தேடுங்க !

Thursday, December 20, 2007

காக்கா டெயில் 2 !!!!!!!!!!!!!!!!!

காக்டெயில் ரெண்டு !!!!!!!!!!!!!!!!

நான் ஒரு பொய்யன்...! ( ஏன் அப்படீங்கறதை பதிவு கடைசியில பாருங்க)
மற்ற திரட்டிகள் பற்றி...தமிழ்வெளி நல்லாருக்கு.....டிஸைன் ஆப்ஷன்ஸ், பிரபலமானவர்களின் பேட்டிகள்...குட்...கீப் கோயிங்... தமிழ்மணம் மற்றும் தேன்கூட்டில் இருக்க நல்ல ஆப்ஷன்ஸ் எல்லாம் எடுத்து செய்திருப்பது நல்லா இருக்கு...

தமிழ்ப்பதிவுகள் கூட அருமை...பதிவுகள் எல்லாம் படிக்கனும்னு நினைக்கிறவங்களுக்கு (தனி வெப் பேஜ் ஓப்பன் செய்யாமலேயே - எடுத்து காட்டுவது அருமை...) ஆனா வெறும் பத்து பதிவுகள் மட்டும் காட்டாம இன்னும் நிறைய காட்டலாம்...ஆனா பதிவு மட்டுமில்லாம பின்னூட்டமும் காட்டினா இன்னும் சூப்பரா இருக்கும்...(டெக்னிக்கலா முடியுமான்னு கேக்கனும் முகுந்த் கிட்ட)...ஆனா மெதுவான இணைய இணைப்பு மற்றும் சோம்பேறிகளுக்கு தமிழ்ப்பதிவுகள் நல்ல சாய்ஸ்...(நோகாம நோம்பு கும்பிடலாம்)...

தமிழ்பாரதி, திரட்டி அப்படீன்னெல்லாம் வந்திருக்காமே...நான் இன்னும் பார்க்க நேரம் கிடைக்கல
******************************************************************************
பெங்களூரில் ஏன் சூரியன் எப்.எம் இல்லை என்று மொக்கையா கேட்டு பதிவிட்டிருந்தார் ஒருத்தர்...சென்னையில் / தமிழ்நாட்டில் "அனிசிதரு" அப்படீன்னு கன்னடா பாட்டு ஓடுதுங்களா என்று நான் பின்னூட்டம் போட்டிருந்தேன்...அப்படியே தமிழ் எப்.எம் வெச்சிட்டாலும் வாட்டாள் நாகராஜ் அறிக்கை விட்டு வரவேற்ப்பானா என்ன ? பொளந்துறமாட்டான் ? அங்கே அனானி ஒருத்தர் கொடுத்த சூப்பர் ஐடியாப்படி ஓசூர்ல வெக்கலாம்....ஆனா சுச்ச்சீத்துரா ஓசூர்ல வந்து பேசுவாளா ?
********************************************************************************
நதிகள் இணைக்கறது பத்தி ஏன் இன்னும் ரஜினி முச்சு விடலை ? ஒரு கோடி கொடுக்கறேன்னு சொன்னாரே அப்படீன்னு சொல்றாங்க....ரஜினி இதுவரைக்கு தமிழ்நாட்டுக்கு கன்ஸ்ட்ரக்டிவ்வா எதுவும் செய்யலைங்கறது ஒரு ஆதங்கம் இருந்தாலும் ஏன் சினிமாக்காரங்களை நம்பி தமிழக அரசியல் ஓடுதுன்னு வெறுப்பா இருக்கு...ரஜினி நினைச்சா, களத்துல இறங்கி, ரசிகர்களை திரட்டி, தமிழ்நாட்டுல இருக்க நதியை எல்லாம் குழி வெட்டி இணைக்க முடியாதா ?

எங்க ஊர்ல தென்பெண்ணை ஆறு ஓடுது...வருஷத்துல ரெண்டு முறை புல்லா தண்ணி போயி கடல்ல கலக்குது....ஆத்துல மணலை அள்ளி அள்ளி ஆத்தையே கிணறு மாதிரி ஆக்கிட்டானுங்க...கண்ணுக்கெட்டிய தூரத்துல பிரவாகமா ஆத்து தண்ணி ஓடிக்கிட்டிருக்கம்போதே நிலத்தடி நீர் 200 அடி முன்னூறு அடிக்கு போறமாதிரி மணல் கொள்ளையனுங்க செஞ்சுட்டானுங்க...லாரியில மணல் அள்ளுறது இல்லாம கொறைஞ்ச லோன் அமவுண்டுல "ஆப்பே" ஒரு சின்ன யானை விட்டிருக்கானுங்க...

தெருவுக்கு ஒருத்தன் அதை வாங்கி வச்சிக்கிட்டு, எல்லா நதிகளையும் நிர்வாணமாக்கிக்கிட்டு இருக்கானுங்க...அதை முதல்ல கேக்கட்டும் அந்த தாவரம்...அப்புறம் ரசினியோன வாய் சவடால் என்ன ஆச்சின்னு கேக்கலாம்...

**********************************************************************************டாட்டாவோட ஒரு லட்ச ரூபாய் கார் வருதாம்...இந்த ஜனவரி பத்தாம் தேதி டெல்லியில நடக்கற கார் எக்ஸ்ப்ப்போவுல ப்ரோட்டொடைப் வெக்கப்போறாங்களாம்...

டெல்லிப்பதிவர்கள் மங்கை அக்கா, முத்துலச்சுமி அக்கா - போய் ஒரு எட்டு பாருங்க...(ஏற்கனவே பெங்களூர்ல ட்ராபிக் தொல்லை...இதுல இவனுங்க வேற...சரி நாம இனிமே காரை வீட்லே நிறுத்திட்டு சைக்கிள்ள ஆபீஸ் வரவேண்டியது தான்...)....

ஒரு கியர் சைக்கிள் வாங்கலாம்னு இருக்கேன்...சின்ன வயசுல ஆசைப்பட்டேன்...இப்பவாவது வாங்கி மெதிச்சா டயபட்டீஸாவது குறையும்...தேசிகன், மவுல்ஸ் எல்லாம் இந்த ட்ராபிக்ல எப்படி கார் ஓட்டிக்கிட்டு இருக்காங்கன்னு தெரியல...அட்வைஸ் கேக்கனும்...

*********************************************************************
எம்.எஸ்.விக்கு விருது கொடுக்காததுக்கு சர்வேசன்,வவ்வால்,கானாபிரபா,நான் எல்லாரும் டென்ஷனாகி பதிவு போட்டிருந்தோம்...

அவர் காதுக்கு அது கண்டிப்பா எட்டியிருக்கு...ப்ரகாஷ் ராஜ் படவிழாவுக்கோ / பட பூஜைக்கோ வந்திருக்கார் எம்.எஸ்.வி...(அவரோடு இணைந்து இசையமைச்ச ராமமூர்த்தியும் வந்திருந்தார்)...

அதில எனக்கு ஜனாதிபதி விருது வேனாம், மக்கள் விருதே போதும்னு சொல்லிட்டார்....உங்களுக்கு மக்கள் மனதுல என்னைக்கும் இடம் இருக்கும் எம்.எஸ்.வி அய்யா....நீண்ட ஆயுசோட நல்லா இருங்க...

*******************************************************************************
ஓசை செல்லா அண்ணனை நக்கல் விடுறதுக்காக நாளைக்கு பதிவு எதுவும் கிடையாதுன்னேன்...பட் இன்னைக்கு போட்டுட்டேன்...நான் பொய்யன் தானே ? நல்லா திட்டுங்க...முடிஞ்சா ஒரு மைனஸ் ஓட்டு போடுங்க ப்ளீஸ்...
*********************************************************************************

Wednesday, December 19, 2007

காக்டெயில் !!!!!!!!!!!!!!

முன்னோட்டம் : நாளைக்கு பதிவு எதுவுமில்லை....!!!

காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதை தெரியுமா யாருக்காச்சும் ? தெரியும்னே வெச்சுக்கறேன்...யாராவது காக்கா பனை மரத்துல உக்கார்ந்து பார்த்திருக்கீங்களா ? எனக்கு தெரிஞ்சு எந்த காக்காயும் பனைமரத்துல உக்காருவதில்ல...ஏன் இதை இங்க சொல்றேன்னு பாக்குறீங்களா ? இது என்னோட பதிவு..நான் இப்படித்தான் சம்பந்தா சம்பந்தம் இல்லாம என்னைப்பத்தி எழுதுவேன்...

சரி விஷயத்துக்கு வருவோம்...(வந்துட்டான்யா வந்துட்டான்...!!!!)
சமீபத்தில் பார்த்த படம் கல்லூரி...பார்த்த இடம் திருட்டு டி.வி.டி ( திருட்டு வி.சி.டி என்று எழுதுவதை தினத்தந்தி மாற்றிக்கொள்ளவேண்டும்)...
கடந்த ஒருமாதமாக நான் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு செல்லும் நேரம் மணி 12க்கு குறையாமல் இருந்துவருகிறது...(இந்த லட்சணத்துல கல்யாணம் வேற...அது வேற கதை அதை விடுங்க)...சனி, ஞாயிற்றுக்கிழமையும் அலுவலகம் வந்து ஆணி புடுங்கியதன் விளைவு, ஒரு படத்தையும் பார்க்க முடியல...

அவ்வப்போது வலைப்பூக்களை எட்டிப்பார்த்து ரெக்ரியேஷன் ஆகிக்கறதொட சரி...இருந்தாலும் வீட்டில் மனைவி வாங்கி வைத்துள்ள டி.வி.டிக்களை அவ்வப்போது (பார்ஸ்ட் பார்வர்ட் செய்து) பார்த்துவருகிறேன்...
அப்படி நேற்று பார்த்த படம் தான் கல்லூரி...தமிழ்சினிமாவை உலகத்தரத்துக்கு கொண்டு போகிறேன் என்றெல்லாம் பாலாஜி சக்திவேல் படம் எடுக்கவில்லை என்று தோன்றுகிறது....

மக்களின் உணர்வுகளோடு விளையாடி காசு பார்க்கும் 'சீப்பான' மணி ரத்தினம் உத்திதான் என்பது தெளிவாக தெரிகிறது...அது என்ன மணி ரத்தினம் உத்தி ? மணி தேற்றுவது தான் அவன் உத்தி...மும்பை கலவரத்தை வைத்து காசு பார்த்த பம்பாய், இலங்கை பிரச்சினையை தொட்டு ரூவா தேத்திய (அதிகமா தேத்தமுடியல பாவம்) கண்னத்தில் முத்தமிட்டால் (டேய் - சமூக உணர்ச்சியோட படம் எடுக்க உனக்கெதுகுடா சிம்ரன் ? ஏன் கொல்லங்குடி கருப்பாயிய வெச்சு எடுக்கறது ? ), காஷ்மீர், முஸ்லீம், தீவிரவாதம் என்று துட்டு தேற்றிய ரோஜா என்று எடுத்தால் மணி ரத்த்தினத்தினத்தின் உத்தி வெள்ளிடை மலைபோல் விளங்கும்...(உன் பொண்டாட்டிக்கு மொதல்ல நல்லதா நாலு ட்ரஸ் வாங்கிக்கொடுங்க மணி.....செயா டிவியில ட்ரான்ஸ்ப்ரண்டுல வருது கிழவி...)

புதிய கிராமத்து முகங்கள், குடும்ப பிரச்சினைகள், அட்டு பிகர் தோழி போன்ற பல டெக்குனிக்கு சமாச்சாரங்களை படத்தில் வைத்துள்ள பாலாஜி சக்திவேல், படத்தை பார்ப்பவர்களின் கல்லூரிக்காலத்தை நினைவுபடுத்துவதில் வெற்றிபெற்றுவிடுகிறார் என்றுதான் சொல்லவேண்டும்...

ஸ்கூட்டியில் கல்லூரி வரும் ஹீரோயினின் இடது பக்கத்தில் இருந்த யூக்கலிப்டஸ் மரங்கள் ஒன்றே போதும்...என்னுடைய கல்லூரிக்காலத்துக்கு தரதரவென என்னை இழுத்துச்செல்ல...அதெல்லாம் எப்படி சொல்றது.....ஹும்...அதெல்லாம் ஒரு காலம்.....!!!!

******************************************
வலைப்பதிவுலகில் புதிய பதிவர்கள் பலர் நன்றாக எழுதிவருகிறார்கள்...ஆனால் வரும்போதே மொக்கையே தாரக மந்திரம் என்று சாரி சாரியாக கிளம்பி வருவது ஏற்கனவே உள்ள சக மொக்கை பதிவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு உள்ளது...இருந்தாலும் வலைப்பதிவுலகின் நீங்காத பண்பான கூட சேர்ந்து கும்மி அடித்தல், பின்னூட்ட மொய், ஒரு மொக்கையை வைத்து இன்னொரு மொக்கை என்று சிறப்பாகவே செயல்படுகிறார்கள்...அனைத்து மொக்கை பதிவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்...!!!!!
*********************************************
கோவை.ரவி பதிவை யாரும் க்ளிக் செய்யல்லியே என்று அவர் வருத்தத்தில் உள்ளார்...அதனால் அவருடைய பதிவை வைத்து ஒரு மொக்கை போட்டு, அந்த பதிவை பேபஸ் ஆக்குமாறு அமீரக கும்மிகளான அபி.அப்பா, குசும்பன், தம்பி ஆகியோரை கேட்டுக்கொள்கிறேன்...
*********************************************
எங்கள் கல்லூரி காலத்தில் நெஞ்சை நக்குதல் என்று ஒரு டெர்ம் சொல்வோம்...அதாவது (ஜஸ்ட் உதாரணம் தான் - கோச்சுக்கவாணாம்) அபி.அப்பா இப்போது "வலைப்பதிவர்களே, நீங்க எல்லாரும் அண்ணன் தம்பி மாதிரி, உங்கவீட்டு கல்யாணத்துக்கு நான் வந்துதான் தட்டு மாத்துவேன் என்பது போல வாசகங்களை பார்த்தால் "நல்லா நெஞ்சை நக்குறாங்கப்பா" என்ற உணர்வு வருவதை தடுக்க இயலவில்லை...!!!
*********************************************
நச்சென்று ஒரு கதை எழுதலாம் என்று நினைத்தேன், ஒரு தீம் கூட யோசித்தேன்...அப்புறம் வெட்டிப்பயலோட கதையை படித்தேன்...பிறகு தான் யோசித்தேன்...இந்த கதைக்கு அப்புறம் நாம எந்த கருமத்தை எழுதினாலும் பரிசு இந்த கதைக்குத்தான் என்று எழுதுற முடிவை கைவிட்டுவிட்டேன்...அருட்பெருங்கோவோட சென்னைக்காதல் - திருச்சிக்காதல் என்ற கதை கூட சூப்பர்...தலைப்பு தான் இன்னும் கொஞ்சம் "கேட்சி" யா வெச்சிருக்கலாம்...
*********************************************
தமிழ்மணி - அசுரன் - ஓசை செல்லா என்ற பதிவுகளை (தலைப்பை) பார்த்தாலே அலர்ஜியா இருக்கு....ஏன் இந்த தமிழ்மணிக்கு இந்த கொலைவெறி... ? ( ஆமா, யாரு தமிழ்மணி ? )
*******************************************
தமிழரங்கம், சிந்திக்க உண்மைகள் இரண்டு பதிவுகளும் படிக்க நல்லா இருக்கு...நெறைய சரக்கு உள்ள பதிவுகள்....அதுக்காக நீங்க அதை படிங்கன்னு சொல்லவர்ல...கலாகாம் மத் கர்...குச்.குச்.ஹோத்தா.ஹே...அப்படீன்னா சிங்கம் சிங்கிளாத்தான் வரும்னு அர்த்தம்...(நன்றி : மோகன்ந்தாஸ்) ( இதுக்கு பி.கே.எஸ் பின்னூட்டம் போடுவாரா ?)
*********************************************
இதை எல்லாம் தனித்தனி பதிவா போட்டு கும்மி அடிக்க நேரம் இல்லாததால் காக்டெயியுலுறேன்...காக்காவுக்கு டெயில் கருப்பு...டிசம்பருக்கு மொத்தம் பதிமூனு நாள் லீவு போட்டிருக்கேன்...என்ன செய்யறதுன்னு தங்கமணி கிட்ட தான் கேக்கனும்...வர்ட்டா...............
***********************************************

கொலைவெறி வலைப்பதிவர் சந்திப்பு (ப்ரார்த்தனாவில்) !!!!!!

பிரார்த்தனா ட்ரைவ் இன்னில் என்னுடைய வாடகைக்கார் நுழைந்தபோது மணி ஆறு நாற்பது..

கண்டிப்பாக வருவேன் என்று சொன்ன டி.பி.கஜெந்திரன்,திரும்பி
பார்த்ததில் கழுத்து சுளுக்கியதால் சத்தியமாக வரமாட்டேன் என்று
குறுஞ்செய்தி அனுப்பினார்..

(பாசக்கார பயலுக, ஓட்டறதுக்காவது நம்மளை
நியாபகம் வெச்சிருக்கானுங்களே...)

திரட்டியில் விருது தரும் விஷயத்தை முன்பே தெரிந்துகொண்டு,தினமும்
சமூகம்,கவிதை,கதை,கட்டுரை,என்று போட்டுத்தாக்கி எழுதிவரும்

"சாவி.மன்னன்" ஏற்கனவே வந்து டேபிளில் சிவப்பு நிற கதர் துண்டுபோட்டு இடம் பிடித்திருந்தார்..

(அவனுங்கதான் அப்படி...நான், என் வாயால
கேடின்னுல்லாம் சொல்வேனா ??? என்னயிருந்தாலும் பழகுன பாசம்
சும்மாவிடுமா..)

(டேய் நடுவர் குழுவுல மட்டும் தயவு செய்து
சேர்த்துடாதீங்கடா ப்ளீஸ்)

சொன்னபடி ஏபிசிடி, மரஓனாய் முகேஷ், செந்தழல் ரவி, சேலத்தில் இருந்து ஓசை பில்லா, பிபகூகா, கிருட்டினா, ஸைமல்ட்டேஷன் ஆகியோர் ஏற்கனவே வந்து இருக்கைகளை ஆக்ரமித்திருந்தார்கள்...

என்னுடைய பதிவில் நேத்தே போட்டபடி ( எப்படி?) ப்ரெஞ்ச் ட்ரீட் என்பதால்
ஆளுக்கு பத்து ரூபாயாவது கண்டிப்பாக வைத்திருப்பார்கள் என்று நம்பி
அவர்களை நோக்கி மேலே நடக்கிறேன்...

இப்படித்தான் என்னுடைய நேற்றைய பதிவில் இரண்டு பாரா அறுத்திருந்தேன்... ""போன முறை செய்து நன்றாக வெற்றி கண்ட அதே முறைதான்.

மீட்டிங்கிற்கான செலவு பற்றி பேசுகிறேன். இம்முறையும் சந்திப்புக்கு வருபவர்கள் எல்லோருமே
செலவை பகிர்ந்து கொள்கிறோம்.

செலவு என்ன பெரிய செலவு, போண்டா (நோட் திஸ்
பாய்ண்ட்), காபி (பில்டர் / கிங்ஸ் காபி) ஆகியவைக்கு ஆவதுதான்.

நிறைய பேர் வந்தால் ஒரு ஹாலை அங்கே இரண்டு மணி நேரத்துக்கு எடுத்து அறுக்க வேண்டி வரலாம்.

சாதாரணமாக இது தேவைப்படாது, பார்க்கலாம்.

போன முறை ஒரு சிறு குறைபாடு தென்பட்டது.

பலர் காபி மட்டும் போதும் எனக் கூறிவிட்டனர். (காசு இருந்திருக்காது)

ஆனால் டிவைடிங் சிஸ்டமில் எல்லோரையும் போலவே காண்ட்ரிப்யூட் செய்தனர் (ஓ இருந்திருக்கு).

எனக்கு சட்டைக்குள் உறுத்தலாக இருந்தது. இம்முறையாவது தயவு செய்து கூச்சமின்றி ஆர்டர் செய்யுங்கள்.

பிரார்த்தனா டிஃபனை அனுபவித்து உண்ணவும்.

சற்றே காலி வயிற்றுடன் வரவும். வழக்கம் போல வசூல் செய்யப் போவது மொழிபெயர்ப்பாளன் காண்டு கஜேந்திரனே !!!.

போண்டா மட்டுமே உணவல்ல, இட்லி வடையும் (ஜெயா
டிவி அபிஹியல் பதிவாளர் அல்ல), ஆனியன் ஊத்தப்பமும், பூரி கிழங்கும்,
பாஸந்தியும் உண்டு என்பதையும் நினைவில் கொள்ளவும்.

பாஸந்தி என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்கு ஒரு
நினைவூட்டல்...

சமீபத்தில் (முடியல..எத்தனை பேரு இதையே யூஸ் பண்ணி
ஓட்டுவீங்க - சரி வேற வழியில்ல ) சமீபத்தில் 1946 ல் வந்த சர்வர்
சுந்தரம் படத்தில் நாகேஷிடம் சினேகா கேட்கும் அதே பண்டம் இந்த பாஸந்தி...

ஓக்கே கம்மிங் பேக் டு த பாயிண்டு ( இது தினமடல் சந்துமணி (காமேஷ்) இடம் இருந்து சுட்டது)

This will be strictly French treat. "

ஓக்கே ஓக்கே, லெட்ஸ் கோ டு டயலாக் மோட்...

சாவி: என்ன காண்டு சார்...சாப்ட்டேளா ?

காண்டு: என்ன சாவி..ஆரம்பத்துலயே கிண்டல் பலமாருக்கு...

ஏபிசிடி : எனக்கு ஒன்னுமே புரியல...விளக்கவும்..

மரஓனாய்: சார் அதை விடுங்கோ...நாம வந்த வேலையை பார்ப்போம்...

ஸைமல்டேஷன்: மரஓனாய்...செத்த நேரம் சும்மா இருங்க...விவாதத்துக்கு போலாம்...

செந்தழல்: டேய் செத்த நேரம் எப்படிடா சும்மா இருக்கறது ?

ஓசை பில்லா: வாயப்பொளந்துகுட்டு தான் இருக்கனும் ரவி...நெத்தியில காசோட...

கிருஷ்னா: சார் அப்பலேருந்து என்னை மொறைச்சு மொறைச்சு பாக்குறார் இந்த பில்லா..அத மொதல்ல விவாதப்பொருளாக்குவோம்...

மரஓனாய்: சார், விவாதம் எல்லாம் அப்புறம் வெச்சுக்கலாம்...மொதல்ல
வந்தவேலையை பார்ப்போம்..

சாவி: டேய் நீ கொஞ்சம் கம்னு இருக்கியா...நான் சார்வாளோட டிஸ்கஷன்
பண்றதுக்கு பர்மாவுலருந்து வந்திருக்கேன்...

ஓசை பில்லா : பார்மாவுலருந்து தேக்கு தானே வரும்...நீங்க ஏன் வந்தீங்க ?

ஏபிசிடி: சார் எனக்கு புரியல...கொஞ்சம் விளக்குங்க...

செந்தழல்: நீ போய் ஓட்டல்ல பாத்திரத்த எல்லாம் விளக்கு...அப்புறமா நான்
விளக்கறேன்...

ஏபிசிடி: கிண்டல் வேண்டாம்..நாம ஏன் இங்க வந்திருக்கோம்...அதை மொதல்ல எனக்கு புரியவைங்க...

ஓசை பில்லா: நான் காரை பத்தி டிப்ஸ் கொடுக்க வந்தேன்...

காண்டு: நான் சொல்றேன் காரைப்பத்தி...நான் வாடகைக்காரை என்னோட கார் மாதிரி ட்ரீட் பண்ணி எஞ்சின் ஆயில் எல்லாம் வாங்கி ஊத்தறவன்...நான்
சொன்னாத்தான் சரியா இருக்கும்...

சாவி: எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் பில்லா...இந்தாளை கொஞ்ச நேரம் சும்மா
இருக்கச்சொல்றீங்களா ?

ஓசை பில்லா: ம்ஹும்...அது என்னால முடியாது...ஸைமல்ட்டெஷன் இல்லைன்னா மரஓனாய்க்கிட்ட சொல்லுங்க...

மரஓனாய்: சார் அவரை அடக்கறது இருக்கட்டும்...நாம வந்த வேலையை பார்ப்போமா ?

சைமல்ட்டேஷன்: இவன் வேற வந்ததுலருந்து தேஞ்சுபோன டேப்ரிக்கார்டர் மாதிரி ஒளறிக்கிட்டே இருக்கான்...

செந்தழல்: சார், டேப் ரிக்கார்டர் தேயாது, கேசட் தான் தேயும்...

ஓசை பில்லா: ஏய் கம்மியூனிக்கேஷன் மீடியாவுல இருக்கற நான் தான் இந்த
மாதிரி மேட்டரை டீட்டெயிலா சொல்லனும்...

செந்தழல்: சரி நீங்களே சொல்லித்தொலைங்க...

ஓசை பில்லா: டேப் ரிக்கார்டர் தேயாது...கேசட் தான் தேயும்..

செந்தழல்: அண்ணே அதைத்தானே நானும் சொன்னேன்...

ஓசை பில்லா: தம்பி, நான் தான் சொல்லனும்னு சொன்னேனே தவிர அதையே சொல்லமாட்டேன்னு சொன்னேனா ? இது தான் சேலம் குசும்புன்றது....ஸ்டாஷி ஏழுமலை சேலத்துக்காரர்னே எனக்கு முந்தா நேத்துத்தான் தெரியும்...என்னோட பிரண்ஸ் லாரா, மெக்ராத், ப்ரெட் லீ, ஜெட் லீ கூட எல்லாம் போட்டோ எடுத்திருக்காங்க தெரியுமா ?

செந்தழல்: அண்ணே, என்ன கொடுமை இது...சானியா மிர்சா கூடத்தான் ஒய்.எஸ்.ஆர் கூட போட்டோ எடுத்தா...அதுக்காக அவளை என்னோட ப்ரெண்டுன்னு சொல்ல முடியுமா ?

ஓசை பில்லா : ஒன்னுமே புரியலயே ? இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் ?

ஏபிசிடி : எனக்கும் புரியல...எனக்கும் புரியல...தயவு செய்து இதையாவது விளக்கவும்...

செந்தழல்: ஹைய்யோ முடியலயே !!!!!!!!!!!!!!!

காண்டு: இவ்ளோ நேரம் எனக்கு டயலாக் கொடுக்காம இருக்கறதுக்கு உன் மேல கோர்ட்ல கேஸ் போடுவேன்...

மரஓனாய்: ஏன் தேவை இல்லாம பேசுறீங்க சார்...நாம வந்த வேலையை பார்ப்போமா ?

க்ருஷ்னா: சார் எனக்கு நெஞ்சு வலிக்கறமாதிரி இருக்கு...நான் பாத்ரூம்
வரைக்கும் போயிட்டு வந்திரட்டுமா..?

செந்தழல்: லூசாப்பா நீ ? நெஞ்சு வலிச்ச்சா எதுக்கு பாத்ரூம் ?

சைமல்ட்டேஷன்: சார்..கொஞ்ச நேரம் தனிமனித தாக்குதல நிறுத்திட்டு பொது விஷயம் பேசுவோம்...

செந்தழல்: ஹப்பா...இவன் மனுஷன்...சரி என்ன விஷயம் பேசலாம்...

ஓசை பில்லா: நான் தான் பேசுவேன், நான் தான் பேசுவேன்...கார்ல கறுப்பு
கண்ணாடி வெக்கிறது தப்பு...எல்லாரையும் ரோட்ல லவ் பண்ண விடுவீங்களா மாட்டீங்களா ?

செந்தழல்: பில்லா...ப்ளீஸ்...கொஞ்சம் அடுத்தவங்களுக்கு வாய்ப்பு
கொடுங்க...அதுவும் தனிமனித தாக்குதலற்ற பொதுவிஷயம் அப்படீங்கறார்
சைமல்ட்டேஷன்...நீங்க பேசுங்க சார்...

சைமல்ட்டேஷன்: காண்டு சார், வரவணைக்கிட்ட வாங்கின கிங்ஸ் எங்க ?
சுகுணாக்கிட்ட வாங்கின பியர் எங்கே ?

காண்டு : (பயங்கர டென்ஷனாகிறார்) அதுக்கு நான் அப்பவே ப்ரெஞ்சு ட்ரீட்
மூலம் பேய் பண்ணிட்டனே ? மிச்சம் பதினாலு ரூபாய செந்தழலுக்கு டி.டி
எடுத்து அனுப்பினேனே ?

சாவி: என்னது பேய் பண்ணீங்களா ? நீங்க பேய் பிசாசு எல்லாம் வெச்சிருக்கீங்களா ?

காண்டு : யோவ்....டங்கு ஸிலிப்...அது பே...கிவ்விங் மனி...பிரெஞ்சுல பான்
வாயேஜ், உருதுல பான் பாராக்க்..

செந்தழல்: அதை விடுங்க...எனக்கு டி.டி வரல...எப்போ அனுப்பப்போறீங்க... (
காண்டு சைலண்டாகிறார்)

ஏபிசிடி: எனக்கு எதுவுமே புரியல...

செந்தழல் : உங்களுக்கு என்ன தான் சார் புரிஞ்சுருக்கு ?

ஓசை பில்லா: (கொலைவெறியுடன்) டேய், இவனா பொது விஷயம் பேசுறான் ?

செந்தழல்: அட அதுதானே ? என்ன கொடுமை கோயிந்தன்..

மரஓனாய்: ப்ளீஸ்...நான் சொல்றத கொஞ்சம் கேளுங்களேன்...நாம வந்த வேலையை பார்க்கலாமே...

செந்தழல்: எவண்டா இவன் வந்ததில் இருந்து வந்த வேலையை பார்க்கலாம்,
வராதவேலையை பார்க்கலாம்னு ஒளறிக்கிட்டே இருக்கான்...அப்படி என்னதாண்டா நீ சொல்ல வரே ? எங்க சொல்லு...

ஓசை பில்லா: ஆமாம் சொல்றா...

காண்டு, சைமல்ட்டேஷன், க்ருஷ்ணா எல்லாரும் கோரஸாக வற்புறுத்துகிறார்கள்...

மரஓனாய்: சொல்லிடுறேன்...இப்ப சொல்லிடுறேன்...

செந்தழல்: டேய் நாங்க இப்பவே காண்டுல இருக்கோம்...வீனா பிரார்த்தனாவுல கொலைவிழ வைக்காத...சொல்றா...

பிபகூகா: நான் வந்ததில் இருந்து எதுவும் பேசலை...இருந்தாலும்
சொல்றேன்...மரஓனாய்...தைரியமா சொல்லுங்க...

மரஓனாய்: ஹி ஹி சொல்றேன் சொல்றேன்....பேரர் !!!!!!!!!!!!!!!! ரெண்டு
போண்டா !!!!!!!!!!!!!!!!!!!!!!!

கொலைவெறியுடன் சாவி, ஏபிசிடி,செந்தழல், பில்லா இருவரும் மரஓனாயை துரத்த, அவர் ஓட, காண்டு முதல் ஸைமல்ட்டேஷன் வரை எஸ், எஸ், எஸ் என்று இளிக்கிறார்கள்...

பின்னால் போடும் குறிப்புகள்:

திடீர் திருமணத்தாலும், அலுவலக வேலை காரணமாகவும் பதிவுகள் அதிகம்
எழுதாததனால் தமிழ் வலையுலகமே போரடிச்சு போச்சாமே ( டேய் இது ரொம்ப ஓவர்)...மற்றபடி பதிவெழுத அழைத்த தமிழச்சி, சிந்தாநதி, மற்றும்
ஆயிரக்கணக்கான வாசகர்கள் ( ப்ளீஸ் வேணாம் - முடியல) ஆசைப்படி ஏதோ ரெண்டு மொக்கை போஸ்ட் போட்டு என்னுடைய இருப்பை காட்டிக்கிட்டாலும், அதுக்காக டோண்டு ராகவனோட அரதப்பழசு வலைப்பதிவர் சந்திப்பை எடுத்து கிண்டல் பண்ணனுமா என்று கொலைவெறிடன் கேட்காதீங்க...வேற வழியில்ல...டோண்டு சாரை
ஓட்டி - போஸ்ட் போட்டு ஆரம்பிச்சாத்தான் வலைப்பதிவு ஓஹோன்னு ஓடும்..பேபி பவன், இரண்டாம் சொக்கன், குட்டிப்பிசாசு போன்றவர்கள் கவனிக்க...குசும்பன் எதுவும் சொல்லிக்கொடுக்கலையா ? )

டிஸ்க்ளெமர் : இந்த பதிவு யாரையும் குறிப்பது அல்ல, டோண்டு சாரை மட்டும் குறிப்பதாகும் ( ஹி ஹி - இது உனக்கே ஓவரா தெரியல...ஓட்டறது நல்லா ஓட்டுங்க...அப்புறம் சார் மோர்னு போட்டு டிஸ்கி போடுங்க...அவரும்
சிரிச்சுட்டு ரெண்டு பின்னூடம் போட்டுட்டு போயிருவார்...ஹும் எப்பத்தான்
திருந்தி இந்த ஆரிய மாயையில் இருந்து விடுபடுவீங்களோ)

Tuesday, December 18, 2007

மொக்கை விருதுகள் 2007

செந்தழல் ரவியுடன் வழக்கமாக சுண்டக்கஞ்சி அருந்தும் சுகுணா, வரவணை, லக்கி ஆகியோருடன் புதிய நன்பராக முட்டம் சின்னப்பதாஸ் மற்றும் ஸ்டாஸி ஏழுமலை....மெரினா பீச்சில் சுண்டல் சாப்பிடுவதாக முடிவு செய்யப்படுகிறது...

எல்லாருக்கும் போன் பண்ணிச் சொல்லிய பிறகும் ஆறு மணிக்கு வரவேண்டிய மொக்கைக்கு ஏழுமலை மட்டுமே வந்திருக்க, லைட்டாக பேச்சுக்கொடுக்கிறேன்...

செந்தழல்: வாங்க ஏழு...ஏது இந்தப்பக்கம் ? சேலத்துல சேவை செய்யறதா கேள்விப்பட்டேனே ? என்ன முதியோர் இல்லம் ஏதாவது ஆரம்பிச்சிருக்கீங்களா ?

ஏழுமலை: ம்ஹும்...அனில் சேமியா டிஸ்ட்ரிபூட்டரா இருக்கேன்...முதியோர் இல்லம் நடத்துறேன்னு சொன்னவன் மனிதனா மிருகமா ?
செந்தழல்: என்ன சார்...ஏழுமலைன்னு சாமி பேர் வெச்சிருக்கீங்க...மிருகம் பட டைரக்டர் 'சாமி' மாதிரி அடிக்கடி சூடாகறீங்களே ? நீங்க டிஸ்டிபூட்டர் இல்ல...பொறுக்கி...

ஏழுமலை: டேய்...நீ கொழைந்தை...ஏழாவது படிக்கும்போது ஈமெயில் அணுப்பினவன் நானு...என்னையா பொறுக்கிங்கறே ?

செந்தழல்: சார்...ஏன் சார் டென்ஷனாகிறீங்க...ச்ச்ச்சும்மா...ஒரு எதுகை மோனைக்கு சார்...உங்களுக்கு இப்பவே நாப்பது வயசு இருக்கும்...நீங்க ஏழாவது படிக்கும்போது ஈமெயிலே வரலையே ? ஏதாவது "டெக்னிக்கல் பால்ட்" மேட்டர்ல 'குசும்பா' டூப்படிக்கறீங்களோ ??

ஏழுமலை: டாடாடாய்....என்னை மிருகமாக்கிராத...

செந்தழல்: நீங்க இப்பவே அப்படித்தான் இருக்கீங்க :)))))) (ஸ்மைலி) - சரி வாங்க சார் மீதி பேரை தேடுவோம்...

ஏழுமலை : இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல...ஒட்டுற வரைக்கும் ஓட்டுங்க...அப்புறம் பொது விஷயம் பேசுங்க...தலைவலிடா சாமியோவ்...

(டங்கென எண்ட்ரியாகிறார் லக்கி...!!!)

லக்கி : நான் டெல்லிக்கு போனேனா...அங்க எனக்கு ஒரு விருது கொடுத்தாங்க...நான் வாங்காம வந்துட்டேன்...

செந்தழல் : என்ன வந்ததும் வராததுமா விருது பேருந்துன்னுக்கிட்டு...என்ன மேட்டர்...தலையும் புரியல வாலும் புரியல...

லக்கி : என்ன வவ்வால் புரியலையா ?

கொய்யனார்: இதுக்கு நான் பின்னவீனத்துவ பாணியில ஒரு கதை எழுதட்டுமா ?

செந்தழல்: யோவ் யாருய்யா நீ ? சம்மன் இல்லாம ஆஜராகுற ?

கொய்யனார் : சுண்டல் வாங்குறீங்களா சார் ?

செந்தழல் : அதெல்லாம் ஒன்னும் வேனாம்...ஏழுமலை சார்...உங்களுக்கு சுண்டல் ?

ஏழுமலை: இல்ல வேணாம்..இப்பத்தான் குக்கர் நிறைய இடியாப்பம் சாப்பிட்டுட்டு வந்தேன்...

வரவணை: எச்சக்கையால காக்கா ஓட்டாதவனுங்க எடது கையால ஏரோப்பிளேனா ஓட்டப்போறானுங்க ?

செந்தழல் : வரவணை, எப்ப வந்தீங்க ? நாங்க கும்பல(a) உக்காந்திருக்கோம், பின்னால என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க ?

வரவணை : என்னுடைய சமையல் கட்டு பதிவுக்கு போட்டோ எடுத்துக்கிட்டிருக்கேன்...தூய்மையான இடமே இல்ல...

அதுக்கு தோதா நீங்க பீச்சுக்கு கூப்டீங்க...வந்துட்டேன்...பொட்டிக்கடை கூட பாண்டிச்சேரில மாஸ் ஹோட்டல்ல தான் இருக்காராம்...நம்ம மொக்கை கூட்டம் முடிஞ்சதும் அப்படியே ஈஸியார் ரோட்ல காரை திருப்பப்போறேன்...

செந்தழல்: என்னது ? இன்னும் பொட்டிக்கடை பாண்டிச்சேரிய உட்டு போவலியா ? பட்டறை ஒம்போதாந்தேதி...பதினெட்டாந்தேதி வரைக்கும் ரூம் போட்டு குடிக்குறானா ?

சுகுணா திவாகர்: அவன் ரூம் போட்டு குடிக்கறது இருக்கட்டும்...என்னை எதுக்கு போன் போட்டு வரச்சொன்னே ? ஒரு மாசமா போனையும் கானோம் ஆளையும் கானோம்...எங்க போன...

செந்தழல் : வாங்க சுகுணா, வந்துட்டீங்களா....எல்லாரும் வரட்டும் மேட்டர சொல்லலாம்னு பார்த்தேன்...

லக்கி: இன்னும் யார் வரனும் ?

செந்தழல்: நாப்பதாயிரம் ரூபா கேமரா வெச்சிருக்க சின்னப்பதாஸ் வரனும்...அவர் இப்பத்தான் கடல் அலையை அலை மேல நின்னு ஜூம்ல போட்டோ புடிக்க போயிருக்கார்...

ஏழுமலை: யோவ்...உன்னை எல்லாம் மதிச்சு இவ்ளோ தூரம் வந்ததே பெரிய விஷயம்....இப்ப என்ன விஷயம்னு ஒழுங்கு மரியாதையா சொல்லல...கடிச்சு வெச்சுருவேன்...

செந்தழல்: இன்னும் அஞ்சு நிமிசம் பார்க்கலாமே ப்ளீஸ்...

லக்கி: சலோ சலோ, டீக்கே...

வரவணை : பரவால்ல சொல்லு ரவி...

செந்தழல் : ஆக்சுவலி மொக்கை அவார்ட்ஸ் 2007 அப்படீன்னு தரலாம்னு இருக்கேன்...அதுக்கு நடுவர்களா நீங்க எல்லாரும் இருக்கனும்...

எல்லாரும் கொலைவெறியுடன் ரவியை பார்க்க...!!!!! ( தொடரும் )

பி.கு : டேய் இந்தமாதிரி எத்தனை முறை தொடரும் போட்டு ஏமாத்துவ...எப்பத்தான் முழுசா எழுதப்போற...என்று கேட்பவர்கள் மன்னிக்க...ஆணித்தொல்லை...!!!