Posts

Showing posts from August, 2008

எதையும் செய்யவேணாம் பாஸு...பொ$$ மூடிக்கிட்டு இருந்திடலாம் பாஸு...!!!

லக்கிலூக் எதையாவது செய்யனும் பாஸு என்று பதிவு எழுதி இருக்கிறார்..பதிவர் நரசிம் உடைய தூண்டுதல் இந்த பதிவுக்கு காரணம்...

பரிசல் / வெண்பூ / வால்பையன் மாதிரி மொக்கை கோஷ்டிகள் எல்லாம் இதை படித்துவிட்டு, ஆஹா, வாங்கடா கிளம்பி உலகத்தை திருத்தலாம் என்று கிளம்பினீர்கள் என்றால் அதைவிட அட்டர் வேஸ்ட் எதுவும் இல்லை...

ஏதாவது மொக்கை போட்டோமா, நாலு நன்பர்களோடு அரட்டை அடித்தோமா, எப்பவாவது பார்க்கும்போது - டாஸ்மாக்கில் போய் மப்பை போட்டோமா என்று உருப்புடியாக இருக்கவும்..

அதை விட்டு விட்டு, வாருங்கள் குழுவாக உக்காந்து ரூம் போட்டு யோசிச்சு, சமூகத்தை திருத்தலாம் என்று தனியாளாக உங்களது நேரம் பணம் ஆகியவற்றை செலவு செய்தால் முதலுக்கு கொஞ்சம் மோசமாகும்...

இதுவரை நேரத்தை தின்று உங்கள் பிழைப்பை கெடுத்துவரும் வலைப்பூ அடிக்-ஷன் உங்கள் பாக்கெட்டிலும் வேட்டு வைக்கக்கூடும்..

எங்கிட்ட கோடிகளும் - லட்சங்களும் குவிஞ்சிருக்கு, இல்லை நான் ஏற்கனவே நாலு கம்பேனிக்கு சி.இ.ஓ என்னை எவனும் கேள்விகேட்க முடியாது அப்படீன்னா கெளம்புங்க...நரசிம் சாரோட பதிவுக்கு டைரக்ட் ஆடியன்ஸ் நீங்க தான்...ஏன்னா உங்ககிட்ட இழக்கறது ஒன்னுமில்லை...

ஆனா வாழ்க்…

கலைஞர் கருணாநிதியின் அடுத்த கவிதை அட்டாக் யாருக்கு ?

வரதராஜனை பிளந்தாச்சு...நெடுமாறனை அட்டாக் செய்தாச்சு என்று தமிழக முதல்வர் நாளொரு கவிதை செய்து யாரையாவது அட்டாக் செய்தவண்ணம் இருக்கிறார்...!!!

அவரது அடுத்த கவிதை யாருக்கு என்று புரியாமல் கதிகலங்கி நிற்கின்றனர் உடன்பிறப்புகள்...!!!

நாம் கொஞ்சம் விளையாடி, அவரது கவிதை யை கொஸ்டின் அவுட் ஆவது போல் வெளியிடலாமே என்று எண்ணியதன் விளைவு...

இந்த கவிதை...

ஒருவேளை அடுத்த கவிதை விஜயகாந்துக்காக இருக்கலாம் என்ற முன்முடிவுடன்...

டாஸ்மார்க்குக்கு வெளியே முழங்குகிறான்..
வெளி நாட்டுக்கொடி பறக்கும் கம்பத்தின் கீழ் நின்றபடி..
அணியொன்று தனியாக அமைத்திடுவேன்..
ஆட்டுக்கூட்டம் போதும் ஆரம்பத்தில்...

அத்தனையும் மொக்கைகளாய், சொத்தைகளாய்...
அதுவே பழரசக் கிண்ணத்தில் பளபளக்கும் முத்துக்களாய்!

அவை தவிர நம்மிடம் அடிமை ஆட்டுக்குட்டிகள் ஆயிரம் பணம் கொடுத்து வாங்கியது உண்டே...

பேரரசு நானே என்று அரிதாரம் பூசி...
பேய்வீடு காப்பேன் அதில் தாய்வீடு வைப்பேன் என்று முட்டுச்சந்தில் முழங்கி..

என் ரசிக கண்மணிகள் வீசினால் பெட்ரோல் குண்டுகூட குண்டாந்தடியல்ல..

ரேஷன் அரிசியை வீட்டிலே கொடுப்பேன், அதை பொங்கியும் தருவேன், பொங்கிய என் கண்களை காட்டி விருந்…

சாம்பார் பதிவின் நீட்சியாக எழுந்த விளைவுகள்...

Image
என்னுடைய சாம்பார் பதிவின் தொடர்ச்சியாக...என்னுடைய நூற்றுக்கணக்கான(??) வாசகர்களின் நலனை முன்னிட்டு, இன்று இரவு என்னுடயை ரெசிப்பி படி நானே சாம்பார் வைத்து (தூயா கவனிக்க), அதை உலகத்தமிழர்ர்கள் பார்வைக்கு வைப்பது என முடிவானது...அதன் விளைவு தான் இந்த புரட்சி திருமணம்...ச்சே சாம்பார்...முதல் படத்தில் வெங்காயம் தக்காளி தாளிக்கப்படும் காட்சி...இரண்டாவது படத்தில் புளித்தண்ணீர், பருப்பு தண்ணீர், மஞ்சள் தூள், சாம்பார் பொடி மற்றும் உப்பு போடப்பட்டு கொதிக்கவைக்கப்படும் காட்சி...

படத்தின் மீது பெரிதாக்க படத்தை க்ளிக்கி ( இதை எல்லாம் பெரியதாக பார்த்து என்ன செய்யப்போகிறீர்...சும்மா போவும்...இது என்ன நமீதா படமா ? )

கொதிக்கும் வாசனை அடிக்கிறதா ? இப்போது நான் சொல்ல மறந்த கடைசி பஞ்ச்...இதில் மேலாக்க கொஞ்சம் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்...

முந்தைய பதிவில் பின்னூட்டம் போட்ட வெட்டிப்பயல், இதற்கு நெத்திலி வறுவல் சூப்பர் காம்பினேஷன் என்று கூறியிருந்தார்...நானும் அதை ஆமோதிக்கிறேன்...வெஜிட்டேரியன் மக்கள்ஸ், நீங்கள் உருளைக்கிழங்கு வறுவலோ அல்லது கருணைக்கிழங்கு வறுவலோடு அப்படியே ஓரங்கட்டிக்கொள்ளுங்கள்...

நெத்திலியை ம…

பதிவர் அனுராதா மீது கோபம்.

பதிவர் அனுராதா மீது கோபம்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார் பார்த்தாயா நீ என்று கோபப்படவேண்டாம்...

லக்கியின் பதிவின் மூலம் அறுவை சிகிச்சை செய்துகொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்தவர், அந்த பிடிவாதத்தினாலேயே இவ்வுலகை விட்டு நீங்கியவர் என்று அறிந்துகொண்டேன்...

உயிருக்கு உயிரான கணவருக்காகவாவது அறுவை சிகிச்சை செய்துகொண்டு வாழ்ந்திருக்கலாம்...இன்றைக்கு அவரை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் சென்றுவிட்டீர்கள்...ஹும்...!!!

டிப்பிக்கல் இண்டியன் உமன் மைண்ட் செட் !!

எதுவானாலும்...மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பலபேருக்கு உருவாக காரணமாய் இருந்த உங்களுக்கு நன்றி அனுராதா...சென்று வாருங்கள்...!!!

இந்த பதிவுக்கு பின்னூட்டம் எதையும் போடவேண்டாம்...!!!

தமிழ் சாக்கடை நொள்ளைக்கண்ணனுக்கு குட்டு மற்றும் சாம்பார் வைப்பது எப்படி ?

ஏதோ ஒரு டி.வியில் ஏதோ ஒரு புரோகிராம் பார்த்தபோது, அதில் பேசிய ஒருவர்...

தான் ஒரு FC (பார்வேர்டு கேஸ்ட்டு) என்று குறிப்பிட்டதை பார்த்து வெறுத்துப்போனேன்...

இந்த தமிழ் சாக்கடையின் அடி மனதில் தங்கியிருக்கும் சாதீய அழுக்கே இந்த வார்த்தைகள் என்று நினைத்தபோது...

குமட்டிக்கொண்டு வருகிறது...!!!

இந்த வார குட்டு, தமிழ் சாக்கடை நொள்ளைக்கண்ணனுக்கே...

உபயோகமான குறிப்புகள் இல்லாமல் பதிவு எழுதுவதில்லை என்று கொ.மி.மி.மி அனானியிடம் செய்த சத்தியத்தின் காரணமாக...

தமிழ் வலையுலகி எழுபத்தேழாவது முறையாக சாம்பார் வைப்பது எப்படி என்ற குறிப்பை தருகிறேன்...

முதலில் கையளவு பருப்பை எடுத்துக்கொள்ளவும்...

அதை குக்கரிலோ (குக்கர் இருந்தால்) அல்லது சுடு நீரிலோ வேகவைக்கவும்...

முக்கியமாக கவனிக்க வேண்டியது, பருப்பை வேகவைக்கும்போது உப்பு போடக்கூடாது...

உப்பு போட்டால் வேகும் ஆனால் வேகாது என்று ஆட்டம் காட்டி கேஸையோ அல்லது மண்ணென்னையையோ தீர்த்துவிடும் இந்த பருப்பு மேக்கிங் ப்ராஸஸ்...

இதன் பிறகு பருப்பை கந்தல் துணி பிடித்து ஓரமாக இறக்கி வைத்துவிடவேண்டியது சாம்பார் வைக்கும் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்...

சாம்பாரில் பலவகை, ஒவ்வொன்றும் …

முத்தமிழ் குழுமம் : ஸ்கிரைபாக உதவ விரும்பும் அன்பர்களின் விவரப்பட்டியல்

தோழர் மஞ்சூர் ராசா தெரிவித்துள்ளபடி

நண்பர்களே

என் நண்பர் ஒருவர் பார்வையிழந்தோர்க்கு அவர் பங்கேற்கும் தேர்வுகளில்

அவர்களுக்கான ஸ்கிரைபாக உதவ விரும்பும் அன்பர்களின் விவரப்பட்டியல் தயார்
செய்கிறார்

இப்படி உதவ முன் வருபவர்கள் எனக்கு தனி மடலில் சொல்லலாம்

சென்னையில் நடக்கும் தேர்வுகளில் பங்கேற்கும் பார்வையிழந்தோர்க்கு உதவ
வேண்டியிருக்கும்.

தேர்வுகள் வார நாட்களில் தான் நடைபெறும்.

தேர்வு நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை. பிற்பகல் 2 முதல்
மாலை 5 மணிவரை இருக்கும்

தேர்வு ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும்


--~--~---------~--~----~------------~-------~--~----~
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---

தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல் : nalamperuga@gmail.com


மஞ்சூர் ராசா
http://manjoorraja.blogspot.com/
http://muththamiz.blogspot.com/
குழுமம்:http://groups.google.com/group/muththamiz

கம்ப்யூட்டரில் இருந்து போஸ்ட் ஆபீசுக்கு தபால் போடுங்கள்

Image
கணினி, செல்போன்களின் பரந்த பயன்பாட்டுக்கு பிறகு, தபால்காரர் கொண்டுவரும் கடித்ததை யாரும் எதிர்பார்ப்பதில்லை இப்போது...

(லவ் லெட்டருக்காக போஸ்ட் மேன் வழிமேல் தம் அடித்து பார்த்திருந்த நபராக இந்த பதிவை எழுதவில்லை செந்தழல் ரவி)

கிராமங்களில் கூட பரவலாக அலைபேசி...

சொல்லவேண்டிய செய்தியை குறுஞ்செய்தியாக அனுப்பிவிடக்கூடிய அறிவு தமிழனுக்கு பரந்து காணப்படுகிறது...

ஆனால் இன்னும் போன், இண்டர்நெட் எட்டிப்பார்க்காத பல கிராமங்கள் இருக்கத்தான் செய்கின்றன...

ஆனால் தபால் துறை அவர்களை இன்றும் கைவிடாமல் இருக்கிறது...ஒரு நபர் தபால் அலுவலகம், தந்தி அலுவலகங்களின் மொத்த எண்ணிக்கை ஒன்றரை லட்சத்துக்கும் மேல் இந்தியாவில்...!!

இருந்தும் தபால் துறை ஒன்றும் நிலைப்பது போல் தோன்றவில்லை...

டெக்னாலஜி அழித்த பல விடயங்களில் தபால் தந்தியும் ஒன்று...

சமீபத்தில் அ.ராசா (தகவல் தொடர்புக்கான மத்திய அமைச்சர்), தபால் துறை வங்கித்துறையிலும் / மியூச்சுவல் பண்ட் துறையிலும் முழுவீச்சில் செயல்படும் என்று சொல்லியிருக்கிறார்...

இங்கே நான் சொல்ல வந்த விடயம் இது தான்...

உங்கள் கிராமத்தில் அலைபேசி வசதி இல்லாத நன்பருக்கு (அல்லது உங்களுக்கு எண் தெரிய…

வீட்டு வாடகைகளை தமிழக அரசு கட்டுப்படுத்துமா ?

வீட்டு வாடகைகளை தமிழக அரசு கட்டுப்படுத்துமா ?

வாடகை வீட்டில் குடியிருப்பவர்களின் பிரச்சினைகள் பற்றி எனக்கு தெரிந்த அளவில்:

1. ஓனர்கள் கேட்கும் அதிகப்படியான அட்வான்ஸ்
2. தகவல் தொழில்நுட்பத்துறையினரை மையமாக வைத்து கேட்கும் அதிகப்படியான வாடகை
3. ஒரு வருடம் வாடகைக்கு இருந்துவிட்டோம் என்றால், எங்க மாமா குடிவருகிறார், மச்சினிச்சி கல்யாணம் ஆகி குடிவருகிறான் என்று உடான்ஸ் விட்டு, வேறு ஒரு குடும்பத்தை அதிக வாடகைக்கு அமரவைப்பது
4. ஹவுஸ் ஓனர் என்றால் அமெரிக்க அதிபர் ரேஞ்சுக்கு கண்டிஷன் போடுவது...இருந்தால் இரு, இல்லைன்னா போ என்பது போல எடுத்தெறிந்து பேசுவது
5. வாடகைக்கு விட்டுவிட்டு, குழாய் ரிப்பேரில் இருந்து எலக்ட்ரிசிட்டி ப்ராப்ளம் எதுவானாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது...
6. வீட்டை காலிசெய்யும்போது, பெயிண்ட் செலவு என்று ஒரு ஐந்தாயிரம் / பத்தாயிரம் பணத்தை அட்வான்ஸில் இருந்து பிடித்தம் செய்துகொள்வது..
7. வீட்டுக்கு ரெண்டு விருந்தாளிகள் வந்தால் ரெட் ஐ வைத்து பார்த்து, தண்ணீர் செலவாகிறது, வெண்ணீர் செலவாகிறது என்று லொள்ளு பேசுவது.

மேலும் பல பிரச்சினைகள் பதிவுலக நன்பர்கள் சொல்வீர்கள் என்று நினைக்கிறேன்...

பல்வேறு…

நல்ல Resume தயாரிப்பது எப்படி?

Image
படிக்கறது எதுக்கு.. அறிவை வளர்த்துக்கன்னு சிலபேரு சொல்வாங்க. அது உண்மைதான். அதேநேரம் படிப்புக்கு செலவழிக்கிற காசையும் திரும்ப எடுக்கனுமே..

ஒரு இண்டர்வியூவுக்கு போறதுங்கறது, நம்மளை நாமளே மார்க்கெட்டிங் பண்றதுமாதிரி. ஒருத்தர் நம்மக்கிட்ட ஒரு எலெக்ட்ரானிக் பொருளை விற்குகுறாரன்னு வைங்க. பார்த்த உடனே வாங்கிடுவோமா..? எவ்ளோ நாள் உழைக்கும், நல்லா ஓடுமா, வாரெண்டி இருக்கா, அப்படீன்னு எத்தனை கேள்வி கேப்போம் ? அது மாதிரிதான் நம்மளை வேலைக்கு எடுக்கற கம்பெனியும. நாம நல்லா வேலை செய்வோமா, கம்பெனிக்கு நம்பிக்கையா இருப்போமா அப்படின்னு பல மேட்டர்களையும் பார்த்துதான் நமக்கு வேலையும், சம்பளமும் தராங்க.பொருளை கடைக்காரர் நம்மக்கிட்ட விற்பதற்கு முதல் படி, ஷோரூம் நல்லாருக்கனும், நல்ல ஏ.சி. இருக்கனும், கடை பார்க்க நல்ல லுக்கா இருக்கனும். அப்பதானே கடைக்குள்ள நாம போவோம். அதுமாதிரி, நம்ம ரெஸ்யூம் சும்மா 'நச்'னு இருந்தாத்தான், இந்த கேண்டிடேட்டை கூப்புடலாமான்னு யோசிப்பாங்க. மொக்கையா ஒரு ரெஸ்யூமை அனுப்பிட்டு, 'என்னடா இந்த கம்பெனிக்காரன் இன்னும் கூப்புடலையே'னுன்னு தேவுடு காக்குறதுல அர்த்தமில்லை.

மேட்டரு…

பெங்களூரில் அதிஷா அலறல் !!!

Image
பெங்களூரில் ஸ்கேரி ஹவுஸ் சென்ற அதிஷாவை காத்து கருப்பு அடித்துவிட்டதாக தீவிர வதந்திகள்...!!!அறையில் இழுத்து போர்த்திக்கொண்டும், பயத்தை போக்க ரெண்டு ரவுண்டு உள்ளே தள்ளிவிட்டும் குப்புற படுத்துவிட்டார் என்றும் பேசப்படுகிறது...!!!

எனக்கு ஒன்றும் தெரியாது, அதிஷாவை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்...!!!

மறந்துவிடாதீர்கள் + சர்ப்ரைஸ் : பெங்களூர் வலைப்பதிவர் சந்திப்பு !!!

அன்பான வலைப்பதிவு நன்பர்களுக்கு...

பெங்களூரில் ஒரு வலைப்பதிவர் சந்திப்பை நடத்தலாம் என்று உள்ளேன்...சில பல பிரபல பதிவர்கள், மற்றும் சில சர்ப்ரைஸ் விசிட்டர்கள் வரவிருக்கிறார்கள்...

இடம் : டொம்ளூர் புதிய நந்தினி பேலஸ் ஹோட்டல்
நாள் : சனிக்கிழமை (23 - ஆகஸ்ட் - 2008)
நேரம் : 6:00 to 8:00 மணிக்கு
விருந்து : நார்த் இண்டியன் பபே. (ஸ்பான்ஸர் : ரவி)

என்னுடைய அலைபேசி எண் : 99025 84054. தொடர்புகொள்ளவும்...

சொந்த செலவில் சூனியம் என்ற வார்த்தையை வலையுலகிற்கு அறிமுகம் செய்த தோழர் வரவணையான் செந்தில் திண்டுக்கல்லில் இருந்து வந்து இதில் கலந்துகொள்கிறார்..

பிரபல வலைப்பதிவர் லக்கிலூக் இதில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து வருகிறார்...(டமாரு கொமாரை அழைத்து வருகிறாறா என்று தெரியவில்லை)

அடுத்த சர்ப்ரைஸ் நாளைக்கு !!!

ஏர்டெல் சூப்பர் சிங்கர் : பாப்பாத்திகளின் ராஜ்ஜியம் !!!

Image
ஏர்டெல் சூப்பர் சிங்கர் என்று ஒரு நிகழ்ச்சியை விஜய் டீவியில் மாமிகள் ஜட்சுகளாக உட்கார்ந்து செய்கிறார்கள்...!!!

மூன்று மூன்று பேராக பாடவைத்து அவர்களை செலக்ட் / ரிஜக்ட் செய்கிறார்கள் இந்த மாமிகள்...

அதில் ஸங்கதி ஸரியில்லை, எட்ஜுல நன்னா விழலை போன்ற சாமானியர்களுக்க்கு புரியாத கமெண்டுகளை பாஸ் செய்து குறிப்பாக "சட்டைக்குள்" இருக்கும் ஒரு விடயத்தை மட்டும் வைத்து செலக்ட் செய்வது போல் எனக்கு தோன்றுகிறது....

நல்ல குரல் வளத்துக்கான தேர்வு தானே ? இதற்கு கருநாடக இசை நுணுக்கங்களை வைத்து பாடுபவர்களை எடைபோடுதல் எப்படி முறையாகும் ?

எல்லா சாமானியர்களுக் கருனாடக சங்கீதத்தை முறையாக பயின்று,சங்கதி, தாளம், ராகம் என்றெல்லாம் மனனம் செய்துகொள்கிறார்களா என்ன ?

பாடவேண்டும், தன் குரல் வளத்தை வைத்து சாதிக்கவேண்டும் என்று துடிக்கும் இளைஞர்களை இது போன்ற பார்ப்பணீயச்சிந்தனையோடு ஒழித்துக்கட்டும் இந்த பாப்பாத்திகள் தமிழிசை பாடும் இளைஞர்களுக்கு நீதி சொல்ல தகுதியில்லாதவர்கள்...

சரியாகப் பாடாதவர்கள் கூட தங்கள் பெயர்களில் கூட உள்ள பார்ப்பணீய அடையாளங்கள் மூலமாக அடுத்த கட்டத்துக்கு தேர்வாவது கேவலத்திலும் கேவலம்...

ஒரு வ…

அனானி நன்பருக்காக - உலகளந்தபெருமாள் photo from திருக்கோவிலூர்

Image
உலகளந்த பெருமாள் படம் போடுமாறு கேட்ட அனானி நன்பர் மெயில் ஐ.டி எதுவும் கொடுக்கவில்லை...உங்கள் விருப்பத்துக்காக "கொளுகையை" கொஞ்சம் செலக்டிவ் அம்னீஷியாவில் மறந்துவிட்டு...!! இதோ !!!திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் படம் : படத்தை பெரிதாக்க படத்தின் மேல் க்ளிக்கவும்...

என்னுடைய பாய்ண்ட் அண்ட் ஷூட் கேமரா மூலம் எடுத்தபோது ஏதோ ப்ளாஷ் விழுகிறது...இருந்தாலும் அப்படியே அப்லோட் செய்கிறேன்...

மதன் அவர்கள் செய்துள்ள காமெடி !!!!

எஸ்.கோபாலன், நங்கநல்லூர்.
அரிசிக்கு ஏன் அரிசி என்று பெயர் வந்தது?


பல சர்வதேச மொழிகளில் அரிசிக்கு ஒரே மாதிரி ஒலிக்கும் பெயர்தான். பிரெஞ்சு மொழியில் ரைஸ் (Riz), இத்தாலியில் ரைஸோ, ஜெர்மனியில் ரெய்ஸ், ரஷ்யாவில் ரைஸ் (Ris). ஆங்கிலத்தில் Rice. தமிழிலும் அதே ஒலியோடு அரிசி! எல்லாவற்றுக்கும் மூலம் சம்ஸ்கிருதம். அதில் - ரையி!

மதன் சொல்கிறார், எல்லாவற்றும் மூலம் "செத்த" மொழியான சம்ஸ்க்ருதம் என்று !!! இவருக்கு எப்படி தெரிந்தது எல்லாவற்றுக்கும் மூலம் சம்ஸ்கிருதம் என்று ? கால இயந்திரம் உருவாக்கி பயணித்து பார்த்துவிட்டு வந்தாரா ? ஒருவேளை "இந்த உண்மையை" ஆப்ரிக்காவில் ஏதாவது பழங்குடியினர் இவருக்கு "சம்ஸ்கிருதத்திலேயே" லெட்டர் போட்டு தெரிவித்திருப்பார்களோ ?

எதால் சிரிப்பது என்று தெரியாமல் புத்தகத்தை மூடிவிட்டேன் !!!!

பெங்களூர் வலைப்பதிவர் சந்திப்பு அழைப்பிதழ் : செந்தழல் ரவி

அன்பான வலைப்பதிவு நன்பர்களுக்கு...

பெங்களூரில் ஒரு வலைப்பதிவர் சந்திப்பை நடத்தலாம் என்று உள்ளேன்...சில பல பிரபல பதிவர்கள், மற்றும் சில சர்ப்ரைஸ் விசிட்டர்கள் வரவிருக்கிறார்கள்...

இடம் : டொம்ளூர் புதிய நந்தினி பேலஸ் ஹோட்டல்
நாள் : சனிக்கிழமை (23 - ஆகஸ்ட் - 2008)
நேரம் : 6:00 to 8:00 மணிக்கு
விருந்து : நார்த் இண்டியன் பபே. (ஸ்பான்ஸர் : ரவி)

என்னுடைய அலைபேசி எண் : 99025 84054. தொடர்புகொள்ளவும்...வேறு சில குட்டி சர்ப்ரைஸ்களும் உண்டு..

வரேன்...!!!

தமிழ் பதிவர்களை நினைத்தால் உங்கள் மனதில் தோன்றுவது

சில பதிவர்களை நினைத்தால் நியாபகம் வருவது இது...

உண்மைத்தமிழன் : பழனி
அபிஅப்பா : சல்மான்கான்
குசும்பன் : பப்பி டாமி
வால்பையன் : ஆம்லேட்
லக்கிலூக் : பரங்கிமலை ஜோதி
ஓசை செல்லா : கூலிங் க்ளாஸ்
வரவணையான் செந்தில் : நாட்டுக்கெளுத்தி
வெட்டிப்பயல் : கோங்கூரா சட்னி
இராம் : கைப்புள்ள வடிவேல்
இளா : சி.ஐ.டி ஷங்கர்
கானா பிரபா : தீப்பெட்டி
தேவ் : நந்தா ராஜ்கிரண்
வெண்பூ : தாமரைப்பூ
பெயரிலி : கோணார் நோட்ஸ்
பரிசல்காரன் : டவுசர் பாண்டி
லதானந்த் அங்கிள் : மேஜர் சுந்தர்ராஜன்.
ஆடுமாடு : ஆடுமாடு
ஜ்யோராம் சுந்தர் : கோலங்கள் தொல்காப்பியன்
தூயா : கேஸ் ஸ்டவ்
ஜி : ஊமை விழிகள்
சின்னக்குட்டி : திருட்டு வி.சி.டி
கூடுதுறை : ராணிமுத்து காலெண்டர்
டாக்டர் புருனோ : எனர்ஜி ட்ரீட்மெண்ட்

உங்களுக்கு என்ன நியாபகம் வருதுன்னு சொல்லிட்டு போங்க...இங்க ப்ளஸ் மைனஸ்னு மார்க் இருக்கு, அந்த கையையும் ஒரு அமுக்கு அமுக்குங்க பார்ப்போம்...

பெ(ண்)ங்களூர்: "ஜில்ஜில்" லால்பாக் !!!!

Image
பெங்களூர் 4 ஆவது தேசிய மலர் கண்காட்சியின் கடைதி தேதிக்கு முந்தைய தேதியில் நானும் தங்கமணியும் அங்கே ஆஜர்...டபுள் ரோட் பக்கம் போய் ஒரு வருடத்துக்கும் மேல் ஆகிவிட்டதால் ரிச்மண்ட் சர்க்கிளையும் பாலத்தையும் நினைவு படுத்த முயற்சி செய்துகொண்டிந்தேன்...

சமீபத்தில் தேசிகன் பதிவில் பாலத்தில் கூட ட்ராபிக் கான்ஸ்டபிள் மேட்டர், மற்றும் கொஞ்ச நாளைக்கு முன் ரசிகவ் ஞானியார் பதிவில் லால்பாக்கில் அவர் கண்ட "மேட்டர்கள்" எல்லாம் நியாபகம் வந்து தொலைத்தாலும் வழி அவ்வளவாக நினைவில்லை...

காண்ட்டீரவா ஸ்டேடியம் சுற்றி ம்ல்லைய்யா ஹாஸ்பிட்டல் ரோட்டில் போனால் ரிச்மண்ட் சர்க்கிள் வந்ததாக நியாபகம்...பெட்ரோல் வேறு ப்ளிங்கிக்கொண்டிருந்தது...அந்த வழியில் ஒரு பெட்ரோல் பங்க் இருந்ததும் நியாபகம்...

சி.எம்.ஹெச் ரோடு வழியாக அப்படியே எம்.ஜி ரோடு பிடித்தேன்...மெட்ரோ ப்ராஜக்ட்டுக்காக சி.எம்.ஹெச் ரோட்டில் பாதி மரங்கள் காலி...எம்.ஜி ரோட்டில் மெட்ரோவுக்காக ரோட்டை கால்பாகம் ஆக சுருக்கிவிட்டிருந்தார்கள்...

சிவாஜி நகர் சிக்னல் திரும்பும் முன்னால் உள்ள பெட்ரோல் பங்கிலேயே நுழைந்தேன்...500 ரூபாய்க்கு போட்டுவிட்டு பார்த்தபோதும் மா…

லக்கிலூக் மற்றும் தமிழ்மண நிர்வாகிகள் அனைவருக்கும் திறந்த கடிதம்

Image
கடிதவாரத்தின் கடைசி ஒர்க்கிங் டேயில் அட்லீஸ் ஒரு கடிதமாவது, திறந்த கடிதமோ, மூடிய கடிதமோ ஒன்று எழுதிவிடுவது பிலாக் உலகத்தில் செய்யவேண்டியது....இது காலத்தின் கட்டாயம்...

நேரமின்மை காரணமாக கடித்ததை மட்டும் போடுகிறேன் (திறந்து), நீங்களே படித்துக்கொள்ளுங்கள்...!!!


ஏந்த இந்த கடிதத்துல லக்கிலூக் பேரா ? லக்கிலூக் பேரப்போட்டா 200 ஹிட்டு அதிகமா வருதாமே ? அதை டெஸ்டிங் பண்ணத்தான்...

ரிலையன்ஸ் ப்ரஷ் கடைகள் : சிறு வியாபாரிகள் மிகவும் மகிழ்ச்சி...!!!

கிண்டலோ நக்கலோ அல்ல...உண்மையில் ரிலையன்ஸ் பிரஷ் கடைகளால் சிறு வியாபாரிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்...

பெங்களூர் இந்திரா நகர் வியாபாரி ஒருவர் காய்கறிகளை மொத்தமாக ரிலையன்ஸ் பிரஷ் கடையில் வாங்கி குவிப்பதை கண்டேன்...

என்னடா சோதனை..இது மதுரைக்கு வந்த சோதனை என்று அவரிடம் விசாரித்தபோது !!!!

பெங்களூர் சிட்டி மார்க்கெட் ( காய்கனி மொத்த வியாபார சந்தை - நம்ம கோயம்பேடு மாதிரி) விலையை விட, ரிலையன்ஸ் பிரஷ் கடைகளில் குறைவாக உள்ளதாலும், சிட்டி மார்க்கெட் சென்று காய்கறி வாங்கிவர வண்டி சத்தம் (வண்டி வாடகை) தனியாக ஒரு செலவு என்பதாலும், அருகருகே உள்ள ரிலையன்ஸ் பிரஷ் கடைகளிலேயே இப்போது வியாபாரிகள் வாங்கி விடுவதாக கூறுகிறார்...

அவர் சொன்ன அட்டவணைப்படி விலை நிலவரம்: (பெங்களூரில்)

முருங்கை சிட்டி மார்க்கெட் : ரூ 2:00 ரிலையன்ஸ் பிரஷ் ரூ 1:00
தக்காளி சிட்டி மார்க்கெட் : ரூ 5:00 ரிலையன்ஸ் பிரஷ் : ரூ 3:00
முட்டைக்கோஸ் சிட்டி மார்க்கெட் ரூ 6:00 ரிலையன்ஸ் பிரஷ்: 3:50

இதுபோல அனைத்து காய்கனிகளும் குறைவாகவே இருப்பதால் ரிலையன்ஸ் பிரஷ்ஷில் வாங்கி, அதன் பிறகு தள்ளு வண்டியில் வைத்து விற்பதை பெரும்பாலானவர்கள் பின்பற்றுவதாக…

உருகுவே : தமிழர்கள் யாராவது இருக்கீங்களா ?

வலைப்பதிவு நன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்...

என்னுடைய நன்பர் தற்போது உருகுவேயில் தங்கியுள்ளார்...

அவருக்கு சில உதவிகள் தேவைப்படுகின்றன...

வலைப்பதிவு வாசிக்கும் நன்பர்கள் பணி நிமித்தமாக உருகுவேயில் தங்கியிருப்பவர்கள், அல்லது உருகுவே வாழ் தமிழர்கள் இருப்பீர்களானால் என்னை உடனே தொடர்புகொள்ளவும்...

மின்னஞ்சல் : ravi.antone@gmail.com

நன்றிகள்...!!!

எச்சரிக்கை : ரஜினியை நக்கல் செய்யும் போக்கை கைவிடுங்கள்

Image
சமீப காலமாக ரஜினி அவர்களை குறிவைத்து எழும்பும் குரல்களில் இருக்கும் ஒருபக்க சார்பு அவரது ரசிகர்களாகிய எங்களை ஒரு புறம் எரிச்சலடைய வைத்தாலும், இவற்றை எழுப்புபவர்களின் மையம் எங்களை சற்று சந்தேகக்கண்ணோடு தான் அவர்களை பார்க்கவைக்கிறது...

தமிழ் ரசிகர்களின் கடிதம் என்று பொதுமைப்படுத்தி எழுதிய விகடனாகட்டும், கமல் ரசிகராகிய மருதநாயகம், வெற்று பரபரப்புக்காக எதையாவது எழுதும் வெட்டி கோஷ்டி ஆகியவர்கள் எழுதிய வலைப்பதிவுகளாகட்டும், எங்களுக்கு ஒன்றை மட்டும் புரியவைத்தது...ரொம்ப எரியாதீங்க மக்கள்ஸ் !!!! உங்களுக்கு பிடிக்கும்னா நீங்க ஆழ்வார்பேட்டை பக்கம் பார்த்து கும்பிடுங்க...நாங்க போயஸ் கார்டன் பக்கமோ, உடுப்பி கார்டன் பக்கமோ ஒதுங்கிக்கறோம்...எங்கள் அன்புக்குரிய ரஜினி ஒரு ஃபீனிக்ஸ் !!! ரோபோவா மக்களை நாங்க சந்திக்கறோம்...அதுவரை இதுபற்றி நாங்க பேசறதா இல்ல !!!!

மைக்ரோசாப்ட் : செந்தழல் ரவி ஜெயித்த மொத்த தொகை 306 கோடி

Image
ஜிமெயில் இன்று திறந்தவுடன் இன்ப அதிர்ச்சி...

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து மின்னஞ்சல் வந்திருந்தது...மொத்த பரிசுத்தொகையை கணக்கிட கால்குலேட்டர் ஓப்பன் செய்தேன்...தலை சுற்றுகிறது...

என்ன செய்வதென்றே தெரியவில்லை...

பார்த்துக்கொண்டிருக்கும் ஐ.டி வேலையை விட்டுவிட்டு ஊர்ப்பக்கம் போய் செட்டில் ஆகலாமா ?

பெங்களூர் லீலா பேலஸ் ஓட்டல் போல ஒரு ஓட்டலை டெல்லியில் கட்டலாமா ?

ரஜினிகாந்தை வைத்து ரோபோவுக்கடுத்தது "மார்ஸ்" என்று டைட்டில் வைத்து ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் டைரக்ஷனில், இளையராஜா இசையில் படம் எடுக்கலாமா ? தோட்டா தரணியை வைத்து மார்ஸ் அளவு பெரிய உருண்டை செய்து அதில் தலைவர் ஏலியன்களிடம் எல்லாம் மன்னிப்பு கேட்கிறமாதிரி சீன் வைத்து காமெடி செய்யலாமா ?

ஒரு லட்ச ரூபாய்க்கு கிங்ஸ் சிகரெட் வாங்கி பீடி பிடிப்பவர்களுக்கெல்லாம் இலவசமாக கொடுக்கலாமா ?

ஜாலிமார்க் என்ற பெயரில் காளிமார்க் சோடாவை திரும்ப கொண்டுவரலாமா ?

ரிலையன்ஸ் அதிபர் கட்டுவது போல மேல் மாடியில் புட்பால் கிரவுண்ட் வைத்து வீடு கட்டலாமா ?

முன்றாவது படிக்கும் அரசு பள்ளிக்குழந்தைகள் ஆயிரம் பேருக்கு மடிக்கணினி வாங்கிதரலாமா ?

ரெண்டு ஐ.ஏ.எஸ், மூன்று நீ…

கொரியாவில் ஒரு லஞ்ச் டைமில்...கவுண்டமணி மெத்தட் !!!

Image
கொரியாவில் டேபிள் மேலேயே அடுப்ப்பு இருக்கும், சிங்காரவேலா படத்துல கவுண்டமணி கேக்குற மாதிரி நாமளே பொங்கி திங்கலாம்...அந்த கூத்தை பாருங்க...டேபிள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு...வந்துட்டான்யா, வந்துட்டான்யா...(சிக்கன் + நூடுல்ஸ்)...கொதிக்க வைக்கனும்...அடுப்பு இருக்கா....ஆங் டேபிள் கீழ இருக்கு...அட நம்ம அயிட்டம்...போன்லஸ் சிக்கன் + வெவிச்ச கிழங்கு...இதையும் அப்படியே டேபிள்ல்யே கொதிக்க வைச்சு கிண்டுங்கப்பாஅப்படியே நாமளே லைட்டா கொதிக்கவைச்சு...ஆங் கொதிக்குது அது கொதிக்குது, டேபிளுல கொதிக்குது...

.

முடிச்சுட்டீங்களா...நல்லாத்தான போயிக்கிட்டிருந்தது....

பெரியவர்கள், குழந்தைகள், பெண்கள் திறக்கக்கூடாத பதிவு

Image
ஏற்கனவே நடந்துமுடிந்த ஒரு பதிவர் சந்திப்பை (ஏமாளிகளை) நினைத்தும், இனி நடக்கவிருக்கும் பதிவர் சந்திப்பு ஒன்றை நினைத்தும் போடப்பட்ட பதிவு...எல்லாரும் போய் கலந்துக்கங்கடே !!!!