தேடுங்க !

Thursday, March 29, 2007

இந்த கசடுகளை இப்போதே தூக்கி எறியுங்கள்

இனிமேலும் பொறுக்க வேண்டாம். இந்த கசடுகளை தூக்கி எறிய இது தான் சரியான சமயம்..அழுக்குகள் நீங்கி இந்தியா தூய்மை பெறும்.

நான் சொல்வது ப்ளாஸ்டிக் குப்பைகளை. அவற்றை உபயோகப்படுத்துவதை தவிருங்கள். இவற்றால் இந்திய மண்ணுக்கு நிரந்தர அழிவு.

பி.கு: ஜஸ்ட் லைக் தட் ஒரு கும்மி.

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Tuesday, March 27, 2007

நவ்ரச நாயகன் திராவிட் ' பராசக்தி ' பாணியில் பேசினால்?!!

"உலகக் கோப்பை. பல விசித்திரமான போட்டிகளைச் சந்தித்திருக்கிறது.. விசித்திரமான ஆட்டக்காரர்களைப் பார்த்திருக்கிறது. ஆனால் , இந்தப் போட்டி விசித்திரமும் அல்ல. நான் விசித்திரமான ஆட்டக்காரனும் அல்ல. போட்டிகளிலே கலந்து கொண்டு சர்வசாதாரணமாக தோல்விகளை எந்தக் கேவலமும் இன்றி் தோளிலே சுமந்து வரும் சாதாரண இந்திய கேப்டன் தான் நான்.

பங்களாதேசிடமும் , இலங்கையிடமும் தோற்றேன். உலகக் கோப்பையைத் தவற விட்டேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். பங்களாதேசிடமும் இலங்கையிடம் தோற்றேன் - அவர்களிடம் தோறக் வேண்டுமே என்பதற்காக அல்ல. ஆனால் நேரு வகுத்த பஞ்சசீலக் கொள்கையின் படி அண்டை நாடுகளோடு அன்யோன்யமாகப் பழக வேண்டுமே என்பதற்காக. உலகக் கோப்பையைத் தவற விட்டேன். அது தூக்குவதற்கு சிரமமாக இருக்கிறதென்பதற்காக அல்ல. ' தன்னைப் போல பிறரையும் நேசி ' என்று இயேசுபெருமான் சொன்னதை மற்றவர்களுக்கும் உணர்த்துவதற்காக.

உனக்கேன் அக்கறை ஊரில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாக பாதிக்கப்பட்டேன். ஆறு ஃபீலடரை ஆஃப்சைடில் நிறுத்தி விட்டு பந்து போடச சொன்னால் லெக்ஸ்டம்புக்கு வெளியே பந்து போடும் பரதேசிகளால் பாதிக்கப்பட்டேன். செத்த பாம்பு போல பெர்முடா கிடைத்தால் ' சாத்து சாத்தென்று' சாத்திவிட்டு தேவை வரும்போது மட்டும் 'வெயில் தாங்கலை 'ன்னு பெவிலியனுக்கு ஓடும் 'மாஸ்டர் பிளாஸ்டர்களால் ' பிளாஸ்டர் போட்டுக் கொள்ளும்படி பாதிக்கப்பட்டேன்.

கேளுங்கள் என் கதையை. என் வீட்டில் கல்லெறியுமுன் தய்வுசெய்து கேளுங்கள் என் கதையை....."


"நாயகன்" பாணீயில் இந்திய அணியின் நாயகன் பேசினால்.. ??!!

" அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்துறேன்.
கங்குலி அடிச்சபோது பூசணிக்காய் உடம்பை வச்சுக்கிட்டு அரைகிலோ மீட்டர் ஓடிப் போய் பந்தைப் புடிச்சான் பாரு முரளிதரன் அவனை நிறுத்தச் சொல் நான் தோக்குறதை நிறுத்துறேன். ஆஃப்சைடுலதான் அடிப்பான்ன்னு தெரிஞ்சு எலிப்பொறில மசால்வடை வைக்குற மாதிரி 'ஸ்லிப் ' வைச்சு சேவாக்கைத் தூக்குனான் பாரு ஜெயவர்தனே. அவனை நிறுத்தச் சொல நான் நிறுத்துறேன். நாலு அடி நடந்து வந்து பந்து போடும்போதும் 'நோபால் ' போட்டான் பாரு டெண்டுல்கர். அவனை நிறுத்தச் சொல். நான் நிறுத்துறேன். இல்லாத ரன்னுக்காக நாயா ஓடி வந்தான் பாரு யுவராஜ் சிங். அவனை ஓடாம நிக்கச் சொல். நான் நிறுத்துறேன்.எந்தப் பக்கம் அடிச்சாலும் அந்தப் பக்கம் ஃபீல்டரை வச்சிருக்கான் பாரு. அதை நிறுத்தச் சொல். நான் நிறுத்துறேன். எங்க தூக்கி அடிச்சாலும் புடிக்குறானுங்க பாரு. அதை நிறுத்தச் சொல் நானும் நிறுத்துறேன். புறப்படும்போதே "க்மான் இந்தியா"ன்னு அபசகுனமா பாட்டு பாடி உடனே திரும்பி வரச் சொன்னான் பாரு சங்கர் மகாதேவன். அந்த பரதேசியை நிறுத்தச் சொல். எல்லாத்துக்கும் மேலா , எங்களையெல்லாம் மனுசங்களா மதிச்சு ப்ளாக்ல பொலம்புறானுங்க பாரு வெவஸ்தை கெட்டவனுங்க. அவனுங்களை நிறுத்தச் சொல். அப்புறமாவது தோக்குறதை நிறுத்தலாமான்னு யோசிக்கிறேன்.. "


நீங்கள்தான் தேசத் துரோகிகள் - ராகுல் திராவிட் அறிக்கை

" இப்ப என்ன குடிமுழுகிப் போச்சு ? நாங்க தோத்ததுனால இனிமே பசங்க பரிட்சை நேரத்துல டிவி முன்னால உக்காராம படிப்பானுங்க. ராத்திரி முழுக்க கண்முழிச்சு டிவி பார்த்துட்டு காலைல ஆபிசுல தூங்காம இருப்பானுங்க( ?!) ராத்திரி முழிக்கிறதால நாட்டுக்கு மின்சார செலவு மிச்சம். வேளாவேளைக்கு தூங்குறதால உடம்புக்கு நல்லது. நடுராத்திரில டிவிபாக்குறதுக்காக டீ ,காப்பி , நொறுக்குத்தீனி மாதிரி வெட்டிச்செலவு கிடையாது. வேளைகெட்ட வேளையில் தூங்கப்போறதால ஜனத்தொகை பெருக இருந்த வாய்ப்பும் கொறஞ்சு போகுது. இப்படி எவ்வள்வோ நாட்டுக்காக எவ்வள்வோ பெரிய தியாகம் செஞ்சும் என் வீட்டு மேல கல்லடிக்குற நீங்க எல்லாம்தான் தேசத் துரோகிகள்" - என்று ராகுல் திராவிட் உருக்கமாக அறிக்கை விட்டிருக்கிறார்

This is a Email Forward and I got this from GoviKannan :))

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Friday, March 23, 2007

சபரி - திரைவிமர்சனம் :))

சேலம் சந்திரசேகர் (பாவம் இந்தாளு) தயாரிப்பில் சுரேஷ் டைரக்ஷனில் வந்துள்ள இந்த சபரி ( அரசு படத்தை டைரக்ட் செய்தவர்), கேப்டன் விஜயகாந்தின் 149 ஆவது படம். பத்தோட பதினொன்னு அத்தோட இது ஒன்னு என்றில்லாமல் இந்த படத்தில் உலகத்திலேயே யாரும் செய்யாத ஒரு மாற்றத்தை கேப்டன் விஜயகாந்த் செய்துள்ளார்...அதாவது போலீஸ் / கலெக்டர் / உள்துறை செயலாளர் / ப்ரொபசர் போன்ற வேடங்களை விடுத்து இந்த படத்தில் டாக்டராக ( இலங்கை தமிழில் டொக்டர்) களம் கண்டுள்ளார் நமது கேப்டன்..

படத்தில் ஜோதிர்மயி மற்றும் மாளவிகா நாயகிகளாக நடித்து(?)ள்ளார்கள்...இது பற்றி விவாதிக்க எதுவுக் இல்லை என்றாலும் (??) இதை பற்றி கண்டிப்பாக சில விஷயங்கள் சொல்லியே ஆகவேண்டும்....நாயகி ஜோதிர்மயியின் கதாபாத்திரம் மிகவும் கொடுமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது....அவங்க டூவீலர் லைசென்ஸ் பெற எட்டு போட முடியாமல் பதினொன்று போட்டு லைசென்ஸ் தேர்வில் பெயில் ஆவது மிகவும் சோகமான காட்சி...பெண்ணியத்துக்கும் இது எதிரான காட்சி....பா.ம.க மகளிர் அணியினரை நினைத்து ஏசி குளிரிலும் வியர்வை வந்திட்டது எனக்கு...

நரசிம்மா படத்தில் கரண்டுக்கே ஷாக் கொடுத்து நம்மை அதிர்ச்சியில் உறைய வைத்தார் கேப்டர்...அப்புறம் பேரரசோ / தருமபுரியோ தெரியலை, அர்ச்சனை தட்டை வைச்சு துப்பாக்கி குண்டை எல்லாம் தடுத்தார் என்று கேள்விப்பட்டேன்...ஆனால் இந்த படத்தில் தன்னுடைய இண்டலிஜெண்டலியை காட்டி நம்முடைய அப்ளாஸை அள்ளுகிறார்...

ஆமாம்...இந்த படத்தில் சபரிநாதன் என்ற டாக்டர் வேடத்தில் வருகிறார் நம்ம கேப்டன் என்று சொன்னேன் இல்லையா...(சபரிநாதனின் சுருக்கம் சபரி..அதுவே படத்தின் தலைப்பு...டைரக்டருக்கு என்ன ஒரு ஞானம்...பின்னே, ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே அப்படீன்னோ / எனக்கு 60 உனக்கு 10 அப்படீன்னோ தலைப்பு வெச்சு கேப்டன் அதுல நடிச்சா நாராசமா இருக்காது) , விஷயத்துக்கு வருகிறேன்...இந்த படத்தில் நமது கேப்டனின் இண்டலிஜெண்டலி பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன் இல்லையா...

நமது கேப்டன் ஒரு க்ரிட்டிக்கல் ஆப்பரேஷன் செய்ய விழைகிறார்....கேப்டனின் முந்தைய படம் ஒன்நில் அவர் கை நகத்தை கடித்து துப்பும் காட்சியை தியேட்டரில் கண்ட ஒரு பெரியவரின் இதயம் வாய்வழியே வெளியே துள்ளி விழுந்துவிட்டது...அதை திரும்ப கிழித்து உள்ளே வைக்கும் ஆப்பரேஷன்...(டெக்னிக்கல் புருடா விஷயங்களை வீ.எஸ்.கே சார் கண்டுகொள்ளாமல் இருப்பாராக)...இந்த க்ரிட்டிக்கல் நிலைமையில் தீவிரவாதிகள் ( வேற யார் கேப்டனுக்கு எதிரி,) கேப்டனுக்கு பிரச்சினையை ஏற்ப்படுத்த, கரண்டை ஆப் செய்து விடுகிறார்கள்.....(வழக்கமாக தீவிரவாதிகள் முட்டிக்கால் தண்ணீரில் உள்ள டண்ணலில் தான் இருப்பார்கள்...ஆனால் இந்த படத்தில் ஆயிரம் பாதுகாப்புகளையும் மீறி துப்பாக்கிகளுடன் ஆஸ்பத்திரியிலேயே புகுந்துவிடுகிறார்கள்) அப்போது நமது கேப்டன் ஆப்பரேஷன் த்யேட்டரில் பார்த்துக்கொண்டிருந்த வீராசாமி திருட்டு விசிடீ ஆப் ஆனது பற்றி நான் ஒன்றும் சொல்ல வரவில்லை, ஆப்பரேஷன் தடைப்படுகிறது...இந்த இக்கட்டான நிலைமையை கேப்டன் மிகத்திறமையாக சமாளிகிறார்...சொல்லிடுறேன் சொல்லிடுறேன்...தன்னுடைய மொபைலில் உள்ள லைட்டை ஆன் செய்து, இண்டலிஜெண்டலியாக ஆப்பரேஷனை முடிக்கிறார்.....(அட லூசு டைரக்டரே, அவ்ளோ பெரிய ஆஸ்பத்திரியில ஒரு ஜெனரேட்டர் கூடவா இருக்காது...)

இப்படி இண்டலிஜெண்டலியா இருக்கும் ஒரு டாக்டர் எப்படி சமூக குற்றத்தை எதிர்ப்பது...அங்கேதான் வில்லன் உள்ளே நுழைகிறார்...வழக்கம்போல் சைஸில் பெரிசான வில்லன்...அவருக்கொரு மைத்துனர்...(தயவுசெய்து யாரும் எல்.கே.சதீஷை) கற்பனை செய்யவேண்டாம்...அது ரியல் லைப்...இது ரீல் லைப்...ரியலில் மச்சான் ஹீரோவின் பக்கம்..படத்தில் இந்த தெய்வ மச்சான் வில்லன் பக்கம்....ஏதோ ஒரு மொக்கையான குற்றத்தை ( பஸ்ஸில் பான்பராக் எச்சில் துப்பும் அளவுக்கு மொக்கையானது இல்லைங்க) செய்யும் வில்லன் மச்சானை போலீஸில் கோள் மூட்டி ( ஹி ஹி எங்க ஸ்கூல்ல அப்படித்தான் சொல்லுவோம்) தூக்கு தண்டனையே வாங்கித்தந்துடுறார் கேப்டன்...(பாருங்க நிலைமையை, இதே போலீஸ் வேடம்னா கேப்டனே அரசாங்க செலவில் - அதான் ஒரே ஒரு புல்லட் - போட்டுத்தள்ளி இருப்பார்...) இதை கண்டு கொதித்த வில்லன் ப்ரதாப் ராவத் ( அதுதான் வில்லனோட பேருங்க) கேப்டனை பழிவாங்க கடுமையாக துடிக்கிறார்.....துரத்தி துரத்தி தொல்லையும் தருகிறார்.....கடைசியில் என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்...

ஈழத்தவர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை...இல்லையா பின்னே, மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள குறைந்த வசதிகளை சொல்லி அரசை சாடும் நமது கேப்டன் நெஞ்சில் நிறைகிறார்...ஆனால் அவர் பேசும் மூன்றரை பக்க வசனத்தில் " இதுக்கு முன்னாடி வந்தவங்களெல்லாம் வேடிக்கை பார்க்க வந்தாங்க. நான் உங்க வேதனையை போக்க வந்தவன். நம்புங்க நல்லதே நடக்கும்" என்று சொல்லும்போதுதான் ஆகா, கேப்டன் தே.மு.தி.க பிரச்சாரத்துக்கு இந்த மேட்டரை பயன்படுத்துறாரூடோய் என்று உறைக்கிறது...

ரமணா படத்தில் மருத்துவமனை படத்தின் அலட்சியங்கள் காட்டப்பட்டன...படம் நன்றாக ஓடியது...அதனால் இந்த படத்திலும் மருத்துவமனை அலட்சியங்கள் காட்டப்படுகின்றன...எனக்கென்னமோ இனிமேல் எல்லா கேப்டன் படங்களிலும் ( கேப்டன் அமெரிக்க ஜனாதிபதியாக நடித்தால் கூட) - அங்குள்ள ஒரு மருத்துவமனை ப்யூன் சாண்ட்விச் திருடி தின்பதை காட்டுவார்கள் என்று நினைக்கிறேன்...

சில பல அருமையான கயிற்றில் தொங்கி உயிரை பணயம் வைத்து செய்யப்படும் சண்டைக்காட்சிகள், எங்கே "ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் சைனா", "36 சேம்பர் ஆப் சீக்ரெட்ஸ்" மாதிரி ஜெட்லி படத்துக்குள் நுழைந்துவிட்டோமோ என்று ஒரு முறை திரும்பி பார்க்க வைத்தது...

கேப்டன் டூயட்டும் பாடுகிறார்.....நேற்று கே டிவீயில் பார்த்த ஒரு பிரபு படத்தில் நம்ப பிரபு டான்ஸ் ஆடுவது போல் காட்ட வேண்டும் என்பதற்க்காக கையை காலை தூக்கி எக்ஸர்ஸைஸ் மாதிரி செய்ய விட்டு, அதை பார்ஸ்ட் பார்வேர்ட் செய்து காட்டினார்கள்.....அந்த மாதிரி எந்த கொடுமையும் இந்த படத்தில் நம்ம கேப்டன் செய்யவில்லை...மெய்யாகவே (அட தேவுடா) டான்ஸ் ஆடுகிறார்....

காமெடி பற்றி சொல்லவேண்டுமே...ஸ்ஸ்ஸ்ப்ப்பா...இப்பவே கண்ணைக்கட்டுதே....சொல்லிடுறேனுங்க...விஜயகாந்த் படத்துக்கு எதுக்குங்க தனியா காமெடியன்...அவர் போதாதா....

ம்ம்ம், க்ளைமாக்ஸுக்கு வந்தாச்சுங்க...கேப்டன் (அ)சிங்கம் போல சீறி வில்லனை பழிவாங்கி அடித்து தூள் கிளப்பும்போது, அடுத்த முறை உடம்பு சரியில்லைன்னு டாக்டரிடம் போகும்போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று மட்டும் நினைத்துக்கொண்டேன்.....

எல்லாரும் இந்த படத்தை பார்க்கவேண்டும், அதுவும் தியேட்டரில் சென்று பார்க்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்...டி.வி.டி கிடைத்தால் நல்ல ப்ரிண்ட் ஆக இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும்...அப்படி வாங்கி நீங்கள் படத்தை பார்த்தால் உண்மையான அல்லது முழுமையான விமர்சனத்தை எழுதவும்...நான் எப்படி எழுதினேன் என்று கேட்கிறீர்களா...படத்தை பார்த்து வெறுத்து, முகம் வெளிறி வந்த அலுவலக நன்பன் ஒருவனை நோண்டி நொங்கெடுத்து / நெட்டில் கொஞ்சம் ரிவ்யூஸ் படித்து கதையை தெரிந்துகொண்டேன்....அம்புட்டுத்தேன்...நான் எந்த தவறும் செய்யவில்லை என்று வெள்ளை அறிக்கை அளிக்கிறேன்...

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

நான் ரொம்ப வியர்டுங்க (Wierd) விட்ருங்க...

வியர்டு ஆட்டத்துக்கு கார்த்திக் ப்ரபு கூப்டாக...சுடர் ஆட்டத்துக்கு லக்கி லூக் கூப்டாக..அப்புறம் ஏதோ ஆட்டத்துக்கு ரிச்மண்ட் தமிழ் சங்கத்துக்காரங்க கூப்டாக...கடைசியில் இப்போதான் கொஞ்சம் நேரம் கிடைச்சுது...சரி அப்படியே லேட்டஸ்ட் ஆட்டமான வியர்டு ஆட்டத்துல கொஞ்சம் இறங்கினா என்னான்னு வந்துட்டேன்...

சில பல வியர்டுகளை நீங்களும் பார்த்திருக்கலாம்...பேசியிருக்கலாம்...ஆனா டோட்டலா வியர்டான ஆளு இருக்காமுன்னா அது நாந்தானுங்கோவ்...சரி அப்பாலிக்கா அதுல ஒரு அஞ்சே அஞ்சு எடுத்து பட்டியல் போடோனுமாமே...போட்டுருவம்...

சாப்பாட்டு விஷயம்

கையில அமவுண்டு சேர்ந்தவுடனே ஸ்டார் ஹோட்டல்லதான் சாப்பிடுவேன், பப்புல தான் பிண்ட் பியர் அடிப்பேன் அப்படீன்னு போவாங்க பலபேர்...ஒரு முறை நான் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பி வந்துட்டு மறுபடி ப்ராஜக்ட் டைட்டானதால சிங்கப்பூரில போய் ஒரு மாதம் Singtel நிறுவனத்தில ட்ரெயினிங் போய்ட்டு, திரும்ப சிட்னி போறதா ப்ளான்...2005 மே மாசம்னு நினைக்கிறேன்....பெங்களூர் இண்டர்மீடியட் ரிங் ரோடுன்னு ஒரு ரோடு இருக்கு...அங்கே கட்டிட வேலை செய்யுறவங்களுக்கு ஒரு தள்ளுவண்டியில கூழ் + மோர் எல்லாம் விற்ப்பாங்க...நான் வண்டியை ஓரங்கட்டி ரெண்டாவது சொம்பு கூழை உள்ளே இறக்கிக்கிட்டிருக்குமோது தோள் மேல ஒரு கை விழுது...வாட் ரவி, வாட் ஆர் யூ டூயிங் ஹியர்னு...பார்த்தா என்னோட ப்ராஜக்ட் மேனேஜர்....நான் ஆபீஸ்ல ட்ரெயினிங் கண்டக்ட் பண்றதா சொல்லிட்டு கூழ் குடிச்சிக்கிட்டிருந்தா...:)) அப்புறம் ஒரே அட்வைஸ் மழை....பி ஹெல்த் கான்ஷியஸ்..டோண்ட் ஈட் ரோட் சைட் புட் அப்படீன்னெல்லாம்......நாங்கல்லாம் அதையா கேப்போம்...இப்போக்கூட ரெண்டு சொம்பு கூழ்தான் அடிச்சேன் லஞ்சுக்கு...ம்ம்ம்ம்...நான் கொஞ்சம் வியர்டுங்க...விட்டுடுங்க..

கமெண்டிங் விஷயம்

எல்லா விஷயத்தையும் லைட்டா எடுத்துக்கற ஆளு..பெரிய விஷயம் கூட என்னை பாதிக்காம லைட்டா எடுத்துப்பேன்...
ஒரு முறை இந்த மாதிரி நானும் என்னோட அத்தை மகனும் பஸ்ல போய்க்கிட்டிருந்தப்போ, வண்டி நின்னுருச்சு...எங்களுக்கு முன்னால நீண்ட வரிசையில் வண்டிகள் நின்னுக்கிட்டிருந்தது...எல்லாரும் என்ன என்னனு விசாரிச்சிக்கிட்டிருந்தாங்க...ஒரு ஆள் ஜன்னல் வழியா சொன்னான்...ஆக்சிடெண்டுப்பா...ரெண்டு பேர் அவுட்...என்று....உடனே நான் கேட்டேன்...அடுத்த ஆளை இறங்கி ஆடச்சொல்லவேண்டியது தானே அப்படீன்னு...ஒரு முறை முறைச்சான் பாருங்க....சில சமயம் யாரவது அங்கே ஆக்சிடெண்டுப்பா, பத்து பேர் அவுட் அப்படீன்னா, மீதிப்பேர் என்ன ஆனாங்க அப்படீன்னு கேட்டு நல்லா வாங்கிக்கட்டியிருக்கேன்.....ம்ம்ம்ம்...நான் கொஞ்சம் வியர்டுங்க...விட்டுடுங்க..

டென்ஷன் விஷயம்

பலபேர் பல விஷயங்களுக்கு டெங்ஷன் ஆவாங்க...நானும் சில விஷயங்களுக்கு டெங்ஷன் ஆகிற ஆளுதான்...ஆனால் பல நேரங்களில் நான் ரொம்பவே கூல்...தலைமேலே இடி விழுந்தாலும் மின்னல் என்ன கலர்னு பார்த்துக்கிட்டிருப்பேன்....பல சமயம் தலைபோகிற பிரச்சினையை எல்லாம் கூட கூலாக எடுத்துக்கிட்டி சுத்திக்கிட்டிருக்கேன்....ஒரு முறை எனக்கு ஒரு இண்டர்வியூ...ஒரு நாலு வருஷம் முன்னாடி...நான் பார்க்கவேண்டிய மானேஜர் அந்த அலுவலகத்தில் அப்போது இல்லை...எப்போது வருவார் என்று கேட்டதுக்கு இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும் என்று சொல்லப்பட்டது...சரி அப்படியே வெளியே வந்தேன்...பக்கத்தில் ஒரு க்ரிக்கெட் கிரவுண்ட்...சின்னப்பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடிக்கிட்டு இருந்தாங்க...நான் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தேன்...பிறகு கொஞ்ச நேரம் பந்தை எடுத்துப்போட்டேன்...பிறகு எனக்கு பவுலிங் கொடுத்தார்கள்...என்னுடைய சிறப்பான பந்துவிச்சினால் எதிர் அணி சுருள, நமக்கு பேட்டிங்கும் கிடைச்சது...அப்போது ஒரு கார் எங்கள் கிரவுண்டை க்ராஸ் செய்தது.....பிறகு இரண்டு மணி நேரம் முடிந்தவுடன் இண்டர்வீயூவுக்கு வியர்த்து வழிய சென்றேன்...சட்டையெல்லாம் மண்...பார்த்தவுடன் மானேஜர் கேட்டார்...நீங்கள் தானே அங்கே க்ரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தது என்று...நான் அட்டகாசமாக சிரித்தேன்...வேலையும் கிடைத்தது....சிறப்பாக பணி செய்து மானேஜரிடம் நல்ல பெயரும் வாங்கினேன்...இரண்டு மாதம் முன்பு ஒரு ஹோட்டலில் அவரை பார்த்தபோது அவரது சகாக்களிடம் எல்லாம் இந்த விஷயத்தை சொல்லி ஒரே சிரிப்பு.....அவங்களிடமே மீண்டும் இண்டர்வியூவுக்கு போவப்போறேன்...ம்ம்ம்...நான் கொஞ்சம் வியர்டுங்க...விட்டுடுங்க..

கொள்கை மறுப்பு விஷயம்

மனிதனுக்கு உபயோகப்படாதா விதிகள் மீறுவதற்க்கே என்பது கொள்கை....Unwanted Rules to be Broken...எவனாவது மொக்கையான ரூல்ஸ் போட்டா பிடிக்காது...உருப்படியான ரூல்ஸ் என்றால் மதிப்பதில் தப்பில்லை...ஆனால் மொக்கையாக ஒன்றுக்கும் உதவாத ரூல்ஸை போட்டு எரிச்சல் மூட்டினால் அதை உடைத்து எறியும்போது சும்மா குளுகுளுன்னு இருக்கும்...கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்றது சிலபல ஆண்டுகளுக்கு முன்னால்தான்.....கடவுள் பெயரால் மக்களை முறைப்படுத்தினார்கள், வழிப்படுத்தினார்கள் என்பது என்னமோ உண்மைதான்...நாகரீகம் அற்ற கூட்டத்தை வழிப்படுத்த ஒரு பயமுறுத்தும் ஆப்ஜெக்ட் தேவைப்பட்டது அந்த காலத்தில்.....ஆனால் இப்போது சாமி கண்ணை குத்திவிடும் என்று எவனும் திருடாமலோ, கொள்ளையடிக்காமலோ இல்லையே...அதனால் தான் தானே போலீஸ் கோர்ட் எல்லாம்...ஆக காலத்துக்கு பொருந்தாத அந்த சாமியை கும்பிடத்தான் வேண்டுமா ? கல்லையையும்,சிலையையும்,ஆபிரகாமிய மதங்களையும் ( நன்றி ஆர்.எஸ்.எஸ்) பின்பற்றுபவர்கள் சொல்வதெல்லாம் கடவுள் உலகத்தை படைத்தார் என்பதே...அட வெண்ணைகளா, கடவுள் உலகத்தை படைத்தான் என்றால் பரிணாம வளர்ச்சி கொள்கையை ஏன் ஒத்துக்கொண்டீர்கள், குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்று உள்ள ஆதாரங்களை ஏன் ஏற்றுக்கொண்டீர்கள் ? உங்கள் அறிவுக்கு எட்டாத விஷயம் என்றால் அதை கடவுள்மேல் போட்டுவிடுவீர்களா ? கடவுள் படைக்கும்போதே ஏன் சாட்டிலைட் டீவீக்களையும், லேப்டாப்புகளையும் படைக்கவில்லை ? கடவுள் உலகத்தை படைக்கும்போதே பெங்களூருவில் எட்டு அடுக்கு சாலைகளையும் படைத்திருக்கலாம் இல்லையா ? கடவுள் உலகத்தை ரட்சிக்கிறார் என்றால் ஏன் சுனாமியும், நில நடுக்கங்களும் ? அப்படி கடவுள் உலகத்தை தண்டிக்கிறார் என்றால் ஏன் ஜப்பானில் அணுகுண்டு வீசி லட்சக்கணக்கானவரை, ஆயிரக்கணக்கானவரை கொன்ற அமெரிக்காவை ஏன் தண்டிக்கவில்லை மடையர்களே...நீங்க யாரும் கோச்சுக்காதீங்க, நான் உங்களை புண்படுத்த இதை சொல்லவில்லை...நான் என்னை நோக்கி சொல்லிக்கறது இது...ஆமாம் இந்த விஷயத்தில் நான் கொஞ்சம் வியர்டு....விட்ருங்க.....

ஹெல்ப்பிங் விஷயம்

யாரு எக்கேடு கெட்டா எனக்கென்ன, நான் பாட்டுக்கு என்னோட வேலையை பார்த்துக்கிட்டு போலாமே அப்படீன்னா மனது கேக்கமாட்டேங்குது......போனமாசம் காலையில ஜாக்கிங் போயிட்டு இருக்கும்போது ஒரு பொண்ணு ரோட்டுல அழுதுக்கிட்டே போச்சு...அப்படியெ பிடிச்சு விசாரிச்சா, காலேஜ் நோட்டு புக் வாங்க அப்பாகிட்ட பணம் கேட்டதுக்கு அவர் தரலையாம்....நமக்குதான் யாரு கண் கலங்கினாலும் இதயம் வெடிச்சுருமே...அப்படியே வீட்டுக்கு கூட்டிப்போயி காலை டிபனை சாப்பிட வெச்சு, அப்படியே புக் ஷாப் கூட்டிப்போயி ரெண்டாயிரத்துக்கு புக்ஸ் / பென் / நோட்ல இருந்து எல்லாம் வாங்கி தந்தேன்......மத்தவங்களுக்கு ஹெல்ப் செய்யறதுனால பணத்தை தவிர நான் எதையும் இழந்துட்டேன்னு சொல்ல முடியாது.....ஆனால் நிறைய மன நிம்மதி கெடைச்சு இருக்கு......ஆனால் சில பேர் கொடுக்கும் உதவியை முழுமையா பயன்படுத்திக்காததை பார்க்கும்போது கொஞ்சம் எரிச்சல் வந்தாலும் மீண்டும் மீண்டும் ஓடிப்போய் உதவுவதை பார்த்து சில நன்பர்கள் கடும் எரிச்சல் அடைஞ்சிருக்காங்க.....ம்ம்ம் விடுங்க...நான் எல்லாம் அதை கேட்பேனா...நான் கொஞ்சம் வியர்டுங்க...விட்டுடுங்க....

கடைசியாக...

நம்மோட (என்னோட) லைப் டைம் மற்றவங்களை விட ரொம்ப கம்மின்னு எனக்கு தெரியும்...அதனால இருக்கும் காலம் வரை முழுமையா எஞ்சாய் செய்யலாமே என்பது தான் என் கொள்கை...ம்ம்ம்ம்.....நான் கொஞ்சம் வியர்டுங்க...விட்டுடுங்க..

இப்போது நான் அழைக்கும் மக்கள்...

1. பொட்டீகடை
2. லக்கி
3. பாலா
4. வரவணை
5. சுகுணா திவாகர்

இதுல யாராவது ஏற்கனவே வியர்டிட்டீங்கன்னா பின்னூட்டத்துல சொல்லுங்க, ஆளை மாத்தனும்...

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Thursday, March 15, 2007

தமிழ்மணம்: அண்மையில் மறுமொழியப்பட்ட புலம்பல்கள்

சில புலம்பல்கள் வெளியில் இருந்து பார்ப்பதற்க்கு பயங்கர காமெடியா இருக்கும்...ஆங்காங்கே சில புலம்பல்கள் தமிழ்மணத்தில் காணக்கிடைக்கத்தான் செய்யும்...புலம்புவதற்க்காகவே ஒரு பதிவு இருக்கிறதென்றால் அது தமிழ்மணத்தின் மறுமொழி மட்டுறுத்தல் ஏற்ப்பாட்டை அறிவிக்க வைத்துள்ள பதிவுதான்....

இங்கே பலருக்கு மறுமொழி நிலவரம் வலது பக்க பட்டையில் தெரியவில்லை என்றால் சாப்பாடே இறங்காது...மற்ற பதிவுகள் எல்லாம் அடித்து தூள் கிளப்பிக்கொண்டிருக்கையில் தனது பதிவின் மறுமொழி தெரியவில்லை என்று வருகின்ற ஸ்ட்ரொமக் பர்னிங்கில் அனல்மின்சாரமே தயாரிக்கலாம்...ஒரு சில புலம்பல்களையும் அதற்கு என்னுடைய கமெண்டுகளையும் போட்டுள்ளேன்..

// கவனிக்கவும் //

இவர் ரொம்ப பொலைட்டான ஆளு...சும்மா அப்படியே ஒரு ரெக்வஸ்ட்டா தட்டி விடுறாரு...

// ஆவன செய்ய வேண்டுகிறேன் //

அவர் என்ன ஸ்கூல் ஹெட்மாஸ்டரா, டி.சி கொடுக்க ஆவண செய்ய கடிதம் எழுதுறீங்க

// மட்டுறுத்தல் ஏற்ப்பாடு செய்துவிட்டேன். உடனே தெரியவைக்கவேண்டும் //

அது என்ன ப்ரூ இண்ஸ்டண்ட் காபியா, உடனே வரதுக்கு

// தயவு செய்து கவனிக்கவும்//

கெஞ்சராருப்பா...செய்யுங்களேன்...

// இந்த பிரச்சனையை சரி செய்து வைக்குமாறு வேண்டுகின்றேன். //

ஆமா, தமிழ்மணம் - தாதா வியாசர்பாடி வெள்ளை ரவி...உங்க பிரச்சினையை சரி செய்து வைக்க கூப்பிடுறீங்க..

// ஐயா. கீழ்க்கண்ட இரண்டு வலைப்பூக்களிலும் மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிவிக்கிறேன். நன்றிகள்.//

என்னமோ தினத்தந்தி விளம்பரம் தர்ற மாதிரி இல்லை இருக்கு...

// தவறு எங்கேயெனக் குறிப்பிடமுடியுமா? நன்றி. //

ஆமா, அவர் ஸ்கூல் தமிழாசிறியர், எழுத்துப்பிழைய குறிப்பிட்டு திருத்துவாரு...

/// மறுமொழி மட்டுறுதல் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். //

இது லைட்டான மிரட்டல் பார்மெட்...

///நான் என்ன செய்ய வேண்டும். அறிவுருத்துவீர்களா? சிரமத்திற்கு வருந்துகிறேன்.///

தமிழ்மணம் தான் தெளிவா போட்டிருக்காங்களே...இதுக்கும் மேல என்னாத்தை அறிவுறுத்தறது...யாருக்கு சிரமம் உங்களுக்கா அவங்களுக்கா...

// என்னுடைய பட்டை தெரியவில்லை //

கோடாவது தெரியுதாப்பா....எந்த பட்டை ??

// என் பின்னோட்டங்களை மட்டறுத்தல் செய்து விட்டேன். என் பின்னோட்டங்களைத் திரட்டித் தர வழி செய்வீர்களா? //

பின்னோட்டமோ முன்னோட்டமோ...அதெல்லாம் முடியாது....வழி செய்யறதுக்கு அவங்க என்ன வெட்டி சம்பளம் வாங்கும் சாலைப்பணியாளர்களா...

// மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாட்டை செய்துவிடேன் என்பதை தங்களுக்கு தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்///

ஏய் ரொம்ப கெஞ்சறாருப்பா...

//பல தடவை கேட்டும் எனது வலைப்பதிவற்கான மறு மொழி திரட்டல் வசதி செயற்படுத்தப்பட வில்லையே ஏன்????////

கோர்ட்ல கேஸ் போடறமாதிரி கேக்கறான்யா...ஏன்யா இந்தமாதிரி காய வெச்சீங்க....

///ஆனாலும் தமமிழ்மணம் இல்லையேன்றே சொல்கிறது. தயவு செய்து கவனத்தில் எடுங்கள். //

ஆமாம் தமிழ்மணம் வந்து பொய் சொல்லுது உங்கிட்ட...இது ரொம்ப ஓவரா தெரியலை...

/// மட்டுறுத்தல் ஏற்பாட்டை செப்டம்பர் 3-ம் தேதி அறிவித்தேன். இன்னும் என் பதிவில் வரும் மறுமொழிகள் தமிழ்மணத்தில் திரட்டப்பட்டு காண்பிக்கப் படுவதில்லை. ///

ஏய், தேதியோட சொல்றாருப்பா...வக்கீலா இருப்பாரோ...

///தமிழ்மணம் கொஞ்சம் தமிழ்மனம் வைத்து இதைக் கவனித்தால் நன்றாக இருக்கும். இதற்காகவே சில பதிவுகளை வலையேற்றாமல் வைத்திருக்கிறேன்///

ம்ம்ம்...எதுகை மோனை....ரத்த பூமியிலயும் கிளுகிளுப்பு கேக்குது உங்களுக்கு...

/// இது குறித்து எற்க்கனவே பல மின்னஞ்சல்கள் அனுப்பியும் ... பல நாட்க்கள் கடந்தும் ஒரு பதில் கூட கிடைக்காத காரணத்தால் இங்கு பதிகிறேன்.... குறைந்தப் பட்சம பதிலாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு...////

யோவ் பதில் போடுங்கப்பா இந்தாளுக்கு...விட்டா ஒரு ஜாண் கயிறை எடுத்து வாழமரத்துல தூக்கு போட்டுக்க போறாரு....:)))

///அனுமதித்து அகமுறச் செய்ததற்கு நன்றி!
வாழ்க தமிழ் மணம்! ///

இது ஹேப்பி நியூஸ்....கவுன்ஸிலர் எலக்ஷன்ல பதினைஞ்சு ஓட்டுல ஜெயிச்ச மாதிரி ஹேப்பியாவுறாரு.....இந்தாளுக்கு ஒரு சாத்துக்கொடி சூஸ் பார்சல்ல்ல்ல்ல்...

///ஒரு வேண்டுகோள்!///

என்ன மாரியாத்தா கோயில்ல கூழ் ஊத்த நிதி வேனுமா ?

/// நீங்கள் புது பதிவாளர்களுக்கு அனுப்பும் மடலில், "மதிப்பிற்குறிய" என நெடில் போட்டு கஷ்டப் படுத்துகிறீர்கள்!
"மதிப்பிற்குரிய" என மாற்றினால் மகிழ்வேன்1 //

இவர்தான் எழுத்துப்பிழை....மகிழ்வேன்1 அப்படீன்னு ஒன்னை சேத்து எழுதறாரு...இது தப்பில்லையா...

///மறுபடியும் கேட்டகிறேன்
மறுமொழி தெரிய
ஒரு வழி செய்
நன் நன்றியுனக்கு
நான் சொல்கிறேன்.///

மாமா, இந்தாள் ஒருமையில் பேசுறார்...இவர் கவிஜ்ஜ்ஜ்ஜர். அது மட்டும் நிஜம்...

/// என் வலைபதிவு சென்றவாரம் வரை எல்லாம் ஒழுங்காக இருந்தது //

இப்ப என்ன யாரையாவது இழுத்துக்கிட்டு ஓடிருச்சா ?

/// எனது பதிவு கடந்த இரண்டு மாதங்களாக ஒழுங்காகத்தான் வேலை செய்து வந்தது.
கடந்த திங்கள் கிழமையில் இருந்து அண்மையில்
மறுமொழியிடப்பட்ட பட்டியலில் இந்த வலைப்பூ
தெரியமாட்டேன் என்கிறது. ///

ரெண்டு மாசம் சேலரி குடுத்தீங்களா இல்லையா ? வேலை செஞ்சா கூலி தரனும்னு தெரியாது...அதான் மக்கார் பண்ணுது...

//என் பதிவுக்க்கு வரும் மறுமொழிகள் தமிழ்மணத்தில் தெரிவதில்லை. இதற்கு இங்கே தான் மறுமொழி அளிக்க வேண்டுமா? //

அதுக்கு தானே இந்த பதிவே போட்டிருக்காங்க...பதிவை படிக்காம டேரக்டா பின்னூட்டத்துக்கு வந்தாச்சு...வந்தப்புறம் என்ன கேள்வி ?

டிஸ்கி : ஊருக்கெல்லாம் அடைப்பலகை தரும் தமிழ்மணம் இந்த பதிவில் ஜிலேபிகள் காட்டுகிறது...அதனால் யார் யார் புலம்பினார்கள் என்று தெரியவில்லை...அதனால் குழந்தை முதல் பெரியவர்கள் வரை இருக்கும் வலைப்பதிவர்கள் உங்களை ஓட்டியதற்க்காக என்னை மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...

எனக்கு பின்னூட்டம் போட்டு திட்டும் முன் இதையும் ஒரு க்ளிக்கி சரிபார்த்துக்கோங்க...ரைட் க்ளிக் ஓப்பன் நியூ

Tuesday, March 13, 2007

ஆன்சைட் ரெகுலர் பதிவர்கள் / அனானிகள் கவனத்திற்க்கு

எல்லாருக்கும் வணக்கம்......உங்கள் எல்லோரோடும் பேசனும் என்று ஒரு திடீர் ஆசை...உங்கள் மொபைல் எண்ணையோ / லேண்டு லைன் எண்ணையோ எனக்கு தாருங்கள்...மொக்கை போட சரியான நேரத்தையும் அளியுங்கள்....குறிப்பிட்ட நேரத்தில் அழைத்து அறுக்கிறேன்..

என்னோட நம்பர் +91 98805 97061. இந்த எண்ணுக்கு உங்கள் நம்பரை எஸ்.எம்.எஸ் அடிங்க. அல்லது என்னோட மின்னஞ்சலுக்கு உங்கள் நெம்பரை ஐ.எஸ்.டி கோடு உடன் தாருங்க...


குறிப்பாக

கனடா
சூடான்
சிங்கை
யூ.எஸ்
மற்றும்
துபாய்

நல்லதொரு மொக்கைக்கு தயாராகுங்கள்:))

Monday, March 12, 2007

தீபாவளி = தீபாவலி !!!

தீபா : திரைவிமர்சனம்

 

படத்தை டி.வி.டியில் பார்க்க நேர்ந்தது...நேரம் கிட்டத்தட்ட அதிகாலை....அரைத்தூக்கம்....ஆங்காங்கே பார்ஸ்ட் பார்வர்ட் அடித்து பார்த்ததால்...படத்தை பாதி பார்த்தேன் என்றால் அது உண்மையானதொரு கூற்றுதான்...அதனால்தான் தீபாவளி(லி) படத்தை "தீபா" விமர்சனம் என்று சொல்லுகிறேன்...

 

படத்தை பற்றிய ஒரு க்விக் லுக்...டைரக்டர் லிங்குசாமிதான் தயாரிப்பாளர்....எஸ்.எழில் இயக்கம்...யுவன் ஷங்கர் ராஜா இசை...பெருத்த எதிர்பார்ப்போடுதான் பார்க்க ஆரம்பித்தேன்...எல்லா நேரமும் நமது எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில்லையே...என்ன செய்ய...

 

படத்தில் ஜெயம் ரவி / பாவனா இணைந்து நடித்திருக்கிறார்கள்...விஜயகுமார் ஒரு மொக்கையான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்...வையாபுரி இருக்கிறார்...மகாநதி ஷங்கர் இருக்கிறார்...வேறு யார் யாரோ இருக்கிறார்கள்...அதை விடுங்க...முக்கியமான விஷயத்துக்கு வருவோம்...

 

நம்ம ஜெயம் ரவிக்கு இந்த படத்தில் ப்ரமோஷன் கிடைத்திருக்கிறது....என்ன ப்ரமோஷன் என்று கேட்கிறீர்களா ? கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்..அதாவது முந்தைய படங்களில் பை வாக் போய்க்கிட்டிருந்தார்...இந்த படத்தில் எதுக்கெடுத்தாலும் ப்ளையிங் தான்...நோ வாக்கிங்...பைட் சீன்களில் கயிறை கட்டி பறக்க வைத்திருக்கிறார்கள்.....படத்தை விளம்பரம் செய்யும்போது, தூள் பறக்கும் சண்டைக்காட்சிகள் என்று விளம்பரம் செய்யாமல், ஜெயம் ரவி பறக்கும் சண்டைக்காட்சிகள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.....பாவம் புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்த நியூட்டன் பார்த்தால் நாண்டுக்கிட்டு செத்துப்போவார்...

 

படத்தில் ஜெயம் ரவியின் பெயர் 'பில்லு'...அசமஞ்சமாக அரைத்தூக்கத்தில் 'பில்லு' 'பில்லு' என்று விழுந்தது...நான் படத்தில் எதோ ஒரு காட்சியில் எவனோ கரண்ட் பில் கட்டவோ, மாட்டுக்கு பில்லு போடவோ போகிறான்கள் என்று நினைத்தேன்...பிறகுதான் தெரிஞ்சது அது ஜெயம் ரவியோட பேருன்னு..பில்லு பில்லு என்று ஒரே பில்லா இருக்கு படத்தில்...கண்டிப்பாக யாராவது வேலை மெனக்கெட்டு கணக்கெடுத்தால் ஒரு ஆயிரம் முறையாவது உச்சரிக்கப்படுகிறது இந்த 'பில்லு'...

 

சில சமயம் ஹீரோயினால் பில்லூலூ என்று செல்லமாக....சில சமயம் ரவுடிகளால் "டேய் எவண்டா பில்லே..." என்று அழுத்தமாக...சிலசமயம் படித்த பண்பாளர்கள் 'பில்'...டைரக்டர் கரண்டு பில்லாலோ, போன் பில்லாலோ பாதிக்கப்பட்டிருப்பார் போல...அதான் பில்லை அடிங்கடா...பில்லை வெட்டுங்கடா...பில்லை குத்துங்கடா...பில்லை தீத்துருங்கடா என்று பில்லை அதகளப்படுத்தி பழிவாங்குகிறார்...

 

ஆங், படித்த பண்பாளர் என்று சொன்னேனே...அது வேறு யாரும் இல்லை...நம்ம ரகுவரன் தான்...மெத்த படித்த டாக்டராக வருகிறார்...நரம்பு சம்பந்தமான அம்னீசியா நோய்களை கரெக்ட் செய்யும் டாக்டர்...பக்கா டீசண்டாக கோட்டு சூட்டுதான் காஸ்ட்டியூம் தலைவருக்கு...ஒரு புரியாத நோயை மனப்பாடம் செய்துவைத்திருக்கிறார்...பிறகு 'பில்லு' எப்ப போன் செய்தாலும் பக்கா டீசண்டாக பதில் சொல்லுகிறார்....ஹீரோயினுக்கு வந்துள்ள வியாதியை ஹீரோவுக்கு விளக்குகிறார்...

 

அட அதையும் ஓப்பன் பண்ணிட்டனா...ஹீரோயினுக்கு வியாதிங்க...என்னன்னு டீட்டெயிலா கேக்காதீங்க...சரி பரவால்லை சொல்லிடறேனே...அது ஒரு கொடுமையான வியாதிங்க...அதாவது மூனு வருஷத்துக்கு முன்னால நடந்த ஒரு கார் ஆக்ஸிடெண்டுல தலையில் அடிபட்டு பழைய விஷயங்கள் எல்லாம் மறந்திடுது....இப்போ மேட்டர் அது இல்லை...ஹீரோயின் யாரை பார்த்தாலும் அவங்களை ஹீரோயினால நியாபகம் வச்சுக்க முடியலியா...அதனால அவங்க ஹீரோயினை "என்னை தெரியலியா, மறந்துட்டியான்னு" கேட்டா ஹீரோயின் மகா எரிச்சல் ஆகிறாங்க....அதனை மறக்கத்தான் ஹீரோயின் சென்னை ராயபுரத்தில் இருக்கிற, முன்பு தன்னோட தந்தையிடம் வேலை பார்த்த சேட்ஜி ( சத்தியமா அந்த மாதிரி தெரியலை இவரைப்பார்த்தா) வீட்டுல வந்து தங்குறாங்க...அங்கதான் ஹீரோவை மீட்டிங்...அதை விடுங்க...

 

சேட்ஜி பொண்டாட்டியா நம்ம தேவதர்ஜனி..இவங்க லோக்கல் பாஷை பேச முயற்சி செய்யுறதை பார்க்க பக்கா காமெடியா இருக்கு...அதை விட கொடுமை ஹீரோவோட அப்பா விஜயகுமார் சென்னை பாசை பேசுறது....லூஸ்ல விடுங்க அதெல்லாம்...

 

நம்ம ஹீரோ பயங்கர பலசாலிங்க...அது எப்படின்னா, ஹீரோயினோட அப்பா தாடிக்கார தம்புசாமி தன்னோட பொண்ணை ஜெயம் ரவிக்கு கட்டிக்கொடுக்க மறுத்து, திரும்ப பெங்களூருக்கே கூட்டிக்கினு போறாரு...அப்போ சண்டைக்கு வர்ற பிளையிங் ஜெயம் ரவியை பின்னால் இருந்து தாக்குறார் ஒரு முடிவளத்த சடையாண்டி...அப்புறம் நேஷனல் ஹைவேஸ்ல முட்டிபோடவச்சி லாரி முட்டிபோகட்டும்னு உடறானுங்க...லாரி ஜெயம் ரவிமேல பட்டு அப்படியே ப்ளையிங் ஆவறார் பாருங்க...

 

என்னத்தை சொல்ல...

 

அங்கங்கே பெங்களூருவை காட்டுறாங்கப்போய்...போரம், நேஷனல் ஹைவேஸ்ல பெங்களூர் இத்தனை கிலோமீட்டர் என்று போட்ட போர்டு, எல்லாம் அப்படியே பெங்களூரை நியாபகப்படுத்துங்க...

 

கடிசியில் இன்னா ஆச்சுன்னு டி.வி.டி திரையில் காண்க....இந்த திரைப்படத்தை மாஸ் மூவிங்கறாங்க...தெலுங்குல வேற ரீமேக் பண்ணப்போறாங்களாம்..(ஹி ஹி, நேரக்கொடுமை...!!!)...

 

தீபாவளி = தீபாவலி !!!

 

######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################

இதனால் சகலமானவர்களுக்கும்

கேட்டுக்கொள்வது என்னவென்றால் அதர் அனானி ஆப்ஷன் எனேபிள் செய்யுங்கப்பா...

 

கமெண்ட் மாடரேஷன் போடுங்க போடாதீங்க...அது உங்க இஷ்டம்...

 

மணிகண்டன் வெச்சுருக்க உலக கோப்பை பரிசு போட்டியில் பின்னூட்டம் போடமுடியல..

 

மற்றபடி அனானி ஆப்சன் இல்லாத நல்ல இடுகைகளிலும் பின்னூட்டம் போட முடியல...

 

கொஞ்சம் பரிசீலிக்க கூடாதா தோழர்களே தோழியரே.

 

இந்த பதிவைக்கூட மின்னஞ்சலின் மூலமாகத்தான் போடுறேன்...

 

.மு. தோழர்கள் அல்ரெடி அனானி ஆப்ஷன் விட்டுவெச்சு இருப்பாங்க...

 

சிலபேர் விவரம் புரியாம அனானி ஆப்சன்  தராம இருக்காங்க. அவங்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

 

அதர் அனானி ஆப்சன் உங்க பதிவுல கொடுத்தா, எனக்கு பின்னூட்டத்தில் தெரிவியுங்க...ரங்கனாதன் ஸ்ட்ரீட் சரவணா ஜ்வல்லரியில சவரனுக்கு 35 ரூபா தள்ளுபடி என்னுடைய முயற்சியால வாங்கி தரேன்..

######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################

அதர் அனானி

எனேபில் ச்ய்யுங்க

 

######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################

Saturday, March 10, 2007

விகடன் சந்தா ஆபர்

 

 

 

 

######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################