டர்) பாட்டில் ஸ்பான்ஸர் செய்தது ஜெய சந்திரசேகரன்...அங்கே இருக்கவங்க தாகமாயிருப்பாங்க, பெரிய பாட்டிலா வாங்கிக்கறேன் என்று அவரது "ஹிட்டன்" தாயுள்ளம் வேலை செய்தது..

பிறகு உள்ளே போய் அமர்ந்தவுடன் வந்தவர்கள் பூபாலன், ரோசா வசந்த், மற்றும் ஐகாரஸ் ப்ரகாஷ்...ரோசா வசந்த் மிகவும் இளமையாக இருக்கிறார்...எழுத்தின் வீச்சை வைத்து பெரியவராக இருக்கும் என்று நினைத்த என் எண்ணத்தில் மண்...ஐகாரஸ் ப்ரகாஷின் அமைதி மிகவும் கவர்ந்தது...

கும்பல் கும்பலாக கூடி பேசினார்கள், சிரித்தார்கள், முறைத்தார்கள், ஓட்டினார்கள், ஓட்டப்பட்டார்கள்...கடைசியில் கொசு வந்து இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரு விடிவு காலம் கொடுத்தது...என்னவோ தெரியலை, மரபூராரை பல கொசுக்கள் கும்மி அடித்து கடித்துக்கொண்டிருந்தன...

ஒவ்வொருவராக கிளம்பினார்கள்...பாலா அப்பீட்...நாங்கள் வலைப்பதிவர் சந்திப்பை நடத்தலாம் (!!!!????) என்று தி.நகர் ஈகிள் பார் கிளம்பினோம்...எங்களுடன் பாருக்கு வந்தவர்கள் நான், லக்கி ( ஒன்லி சைடிஷ்), மிதக்கும் வெளி, ஓகை, வரவணை, முத்து (தமிழினி), ரோசா வசந்த், சோமி, டோண்டு மற்றும் சுந்தர்...

(சென்சார் கட் பார் 2 ஹவர்ஸ்)

ஓகை வந்து கை கொடுத்தார்..நீங்கள் செய்யும் வேலை வாய்ப்பு செய்திகள் நல்ல விஷயம்...ஆனால் உங்கள் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு கிடையாது என்றார்...(இதென்ன கொடுமை, எனக்கு ஏது கருத்து என்று நான் விழித்தேன்...) அவருக்கு தேவையான 4 டிப்ளமோ ஹோல்டர் பணிவாய்ப்பை அறிவித்தார்...நன்றி அதற்கு...

டோண்டு ராகவன் அருமையாக ஒரு கிங் பிஷரை உள்ளே தள்ளி, சிக்கன் பிரியாணி வெட்டினார்...நான் அவரை மாதவன் என்று அழைத்தேன்..."மின்னலே" படத்தில் ரீமா சென்னிடம் தான் சிக்கன் சாப்பிடுவேன் என்று பொய்சொல்லி சாப்பிட்ட ஒரு ஸ்டைல் தெரிந்தது...சாப்பாட்டை முடித்தவுடன் பாத்ரூம் விரைந்தது சந்தேகத்தை கிளப்பியது...

முத்து தமிழினி செய்த குட்டி கலாட்டா கொடுமையின் உச்சம்..திடீரென வலைப்பூ சுனாமியை அழைத்து, ரோசா வசந்திடம் ஒரு பெரியாரிஸ பின்னவீனத்துவ முற்போக்கு திராவிட கொள்கையை விளக்க சொன்னார்...அவர் அடித்த இரண்டு லார்ஜுக்கு இது ஓக்கே...பாவம் லக்கி என்ன செய்வார் ? விளக்கி சொல்லிக்கொண்டிருதார்...

நானும் ஒரு பத்துமணிவாக்கில் "உம்மாச்சி கண்ணை குத்திவிடும்" என்று சொல்லி அப்பீட் ஆனேன்...ஏதாவது டவுட் இருந்தா கேளுங்க..!!!!!

Friday, February 02, 2007

நாமக்கல் சிபியை காணவில்லை !!!

வருத்தப்படாத சிங்கங்களில் ஒன்றான நாமக்கல் சிபி, பெங்களூர் விஜயம் ( இது என்ன போலி டாக்டர் விளம்பரம் மாதிரி இருக்குன்னு நினைக்காதீங்க)...என்னைக்கு...அட இன்னைக்கு காலையில் வந்துவிட்டார்...

என்னையும்,முத்து தமிழினியையும் காலையில் சந்தித்துவிட்டு, முத்து தமிழினி வீட்டில் சற்று இளைப்பாறி, ஜீ.ராவையும், அருட்பெருங்கோவையும் சந்திக்கிறேன் என்று எலக்ட்ரானிக் சிட்டி பக்கம் காலை பத்து மணிக்கு கிளம்பியவரை காணவில்லை...!!!

மதியம் சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தேன் நான்...குறைவான நேரமே உள்ளதால் ஜீராவையும் அருட்பெருங்கோவையும் பார்த்துவிட்டு அப்படியே லஞ்சை முடித்துவிடுகிறேன் என்று கூறியதால் ப்ளான் மாற்றமாகியது...

மொபைல் ச்விட்ச் ஆப் ஆகி உள்ளது...அய்யா எங்கே அய்யா நீர்...மொபைலை எவனாவது சுட்டுவிட்டானா ? எங்கள் அலைபேசி நம்பர் தெரியாமல் முழிக்கிறீரா ? இல்லை ஏதாவது கோயில் குளம் என்று சுற்றி பார்க்க கிளம்பிவிட்டீரா ?

ஜீ.ரா / அருள் உங்களுக்காக வெயிட்டிங்...நான் / முத்து தமிழினி திங்கிங்...

எங்கள் எண்கள்.. : ரவி - 98805 97061 , ஜீ.ராகவன் ( 9448373727)

:)))))))))))))

Thursday, February 01, 2007

இந்தியா கெலிச்சுருச்சுப்போய்...!!!!

அட, இந்தியா சீரிஸை ஜெயிச்சுருச்சு...ராபின் உத்தப்பா ஒரு அதிரடி துவக்கத்தை கொடுக்க ( 17 பந்துக்கு 28 ரன்), அதுல ரெண்டு சிக்ஸர் மூனு போரு, கங்குலி வழக்கமான கவர்ட்ரவ்களுமாக, சாத்து சாத்துன்னு சாத்தி ஒரு அறுபத்தி எட்டு ரன்னை 82 பந்தில் சேகரிக்க ( அதுல ஒரு சிக்ஸ் மற்றும் எட்டு 4),பிறகு இறங்கின நாயக்கர் மஹால் கல்தூண் ராகுல் திராவிட் (78 ரன்) (இவரு த்ராவிடரா இல்லையா, பெங்களூர் இந்திரா நகர்ல தான் வீடு), சச்சின் சிங்கம்போல (உள்நாட்ல/அட வெளிநாட்லயும் தான் :))) ) கிளம்பி விளசுனாருய்யா...தோனிக்கு போட்டியா மடக்கிப்போட்டு அடிச்ச சிக்ஸரை காண கண் மில்லியன் வேண்டும்...

சும்மா கிழி கிழின்னு கிழிச்சுட்டாருல்ல...76 பந்துக்கு செஞ்சுரி...இது நாப்பத்தி ஓராவது செஞ்சுரி...பத்து 4, மற்றும் ஒரு சிக்ஸர்...அட கடைசியில் இறங்குன நம்ம விளம்பர ஹீரோ தோனி சும்மாவா...இருவது பந்துக்கு நாப்பது ரன்...அடிச்சு தூள் செஞ்சுட்டாருல்ல...எவனாவது இளிச்சவாயன் மாட்டினா விடமாட்டானுங்களே...போன் போட்டு அடிப்பானுங்க...ஆமாம், மூனு சிக்ஸ் ஒரு போர்..ஓரே ஜூபிலேஷன்...சீரிஸ் ஜெலிச்ச மகிழ்ச்சியில் த்ராவிட் துள்றாரு...

மேன் ஆப் த சீரிஸ் விருது நம்ம சச்சினுக்கே போயிருச்சு...எனக்கென்னவோ சந்தர்பாலுக்கு கிடைக்கும் என்று தோனுச்சு...ஆனால் சச்சின் அதையும் தட்டிக்கிட்டு போயிட்டார்...

யுவராஜ் சிங் கடைசி வரைக்கும் இறங்கவே இல்லை...வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை பொறுத்தவரிக்கும் பாவல், எம்ரிச், ப்ராட்ஷோ ( ஒரு ஷோவும் காமிக்கமுடியலை இவரால) இவங்க மூனுபேரு பந்துவீச்சும் கிழித்து எறியப்பட்டது...

இந்திய அணியின் மொத்த எண்ணிக்கை 341 , மூனு விக்கெட் இழப்புக்கு...

கொஞ்சம் பேயறைஞ்ச மாதிரிதான் இறங்குனாங்க வெஸ்ட் இண்டீஸ் அணியினர்...அதிரடியா ஆட முயற்சி செய்து, கொஞ்சம் மொக்கையா சில விக்கெட்டுகளை இழந்து, கடைசியில ஒன்னுமில்லாமே போச்சு....பாவம்...சோபிப்பாருன்னு நினைச்ச சந்தர்பால் நோம்பு கஞ்சி ரெண்டு சொம்பு குடிச்சுட்டு வந்தமாதிரி மந்தமா ஆட்டத்தை ஆரம்பிச்சவுடனே நெனைச்சேன்...

இன்னைக்கு வெஸ்ட் இண்டீஸ் ஊத்திக்கும் என்று...

ஜாகீர் கான் போட்ட பந்தை கல்லியில சுள்ளி பொறுக்குறமாதிரி ஹர்பஜன் புடிச்சு சந்தர்பால் ஆட்டம் போச்சு...இந்த கெய்லுக்கு என்ன ஆச்சு...போயும்போயும் அகார்க்கர் போட்ட பந்துலயா அவுட் ஆகனும் ? அகர்கர் தான் எதிர் அணி நபராச்சே...( ஆமாம், இவர் டீம்ல பந்துவீசினா, இந்திய அணியில் 10 பேர், எதிர் அணியில் 12 பேர்.. இது என்னோட கணக்கு)
ஆயாச்சு...கெய்ல் இதை நெனச்சு நாலு நாள் நல்ல சோறு திங்க மாட்டார்...

அதை விடுங்க..ஸ்மித் ஒரு 24 ரன் சேர்த்தாரு....பரவால்லை...எதிர் முனையில் சாமுவல்ஸ் நிக்க, நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது...பத்தான் பந்துல யுவராஜோட அருமையான கேச்சுல போய் சேந்துட்டாரு...

லாரா...இவருக்கு யாரோ சூனியம் வெச்சுட்டாங்கன்னு நினைக்கிறேன்...பாவம் பத்தான் கைல மூனு ரன்னுக்கு ரன் அவுட் ஆகி இடத்தை காலிபண்ணிட்டு போய்ட்டாரு...

சாமுவல்ஸ் ஒரு பக்கம் என்னமோ சிறப்பாத்தான் ஆடிக்கிட்டிருந்தாரு...அவசரக்குடுக்கை எல்.சிம்மன்ஸ் குடு குடுன்னு அல்ப்பையா ஒரு ரன்னுக்கு அலைஞ்சு ஓடி, சப்ஸ்டியூட்டா வந்த சுரேஷ் ரெய்னாவோட கையால ரன் அவுட் ஆகி பெவிலியனை பார்த்து போயிருச்சு..

ராம்தின் வந்தாம்யா அடுத்து...சாமுவல்ஸும் ராம்தினும் கொஞ்சம் நம்பிக்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தத்தான் செஞ்சாங்க..ஆனா ஹர்பஜன் போட்ட ஒரு பந்துல கும்ளே கைல ( போயும்போயும்) கேச்சை குடுத்து ஆட்டையை முடிச்சுக்கிட்டு போனவுடனே, சாமுவஸ்க்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போயிருச்சு...அப்படியும் கொஞ்சம் தாக்கு புடிச்சார்..

சிம்மன்ஸுக்கு அடுத்து வந்த ஆர்.ஸ்மித்து, நம்ம கும்ளேவை ஸ்பின் பவுலர்னு நினைச்சு பெவிலியன்ல வந்து நிக்க, நம்ம கும்ளேவும் ஒரு நாலு பந்து நல்ல புள்ளையாட்டம் போட்டுட்டு, அடுத்து நூத்தி இருவது கிலோமீட்டர் வேகத்துல ஒரு பந்தை போட, டரியல் ஆன ஸ்மித்து, சுதாரிக்கறதுக்குள்ள பந்து பேடுல பட, எல்.பி டபள்யூன்னு எல்லாரும் எகிற, ஸ்மித் அவுட்...இந்த மாதிரி எத்தனை பேரை ஏமாத்தி இருக்கோம், நீ எல்லாம் ஜுஜுபி என்ற பாவனையில் கும்ளே ஒரு லுக்கு விட்டாரு...( 500 பேருக்கு மேலே இருக்கும்) பாவம் இன்னும் எத்தனை பேர் உலகக்கோப்பையில் ஏமாறப்போறானுங்களோ !!!

அடுத்து வந்த எம்ரித் அகார்கருக்கு இரை...கேச் புடிச்சது நம்ம உத்தப்பா...இந்த மாதிரி விக்கெட் எடுத்தே இந்த பயலும் சாதனை செஞ்சுருவான்...சச்சின் டெண்டுல்கர் இல்லைன்னா இவனுக்கு கமெண்டேட்டர் வாய்ப்பு கூட கிடைக்கது...ஆளப்பாரு ஆளை...டி.பி வந்தவன் மாதிரி...யாராவது இவனுக்கு மூனுவேளை கஞ்சி ஊத்துங்கப்பா...

அடுத்து வந்த பாவலை, "கிளம்பு காத்து வரட்டும்" அப்படீன்னு பந்து போட்டு சொன்னது யுவராஜ் சிங்கு..கேச்சை பிடிச்சது சப்ஸ்டியூட்டா நின்ன சுரேஷ் ரெய்னா....

ப்ராட்ஷோ ஏதோ படங்காட்டிக்கிட்டு கடைசி வரைக்கும் அவுட்டாகாம பதினாலு ரன்னோட நின்னது...ஆமாம் ஒத்த ஆளு ஆட முடியாதுல்ல...ஆட்டம் முடிஞ்சு போச்சு...

உங்க ஊருக்கு கூட்டிப்போயி குமுறக்குமுற அடிச்சீங்க இல்லையா...அதுக்கு பதிலடி...வாங்கிக்கோங்க செல்லங்களா...போதுமா இன்னும் கொஞ்சம் வேனுமா ? (எங்க ஓடறீங்க, டெஸ்ட் இருக்கு இருங்கடீ..)

மேன் ஆப் த சீரிஸ் : நம்ம சச்சின் குயந்தை.
கப்பை கைல வாங்குனது : நம்ம திராவிட் செவுரு...
நிம்மதியா உக்காந்திருந்தவர் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் உளவாளி சே(செ)ப்பல்..

உட்டாம் பாரு பிகிலு...அட ஆபீஸ்ல இருந்து எப்படி மேட்ச் எல்லாம் பார்க்க முடியும்...ரீடிப் தளத்துல க்ரிக்கெட் அப்டேட்டை பார்த்து ( மேட்ச் முடிஞ்ச பிறகு) எழுதுன விமர்சனம்தான் இது...) உங்க கருத்தை அள்ளி தெளிச்சுட்டு போங்கப்போய் / மோய்....சச்சினையோ, கங்குலியையோ திட்டுறவங்க திட்டுங்க..ஊத்தப்பா சோத்தப்பாவை வாழ்த்துறவங்க வாழ்த்துங்க...டோனி, சேவாக்கை கலாய்க்கிறவங்க கலாயுங்க...நான் ஒதுங்கிக்கறேன்...( நைட்டு போய் ஹைலைட்ஸ் பார்த்தேன் இல்லையா...அதான் இந்த மீள் பதிவு...)

03/பிப்ரவரி/2007 - சென்னை வலைப்பதிவர் சந்திப்பு...!!!

எல்லாருக்கும் வணக்கம்...!!!!!

சென்னையில் பல முறை வலைப்பதிவர் சந்திப்பு நடந்தது கடந்த ஆண்டில்...அப்போதெல்லாம் கலந்துகொள்ளவேண்டும் என்று பல முயற்சி எடுத்தும் முடியலை...ஆனால் இந்த ஆண்டு அதிரடியா ஒரு சந்திப்பு நடக்கப்போகுது...இதில் கலந்துகொண்டு, கொலசாமிகளுக்கு நேரடி படையல் போடலாமே என்று ஒரு ஆசை...

இந்த வலைப்பதிவர் சந்திப்பும் ஒரு உருப்படியான வலைப்பதிவர் சந்திப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்பாகாதீர், இது ஒரு ஜாலி சந்திப்பு......!!!!!

அவரை கூப்பிடுவோம், இவரை கூப்பிடுவோம் என்றெல்லாம் இல்லாமல் எல்லோரையும் முழு மனதோடு அழைக்கும் அன்பு மடல் தான் இந்த பதிவு...

சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு நடேசன் பார்க்கில் ( பனகல் பார்க் இல்லைங்க, சென்ற முறை ஒரு குட்டி கலாட்டா நடந்ததாம்) சந்திக்கலாம் என்பது தான் திட்டம்...

சந்திப்பில் போண்டா வழங்கப்படுமா, வடை வழங்கப்படுமா, என்று எல்லாம் "வாங்க பேசிக்கலாம் ப்ரண்ஸ்..."

மறக்காம வந்திருங்க...இதுவரை பாலபாரதி / முத்து / வரவணை செந்தில் / மிதக்கும் வெளி / லக்கி / நான் ஆட்டத்துல இருக்கோம்...சென்னையில் இருக்கவங்க, ஆட்டோ அனுப்பறவங்க, இல்லை ஆட்டோவில் வர்றவங்க எல்லாரும் பின்னூட்டத்தில் தகவல் கொடுங்க...

என்னோட மொபைல் ரோமிங் ( 98805 97061) ...அதனால் இந்த நன்பர் எண்ணுக்கு 9884495430 தொலைபேசி ( பெயர் அனானி ) வழி கேட்கறதுன்னா கேளுங்க...

பின்னூட்டத்தில் தெரிவியுங்க எவ்வளவு பேர் வரீங்கன்னு, அதுக்கு தகுந்தமாதிரி ஏதாவது வயிற்றுக்கு ரெடி செய்துடலாம்...!!!