தேடுங்க !

Thursday, September 20, 2007

சில தன்னிலை விளக்கங்கள்...

யாராவது தன்னிலை விளக்கம் கொடுத்தா போதுமே...அவசரம் அவசரமா தலை போற, வேலை போற வேலையா இருந்தாக்கூட விட்டுட்டு வந்து வரி வரியா விழுந்துவிழுந்து படிக்கிற ட்ரெண்ட் என்னைக்கு ஓயுமோ தெரியாது...இருந்தாலும் தலைப்பை மறுபடி ஒருமுறை பார்த்துக்கிட்டு மேற்கொண்டு டைப்புறேன்...

சமீபகாலமா முகமூடி அவர்கள் இந்த சின்னப்பையனை பிடிச்சு கும்முறதை நீங்க பார்த்திருக்கலாம்...இணையத்துல ரெண்டு மூனு பேரு நான் என்ன சொன்னாலும் அதை சரியான கோணத்துல பார்க்கிறதில்லை....ஒன்னு போலி டோண்டு மூர்த்தி...இன்னோருத்தர் முகமூடி அய்யா...

ஒரு முறை முகமூடி அவர்களை பற்றி ஒரு மூத்த வலைப்பதிவர் சொன்னார்...முகமூடி கிள்ளுவாரு...ஆனா ரத்தம் வராது...வலிக்கும்...ஆனா அழுவ முடியாது...என்று....ஆனா முகமூடி உண்மையிலேயே கையில ஊசிய வெச்சுக்கிட்டு உட்கார்ந்திருந்திருக்காரு...மூல வியாதி போல...உள் மூலமா வெளி மூலமா, ஆதி மூலமா தெரியல...பயங்கர டென்ஷன் ஆகுறாரு...லாஸ் ஏஞ்ஜெல்ஸில் நல்ல மருத்துவர் இருந்தால் பார்க்கவும்...

இன்னோரு விஷயம் இங்கே சொல்லனும்...முகமூடி அவர்கள் எல்லே ராம் என்று நான் நம்பவில்லை....மிச்சமிருக்கும் ஆசிட் வீச்சுக்கும் ஆட்டோக்களுக்கும் பயந்து முகத்தை மூடி எழுதும் லாஸ் ஏஞ்சல்ஸ்காரர் என்பது தான் என்னைப்பொறுத்தவரை....டோண்டு ராகவனுக்கு தெரியும், ஆனால் நான் கேட்கப்போவதில்லை...

முகமூடி பற்றி சொல்லனும்னா, டோண்டு ராகவனுடன் இணைந்து முதல் முதலில் போலி டோண்டு மூர்த்தியை உருவாக்கி, அவன் கையால் ஆபாச பின்னூட்டங்கள் வாங்கிய முதல் பதிவர்...இன்றைக்கும் வந்துகொண்டிருக்கலாம்....அதை குப்பைத்தொட்டிக்கும் அவர் அனுப்பிக்கொண்டிருக்கலாம்....(கிருஸ்துவனாகிய செந்தழல் ரவி, திராவிடனாம்...என்று இன்றும் அவர் பதிவில் ஆபாசம் கலக்காமல் மூர்த்தி பின்னூட்டம் போட்டுக்கொண்டுதானிருக்கிறான்..அதை வெளியிட்டுக்கொண்டுதானிருக்கிறார்...)

இன்றைக்கு பல பதிவுகளில் சென்று நான் கிறிஸ்டியன் என்றும் தலித் என்றும் நான் எப்படி திராவிடன் ஆகமுடியும் என்றும் வாந்தி எடுத்துவரும் போலி டோண்டு மலேசியா மூர்த்தி, முகமூடி பதிவுக்கும் சென்று எழுதுவது எனக்கு ஒன்றும் ஆச்சர்யம் இல்லை...

சொல்லப்போனால் முதன் முதலில் இதனை வலையில் "அம்பலப்படுத்திய" பெருமை திரு.முகமூடி அவர்களையே சாரும்...என்னுடைய மின்னஞ்சல் முகவரியில் இருந்து என்னுடைய முழுப்பெயரை எடுத்து (அங்கே மட்டுமே இருந்தது அது) , அவரது "இந்த வார விவகாரம்" பகுதியில் "ரவீந்திரன் அந்தோனிசாமி" என்று எழுதிய மதவெறி பாஸிஸ்ட் திரு.முகமூடி அவர்கள்...இன்றைக்கு அவர் போட்டிருக்கும் பதிவின் முதல் பின்னூட்டத்தில் கூட "சுகமளிக்கும் கூட்டங்கள்" என்ற வார்த்தை கசட்டு எண்ணத்தோடு சேர்த்திருப்பதன் மூலம் அதை மீண்டும் நிரூபிக்கிறார்...இவர் எப்படி சாதி சொல்லி திட்டுவதை கேள்விகேட்க முடியும் ?

மேலும் என்னுடைய சிறுமூளையில் உதிக்கும் இன்னொரு நினைவுத்துணுக்கு, மகாலட்சுமி என்ற பெண்ணுக்கு உதவி செய்ய முயன்றபோது, ஓகை சார், நிலா போன்றவர்களுடன் சேர்ந்து முகமூடி அவர்களும் அதனை எதிர்த்தார்....அதை பற்றியதான பதிவு நான் எழுதி இருந்தபோதும் சிறுபான்மை இனத்தை சேர்ந்த என்னுடைய பதிவில் தன்னுடைய பின்னூட்டம் வைப்பது இழுக்கு என்பது போல பொன்ஸ் பதிவில் தன்னுடைய கருத்தை "மொழிந்தார்"...இவனுக்கெல்லாம் என்ன நான் பின்னூட்டம் போடுறது என்பது போன்றதொரு அலட்சிய மனபாங்கு என்றும் கொள்ளலாம்...

சுகுணா பற்றி அவர் சர்வேசன் பதிவில் இட்ட பின்னூட்டம் தான் விவகாரத்தின் ஆரம்பம்...துடிக்கும் மீனை ஷூக்காலில் இட்டு நசுக்கினால் அது நிரந்தரமாக துடிப்பதை நிறுத்திக்கொள்ளும் இல்லையா...அதே போலத்தான் அந்த பின்னூட்டமும் இருந்தது...ஆஹா விழுந்துருச்சுடா, போடுறா ஒரேப்போடு...சுத்தமா ஒழிஞ்சுபோகும்...என்பது போல....இன்னோரு உதாரணம் சொல்லவேண்டும் என்றால், ஊர் நாட்டில், மஸுல் லோடிங் கன் எடுத்துக்கொண்டு அதிகாலை முயல் வேட்டைக்கு போகும்போது, சுட்டால் முதலில் விழுந்துவிடும்...ஆனால் சில, தவ்வி தவ்வி தன்னுடைய இறுதி தப்பிக்கும் முயற்சியை தொடரும்...அப்போது லைட்டாக மருந்து போட்டு, கொஞ்சமாக பால்ரஸ் ( ரவைன்னு நாங்க சொல்லுவோ) போட்டு டப்புனு ஒரு முறை சுட்டால் டோட்டல் டேமேஜாகிப்போயிரும்..அது தான் முகமூடி அவர்கள் செய்ய முயற்சித்தது...

இன்றைக்கு இரண்டு டென்ஷன் பதிவுகள் வெளியாகி ஓஹோவென்று ஓடுகிறது...இதேபோல் தான் அரவிந்தன் நீலகண்டன் அவர்களும் என்னை பக்கம் பக்கமாக திட்டி பதிவிட்டார்...ஏழு பக்க பதிவில் அறுபத்தேழு முறை செந்தழல் ரவி என்று விளித்து எல்லா முறையும் திட்டினார்...பிற்பாடு நன்பராகி, சகோதரரே என்று விளித்து மடல் கூட அனுப்பினார்...அதை விடுங்க...இது எங்க போயி முடியுமோ ?

வலையில் அடுத்த பிரச்சினை, இன்றைக்கு சாதியை சொல்லி திட்டினார் என்பதற்காக வெளியேறுகிறேன் என்று சொல்பவர்களே, நேற்று எங்களை பார்ப்பான் என்று சொல்லி திட்டியபோது எங்கே போயிருந்தீர்கள் என்று கேட்கிறார்கள்...முகமூடி அவர்கள் கேட்கிறார்...நன்பர் என்றென்றும் அன்புடன் பாலா கேட்கிறார்...

மலேசிய போலிடோண்டு மூர்த்தி, காசியை / செல்லாவை, தலித்து என்று திட்டியபோது நீங்கள் கேட்டீர்களா ? முகமூடி அவர்கள் கும்பகர்ண உறக்கத்தில் இருந்து எழுந்து பதிவிட்டாரா ? கி.கூ.கே.கே அனானி என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு மடல் அனுப்பினாரா ? அதை நன்பர் பாலா பதிவிட்டாரா ?

என்னைப்பொறுத்தவரை நன்பர்களாக இருப்பதாலேயே அவர்களது எல்லா கருத்துக்களையும் ஆதரவளிக்கவேண்டும் என்று கிடையாது.....பார்ப்பணர்கள் / பார்ப்பணரல்லாதோர் / ஹிந்து / முஸ்லிம் / கிருத்துவர் / ஈழம் என்ற எந்த பதிவரையும் சாதி, மதம்,மொழி போன்றவற்றை கொண்ட துவேஷ மொழி மொழிந்தது கிடையாது...

குறிப்பிட்ட சில பதிவர்களை நெருங்கிய நன்பர்கள் சிலரே அவர்களது சாதியை சொல்லி கிண்டல் செய்வதை கண்டு மனவேதனை அடைந்திருக்கிறேன்...என்னுடைய இந்த பதிவில் கிண்டலும் செய்திருக்கிறேன்..

///பொட்டீக்கடை: ( வாயில் வைத்திருக்கும் கிளாஸை எடுத்துக்கொண்டே..) அம்பி கூப்டேளா ?
லக்கிலூக் : பொட்டீக்கடை...நீங்க பார்ப்பணரா ? சொல்லவே இல்ல...இனிமே நமக்கு ஒட்டோ உறவோ கிடையாது...தள்ளி உக்காருங்க...
பொட்டீக்கடை: அது இவ்ளோ நேரம் தெரியலையா...அப்ப என் தட்ல இருந்து தின்ன மிச்சர வாந்தி எடு...////

பள்ளிக்காலத்தில் கம்யூனிட்டி சர்ட்டிபிகேட்டில் போடப்பட்ட சாதி தகவல், பிறகு கல்லூரி காலத்தில் சுத்தமாக மறந்தே போனது...பிறகு அலைச்சல், வேலை, உள்நாடு, வெளிநாடு என்று சுற்றியதில் சாதி என்ற ஒரு கருமம் இருப்பதே மறந்துபோனது....வலைப்பூக்களை பார்வையிட வந்தபோது அங்கொன்றும் இங்கொன்றுமாக சாதீயம் பற்றியதான பதிவுகள், பார்ப்பான், பார்ப்பணீயம், வெங்காயம், பெருங்காயம் போன்ற பதிவுகளை சந்திக்கநேர்ந்தது...ஆரம்பத்தில் எரிச்சலோடு மூடிவிடுவது வழக்கம் என்றாலும், சில பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன்....எப்படி இரட்டை குவளை முறை நூற்றுக்கணக்கான டீக்கடைகளில் இன்றும் இருக்கிறதாக பெரியார் திராவிடர் கழக சுற்றறிக்கை சொல்கிறதோ அதே போல் சாதி என்ற கசட்டு மனோபாவம் ஒவ்வொருத்தரின் உள்ளத்திலும் இருப்பதாகவே எனக்கு தெரிகிறது...

பைபிள் 'கதை'யில் ஆதாம் பாவம் செய்யாதபோது இறைவனை நிர்வாணமாக சந்திப்பதாகவும், பிறகு ஆப்பிளை தின்று பாவம் செய்துவிட்டபிறகு, நிர்வாணம் உறுத்தலாக, மரத்துக்கு பின்னால் ஒளிந்துகொண்டு பேசுவது போலவும், வலைப்பதிவுகளுக்கு வந்துவிட்டால் சாதி மனோபாவம், சாதிப்பற்று, சாதியை சொல்லி திட்டி புண்படுத்துதல் என்ற 'விட'யங்கள் தன்னாலே வந்துவிடும் போல...

பெரியார் பற்றிய திராவிட தமிழர்கள் தளத்தில் இருக்கும் இந்த கவிதையின் ஸ்னிப்பட் பாருங்கள்...

//பார்ப்பன எதிர்ப்பே
பார்ப்பனீய தத்துவ எதிர்ப்பே
தவிர்த்த ஆளெதிர்ப்பில்லையே!

ஆளடிக்க சொல்லவில்லையே
ஆள் பேசும் பார்ப்பனீய
தத்துவமடிக்க தலைப்பட்டாரே!
///

இது தான் என்னுடைய நிலை...

என்னைப்பொறுத்தவரை சாதி, மத அடையாளங்களில் இருந்து வெளிவரவே விரும்புகிறேன்...கிட்டத்தட்ட ஏழெட்டு ஆண்டுகளாக எந்த கடவுளையும் கும்பிடவில்லை...மற்றவர்களை அழைத்துப்போய் கோவில் காட்டுவது தனி...எங்களூர் (திருக்கோவிலூர்) உலகளந்த பெருமாள் கோயிலுக்கு மூன்று மாதம் முன்பு என்னவளை கூட்டிக்கொண்டுபோய் காட்டி பூ வாங்கியதோடு சரி...(பத்துரூபாய்க்கு மூல கிருகம் வரை செல்லலாம்)...

போலி டோண்டு மூர்த்தி கொடுத்த லெட்டரை எடுத்துக்கொண்டு நன்பர் அருண் நிறுவனத்துக்கு சென்று அவரை பணியில் இருந்து நீக்கியது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம், போலி டோண்டு மூர்த்தியுடன் தாயா புள்ளையா பழகியது...மேலும் நான் ஆபாசமாக அனைவருக்கும் எழுதியதாக போலி டோண்டு மூர்த்தி தன்னுடைய பதிவில் எழுதி இருப்பதும் சுத்த ஹம்பக்..கீழ்கண்ட ஸ்க்ரீன் ஷாட் பாருங்கள்...டோண்டு மனைவி மகள் புகைப்படத்தை துளசிம்மா இவனுக்கு அனுப்பினாங்களாம்...என்ன ஒரு லூசுத்தனம்...
அவனது பெயரை போலி டோண்டு என்று எழுதாமல் மூர்த்தி என்றே அனைவரும் எழுதவேண்டும்...சுகுணா ஆரம்பித்துவிட்டார்...இப்போது இந்த ஸ்க்ரீன் ஷாட் பாருங்கள்...கொஞ்சம் கொஞ்சமாக மூர்த்தி என்ற மின்னஞ்சலில் இருந்தே தன்னுடைய அசிங்க மடல்களை அனுப்ப ஆரம்பித்த காலம் - இப்பத்தான் - மே 2007...இவனால் வலையுலகை விட்டு விலகி சென்ற மாயவரத்தான் (இவர் எழுதிய முன்னூத்து சொச்ச இடுகையும் சூடான இடுகைதான்) , லண்டன் ஜெயக்குமார் போன்றவர்கள் இதுபோல பல விஷயங்களை திரட்டி வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்...அவர்கள் உதவியோடு மேலும் சில பல ஸ்க்ரீன் ஷாட்களை போடத்தான் போகிறேன்...

சொல்லப்போனால் மாயவரத்தான் தான் முதலில் போலி டோண்டு, மூர்த்தி, விடாது கருப்பு அனைத்தும் மூர்த்தியின் வேலைதான் என்று டெக்னிக்கலாக கண்டறிந்து வெளிப்படையாக சொன்னவர்...ஆனால் அவர் எந்த ஆதாரங்களையும் அப்போது வைக்கவில்லை...

போலி டோண்டுவின் நம்பிக்கையை பெறலாம், அவன் எண்ணங்களை அறியலாம், அதன் மூலம் வலையுலகின் நீண்ட கால பிரச்சினைக்கு ஒரு முடிவை எட்டிவிடலாம் என்று அவனுடன் மடல் தொடர்பில் இருந்தது உண்மை...டோண்டுவுக்கும் இந்த விஷயம் தெரியும்...அவ்வப்போது டோண்டுவை தொடர்புகொண்டு பேசுவேன்...மற்ற நன்பர்களிடமும் எச்சரிக்கையாக இருக்கச்சொல்லி அட்வைஸ் செய்வேன்....இண்பாக்ட் போலி டோண்டு முகவரிக்கு பல மின்னஞ்சல்கள் போட்டேன்...மூர்த்தியை சி.சியில் வைத்து, டூண்டு ஐடிக்கு மின்னஞ்சல் போடுவேன்...இரண்டையும் ஒரே ஐ.பியில் இருந்து திறந்து பார்ப்பான்...பிறகு மூர்த்தி மின்னஞ்சலில் இருந்து - ஏன் இதை எனக்கு அனுப்பி வைத்தீர்கள் என்று காட்டமாக ஒரு கேள்வி வரும்...எல்லாம் சைக்கோத்தனம்...

நான் நடத்திவந்த இரவுக்கழுகு தளத்தை பெயரிலிக்கு விற்று அதன்மூலமாக வேலைவாய்ப்பு தளத்தை முதல் பக்கத்தில் காட்டுமாறு செய்தேனாம்...இதுவும் மூர்த்தியின் சைக்கோ காமெடி தான்...பெயரிலியிடம் தான் கேட்கவேண்டும்...எவ்வளவுக்கு வாங்கினார் என்று...

மீண்டும் முகமூடி அவர்களின் விஷயத்துக்கு வருகிறேன்...அவர் என்னைப்பற்றி பதிவிட்டதும் ஆபாச மூர்த்தி பல பின்னூட்டங்களை என்னுடைய சாதி, மதம், குடும்பம் பற்றி எழுதியபோதும் அதை எல்லாம் வெளியிடாமல் தன்னுடைய பெருந்தன்மையை காட்டினார், அதற்கு அவருக்கு நன்றி...

எப்போதும் என் மீதான நம்பிக்கையை அருணோ, லக்கியோ, டோண்டு ராகவனோ, சுகுணாவோ, மற்ற மூத்த பதிவர்களோ, இளைய பதிவர்களோ, பெண் பதிவர்களோ இழக்கவில்லை என்பதை இந்த பிரச்சினைகளின் போது அவர்கள் அனுப்பிய பல மின்னஞ்சல்கள் தெளிவாக்கின...எல்லோருக்கும் என்னுடைய நன்றி....என் மீதான உங்கள் அனைவரின் நம்பிக்கைக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்...

எப்போதும் போல என்னுடைய வழியில் நான் தொடருகிறேன்...நான் நானாகவே...!!!!

Thursday, September 13, 2007

பின்னவீனத்துவாதியின் பிறாண்டல்கள்...

நான் எனக்கு தெரிஞ்ச ஒரு பின்னவீனத்துவாந்தியை...ச்ச்சே...வாதியை சந்திக்க திட்டம் போட்டேன்...டாஸ்மாக் வரச்சொல்லியிருந்தார்...அரக்கப்பரக்க போனபோது அவர் அங்கில்லை....முந்தாநாள் சாப்பிட்ட அவிச்ச முட்டை அழுகிய முட்டையாயிருந்ததால் அவர் வயிற்றுக்கோளாறு காரணமாக அவருடைய நன்பரை அனுப்பியிருந்தார்...அவருடன் எனக்கு அதிகம் பேச்சில்லை எனினும், எனக்கு பின்நவீனத்துவ நன்பரின் வவுத்து நோவு குறித்து அதிகம் கருத்தில்லை எனினும், அவரை பற்றியதான சில கருத்தாடல்கள் அங்கே நடந்தேறின...

நான் ஒரு பைதவுசனோடும், ஒரு எம்.ஸி விஸ்கி க்வாட்டரோடும் செட்டிலாகியிருந்தேன்...தோழர் அரை ஒயினுக்கே மப்பாகி அவரைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தார்...எனக்கே சில விஷயங்கள் விளங்கவில்லை எனினும், அந்த உரையாடலை இங்கே பதிவுசெய்கிறேன்...என்றாவது ஒருநாள் எனக்கு பின்னவீனத்துவவாந்திகள் பற்றி விளங்கித்தொலையக்கூடும்...அப்போது இதை மீண்டும் படித்து புரிந்துகொள்வேன்...

செந்தழல் ரவி: தோழர், வரகுணா வர்ர்லியா ?

தோழர் : இல்லைங்க தோழர். அவருக்கு வவுத்து நோவு..புட் பாயசம்..அதனால வரலை. அதுக்கு பதிலாத்தான் என்னை அனுப்பினார்.

செந்தழல் ரவி: தோழர், புட் பாயசம்னு சொன்னீங்களே...அதுவா வவுத்து நோவுக்கு காரணம் ? பாயசம் நல்லாத்தானே இருக்கும்...ஏதாவது மட்டமான ஹோட்டல்ல உக்காந்து மாட்டிக்கிட்டாரா ?

தோழர்: அதாங்க சாப்பாடு கெட்டுப்போனா வருமே...அது...

செந்தழல் ரவி: ஓ புட் பாய்சனா ? (கிழிஞ்சுது கிருணகிரி..இவன் தாலியறுக்கப்போறன் இன்னைக்கு)

தோழர்: ஹி ஹி ஆமாம் தோழர்...கொஞ்சம் பேடு எக்கு சாப்பிட்டுட்டார்...

செந்தழல் ரவி: என்னாது...!!!!!!!!!! பேடு வெச்ச எஃகு சாப்பிட்டாரா ?

தோழர் : இல்லை தோழர்...அழுவுன முட்டைன்னு சொல்லவந்தேன்...

செந்தழல் ரவி: ப்ளீஸ் நாம தமிழ்லே பேசலாமே...கொஞ்சம் வரகுணா பற்றி சொல்லுங்களேன்..

தோழர்: அவர் பின்னவீனத்துவ வாதி...

செந்தழல் ரவி: சரி...அப்படின்ன்னா என்னன்னு எனக்கு வெளங்கல...கொஞ்சம் விளக்கமாத்தான் சொல்லுங்களேன்....

தோழர்: அவர் நல்ல வார்த்தையையும் கெட்ட வார்த்தையையும் ஒரே தட்டுல தான் வைப்பார்..

செந்தழல் ரவி: யோவ் வார்த்தையை எப்படிய்யா தட்டுல வைக்கமுடியும் ?

தோழர் : நான் ஒரு எக்ஸாம்புளுக்கு சொன்னேன்...

செந்தழல் ரவி: ஓ..இன்னும் கொஞ்சம் புரியும்படி சொன்னீங்கன்னா நல்லாருக்கும்...

தோழர்: அவருக்கு நல்ல வார்த்தை, பொல்லாத வார்த்தை, கெட்ட வார்த்தை, அசிங்க வார்த்தை என்று எந்த வார்த்தையும் கிடையாது...

செந்தழல் ரவி: ஓ...அப்புறம்...

தோழர்: அவருக்கு நல்லவன்,கெட்டவர், டவுசர் போட்டவன், கொண்டை போட்டவன், திருநீறு வெச்சவன், குல்லா போட்டவன், நாமம் போட்டவன், நாஷ்டா துன்னவன், ப்ளேடு போட்டவன், ஜட்டி அவுந்தவன், எல்லாரும் ஒன்னு..

செந்தழல் ரவி: டேய் எல்லாரும் எப்படிடா ஒன்னாக முடியும் ?

தோழர்: தோழர், கொஞ்சம் மரியாதையா பேசுங்க...நாங்க கம்முனிஸ்டு...எழவு ஊட்ல கூட சுயமரியாதை இல்லைன்னா பொணத்துக்கிட்ட கூட கோச்சுக்கிட்டு வெளிய வந்துருக்கோம்...பார்த்து வார்த்தைய உடுங்க...

செந்தழல் ரவி: டேய் நீதாண்டா நல்ல வார்த்தை, கெட்ட வார்த்தை அப்படீன்னு எதுவும் இல்லைன்ன ?

தோழர்: அது அவருக்கு...எனக்கு சொரணை, சூடு எல்லாம் இருக்கு...

செந்தழல் ரவி: சரிடா ஃபாடு, இனிமே உன்னை மரியாதையாவே கூப்பிடுறேன்...மேல சொல்லு..

தோழர்: அவர் யாரையும் நம்ப மாட்டார்....காசி, சுந்தரமூர்த்தி, சுந்தரலிங்கம், ராமலிங்கம் அப்படீன்னு யாரு வந்தாலும் அவங்களை தூக்கி உடைப்புல போடுவாரு...அட அவ்வளவு ஏன், அவர் அடிக்குற கோல்டு ப்ளாக் பில்டர் சிகரெட்டையே ராயபேட்டை பொது மருத்துவமனையில வேலை செய்யுற தோழரிடம் கொடுத்து எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து, அந்த ரிசல்ட் பாத்த பிறகு தான் இழுப்பார்...

செந்தழல் ரவி: ஏன் அப்படி ? ஒன்னும் வெளங்கலியே ?

தோழர்: பின்ன, அதுல எவனாவது தூரோக தோழர் வெடிகுண்டு வெச்சுட்டான்னா ? சே கூவாராவை அப்படித்தானே துரோக தோழர்கள் காட்டிக்கொடுத்து கொலைசெஞ்சாங்க..

செந்தழல் ரவி: டேய் நிறுத்துடா வெண்ணை...தோழர் அப்படீங்கற...துரோகம் அப்படீங்கற..எப்படிடா துரோகம் செய்யுறவனை தோழர்னு கூப்பிடமுடியும் ? அப்புறம் இன்னொரு விஷயம்...

அது சே கூவாறா இல்லை...சே க்வேரா...கூவுறதுக்கென்ன அவர் குயிலா ?

தோழர்: நாங்க வாசிச்சதுல அப்படித்தான் இருக்கு...வேனுமுன்னா திராவிடர் கழக கையேட்டுல காமிக்கறேன்...பாக்குறீங்களா ?

செந்தழல் ரவி: ஒன்னும் வேணாம்...வரகுணா பத்தி சொல்லுங்க...

தோழர்: அதுக்கு முன்னால எங்க தோழர் ஏஞ்சலினா கோயிந்தசாமி எழுதிய புத்தகம் ஒன்றை உங்களுக்கு பரிசா தரச்சொல்லி சொன்னார் வரகுணா. அதை வாங்கிங்கங்க (ஜோல்னா பையை பிரித்து அழுக்கு பிடித்த புத்தகம் ஒன்றை எடுத்து தருகிறார்)...நல்லா வாசிங்க...வாசிப்பு தான் மனிதன் மனிதனாக உதவும்...மிருகம் மிருகமாக உதவும்..

செந்தழல் ரவி: அப்படியே டேபிள் மேல வைங்க தோழர், போவும்போது எடுத்துக்கறேன்...அப்புறம் இன்னொரு விஷயம்...யாரையும் நீங்க மதிக்கமாட்டீங்கன்னு சொல்றாங்களே...அது எந்த அளவுக்கு உண்மை...

தோழர் : அது ஒருவகையில் உண்மைதான் தோழர்..எங்க எழுத்தால மாலனை மதிக்காம அடிப்போம்...பத்ரியை பாக்காம அடிப்போம்...சுந்தர ராமசாமியை தூக்கி போட்டு மிதிப்போம்...சுஜாதாவை சொழட்டி சொழட்டி அடிப்போம்...இது மூலமா நாங்க எங்க எழுத்து திறமையை காட்டுவோம் தோழர்..

செந்தழல் ரவி: நல்லா காட்டீட்டீங்க போங்க...அதை விடுங்க...வரகுணாவை பற்றி சொல்லுங்க...

தோழர்: அவர் வாழ்க்கையை அவர் போக்கிலே வாழ்வார்...சாலையில் இடது பக்கம் திரும்பனும்னா அவர் திரும்ப மாட்டார்...நேராத்தான் போவார்...அப்புறம் ஒரு ரைட் அடிச்சு மறுபடி ஒரு லெப்ட் அடிச்சு, அப்புறம் ஒரு யூ அடிப்பார்...அப்போ ஆட்டமேட்டிக்கா அவர் போற எடத்துக்கு போயிருவார்...

செந்தழல் ரவி: டேய் ஏண்டா உளருற ? லெப்ட்ல போவனும்னா லெப்ட்ல தாண்டா போவனும்...அதுல எப்படிடா மாறமுடியும் ?

தோழர் : அதுக்கு பேருதாங்க தோழர் கட்டுடைத்தல்...

செந்தழல் ரவி: என்னது கட்டுடைக்கறீங்களா ? அப்படீன்னா ?

தோழர்: சொல்றேன் கேளுங்க...( ஜோல்னா பையில் இருந்து ஒரு புத்தகத்தை பிரித்து வாசிக்கிறார்) : வரைமுறைகள் என்பது இல்லாததொரு வாழ்க்கையை தனக்குத்தானே தீர்மானித்தல், எதை நம்புவது எதை நம்பக்கூடாதென்ற கட்டுகள் இல்லாமல், எதையும் நம்புதல், எதையும் நம்பாமலிருந்தல், தீர்மானங்களின் மீதான அனுமானங்களை விருப்பு வெறுப்புகளின் மீதான பார்வையை தவிர்த்து, வெகுஜனக்கூட்டங்களின் பொதுப்பார்வையை தவிர்த்து பெருவெளியில் காணுதல்...மேலும்...

செந்தழல் ரவி: தோழர், ஒரு நிமிஷம்...நான் அப்படியே வெளிய போயி பிஸ்ஸடிச்சுட்டு, ஒரு பாக்கட் சிகரேட் வாங்கிக்கிடு வந்துடறேன்...நீங்க எனக்கு இன்னொரு ஆம்லேட் சொல்லிருங்க..இந்தா டூ மினிட்ஸ்ல வந்துடறேன்...ஓக்கே...

தோழர்: ஓக்கே தோழர், நோ ப்ராப்ளம்..

பாரை விட்டு வெளியே வந்த செந்தழல் ரவி - சொல்லிக்காம கொள்ளிக்காம அப்படியே நூறு மீட்டர் முன்னால் நின்ன ஷேர் ஆட்டோவில் ஓடிப்போய் தொற்றுகிறார்...

"சார் எங்க போவனும்...? "

"வண்டி நிக்கிறவரைக்கும் போவனும்..வழியில டாஸ்மார் இருந்தா நிப்பாட்டிக்க...சுத்தமா எறங்கிருச்சி..."

Monday, September 10, 2007

எல்.ஜி ப்ராடா பாருங்கஎல்.ஜி ப்ராடா (PRADA) அலைபேசி பற்றி ஒரு சின்ன அறிமுகப்பதிவு...இந்த வீடியோ சூப்பர்..இதுல நிறைய விஷயம் சொல்றாங்க...

டெக்னிக்கல் விஷயம் பார்த்தீங்கன்னா..இதுல இருக்க ஃபீச்சர்ஸ் லிஸ்ட் பாருங்க கீழே..

Bluetooth - இருக்கு
Works in USA (Triband) - ட்ரைபேண்ட். எங்கே வேனுமானாலும் வொர்க் ஆகும்.
WAP - இருக்கு. வேப் 2 போட்டிருக்கோம்...
Faster data with GPRS
Music player - தனியா ஒரு ப்ளேயர் கூட இருக்கு
Camera phone - ஆமாம்
Colour screen - சூப்பர் க்வாலிட்டி
Polyphonic ringtones - ட்ரூடோண்ஸும் இருக்கு
Vibrating alert - இருக்கு
Picture messaging - இருக்கு

இது பற்றி கொஞ்சம் டீட்டெயிலா சொல்லனும்னா

Address Book Memory 1000 பெயர் வரைக்கும் ஸ்டோர் செய்யலாம்
Display Colour Depth 256 K நிறங்கள்
Display Size 240 x 300 பிக்ஸல்கள்
Frequency Band Tri-Band எல்லா ஊர்லயும் வொர்க் ஆக
SMS,MMS ஆப்ஷன் வெச்சிருக்கோம்
அளவு 99 x 54 x 12 millimeters
பேசக்கூடிய நேரம் 3 hours
மொத்த எடை 85 grams
Camera பற்றி 2 megapixels கேமராங்க
Games நல்லதா நாலு போட்டிருக்கோம்
Internal Phone Memory 8 எம்.பி
Internal Photo/Video Capacity 8 எம்.பி (தனியா)
Media Player தனியா MP3 Player கொடுத்திருக்கோம்
MicroSD கார்ட் போட்டுக்கலாம்.
MP3 Tones இருக்கு..
Photo/Video Editing சாப்ட்வேர் போட்டிருக்கோம்.
Polyphonic Tones கூட இருக்கு
அருமையான Video Recorder கொடுத்திருக்கோம்..
USB யில் கூட வொர்க் ஆகும்..
Calendar, Email , Internet Browser கொடுத்திருக்கோம்
Java Enabled போனுங்க இது...ஜாவா கேம் எல்லாம் டவுண்லோட் செய்து ஓட்டலாம்..
Operating Platform LG சொந்த ப்ளாட்பார்ம்..

பெயிண்ட் பிரஷ்ல கிராபிக்ஸ் செய்யறது எவ்ளோ கஷ்டம் ?

பாருங்க நீங்களே..

பருப்பு சாம்பார்...........

நான் இப்போ இருக்க நாட்டுல சைவம், அசைவம் என்று எல்லாம் பிரிவினைவாதம் கிடையாதுங்க...எல்லாரும் எல்லாமும் திங்கற ஊரு...சரி நேத்து அப்பார்ட்மெண்ட்ல சாம்பார் வெக்கலாம்னு முடிவெடுத்து, தேடும்போது இந்த சமையல் குறிப்பு கிடைச்சுது...

இதுல இருந்து சில விஷயங்களை போட்டு ஒரு பதிவு போட்டுடலாம்னு...எதுக்குங்க வளவளன்னு...(வளவளன்னு தான்...வள் வள்னு இல்ல...)...மேட்டருக்கு வருவோம்...

முருங்கைக் காய் - 2
புளி - எலுமிச்சை அளவு
தக்காளி - 2
துவரம் பருப்பு - 1/2 கப்
சாம்பார்ப் பொடி - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - சிறிது

மசாலா அரைக்க:
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 1
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித் தழை - சிறிது

தாளிக்க - எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.செய்முறை:

புளியை நீர்க்க இரண்டு மூன்று முறைகளாகக் கரைத்துவைத்துக் கொள்ளவும்.
துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.

முருங்கைக் காயை 3 அங்குலத் துண்டுகளாகவும் தக்காளியை மெல்லிதாக நீளவாக்கிலும் நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.

அதில் நறுக்கிய முருங்கைத் துண்டுகளைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் அரை கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, வாணலியை மூடிவைக்கவும்.

ஐந்து அல்லது எட்டு நிமிடங்களில் முருங்கை பாதி வெந்திருக்கும்; இப்போது புளித் தண்ணீர் சேர்க்கவும்.

மேலே உப்பு, மஞ்சள்தூள், தக்காளி, அரைத்த மசாலா, சாம்பார்ப் பொடி சேர்த்துக் கொதிக்க விடவும்.

புளிவாசனை போனபின், வேகவைத்த துவரம் பருப்பைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்களுக்குக் கொதிக்கவைத்து இறக்கவும்.

கொத்தமல்லித் தழை நறுக்கித் தூவி, பரிமாறவும்.

இந்த பதிவுப்படி பல விஷயங்களை சாம்பார்ல போட்டுட்டேன்...பட்...முருங்கைக்கா மட்டும் கிடைக்கல...அதுக்கு பதிலா கடையில இருந்து வாங்கிகிட்டு வந்த பிஷ் பிரையில் இருந்து ஒரு ரெண்டு மீனை எடுத்து உள்ளாற போட்டுட்டேன்...

நீங்களும் செஞ்சு சாப்பிடுங்க...!!!! நல்லாருந்துச்சு...!!! இந்த பதிவு மாதிரியே...!!!

Thursday, September 06, 2007

நோ கமெண்ட்ஸ் ஒன்லி போட்டோஸ்...

போலியை அம்பலப்படுத்தியது சரி, சம்பந்தம் இல்லாமல் அவனது மனைவி படத்தினை போட்டது தவறு என்று சொல்லியிருந்தார்....மூர்த்தியின் ஆப்பு பதிவில் ஒரு மூத்த வலைப்பதிவரின் மனைவி மகள் படம் போட்டபோது எங்கே போயிருந்தார் பெயரிலி அண்ணை...அவர் ஆப்பு பதிவில் பின்னூட்டி அதை தூக்க செய்தாரா ? அப்படியே சொன்னாலும் தான் சைக்கோபாட் மூர்த்தி அதை செய்யப்போகிறானா ?இருந்தாலும் பெயரிலி மீது வைத்துள்ள மரியாதை காரணமாக (என்னதான் அவர் நான் ரசிக்கும் மாலனை கும்மினாலும்) அந்த படத்தை நீக்குவது என்று முடிவெடுத்துள்ளேன்...

ஆனால் பாருங்கோ, கை பரபரங்குதே...அதனால் அந்த படத்தில் ஒரு சிறு மாறுதல் செய்து இங்கே வெளியிட்டிருக்கிறேன்...

என்ஞாய் மாடி...!!! கம்ஸாமீதா...!!!!

Wednesday, September 05, 2007

ஆமாண்டா...!!!!!!

தரன் மீண்டும் உளறிக்கொட்ட (ஓலமிட?) ஆரம்பித்துவிட்டார்.....அவனை நிறுத்தச்சொல், நானும் நிறுத்துகிறேன் என்று ஏர்ப்போட்டில் கிடைக்கும் கொஞ்ச நஞ்ச இண்டர்நெட் வைத்து இந்த பதிவிடுகிறேன்...//எதற்க்காக போலிடோண்டுவின் பெயரை பயன்படுத்தி எனக்கு மிரட்டல் விடுத்தாரம் இந்த 007. பொய் சொல்லுங்கப்பா ..பொருத்தமா சொல்லுங்கப்பா...hahhaahhahhahahhahahahahahahahahahah....////நான் போலி டோண்டு மூர்த்தியின் பெயரை பயன்படுத்தி இவருக்கு மிரட்டல் விடுத்ததாக சிறுபிள்ளைத்தனமாக புலம்புவது கேவலமாக இருக்கிறது...அப்படி நான் மிரட்டல் விடுத்ததற்கான ஆதாரமோ, மின்னஞ்சலோ, ஐ.பி தகவலோ காட்டினால் வலையுலகை விட்டு விலக...ச்சே...வலையுலகில் இதுபோன்ற பதிவுகளை இடுவதை நிறுத்திக்கொள்கிறேன்...///இனி இதைப் பற்றி எழுதி சாக்கடையில் விழ நான் தயாரில்லை மற்றும் நேரமும் இல்லை..///இருப்பதே சாக்கடையில்...இனிமேல் எப்படி விழமுடியும்...? ஆராய்ச்சி படிப்புக்கு போனவருக்கு தமிழ்மணத்தில் யார் யாரை சொறிவது என்று மட்டும் நினைவில் இருந்தால் எல்லாம் ஆப்பில் முடிந்துவிடபோகிறது..மேலும் இவரது மேலும் ஒரு பதிவில், நான் இவருக்கு "குச்சிக்காரி மகனே" என்று ஆரம்பித்து ஆபாச அர்ச்சனை நடத்தியதாக தெரிவித்துள்ளார்...தமிழ் இணையத்தில் உச்சா போகும் பச்சா கூட சொல்லிவிடும், இந்த வார்த்தையை பயன்படுத்தி ஆபாச அர்ச்சனை நடத்துவது யார் என்று...நான் நினைப்பது என்னவென்றால், அறியாத பருவத்தில் புரியாமல் என்னை தவறாக நினைத்ததால் இவ்வளவு பிரச்சினையோ என்று எண்ணத்தோன்றுகிறது...மலேசிய மூர்த்தியின் திருவிளையாடலுக்கு மலேசிய மூர்த்தியின் பதிவுக்கே லிங்க் கொடுத்து பதிவிட்டுள்ளார் இவர்...முறையான கல்வி கற்று வாழ்க்கையின் பல கட்டங்களை தாண்டிவந்த எவரும் இணையத்தில் மறந்தும் கூட உபயோகப்படுத்த நினைக்கும் வார்த்தைகளை நான் எப்படி உபயோகப்படுத்துவேன் ?ஒரு முறை மூர்த்தியுடன் தனிப்பட்ட சேட் செய்யும்போது, அவன் எப்படி எல்லார் குடும்பத்தையும் திட்டுகிறானோ அதே மாதிரி நானும் திட்டினேன்...செத்து சுண்ணாம்பானான் மூர்த்தி..அனைவரும் விரும்பினால் அதை எங்காவது வலையேற்றி இங்கே லிங்க் தருகிறேன்...பயணத்துக்கு வாழ்த்தியதற்கு நன்றி...

Tuesday, September 04, 2007

வேலைநேரத்தில் தொல்லை செய்யும் தரன்

வேலைநேரத்தில் தொல்லை செய்யும் தரன்டுபுக்குகள் தொல்லை இல்லாமல் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என்று பார்த்தால் விடமாட்டானுங்க போலிருக்கு....அதிலும் தாய்வானில் இருந்து வலைபதிவதாக சொல்லும் தரன் போன்றவர்கள் தங்களுடைய தனிப்பட்ட சொறிப்புண்களை சொறிந்துகொள்ள சமயம் பார்த்து காத்திருப்பார்கள் போல...

கொஞ்ச நாள் நிம்மதியாக இருக்கலாம் என்றால் விடமாட்டானுங்க போலிருக்கு...நாங்க கும்மினா எப்படி கும்முவோம் என்று அதிகம் தெரியாமல் மீண்டும் வந்திருக்கும் தரனுக்கு கொஞ்சம்நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தால் டூண்டு போன்றதொரு பதிவுக்கு லிங்க் கொடுத்து அதனை தன்னுடைய பதிவிலும் வைத்திருப்பாரா இவர் ? டூண்டு பதிவு டீசண்டாக இருக்கிறது போலும் அவரது பார்வைக்கு....போர் என்றால் என்ன ? இரண்டு பேர் கையிலும் கத்தி இருக்கிறது...போரிடுகிறார்கள்......அது போர்...ஆனால் நான் அப்படியா ? மூர்த்தி உபயோகப்படுத்தும் அதே வார்த்தைகளை உபயோகப்படுத்த முடியுமா நான் ? நாங்கள் ஒரு வரயறைக்குள் நின்று போரிடவேண்டிய - வார்த்தைகளை உபயோகப்படுத்தவேண்டிய - கட்டாயத்தில் இருக்கிறோம்...இந்த நிலையில் பழைய விஷயங்களை மனதில் வைத்து - அதெல்லாம் சொல்ல வேண்டுமா என்ன - ( என்னுடைய இந்தி எதிர்ப்பு பதிவை பார்த்ததில் இருந்து தரன் சில வார்த்தைகளை உபயோகப்படுத்த - பிறகு கவிதாவின் பதிவில் ஒரு சிறிய விஷயத்துக்கு முட்டிக்கொள்ள - எல்லாம் அல்பத்தனமான விடயங்கள்...சொன்னா சிரிப்பீங்க) தன்னுடைய பழைய புண்ணை சொறிந்துகொள்ள வந்திருக்கும் தரனை நினைத்து சிரித்துக்கொண்டே தமிழ்மணத்தினை மூடிவிட்டு ஆணி பிடுங்க செல்லுமுன் இரண்டு நிமிடத்தில் கடகடவென அடிக்கும் பதிவு இது...அப்போது தமிழ்மணம் தரன் பதிவை நீக்கியது...அதற்கு கோபித்துக்கொண்டு வனவாசம் போனவர், இப்போது மீண்டும் ஓடிவந்துவிட்டார்...காரணம் இதை விட்டால் அவருக்கேது வேறு வாய்ப்பு...(ஆப்பு)ஏன் மூர்த்தியுடன் ( அதாவது போலி டோண்டுவுடன் / விடாது கருப்புடன்) மடல் தொடர்பு வைத்திருந்தேன் என்று ஏற்கனவே விளக்கிவிட்டேன்....ஆனால் அதையே வைத்து, மூதி சாரி மூர்த்தி அவன் பதிவில், பெங்களூர் அருண் குமார் அலுவலகத்தில் அவன் கொடுத்த லெட்டரை கொடுத்து அருண் குமாரை பணியில் இருந்து நீக்கினேன் என்றெல்லாம் லூசுத்தனமாக உளறுவது பார்க்க சகிக்கவில்லை...மென்பொருள் துறையில் பணி புரியும் அனைவருக்கும் தெரியும் இது சாத்தியம் அல்ல என்று...அப்படியே லெட்டரை கொண்டுபோனாலும் வாச்சுமேன் கூட வாங்கி பார்க்கமாட்டான்...இந்த லூசு உளறுவதை பார்த்து எல்லாரும் ரெண்டு மூனு இடத்தில் சிரிப்பதை பார்க்கும்போது மகா காமெடி....ம்யூஸ் பணியில் இருந்து நீங்க நான் காரணமாம்...ம்யூஸ் போன்றவர்கள் பணிக்கு தேவை என்று நிறுவனங்கள் நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு அலையும்போது மின்னஞ்சல் அனுப்பியெல்லாம் யாரையும் பணியில் இருந்து நீக்க முடியாது...என்னை புரிந்துகொண்டவர்களுக்கு - என்னை தெரிந்தவர்களுக்கு - என்னுடைய நன்பர்களுக்கு....தெரியும்...நான் யார் - எப்படிப்பட்டவன் என்று....அரிப்பெடுத்த இழிபிறவி தரனோ, அல்லது போலி டோண்டு மூர்த்தியோ வந்து சொல்லி அவர்கள் தெரிந்துகொள்ளப்போவதில்லை...அதனால் அத்தையும் இத்தையும் மூடிக்கொண்டு சும்மா இருத்தல் சுகம்.....வர்ட்டுமாடா நாதாரிங்களா...மேற்கொண்டு இதுவிடயமாக பதிவு எழுதுதல் இல்லை என்று முடிவெடுத்துள்ளேன்...என்னை பற்றிய பதிவு வந்தால் அது பற்றி என்னிடம் நேரிடையாம மின்னஞ்சலில் கேட்டு தெரிந்துகொள்ளவும்...(இருக்கறது நூத்து சொச்சம் பேரு...இதுல இருக்க அரசியல் இருக்கே...)இன்று இரவு விமானம் பிடிக்க ஓடவேண்டும்...மலேசியாவுக்கு போகவில்லை...(அதுக்கு நேரம் காலம் கூடி வரனும் இல்லையா...)வேறு இடம்...ஆகவே அதிகமாக என்னுடைய பதிவுகள் இந்த வாரம் வராது...மீண்டும் அடுத்த வாரம் புதிய இடத்தில் இருந்து வித்யாசமான பல பதிவுகள் போட்டு உங்களை எல்லாம் மகிழ்விக்கிறேன்...இப்போதைக்கு வருகிறேன்...இந்த கடைசி முற்றுப்புள்ளி எல்லாத்துக்குக்கும் தான்.................................................... > .

Monday, September 03, 2007

டோண்டுவை தமிழ்மணம் நீக்கவேண்டும்...

போலிடோண்டு பிரச்சினையை முழுவதுமாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்றால் டோண்டுவை நீக்கவேண்டும் என்று குழலி பதிவிட்டிருக்கிறார்...

 

டோண்டு இணைய வனவாசம் போகவேண்டும்...அவரே ஒதுங்கிக்கொள்ள்வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம்...

 

அப்போது தான் மூர்த்தி வரைந்துள்ள மீசையில் மண் ஒட்டாது...

 

டோண்டு என்ற ஒருவர் இல்லை என்றால் போலி டோண்டு என்ற மூர்த்தியும் இல்லை...

 

சிறுபிள்ளைத்தனமான "டோண்டுவின் பதிவில்" பின்னூட்டம் போடாதே சண்டையும் இல்லை...

 

கீழ்த்தரமான அல்லக்கை முண்டங்களுக்கும் வேலை இல்லை...

 

போலி டோண்டு மூர்த்தி உன்னுடன் நடந்த மின்னஞ்சல் கான்வர்சேஷனை வெளியிட்டுள்ளானே என்று ஒரு நன்பர் கேட்டுள்ளார்...அவனுடைய நம்பிக்கையை பெற்று அவனுக்கு "ஸ்பெஷல் ஆப்பு" வைக்க செய்த முயற்சி. அதன் பலனாகத்தான் விடாது கருப்பு, மூர்த்தி, போலி டோண்டு எல்லாம் ஒன்று என்று அறிந்தேன்...

 

டோண்டு பதிவை நீக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு மீண்டும் வருகிறேன்....தமிழ்மணத்தார் நீக்குவதை விட டோண்டுவுக்கே நான் வைக்கும் கோரிக்கை, தமிழ் வலையுலகில் இருந்து விலகவேண்டும் தாங்கள்...

 

கசடு எதுவென அடையாளம் காட்டியாகிவிட்டது...இனி பணியில் கவனம் செலுத்தலாம் என்று இருக்கிறேன்...இனி மொக்கை பதிவுகள் மட்டும் இடுவேன்...வணக்கம்....

 

 

 

 

######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################