Wednesday, October 17, 2007

யாருய்யா அந்த பாப் மார்லி ?



பதிவுலகில் அனானிகள் அடிக்கடி கொட்டம் அடிக்கும்போது உபயோகப்படுத்தும் வார்த்தை பாப் மார்லி மற்றும் கஞ்சா...பாப் மார்லி பற்றி இந்த பதிவில் பார்த்துக்கோங்க...இந்த பரட்டை தலையன் தான் பாப் மார்லி..!!!

இலங்கையில் இருந்து வந்திருக்கும் தோழர் அறிவுமதி



கொஞ்சமேனும் டைமிங் !!!!!!!!!!!

நாத்தீகர்களும் ரசிக்கும் முருகன் பாடல்...!!!



யார் அந்த நாத்தீகர்கள் அப்படீன்னு கேட்காதீங்க...நான் தான் அது..!!!!!!!

Tuesday, October 16, 2007

எம்.ஐ.ஏ ன்னா என்னான்னு தெரியுமா ?



M.I.A வோட பாடல் பாருங்க...யாரு என்னன்னு குகிளிட்டு பார்த்தோ, யூட்யூபில் தேடியோ கண்டுக்கோங்க...!!!!

Monday, October 15, 2007

நானே கேள்வி - நானே பதில்...V 1.0

மனசுல என்ன தான் நினைச்சுக்கிட்டிருக்கே ?

ஏ நான் ஒன்னும் நினைக்கலையேப்பா...ஏன் இப்படி சூடான கேள்வி...நான் உண்டு என்னோட வேலை உண்டுன்னு ( அதான் மொக்கை போடுறது) போய்க்கிட்டிருக்கேன்...எதுவாருந்தாலும் சொல்லுங்கப்பா...பேசித்தீத்துக்கலாம்.....நான் கொஞ்சம் ஓப்பன் ஹார்ட்டு தான்...

தமிழச்சி பிரச்சினை பற்றி சொல்லேன்...

அவங்க பெரியாரிய கொள்கைகளை மட்டும் பரப்பிக்கிட்டிருந்தபோது கொரியாவில் கிளைக்கழகம் ஆரம்பிச்சேன்...அது மரமா வளர்றதுக்குள்ள பெண்ணீயம்,தலித்தியம், புலியெதிர்ப்பு அப்படீன்னு போய்ட்டாங்க...அவங்களுடைய பகுத்தறிவு பிரச்சாரங்களுக்கு எப்போதும் என் ஆதரவு...மற்ற விஷயங்களில் அப்படியே பொட்டீக்கடை கயட்டிக்கினமாதிரி நானும் கயட்டிக்கலாமுன்னு இருக்கேன்...ஆனாலும் தோழர்.தமிழச்சி நான் என்ன சொன்னாலும் வெளையாட்டாவே எடுத்துக்கிட்டு எங்கிட்ட கும்மியடிச்சுடறாங்க...எலிபண்ட் பாஸ்ல (Elephant Pass) எலிக்கென்ன வேலை...வர்ட்டா..

ஈழத்தமிழர்கள் மேல அப்படியென்ன அக்கறை, எவனுக்குமில்லாத அக்கறை ? ஈழப்பிரச்சினை பற்றி உனக்கென்ன தெரியும் ?

ஈழத்தமிழர்கள் மேல கொஞ்சம் பாசம் உண்டு...அது எப்படி உருவானது என்று சொல்லத்தெரியல...ஆனா டீப்பா ஈழப்பிரச்சினை பற்றி எனக்கு சுத்தமா தெரியாது...இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா வார்த்தைகள் புரிஞ்சுக்கிட்டிருக்கு...ஆங்கிலேய காலத்து யாழ் மேலாதிக்கம், அது சிங்கள மேலாதிக்கமாக உருவெடுத்தவிதம் என்று அங்கன இங்கன படிச்சு மண்டைகாய்ஞ்சு வந்துக்கிட்டிருக்கேன்...அங்கே இருக்கும் சாதீயம், அரசியல், பாஸிஸம் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள அவ்வளவாக ஆர்வம் காட்ட வேண்டாமுன்னு தான் இப்போதைக்கு நினைக்கிறேன்...அது அவங்க வீடு..பூட்டப்பட்ட வீடு...நான் பக்கத்துவீட்டுக்காரன்...அங்கன நடக்கற பங்காளிச்சண்டை என்னோட காதுல விழுது...அதை கேட்டு உள்வாங்கிக்கறேன்...அம்புட்டுத்தேன்...நான் போயி அதை தடுக்கவும் முடியாது...அதை நிறுத்தவும் முடியாது...அதனால கம்முனு குந்திக்கறது பெஸ்ட்..

நீ மட்டும் கும்மியடிக்கலாம்...அடுத்தவன் கும்மியடிச்சா தப்பா ?

கும்மி வேண்டாமுன்னு நான் சொன்னதே இல்லையே...குறிப்பா நாங்க பதிவுலகுக்கு வந்தப்போ (லக்கி / வரவணை ) எவனும் எங்களுக்கு பின்னூட்டம் போடாம நாங்களே முதல் பின்னூட்ட கயமை செய்து, போலீஸ்காரர்களாகி, அப்புறம் ஒரு சில பதிவர்கள் செய்யும் கொலைவெறி கயமைகளை பார்த்து டென்ஷனாகி ( உ.ம் இலவசக்கொத்தனார் / செல்வன்), நாங்களும் கும்மியடிக்க ஆரம்பிச்சோம்...என்ன ஒன்னு...அவங்க அவங்க பேருலே போடுவாங்க...நாங்க எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ, பிடல் காஸ்ட்ரோன்னு அதர் நேம்ல கும்மியடிப்போம்...பிடல் காஸ்ட்ரோ என்ன தமிழ் வலைப்பதிவரா, வந்து அப்ஜெக்ஷன் பின்னூட்டம் போட...இருந்தாலும் ஆபாச கும்மியை தவிருங்கன்னு தான் என்னோட திடீர் ஞானோதயம் சொல்லுது...பல பேர் அதை ஒத்துக்கிட்டாங்க...இன்னும் கொலைவெறியோட அடுத்தவங்களை தாக்கி வரும் பின்னூட்டங்கள் நிக்கல...நிக்காதுன்னு தான் நினைக்கிறேன்...பதிவர்கள் கொஞ்சம் மட்டுறுத்திக்கனும்...மற்றபடி எஞ்சாய் மாடி மக்களே...

கொரியாவுல என்ன தான் செஞ்சுக்கிட்டிருக்கே...கொரியா மொழி வேற பேசுவியாம் ?

கொரியாவுல கணினி துறை வேலை தான் செய்வாங்க...ப்ளாஸ்டர் ஆப் பாரீஸ்ல பொம்மையா செய்வாங்க...நான் புடுங்கற ஆணி பற்றியெல்லாம் சொல்லிக்கிட்டிருந்தா தூங்க ஆரம்பிச்சுருவீங்க...

கொரியா மொழி...ம்ம் தெரியும்...மூனு மாசம் படிச்சேன்...ரொம்ப ஈஸி...எழுத்துக்கூட்டி படிக்க பழகனும்...மூனே நாள்ல பழகலாம்னு சொல்றார் ஒரு நன்பர்.....அதுவும் இல்லாம ஒரு பத்து நாள் சுத்திவர கொரியாக்காரனுங்களோட ஹாஸ்பிட்டல் பெட்ல படுத்திருந்தேன்...கொரியா டி.வி முழுநேரமா பார்த்தேன்..அது போதாதா....தேவைன்னு வந்தா ஹிந்தி, கன்னடம் என்ன, எந்த லாங்குவேஜையும் படிக்கலாம்...பகுத்தறிவுவாதிகள் இதை ஒன்னும் சொல்லமாட்டாருன்னு நெனைக்கறேன்...

உன்னோட காதல் வாழ்க்கை பற்றி சொல்லிடேன்....தெரிஞ்சுக்கலாம்...

வலைப்பதிவுலயா ? என்னோட லவ்ஸ் பத்தியா ? வெளங்கிரும்...ஆனா இப்போதைக்கு நான் சிங்கிள் இல்லைன்னு மட்டும் சொல்லிக்கலாம்...சில வலைப்பதிவர்களுக்கு புல் டீட்டெயில்ஸ் தெரியும்....அவுங்க அதை எல்லாம் வெளிய சொல்லிக்கிட்டிருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்...இப்போ வலைப்பதிவு எல்லாம் படிக்க ஆரம்பிச்சிருக்கா....

வரவணை,லக்கி,உண்மைத்தமிழன்,ஓசை செல்லா, என்றென்றும் அன்புடன் பாலா, வ.வா.சங்கம், மிதக்கும் வெளி, பெயரிலி, விக்கி பசங்க, வீ.எஸ்.கே ஆன்மீகப்பதிவு, கானாபிரபா வோட ரேடியோஸ்பதி, துளசி டீச்சர், கண்மணி அக்கா, அபி அப்பா பதிவுகளுக்கு ரெகுலர் விசிட்டர்...உண்மைத்தமிழன் பதிவு நீளமா இருக்குன்னு,மிதக்கும்வெளி,பெயரிலி பதிவு புரியலை அப்படீன்னு இப்போதைக்கு கம்ளெயிண்ட் பன்றா..அது தவிர என்னுடைய பாஸிச ஆணாதிக்க சிந்தனை வலைப்பதிவை அடிக்கடி லுக் விட்டுக்கிட்டிருக்கா..அம்புட்டுதேன்...

வலைப்பதிவர்கள் பற்றி என்ன நினைக்கிறே ? வலை நட்பால ஏதாவது உருப்படியா நடக்குமா ?

நட்புன்னு வந்திட்டா அதுக்கப்புறம் என்ன வலை நட்பு, கொலை நட்புன்னு...எதுவா இருந்தாலும் நட்பு நட்புதான்யா...காலேஜ் போன...அங்க பக்கத்துல உட்கார்ந்தவன் காலேஜ் நன்பன்...வலைபதிய வந்தே...இங்க பக்கத்துல வலைப்பதிபவன் வலைநன்பன்...இதய சுத்தியோடு முழுமையான அன்பைப்பொழியும் பல நன்பர்கள்.....எல்லாரும் ஒரே தளத்தில் இல்லை...ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேற கருத்து...தமிழ், அரசியல், இடஒதுக்கீடு, பார்ப்பணீயம், மார்க்ஸியம், ம.க.இ.க, பாஸிஸம், பாவாடை நாடா, பெண்ணீயம், பெரியாரீயம் என்று ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான கருத்து...

நட்பென்று வரும்போது அந்த கருத்துக்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு முழுமையான நட்பை செலுத்தும் பல நன்பர்கள் எனக்கு...என்னுடைய நன்பர்கள் சிலர், தங்களுக்குள் வேற்றுமைகளை வைத்துள்ளார்கள்...

அவர்களுக்குள் பஞ்சாயத்து செய்வது என்னுடைய வேலையல்ல என்றாலும், டேமேஜ் வராமல் பேண்டேஜோடு அலைவதும் சமயங்களில் என்னுடைய வேலையாகிப்போகிறது...ஆயிரம் இருந்தாலும் எல்லாரும் நல்லாருக்கனும் என்ற எண்ணம்தான் என்னுடைய நன்பர்கள் என் மீது வரைமுறை இல்லாமல் பொழியும் அன்புக்கு காரணமாக இருக்கமுடியும்...இதுபோல் என்றும் இருக்கவேண்டும்....

வலைநட்பால உருப்படியா நடந்த விடயங்களை பட்டியல்போட்டா இந்த வலைப்பூ பத்தாது..

அடுத்த வெர்ஷன் ரிலீஸ்:
நீ தி.மு.க.வா, அ.தி.மு.கவா, தே.தி.மு.கவா ?

நீ உருப்படியா என்னதான் படிச்சிருக்கே ? வாசிப்பு இருக்கா உன்கிட்ட ?

எவ்ளோ நாள் இப்படியே ஓட்டறதா உத்தேசம் ?

வேற என்ன உருப்படியா பண்ணலாம்னு ஐடியா ?

ஜாதி பற்றி உன்னோட கருத்தென்ன ?

புதிய பதிவர்கள் பற்றி என்ன நினைக்கிற ?

இப்போதைய வலையுலகம் எங்கே போய்க்கிட்டிருக்கு ?

வணக்கம்...வணக்கம்...வணக்கம்...
(வகை வகையாக வைக்கிறேன்)...

Sunday, October 14, 2007

இனிய ரமலான் வாழ்த்துக்கள்..!!!

இஸ்லாமிய சகோதரர்களுக்கு - இனிய ரமலான் வாழ்த்துக்கள்...!!!



அனைவரின் உள்ளங்களிலும் அன்பும் மகிழ்ச்சியும் சகோதரத்துவமும் பெருகட்டும்..!!!

பிற்சேர்க்கை: ஆசிப் மீரான் பதிவில் நான் போட்ட பின்னூட்டம் :

அண்ணாச்சி, நாங்க பதிவு போட்டோமே, அதை பார்க்கலையா ? அது உங்களுக்கும் தான்...

அதுல போயி ஒரு பின்னூட்ட இம்போஸிசன் செய்து தண்டனையை அனுபவிக்கவும்...

அப்புறம் என்னுடைய இனிய நினைவுப்பக்கத்தில் இருந்து...

ரம்ஜான் - என்றவுடன் எனக்கு நியாபகம் வருவது நோம்பு கஞ்சி...நாங்க குடும்பம் அப்போ வளவனூர்ல இருந்தோம்...

பக்கத்துல இஸ்லாமிய குடும்பம், அவங்க வீட்ல என்னோட / என்னோட அன்னனோட சைஸ்ல ரெண்டு பசங்க...ஜாகீர், ஜகாங்கீர் ( சமீபத்துல 1985 ல)...

நோம்பு கஞ்சி என்று ரம்ஜான் சமயத்தில் கொடுக்கப்படும்...அதை அந்த பசங்க தூக்குவாளியில போய் வாங்கி வருவாங்கள்...

நானும் ஒரு நாள் எங்கம்மாவுக்கு தெரியாமல் சொம்பை எடுத்துக்குட்டு அவனோட ஓடிட்டேன்...

அங்கே மசூதி வாசலில் அண்டா வைத்து கொடுத்துக்கொண்டிருந்தாங்க, என்னுடைய சொம்பையும் நிரப்பினாங்க...

சூடாக இருந்தாலும் எப்படியோ புடிச்சுக்கிட்டு வீட்டுக்கு வந்தேன்...

முதலில் எங்கம்மா கையால் கடுமையான சாத்து வாங்கினேன்..ஏண்டா சொம்பை எடுத்துக்கிட்டு போனே என்று...

பிறகு எங்கம்மா அந்த கஞ்சியை குடித்து பார்த்தது...பூண்டு எல்லாம் போட்டு ஒருவித டேஸ்டாக அது இருக்கவும், அடுத்த வருஷம் அதுவே சொம்பை கொடுத்து நோம்பு கஞ்சி வாங்கிட்டுவாடா என்று அனுப்பியது...

அப்புறம் அடிக்கமாட்டியே....என்று இழுத்து கேள்விகேட்டு சந்தேகப்பார்வை பார்த்தபடியே போய் வாங்கிவந்தென்...

வீட்டில் எல்லோரும் ரசித்து குடித்தோம்...

பிறகு பக்கத்துவீட்டு பீவிக்கிட்ட விசாரித்து, நோம்பு கஞ்சி எப்படி வைப்பது என்று தெரிஞ்சுக்கிட்டது எங்கம்மா...

மாதத்தில் ஒருமுறையாவது அந்த சுவைக்காக நோம்பு கஞ்சி - இப்போதும் வீட்டில் செய்துக்கிட்டிருக்கு...

ரொம்ப நீளமா போட்டிட்டனோ...

Friday, October 12, 2007

தோழர் தமிழச்சி கைவைக்கும் இடம்



எங்க ஊர்ல நான் ஒருமுறை தேன்கூடு அழிக்கப்போனப்போ...போர்வை கொண்டுபோக மறந்துட்டேன்...கொட்டித்தள்ளிருச்சு...தேனீ கொட்டினா ரொம்ப வலிக்கும்...பார்த்து புத்தியா பொழைச்சுக்கோ தாயி...!!! ( என்ன எதிர்வினை வரப்போவுதோ தேவகவுடா )

(நாத்திகனாகிய நான் எப்படி தேவுடா / ஆண்டவான்னு கூப்பிடுறது...அதான் தேவகவுடான்னேன்...)

நீங்களே ஒரு விருது...உங்களுக்கெதுக்கு விருது...



திரு.எம்.எம்.எஸ்வி அவர்களுக்கு சரியான விருதுகள் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை பதிவர்கள் வெளிப்படுத்திவருகிறார்கள்...

நீங்களே தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய விருது...உங்களுக்கு எதுக்குங்க விருது...!!!!!

Thursday, October 11, 2007

இங்கே மதன் டவுசர் கிழிக்கப்படும் !!!!

தமிழர்கள் வரலாறு இல்லாத வெறும்பயல்கள் என்று உளறிக்கொட்டிய மதன் டவுசர் கடுமையாக கிழிக்கப்பட்ட இடம், வரலாறு.காம்.

திரு.டோண்டு ராகவன் அவர்கள், செந்தழல் ரவியும், வரவணையானும் எழுதப்போகும் தமிழர் வரலாற்றை காண ஆவலாயுள்ளதாக அவருடைய பதிவின் பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தார்..

வெத்துப்பயல், வெறும்பயலான நான், அவரிடம் சொன்னது என்னவென்றால், அய்யா, ஏற்கனவே தமிழர் வரலாற்றை பல்லாயிரக்கணக்கான அறிஞர்கள் ஆய்ந்தறிந்து எழுதியுள்ளார்கள், மதன் அவர்கள் அதை படித்தால் போதுமானது என்று தெரிவித்திருந்தேன்...

திரு.இரா கலைக்கோவன் அவர்களின் அருமையான கட்டுரை மதன் டவுசரை கிழித்ததோடல்லாமல் வரவணையான் பாணியில் "அம்மண குண்டி டும்மலக்கா" என்று கும்மியும் அடித்துள்ளது...

இந்த கட்டுரையை திரு.தீவு அவர்களின் பதிவில் படித்து, வியந்து, யாருடைய அனுமதியையும் கேட்காமல் என்னுடைய பதிவில் எடுத்தாளவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி ( அன்பர் திரு.கலைக்கோவன் அணுமதிக்க மாட்டாரா என்ன...) இங்கே பதிகிறேன்...

அலுவலகத்தில் படிக்க நேரம் இல்லாதவர்கள், படக்கென ப்ரிண்ட் பட்டனை அமுக்கி, ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு, வீட்டில் மல்லாக்க படுத்துக்கொண்டோ, குப்புற படுத்துக்கொண்டோ, வாசித்துத்தொலைக்கவும்...தமிழர்களாக பிறந்து தொலைத்த நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டியது இது...!!!

கட்டுரைக்கு போவோம் வாருங்கள்...

உண்மைகள் சுடும் - மதனுக்கும் நண்பர்களுக்கும் விளக்கம்

இரா. கலைக்கோவன்

அன்பிற்கினிய நண்பர்களுக்கு,

திரு. வெ.இறையன்புவின் கேள்விக்குத் திரு. மதன் ஆனந்த விகடன் 07.03.2007 இதழில் தந்திருந்த மறுமொழியைப் படித்து உளம் வருந்தியவர்களுள் நானும் ஒருவன். 'தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள்' எனும் நூல் தயாரிப்புப் பணியில் முழுமையாக ஆழ்ந்திருந்தமையால் என்னால் உடன் கருத்துரைக்கக் கூடவில்லை. வரலாறு மின்னிதழ் ஆசிரியர்களுள் ஒருவரான திரு. ச.கமலக்கண்ணன் திரு. மதனுக்கு எழுதிய வெளிப்படையான மடலும் அந்த மடலுக்குத் திரு. மதன் 25.04.2007 ஆனந்த விகடனில் தந்திருந்த மறுமொழியும் படித்தேன். திரு. மதனின் முதல்மொழி, மறுமொழி இவற்றையும் திரு. ச.கமலக்கண்ணனின் வெளிப்படையான மடலையும் படித்து உலகளாவிய நண்பர்களான நீங்கள் தெரிவித்திருந்த கருத்துக்களைப் பார்க்கும் வாய்ப்பும் கிட்டியது.

திரு. மதனுக்குத் தமிழர் வரலாறு குறித்த உண்மைகளை எழுதவேண்டும் என்று கருதிய நிலையில், இந்த வாய்ப்பு மாற்றத்தைத் தந்தது. திரு. மதனுக்குத் தனிப்பட எழுதுவதைவிட, அவர் கருத்துக்களை நண்பர்கள் மன்றில் ஆய்வது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. அதனால்தான், திரு. மதனின் இரண்டு மறுமொழிகளையும் படித்து வரலாறு மின்னிதழுடன் தொடர்புகொண்ட அனைவரையும் நண்பர்களாய் விளித்து இந்த மடலைத் தொடங்கியுள்ளேன்.

திரு. ச.கமலக்கண்ணனின் மறுமொழியை, 'உணர்ச்சிப் பெருக்கில் தம்மைத் தாக்கிய' மடலாகவே திரு. மதன் பார்த்திருப்பது துன்பம் தருகிறது. அந்த மடலில், கல்வெட்டுகளைக் கொண்டு ஓர் அரச மரபினர் (பழுவேட்டரையர்) தொடர்பான வரலாறு உருவாக்கப்பட்டிருப்பதையும் சங்க இலக்கியப் பாடல்கள் தமிழரின் வாழ்வியல் சுட்டும் உண்மையையும் திரு. ச.கமலக்கண்ணன் வெளிப்படுத்தியிருந்தார். 'எந்த ஆதாரங்களை வைத்துக்கொண்டு நாம் வரலாற்றை எழுதமுடியும்?' என்று திரு. மதன் கேட்டிருந்த கேள்விக்குத்தான் திரு. கமலக்கண்ணன் தாம் நன்கறிந்த இந்த இரண்டு சான்றுகளைத் தந்திருந்தார். இது போல பல சான்றுகள் உள்ளன. திரு. மதனுக்கு மட்டுமல்லாது, தமிழறிந்த அனைத்து நண்பர்களுக்கும் இவை தெரியவேண்டும் என்பதற்காகவே இந்த மடல் தொடர்கிறது. இது உணர்ச்சிப் பெருக்கில் உருவாகும் மடல் அன்று. உண்மைகளை உலகத் தமிழர்கள் முன் நிறுத்த மேற்கொள்ளப்படும் ஓர் எளிய முயற்சி.

07.03.2007 ஆனந்த விகடன் இதழில் திரு. வெ. இறையன்பு, 'சோழப் பேரரசு' பற்றிய ஆதாரபூர்வ நூல் எழுதுமாறு திரு. மதனைக் கேட்டிருக்கிறார். 'சோழப் பேரரசு' பற்றித் தமிழில் திரு. வை. சதாசிவ பண்டாரத்தாரும் முனைவர். மா. இராசமாணிக்கனாரும் ஆங்கிலத்தில் திரு. நீலகண்ட சாஸ்திரியாரும் அருமையான ஆதாரபூர்வமான நூல்களை ஏற்கனவே எழுதியுள்ளனர். திரு. சாஸ்திரியாரின் நூல் தமிழிலும் வெளிவந்துள்ளது. திரு. கே.கே.பிள்ளை, 'தமிழக வரலாறும் பண்பாடும்' என்ற நூலில் சோழர்களைப் பற்றி மிக விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் வரலாற்று வல்லுநர்க் குழு, 'சோழப் பெருவேந்தர் காலம்' என்ற தலைப்பில் இரண்டு தொகுதிகள் வெளியிட்டுள்ளது.

சோழர்கால வருவாய் அமைப்புப் பற்றித் திரு. ப.சண்முகமும் சோழர்கால நில உடைமை பற்றித் திரு. கரோஷிமாவும் சோழர்கால வருவாய்ப் பிரிவுகள் பற்றித் திரு. எ.சுப்பராயலுவும் சோழர்கால வணிகம் பற்றித் திரு.கனகலதா முகுந்தும் சோழர்காலப் பொருளாதாரம் பற்றித் திரு. அப்பாதுரையும் சோழர்காலப் படிமங்கள் பற்றி முனைவர் இரா.நாகசாமியும் சோழர்கால நீர்ப்பாசனம் பற்றித் திரு. சீனிவாசனும் சோழர்கால ஆடற்கலை பற்றி இரா.கலைக்கோவனும் சோழர்காலக் கோயில் பொருளியல் பற்றித் திரு. மெ.து.இராசுகுமாரும் சோழர்காலக் குடியேற்றங்கள், சோழர்காலக் கட்டடக்கலை, சோழர்காலச் சிற்பக்கலை பற்றி முனைவர் மு.நளினியும் இந்து மகா சமுத்திரத்தில் நிகழ்ந்த வணிக நடவடிக்கைகள் குறித்துப் பல அறிஞர்களும் (டெய்ஷோ பல்கலைக்கழகம்) மிக விரிவான நூல்களை, ஆய்வேடுகளைப் படைத்துள்ளனர்.

சோழப்பேரரசு குறித்து இருநூற்றுக்கும் மேற்பட்ட தரமான ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை வெளியிட்டுள்ள 'அருண்மொழி' என்ற நூல் சோழப் பேரரசின் பல பரிமாணங்கள் குறித்த இருபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளைக் கொண்டுள்ளது. தமிழகக் கடல்சார் வரலாறு, தமிழகத் துறைமுகங்கள், The Political Structure of Early and Medieval South India, Peasent State and Society in Medieval South India என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் சோழப் பேரரசு குறித்தும் சோழச் சமுதாயம் குறித்தும் எத்தனை எத்தனை நூல்கள் உள்ளன.

திரு. வெ.இறையன்பு இவை பற்றி அறியாதவர் அல்லர். ஆய்வாளர்களுக்காகவும் வரலாற்று நோக்கர்களுக்காகவும் எழுதப்பட்ட இந்நூல்களை அனைத்துத் தள மக்களும் படித்து மகிழ்தல் இயலாது எனக் கருதியே, 'வந்தார்கள் வென்றார்கள்' அமைப்பில், சோழப் பேரரசு குறித்து யாவரும் படித்து மகிழக்கூடிய, அனைத்துத் தள மக்களையும் சென்று சேரக்கூடிய ஒரு நூலைத் திரு. மதன் எழுதவேண்டும் என அவர் வேண்டுகோள் வைத்தார். எதனையும் எளிமைப்படுத்திச் சுவைபட வழங்கவல்ல திரு. மதனின் ஆற்றலில் திரு. இறையன்புவிற்கு இருக்கும் நம்பிக்கையை இந்த வேண்டுகோள் காட்டுவதாகக் கொள்ளலாம்.

இந்த வேண்டுகோளைத் திரு. மதன் எதிர்கொண்டவிதம்தான் சிக்கலை உண்டாக்கிவிட்டது. 'எந்த ஆதாரங்களை வைத்துக்கொண்டு நாம் நம் வரலாற்றை எழுதமுடியும்?' என்று திரு. வெ. இறையன்புவிற்கு எதிராகக் கேள்வி வைத்ததைவிட, தமிழ்நாட்டின் புகழ்பெற்ற வரலாற்றறிஞர்களை, கல்வெட்டறிஞர்களை அவர் தொடர்புகொண்டு, ஆதாரங்கள் பற்றிக் கேட்டுத் தெளிந்திருக்கலாம். 'நான் தமிழ் ஆய்வாளனும் அல்ல; தொல்பொருள் ஆராய்ச்சியாளனும் அல்ல' என்று தம்முடைய 25.04.2007 மறுமொழியில் ஒப்புக்கொண்டிருப்பவர், முதல் மொழியைத் தரும் முன்னரே இவற்றை உணர்ந்து, உரியவர்களைக் கலந்து மறுமொழி அளித்திருந்தால், திரு. மதனின் மீது நாம் வைத்திருந்த நம்பிக்கையும் மதிப்பும் கூடியிருக்கும். தெரியாத துறைகளைப் பற்றி மறுமொழி அளிக்கும்போது எச்சரிக்கை தேவை. எந்த ஒரு மனிதனும் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்க முடியாது. தெரியாமல் இருப்பது குற்றமும் அன்று. ஆனால், தெரியாத நிலையில், 'தெரியாது' என்பதுதான் மறுமொழியாக இருக்கவேண்டுமே தவிர, எல்லாம் தெரிந்தது போல எழுதுதலும் மொழிதலும் சான்றாண்மையன்று.

இனி, திரு. மதனின் இரண்டு மறுமொழிகளையும் விரிவாகவே பார்க்கலாம். இவை, 'வரலாறு' பற்றி அறிந்துகொள்ளவும் அநுபவித்துத் துய்க்கவும் நம்மவர்க்குப் பெரிதும் உதவும். 07.03.2007 இதழில், 'தமிழ் மன்னர்களைப் பற்றிப் பாடல்களும் கல்வெட்டுகளும்தான் மிஞ்சியிருக்கின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய பாடல்கள் அனேகமாக எதுவும் தற்போது இல்லை' என்று திரு. மதன் எழுதியுள்ளார். இந்த இரு கூற்றுகளுமே பிழையானவை. தமிழ் மன்னர்களைப் படம்பிடிக்க அவர்கள் விட்டுச் சென்ற கோயில்கள் உள்ளன. பாடல்களும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் எப்படி முதன்மையான வரலாற்றுச் சான்றுகளாகக் கருதப்படுகின்றனவோ அது போலவே கோயில்களும் வரலாற்றுச் சான்றுகளாகவே விளங்குவதை யாரே மறுக்க முடியும்?

ஒரு கோயில், அதை உருவாக்கிய மன்னனின் ஆளுமை, திறன், இயல்புகள், அக்கால மக்களின் கலைநோக்கு, கலைஞர்களின் சிந்தனை வளம், சமுதாயச் சார்புகள் எனப் பலவும் சொல்லுவதாக காஞ்சிபுரம் இராஜசிம்மேசுவரம், மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயில், தஞ்சாவூர் இராஜராஜீசுவரம், கங்கைகொண்ட சோழபுரத்துச் சோழீசுவரம் கொண்டு தெளியலாம். ஒரு கோயில் இவ்வளவு செய்திகளை வெளியிடமுடியுமா என்று கருதுவார் தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் பற்றி வெளியாகியிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளைப் படிக்கவேண்டும். திரு. பி.வெங்கட்ராமனின், 'இராஜராஜேசுவரம்', மு.நளினியின், 'இராஜராஜீசுவரம் புதிய உண்மைகள்', இரா.கலைக்கோவனின், 'கோயில்களை நோக்கி . . .' இவை சிறந்த எடுத்துக்காட்டுகளாய் அமையும்.

திரு. சுந்தர் பரத்வாஜின் கொடையால் சுவாமிமலைக்கு அருகிலுள்ள வலஞ்சுழிக் கோயில் ஒரு நூலாக வடிவம் எடுத்திருப்பதை நண்பர்கள் அறியவேண்டும். ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட சோழ நாட்டு ஊர்கள் இந்நூலால் வரலாற்று வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சேத்ரபாலர் பற்றிய சிந்தனை வளர்ச்சியை இந்நூல் ஆராய்ந்துள்ளது. அப்பர் காலத்திலிருந்து வளர்ந்து பரந்த ஒரு கோயில் சமுதாயத்தை எப்படி அணைத்திருந்தது என்பதை 'வலஞ்சுழி வாணர்' படித்தவர்கள் அறியமுடியும்.

கோயில்களினும் சிறந்த வரலாற்றுக் களங்கள் இல்லை. இக்கோயில்களில் உள்ள சிற்பங்கள், ஓவியங்கள், கட்டடக்கலைக் கூறுகள் இவை அவ்வக்கால வாழ்வியல் பின்னணிகளை மிக அருமையாக எடுத்துவைக்கின்றன. கோயில் பூதவரிகளில் (சுவரும் கூரையும் இணையும் பகுதியில் உள்ள பூதங்களின் சிற்பத்தொகுதி) பல்துறை வரலாற்றுத் தரவுகள் புதைந்து கிடப்பதை அநுபவித்தவர்கள் மட்டுமே உணரமுடியும். தமிழர்கள் தங்கள் வரலாற்றை எழுதியும் பாடியும் செதுக்கியும் வைத்துள்ளார்கள். தெரிந்து கொள்வதும் தேர்ந்து கொள்வதும் நம் திறமை.

'கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய பாடல்கள் அநேகமாக எதுவும் தற்போது இல்லை' என்று திரு. மதன் தம்முடைய முதல் மறுமொழியில் குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பிழை. உலகம் போற்றும் கல்வெட்டு மேதையான திரு. ஐராவதம் மகாதேவன் தம்முடைய, 'Early Tamil Epigraphy' என்ற நூலில் சங்கத் தமிழ் மன்னர்களைக் குறிக்கும் தமிழ்க் கல்வெட்டுகளின் பாடங்களையும் காலத்தையும் குறிப்பிட்டுள்ளார். மாங்குளத்தில் படியெடுக்கப்பட்டிருக்கும் அக்கல்வெட்டுகள் பாண்டியன் நெடுஞ்செழியனின் பெயரைத் தருகின்றன. அவற்றின் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு. பாண்டியர்களைப் பெயர் சுட்டிக் குறிப்பிடும் காசுகளும் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் சில கி.மு. இரண்டாம் நூற்றாண்டின. தினமலர் ஆசிரியர் திரு. இரா. கிருஷ்ணமூர்த்தி அவை பற்றி நூல் எழுதியுள்ளார். அசோகரின் கிர்னார் கல்வெட்டு, கி.மு. மூன்றாம் நூற்றாண்டளவில் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருந்த மன்னர் மரபுகளாகச் சோழர்களையும் பாண்டியர்களையும் சத்யபுத்திரர்களையும் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டுகள் குறிப்பிடும் மன்னர்களைப் பற்றிய பாடல்கள் சங்க இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. உண்மைகள் இப்படியிருக்க, 'கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய பாடல்கள் அநேகமாக எதுவும் தற்போது இல்லை' என்று திரு. மதன் எழுதுவது எந்த வகையில் நியாயம்?

சிறந்த தமிழறிஞர்களான மு.வரதராசனார், மா.இராசமாணிக்கனார், வ.சுப.மாணிக்கனார், தமிழண்ணல் இவர்கள் தங்களுடைய தமிழ்மொழி இலக்கிய வரலாறு பற்றிய நூல்களிலும் கால ஆராய்ச்சி பற்றி நூல்களிலும் சங்க காலத்தைக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையென வரையறுத்துள்ளனர். அண்மையில் கிடைத்துள்ள பல்வேறு அகழாய்வுச் சான்றுகளின் அடிப்படையில் தொல்லியல் அறிஞர் கா.இராஜன், சங்ககாலம் கி.மு. நான்காம் நூற்றாண்டுவரை கொண்டு செல்லத்தக்கது என்று மிகத் தெளிவாக அறிவித்துள்ளார் (தொல்லியல் நோக்கில் சங்க காலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு).

திரு. சு.இராசவேலு, திரு. கோ. திருமூர்த்தி இருவரும் எழுதியுள்ள, 'தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழாய்வுகள்' தமிழ்நாட்டில் நிகழ்ந்த 98 அகழாய்வுகளின் முடிவுகளைத் தெரிவிக்கின்றன. இந்நூலில், 'இந்தியாவில் தமிழ்நாட்டு அகழாய்வுகளில்தான் மட்பாண்டங்களில் இத்தகைய எழுத்துப் பொறிப்புகள் பெருமளவில் கிடைத்துள்ளன. இது தமிழகத்தில் அசோகருக்கு முற்பட்ட காலத்திலேயே தமிழக மக்கள் எழுத்தறிவு பெற்று விளங்கி இருந்தனர் என்ற உண்மையை' விளக்குகிறது என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இக்கருத்தை வலியுறுத்தி, 'சங்க காலத்தில் அறிவொளி இயக்கம்' என்று திரு. ஐராவதம் மகாதேவன் ஒரு கட்டுரையை எழுதி வெளியிட்டுள்ளார்.

'தமிழனிடமிருந்துதான் எழுத்துமுறை இந்தியாவில் பரவிற்று' எனும் உண்மையைக் கண்டுபிடிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக உறுதிப்படுத்துக் கொண்டிருக்கும் இந்த நல்லோரையில், 'கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய பாடல்கள் அநேகமாக எதுவும் தற்போது இல்லை' என்னும் தவறான கருத்தொன்றைப் பொதுமக்கள் பலரும் படிக்கும் ஓர் இதழில் திரு. மதன் எழுதலாமா? தாம் ஒரு தமிழ் ஆய்வாளர் அல்லர் என்ற உண்மையை இந்தக் கருத்தை எழுதும் முன் அவர் உணர்ந்திருக்க வேண்டாமா?

பேராசிரியர்கள் திரு. இரா. இளங்குமரன், திரு. தமிழண்ணல், திரு. பொன். கோதண்டராமன், திரு. க.ப.அறவாணன், திரு. க.நெடுஞ்செழியன், திரு. சிற்பி பாலசுப்பிரமணியன், திரு. இ.சுந்தரமூர்த்தி எனப் பல தமிழறிஞர்கள் இன்றும் நம்மிடையே தமிழ் பற்றித் தகுந்தன கூறக் காத்திருக்கும்போது, அவர்கள் அநுபவத்தை, அறிவைப் பயன்படுத்திக் கொள்ளாமல், ஒரு பிழையான தகவலை மக்களுடன் பகிர்ந்துகொள்வது, 'வந்தார்கள் வென்றார்கள்' போன்றதொரு நூலை எழுதிய திரு. மதனுக்குப் பொருந்துமா என்பதை உலகளாவிய தமிழ் நண்பர்களான நீங்கள்தான் முடிவுசெய்யவேண்டும்.

திரு. மதன் 07.03.2007 ஆனந்த விகடனில், 'புலவர்களுக்குத் தமிழ் மன்னர்கள் நிறைய மதுவும் பொற்காசுகளும் தந்தது உண்மை. விளைவு . . . உணர்ச்சி வசப்பட்ட புலவர்கள் அதீதமான கற்பனை செய்து மன்னர்களைப் பாராட்டிப் பாடல்களை எழுதிக் குவித்தார்கள்' என்று கூறிக் கரிகாலனின் வடபுலப் படையெடுப்பைப் பற்றிச் சிலப்பதிகாரம் தரும் தரவுகளை எடுத்துக்காட்டாக முன்வைத்து, பாடல் மிகையாகப் புகழ்வதாகக் கூறி, 'உண்மையில் கரிகாலன், தெலுங்குப் பகுதிகளை (ஆந்திரம்) தாண்டிப் போனதில்லை' என்று கருத்துரைத்துள்ளார்.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்றெல்லாம் இன்றளவும் உலகம் ஒப்பும் உயரிய கருத்துக்களை விதைத்துச் சென்ற தமிழ்ப் புலவர்களை இதைவிடக் கீழ்மையாக யாரும் மதிப்பீடு செய்ய முடியாது. மதுவுக்கும் பொற்காசுகளுக்கும் உணர்ச்சி வயப்பட்டுப் புலமையை விற்றவர்களா தமிழ்ப்புலவர்கள்? சங்க இலக்கியங்களான தொகை நூல்களிலும் பத்துப்பாட்டிலும் மன்னர்களைப் பாடியவர்கள் உணர்ச்சி வயப்பட்டவர்களா? அதீதக் கற்பனையாளர்களா? திருமுருகாற்றுப்படை தவிர்த்த ஆற்றுப்படை நூல்கள் அனைத்தும் மன்னர்களைப் பற்றியவைதான். இந்த அற்புதமான வரலாற்றுக் களஞ்சியங்கள் புலவர்களின் அதீதக் கற்பனைகளா? ஆற்றுப்படை நூல்களை ஆழமாக ஆராய்ந்து, அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் தரவுகளையெல்லாம் கள ஆய்வுகள் மூலம் உண்மை எனக் கண்டறிந்து பேராசிரியர் மா.இராசமாணிக்கனார் எழுதிச் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் பத்துப்பாட்டு ஆராய்ச்சியை திரு. மதன் ஒருமுறையாவது படிக்கவேண்டும். அப்போதுதான் பத்துப்பாட்டு இலக்கியங்களைப் பாடிய புலவர்கள் எத்தகு வரலாற்று உணர்வுடன் அவற்றைப் படைத்திருக்கிறார்கள் என்பதை உணரமுடியும்.

புறநானூற்றில் உள்ள நானூறு பாடல்களும் புலவர்கள் மன்னர்களைப் போற்றிப் பாடியவைதான். இவை மது மயக்கத்தில் உணர்ச்சி வயப்பட்ட புலவர்களின் அதீத கற்பனைகளா? பங்காளிகளான சோழ மன்னர்களுக்குள் நிகழவிருந்த போரைத் தவிர்க்க முயன்ற புலவர், அதியமானின் தூதுவராகச் சென்ற அவ்வையார், பேகனுடன் அவன் துணைவி கண்ணகியை இணைத்து வைக்க முயன்ற புலவர் இவர்கள் எல்லாம் பொன்னுக்கும் மதுவுக்கும் கீழ்ப்பட்டா இத்தகு அரிய பணிகளைச் செய்தனர்?

திரு. மதன் கூறும் கரிகாலனின் வடபுலப் படையெடுப்பை எடுத்துக்கொள்வோம். இந்தச் செய்தி சிலப்பதிகாரத்தில் இந்திரவிழவூரெடுத்த காதையில் கூறப்படுகிறது. இதை ஏன் மிகை என்று கொள்ளவேண்டும்? இது மிகை என்றால், அதே சிலப்பதிகாரம் கூறும் சேரன் செங்குட்டுவனின் வடபுலப் படையெடுப்பும் அன்றோ மிகையாகிவிடும்?

இந்த இரு நிகழ்ச்சிகளையும் பாடிய துறவி இளங்கோவடிகளுக்கு மதுவும் பொற்காசுகளும் தந்து அதீதக் கற்பனையில் எழுதச் செய்தவர் யார்? சிலப்பதிகாரத்தை மேலோட்டமாகப் படித்தவர்கள்கூட எத்தகைய அரியதொரு வரலாற்று ஆவணம் அந்த இலக்கியம் என்பதை அறிவார்கள். அந்த இலக்கியத்தில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகள்கூட மிகை, அதீதக் கற்பனை என்றால், தமிழ்நாட்டு வரலாறே 'மிகை'தான்.

சங்க அரசர்களுள் வடபுலப் படையெடுப்பை நிகழ்த்திய ஆற்றலாளர்களாய்க் குறிக்கப்படுபவர்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், கரிகால்சோழன் இவர்கள் மூவர்தான். இது அதீத கற்பனையென்றால், ஏன் இந்தக் கற்பனைப் பெருமைகளை மற்ற மன்னர்களுக்குப் புலவர்கள் தரவில்லை? அவர்களும் தாங்கள் பாடிய மன்னர்களிடம் மதுகுடித்துப் பொற்காசுகள் பெற்று உணர்ச்சி வயப்பட்டவர்கள்தானே? பதிற்றுப்பத்தின் பிற சேர வேந்தர்கள் ஏன் வடபுலம் ஏகவில்லை? சோழன் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, இளஞ்சேட்சென்னி, பாண்டியப் பெருவேந்தர்கள் நெடுஞ்செழியன், முதுகுடுமிப் பெருவழுதி, அறிவுடைநம்பி இவர்கள் எல்லாமும் வடபுலம் போயிருக்கலாமே? இவர்களைப் பாடிய புலவர்களும், திரு. மதனின் கூற்றுப்படி, பாவம், மதுகுடித்துப் பொற்காசுகளைப் பெற்றவர்கள்தானே?

'உண்மையில் கரிகாலன் தெலுங்குப் பகுதிகளைத் தாண்டிப் போனதில்லை' என்கிறார் திரு. மதன். அப்படியே வைத்துக் கொள்வோம். இளங்கோ மது மயக்கத்தில் பொற்காசுகளை முடிந்துகொண்டு உணர்ச்சிவயப்பட்டு உளறிய உளறலாகவே கரிகாலனின் வடபுலப் படையெடுப்பைக் கருத்திக்கொள்வோம். கரிகாலன் தெலுங்குப் பகுதிகளுக்குப் போனமைக்கு என்ன சான்று உள்ளது? கரிகாலன் தெலுங்குப் பகுதிகளைப் போராடி வென்றாரா? எந்த மன்னரிடமிருந்து அப்பகுதிகளை வென்றார்? எவ்வளவு காலம் அங்கு இருந்தார்? இதற்கெல்லாம் அம்மன்னரது கல்வெட்டுகளோ, செப்பேடோ அல்லது வேறேதேனும் சான்றுகளோ உள்ளனவா? அச்சான்றுகளில் ஒன்றையேனும் திரு. மதன் தரமுடியுமா? 'உண்மையில்' என்று உறுதியாகச் சொல்லும் திரு. மதன், இந்த உண்மைக்குப் பின் நிற்கும் கரிகாலனின் ஆந்திரப் படையெடுப்புப் பற்றி ஆதாரங்களோடு எழுதினால் நாம் எவ்வளவு தெளிவுபெற முடியும்!!

ஒரு தமிழ் மன்னன் தமிழ்நாடு தாண்டிப் படையெடுப்பதோ பிற பகுதிகளை வெல்வதோ இயலாத செயலன்று. நூற்றுக்கணக்கில் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் இலக்கியங்களும் கோயில்களும் சான்றுகளாய் நின்று தமிழ் மன்னர்களின் அயலகப் படையெடுப்புகளையும் வெற்றிகளையும் உறுதிப்படுத்துகின்றன.

பாதாமியில் முதலாம் நரசிம்மவர்மரின் கல்வெட்டு இல்லையென்றால் அவருடைய வாதாபிப் படையெடுப்பைக்கூட அதீதக் கற்பனையாக்கி விடுவார்கள் நம்முடைய நண்பர்கள். முதலாம் இராஜேந்திரனைக் குறிப்பிடும் ஹொட்டூர்க் கல்வெட்டு இல்லையென்றால் இராஜேந்திரனின் இரட்டைபாடிப் படையெடுப்பும் கற்பனையாகிவிடும். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மன்னன் (முதலாம் நரசிம்மவர்மன்) இலங்கைக்கும் வாதாபிக்கும் படையெடுக்க முடியுமென்றால், கி.முவின் இறுதியிலோ கி.பியின் தொடக்கத்திலோ வாழ்ந்த தமிழ் மன்னர்கள் ஏன் இலங்கைக்கும் வடபுலத்திற்கும் படை நடத்தியிருக்கக்கூடாது? இலங்கை வரலாறு பேசும் மகாவம்சம் கி.மு முதல் நூற்றாண்டில் தமிழரசர் போரை இலங்கைச் சந்தித்ததாகக் கூறுவது இங்கு நினைக்கத்தக்கது.

ஒரு தரவை அதீதக் 'கற்பனை' என்று தீர்மானிக்கும் முன் அத்தரவு இடம்பெற்றுள்ள மூலத்தின் உண்மைத் தன்மையை ஆராயவேண்டும். சிலப்பதிகாரம் தமிழ்நாட்டின் தவப்பேறாய் விளைந்த இலக்கியம். படைக்கப்பட்ட காலத்தின் மக்கள் வாழ்க்கை பேசும் இலக்கியம். 'இலக்கியம்' என்றால் அங்குக் கற்பனைதான் தாண்டவமாடும் என்ற சிந்தனையோடு எல்லா இலக்கியங்களையும் அணுகுதல் முறையாகாது. இந்தத் தவறான போக்கால்தான் இன்றளவும் சங்க இலக்கியங்கள் வரலாற்றாசிரியர்களின் நிறைவான பார்வையைப் பெறாமல் உள்ளன.

ஒரு தரவை ஒரு வரலாற்றாசிரியன் சொல்வதற்கும் ஓர் இலக்கிய ஆசிரியன் சொல்வதற்கும் வேறுபாடுகள் இருக்கும். அந்த வேறுபாடுதான் இலக்கியத்தை 'இலக்கியமாக' அடையாளப்படுத்துகிறது. மெலிதான கற்பனைப் பூச்சுகள் வரலாற்றின் மேல் படியும்போது அது இலக்கியமாகிறது. சில இலக்கியங்களில் தேவைக்கேற்ப கற்பனை இடம்பெறவில்லை என்பது இலக்கிய நுகர்ச்சியுடைய அனைவரும் அறிந்த உண்மையாகும்.

ஓர் இலக்கியம் சொல்வதை ஓர் எழுத்தாளர் எடுத்தாளும்போது அது எப்படியெல்லாம் மாறக்கூடும் என்பதற்குத் திரு. மதன் தம்முடைய இரண்டாம் மொழிவின் வழிச் சான்றாகிறார். 'பொருநராற்றுப் படையில் ஒரு புலவர், தங்கக் கோப்பையில் தொடர்ந்து ஒயின் அருந்தியதால் பெருமகிழ்ச்சி ஏற்பட்டாலும் கூடவே என் கை, கால்கள் நடுங்கி உடல் தள்ளாட ஆரம்பித்தது என்கிறார்' என்று திரு. மதன் 25.04.2007 ஆனந்த விகடன் மொழிவில் கூறியுள்ளார். அவர் சொல்லும் இந்தச் செய்தி பொருநராற்றுப்படையில் எப்படி இடம்பெற்றுள்ளது என்பதைப் பார்ப்போம்.

'போக்கில் பொலங்கலம நிறையப் பல்கால்
வாக்குபு தரத்தர வருத்தம் வீட
ஆர வுண்டு பேரஞர் போக்கிச்
செறுக்கொடு நின்ற காலை மற்றவன்
திருக்கிளர் கோயில் ஒரு சிறைத் தங்கித்
தவஞ்செய் மாக்கள் தம்முடம் பிடாஅ
ததன்பயம் எய்திய வளவை மான
ஆறுசெல் வருத்தம் அகல நீக்கி
அனந்தர நடுக்கம் அல்ல தியாவதும்
மனங்கவல் பின்றி மாழாந் தெழுந்து'

'பொன்வட்டில் நிறையுமாறு வார்த்துத் தந்தபோதெல்லாம் வழிநடை வருத்தம் போகும்படி நிறையப் பருகி, மன்னன் அரண்மனையில் உறங்குதற்கேற்ற இடத்தில் இருந்து, தவம் செய்தவர், தம்முடைய இப்பிறவி உடலுடனேயே அத்வைதத்தின் பயனைப் பெற்றாற் போன்று, வழிநடை தந்த வருத்தத்தை என்னிடமிருந்து அறவே நீக்கிய கள்ளின் களிப்பால் உண்டான மெய்நடுக்கம் அன்றி, மனக்கவலை காரணமான மெய் நடுக்கம் இன்றி நன்கு துயில்கொண்டான்' என்கிறார் புலவர்.

நெடுந்தொலைவு நடந்து வந்த துன்பம் தீரத் தரப்பட்ட பானத்தைத் தரத்தரப் பருகிய பொருநன் களைப்பும் கவலையும் நீங்கிக் களிப்படைவதாய் பாடல் அடிகள் சொல்கின்றன. பாடலில், தரப்பட்ட பானம், 'இன்னது' என்ற சுட்டல்கூட இல்லை. உரையாசிரியர்கள்தான் 'கள்' தரப்பட்டதாகப் பொருள் கொண்டுள்ளனர். கள் தருவதும், பெறுவதும் திரு. மதன் குறிப்பிட்டிருப்பது போல, சங்க காலத்தில், 'மிகச் சாதாரணமான விருந்தோம்பல்'. அப்படியிருக்க, மது குடித்த புலவர்கள் உணர்ச்சி வயப்பட இடமேது?

கரிகாலன் அரண்மனையில் வரவேற்பாளர்களால் களைப்புத் தீரத் தரப்பட்ட பானத்தை அருந்திய பொருநன், தன் வழிநடைக் களைப்பு அகன்றதாகவும் மகிழ்வு ஏற்பட்டதாகவும் கூறுகிறாரே தவிர உணர்ச்சி வயப்பட்டு அதீத கற்பனைகள் எவற்றிலும் ஆழவில்லை என்பதற்கு பொருநர் ஆற்றுப்படையே சான்று.

கரிகாலனைப் பற்றிய அருமையான தரவுகளைப் பொருநர் ஆற்றுப்படையும் பட்டினப்பாலையும் சிலப்பதிகாரமும் தரும்போது நமக்கென்ன குறை? அவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் அனைத்து வரலாற்றறிஞர்களும் கரிகாலனின் வரலாற்றை எழுதியுள்ளனர். நிலைமை இப்படியிருக்க, ஒரு வெண்பாவும் பழமொழியும் வழங்கு கதையும் கூறும் தகவல்களை மட்டும் முன்வைத்துக் கரிகாலன் வரலாற்றிற்குச் சான்றுகளே இல்லாதது போல ஒரு தோற்றத்தை ஏன் ஏற்படுத்தவேண்டும்? இவற்றைக் கரிகாலனின் வரலாற்றை எழுதியுள்ள வரலாற்றாசிரியர்கள் அனைவரும் குறிப்பிட்டுள்ளனர்.

எது வரலாற்றுச் சான்று, எது கற்பனை என்பதை வரலாற்றாசிரியர்களால் அறியமுடியும். அப்படி அறிந்திருப்பதனால்தான் சங்க கால வரலாறு தமிழ்நாட்டரசால் இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. சங்க காலச் சோழர்கள் பற்றி மிக விரிவான அளவில் திரு. இராசமாணிக்கனாரும் திரு. நீலகண்ட சாஸ்திரியாரும் எழுத முடிந்துள்ளது.

கண்முன் இருக்கும் ஆயிரக்கணக்கான சான்றுகளைக் கண்ணெடுத்தும் பாராமல், 'எந்த ஆதாரங்களை வைத்துக்கொண்டு நாம் நம் வரலாற்றை எழுதமுடியும்?' என்றும் 'தமிழ் மன்னர்களைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் கி.பி. 600 வரை நம்மிடையே இல்லை' என்றும் துணிவுடன் கூறும் திரு. மதனைப் பார்த்து நம்மால் ஆழ வருந்த மட்டுமே முடிகிறது.

தமிழ் மன்னர்களைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் கி.பி. 600 வரை நம்மிடையே இல்லை என்றால், கி.பி. 600 வரை தமிழனுக்கு வரலாறே இல்லை என்று பொருளா? அப்படியானால் சங்க இலக்கியங்கள் அனைத்தும் மதுவுக்கும் பொற்காசுகளுக்கும் உணர்ச்சி வயப்பட்ட புலவர்களின் அதீத கற்பனைகளா? கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை எனத் திரு. ஐராவதம் மகாதவன் தொகுத்து வெளியிட்டிருக்கும் 89 தமிழ் பிராமி கல்வெட்டுகளும் 21 முற்கால வட்டெழுத்துக் கல்வெட்டுகளும் விதந்துரைக்கும் வரலாற்றுத் தகவல்கள் பொய்யுரைகளா? இவற்றின் அடிப்படையில் ஐம்பது பக்க அளவில் தமிழ்நாட்டு வரலாற்றைத் திரு. மகாதேவன் அதே நூலில் எழுதியுள்ளாரே, அதுவும் உணர்ச்சி வயப்பட்ட கற்பனையா?

கி.பி. 250ல் இருந்து கி.பி 600 வரையிலான காலகட்டத்தில் வெளியிடப்பட்டதாகக் கல்வெட்டறிஞர்களால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் பதினைந்திற்கும் மேற்பட்ட செப்பேடுகள் வழங்கும் வரலாற்றுத் தரவுகள் எல்லாமே பொய்யுரைகளா? கோச்செங்கட்சோழன் கற்பனையில் உதித்தவரா? அப்படியானால் அவரைப் பற்றிப் பாடியிருக்கும் பொய்கையார், அப்பர், சம்பந்தர், சுந்தரர் இவர்களெல்லாம் பொய்யர்களா? கோச்செங்கட்சோழனை முன்னோனாகக் குறிப்பிடும் சோழக் குடிவழி இடம்பெற்றுள்ள செப்பேடுகளெல்லாம் பொய் வெளீயீடுகளா? கோச்செங்கனான் எழுப்பியனவாய் இன்றளவும் வழிபாட்டில் உள்ள மாடக்கோயில்கள் என்னாவது?

சங்க காலச் சேர, சோழ, பாண்டிய அரசர்கள் வெளியிட்ட நூற்றுக்கணக்கான காசுகளைப் பெற்று அறிஞர் திரு. இரா.கிருஷ்ணமூர்த்தி, அளக்குடி திரு. ஆறுமுக சீதாராமன் இவர்கள் ஒளிப்படங்களோடு அமைந்த எண்ணற்ற ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளனர். இருபதுக்கும் மேற்பட்ட தரமான, ஆய்வு நோக்குடைய சங்ககாலக் காசியல் நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, தமிழ்நாட்டு அருங்காட்சியகத் துறை இவற்றிடமும் நடுவண் அரசின் தொல்லியல் துறையிடமும் பழங்காசுகள் உள்ளன. இவை தவிர, தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் நாணய சேகரிப்பாளர்கள் எண்ணற்றோர் சங்க காலக் காசுகளைப் பெற்றுப் பாதுகாத்து வருவதோடு கண்காட்சிகளையும் நடத்தி வருகின்றனர். இந்தக் காசுகளெல்லாம் வரலாற்றுத் தகவல்கள் அல்லாமல் வேறென்னவாக இருக்கமுடியும்?

'கி.பி. 300லிருந்து கி.பி 600 வரை தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்கிற தகவலே இல்லை. இதை ஒரே வார்த்தையில் களப்பிரர் ஆட்சி என்று புத்தகங்கள் சொல்லிவிட்டு அதோடு நிறுத்திக் கொள்கின்றன' என்று 25.04.2007 ஆனந்த விகடனில் திரு. மதன் குறிப்பிட்டிருக்கிறார். இப்படி ஒரே வார்த்தையில் மூன்று நூற்றாண்டு வரலாற்றை மூடிமறைத்திருக்கும் அந்த வரலாற்றுப் புத்தகங்களையும் அவற்றின் ஆசிரியர்தம் பெயர்களையும் திரு. மதன் வெளியிட்டால், தமிழ்நாட்டு வரலாற்றை அறிய மறுக்கும் நூலாசிரியர்களை நாமும் அடையாளம் காணுவதோடு உண்மை வரலாற்றை அவர்கள் உணருமாறு செய்யலாம்.

திரு. எம். அருணாசலம், சென்னைப் பல்கலைக் கழகத் தாளிகையில், 'பாண்டிய நாட்டில் களப்பிரர்கள்' என்ற தலைப்பில் ஆழமான ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். இது பின்னாளில் நூலாகவும் வந்துள்ளது. திரு. கே.கே.பிள்ளை தம்முடைய, 'தமிழக வரலாறும் பண்பாடும்' என்னும் நூலில் இக்காலகட்ட வரலாற்றைப் பல பக்கங்களில் எழுதியுள்ளார். திருச்சிராப்பள்ளி சீதாலட்சுமி இராமசாமி கல்லூரியின் வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியை கோ.வேணிதேவி தம்முடைய முனைவர் பட்ட ஆய்வாக கி.பி. 300க்கும் கி.பி.600க்கும் இடைப்பட்ட தமிழ்நாட்டு வரலாற்றையே எடுத்துக்கொண்டு, அரசியல், சமுதாயம், பண்பாடு எனும் மூன்று பெரும் தலைப்புகளின் கீழ் 300 பக்கங்களுக்கும் அதிக அளவிலான ஆய்வேட்டை வழங்கி முனைவர் பட்டம் பெற்றுள்ளார். களப்பிரர்களை அடையாளப்படுத்தும் கல்வெட்டுகளைப் பற்றி இந்திய கல்வெட்டாய்வுக் கழகத்தின் ஆய்வுத் தொகுப்பொன்றில் இரண்டு கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட வரலாற்று நூல்களை மேலோட்டமாகப் படித்துவிட்டு, நாளும் பொழுதும் நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் காடு, மேடு பாராமல் தங்கள் உயிரைப் பணயம் வைத்துக் கண்டறிந்து வெளிப்படுத்தியிருக்கும் ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளையும் அகழ்வாய்வுப் பொருட்களையும் அமைப்புகளையும் காசுகளையும் அறிந்து கொள்ளாமலே, அவை வெளிப்படுத்தியிருக்கும் வரலாற்றுத் தரவுகளைத் தெரிந்துகொள்ளாமல், தமிழ்நாட்டு வரலாற்றைப் பற்றிக் கருத்துரைப்பது எந்த வகையில் நியாயம்?

திரு. வெ.இறையன்புவின் கேள்வியையும் திரு. ஆர்.ஜெ.மாயவநாதனின் கேள்வியையும் திரு. மதன் மிக மேலோட்டமாகவே அணுகியிருப்பதை, அவருடைய இரண்டாம் மொழிவிலிள்ள பிழையான சுட்டல்கள் தெளிவாக்குகின்றன.

1. திருவாலங்காடு, கரந்தைச் செப்பேடுகள் இவை இரண்டும் முதலாம் இராஜேந்திர சோழனால் வழங்கப்பட்டவை. திரு. மதன் குறித்திருப்பது போல இராஜராஜசோழனால் அன்று.

2. பெரிய கோயிலில் (தஞ்சாவூர் இராஜராஜீசுவரம்) இதுநாள் வரையிலும் திரு. மதன் சுட்டியிருப்பது போலச் சோழர் காலச் செப்பேடுகள் ஏதும் கிடைத்தில.

3. இக்கோயிலில் இருந்து படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளையே திரு. மதன் செப்பேடுகளாகக் கருதி எழுதியிருக்கிறார் என்றால், இவற்றில், 'கோயில் பொருளாதாரம் நிதி நிலைமை பற்றி மட்டுமே நுணுக்கமான தகவல்கள் உண்டு' என அவர் தெரிவித்திருக்கும் கருத்து பிழையானது.

4. தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தில் இருந்து படியெடுக்கப்பட்ட பல கல்வெட்டுகளுள் ஒன்றான தளிச்சேரிக் கல்வெட்டு பற்றி மட்டும் 67 பக்கங்களில் ஓர் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டு நூலாகவும் வந்துள்ளது. இக்கட்டுரை முதலாம் இராஜராஜர் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த 102 தளிச்சேரிகளைச் சுட்டுவதுடன் நானூறு ஆடல் பெண்களின் பெயர்களையும் அவர்தம் வாழ்க்கை வசதிகளையும் தெரிவிக்கிறது. அத்துடன், இக்கோயிலில் பணியாற்றிய 36 வகையான தொழில் பிரிவுகளைச் சேர்ந்த 217 தொழிலாளர்களைப் பற்றியும் அக்காலத்திலிருந்த இசைக்கருவிகள், கலைஞர், தொழிலர் ஊதியம், அவர்கள் தொழில் குறித்த நடைமுறைச் சட்டங்கள் பற்றியும் பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது. சோழர் காலத்தில் இருந்த 63 ஊர்களின் பெயர்களும் 49 கோயில்களின் பெயர்களும் இக்கல்வெட்டால் அறியப்படுகின்றன. ஒரு கல்வெட்டே இவ்வளவு வரலாற்றுத் தரவுகளைத் தரமுடியும் என்றால், தமிழ்நாட்டில் உள்ள 50,000க்கும் மேற்பட்ட தமிழக கல்வெட்டுகள் எத்தகு வரலாற்றை இந்த மண்ணின் மைந்தர்களுக்கு வழங்க முடியும் என்பதை நினைத்துப் பாருங்கள்!

தமிழ்நாட்டு வரலாறு, திரு. மதன் உட்படப் பலரும் நினைப்பது போல சான்றுகளில்லாமல் தவிக்கவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆய்வாளர்களும் பல வெளிநாடுகளைச் சேர்ந்த ஆர்வமும் அறிவாற்றலும் மிக்க ஆய்வாளர்களும் தங்கள் உழைப்பாலும் உயர் சிந்தனைகளாலும் தமிழ்நாட்டு வரலாற்றைத் தகுதிசான்ற ஆதாரங்களின் அடிப்படையில் உருவாக்கித் தந்திருப்பதுடன், அதற்கெனவே தொடர்ந்து உழைத்துக்கொண்டும் இருக்கிறார்கள். அந்த உழைப்பையும் உண்மைத் தன்மையையும், தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் அறியவேண்டும், மதிக்கவேண்டும், போற்றவேண்டும். நமக்காகவும் எதிர்வரும் தலைமுறைகளுக்காகவும் எத்தனையோ துன்பங்களுக்கிடையில் வரலாற்றைத் தேடித் தொகுக்கும் அந்த இனிய உள்ளங்களை, தமிழனுக்கு வரலாறே இல்லை என்று சொல்லி எள்ளி நகையாடுவதும் புண்படுத்துவதும் அருள்கூர்ந்து இனி வேண்டாம்.

உண்மைகளை உண்மைகளாகப் பாருங்கள். சார்தல் வேண்டாம். காய்தல், உவத்தல் வேண்டாம். யார் எழுதுகிறார்கள் என்பதினும் என்ன எழுதுகிறார்கள் என்பதைப் பார்த்து உண்மைகளைத் தேடுங்கள். வரலாறு எங்கோ இல்லை! இல்லாமலும் இல்லை! அது நம்மைச் சூழ நம்மிடமே உள்ளது. அதனால்தான் அதன் அடையாளம்கூட நமக்குத் தெரியாமல் போகிறது.

இரா. கலைக்கோவன்

http://www.varalaaru.com/Default.asp?articleid=520 திரு.இரா.கலைக்கோவன் அவர்களின் மூல கட்டுரை வெளியான இடம். தலைப்பு "உண்மைகள் சுடும் - மதனுக்கும் நண்பர்களுக்கும் விளக்கம் "

http://theevu.blogspot.com/2007/10/blog-post_159.html
திரு.தீவு அவர்களின் "மதன மாளிகையில் மந்திரப் மாலைகளாம்"

http://dondu.blogspot.com/2007/10/blog-post_09.html திரு.டோண்டு ராகவனின் "மதன் சொன்னதில் என்ன தவறு கண்டீர்கள்"

http://kuttapusky.blogspot.com/2007/10/blog-post.html திரு.வரவணையான் செந்திலின் "அம்மண குண்டி டும்மலக்கா"

Wednesday, October 10, 2007

பெயரிலி பதிவுகளுக்கு கோனார் நோட்ஸ்

இந்த பதிவை படித்து பெயரிலி பதிவுகளை நன்றாக புரிந்துகொள்ளுமாறு அன்பர்களை கேட்டுக்கொள்கிறேன்...பெயரிலி பதிவுக்கு நோட்ஸ் பார் டம்மீஸ் என்று தான் முதலில் தலைப்பு வைக்கலாமுன்னு பார்த்தேன்...ஆனா என் வாயால உங்களை எல்லாம் எப்படி டம்மீஸ்னு சொல்றது..

அலைஞன் : அலையாதவன்
குவியம் : குவிந்துகிடப்பது
அச்சிலசுக்குதி : அச்சில் ஏற்றக்கூடியது
எழுபடவில்லை : தெரியவில்லை
ஆயாசம் : பாயாசப்பதிவுகள் எழுதும்போது வருவது
ஒன்றறைத்துட்டு : சிறிய விடயம்
விளித்தெழுதியன் : சொல்லியது
ஒத்தியங்கமாட்டார் : சேர்ந்துகொள்ளமாட்டார்
மாற்றமைப்பு : வேறு அமைப்பு
சத்தியக்கடதாதி : சத்தியமா லட்டர் போடறது
ஈழத்தமிழுருவேறி : ஈழத்தமிழர்

எலியெதிர்ப்புக்க்காழ்ப்புத்தனத்துக்கும் : எலியை எதிர்க்கும் முறை
கொள்கைப்போராட்டத்தன்மைக்கும் : கொள்கையை வைத்து போராடுவது
குழந்தைப்பிள்ளைத்தன்மைக்குமிடையிலே : சிறுபிள்ளைத்தனம்

தட்டச்சிடுகின்றாரோ : டைப் பண்ணுகிறாரோ
காலத்துக்கொவ்வியதைத் : காலத்துக்கு தகுந்ததை
ஒவ்வாதிருப்பது : சேராதிருப்பது
மூடிக்கொண்டாவதிருக்கவேண்டும் : மூடிக்கினு இருக்கனும்
குருவிப்பதிவுகளை : லொட்டையான பதிவுகள்
நூற்கண்டுச்சிக்கற்றன்மையை : சிக்கல் (நூல் கண்டு சிக்கல்)
'பேன்' பெரியார்ப்பதிவர்களுக்கும் : அரிப்பு புடிச்சவங்க
பெரியாரைப்புரியா : பெரியாரை தெரிந்துகொள்ளாத
ஈழப்பதிவுக்குஞ்சுகளுக்கும் : குறைந்த வயசு ஈழப்பதிவர்கள் (ஆண்கள்)
அச்சுழியிழுந்தோடிய : அடிச்சிக்கிட்டு போன
ஈழப்பஞ்சமருக்கெதிரான : ஈழத்தை சேர்ந்த அஞ்சி பேருக்கு எதிராக
தற்ப்பாற்புணர்ச்சியாளர்களே : கே / லெஸ்பியன் காரர்கள்
சறுகுவது : சறுக்குவது
ஈழத்தில் ஐபிகேப்பை : இலங்கையில் ஐ.பி.கே

பகுதிநேரமார்க்ஸியப்போராளிக்கீச்சுக்காட்டற்பின்னூட்டமே : எனக்கே புரியல
பார்ப்பனியப்பின்னூட்டவாலாக்களும் : பார்ப்பணீய ஆதரவாளர்கள்
இச்சுயநியமிப்புத்தான்தோன்றிச்சமாதானத்தூதுவர் : சமாதான தூதர் (Own Appointment)

கடைசீயா ஒன்னு சொல்றேன்...இது நிஜமாலுமே ஒரு நேயர் விருப்ப ( நான் தான் அந்த நேயர்) சீரியஸ் பதிவு...!!!!

Sunday, October 07, 2007

ஓபீஸில் வெட்டியாயிருக்கும்போது தமிழ்ப்படம் பார்க்க

இங்கே

ஆபாச கும்மிகள் குறித்து !!!

கும்மிப்பதிவர்கள் கவனத்துக்கு என்று தான் தலைப்பிடலாம் என்று நினைத்தேன்...விரைவான அட்டென்ஷனை உடனடியாக பெறவேண்டிய பதிவென்பதால் இப்படி தலைப்பிடவேண்டியதாயிற்று...

கும்மி என்றால் என்ற என்று அருஞ்சொற்பொருள் விளக்கம் கொடுக்கும் காலத்தை தமிழ் வலையுலகம் தாண்டிவிட்டதாகவே நினைக்கிறேன்....மீடியாக்கள் நோக்கும் பதிவர் பட்டறைகளில் கூட - லக்கி போன்றவர்கள் - கும்மிப்பதிவரென அறிமுகம் செய்துகொள்ளுமளவுக்கு 'கும்மி' புழக்கமான வார்த்தைதான்...!!!

மற்றபடி சுருக்கமாக சொல்லவேண்டுமானால் - அதர் ஆப்சன் / அனானி ஆப்சன் உபயோகப்படுத்தி பதிவில் சொல்லமுடியாத விடயங்களை பின்னூட்டங்களில் கொடுத்து, படிப்பவரை சில வினாடிகள் வயிறு குலுங்க, அலுவலகத்தில் தனித்து சிரிக்கவைத்து 'லூசு' பட்டம் பெற்றுத்தரவோ - நல்ல தரமான கும்மிப்பதிவரால் முடியும்...

சிலர் பதிவே கும்மிக்கென நடத்திச்செல்வதும் உண்டு...நன்பர் ஓசை செல்லா ஒரு உதாரணம்...அதை விடுங்க...நான் விஷயத்துக்கு வரேன்....

சமீபகாலமாக வலையுலகம் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக படுகிறது...ஏன் அவருக்கு பின்னூட்டம் போட்டே ? - சாதியை எதிர்க்கும் எங்கள் இயக்கம் ( ஆமாம் பெரிய 'சே' 'குவாரா' இயக்கம்) என்று அர்ச்சிக்கும் புண்ணூட்டங்கள் நின்றுபோன நிலையில் புதியதொரு பிரச்சினையை வலையுலகம் இப்போது சந்திக்கிறது...

அதற்கு யார் காரணம் என்று ஆதியையும் அந்தத்தையும் தேடிச்செல்லுமுன் அது 'இன்னா' அப்படீன்னு உங்களுக்கு சொல்றேன்..

வசதியான பதிவுகளில் ( அதர் / அனானி ஆப்சன் திறக்கப்பட்ட நிலையில் உள்ள பதிவுகளில்), எந்த பின்னிஊட்டம் போட்டாலும் பப்ளிஷ் செய்து தொலைக்கும் கொலைவெறி வலைஞர்கள் பதிவுகளில், முகம் சுளிக்கும்படியான ஆபாச அர்ச்சனை பின்னூட்டங்களும், தனிமனித தாக்குதல் பின்னூட்டங்களும் சற்று 'தாராளமாக' நாற்பதுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில், இணையத்தில் எப்போதும் 'உக்காந்தான்' களால் போடப்படுகிறது...

கும்மிப்பதிவர்களும், பின்னூட்டம் வருகிறதே என்ற காரணத்தால் - அதன் உள் மூலம் / வெளி மூலம் அறியாமல், பத்தோடு பதினொன்றாக அதையும் ரிலீஸ் செய்து தொலைத்துவிடுகிறார்கள்...

வரவணையான் 'பிடல் காஸ்ட்ரோ' பற்றி பதிவிட்டபோது, அதில் " இமெல்டா மார்க்கோஸ்" என்ற பின்னூட்டத்தை படித்து சுவற்றில் முட்டி சிரித்தேன்...ஆனால் அதில் மேலும் சில பின்னூட்டங்கள் பதிவை அசிங்கப்படுத்தும் நோக்கோடும், பதிவரின் கண்ணியத்தை குலைக்கும் வகையிலும் போடப்பட்டு அவை வெளியிடப்பட்டுமுள்ளன...

மட்டமான கருத்துக்களை வலையெங்கும் தெளித்துக்கொண்டிருந்த 'பாலா' என்பவரை, போலி பாலா, ISO 9002 பாலா என்று ஓட்டித்தள்ளி, இப்போது தன்னுடைய அரைவேக்காட்டுத்தனங்களை சில பதிவுகளில் வைப்பதை சுத்தமாக நிறுத்திக்கொண்டார் அவர்...

இந்த வகையில், லக்கிலூக்கின் " கலைஞர் கட்டையில போகட்டும்" பதிவிலும் அநாகரீக பின்னூட்டம் பத்தோடு பதினொன்றாக வெளிக்கிட்டு நிற்கிறது...

தமிழச்சி பதிவு, இந்த அனானி அசிங்கங்களுக்கு சரியான களம்.."பெங்களூர் அருண் ஒரு பேமானி" என்று புண்ணூட்டமிட்டுவிட்டு சென்றால், தமிழச்சி அதை வெளியிட்டு, "பெங்களூர் அருண் யாருன்னு தெரியாதுங்க அனானி" என்று வெள்ளந்தியாக பதிலிறுப்பார்...

அதே போல் லக்கிலூக் பதிவொன்றில் (தானே கேள்வி / தானே பதில்), "உண்மைத்தமிழன் ஒரு மொள்ள மாறி" என்ற பின்னூட்டம் உண்மைத்தமிழனை காயப்படுத்தியிருக்கிறது...அதை விசாரித்து தெரிந்துகொண்டேன்...லக்கியும் அதனை நீக்க மறுத்து விட்டார்...அதனால் அதே அனானியை, "அப்போ நீ ஒரு தெள்ளவாறி" என்று நான் ஒரு லெக்ஸைட் ஸிக்ஸ் அடித்துவிட்டு வரவேண்டியதாயிற்று...

இதே போல் தமிழ்பித்தன் பதிவு கொச்சையாக்கப்பட்டு, அதில் என்னுடைய குடும்பம் பற்றியெல்லாம் எழுதப்பட்டிருந்தது...ஆனாலும் முழு/முக்கா/அரைகிறுக்கன் தமிழ்பித்தன், அதனை வெளியிட்டதோடல்லாமல், அதற்கான எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இன்றும் தமிழ் கம்பூட்டர் துறையை ஆன்லைனில் மி(மு)ன்னேன்ற நடவடிக்கை எடுத்துகொண்டிருக்கிறார்...ஒழுக்கமான குடும்பத்தில் பிறந்தவனாயிருந்தால் சம்பந்தப்பட்ட என்னிடம் மன்னிப்போ, உடனடி பின்னூட்ட நீக்கமோ செய்திருப்பான்...இவன் எழுதி தமிழ் கணினி உலகம் தலைகீழ மாறப்போகுதா என்ன ?

வளர்மதி பதிவொன்றில் (ஜாதிப்புத்தி) அதை நான் தட்டிக்கேட்கப்போக, அடுத்ததாக என்னுடைய குடும்பத்தை இழிவாக்கி ஒரு புண்ணூட்டம்...அதையும் வெளியிட்டு தன் சிறு / குறு / மினிமல் / இலக்கிய அறிவை பட்டைதீட்டி சொறிந்துகொண்டார் வளர்மதி...

பெயரிலி அவர்களை பற்றியும் சில புண்ணூட்டங்களை ஆங்காங்கே பார்க்க நேரிட்டது...

டோண்டு இரண்டு வருடம் முன்னால் சொல்லிய கருத்துக்கள் தவறு என்று முந்தாநாள் பதிவுலகில் சேர்ந்த "பதிவன்" என்ற பதிவர் சொல்கிறார்..இவர் ரொம்ம்ம்ப புதிய பதிவர் தான் போலிருக்கு...

சுற்றி வளைத்துச்சொன்னால் இந்த புண்ணூட்டங்கள் டார்கெட் செய்வது ஒரு சிலரைத்தான்...

ஓசை செல்லா
குழலி
செந்தழல் ரவி
உண்மைத்தமிழன்
டோண்டு ராகவன்
பெயரிலி
லக்கி லூக்
பெங்களூர் அருண்
தமிழச்சி
சில அமெரிக்க வாழ் பதிவர்கள்

இப்போ புரிஞ்சு போயிருக்குமே ? ஆனாலும் இது மட்டும் இந்த பதிவுக்கு காரணம் அல்ல...

உங்கள் பதிவில் வரும் பின்னூட்டம் உங்கள் அனுமதியோடு வெளிக்கிடுகிறது...உங்கள் பதிவென்பது உங்கள் வீடு...அதில் மாற்றான் வந்து 'பிஸ்' அடிக்கவோ, 'பான்பராக்' எச்சில் துப்பவோ அனுமதிக்காதீர்...

உங்கள் பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பு...அவை யாரையாவது புண்படுத்தினால் / அல்லது சம்பந்தப்பட்ட பதிவர் அப்ஜெக்ஷன் தெரிவித்தால் உடனே நீக்குவது தார்மீக நெறி...

இணையம் கட்டற்றது என்பது ஓசை செல்லா அடிக்கடி சொல்வது...ஏற்றுக்கொள்ளக்கூடியதே...ஆனால் மாலன் சொல்லிய ஒரு கருத்து இன்றும் மனதில் நிற்கிறது..."உங்கள் மொழியையே நல்ல வார்த்தை / கெட்ட வார்த்தை என்று ஒரு வரையறைக்குள் நின்று புழங்கும்போது, இணையத்தில் எழுதினாலும், டைரியில் எழுதினாலும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் நின்றுதான் எழுதவேண்டும்" என்றார்...முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடியது...

இன்றைக்கு குட்டிப்பாப்பாக்களும் வலைப்பதியவும், தமிழ் இணையத்தை எட்டிப்பார்க்கவும் ஆரம்பித்திருக்கும் வேளையில் இந்த கசடுகளை அவர்களுக்காக நீங்கள் உங்கள் 'வீட்டில்' விட்டுவைத்திருக்கவேண்டுமா ?

வீட்டை சுத்தமாக வைத்திருங்கள் என்று அடுத்தவர் சொல்லியா தெரியவேண்டும் ?

கும்மிகள் ரசிக்கப்படக்கூடியவை...அவை தனிமனித தாக்குதலாகவும் ( முத்துலெட்சுமி அவர்களுக்கு அப்துல்கலாம் என்று பின்னூட்டம் போட்டு, மொகல் கார்டர் வந்து பார்வையிடவும் என்று அழைத்திருக்கிறேன்...அப்துல்கலாம் எங்க வந்து வலையுலகை பார்க்கப்போறார் என்ற போதிலும், அதில் ஆபாசம் இல்லாமல் காமெடிக்காக செய்தேன்...)

அன்பு நன்பர்களே...ஆபாச கும்மியை அனுமதியோம்...தார்மீக நெறிப்படி வலைப்பதிவோம்...தமிழ் இணையத்தை நாகரீகத்தை நோக்கியே முன்னெடுத்துச்செல்வோம்..பண்பும் கண்ணியம் காக்கும் தமிழ் பண்பாட்டினை பிறழோம்...வாருங்கள் உறுதியேற்போம்...
ஆபாச கும்மிகள் குறித்து !!!

கும்மிப்பதிவர்கள் கவனத்துக்கு என்று தான் தலைப்பிடலாம் என்று நினைத்தேன்...விரைவான அட்டென்ஷனை உடனடியாக பெறவேண்டிய பதிவென்பதால் இப்படி தலைப்பிடவேண்டியதாயிற்று...

கும்மி என்றால் என்ற என்று அருஞ்சொற்பொருள் விளக்கம் கொடுக்கும் காலத்தை தமிழ் வலையுலகம் தாண்டிவிட்டதாகவே நினைக்கிறேன்....மீடியாக்கள் நோக்கும் பதிவர் பட்டறைகளில் கூட - லக்கி போன்றவர்கள் - கும்மிப்பதிவரென அறிமுகம் செய்துகொள்ளுமளவுக்கு 'கும்மி' புழக்கமான வார்த்தைதான்...!!!

மற்றபடி சுருக்கமாக சொல்லவேண்டுமானால் - அதர் ஆப்சன் / அனானி ஆப்சன் உபயோகப்படுத்தி பதிவில் சொல்லமுடியாத விடயங்களை பின்னூட்டங்களில் கொடுத்து, படிப்பவரை சில வினாடிகள் வயிறு குலுங்க, அலுவலகத்தில் தனித்து சிரிக்கவைத்து 'லூசு' பட்டம் பெற்றுத்தரவோ - நல்ல தரமான கும்மிப்பதிவரால் முடியும்...

சிலர் பதிவே கும்மிக்கென நடத்திச்செல்வதும் உண்டு...நன்பர் ஓசை செல்லா ஒரு உதாரணம்...அதை விடுங்க...நான் விஷயத்துக்கு வரேன்....

சமீபகாலமாக வலையுலகம் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக படுகிறது...ஏன் அவருக்கு பின்னூட்டம் போட்டே ? - சாதியை எதிர்க்கும் எங்கள் இயக்கம் ( ஆமாம் பெரிய 'சே' 'குவாரா' இயக்கம்) என்று அர்ச்சிக்கும் புண்ணூட்டங்கள் நின்றுபோன நிலையில் புதியதொரு பிரச்சினையை வலையுலகம் இப்போது சந்திக்கிறது...

அதற்கு யார் காரணம் என்று ஆதியையும் அந்தத்தையும் தேடிச்செல்லுமுன் அது 'இன்னா' அப்படீன்னு உங்களுக்கு சொல்றேன்..

வசதியான பதிவுகளில் ( அதர் / அனானி ஆப்சன் திறக்கப்பட்ட நிலையில் உள்ள பதிவுகளில்), எந்த பின்னிஊட்டம் போட்டாலும் பப்ளிஷ் செய்து தொலைக்கும் கொலைவெறி வலைஞர்கள் பதிவுகளில், முகம் சுளிக்கும்படியான ஆபாச அர்ச்சனை பின்னூட்டங்களும், தனிமனித தாக்குதல் பின்னூட்டங்களும் சற்று 'தாராளமாக' நாற்பதுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில், இணையத்தில் எப்போதும் 'உக்காந்தான்' களால் போடப்படுகிறது...

கும்மிப்பதிவர்களும், பின்னூட்டம் வருகிறதே என்ற காரணத்தால் - அதன் உள் மூலம் / வெளி மூலம் அறியாமல், பத்தோடு பதினொன்றாக அதையும் ரிலீஸ் செய்து தொலைத்துவிடுகிறார்கள்...

வரவணையான் 'பிடல் காஸ்ட்ரோ' பற்றி பதிவிட்டபோது, அதில் " இமெல்டா மார்க்கோஸ்" என்ற பின்னூட்டத்தை படித்து சுவற்றில் முட்டி சிரித்தேன்...ஆனால் அதில் மேலும் சில பின்னூட்டங்கள் பதிவை அசிங்கப்படுத்தும் நோக்கோடும், பதிவரின் கண்ணியத்தை குலைக்கும் வகையிலும் போடப்பட்டு அவை வெளியிடப்பட்டுமுள்ளன...

மட்டமான கருத்துக்களை வலையெங்கும் தெளித்துக்கொண்டிருந்த 'பாலா' என்பவரை, போலி பாலா, ISO 9002 பாலா என்று ஓட்டித்தள்ளி, இப்போது தன்னுடைய அரைவேக்காட்டுத்தனங்களை சில பதிவுகளில் வைப்பதை சுத்தமாக நிறுத்திக்கொண்டார் அவர்...

இந்த வகையில், லக்கிலூக்கின் " கலைஞர் கட்டையில போகட்டும்" பதிவிலும் அநாகரீக பின்னூட்டம் பத்தோடு பதினொன்றாக வெளிக்கிட்டு நிற்கிறது...

தமிழச்சி பதிவு, இந்த அனானி அசிங்கங்களுக்கு சரியான களம்.."பெங்களூர் அருண் ஒரு பேமானி" என்று புண்ணூட்டமிட்டுவிட்டு சென்றால், தமிழச்சி அதை வெளியிட்டு, "பெங்களூர் அருண் யாருன்னு தெரியாதுங்க அனானி" என்று வெள்ளந்தியாக பதிலிறுப்பார்...

அதே போல் லக்கிலூக் பதிவொன்றில் (தானே கேள்வி / தானே பதில்), "உண்மைத்தமிழன் ஒரு மொள்ள மாறி" என்ற பின்னூட்டம் உண்மைத்தமிழனை காயப்படுத்தியிருக்கிறது...அதை விசாரித்து தெரிந்துகொண்டேன்...லக்கியும் அதனை நீக்க மறுத்து விட்டார்...அதனால் அதே அனானியை, "அப்போ நீ ஒரு தெள்ளவாறி" என்று நான் ஒரு லெக்ஸைட் ஸிக்ஸ் அடித்துவிட்டு வரவேண்டியதாயிற்று...

இதே போல் தமிழ்பித்தன் பதிவு கொச்சையாக்கப்பட்டு, அதில் என்னுடைய குடும்பம் பற்றியெல்லாம் எழுதப்பட்டிருந்தது...ஆனாலும் முழு/முக்கா/அரைகிறுக்கன் தமிழ்பித்தன், அதனை வெளியிட்டதோடல்லாமல், அதற்கான எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இன்றும் தமிழ் கம்பூட்டர் துறையை ஆன்லைனில் மி(மு)ன்னேன்ற நடவடிக்கை எடுத்துகொண்டிருக்கிறார்...ஒழுக்கமான குடும்பத்தில் பிறந்தவனாயிருந்தால் சம்பந்தப்பட்ட என்னிடம் மன்னிப்போ, உடனடி பின்னூட்ட நீக்கமோ செய்திருப்பான்...இவன் எழுதி தமிழ் கணினி உலகம் தலைகீழ மாறப்போகுதா என்ன ?

வளர்மதி பதிவொன்றில் (ஜாதிப்புத்தி) அதை நான் தட்டிக்கேட்கப்போக, அடுத்ததாக என்னுடைய குடும்பத்தை இழிவாக்கி ஒரு புண்ணூட்டம்...அதையும் வெளியிட்டு தன் சிறு / குறு / மினிமல் / இலக்கிய அறிவை பட்டைதீட்டி சொறிந்துகொண்டார் வளர்மதி...

பெயரிலி அவர்களை பற்றியும் சில புண்ணூட்டங்களை ஆங்காங்கே பார்க்க நேரிட்டது...

டோண்டு இரண்டு வருடம் முன்னால் சொல்லிய கருத்துக்கள் தவறு என்று முந்தாநாள் பதிவுலகில் சேர்ந்த "பதிவன்" என்ற பதிவர் சொல்கிறார்..இவர் ரொம்ம்ம்ப புதிய பதிவர் தான் போலிருக்கு...

சுற்றி வளைத்துச்சொன்னால் இந்த புண்ணூட்டங்கள் டார்கெட் செய்வது ஒரு சிலரைத்தான்...

ஓசை செல்லா
குழலி
செந்தழல் ரவி
உண்மைத்தமிழன்
டோண்டு ராகவன்
பெயரிலி
தமிழச்சி
சில அமெரிக்க வாழ் பதிவர்கள்

இப்போ புரிஞ்சு போயிருக்குமே ? ஆனாலும் இது மட்டும் இந்த பதிவுக்கு காரணம் அல்ல...

உங்கள் பதிவில் வரும் பின்னூட்டம் உங்கள் அனுமதியோடு வெளிக்கிடுகிறது...உங்கள் பதிவென்பது உங்கள் வீடு...அதில் மாற்றான் வந்து 'பிஸ்' அடிக்கவோ, 'பான்பராக்' எச்சில் துப்பவோ அனுமதிக்காதீர்...

உங்கள் பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பு...அவை யாரையாவது புண்படுத்தினால் / அல்லது சம்பந்தப்பட்ட பதிவர் அப்ஜெக்ஷன் தெரிவித்தால் உடனே நீக்குவது தார்மீக நெறி...

இணையம் கட்டற்றது என்பது ஓசை செல்லா அடிக்கடி சொல்வது...ஏற்றுக்கொள்ளக்கூடியதே...ஆனால் மாலன் சொல்லிய ஒரு கருத்து இன்றும் மனதில் நிற்கிறது..."உங்கள் மொழியையே நல்ல வார்த்தை / கெட்ட வார்த்தை என்று ஒரு வரையறைக்குள் நின்று புழங்கும்போது, இணையத்தில் எழுதினாலும், டைரியில் எழுதினாலும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் நின்றுதான் எழுதவேண்டும்" என்றார்...முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடியது...

இன்றைக்கு குட்டிப்பாப்பாக்களும் வலைப்பதியவும், தமிழ் இணையத்தை எட்டிப்பார்க்கவும் ஆரம்பித்திருக்கும் வேளையில் இந்த கசடுகளை அவர்களுக்காக நீங்கள் உங்கள் 'வீட்டில்' விட்டுவைத்திருக்கவேண்டுமா ?

வீட்டை சுத்தமாக வைத்திருங்கள் என்று அடுத்தவர் சொல்லியா தெரியவேண்டும் ?

கும்மிகள் ரசிக்கப்படக்கூடியவை...அவை தனிமனித தாக்குதலாகவும் ( முத்துலெட்சுமி அவர்களுக்கு அப்துல்கலாம் என்று பின்னூட்டம் போட்டு, மொகல் கார்டர் வந்து பார்வையிடவும் என்று அழைத்திருக்கிறேன்...அப்துல்கலாம் எங்க வந்து வலையுலகை பார்க்கப்போறார் என்ற போதிலும், அதில் ஆபாசம் இல்லாமல் காமெடிக்காக செய்தேன்...)

அன்பு நன்பர்களே...ஆபாச கும்மியை அனுமதியோம்...தார்மீக நெறிப்படி வலைப்பதிவோம்...தமிழ் இணையத்தை நாகரீகத்தை நோக்கியே முன்னெடுத்துச்செல்வோம்..பண்பும் கண்ணியம் காக்கும் தமிழ் பண்பாட்டினை பிறழோம்...வாருங்கள் உறுதியேற்போம்...

Saturday, October 06, 2007

வடமொழி இராமாயணம்

இப்பொழுது உள்ள வடமொழி இராமாயணம் கி.மு .200 இல் தொகுக்கப் பட்டது.

சாதகக் கதைகளில் கூறப்பட்ட வகையில் வழங்கிய இராமாயணக் கதை பல
நூற்றாண்டுகளாக வளர்ச்சியடைந்து வந்தது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இக்கதை தொடர்பான பாடல்கள் திரட்டப்பட்டன. திரட்டப்பட்ட பின்பும் இராமாயணம் வளர்ந்து கொண்டு செல்வது நின்று விடவில்லை. அது இன்றுவரையும் வளர்ந்துகொண்டே வருகின்றது.

"இன்றுவரையும் இராமாயணத்தின் பின் சேர்ப்பு அல்லது இடைச் செருகல் வளர்ந்து
வருகின்றன என்பதைப் பற்றிய ஆராய்ச்சி வெண்டியதில்லை. பேர்போன இராமாயண
உரையாசிரியரான காதக என்பவர் இடைச் செருகல் என்று குறிப்பிட்ட நீண்ட சருக்கம் மாத்திரமல்ல; அவர் காலத்திலில்லாத பல சருக்கங்களும் இன்றைய இராமாயணத்திற் காணப்படுகின்றன.

அன்றைய இராயணத்தின்படி இராமருக்குப் பல மனைவியர் இருந்தனர். காளிதாசரும் அவருக்குப் பின் வந்த புலவர்களும் அவருக்கு ஒரு மனைவி மாத்திரம் இருந்தார் எனக் கூறுகின்றனர். பரதனுக்கும் பல மனைவியர் இருந்தனர். அக்கால இராமாயணம் தசரதருக்கு 350 மனைவியர் இருந்தனர் என்று கூறுகிறது. தமது முறைமையான மனைவியரைத் தவிர தசரதன் , இராமன், பரதன் முதலானோர் பல மனைவியர் உடையவராயிருந்தனர் எனத் தெரிகிறது.

"கௌதம புத்தர் காலத்திற்குப் பின்பே இராமாயணம் தொகுக்கப்பட்டது! என்பதில்
சிறிதும் ஐயமில்லை. இராமாயணத்தில் புத்தரைப் பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், அது, புத்தரைக் கடுமையாகக் கண்டித்திருக்கின்றது.
இராமாயணம் கிறித்துக்கு முன் தொடங்கி இரண்டாம் நூற்றாண்டு வரையில்
தொகுக்கப்பட்டுள்ளது. மகாபாரதம் தொகுக்கப்பட்ட பின்னரே இராமாயணம் தொகுக்கப் பட்டுள்ளது.

மகாபாரதத் தொகுப்புக்காலம் அலெக்சாந்தரின் படை எடுப்புக்
காலத்துக்குப் பின்பேயாகும் ., மகாபாரதத்தில் கிரேக்க வீரர் பெயர் குறிப்பிடப்பட்டுப் புகழப் பட்டுள்ளார்கள். ஆதிபருவத்திலுள்ள சுலோகங்கள் அலெக்சாந்தரின் படையெடுப்பு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகின்றது. மகாபாரதத்துக்குப் பின் இராமாயணம் தொகுத்தவர் சபாபருவம் ஐந்தாம் சருக்கத்திலுள்ளவைகளை அப்படியே அயோத்தியா காண்டத்தில் படி எடுத்து எழுதியிருக்கின்றார்.

"இராமாயணம் தொகுத்தவரின் திறமைக் குறைவினால் வால்மீகியின் ஆதிஇராமாயணத்தில் வைணவக் கொள்கைகள் தொடர்பான எதுவும் இருக்கவில்லை என நன்கு அறியமுடிகிறது "

அவதாரங்கள் பிற்காலக் கற்பனைகள்:

"வாசுதேவனுக்கு முற்பட்ட வீரர் விட்டுவிணுவின் அவதாரங்களாகக் குறிக்கப்
பட்டுள்ளனர். இது பௌத்தர் முன் பலமுறைகளில் புத்தர் அவதாரஞ்செய்தார் என்று
சொல்லும் கொள்கையைப் பின்பற்றி எழுதப்பட்டதாகும். மகாபாரதத்தில் கூறப்படும்
இராமன் விட்டுணுவின் அவதாரம் என்று கூறப்படுகிறான். இராமோபாக்கியானத்தில்
இவ்வாறு சொல்லப்பட்டிருப்பதாலே வால்மீகியின் இராமாயணத்தை மாற்றி எழுத வேண்டிய நிலையேற்பட்டது."

"நாரதர் இராமனை அவதாரமாகக் கொள்ளவில்லை. அவன் உயர்ந்த வாழ்க்கையை நடத்தி மரணத்தின் பின் பிரம உலகத்தை அடைந்தவராகக் கூறியிருக்கிறார். (lbid p.29)

கட்டுரை : இரவா (vasudevan.dr@gmail.com)

கட்டுரையை படிக்கும் சகோதரர்கள், திரு இரவா அவர்களிடம் நேரடியாக மீதி விவாதங்களை நடத்திக்கொள்ளுங்கள்...!!

Friday, October 05, 2007

ஆயா, தாத்தா,காதல், திராட்சை,ஆனல் ஆப்ஸஸ் !!!!

பெருசா எதுவும் இந்த பதிவில் எழுதி கிழிக்கப்போவதில்லைன்னாலும், இதை பதிவு செய்யனும்னு ரொம்பநாள் ஆசை...ஏதோ பேட்ஸ்மேன் வரிசை மாதிரி போட்டிருந்தாலும் மிடில் ஆர்டர்லருந்து வரேன்....

என்னுடைய தாத்தா தஞ்சை மாவட்டத்தில் விட்டேத்தியாக கிராமத்துக்குயில்களை மைனர் செயினோடு சைட்டடித்திருந்த காலம் அது...சமீபத்தில் ஒரு எண்பது தொன்னூறு வருஷம் முன்னால இருக்கும்....எழுபத்தைந்து வருஷம் வாழ்ந்து அவர் போய் சேர்ந்து பத்து பதினைந்து வருஷம் ஆகுது...அந்த காலத்திலேயே லவ் மேரேஞ் செஞ்ச அவரோட கதையை சொல்லிடறேனே இந்த பதிவில்...

சொந்தமாக ஒரு பள்ளிக்கூடம் வைத்து நடத்திக்கிட்டும், அந்த காலத்திலேயே ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டுக்கிட்டும் இருந்த என்னுடைய கொள்ளுத்தாத்தாவுக்கு சில நூறுவேலி (600 வேலி - எவ்ளோ ஏக்கர்னு தெரியல), நிலமும் இரண்டு பிள்ளைகளும் சில பொண்டாட்டிகளும் இருந்தாங்க...முதல் மனைவியின் மூத்த பிள்ளை என்னுடைய தாத்தா...

விட்டேத்தியா திரிஞ்சிக்கிட்டிருந்தவருக்கு சுகந்திர போராட்டம், காந்தி, சுதேசி இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என்று யாரோ அறிமுகப்படுத்த, சற்றே தீவிரமாக அதில் இறங்கினார்..ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக தன்னுடைய நிலங்களை கொடுத்தும், பள்ளிகள் மருத்துவமனைகள், கிறிஸ்தவ ஆலயங்கள் அமைக்கவும் ஆதரவாக செயல்பட்டுக்கொண்டிருந்த பெரிய தாத்தாவுக்கு இது சிறிதும் ஒப்பாத காரியம்...

வீட்டுக்குள்ளே வராதே என்று தடையுத்தரவு, சொத்தில் நயா பைசா கிடையாது என்ற மிரட்டல் எதற்கும் பணியவில்லை இவர்...

பிரச்சினையின் உச்சகட்டமாக தீவிரவாத குழுக்களோடு இணைந்து தஞ்சை பொது தபால் அலுவலகத்தை கொளுத்தும் முயற்சியில் வெற்றி பெற்றாலும், ஆங்கிலேய அதிகாரிகளிடம் பிடிபட்டார்...

அவர்கள் இவருக்கு அந்தமானுக்கு டிக்கெட் போடும் முயற்சியில் ஈடுபட்டிருக்க, சாக்கடை ஓட்டையோ, சந்துபொந்தோ, எப்படியோ தப்பித்து சில நூறு ரூபாய்களுடன் தன்னுடைய தூரத்து உறவு அத்தை இருக்கும் திருக்கோவிலூருக்கு வந்துசேர்ந்தார்...

தன்னுடைய தஞ்சை கிராமத்துபெயரான மேல்கரையை கொண்டு மேல்கரையார் என்று அழைக்கப்பட்ட இவர் அடித்த லூட்டி கொஞ்ச நஞ்சமல்ல...அதெல்லாம் பின்னால்...

கையில் இருந்த பணத்தை வைத்து சில ஏக்கர் நிலம் வாங்கி ( சில நூறு ரூபாய்க்கே) இங்கேயே செட்டில் ஆக திட்டம் போட்டார்...

அங்கே தஞ்சையில் ஆங்கிலேய அதிகாரிகளிடம் தன்னுடைய குடும்ப பிரச்சினையை சமாளிக்க ஜெயராஜ் என்ற இவரது பெயரில் இருந்த பணியாளர் ஒருவரை ஆஜர் படுத்தி பெரிய தாத்தா அவருக்கு சிறைத்தண்டனையும் பெற்றுக்கொடுத்து, தன்னுடைய மகனை காக்கும் முயற்சியில் வெற்றி பெற்றாலும், இந்த செயல் இவருக்கு சுத்தமாக பிடிக்காததால் தஞ்சையை சுத்தமாக மறந்தார்...

இப்போது திரு.ஜெயராஜ் அவர்கள் சுகந்திரபோராட்ட தியாகி பென்ஷன் மற்றும் அரசிடம் இருந்து சில ஏக்கர் நிலம் பெற்றதாக சில ஆண்டு முன்னால் கேள்விப்பட்டு க்ளுக் என்று சிரித்துக்கொண்டேன்..

இங்கே திருக்கோவிலூர் அருகேயுள்ள கிராமத்தில் தன்னுடைய அத்தை மகளின் அழகில் மயங்கி ஜொள் விட்ட என்னுடைய தாத்தா, தன்னை விட இரண்டு வயது மூத்தவராக இருந்தாலும் கும்பகோணம் வெற்றிலையும், ரவுக்கையும் ( அப்போதெல்லாம் கிராமத்து பெண்கள் ரவிக்கை அணிவது இல்லை) கொடுத்து ப்ரப்போஸ் செய்திருக்கிறார்...(அதை இருவரின் கடைசி காலம் வரை சொல்லி கிண்டல் செய்தேன்...)

இவரின் அதிரடியான அணுகுமுறையில் ஆப் ஆகிய ஆயாவும் ஓக்கே சொல்ல, பெரிய தாத்தாவின் அனுமதியின்றி திருமணத்துக்கு நாள் குறித்தார்...

பெரிய தாத்தாவின் கடைசி தூதர் கொண்டு வந்த செய்திக்கும் இவர் மசியவில்லை...

"நீ அந்த பெண்ணை திருமணம் செய்தால் சொத்து அனைத்தும் உன்னுடைய தம்பிக்குதான் போகும்..."

திருமணம் முடிந்தது...

இன்றைக்கு என்னுடைய சின்னத்தாத்தாவின் மகன் / மருமகன்கள் தஞ்சையில் மிகப்பெரிய வியாபார காந்தங்களாக இருக்கிறார்கள்...

மறுபடி ஸ்டோரிக்கு வருவோம்...

என்னுடைய தந்தையாருடன் சேந்து ஐந்து பிள்ளைகள் இவர்களுக்கு...இரண்டு பெண்கள் தவிர மீதி மூவரில் இருவர் காவல் துறை, ஒருவர் ராணுவம் என்று பணியில் இணைந்தாலும், இவர்கள் இவர்களுடைய தாயார், அதாவது என்னுடைய ஆயா மேல் வைத்துள்ள பாசம் சொல்லி மாளாது....அவர் உயிருடன் இருந்தவரை தினமும் அவரை கவனித்த விதம் - அய்யோ...

ஜீப்பில் இருந்து இறங்கியதும் "யம்மா" என்று கத்திக்கொண்டே உள்ளே நுழையும் காவல் உயரதிகாரி...

எங்கம்மாவுக்கு ஸ்வீட் வாங்கிட்டு வந்தேன் என்று வரும் - என் தந்தையாரின் இளவல் - மற்றொரு காவல் அதிகாரி...

அம்மா, ஆரஞ்சு முட்டாய் வாங்கிட்டு வந்திருக்கேன் என்று கிலோமீட்டர் கணக்காக பயணம் செய்து வரும் ஆரஞ்சு மிட்டாய்...என்னுடைய தந்தையாரின் மூத்த சகோதரர்...ராணுவ மேஜர்...இவருடைய துப்பாக்கியை வைத்து நான் ஒரு கூத்து செய்தேன், அதை பிறகு சொல்கிறேன்...

வாஸ்துப்படி வீட்டை இடித்து முன் வாசல் மாற்றியபோது, எங்கம்மாவுக்கு க்விண் பெட், ஜன்னல் தனியா பெட்டுக்கு பக்கத்துல வரனும், அந்தப்பக்கம் பூந்தொட்டிங்க வெச்சு அதுல இருந்து வாசனை வரனும் என்று ஓவர் டார்ச்சர் செய்தார்...

"அப்பா, தனி ஆளுக்கு எதுக்குப்பா க்வீன் பெட்" என்ற போது..

"அடி பிச்சுருவேன் ராஸ்கல்...எங்கம்மா கைய காலை நீட்டும்...நான் வந்து உக்காருவேன்...நீ ஏண்டா எரிஞ்சுக்கற" என்றார்...

ஆயாவின் மறைவுக்குப்பின் - சில நாட்களுக்கு பின் - அதன் இடது பக்க ஜன்னல் ஓரம் ஒரு திராட்சை செடி முளைத்தது...

செடி, கொடிகள், மூலிகை என்று எல்லா விஷயங்களிலும் ஆர்வம் உள்ள என்னுடைய தந்தையார், அது திராட்சை செடி என்று உடனே கண்டுபிடித்து பந்தல் போட்டு வளர்த்தார்...

அருமையாக ஒரு திராட்சை கொத்து வளர்ந்தது...

எல்லாரும் வீட்டில் கூடியிருந்தபோது, தோட்டத்துப்பக்கம் போன நான் திராட்சை கொத்தை காணவில்லை என்று வீட்டில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது....

"அங்கே பார்" என்றான் என் அண்ணன்...எங்கடா...என்றேன்..."மேலே பார்.."..ஆயா போட்டோகிட்டே பார்...என்று ரஜினி வாய்ஸ் கொடுத்தான்...

ஆயா போட்டோவுக்கு பக்கத்தில் திராட்சை கொத்து சிரித்துக்கொண்டிருந்தது...

காரணம் அப்பா...

என்னப்பா இது...என்றேன்...

ஹும்...எங்கம்மாவுக்கு தான் திராட்சை...என்றார்...

என்ன பாசம்...ஏனோ அன்றைக்கு இரவு கண்ணீர் வந்தது...எப்போதும் என்னுடைய தாயார் மீது எரிந்து விழும் என்னுடைய ஆட்டிட்டியூட் மாறியது அந்த சம்பவத்துக்கு பிறகு...

இப்போ கொரியாவுக்கு வரேன்...

பதினைந்து நாளைக்கு முன்னால் "தன்னிலை விளக்கம்" என்று ஒரு பதிவு எழுதிவிட்டு அடுத்த நாள் காலையில் எழுந்தபோது இடுப்பில் பயங்கர வலி...

என்னுடைய டீம் மெம்பர்கள் கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டுபோய் "ஹீ ம்யாங் - ப்யாங் வான்" (ப்யாங் வான் என்றால் கொரியன் மொழியில் ஆஸ்பத்திரி) - கொண்டுபோனார்கள்...

இடுப்பில் எலும்புக்கு கீழே ஆப்ஸஸ் / பிஸ் / நோய் தொற்று கிருமிகள் மொத்தமாக சேர்ந்திருப்பதாகவும், உடனே ஆப்பரேஷன் செய்யவேண்டும் என்றும் உடைந்த ஆங்கிலத்தில் டாக்டர் லீ சொல்ல...

நொந்தேன்...

சோனோகிராபி, சி.டி ஸ்கேன், ஆசனவாயில் குழாயை வைத்து கொன்று எடுத்தார்கள்...

ஆப்பரேஷன் போது, அனஸ்தீசியாவாம் - இடுப்பு எலும்பில் ஊசி ஒன்றை சொருகியபோது உயிரே போகும்படி வலி...

இந்த நாட்டின் மருத்துவ முறைகள், ஊசி போடும் முறை, எப்போதும் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற ப்ராஸஸ், ஒரு வேளைக்கு பதினைந்து இருபது மாத்திரைகள் என்று பத்து நாள் ஒரே இடத்தில் மொழி புரியாத நர்சுகளிடம் எனக்கு தெரிந்த அரைகுறை கொரிய மொழியை வைத்து சமாளித்து, டப்பாவில் யூரின் போய் அதை நானே கொண்டு போய் ஊற்றவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி, கிட்டத்தட்ட செத்துப்பிழைத்து வந்திருக்கிறேன்...

ஒரு முறை மருத்துவமனையில் பணம் ட்ரான்ஸபர் செய்யவேண்டும் என்று டாக்டரிடம் விளக்கி இண்டர்நெட் பெற்று ஐந்து நிமிடம் படுத்தபடி சிலருக்கு மடலும், ட்ரான்ஸ்பரும் செய்தேன்...

தேறி வரும் வேளையில் அது பற்றி லக்கியின் பதிவு படிக்க நேர்ந்து வலித்தாலும் பரவாயில்லை என்று சிரித்தேன்..

பதினைந்து நாட்கள் படுத்து எழுந்து வந்து பார்க்கையில் எவ்வளவு மாற்றங்கள்...!!!!!!

ட்வெண்டி ட்வெண்டி வின், போலி பிரச்சினை முடிவு, கலைஞர் பற்றி ஞானி, ஆஸ்திரேலியா சீரிஸ் மூன்றாவது மேட்ச் தோல்வி...ஹும்...

இந்த சமயத்தில் நான் நலம் பெற வேண்டும் என்று பின்னூட்டமும் மடலும் அனுப்பிய அனைவருக்கும் நன்றி !!!!!!!!! முடிந்தால் இன்னும் ஓரிரு நாளில் எழுதுகிறேன்...

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....