தேடுங்க !

Tuesday, September 30, 2008

குசும்பன் வாசகியின் அதிரடி பேட்டி !!!

வணக்கம் சகோதரி...முதல் முறையாக ஒரு வாசகி, தமிழ் வலைப்பதிவு உலகத்துக்கு அளிக்கும் செவ்வி இது..(பேட்டி / சரியான தமிழ் வார்த்தை செவ்விதான்)...

உங்களை பற்றி சொல்லுங்க, எப்படி தமிழ் வலைப்பதிவுகள் படிக்க ஆரம்பிச்சீங்க ?

பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுகிறேன்...அலுவலகம் முடிந்து வீட்டு சென்றபின் கணவர் வரும் வரையில் தினமலர் போன்ற தளங்களை மேய்வது வழக்கம்...அதன் மூலமாக தமிழ்ஷ் பழக்கமானது...கடந்த மூன்று மாதங்களாக தமிழ்ஷ் மூலம் வலைப்பதிவுகளை படித்து வருகிறேன்...

எப்படிப்பட்ட பதிவுகள் படிக்கிறீங்க ? பிடித்த பதிவு எது ? எந்த எந்த பதிவுகளை எப்படி படிக்கிறீங்க ?

பொதுவாக சீரியசாக எழுதும் வலைப்பதிவுகளை கண்டால் தூர விலகி ஓடுவேன்...உங்களுடைய வீராசாமீ பதிவு பி.டி.எப் கோப்பாக வந்தபோது அட தமிழில் இப்படி கூட எழுதறாங்களா என்று ரசித்தேன்...அப்போது அது ஒரு வலைப்பதிவு என்று தெரியாது...ப்ராக்லி ஸ்பீக்கிங், நான் ரெகுலராக படிப்பது குசும்பன் வலைப்பதிவு தான்..ஆம்லேட் மூலமாக வயதை கண்டுபிடிப்பது எப்படி என்று அவர் ஒரு குசும்பு பதிவு போட்டிருந்தார்...அதில் இருந்து ரெகுலராக அந்த பதிவுகளை வாசிப்பேன்...

நான் தமிழ்ஷ் மூலமாக, தலைப்புகள் ஈர்க்கும்படி இருந்தால் கண்டிப்பாக போய் படிப்பேன்...சில சமயம் தலைப்புகள் ஈர்க்கும்படி வைத்துவிட்டு உள்ளே மொக்கையாக இருக்கும்...தமிழ்ஷ் இல் அதிக ஓட்டுகள் வாங்கிய பதிவுகள் படிப்பேன்...

<இடைமறித்து> எப்படி பதிவுகளுக்கு போறீங்க ?

தமிழ்ஷ் மூலமாக பொதுவாக போவேன், ஆனால் குசும்பன், ஜ்யோராம் சுந்தர், பரிசல்காரன் போன்றவர்கள் பதிவுக்கு நேரடியாக URL டைப் செய்து இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மூலமாக போவேன்...

தமிழ்மணம் பற்றி தெரியுமா ?

ஆங், அங்கங்கே லிங்க் பார்த்திருக்கேன் ஆனால் இன்னும் சென்றதில்லை, தினமும் தமிழ்ஷ் மூலமாக பதிவுகள் படிக்கிறேன்...

உங்களுக்கு பிடித்த பதிவர்கள் யார்?

குசும்பன், ஜ்யோராம் சுந்தர், வெண்பூ, பரிசல்காரன், அதிஷா போன்றவர்களின் பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன்...உங்கள் பதிவும் படிக்கிறேன்...

எப்போதில் இருந்து படிக்கும் பழக்கம் ? பிடித்த எழுத்தாளர்கள் ?

சின்ன வயதில் இருந்து படித்துக்கொண்டிருக்கிறேன்...வீட்டில் அம்மா மளிகை கடை பொட்டலம் வாங்கி வந்தாலும் அதை கொட்டிவிட்டு அசுரத்தனமாக அதில் என்ன இருக்கிறது, அது எந்த புத்தகத்தின் பகுதி என்று கொலைவெறியோடு படித்திருக்கிறேன்...

சுஜாதா பிடிக்கும்...தேவிபாலா படுவேகமாக எழுதுவார்...படு விறு விறுப்போடு படிப்பேன்...

சாரு நிவேதிதா பற்றி ஏதோ சொல்லவேண்டும் என்றீர்களே ?

தனிமனித ஒழுக்கத்தோடு எழுதுங்கள் என்கிறார். இவர் ரொம்ப ஒழுங்கு. அவ்ளோதான்...

வலைபதிவுகள் படிப்பதால் என்ன நன்மை தீமை ?

பொதுவாக வலைப்பதிவுகள் ஒரு ஸ்ரெஸ் ரிலீப் என்று சொல்லவேண்டும்...வலைப்பதிவுகள் படிக்கும்போது மன அழுத்தங்கள் குறைந்து மனது லேசாகிறது...

பல்வேறு தகவல்களின் களஞ்சியம் என்றும் சொல்லலாம்...பொதுவாக செய்தி ஊடகங்களில் வெளிவராத தகவல்கள் கூட உடனுக்குடன் வெளியாகிது மிகவும் சிறப்பு...

எப்படிப்பட்ட பதிவுகள் வரவேண்டும் ?

நகைச்சுவை பதிவுகள் அதிகம் வரவேண்டும்...நகைச்சுவை என்ற பெயரில் மொக்கை போடுவது குறைய வேண்டும்...

தலைப்பு கவர்ச்சியாக வைப்பார்கள்...இங்கே க்ளிக் என்பார்கள்...உள்ளே சென்று க்ளிக் செய்தால் ஒரு மண்ணும் இருக்காது...இதுக்கு ஒரு பதிவு எதுக்கு ? டைம் வேஸ்ட் !!! போடும் மொக்கையை நல்ல மாதிரி, நகைச்சுவையா போடவேண்டும்...

வலையுலகின் எதிர்காலம் என்ன ?

இது ஒரு தொடர்பு ஊடகமாக, சோஷியல் நெர்வொர்க் ஆக, பிஸினஸ் நெர்வொர்க் ஆக உருவாக வாய்ப்பு உண்டு...மற்றபடி, பணிச்சுமை அழுத்தும்போது, மன அழுத்தம் குறைய வலைப்பூக்களை, நல்ல நகைச்சுவை வலைப்பூக்களை உபயோகிக்கலாம்...

உங்கள் குடும்பத்தினர் பற்றி / நீங்கள் வலைப்பூக்களை வாசிப்பதை அவர்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் ?

தகவல் தொழிநுட்ப துறையில் பணிபுரிகிறார் என்னுடைய கணவர், "அப்படி என்னதான் படிக்கிற அதுல" என்று ஆச்சர்யப்படுகிறார்..."அதெல்லாம் உங்களுக்கு தெரியாது" என்பேன்....

மொக்கை, கும்மி, பின்னூட்டம் என்பதெல்லாம் அவருக்கு புரியாத தமிழ் வார்த்தைகளாக உள்ளன...

வலைப்பூ ஆரம்பிக்கும் எண்ணம் உண்டா ?

கண்டிப்பாக...ஒரு அம்பது பதிவை எழுதி வைத்துவிட்டு, அதற்கு அப்புறமாக வலைப்பூவை ஆரம்பித்து ஒவ்வொன்றாக பதிவிடவேண்டும் என்பது என்னுடைய ஆசை...இன்னும் ரெண்டு மாசம் போகட்டும், இன்னும் ஒரு அதிரடி பதிவரை சந்திக்கபோகிறது இந்த வலையுலகம்...

************************************************************************

வாழ்த்துக்கள்...கண்மணி அக்கா சகோதரி ராப் போல காமெடியில் கலக்க வாழ்த்துக்கள்...!!!!

Monday, September 29, 2008

ஸ்பெஷல் பொரியல் 29.9.2008

லதானந்த் பதிவு போடவேண்டும் என்று ஜோசப் பால்ராஜ் வேண்டி விரும்பி கேட்டிருக்கிறார்...நானும் இந்த பகிரங்க பதிவின் மூலம் அதையே கேட்கிறேன்..

***********************************************

ஊரே சரோஜா படத்தை பாராட்டும்போது சpoஞ்doஜெய்yan அதை ஒரு அட்டு படம் என்று சொல்லியிருப்பது ஆச்சர்யம்...சரோஜா படத்துக்கு டிக்கெட் வாங்கிவிட்டு காதலில் விழுந்தேன் படத்துக்கு போய்விட்டாரோ ?

***********************************************

எல்லா பதிவுக்கும் சென்று - படிக்கிறாங்களோ இல்லையோ - me the first என்று பின்னூட்டம் போடும் சகோதரி ராப் இந்த பதிவுக்கு அப்படி போடமுடியாது என்று தெரிவித்துக்கொள்கிறேன்...

***********************************************

இணைய ரவுடி பொட்டீக்கடையார் இந்தியா விஜயம் செய்கிறார். அவரை பற்றி தெரியாதவர்கள் அவருடைய பதிவுக்கு சென்று உலக ஞானம் பெற்று அப்புறமாக அவரை கலாய்க்கவும்...

***********************************************

வெட்டிப்பயல் கிளு கிளு குளு குளு கதைப்போட்டி ஒன்றினை அறிவித்துள்ளார்...ஜெயிச்சா என்ன தருவார் என்று தெரியாமல் எப்படி கலந்துகொள்வது ? இந்தியா வரும்போது G1 போன் வாங்கி வந்து பரிசளிப்பார் என்றால் அந்த போட்டியில் கலந்துகொள்ள தயார்..பரிசாக முருங்கைக்காய் அரைகிலோ என்று அ(றி)விக்கவேண்டாம்...

***********************************************

காந்திஜெயந்தி அன்று கடைகளுக்கு விடுமுறை, நன்பர் வால்பையன் அத்தியாவசிய பொருட்களை வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்ளவேண்டும் என்று அன்பாக அறிவுறுத்தப்படுகிறது..

**********************************************

குசும்பன் ஜெயலலிதாவை சரியாக கலாய்ப்பதில்லையே ? ஒரு வேளை அ.இ.அ.தி.மு.கவில் உறுப்பினர் அட்டை பெற்றிருப்பாரோ ??

**********************************************

அபி அப்பாவின் இரண்டு நகைச்சுவை பதிவுகள் அற்புதம். மிஸ் பண்ணிடாதீங்கடே !!!

*********************************************

நாக்க முக்க பாடல் பற்றி அனைவரும் பேசினாலும் அந்த பாடல் இன்னும் டி.வியில் வரவில்லையே ? ஏதோ உள்நாட்டு சதி !!! மைனாரிட்டி தி.மு.க அரசு பதவி விலகவேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்...

**********************************************

உடனடியாக கும்மியர்கள் வந்து இந்த பதிவை பின்னூட்டம் போட்டு நிரப்பவேண்டும். இல்லை என்றா எல்லார் பெயரிலேயும் நானே பின்னூட்டம் போட்டுவிடுவேன் என்று எச்சரிக்கிறேன்...

Sunday, September 28, 2008

ஆதலினால் காதல் செய்தேன்.. பாகம் இரண்டு

பாகம் 1

முதலாம் ஆண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு தொடங்கியது....விடுதியில் இருந்த மாணவர்கள், விடுதியின் சட்ட திட்டங்கள் பிடிக்காமல் வெளியேறி தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கும் முயற்ச்சியில்...

நான், கோவிந்து, கார்த்திக், மணி, மற்றும் இளமாறன் ஆகிய ஐந்து பேரும் ஒன்றாக தங்கிக்கொள்ளலாம் என்று பிரியப்பட்டோம்...

வீடு தேடும் பொறுப்பு என்னுடையது....

தெரிந்த டீக்கடைக்கு சென்றேன்...இளங்கோ அண்ணா தான் இதற்க்கு ஓனர்..எங்க க்ரூப் கிட்ட ரொம்ப பாசமா இருப்பார்..நாங்களும் அவர் வயது வித்தியாசம் பார்க்காமல் விளையாடுவோம்...

நான்: என்ன இளங்கோ அண்னே...ஒரு ஸ்ட்ராங் டீயப்போடுறது...

இளங்கோ: என்ன குமாரு...கொஞ்சம் பழைய பாக்கிய வைக்கிறது..

நான்: என்னன்னே...இப்படி கேட்டா எப்படி...

இளங்கோ : வேற எப்படி ராசா கேக்குறது..

நான்: அட இருங்கன்னே...இந்த மாசத்தில இருந்து தனியா வீடு பாத்து தங்க போறோம்...செலவு கம்மியா ஆகும்..பழைய பாக்கி எல்லாம் கொடுத்துடுறோம்...

அண்ணன் ஒரு முறைப்பு லுக்கு கொடுக்கிறார்...

மீண்டும் நான்..அண்னே...தம்முக்கு ஒரு ரெண்டு ரூபா தாங்கன்னே...

இளங்கோ அண்ணன்:ரொம்பத்தான் ஏத்தமாகிப்போச்சி டா உங்களுக்கு...(சட்டை பையிலிருந்து காசை கொடுக்கிறார்..)

நான்: அண்ணே...பசங்க வீடு பாக்கிற வேலையை என்கிட்ட கொடுத்திட்டாங்க...ஏதாவது வீடு ஊருக்குள்ள இருக்கா சொல்லுங்க..

இளங்கோ அண்ணன்: அந்த உரக்கடைக்கு பக்கத்துவீடு காலியாத்தாண்டா இருக்கு...சீக்கிரம் போ...இளங்கோ சொல்லிவிட்டேன் அப்படின்னு சொல்லு...

வேகமாக தலையாட்டிவிட்டு உரக்கடை நோக்கி சென்றேன்...

உரக்கடை பூட்டி இருந்தது....மதிய உணவுக்காக சென்று இருப்பர் போலும்..

பக்கத்துவீடு திறந்து இருந்தது...மெல்ல தட்டினேன்....

டக் டக்...யாருங்க வீட்டுல...

யாரோ நடந்துவரும் சரசர ஒலி....

க்ரீச்....

கதவு திறந்தது....

மின்னல் வெட்டியது போல வந்து நின்றாள் என் தேவதை...

அவள் : என்ன வேனும்....

அவளை நேருக்கு நேர் பார்க்க தைரியம் இல்லை...

தலையை குனிந்தேன்...வீடு பாக்கலாமேன்னு...

அவள் : எந்த வீடு...

குனிந்த தலை நிமிராமல்...உரக்கடைக்கு பக்கத்துவீடு...இளங்கோ அண்ணா சொல்லிவிட்டார்...

அவள் : ஹல்லோ....வீடு பாக்கத்தானே வந்தீங்க...பொண்ணு பார்க்க இல்லையே...எதுக்கு இவ்ளோ வெக்கப்படுறீங்க...

அவமான உணர்ச்சி தலைதூக்க...சட்டென நிமிர்ந்து அவளை பார்த்தேன்...

அப்பா...அந்த கண்களில்தான் என்ன மின்னல்....என்ன தீட்சண்யம்...

என் தேவதை பேசும் என்பதே எனக்கு கனவு போல் இருந்தது....அதுவும் பட் பட் என பட்டாசாய் வெடிப்பாள் என்பது ஆச்சர்யமான ஆச்சர்யம் எனக்கு...

ஏற்க்கனவே உங்க பிரண்டு கோயிந்தன் என்னை ஸ்கூல் கிட்ட பார்த்து கேட்டார்...எங்க அப்பா கிட்ட சொல்லி உரக்கடைக்காரர் கிட்ட ஏற்க்கனவே சொல்லியாச்சி...

இனிமே குட்டிசுவர் மேல உட்காராமல் மாடியில் இருந்தே நீங்க என்னை சைட் அடிக்கலாம்....

ஹய்யோ...என் இதயம் வாய்வழியாக துள்ளி வெளியே வரும்போல இருந்தது...நாம சைட் அடிக்கற விஷயம் இவளுக்கு தெரிந்திருக்கு....அதுக்குமேல...இந்த கோயிந்தன்....இவளோட பேசின விஷயத்தை நம்ம கிட்ட சொல்லாம விட்டுட்டானே...பனியன் போட்ட சனியன்..அவன....

ஹி ஹி...அப்படி எல்லாம் இல்லை....ஹி ஹி...

அவள் :ரொம்ப வழியாதீங்க....உங்க அறையில நீங்க கவிதை எல்லாம் எழுதிக்கிட்டு இருக்க விஷயம் எல்லாம் கோவிந்தன் சொன்னார்...எனக்கு எப்போவே தெரியும்...நீங்க பண்ணிக்கிட்டு இருக்கறது எல்லாம்....பொண்னுங்க என்ன எதுவும் தெரியாதவங்கன்னு நினைச்சிட்டீங்களா...

வெட்கம் பிடுங்கி தின்றது எனக்கு....

ஹி ஹி...அப்படி எல்லாம் இல்லை....ஹி ஹி...

போதும்...எங்க அப்பா வர நேரம் ஆச்சு....நாளைக்கி மெஸ் பக்கத்தில வாங்க உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்....

வந்திடுரேன் திவ்யா...

முதல் முதலில் அவள் பெயரை அவளிடமே உச்சரிக்கையில்....நான் இந்த உலகத்திலேயே இல்லை...

அங்கிருந்து எப்போது வந்தேன்...எப்படி வந்தேன்...என்பதே தெரியவில்லை....அறையில் படுத்திருந்தேன்.......

மெஸ் என்பது கொஞ்சம் ஒதுக்கு புறமாக உள்ள இடம்...ஒரு ஓட்டல்காரர் கல்லூரி மாணவர்கள் சாப்பிடுவதற்க்காக அமைத்து இருந்தார்...

நிமிடங்கள் யுகங்களாக கழிந்தன....

*******************************************

காதல் பயணம் தொடரும்.....

Friday, September 26, 2008

ஆதலினால் காதல் செய்தேன்..பாகம் ஒன்று

ரெண்டு வருசத்துக்கு முன்னால எழுதியது !!! கொஞ்சம் மொக்கையாத்தான் இருக்கும் !!! பொறுத்தருள்க !!!

நான் குமார்..என் காதல் கதையை உங்களுக்கு இப்போது சொல்லுகிறேன்...என் பள்ளிப் படிப்பு முடிந்தது...கல்லூரிக்கான தேடல் ஆரம்பமாயிற்று...என் மதிப்பெண் அவ்வளவு அதிகமில்லை...சராசரி தான்...இடம் கிடைத்தது திருச்சிக்கருகில் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி...

கட்டுப்பாடுகள் நிறைந்த பள்ளிப் பருவத்தில் கல்லூரியைப் பற்றி பல கனவுகள் கண்டிருந்தேன்...அவை யாவும் நிறைவேறப்போகும் ஆவலில் நெஞ்சம் நிறைந்த படபடப்புடன் முதல் நாள் கல்லூரி விடுதியில்....

நண்பர் அறிமுகம் எல்லாம் முடிந்தது...பல ஊர்களில் இருந்து இந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து மாணவர்கள் வந்திருந்தார்கள்...

கல்லூரி வகுப்புகள் ஆரம்பமாயின...அனைத்து சுகந்திரங்களும் ஒருசேர கைகளில்...

நினைத்த நேரம் சினிமா...அவ்வப்போது வகுப்பு...பல சிறகுகள் முளைத்தது போல் இருந்தது...

எங்கள் கல்லூரியில் இருந்து விடுதி அரை கிலோமீட்டர் தூரம் அமைந்திருந்தது...நடந்துதான் செல்ல வேண்டும்...

கல்லூரிக்கு அருகில் ஒரு பள்ளியும் அமைந்திருந்தது....முற்றிலும் மாணவிகள் படிக்கக் கூடிய பள்ளி....

மாலை கல்லூரி முடிந்ததும் அந்த பள்ளிக்கருகில் இருந்த ஒரு குட்டிச்சுவர் தான் மிக உதவியாக இருந்தது...அதில் அமர்ந்து கொண்டு போகும் வரும் இளம் சிட்டுக்களைப் பார்ப்பது....பள்ளி இறுதி வகுப்பில் இருக்கும் மாணவிகள், வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதைகள் போல் தோன்றினார்கள்...

அந்த தேவதைகளில் ஒன்றுதான் என் இதய ராணியாக பின்னாளில் ஆகிய திவ்யா...

ஆடம்பரமான உடை அணிவதில்லை அவள்...சராசரி உயரம்...சொல்லப்போனால் சற்று குள்ளம்...நீள கருங் கூந்தல்...பார்ப்பவரின் இதயத்தினை ஊடுருவும் கண்கள்....குத்தீட்டி போல் அமைந்த புருவம்.....செந்நிற சிறிய உதடுகள்.....

நளினமாக நடக்கும் நடை...பேசுகிறாளா இல்லையா என்பது போல மெல்லிய குரல்...

இது தான் திவ்யா...

நான் பெண்களிடம் அதிகம் பேசுவது கிடையாது...ஆரம்பத்தில் சாதாரணமாக தெரிந்த திவ்யா, பிறகு என் உள்ளத்தினை கொள்ளை கொண்டாள்...

அவளைப் பார்க்காத நாட்கள் , எனக்கு நாட்களாகவே தோன்றவில்லை....அவளை மீண்டும் காணும்வரை, வலி நிறைந்ததாக மாறின...

அவளிடம் நான் முதல் முதலாக பேசும் தருணம் வாய்த்தது...அந்த நாள்....

..காதல் பயணம் தொடரும்..

***************************************************

தமிழ்மணத்துக்கு சீரியசான வேண்டுகோள் !!!

அந்த திரட்டி, அப்படி இருக்கு...அதனால நீங்க இப்படி மாத்துங்க என்றெல்லாம் கருத்து கந்தசாமியாக விரும்பவில்லை...

இருந்தாலும் மற்ற திரட்டிகளின் நல்ல பண்புகளை நமது திரட்டியிலும் பொருத்தினால் கொஞ்சம் நல்லா இருக்குமே என்பது தான் என்னுடைய வேண்டுகோள்...

ஏற்கனவே பல காண்ட்ரவர்ஸிகள் சூடாக இடுகை பற்றி இருக்கிறது...(ஏன் நான் போடும் சில குப்பை இடுகைகளே சூடான இடுகைக்கு வந்து தொலைவது எப்படி இருக்கிறது ?)

நல்ல பதிவுகள் சூடான இடுகைக்கு செல்வதில்லை, காண்ட்ரவர்ஷியல் மற்றும் கவர்ச்சியான தலைப்பு உள்ள பதிவுகளே செல்கின்றன...

சில சமயம் வீக் எண்ட் ஜொள்ளு என்று பதிவு தலைப்பு வைத்து உள்ளே கே.பி.சுந்தராம்பாள் படம் போட்டால் கூட அது சூடான இடுகைக்கு வந்துவிடுகிறது...

மேட்டர் இது தான்...

சூடான இடுகையை எவ்வளவு பேர் பார்வையிடுகிறார்கள் என்பதை வைத்து காட்டுகிறீர்கள், வாசகர் பரிந்துரையை எவ்வளவு பேர் ஓட்டளிக்கிறார்கள் என்பதை வைத்து காட்டுகிறீர்கள்...

இந்த பண்புகளை ஏன் ஒருங்கமைக்க கூடாது ?

வாசகர்கள் ஓட்டளிக்கும்போது "வெற்றி" என்பது போல காட்டும் கை சின்னத்தை கருவி பட்டையில் இருந்து அமுக்குகிறார்கள், அதனால் அது வாசகர் பரிந்துரையில் வருகிறது ( இதுவே இன்னும் நிறைய பேருக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன்)..

அதை சற்று மாற்றி, "சூடான இடுகையாக்கு" என்று கொடுத்துவிட்டீர்கள் என்றால், உள்ளே பதிவை படித்த பிறகு, குப்பை என்று தெரிந்தால் அதை சூடான இடுகை ஆக்க தேவை இல்லை..உண்மையிலேயே சூடான இடுகைதான் என்றால் அதை கண்டிப்பாக சூடான இடுகைக்கான வாக்கை அளித்து சூடான இடுகை ஆக்குகிறோம்..

வாசகர் பரித்துரைக்கான பத்து செண்டிமீட்டர் நீள காலம் + சூடான இடுகைக்கான பத்து செண்டிமீட்டர் காலத்தில் இரண்டு மடங்கான இடுகைகளை காட்டலாமே ?

என்ன சொல்றீங்க தமிழ்மணம் நிர்வாகிகளே ?

Thursday, September 25, 2008

தமிழ் வலைப்பதிவர்களின் தனிப்பட்ட தொழில்கள் !!

நமது வலைப்பதிவர்களின் தனிப்பட்ட தொழில்கள் சம்பந்தமான பதிவு இது...உங்களுக்கு தேவை என்றால் தொடர்புகொள்ளுங்கள்....நான் ப்ளாகர், அதனால டிஸ்கவுண்ட் கொடுங்கள் என்றெல்லாம் டார்ச்சர் தரக்கூடாது ஆமாம்..

http://www.makkal-sattam.org/

மக்கள் சட்டம் என்ற பதிவை நடத்திவரும் சுந்தர்ராஜன், க்ரெடிட் கார்டு சம்பந்தமான பல்வேறு விடயங்களை டீல் செய்கிறார்...அவருடைய http://www.creditcardwatch.org/ என்ற தளத்தில் பாமரருக்கும் புரியும் வண்ணம் தமிழில் அற்புதமான விளக்கங்கள் தருகிறார்...க்ரிமினல் மற்றும் சிவில் சட்டத்துறை நிபுனர், உங்கள் சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கு நாடவும்...

http://www.eeravengayam.blogspot.com/

ஈரவெங்காயம் என்ற பெயரில் எழுதும் AKS ஒரு வியாபார காந்தம். கார்மெண்ட் இம்போர்ட் மற்றும் எக்ஸ்போர்ட் செய்கிறார்...நான் கூட எங்கள் அலுவலகத்தில் அனைவருக்கும் தேவைப்படும் கஸ்டமைஸுடு டி-ஷர்ட்ஸ் தயாரிக்க அவருடைய நிறுவனத்தை நாடலாம் என்று உள்ளேன்...இவர் இங்கே தயாரிக்கும் டிசர்ட் மற்றும் கார்மெண்ட்ஸ், வெளிநாடு சென்று அங்கே இருந்து ஏதோ ஒரு ப்ராண்ட் நேமுடன் மீண்டும் இந்தியா வரும் வாய்ப்பு கூட உண்டு. தரம் வாய்ந்த கார்மெண்ட்ஸ் தயாரிக்கும் இவர் திருப்பூரிலேயே நிறுவனம் வைத்துள்ளார். தேவைக்கு அணுகவும்...

http://osaichella.blogspot.com/

ஓசை செல்லா, ஒரு இணைய நாடோடி என்பது எல்லோருக்கும் தெரியும்...அவருடைய தொழில் இணைய பக்க வடிவமைப்பு மற்றும் டொமைன் நேம் பதிவது...ஏற்கனவே இவரிடம் ஒரு இணைய முகவரி பெற்றுள்ளேன், மேலும் சொந்த பெயரில் வலைப்பதிவு அமைக்க இவரை நாடவிருக்கிறேன்...வலைத்தளங்களை உருவாக்க நாடலாம்...

http://kuttapusky.blogspot.com/

வரவணையான், Fright Forwarding துறையில் இருக்கிறார்...தூத்துக்குடி துறைமுகத்தில் நீண்டகாலம் பணியாற்றியவர்...ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சம்பந்தமான எந்தவொரு பணிக்கும் இவரை நாடலாம்...இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி / இறக்குமதி செய்வதில் மிருந்த அனுபவம் உள்ளவர்...

http://dondu.blogspot.com

மொழிபெயர்ப்பு மற்றும் துபாஷி பணிகளுக்கு (ஆங்கிலத்திலிருந்து ஜெர்மன், பிரெஞ்சு, ஹிந்தி மற்றும் வைஸ் வர்ஸா). பொறியாளரான இவர் இந்த துறையில் மிகுந்த அனுபவம் உள்ளவர். ஆனால் பைசா சுத்தமாக தொழில் செய்வார். வலைப்பதிவர் என்பதற்காக மீட்டரை குறைத்துக்கொள்ளமாட்டார், ஜாக்கிரதை :))

http://vadakaraivelan.blogspot.com/

கோவையை சேர்ந்த வடகரை வேலன் அண்ணாச்சி, சொந்தமாக ஆப்செட் ப்ரஸ் வைத்துள்ளார்...தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன, வடிவேல் கூட வ.மு.க ஆரம்பித்தாலும் ஆரம்பிப்பார் போல தெரிகிறது, அண்ணாச்சியை உங்கள் ப்ரிண்டிங் சம்பந்தமான பணிகளுக்கு அணுகலாம்..

http://tvmalaionline.blogspot.com/

நன்பர் ஜிம்ஷா, இணைய வடிவமைப்பு பணியில் உள்ளார். க்ராபிக்ஸ், லோகோ டிசைன், போன்ற மேட்டர்களுக்கு ஜிம்ஷாவை நாடலாம்...படு சுறுசுறுப்பாக பணிகளை முடித்து தருதல் இவரின் சிறப்பு...

http://dailycoffe.blogspot.com/

நன்பர் இளைய கவி, இப்போது டூரிசம் துறையில் கொடிகட்டி பறப்பதாக கேள்வி...அலுவலகங்களில் இருந்து மொத்தமாக டூர் செல்பவர்கள் எந்த ஊருக்கு சென்றாலும் அங்கே இவரின் கைட் இருப்பார்கள், பேக்கேஜ் டூர்ஸ் எல்லாம் கலக்குகிறார்...கேரளா போகனுமா, சிங்கப்பூர் போகனுமா, எதுவானாலும் சிறப்பாக செய்கிறார்கள்..

http://valpaiyan.blogspot.com/

தோழர் வால்பையன், முன்பேர வர்த்தகத்தில் இருக்கிறார்...முன்பேர வர்த்தகம் என்றால் ஒரு பத்தாயிரத்தை கட்டி 100 கிராம் கோல்டு வாங்கி வைத்துவிடுதல், அதை இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கழித்து அதிக லாபத்துக்கு விற்றல் அல்லது நாம் இரண்டு வருடங்களுக்கு முன்பு வாங்கிய விலையில் அன்றைக்கு வாங்கி கொள்ளுதல்...அதாவது நமது பெயரில் தங்கம் வாங்கி ரிசர்வ் செய்துவிடுவார்கள்...நான் கூட 100 கிராம் வாங்கப்போறேன்....நீங்கள் தொடர்புகொள்ள அவர் வலை முகவரியை தந்துள்ளேன்... அவரிடமே உங்களுக்கு தேவையான விளக்கங்களை பெற்றுக்கொள்ளுங்கள்...

http://truetamilans.blogspot.com/

உண்மைத்தமிழன் அண்ணாச்சி, நன்றாக டைப்புவார் என்பது ஊரறிந்த விசயம்...தமிழில் டைப்பிங் செய்ய வேண்டுமென்றால் அவரை தொடர்புகொள்ளவும்....ஓய்வு நேரங்களில் அதனை செய்து தருவார்...

http://sanjaigandhi.blogspot.com/

தோழர் சஞ்ஜெய், கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் இருக்கிறார்...கம்பெனியிடமிருந்து வாங்கி டீலர்களுக்கு சப்ளை செய்கிறார்..எக்ஸாம்பிள், எல்.ஜியிடம் இருந்து வாங்கி வசந்த் அன் கோவுக்கு தர்ர மாதிரி. எலக்ட்ரோலக்ஸ், சாம்ஸங் எல்லாம் செய்யுறார்...மொத்தமாக கன்ஸூமர் கூட்ஸ் தேவைப்படுபவர்கள் அணுகலாம்...அப்படி அணுகும்போது, ஹல்லோ மிஸ்டர் செல்லா என்று அறிமுகம் செய்துகொள்ளவும்...

http://kasiblogs.blogspot.com/

தமிழ்மணம் கண்ட காசி அவர்களுடைய கண்டுபிடிப்பு இந்த சேவை மேஜிக் ஆட்டோமேட்டிக் குக்கர். அனைத்து விவரங்களும் http://www.sevaimagic.com/ என்ற இணைய தளத்தில் உள்ளது...இணையத்திலேயே ஆர்டர் செய்யும் வசதியும் உள்ளது...

http://tvpravi.blogspot.com

தோழர் செந்தழல் ரவி, உருப்புடியாக எதையாவது செய்யனும் என்று இந்த பதிவு போட்டிருக்கிறார்..இதில் ஓட்டு குத்தவும், எப்போதும் நெகட்டிவ் ஓட்டு குத்திச்செல்லும் நன்பரே, இதிலாவது பாஸிட்டிவ் ஓட்டு போடவும் ப்ளீஸ்...

எனக்கு தெரிந்த அளவில் வலைப்பதிவர்களின் தனிப்பட்ட துறைகளை பற்றி எழுதியிருக்கிறேன்...எதாவது விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்...!!!

ஆதலினால் காதல் செய்தேன் !!! இளமை தொடர்கதை !!!

இரண்டாயிரத்து ஆறு நவம்பர் மாதம் படபடவென ஏழு பாகங்கள் எழுதி அப்படியே விட்டுவிட்டேன்...
மிகுந்த வாசிப்பனுபவம் உள்ள பி.கே.எஸ், பாஸ்டன் பாலா, குமரன், மதுமிதா, மங்கை அக்கா, ஷைலஜா அக்கா, மா.சிவக்குமார், முத்து தமிழினி எல்லாரும் ரசித்த தொடர் இந்த தொடர்...

தோழர் பொட்டீக்கடை, தோழர் ஜி.ரா, அருட்பெருங்கோ, கார்மேகராஜா அப்புறம் சந்தோஷ், அனிதா பவன்குமார் எல்லாரும் ரொம்ப உற்சாகப்படுத்தினாங்க...!!!

இவர்கள் பின்னூட்டம் போட்டு உற்சாகப்படுத்தும்போது அப்படியே வானத்தில் பறக்கிறமாதிரி இருக்கும்...ஆக்க்கக்கா, நாமளும் எளுத்தாளர் டோய் என்று நினைத்துக்கொண்டு படபடவென ஏழு பாகங்கள் போட்டாச்சு...

அப்புறம் பல்வேறு வேலைகள்...!! பல்வேறு பிரச்சினைகள்...!!! ஆரோக்கியமற்ற வலைச்சூழல் !!! இதெல்லாம் சேர்ந்து என்னோட கற்பனை குதிரையை கடிவாளம் போட்டு குத்த வெச்சு உக்கார வெச்சுருச்சு...

இப்போ வலையுலகில் இருக்கிற சூழல், எதையாவது உருப்புடியா எழுது என்று உசுப்புகிறது...ப்ராஜக்ட் மேனேஜர் கதை "வயலண்டுக்கா உந்தி" என்று நம்ம கொலுட்டி நன்பர் சொல்லிட்டார். அதனால் மென்மையான வெண்மையான கோல்கேட் பல்பொடி மாதிரியான பழைய கதையை தூசு தட்டி எடுத்து, முடிச்சு வெச்சுறலாம்னு இருக்கேன்...

ஏன் இந்த கதையை முடிக்கல என்று திட்டி மடல் அனுப்பிய நிலா முற்றத்து உறவுகள் தனிமதி அக்கா, சத்தியா, அப்புறம் சிரிவ் இவங்களுக்கு " ஐயாம் வெரி ஸாரி"...

இருக்குற ஏழு பதிவுகளை ஒவ்வொன்னா போஸ்ட் பண்ணீட்டு அப்புறமா அதுக்கடுத்த மேட்டர்களை எழுதி முடிச்சுடுறேன்...உங்கள் அனைவரின் ஆதரவு தேவை மக்கள்ஸ் !!!

இளமைத்தொடர்கதை என்பதால் நான் "அழகு" என்று நினைக்கும் ஒரு பெண்ணின் படத்தை ஒவ்வொரு பதிவிலும் போடபோறேன்...என்-ஜாய் மக்கள்ஸ் !!!

Wednesday, September 24, 2008

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (இறுதி பகுதி)

ஒருமுறை கொஞ்சம் சீரியஸான பொழுதில் அவருக்கும் என்னுடைய நன்பனுக்கு கடுமையான வாக்குவாதம்...குடி, கடவுள், பெண்கள், வறுமை என்று பல்வேறு திசைகளில் போனது..

சார், உங்களை நீங்க கொஞ்சம் மாத்திக்கிட்டா நல்லது...

என்ன மாத்திக்கனும் ?

உங்கக்கிட்ட இருக்க கெட்ட பழக்கங்கள் கொஞ்சம் மாத்திக்கிடுங்க சார், அப்புறம் ரொம்ப கஷ்டமாகிரும்...

என்ன கெட்ட பழக்கம் ? சொல்லுங்க அப்புறம் பார்க்கலாம்...

ஏய் விஜய், நீ சொல்றா...

விஜய் மெதுவாக ஆரம்பிச்சான்...சார் குடிக்கறது தப்பில்லையா ?

யார் சொன்னது தப்புன்னு ? ஏன் மேலை நாட்டுல சாப்பாட்டு டேபிள் மேலயே சரக்க வெச்சிருக்கான்...அப்பன் மவன் எல்லாரும் அடிக்கறான், அவன் கிட்ட போய் சொல்லுவியா ?

அங்க குடிக்கிறாங்கன்னா அது அவங்க க்ளைமேட்டுக்கு சூட் ஆகும் குடிக்கிறாங்க...இங்க எதுக்கு சார் குடிக்கிறோம் ? போதைக்கு தானே ?

ஏன் இங்க சரக்கே இல்லையா என்ன ? கற்காலத்துலயே சோம பாணம், சுறா பாணம் அப்படின்னு இருந்தது...

ஏன் ராமாயணம், மகாபாரத கதையில கூடத்தான் சரக்கு இருந்ததுக்கு ஆதாரம் இருக்கு...அப்போ என்ன இந்தியா க்ளைமேட் ஸ்விஸ்ஸர்லாந்து க்ளைமேட்டா இருந்ததா என்ன ?

சார், குடிக்கறது தப்பில்லை சார், அளவுக்கதிகமா குடிக்கறது தான் தப்பு...இடையில் புகுந்து நான்...

ஏண்டா, இவ்ளோ நேரம் குடிக்கறதே தப்புன்னு சொன்னீங்க, இப்ப அளவா குடிக்கனும்ங்கறீங்க...

எதுடா உங்க அளவு ? ஒருத்தனுக்கு நைண்டி அடிச்சா போதும்னா எனக்கு ஆப் அடிச்சாலும் மப்பு ஏறமாட்டேங்குது...நீங்க எல்லாம் மோந்து பாத்தாலே படுத்திடுறீங்க...அப்ப எது அளவு ? கவர்மெண்ட அதை மொதல்ல பிக்ஸ் பண்ணச்சொல்லு...அளவோட குடிக்கறோம்...

சார் அதை விடுங்க...கோவிலுக்கு போகக்கூடாது அப்படீன்னு நீங்க உங்க வொய்ப் கிட்ட சண்டை போட்டதா சொன்னீங்களே ? அது தப்பில்லையா ?

ஆமா...பூஜை, புனஸ்காரம்னு உப்பு சப்பில்லாத மேட்டருக்கு காசு செலவு பண்ணா ? அதான் இழுத்து போட்டு அடிச்சேன்...

சார், உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாம இருக்கலாம்...அதுக்காக அவங்களை ஏன் சார் தடுக்கனும் நீங்க ?

ஏய் என்ன சொல்ற நீ ? கொஞ்சமாவது அறிவு இருக்கா ? உலகம் கடவுள் படைச்சாடா உருவாச்சி ? பிக் பேங் தியரி தெரியுமா ? ஓசோன்ல ஹோல் தெரியுமா ? ப்ளாக் ஹோல் தெரியுமா ?

இவ்ளோ சைன்ஸ் வளந்திருக்கு, டி.என்.ஏவுல உள்ள ஸ்ட்ரக்சரை ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்கும்போது, கோயில்ல அய்யர் ஊத்தற மாட்டு மூத்திரத்த தலையில தெளிச்சிக்கிட்டு வர்றது எதுக்கு ?

சார், கடவுள் அப்படீங்கறது அவங்கவங்க நம்பிக்கை சார்ந்த விஷயம். நீங்க பாலோ பண்ணலைன்னா ஏன் சார் அடுத்தவங்களை இரிட்டேட் பண்ணனும் ?

ஏன் விஜய் கூடத்தான் தினமும் காலையில சாமி கும்பிடுறான்...அதுக்காக நாங்க பண்ற ப்ராஜக்ட் டெலிவரி வேணாம்னு சொல்லிருவீங்களா சார் ?

கும்பிடுங்கடா. நல்லா கும்பிடுங்க. அதுக்கு முன்னால உங்க மண்டையில இருக்க களி மண்ணை கொஞ்சம் யூஸ் பண்ணுங்கன்னு சொல்றேன்...ஒம்போது கிரகமாம், பூமியை சுத்தி எல்லா கிரகமும் இருக்காம், அரை லூசுப்பயலுகளா.

புளூட்டோ, நெப்டியூனை ஏன் சேர்க்கலை ? அதுவும் இல்லாம மில்க்கீ வேயில ஆயிரக்கணக்கான கிரகங்கள் இருக்கே, அதுக்கெல்லாம் போடவேண்டியது தானே கட்டம் ? ஏன் துலாம், கண்ணியோட நிறுத்திட்டீங்க ? டைனோசர் ராசியையும் சேர்க்கவேண்டியது தானே ?

சார் இது வீண் விதண்டாவாதம். நம்மளோட முன்னோர்கள் சொன்னது எல்லாம் ஒவ்வொரு காரணத்துக்காகத்தான்..

ஏண்டா காக்காயிக்கு சோறு வைக்கச்சொன்னாங்களா முன்னோர்கள் ? முண்டச்சிக்கு மொட்டையடிக்க சொன்னாங்களா முன்னோர்கள் ?

எலுமிச்சம்பழத்தை வெச்சு திருஷ்டி கழிக்க சொன்னாங்களா முன்னோர்கள் ? அப்படி ஒரு மண்ணுக்கும் யூஸ் இல்லாத மேட்டரை வெச்சு என்னாங்கடா கிழிச்சீங்க ? கம்புயூட்டர் கண்டுபிடிச்சீங்களா, கரண்ட கண்டுபிடிச்சீங்களா, அட்லீஸ்ட் ஒரு கால்குலேட்டரயாவது கண்டுபிடிச்சீங்களா ?

வாழை எலையை எப்படி போட்டு திங்கனும்னு சொல்லிக்குடுக்கறதுக்கு எதுக்குடா அந்த பண்ணாடைங்க ? ஏன் இப்ப வாழை எலையை உட்டுட்டு ப்ளாஸ்டிக் ப்ளேட்ல திங்கறீங்க ? ஏன் வாழை எலையிலேயே திங்கறது ?

சார், உங்களை மடக்க வேற வழியில்ல, உங்க பர்சனல் மேட்டருக்கு தான் வரவேண்டியிருக்கு...

தாராளமா வாங்க, எதுவார்ந்தாலும் கேளுங்க சொல்றேன்...

ஒய்ப் குழந்தைன்னு ஆனதுக்கப்புறம் உங்களுக்கு எதுக்கு சார் வேற பொண்ணு ? ஏன் உங்களால உங்களோட ஒய்ப் குழந்தைக்கு உண்மையா இருக்கமுடியல ?

உண்மையா இருந்தாத்தான் நல்ல புருஷனா ? அவங்களை நான் நல்லா வெச்சிருக்கேன். அதே சமயம் என்னுடைய செக்ஸ் தேவைகளை அவளாள பூர்த்தி செய்ய முடியாது, அதனால் தான் நான் அடுத்த பெண்ணை தேடி போறேன்...

பணம் கொடுக்கிறென், வராளுங்க. அவளுங்க வரலைன்னா நான் போவ முடியாது இல்லையா ? அதே சமயம் எங்கிட்ட பணம் இல்லைன்னா எவ வருவா சொல்லு ?

சார், இதை ஏத்துக்க முடியாது, நீங்க என்ன தான் சொன்னாலும் தன்னோட புருஷன் ராமனா இருக்கத்தான் எந்த பொண்ணும் விரும்புவா.

நீ சொல்ற அதே கதைகள்ல ஒரு பொண்டாட்டியோட ராமனும் இருந்தான், அவுங்கப்பன் தசரதன் ஆயிரம் பொண்டாட்டியோட இருந்தான்.

அதே ராமன் தான் அவன் பொண்டாட்டிய நெருப்புல இறங்க சொன்னான், நேருக்கு நேர் சண்டைபோடாம மறைஞ்சு இருந்து அம்பு உட்டான்...

சார், உங்களால உங்களோட பெயிலியர்ஸ் எதையும் ஒத்துக்க முடியாது...அதனாலதான் உங்களோட தனிப்பட்ட வாழ்க்கையில உங்களால சக்ஸஸ்புல்லா இருக்கமுடியல...

ஏன், இப்ப என்ன பெயிலியர் ? என்னால நினைச்சத குடிக்க முடியுது, நினைச்ச பொண்ணோட படுக்க முடியுது, நினைச்ச பொருளை வாங்க முடியுது, இதுக்கு மேல என்ன சக்ஸஸ்புல்லா இருக்கறது ?

நினைச்ச பொருளை வாங்குறதோ, நினைச்ச சரக்க குடிக்கிறதோ, நினைச்ச பொண்ணோட படுக்கிறதோ - இது மட்டுமே லைப் இல்லை சார். சமுதாயம் உங்களை எப்படி பார்க்குதுன்னு.....

இடைமறிக்கிறார்...

என்ன பெரிய சமுதாயம் ? நான் ஒன்னுமில்லாதவனாயிருந்தா இந்த சமுதாயம் வந்து எனக்கு சோறு போடுமா என்ன ? என்னோட காருக்கு என்ன சமுதாயமா பெட்ரோல் போடப்போவுது ? எவன் எப்படி இருக்கான்னு புறனி பேசறதுக்கு தான் இந்த சமுதாயம் லாயக்கு.

அவனுங்களால யாருக்கும் எந்த நன்மையும் இல்ல. அதுனால சமுதாயம், சாக்கடை டிச்சு, சவுக்கு மரம்னு பேசுறதை விட்டுரு சரியா ? நான் ஹைதராபாத் போனா இதே சமுதாயத்தை கூட்டிக்கிட்டா போவப்போறேன் ?

கொஞ்சம் மெல்லிய குரலில் விஜய் சொல்கிறான்...உங்களோட குழந்தையோட எதிர்காலத்துக்காகவாவது உங்களோட ஈகோவை விட்டுட்டு ?

என்ன ஈகோ ? பொட்டச்சிகளுக்குத்தான் இப்ப ஈகோ அதிகம். பத்தாயிரம் ரூபா சம்பளம் வாங்கிட்டாலே என்னமோ ப்ளைட் ஓட்டுறமாதிரி நடக்கறாளுங்க. அம்பதாயிரம் சம்பாதிக்கற என்னோட பொண்டாட்டிக்கு எவ்ளோ ஈகோ இருக்கும்னு நீயே முடிவு பண்ணிக்க...

சார், இந்த மைண்ட் செட்டோட இருந்தா எப்படி சார் நீங்க ஒன்னா சேர்ந்து வாழமுடியும் ? அட்லீஸ்ட் உங்களோட குழந்தையோட எதிர்காலத்தை பாருங்க சார் ப்ளீஸ்...

இப்ப அடுத்த ரவுண்ட போடலாம், அப்புறமா குழந்தையோட எதிர்காலத்தை பார்க்கலாம் ஹா ஹா ஹா என்று வெடிச்சிரிப்பாக சிரிக்கிறார்...நான் விஜய் முகத்தை பார்த்தேன்...

என்னவென்று தெரியாத ஏதோ ஒரு உணர்ச்சியை அவன் முகம் வெளிப்படுத்திக்கொண்டிருந்தது...அவன் எப்போதும் இப்படித்தான், அவன் என்ன நினைக்கிறான் என்பதை அவன் முகத்தில் இருந்து கண்டுபிடிக்கவே முடியாது...!!!

சார் கிளம்பறேன் என்றபடி எழுந்தேன், விஜய் எனக்கு முன்பாக வாசல் அருகில் நின்றிருந்தான்...

அடுத்த வாரம் அவருடைய ட்ரைவர் சலீம் பாய் போன் செய்தார்.

சார். ரோட்ல ட்ராபிக்ல சண்டையில ஒருத்தன் கழுத்த நெறிச்சுட்டான் சார். தொண்டையில காயம் சார், டாக்டர் குடிக்கக்கூடாதுன்னு சொன்னார். இவர் நைட்டு குடிச்சார் சார்.

மேலே பேசமுடியாமல் தினறினார் பாய்...

காலையில எழுந்தவுடனே மூச்சுவிட முடியாம, இருமல் வந்து,

சார் போய்ட்டார் சார்...

. முற்றுப்புள்ளி

நினைவுகள் முற்றும்...!!!

.

Tuesday, September 23, 2008

இரண்டாம் திருமணம் செய்பவர்களுக்கான பத்து டிப்ஸ்

1. உங்கள் முதல் திருமணத்தில் உள்ள பிரச்சினைகளை முதலில் முடியுங்கள் - பொருளாதார, சமூக, வாழுமிடத்தில் உள்ள தொல்லைகளில் இருந்து முதலில் வெளியே வாருங்கள்...நீங்கள் ஒரு புதிய உறவுக்கு தயார் என்பதை நீங்கள் உங்கள் மனதில் இருத்துங்கள்...

2. உங்கள் தவறுகளை உணருங்கள்...உங்கள் முதல் திருமண அனுபவத்தினை சீர் தூக்கிப்பாருங்கள்...உங்கள் பலம், பலவீனம் ஆகியவற்றை அசைபோடுங்கள்...பழைய தவறுகளை திரும்ப செய்துவிடாமல் இருக்க இது நிச்சயம் தேவையான ஒன்று...

3. உங்கள் புதிய உறவை முழுமையாக புரிந்துகொள்ள முயலுங்கள்...இந்த இரண்டாவது திருமணம் உங்களுடைய உயிரில்பாதியை பற்றி ஆழமாக தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு என்று நினையுங்கள்....உங்களுக்கு குழந்தை இருப்பின் அந்த குழந்தையை பற்றி, அந்த குழந்தையின் எதிர்காலம் பற்றி உங்கள் புதிய வாழ்க்கைத்துணையின் உள்ளக்கிடக்கை என்னவாக இருக்கிறது என்பதை ஆழமாக வெளிக்கொண்டுவாருங்கள்...

4. நீங்கள் நீங்களாக இருங்கள், திறந்த புத்தகமாயிருங்கள்...மென்மையாக பேசுங்கள்...உங்கள் பயங்கள், சந்தேகங்கள், நம்பிக்கைகள் போன்றவைகளை வெளிப்படையாக சொல்லுங்கள்...உங்கள் உள்ளக்கிடக்கைகள் மற்றும் ஒரு தோல்வியை தந்துவிடும் என்ற எண்ணம் இல்லாமல் உங்கள் புதிய உறவிடம் அனைத்தையும் வெளிப்படுத்துங்கள்...

5. திருமணத்துக்கு முன்பு வழிகாட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் கவுன்ஸிலிங் போன்றவற்றில் கலந்துகொள்ளுங்கள்...உங்கள் மறுமணத்திற்கான ஆழமான அடித்தளம் அமையுங்கள்...

6. புதிதாக தொடங்குங்கள். ஒரு புதிய வீட்டில் - புதிய நன்பர்களுடன் உங்கள் மறுமணத்தை தொடங்குங்கள்...பழைய பேய்கள் உங்கள் இதயத்தை மீண்டும் துளைத்துவிடாதபடிக்கு, பழைய ஊரில் இருந்து வெளியேறுவது கூட பலனையும் நிம்மதியையும் தரும்...

7. புதிய பழக்க வழக்கங்களை உருவாக்குங்கள்...ஜாகிங், ஜிம், ஏதாவது புதிய மொழி படித்தல், புத்தகங்கள் வாசித்தல் என்று உங்கள் பழைய பழக்கங்களை தூக்கி எறிந்துவிட்டு புதிய ஒரு உலகத்துக்கு தயாராகுங்கள்...மறுமணத்தினை புத்தம் புதியதாக ஆரம்பிக்க ஒரு சிறந்த வழி இது...

8. வளைந்துகொடுக்க பழகுங்கள்....உங்கள் பழைய பழக்கங்களில் இருந்து விடுபட்டால் தான் ஒரு வெற்றிகரமான புதிய வாழ்க்கையை தொடங்கமுடியும்...உங்கள் உள்ளத்தை திறந்தே வைத்திருங்கள்...உங்களை மாற்றிக்கொள்ள தயாராக இருங்கள்...இது உங்கள் புதிய வாழ்க்கைத்துணையையும் உங்களையும் அற்புதமான தம்பதியினராக உதவும்...

9. பணப்பரிமாற்றம் போன்ற விடயங்களே மன உளைச்சலை தந்து, புதிய வாழ்க்கையை நிம்மதியாக அனுபவிக்க விடாமல் செய்யும் தொந்தரவுகள். அதனால் முதலில் ஒரு வழக்கறிஞரின் உதவியையோ அல்லது பொருளாதார விடயங்களை கவனிக்கும் நபர்களையோ சந்தித்து, பொருளாதார விடயங்களை முழுமையாக முடித்துக்கொள்ளவும்...

10. தோல்விகளை பற்றிய சிந்தனைகளை அறவே விட்டொழியுங்கள்...உங்கள் புதிய வாழ்க்கையை பாஸிட்டிவ் சிந்தனைகளோடு எதிர்கொள்ளுங்கள்...உங்கள் பழைய தோல்விகளை நினைத்துக்கூட பார்க்கவேண்டாம்...உங்கள் புதிய வாழ்க்கைத்துணையை, அவரது விருப்பு வெறுப்புகளை அறிந்துகொண்டு, "ஈகோ" என்ற விடயத்தை அறவே விட்டொழித்து, புதிய வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோஷமாக அனுபவியுங்கள்...

உங்கள் மறுமணத்துக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !!!!

மொதல்ல லக்கிலூக், அடுத்தது தமிழச்சி, எனக்கும் ஆசையாருக்கு...

லக்கிலூக் ஆன்லைன் என்று லக்கியார் புதுவீட்டுக்கு போனது சரி ஆனால் இன்று தமிழ்வெளியை நோக்கியபோது இன்னோரு உண்மை தெரிந்தது...

தோழர்.தமிழச்சி, புது வீட்டுக்கு சென்றுள்ளார். அதனை பதிவிட்டு தோழர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்...

அருமையான டெம்ப்ளேட்டில் இடது புறம் தமிழச்சியின் படங்கள் மாறி மாறி வருகிறதுபோல் செய்யப்பட்டுள்ளது...

நீங்களும் போய் பாருங்களேன்...!!!

நோ நோ பரிசல் அதிஷா Carகீ நோ, இங்க கும்மி வேண்டாம் குசும்பன், அபி அப்பா, நரசிம் சார். தமிழன் எங்கே, தீவார் எங்கே, பொட்டீக்கடையார் எங்கே, ராப் எங்கே, சின்னப்பையன் எங்கே ? எல்லோரும் இங்க கும்மாதீங்க, அடுத்து ஜீரீஜ் பதிவு போடப்போறேன்...

Monday, September 22, 2008

என்னுடைய தனிப்பட்ட வங்கி கணக்கு ஒரு கோடியை தாண்டியது

இன்று ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கணக்கை நோண்டிக்கொண்டிருந்தபோது சரி, இந்த கணக்கை துவங்கியதில் இருந்து எவ்வளவு ஆகி இருக்கிறது என்று பார்க்கலாம் என்று பார்த்தபோது வந்த வினை...

மொத்த ட்ரான்ஸாக்சன் ரூ ஒரு கோடியே நாற்பத்தைந்து ரூவாய் என்று தெரிகிறது...இதை ஏன் சொல்கிறேன் என்பது பின்னால்...

வேறு சில விஷயம் பார்க்கலாம் : ப்ராஜக்ட் மேனேஜரின் கதையின் இறுதி பாகம் இன்று ரெண்டொரு நாளில் வெளியாகும்...அடுத்த பாகம் எப்போ போடுவீங்க எப்போ போடுவீங்க என்று கேட்டுக்கொண்டேயிருந்த அனைத்து (???) ரசிகப்பெருமக்களுக்கு நன்றி நன்றி நன்றி !!! (அசத்த/கலக்க போவது யாருல இப்படித்தான் ஸ்டீரிடோ டைப்ல முடிக்கறானுங்க)

வடிவேலு உணர்ச்சி வசப்பட்டு விட்ட அறிக்கை நல்ல காமெடி, எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாண்டா, இவன் ரொம்ப நல்லவண்டா என்று நாளைக்கு கல்லு உடாமே இருந்தா சரி...

சின்னப்பையன் சமையல் குறிப்பு மொக்கை போட்டுட்டார், நல்லாருக்கு (நான் படிச்சது தலைப்ப மட்டும்தான்) , எனக்கு மிகவும் பிடித்த பொட்டொகிராபர் மிஸ்டர் மோகந்தாஸ் இன்னும் கொஞ்சம் படங்கள் போட்டிருக்கார்.

நரசிம் சார் ஏதோ கவிதை ட்ரை பண்ணியிருக்கார், பாருங்களேன்...!!

ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்கு மனம் விட்டு சிரிச்ச பதிவு அபி அப்பாவோட சந்துரு பதிவு. (குசும்பா, லிங்க் காணோம், கொஞ்சம் தேடி போடுறியா )

ஆங், மேட்டருக்கு வாரேன்...

மருதமலையில பரிசல்காரன் பொரி வாங்கி கொடுத்தார். பத்து ரூபாய்னு நெனைக்கிறேன்...அந்த காசை கையில வாங்கியிருந்திருக்கலாம்...ஹூம்....!!

இதை ஏன் இங்க சொல்றேங்கறீங்களா ?

அக்கவுண்டுல இப்ப நானுத்து நாப்பத்தஞ்சு ரூவாத்தான் இருக்கு, காருக்கு பெட்ரோல் போடனும், ஏற்கனவே மஞ்ச லைட் எரியுது, யாராவது ஒரு ஐம்பத்தி அஞ்சு ரூவா என்னோட அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணீங்கன்னா ஐநூறா ட்ரா பண்ணீருவேன்...எனக்கு மிகவும் பிடித்த நடிகை இவர்...

யார் இவர் ? பின்னூட்டத்தில் சொல்லுங்க ?

Sunday, September 21, 2008

தனம் : ஓசியில் கூட போயிராதீங்கடே (A)ஏற்கனவே உயிர் படத்தில் புருசனின் தம்ம்ம்பியை லவ்வி ஏதோ புரச்சி ஏற்படுத்திவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கும் நடிகை சங்கீதா "தனம்" படத்தில் ஐட்டமாக நடித்து அதை விட பெரிய புரச்சி ஏற்படுத்தியிருக்கிறார்...

இவரை "புரச்சி தீ" என்றோ "தீப்பொறி திருமகள்" என்றோ பட்டம் கொடுத்து அழைத்தோமானால் இன்னும் சிறப்பாகவே இருக்கும்...நேத்து வந்த பயக எல்லாம் புரச்சி, தளபதி, இளைய, புதிய என்ற வார்த்தைகளை முன்னாலும் பின்னாலும் நடுவாலும் கோர்த்து ஒரு பட்டத்தை உருவாக்கிவிடும்போது சங்கீதாவுக்கு பட்டம் தருவது என்ன பெரிய விஷயம் ?

படத்தின் ஆரம்பத்தில் மனோபாலாவும் இன்னோரு நடிகரும் தனம் (சங்கீதா) பற்றி ஐதராபாத் ஏரியாவில் பொட்டிக்கடை, ஜூஸ் கடை, பூக்கடை என்று விசாரிக்கிறார்கள்...

யாரும் தனம் பற்றி தகவல் சொல்ல முன்வரவில்லை...

தனம் பற்றி சொல்ல - பக்கோடா காதரோ போண்டா மணியோ, ஜூஸ் கடை வைத்துள்ளார், தன்னுடைய உடன் பிறவாத சகோதரி பற்றி, தனம் நடந்து வந்தா எப்படி இருக்கும் தெரியுமா...தனம் உக்காந்தா எப்படி இருக்கும் தெரியுமா ? என்று ஓவர் பில்டப் கொடுக்க...

கட் செய்தால் ஸ்லோமோஷனில் ஒயிலாக நடப்பதாக நினைத்துக்கொண்டு இடுப்பை வளைத்து, சேலையை பறக்கவிட்டு, ஆட்டி ஆட்டி நடந்துவருகிறார் தனம்...

மேட்டர் இது தான்.

தனம் ஒரு பஸ் ஸ்டாண்டு ஐட்டம். ரேட்டு ரூ 500. அங்கே உள்ள பிக்காரிகள், சைக்கிள் ரிக்சா லொட்டைப்பயல்களுக்கு சோறு வாங்கிபோட்டு, கிராக்கி பிடிக்கிறார். அதாவது இவருடைய பிம்ப்கள் இவர்கள்தான்...

காரில் பெரிய சேட்டு வந்தாலும் தனத்துக்கு பிடித்திருந்தால் தான் தனம் போவார். அப்படிப்பட்ட ஒஸ்தி - கவரிமான் பரம்பரை ஐய்ட்டம்.

இந்த லொடுக்கு பிகரை செட் செய்ய ஐநூறு ரூபாய் கொடுக்கும் அனைவரிடமும் போய் விடமாட்டார். சம்பள பணத்தை வாங்கி நேராக இஸ்கூல் பையன் போல வரும் நபரிடம் ஒதுங்கும் இவர், மூனு நாள் தாடியோடு தோளில் இடித்து செல்லும் நபரை கண்டுகொள்ளவில்லை...

இதில் இருந்தே தெரியவில்லையா, இவர் இந்த தொழிலில் ஏதோ கொளுகையை கடைபிடிக்கிறார்...

சைக்கிள் ரிக்சா கேரக்டர் ஒன்று பேசும் ஆரம்ப வசனம், படம் எதனை நோக்கி செல்லும் என்று சொல்கிறது..

ரிக்சா கேரக்டர் சொல்வது : அதாவது மும்பையில், கொல்கத்தாவில் செய்தால் அது அப்புரூவுடு பிஸினஸாம். அதே ஐதராபாத்தில் செய்தால் அது தப்பாம்...!!!

கட் செய்தால் அப்படியே கும்பகோணமோ, கும்மிடிப்பூண்டியோ !!!

பெரிய பெரிய பூணூல் எல்லாம் போட்டு அய்யர் பூஜை செய்கிறார். அத்திம்பேர் ஹைதராபாதுக்கு படிக்க செல்கிறார். அவரை அய்யர் வீட்டு பெண் அப்பாரு பெயரை சொல்லி மிரட்டி தூக்கத்தில் இருந்து எழுப்புகிறார்...

ஏதோ டி.வி நாடக நடிகர். திரைப்பட வாய்ப்பு வருகிறதே என்று இந்த படத்தை ஒப்புக்கொண்டு விட்டார் போலும். இவர் தான் ஹீரோ. ஐதாராபாத் படிப்புக்காக செல்லும் இவருக்கு சிகரெட், பீடி, குட்கா, தண்ணி, சாராயம், மாணிட்டர், ஓல்டு மங் என்று எந்த கெட்ட பழக்கமும் கிடையாது...

ஆனால் ஐட்டம் தனத்தை பார்த்தவுன் இவருக்கு லவ் பீலீங்ஸ் வந்துவிடுகிறது. ஏதோ பீல் பண்ணி கனவு பாடல் எல்லாம் பாடுகிறார்.சகிக்கலை..

டேடேடேய்ய்ய்ய்ய் என்னை கொலைகாரனாக்காதீங்கடா !!! ஐட்டத்தை எதுக்குடா லவ் பண்றீங்க ?

கும்பகோணத்தில் இருந்து ஹீரோவின் மாமா கருணாஸ், கருப்பாக இருப்பதால் இவர் ப்ராமணரா என்று அக்கா புருஷனுக்கே சந்தேகம், படு மோஷமான காமெடி அய்யரே...

கருணாஸ் ஜீரோவை பார்க்க ஐதராபாத் வருகிறார், அவரும் சங்கீதாவை பார்த்துவிட்டு ஜொள் விடுகிறார், மாமாக்கள் ஆயிரம் ரூபாய் கேட்கிறார்கள், ஆனால் இவரிடம் இருப்பதோ ஐநூறு ரூபாய் தான், அதனால் உலகப்புகழ் பெற்ற ஐட்டமான சங்கீதாவை...

அதுக்காக கோவில் வாசலில் பிச்சை எடுக்கிறார்...அங்கே பிச்சைக்காரர்கள் சங்கம் அது இது என்று அரதப்பழசான ஜோக் டெக்னிக்ஸ் !!!

குறிப்பிட்டு சொல்லவேண்டியவர் ஆர்ட் டைரக்டர்...இரண்டு தெருவையும் ஒரு ஒத்தை புளிய மரத்தையும், அங்கே ப்ளாஸ்டர் ஆப் பாரீஸில் போடப்பட்ட பூக்கடை, மதில் சுவர், ஒரு சைக்கிள் ரிக்சா, மற்றும் போண்டா மணியின் தள்ளுவண்டி. இதை மட்டும் வைத்து ஐதராபாத் என்கிறார். அற்புதமான கலை இயக்குனர். நல்ல எதிர்காலம் இருக்கு தம்பீ உங்களுக்கு...(போண்டா மணியின் தள்ளுவண்டி இன்னும் கைவசம் இருக்கிறது தானே ?)

**********************************

கட் செய்தால தமிழ் பேசும் நார்த் இண்டியன் வில்லன் தமிழ் படங்களில் எப்போதும் இரண்டாவது ஹீரோயின் ஆக நடிக்கும் நடிகையை தாவணியை பிடித்து இழுக்கிறார். ஹூவுக்கு எல்லாம் பாலீஷ் போடும் அவளுடைய குருட்டு தம்பி நெற்றியில் ரத்த காயத்துடன் அதை தடுக்கிறான்..சுழல் விளக்கு பொருத்தப்பட்ட காரில் வரும் ஐ.ஜியோ, டி.ஜி.பியோ (ஆனால் ராதாரவி) அதை கண்டும் காணாமல் போகிறார்.

"அண்ணா, மொபைல் ஹோட்டல் பாத்திருக்கேன், மொபைல் கோர்ட் பாத்திருக்கேன், மொபைல் ரேப் பார்த்ததில்லீங்னா" என்று ஒரு அல்லக்கை சொல்ல, ஓப்பன் வேனில் வைத்து செக்கண்ட் ஹீரோயினை - ஹைதராபாத் நடு ரோட்டில் - ரேப்பு ரேப்பு என்று ரேப்புகிறார் வில்லன்..


*********************************

ஆங்...சொல்ல மறந்த கதை அடுத்த பத்தி..

தனம் படத்தின் சதை பற்றி லைட்டாக அறிந்த விஜயகாந்த் ரசிகையான என் மனைவி, டக்கென சேனலை சன் டிவிக்கு திருப்பி "நான் கஜேந்திரா பார்க்கனும்" என்று தனம் படத்தை மாற்றிவிட்டார். அதனால் கடைசி இரண்டு பத்தி - உலகத் தமிழர்களுக்கு பதிமூன்றாவது முறையாக சன் டீவியில் சண்டே மாலை ஒளிபரப்பப்பட்ட கேப்டன் விஜயகாந்தின் "கஜேந்திரா" படத்தில் இருந்து...

நான் கஜேந்திரா பார்க்க போவனும், நீங்க தனம் படத்துக்கு ஓசியில கூட போயிராதீங்கடே...(நான் நாலு சீன் திருட்டு டி.வி.டியில பார்த்தேன்) !!!!


விமர்சனம் படித்தவர்கள் - ஓட்டு கீழே குத்தவும் !!!

***************************************

Thursday, September 18, 2008

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் ஆறு

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் ஒன்று
ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் இரண்டு
ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் மூன்று
ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் நான்கு
ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் அய்ந்து

இரண்டு வருடங்கள் கழித்து ஒரு நாள் ஒரு தொலைபேசி அழைப்பு...லைனில் பழைய மேனேஜர்...என்னடா இந்தாள் விஷம் குடிச்சான் செத்து போனான் என்று கேள்விப்பட்டால் இன்றைக்கு தொலைபேசியில் அழைக்கிறானே என்று ஆச்சர்யம்...

யாரை இனிமேல் பார்க்கவே கூடாது என்று நினைத்தேனோ அவரிடம் இருந்தே போன், ஒரு எம்.என்.ஸி பெயரை சொல்லி அதில் உயர்ந்த பதவியில் இருப்பதாகவும், தனியாக வாழ்வதாகவும் சொன்னார்...என்னிடம் பேசும்போது புல் மப்பு, என்னுடைய டீட்டெயில்ஸ் வேறு ஒரு பழைய எம்ப்ளாயி மூலம் கிடைத்ததாகவும், இந்த ஊரில் அவருக்கு தெரிந்தது நான் மட்டும் தான் என்றும் சொன்னார்...

நானே வந்து பார்க்கிறேன் சார் என்றேன், ஹாலிவுட் ஹீரோக்கள் பேய் இருக்கிறது என்று தெரிந்தும் கதவை போய் திறந்து பார்ப்பது மாதிரி என்றும் சொல்லலாம், இவரால் வேறு யாராவது டேமேஜ் ஆகாமல் காக்கும் எண்ணமும் ஒரு பக்கம், அவருடைய குடும்பத்தினர் பற்றி தெரிந்துகொள்ளும் ஆவல் இன்னொரு பக்கம், உண்மையிலேயே இவர் என்னதான் பண்ணுகிறார் என்று தெரிந்துகொள்ளும் விருப்பம் இன்னொரு பக்கம் என்று கலவையான சிந்தனைகளோடே நானும் என்னுடைய நன்பனும் அவருடைய அப்பார்ட்மெண்டுக்கு போனோம்...

அங்கே போகும்போதே இரண்டு பெண்கள் ஹாலில் அமர்ந்திருந்தார்கள், அவர்களிடம் ஹிந்தியில் சண்டைபோட்டுக்கொண்டிருந்தார், கொஞ்சம் தயங்கினோம், நாங்க அப்புறமா வரோம் சார் என்றேன்..நோ நோ இரு அனுப்பிட்டு வரேன் என்று கத்தையாக பணம் கொடுத்து அனுப்பினார், காசுக்கு வரவளுங்க, என்னோடது சரியில்லைங்கறாளுங்க என்று பேசினார்...

இன்னும் திருந்தலையா நீ என்று மனதுக்குள் கேட்டுக்கொண்டே விசாரித்தேன், அவருக்கு இன்னோரு கல்யாண ஏற்பாடு நடந்திருக்கிறது, தூத்துக்குடி பக்கம் பெண் பார்த்து, இன்னும் டைவர்ஸ் கூட ஆகவில்லை, இருந்தாலும் இந்த விஷயம் சொல்லாமலேயே அவருடைய குடும்பத்தினர் லம்ப்பான வரதட்சணைக்காக இதனை ஏற்பாடு செய்திருந்தார்கள்...

மேலும் இவர் வாங்கும் ஒரு லட்ச ரூபாய் சம்பளத்தில் அவரது மச்சான் போட்ட பத்து லட்ச ரூபாய்க்கு நாற்பதாயிரம் மற்றும் அவரது அக்கா வாங்கிய ஐந்து லட்ச ரூபாய் கடனுக்கு இருபதாயிரம் மற்றும் அவரது அம்மா அப்பா செலவுக்கு பதினைந்தாயிரம், மற்றும் இவர் தினமும் குடிக்க ஆயிரம் என முழுதும் செலவாகிவிடுகிறது என்றும் சொன்னார்...

அது மட்டும் இல்லாமல் மேட்ரிமோனியலில் பணம் கட்டி ப்ரொபைல் போட்டு அதன் மூலம் பெண்களிடம் பேசி டேட்டிங் செய்வதாகவும், முப்பது வயசு பெண்களை தனியாக சந்திப்பதாகவும், செட் ஆவதாகவும், இப்பல்லாம் பெண்கள் மேட்ரிமோனியலிலேயே சிக்குவதாகவும் பெருமையாக சொன்னார்...

பொதுவாக கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடைபெற்றேன், குடி குடி என்று பெரும் தொந்தரவு செய்தார், வயிற்றில் அல்சர் என்று தப்பித்தேன்...

மெதுவாக அந்த பெண் யார் என்ன என்று விசாரித்தேன், தகவல் சொன்னார், இரவு வீட்டுக்கு வந்து அந்த பெண் வீட்டாரிடம் தகவல் சொன்னேன்...அவர்களும் திருமணத்தை நிறுத்தியதாக கேள்விப்பட்டேன்...

அட்லீஸ்ட் ஒரு பெண்ணின் வாழ்க்கையாவது காப்பாற்ற முடிந்ததே என்ற திருப்தியோடு அந்த நாளை நிறைவு செய்தேன்...

வெகு விரைவில் இவருடைய ஆட்டங்களுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி விழுந்துவிடும் என்று தெரிந்திருதால் அன்றே இன்னும் சந்தோஷம்பட்டிருப்பேன்...

நினைவுகள் தொடரும்....!!!!

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் ஐந்து

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் ஒன்று
ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் இரண்டு
ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் மூன்று
ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் நான்கு


அவர் மனைவிக்கும் அவருக்கும் இடையில் ஏதோ பிரச்சினை...புகைபிடிக்கும் நேரங்களில் எல்லாம் யாரிடமாவது சத்தமாக இதை பற்றி விவாதித்துக்கொண்டிருப்பார்...

பிறந்த பெண் குழந்தைக்கு பெயர் வைப்பதில் ஆரம்பித்த கருத்து வேறுபாடு, முழுக்க குடித்துவிட்டு வீட்டுக்கு செல்வது, வீட்டிலேயே வைத்து குடிப்பது, புகை பிடித்து குழந்தை முகத்தில் விடுவது என்று போனதாக சொல்லப்பட்டது...

அவரே இதை சொல்வார்...நானே டைவர்ஸுக்கு போனாத்தான் ஜீவனாம்ஸம் எல்லாம் கொடுக்கனும், அவளையே போகவெச்சிடேன்னு வெய்யு, ஒன்னும் கொடுக்கத்தேவையில்ல தெரியுமா...நாங்கள்ளாம் கோடம்பாக்கம்...எத்தனை பிரச்சினைகளை பார்த்தவங்க...

அவர் வீட்டில் பெரியவர்கள் முன்னிலையில் ஒரு முறை பஞ்சாயத்து நடந்தது, அந்த பஞ்சாயத்தில் பேசிக்கொண்டிருந்தபோதே கை நீட்டி முன்னாள் விமானப்படையின் அதிகாரியான மாமனாரை கை நீட்டி அடித்துவிட்டார், அவர்கள் தரப்பில் மகளின் வாழ்க்கை பாழாகிவிடக்கூடாதே என்பதற்காக அதையும் பொறுத்து, அவரிடம் கையேந்தினார்கள், ஆனாலும் அவர் விட்டுக்கொடுக்கவில்லை...

இந்த குழந்தை இவ்ளோ கருப்பா இருக்கு, பார்ப்பதற்கு அவளோட கம்பெனி ப்யூன் முருகன் மாதிரியே இருக்கு, அவன் இவளை ரெண்டு மூனு தரம் நைட்ல வீட்டுல ட்ராப் பண்ணியிருக்கிறான் என்று வார்த்தையால் சுட்டார்...

இதை எல்லாம் அந்த பெண்மணி ஒரு நீண்ட மின்னஞ்சலாக எழுதி எங்கள் நிறுவன தலைவருக்கும் அனுப்பினார், அதை ஏன் அனுப்பினாய் என்று அவர் மனைவியை அடித்துள்ளார், எங்கள் ஹெச்.ஆர் இந்த மின்னஞ்சல் விவரம் எல்லாம் என்னிடம் சொன்னார், நீயும் விஜயும் அவருடன் க்ளோஸா இருக்கீங்களே, நீங்கள் கொஞ்சம் ப்ரெண்ட்லியாக சொல்லக்கூடாதா என்றார்..

நீங்க வேற மேடம், நாங்க சொல்லியா அவர் கேட்க போறார், ஆபீஸ்லயே மப்புல இருக்க ஆரம்பிச்சுட்டார் என்றோம், அப்போ அவரை ஸூ பன்றதை தவிர வேற வழியில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார் ஹெச்.ஆர்..

இடையில் நாங்கள் வேறு வேலை தேடிக்கொண்டிருந்தோம், எனக்கு ஒரு நிறுவனத்திலும் விஜய்க்கு ஒரு நிறுவனத்திலும் கிடைத்தது, போய் ஜாய்ண் பண்ணிவிட்டோம்...

சில வாரங்கள் கழித்து நந்தனம் சிக்னல் அருகே உள்ள ஏ.டி.எம் அருகே பஸ் கிடைக்காமல் நின்றிருந்தேன், அவரின் கார் வந்தது, அதில் அவர், என்னை பார்த்து கூப்பிட்டார், என்ன சார் எப்படி இருக்கீங்க என்றேன்...

வா ஏறு வண்டியில என்று ஏற்றிக்கொண்டார், ரெண்டு வருடமாக தினமும் பார்த்த முகம், கொஞ்சம் வெளுத்துப்போனதாக தெரிந்தது...

என்ன சார் வெய்ப் பிரச்சினை இப்போ எப்படி இருக்கு, உங்களோட குழந்தைக்காகவாவது நீங்க சமாதானமா போகக்கூடாதா சார் என்றேன்...

சம்பாதிக்கறோம்ங்கற திமிரு அவளுக்கு...அவளை எல்லாம் கல்யாணம் பண்ணேன் பாரு...ஏதோ கொஞ்சம் பணம் வருதேன்னு எங்க வீட்ல முடிச்சுட்டாங்க...குமுதம் குங்குமம்ல எல்லாம் எவ்ளோ ஜோக் வருது ? வேலைக்காரியோட படுக்கிறது எல்லாம் ஒரு தப்பா ? என்றார்...

சார் நான் இறங்கறேன் சார் என்னோட ஸ்டாப் வந்திருச்சு என்றேன்...!!!

அடுத்த வாரம் பார்ம் சிக்ஸ்டீன் வாங்க ஆபீஸ் போயிருந்தேன், வாட்ச்மேன் ஒரு அதிர்ச்சியான தகவலை சொன்னார்...

உனக்கு தெரியுமா, நம்ம பழைய மேனேஜர் விஷம் குடிச்சுட்டார் !!!!

நினைவுகள் தொடரும்...

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை / நான்கு பாகங்கள்

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை !!!!

இது தான் கதையோட தலைப்பு...ஆனா பதிவின் தலைப்பாக இதை தர விரும்பவில்லை...ஏன் என்றால் இதில் எழுதப்போகும் சில விடயங்கள் வாசகர்களுக்கு அதிர்ச்சி ஏற்ப்படுத்தலாம்...கலாச்சார அதிர்ச்சியாகவும் இருக்கலாம்...

அப்படிப்பட்ட வாசகர்கள் நீங்கள் என்றால் - நீங்கள் கம்ளெயிண்ட் பண்ணும்படி இருக்கவேண்டாமே என்பதால் இதனை சொல்லிவிடுதல் நலம்...

இந்த ப்ராஜக்ட் மேனேஜர் கதை உங்கள் வாழ்க்கையையோ, நீங்கள் பார்த்த நபர்களையோ ரிசம்பிள் செய்தால் அதற்கு நான் பொறுப்பல்ல...!!!

ஆரம்ப டிஸ்கிக்காக மட்டும் இந்த பதிவு...

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (1)பாகம் ஒன்று

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் இரண்டு

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் மூன்று

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் நான்கு

இதுவரை படிக்காதவர்களுக்காக : இந்த மீள்பதிவு

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (4)

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (1)பாகம் ஒன்று

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் இரண்டு

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் மூன்று

யாஹூ குழுமத்தில் விஜய்க்கு பரிச்சயமான பெண் அவள். கேம்பஸ் இண்டர்வியூ எட்டிப்பார்க்காத ஏதோ ஒரு எஞ்சினீயரிங் கல்லூரியில் படித்துவந்தாள், மின்வாரிய ஊழியர் தந்தை...

மூன்று பெண்களில் மூத்தவள், குடும்பம் கொஞ்சம் கஷ்டமான நிலையில் இருந்தது, படிப்பை முடித்தவுடன் விஜயை ஏதாவது வேலைக்கு உதவுமாறு கேட்டிருந்தாள்...ரெஸ்யூமையும் எனக்கும் விஜய்க்கும் அனுப்பியிருந்தாள்...

எல்லாரையும் ஆக்ரமிக்கும் காதல் பிரச்சினை அவள் மனதையும் மையம் கொண்டு இருந்தது, அவள் காதலன் சொந்த அத்தை மகன், ஐ.டி.ஐ முடித்துவிட்டு அம்பத்தூரில் ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தான், அட்லீஸ் நாம் நல்ல வேலைக்கு போய், காதலுக்கு குடும்பம் பச்சைக்கொடி அசைக்கும்படி செய்யலாம் என்று அசைக்கமுடியாத நம்பிக்கை அவளுக்கு...இதெல்லாம் பின்னால் விஜய் சொல்லி தெரிந்துகொண்டேன்...

எங்க ரெண்டுபேருக்கும் ஒரே எக்ஸ்டென்ஷன் போன், அடிக்கடி அந்த அலுவலக எக்ஸ்டென்ஷன் போனுக்கும் அழைத்து, விஜயை எப்படி இருக்கேப்பா என்று கேட்பாள்...நானும் அவ்வப்போது ரெண்டொரு வார்த்தை பேசியதுண்டு...ரெஸ்யூமை மேனேஜருக்கு அனுப்பினால் எப்படியும் ஜாவா டீமில் ஒரு ட்ரெயினியாகவாவது சேர்த்து ஒரு மூவாயிரம் சம்பளம் கொடுத்தால் அப்படியே பர்மணட் ஆக்கிவிடுவார்கள் என்று கணக்கிட்டான் விஜய்....

அனுப்பிவிட்டு அதுபற்றி கேட்டு அதிகம் தொந்தரவு செய்யவில்லை அவன்....அதிகம் பேசாத டைப் அவன்...

ஒருவாரமாக மேனேஜர் தொலைபேசியில் இரண்டு மணிநேரம் மூன்று மணி நேரம் யாரிடமோ என்று பேச ஆரம்பித்தார், ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யப்போனாலும் அப்புறம் அப்புறம் என்று ரூமில் இருந்தே கையாட்டுவார்...

ஒரு சனிக்கிழமை மதிய வேளை, அடுத்த வாரத்துக்கான துணி எல்லாம் துவைத்துவிட்டு பக்கத்தில் இருந்த செட்டிநாட்டு ஹோட்டலில் நன்றாக கட்டிவிட்டு, தூக்கமோ தூக்கம்..வீட்டுக்கு வெளியே கார் ஹாரன் சத்தம், எங்கேயோ கேட்ட சத்தமாக இருக்கே என்று கண்ணை திறக்காமல் படுத்திருந்தபோது வீட்டு அலாரமும் அடித்தது, திறந்தால் இவர்....

பர்முடாஸ், டி ஷர்ட், க்ளாஸ் என்று ஏதோ பிக்னிக் போவதுபோல் கிளம்பியிருந்தார், மொபைலில் பேசிக்கொண்டே கிளம்பு கிளம்பு என்பதுபோது சைகை செய்தார், வேற வழி, பேண்டை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்பினேன்...

காரில் ஏறும்போது தான் கவனித்தேன், பின் சீட்டில் மிக இளவயது பெண், என்ன ஒரு இருபது வயதிருக்கலாம், கோழிக்குஞ்சு போல இடுங்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்...

எந்த விதமான உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் முன் சீட்டில் ஏறி அமர்ந்தேன், சர்ர்ர் என வண்டியை கிளப்பினார்..

எங்க சார் என்றேன், மகாபலிபுரம் என்றார்...

பொதுவாக வண்டியில் ப்ரேக்கை அதிகம் அப்ளை பண்ணமாட்டார், திடீர் திடீர் என்று ப்ரேக் போடுவார், உயிரே போய்விடுவது மாதிரி இருக்கும்..சார் ப்ரேக், வண்டி சார் வண்டி சார் என்றால், ஏன் அவன் கால்லயும் தான் ப்ரேக் இருக்கு, அவன் போடட்டுமே என்று அதிரடியாக சொல்வார், எதிர்த்து பேசமுடியாத அந்த சிச்சுவேஷனில் என்ன செய்வது என்று தேமே என்று அமர்ந்திருப்போம் நானும் விஜயும்...

சார், விஜய் கூட ப்ரீயாத்தான் சார் இருப்பான், அவனையும் கூப்பிடலாம் சார் என்றேன், ம்ஹும் அதெல்லாம் வேண்டாம் என்றார், அந்த நேரத்தில் அந்த பெண் பேசினாள்...விஜய் உங்களுக்கு தெரியுமா, நான் உங்களோட எக்ஸ்டென்ஷனுக்கு பேசியிருக்கேன் என்று அந்த பெண் சொன்னதும் தான், ரொம்ப நாளாக டெஸ்க்டாப்பில் இருக்கும் ரெஸ்யூம் இந்த பெண்ணோடது என்று புரிந்தது..

ஏதோ ஒரு ரிசாட்டில் கார் நின்றது, எனக்கு ஒரு மாதிரியாக புரிந்தது, ஆனால் எதையும் சொல்லமுடியவில்லை, இந்த பெண்ணே இப்படி இருப்பாள் என்று கனவிலும் நினைக்கவில்லை, சார் நான் ஏதாவது ப்ரவுஸிங் செண்டர் போய்ட்டு வரேன் சார் என்றேன், நானே சொல்லனும்னு நினைச்சேன், கார் எடுத்துட்டு போறியா என்றார்..சார் எனக்கு கார் ஓட்டத்தெரியாதுன்னு உங்களுக்கு தெரியுமே என்றேன், நான் பஸ்ல போய்க்கிறேன் சார் என்று மனதெல்லாம் பாரத்துடன் வெளியே வந்தேன்..

வெளியே பஸ்ஸை பிடித்து மஹாபலிபுரம் பஸ்ஸ்டாண்ட் போய் அங்கே ஐவேயில் உட்கார்ந்தேன், மெயில் செக் பண்ணக்கூட தோன்றவில்லை, ஏதோ வெப்சைட்டுகளை சுமார் ஒரு மணிநேரம் ப்ரவுஸ் செய்துகொண்டிருந்தபோது, சரி என்னவானாலும் பரவாயில்லை, அங்கே போய் பார்த்துவிடுவது என்று ஒரு ஆட்டோ பிடித்து அங்கே போனேன்...

ரிசார்ட் ஹோட்டலை அடைந்து அவர் பெயரை சொன்னபோது அப்படி யாரும் ரூம் எடுக்கலை என்றார்கள், அந்த வெள்ளை நிற காரில் வந்தவர் என்றபோது மூன்றாம் எண், சூட் என்றார்கள்...

கதவை தட்டினேன், உள்ளே சேரில் விசும்பலுடன் அந்த பெண், கையில் ஏதோ ஒரு டம்பளருடன் இவர் டி.வியில் சேனலை திருப்பிக்கொண்டிருந்தார், ஒரு போர்வை சுருட்டிக்கிடந்தது, அதில் மேலுக்கு எல்லாம் துளித்துளியாக ரத்தம்...

இவளை கொண்டு போய் பஸ் ஏத்திவிட்டிரு என்றார், காசு வேண்டுமா என்றார், இருக்கு சார் என்று, அந்த பெண்ணை, வாங்க என்றேன், மனதை ஏதோ ஒன்று பிசைந்தது...என்னவானாலும் இதை விஜயிடம் மட்டும் சொல்லக்கூடாது, அவன் உடைந்துவிடுவான் என்று நினைத்துக்கொண்டேன்...

அவளை பஸ் ஏற்றிவிடும்போது கலங்கிய கண்களோடு அவள் கேட்ட கேள்வி இன்னும் கூட சில ஆழமான தூக்கங்களில் வரும் கனவுகளில் இதயத்தை துளைக்கிறது...

"வேலை கிடைச்சுரும் இல்ல..."

நினைவுகள் தொடரும்...!!!!!!!!

Wednesday, September 17, 2008

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (3)

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (1)பாகம் ஒன்று

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் இரண்டு

2004 வாக்கில் எல்லாம் சென்னையில் நார்த் இண்டியன் பெனிட்ரேஷன் அவ்வளவாக இல்லை...இப்போது எல்லாம் தூவினாற்போல ஆங்காங்கே நார்த் இண்டியன் முகங்கள் தெரிகின்றன இல்லையா...எல்லாம் உபயம் ஐ.டி கம்பெனிகள் என்று நினைக்கிறேன்...

அப்போது எங்கள் அலுவலகத்தில் புனே பக்கம் படித்து வளந்த மமதி சேர்ந்திருந்தாள்...என்.ஐ.ஐ.டி முடித்த கையோடு இங்கே பணியாற்ற வந்தவளின் தாயார் ஏதோ வெளிநாட்டு தூதரகத்தில் பணியிலிருந்தார்...

ஐந்தரை அடி உயர நீலக்கண் அழகியான அவள் தாயார் புனேவை சேர்ந்தவர், தந்தையார் ஏதோ மத்திய தரைக்கடல் நாட்டவர். இயல்பான அழகி, இறுக்கமான உடையணிவாள், எங்கள் அலுவலகமே அவளை தேவதைபோல் பார்த்தது...

ஒரு வார்த்தை பேசமாட்டோமா என்று வாச்மேன் ப்யூன் உட்பட எல்லோரும் ஏங்கும் வேளையில் அவளை எங்கள் இருநபர் குழுவில் ட்ரெயினீயாக நியமித்தார் எங்கள் மேனெஜர்.

வாரம் ஒரு முறை ஏனோ தானோவென்று எங்கள் ப்ராஜக்டை பற்றி கேட்கும் அவர் - அதுவும் நாங்களாக போய் சொல்லவேண்டும், இரண்டு நாளைக்கொருமுறை எங்கள் இருப்பிடத்துக்கே வந்து க்ளையண்ட் என்ன சொல்கிறான், ஆன்சைட் கோ-ஆர்டினேட்டர் என்ன சொல்கிறார், எத்தனை டிபெக்ட்ஸ், மென்பொருள் நல்ல ஸ்டேபிளாக இருக்கிறதா என்றெல்லாம் விசாரிக்க ஆரம்பித்தார்...

இந்த வெள்ளந்தி மனதுக்கு ஒரு மண்ணும் விளங்கவில்லை, இருந்தாலும் ம.பி.ப.ந குழுவில் (மமதியை பிரப்போஸ் பண்ணவிருக்க்கும் நபர்) அடியேனும் இணைந்துகொண்டு, நாளொரு வண்ணமும் பொழுதொரு கடலையுமாக என் காதலையும் வளர்த்துவந்தேன்...என் டீம் மேட் விஜய் எப்போதும் அடுத்த அசைன்மண்ட், கேரியர் க்ரோத், பெங்களூரில் வேலை தேடுவது என்று மந்திரிச்சு விட்ட கோழிமாதிரி திரிந்துகொண்டிருந்தான்...

மமதியின் யாஹூ மெஸன்ஜர் ஐ.டி பெற்று, "had your lunch ya ? " என்பது போன்ற மொக்கை கேள்விகளுக்கு மத்தியில் நமக்கே மாட்டும் என்று மற்றவர்போல் சிந்தனை செய்து பொழப்பை ஓட்டிவந்த வேளையில் மமதியின் பர்சனல் விருப்பு வெறுப்புகள் கொஞ்சம்போல அறிந்துவந்தேன்...

இதுபோன்ற சின்ன கம்பெனியில் வேலை செய்ய மமதிக்கு சற்றும் பிடிக்கவில்லை...மமதி விரும்புவதெல்லாம் விப்ரோ, இன்போஸிஸ், கோவன்ஸிஸ் போன்ற கம்பெனிகளில் வேலை செய்யவேண்டும், அவரது தாயார் விருப்ப ஓய்வு பெற்று புனே செல்லும்போது, நிறுவனத்தில் ட்ரான்ஸ்பர் பெற்று செல்லுமாறு அமையவேண்டும் என்பதுதான்...

இதை அவள் வெளிப்படையாக பலமுறை சொல்லியிருக்கிறாள் இந்த ஆறு மாதத்தில்...ப்ராஜக்ட் மேனேஜரின் நன்பர்கள் பலர் இது போன்ற கம்பெனியில் மேனேஜர்களாகத்தான் இருப்பார்கள் என்பது அவளது அசைக்க முடியாத நம்பிக்கை...அதனால் அவரிடம் கேட்குமாறும் என்னிடம் அடிக்கடி சொல்வாள்...

ப்ராஜக்ட் மேனேஜரின் நன்பர்கள் பார் ஓனர்களாகவும், கவர்ச்சி நடிகையின் கணவர்களாகவும் இருப்பதை சொல்லமுடியுமா என்ன அவளிடம்...

ஒரு முறை ஆறு மணி வாக்கில் மேனேஜர் மமதியை அவர் ரூமுக்கு அழைத்தார், அவரது மனைவி பாரின் ட்ரிப் போனதாக மதியம் தான் சொல்லியிருந்தார்...அதனால் கொஞ்சம் திக் திக் உணர்வோடு நான் இதை கவனித்துக்கொண்டிருந்தேன்...

கொஞ்ச நேரம் வேலையில் பிஸியான பிறகு ஆறறை மணிவாக்கில் பால்கணியில் இருந்து பார்த்தபோது மமதியும் அவரும் அவருடைய வெண்ணிற ஆல்டோவில் ஆபீஸுக்கு வெளியே யூ டேர்ண் அடித்துத்துக்கொண்டிருந்தார்கள், வாட்ச்மேன் விஸில் அடித்துக்கொண்டிருந்தார்...

திரும்ப சீட்டுக்கு வந்தேன், வேலை செய்யப்பிடிக்கவில்லை, டி டிரைவில் ஸாங்ஸ் போல்டர் ஓப்பன் செய்து, ஒரே நாள் உனை நான், நிலாவில் பார்த்தது என்ற ஏதோ ஒரு பழைய பாடலை கேட்டபடி நேரத்தை ஓட்டினேன் கொஞ்சநேரம், அதன் பிறகு விஜயிடம், டேய் இன்னைக்கு நீ பஸ்ல போயிருடா, நான் சீக்கிரமா வீட்டுக்கு போறேன் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து தூங்கினேன்...

சில நாட்களில் தரமணியில் இருந்த ஒரு பெரிய நிறுவனத்தின் ஆபர் லெட்டர் பெற்று, எங்கள் எல்லோரிடமும் சந்தோஷமாக விடைபெற்று மமதி டேக் ஆப் ஆனாள்...ரிலீவிங் லெட்டர் மற்றும் பாண்ட் ப்ரேக் செய்வது உட்பட எல்லா விசயங்களையும் இவர் பார்த்து பக்காவாக முடித்து கொடுத்தார்...

பிறிதொருமுறை மேனெஜரின் ஆல்டோ காரின் டிக்கியில் மமதியின் பட்டர் பிளை ஹேர் க்ளிப் கிடந்தது, அதை நான் எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டேன்...

மூன்று நான்கு வருடங்கள் கழித்து நான் யாஹூ மெசன்ஜர் ஓப்பன் செய்தபோது மமதி ஆன்லைன்...சியாட்டில் நகரத்தில் இருக்கிறாளாம்...

ஒரே கேள்வி தான் கேட்டேன்...

I Know everything. why you did like that ?

அவளும் உடனே புரிந்துகொண்டாள்...

That time I got somethine he needs.
He got something I need...

என்றாள்...

சைன் அவுட் செய்து யாஹூ மெஸன்ஜரில் இருந்து வெளியேறினேன்...

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (1)பாகம் ஒன்று

வாழ்க்கை வழக்கம்போல்தான் போய்க்கொண்டிருந்தது...கோடிங் செய்தல்...டெலிவரி செய்தல்...க்ளையண்டுடன் சேட்டிங் செய்தல்...அவன் சொல்லும் டப்பா பிரச்சினைகளை மென்பொருள் சரிசெய்தல் இப்படி...

எங்க மேனேஜர் வழமையான ஆக்டிவிட்டீஸ் எல்லாம் செய்துகொண்டிருந்தார்...வாரம் ஒரு முறை எங்களோட குட்டி டீமையும் அழைத்து ஸ்டேட்டஸ் கேட்பார்..நானும் விஜயும் ஏதோ அப்டேட் செய்துவிட்டு வருவோம்...அப்டேட் செய்வது என்பதை விட, கொஞ்ச நேரம் எங்களோட மேனேஜரோட ஜாலியா பேசிட்டு வருவோம்...

ஐஸ் ப்ரேக்கிங் அப்படீன்னு சொல்லுவாங்க...அது எம்ளாயீஸுக்கும் மேனேஜருக்கும் இடையில் நடக்க ஒரு சான்ஸ் கிடைத்தது...ஜாவா டீமில் சிரீதர் என்று ஒரு பழம் இருந்தான்...அவனுக்கு பர்த் டே...அதை தன்னோட வீட்ல கொண்டாடலாம் என்று மேனேஜர் சொல்லியிருக்கிறார்...அது அப்படியே பரபரன்னு சாட், இமெயில், எக்ஸ்டென்ஷன் போன் என்று ஆபீஸ் முழுக்க பரவுது...

எப்படியாவது இந்த பார்ட்டியில நாமளும் கலந்துக்கனும் என்று நானும் விஜயும் கொலைவெறியோட இருந்தோம்...காரணம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அவரிடம் பேசி ஜாவா டீமுக்கு ஷிப்ட் ஆகுறது தான் எங்களோட டார்கெட்..எங்க டீம்ல இருந்தா இந்த வருஷம் பெருசா சம்பள உயர்வு எதுவும் கிடைக்காதுங்கற மைத் தான் காரணம்...

ஈவ்னிங் வெளிய தம்முக்கு போனபோது அவரோட ஆல்ட்டோ காரை திறந்துக்கிட்டிருந்தார்..சார்...எங்களை எல்லாம் பர்த்டே பார்ட்டிக்கு கூப்பிடமாட்டீங்களா என்று சற்று ஏக்கத்தோடு கேட்டேன்...அட என்ன இது...நீங்க இல்லாமலா...ஆல் ஆர் வெல்கம் என்றார்...வீக் எண்ட் கண்டிப்பா ஜெல் ஆகிக்கோங்க பீப்பிள்...அப்படீன்னார்...

எங்களையும் கூப்பிடுறார் என்று புரிந்தது...உள்ளூர பயங்கர சந்தோஷம்...!! வீக் எண்டும் வந்தது..

அவர் வீட்ல வொய்ப் பிரசவத்துக்கு போய்ட்டதால பார்ட்டி அங்கேதான் என்று அழைத்துப்போனார்...நானும் விஜயும் ஆறுமணி பார்ட்டிக்கு அஞ்சுமணிக்கே ஆபீஸ் வாசல்ல ஆஜர்...என்னோட ஸ்ப்லெண்டர்ல அவனோட மேன்ஷனுக்கு போய் அவசரப்படுத்தி கூட்டிவந்திருந்தேன்...

திநகர்லருந்து நேரா போற ரோட்ல கோடம்பாக்கம் மேம்பாலத்துக்கு லெப்ட் எடுக்கறதுக்கு முன்னால இன்னோரு லெப்ட் வரும், அங்கே இருபத்து நாலு மணி நேரத்துல இருபத்தி ரெண்டு மணி நேரம் திறந்திருக்கற ஒரு டீக்கடை இருக்கு, அதுக்கு பக்கதிலேயே அவரோட அப்பார்ட்மெண்ட்...

நாலு பெட்ரூம், நாங்க போனது ஈவ்னிங் தான், ஆனால் ஜாவா டீம் மக்கள் ஏற்கனவே அங்கே ஆஜர், எல்லோரும் மப்பு...நாங்க போனபோது சிரீதர் சோபாவுல காலை நீட்டி படுத்திருக்கான், சிவக்குமார் ஹால் நடுவுல உட்கார்ந்து மிச்சர் தின்னுக்கிட்டு இருக்கான்...பீரை ப்ரிஜ்ஜில இருந்து எடுத்து ஒப்பனிங் செரிமனியில இருக்கான் ஆந்திரா ராஜு...மீதிப்பேரு ஆங்காங்கே குடியும் குடுத்தனமுமா இருக்கானுங்க...

சார் எங்கேன்னு பார்த்தா ரூம்ல நாலு பசங்க சுத்தீலும் உட்கார்ந்திருக்க பெரிய க்ளாஸ்ல திரவத்தை ஊத்தி அடிச்சிக்கிட்டு இருக்கார்...வாங்கடா வாங்கடா, பாக்கெட் பி.ஸி டீம் ஸாரி நாங்க முன்னாலயே ஆரம்பிச்சிட்டோம் ஹி ஹி..

கோ கெட் எ பியர் கைஸ், நோ ஐ வில் கெட் யூ பியர் என்று எழுந்திருக்க முயன்றவர் கைலி அவிழ்ந்து விழுகிறது...

சார், முக்கா பீருக்கு மேல எனக்கு மப்பாகிரும் சார் என்றேன், அதை ஜோக் என நினைத்து விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள் அனைவரும்...

அப்படியே நாங்களும் குடியும் குடித்தனமுமாக ஐக்கியமாகிறோம், விஜய் ஒரு செவனப் பாட்டிலோடு டி.வி.டியில் செட்டில் ஆகிறார்...

பார்ட்டி முடிவடையும் தருவாயில் வா வீட்டை சுற்றி காட்டுகிறேன் என்று வாழ் குழழி - வாய் குழறி பேசி அழைத்து சென்று லிவ்விங் ரூமுக்கு அடுத்த ரூமில் இருந்த பெரிய க்வீன் சைஸ் பெட்டை காட்டினார்...

அப்போது தான் அந்த ஷாக் கொடுத்தார்....

இங்கே பார்...இந்த பெட்ல இருவத்தஞ்சு ஐட்டத்துக்கு மேல போட்டிருக்கேன், என் வைபை தவிர என்றார்...

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (1)

அது 2004 ஆம் ஆண்டு மத்தியில் ஏதோ ஒரு நாள் மாலை நேரம்....நான் வேலைபார்த்துக்கொண்டிருந்த நிறுவனம் அமெரிக்க நிறுவனங்களின் மென்பொருட்களை சென்னையில் இருந்து உருவாக்கிக்கொண்டிருந்தது...

ஒரு சிறிய ப்ராஜக்ட், அதற்கு இரண்டே பேர் கொண்ட ஒரு டீம். நானும் அதில் ஒரு அங்கம். என் வேலைகளையும் சேர்த்து என் நன்பன் விஜய் பார்த்துவிடுவான். நான் வெப் உலகம் அது இது என்று ஏதாவது நெட்டில் மேய்ந்துகொண்டிருப்பேன்...

எங்கள் நிறுவனத்தில் அமெரிக்க ப்ராஜக்டுகளை செய்ய உள்ள பத்து பதினைந்து டீம்களில் எங்களுடையது தான் மிகவும் சிறியது...எங்கள் ஆன்சைட் கோ.ஆர்டினேட்டர் எங்களை அவ்வளவாக கண்டுகொள்ளமாட்டார். நாங்கள் உருவாக்கிக்கொண்டிருந்தது பாம், பாக்கெட் பி.சி போன்றவற்றுக்கான அப்ளிகேஷன்கள்...

பழைய மேனெஜர் ரிசைன் செய்து இரண்டு மாதங்களாகியும் எந்த புதிய மேனேஜரும் அமர்த்தப்படவில்லை...நாங்களே க்ளையண்ட் உடன் பேசுதல், டெலிவரி என்று அனைத்தையும் பார்த்துக்கொள்வோம்...

எங்களுக்கு ஒரு புதிய மேனேஜர் வந்துள்ளதாக மின்னஞ்சல் வந்திருந்தது...அவரே ஒவ்வொரு ப்ராஜட் டீம் உடனும் சென்று அறிமுகம் செய்துகொண்டுவந்தார். எங்கள் சிறிய டீமையும் அவருக்கு அறிமுகப்படுத்தினார்கள்...

கொஞ்சம் குள்ளமாகவும், முகத்தில் ஆங்காங்கே பரு - புள்ளிகளுடனும், தலையில் சிறுநரைகளுடனும்...

ஒரு ப்ராஜட்க் மேனெஜருக்கு உரிய எல்லாம் அவருக்கிருந்தது...ஆங்கிலத்தில் அரைகுறைகளான எங்களுக்கு அவரிடன் படபட ஆங்கிலம் பெப்பே என்றது...

சிங்கப்பூரில் ஜாவா ப்ராஜட் மேனேஜராக இருந்தவர்...மனைவி இங்கே சென்னையில் ஏதோ இ-பப்ளிஷிங் கம்பெனியில் உயரதிகாரி. ஒரு குழந்தை...

இது இரண்டு நாளில் அவரைப்பற்றி நாங்கள் விசாரித்து தெரிந்துகொண்டது...ரொம்ப ஸ்ட்ரெயிட் பார்வெர்ட் மேனேஜர்களிடையே - உரிமையுடன் தோளில் கைபோட்டு பேசும் அவரின் அப்ரோச் அலுவலகத்தில் ரொம்ப பேருக்கு உடனெ பிடித்துப்போனது...

நான் வசித்தது திருவான்மியூரில் அப்போதைய அ.தி.மு.க அமைச்சரின் வீட்டு மேல் மாடியில். என் நன்பன் விஜய் வசித்தது திருவல்லிக்கேணியில்...

நாங்கள் இரவு இரண்டுமணிவரை இருந்து பணியாற்றினால் அவரும் எங்களோடவே அமர்ந்திருப்பார்...வேலை முடிந்ததும் விஜயை திருவல்லிக்கேணியிலும், என்னை திருவாண்மியூரிலும் ட்ராப் செய்துவிட்டு அவர் கோடம்பாக்கத்துக்கு - அங்கே வசித்துவந்தார், போவார்...

தகவல் தொழில்நுட்பத்துறையில் மேலாளர் என்றாலே கொஞ்சம் டிஸ்டன்ஸ் விட்டுத்தான் பழகுவார்கள், இவரிடம் நாங்களே கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணுவோம்...

ஆனால் இவரே வரும்காலத்தில் வாரியா நன்பா, நாம இருவரும் இணைந்து ஒரு விபச்சாரியை அழைப்போம் என்று கேட்பார் என்று நான் கனவிலும் நினைத்துப்பாராதது...

நினைவுகள் தொடரும்...!!!!!!!!!!!

18 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு மட்டும்...

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை !!!!

இது தான் கதையோட தலைப்பு...ஆனா பதிவின் தலைப்பாக இதை தர விரும்பவில்லை...ஏன் என்றால் இதில் எழுதப்போகும் சில விடயங்கள் வாசகர்களுக்கு அதிர்ச்சி ஏற்ப்படுத்தலாம்...கலாச்சார அதிர்ச்சியாகவும் இருக்கலாம்...

அப்படிப்பட்ட வாசகர்கள் நீங்கள் என்றால் - நீங்கள் கம்ளெயிண்ட் பண்ணும்படி இருக்கவேண்டாமே என்பதால் இதனை சொல்லிவிடுதல் நலம்...

இந்த ப்ராஜக்ட் மேனேஜர் கதை உங்கள் வாழ்க்கையையோ, நீங்கள் பார்த்த நபர்களையோ ரிசம்பிள் செய்தால் அதற்கு நான் பொறுப்பல்ல...!!!

ஆரம்ப டிஸ்கிக்காக மட்டும் இந்த பதிவு...

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (1)பாகம் ஒன்று

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் இரண்டு

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் மூன்று

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் நான்கு

இதுவரை படிக்காதவர்களுக்காக : இந்த மீள்பதிவு

Tuesday, September 16, 2008

கோவை பதிவர் சந்திப்பு படங்கள். பெயரிலி மன்னிக்கவும்.

சமீபத்தில் 2008ல் கோவை சென்றபோது...சும்மா சொல்லக்கூடாது...உடலை உறுத்தாதாத மெல்லிய வெய்யில்...மாலையில் மென்மையான க்ளைமேட்...பதிவர் மங்கை எப்போதும் சொல்வார்...எங்களோட கோவை மாதிரி வராது என்று...

என்னடா கோவைக்காரர்களோட ஊர்ப்பாசம் கொஞ்சம் ஓவராகவே இருக்கே என்று நினைப்பேன்...இப்போதுதான் தெரிகிறது கோவைவாசிகளால் ஏன் அவங்களோட ஊரை விட்டுக்கொடுக்க முடியவில்லை என்று...

அதிஷா செல்லாவின் அலுவலகத்தில் இருந்து சனிக்கிழமை அழைத்தார்...மருதமலையில் வலைப்பதிவர்களுக்கு காதுகுத்துவதாக...ச்சே..தங்கச்சி புள்ளைகளுக்கு காதுகுத்துவதாக...

செல்லா வழக்கம்போது மச்சினிச்சியை பார்க்க பழனி போய்விட்டதால் செல்லாவின் கார் கிடைக்காது...காலையில் பரிசலை அழைத்தபோது ராம் நகரில் இருந்து கிளம்புவதாக சொன்னார்...நான் வடவள்ளியில் இருப்பதாக சொல்லியபோது...அய்யோ பார்ட்னர் அங்கயே நில்லுங்க என்றார்...

ஒரு பெட்டிக்கடையில் உட்கார்ந்தேன்...ஏழு ரூபாய் பீடிக்கட்டுக்கு ஆறுரூபாய் கொடுத்து வேறு ப்ராண்ட் கேட்டுக்கொண்டிருந்தவரிடம்...ஏங்க...விலைவாசியெல்லாம் எப்படிங்க இருக்கு...என்றேன்...விலைவாசி எல்லாம் ரொம்ப குறைந்துவிட்டதாகவும், அரிசி கிலோ ரூ நூறுக்கு விற்றால்தான் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று தெரிவித்துவிட்டு அவர்பாட்டுக்கு பீடியை வாங்கிக்கொண்டு போய்விட்டார்...கோவை குசும்பு...

பரிசலோடு மொக்கைபோட்டுக்கொண்டே மருதமலை அடைந்து அங்கே ஒரு கடையில் பொரிகடலை செப்பரேட் பாக்கிங் வாங்கிக்கொண்டு அதிஷா வரும் படிநோக்கி இருவரும் அமர்ந்தோம்...மிள்காய் தூள் இட்ட ஒரு மாங்காய் வாங்கினேன்...சூரிய வெளிச்சத்தால் வெதும்பிய காய்...இரண்டு பீஸ்க்கு அப்புறம் வாங்கிய கடையிலேயே வைத்துவிட்டேன்...

அதிஷா குடும்பத்துடன் படியேறிவந்தார்...இட்லி,பொங்கல்,புளிசாதம், தயிர்சாதம் என்று பல ஐட்டங்களை தூக்கிவந்திருந்தார்கள்...பர்ஸ்ட் சாப்பாடு...என்று அழைத்துப்போய்...

இதற்கிடையில் ஈரவெங்காயம், வடகரையார் இருவரும் வந்து இணைந்தார்கள்...ரெண்டு வலைப்பதிவர்கள் சேர்ந்தாலே "சந்திப்பு சந்திப்பு" என்று பதிவு போடமுடியும்போது ஐந்துபேர் !!! ஹா !!! அப்புறம் என்ன..ஆனால் வழமையாக பதிவர் சந்திப்புகளில் பேசப்படும் எந்த விஷயங்களும் இல்லாமல், பொதுவாக பேசி கலைந்தோம்...எனக்கு தங்கமணி ஆணியை தயார்படுத்தியிருந்ததால் ஒரு மணிக்குள் போகவேண்டியாகவேண்டும் என்று சொல்லி ஈரவெங்காயம் காரில் ஏறி விரைந்து அட்டெண்டென்ஸ் போட்டேன்...

அடுத்த மேட்டர் : செல்லா, சஞ்ஜெய் மற்றும் நான் கேரளா சென்ற பயணம் பற்றியது...அது கண்டிப்பாக தனிப்பதிவாக எழுதவேண்டியது...பரிசல் பதிவில் இந்த பதிவுக்கான படங்கள் உள்ளது...என்னுடைய காமிராவை மருதமலை சந்திப்பின்போது எடுத்துசெல்லவில்லை...

ஞாயிறு மதியம் செல்லாவிண்ட காரில் ஞானும் செல்லாவும் பின்னே சஞ்ஜெயும் மலையாளக்கரையோரம் ஒதுங்கிய மேட்டரை விரிவாக எழுதுகிறேன், இப்'போதைக்கு கொஞ்சம் படங்கள்...!!!

என்னுடைய சோனி சைபர்ஷாட் பாய்ண்ட் அண்ட் ஹூட்டை வைத்து இப்படிக்கூட எடுக்கலாம் என்று காட்டிய செல்லா...செல்லாவின் அலுவலகத்தில் நானும் சஞ்செயும்நானும் சஞ்ஜெயும் ஏதோ ஒரு கரண்டு மரத்தின் அடியில்நான் இருப்பது கேரளாவில். அண்ணை ஓசை செல்லா இருப்பது தமிழகத்தில். இருவரது பாஸ்போர்ட்டும் இந்தியாவில் வாங்கியது.நானும் சஞ்ஜெயும் நிற்பது இதுக்கு கீழேதான்.போற வழியில ஒரு ஆக்சிடெண்ட். எப்படியெல்லாம்ம் யோசிச்சு மோதுறானுங்கடா..சஞ்ஜெய் மற்றும் ஓசையார் வாக்கிங் டுவேர்ட்ஸ் கேரளா. லாட்டரி சீட்டு வாங்கபோறாரா செல்லா ? இவ்ளோ சிரிப்பு...(இல்ல க்வாட்டர் ஒயினும், ராகி பக்கோடாவும் சாப்பிட்டதாலயா ?)

பி.கு : பெயரிலி ஓசையாரும் சஞ்ஜெயும் ஒன்றுதான் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு சஞ்ஜெயின் கோவை ஐப்பியை சப்ளைசெய்த நபர் யோசிக்கட்டும். பெங்களூர் என்றால் ரவி, கொரியா என்றால் ரவி, ஈரோடு என்றால் வால்பையன், திருப்பூர் என்றால் பரிசல், சென்னை என்றால் லக்கிலூக் என்ற மொக்கையான சிந்தனையிலிருந்து வெளியே வாருங்கடா மொதல்ல. குண்டு சட்டியில் குதிரை ஓட்டினது போதும். நீங்கள் நினைப்பதைவிட இந்த மீடியா நன்றாகவே ரீச்சாகிக்கொண்டிருக்கிறது...

Friday, September 12, 2008

கோவையில் வலைப்பதிவர் சந்திப்பு வைக்கலாமா ?

நான் ஒரு ரெண்டு நாள் கோவைப்பகுதியில் முகாம் அடிக்க இருக்கிறேன்...!!!

அப்படியே ஓசை செல்லா, வாத்தியார் சுப்பைய்யா போன்ற பிரபல பதிவர்களையும் அவர்களது கோவைவாழ் ஸ்டூடன்ஸையும் சந்தித்து மொக்கை போடலாம் என்று திட்டம்...

வாத்தியார் சுப்பைய்யாவுக்கு பெங்களூரில் இருந்து ஒரு ஸ்பெஷல் கிப்ட் கொடுத்து அவரை கூல் செய்யவும் திட்டம்..!!!

ஞாயிறு மாலை அண்ணா பார்க் பக்கமாக ஒரு சிறிய சந்திப்பு ஏற்பாடு செய்தால் நன்றாகவே இருக்கும்...

பொதுவாக ஓசை செல்லாவின் எண்ணுக்கு அழைத்தீர்கள் என்றால் நான் எங்கே இருக்கிறேன் என்று தெரிந்துபோகும்...

அங்கே நான் கிடைக்கவில்லை என்றால்

எனது சகோதரர் ரஞ்சித் 9345903889 அல்லது எனது ரோமிங் எண் 99025 84054 ஆகியவற்றில் இருப்பேன்...

எந்த பர்சனல அஜெண்டாவும் (எனக்கு) இல்லை என்பதால் லதானந்த் சார் எங்கே என்று தேடும் திட்டமும் உள்ளது, மற்ற மேட்டர் பிறகு பேசிக்கலாம்...

இப்போதைக்கு இதை படிக்கும் கோவை நன்பர்கள், கோவை வலைப்பதிவர் சந்திப்பு பற்றி திங்க் பண்ணி (ரூம் போட்டு யோசிச்சு) பதிவு போடுங்களேன்..

இராமராஜன் ஆடுகளை காணவில்லை (LIVE REPORT)

ஜெயா டீவியில் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் "கிராமத்து மின்னல்" என்ற படத்தில் ராமராஜன் ரேவதியின் ஆடுகளை மீட்க தண்ணீரில் இறங்குகிறார். அந்த சைக்கிள் கேப்பில் ராமராஜன் மேய்த்துக்கொண்டிருந்த ஆடுகளை காணவில்லை..

ஊர்க்காரர்கள் அவரை பிடித்து மரத்தில் கட்டுகிறார்கள்...(நாளைக்கு பஞ்சாயத்து கூடுன பிறகு நாட்டாமை வந்து தீர்ப்பு சொல்லுவாராம்)ஆனால் ஆக்சுவலி அந்த ஆடுகள் வந்து மே.மே என்று கத்துவதை ரேவதி கேட்டு, ராமராஜனை "அவுத்து உடச்சொல்லி" கேட்டுக்கொண்டிருக்கிறார்...

தலைகூட சீவாம கிராமத்து உடையில் நிற்கும் விகல்பமில்லாத ராமராஜன் படங்களை இன்றைக்கும் ரசிக்கமுடிகிறது...இந்த வீடியோவில் ராமராஜன் பாடல் ஒன்றை ரீமிக்ஸ் செய்துள்ளதை கண்டிப்பாக ரசிக்கலாம்...

இந்த வார செருப்பு / சாணி கரைசல் :

டேய் லைவ் ரிப்போர்ட் போடுறதுக்கு கொஞ்சமாவது காமன்ஸென்ஸ் வேனாம் ? அத்தனை பேர் சொல்லியும் பதிவை அப்படியே வெச்சிருக்கும் பாரிஸ் திவாவுக்கு இந்தவார சாணிக்கரைசல்.

அடுத்தது யாரை திட்டுறேன் என்று தெரியவேண்டும் என்றால் மேலே பீட்ப்ளிட்ஸ் சப்ஸ்க்ரைப் பட்டனில் உங்கள் ஈமெயில் ஐடி கொடுத்து பதிந்துகொள்ளுங்கள்....

Wednesday, September 10, 2008

SSLC ? தேசிய மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் கல்வியுடன் பணி...

உங்கள்ள எத்தனை பேருக்கு இப்படி ஒரு மத்திய அரசு நிறுவனம் இருக்குன்னு தெரியாது...பாரஸ்ட் ஆப்பீஸர் லதானந் சாருக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம்...

http://iwst.icfre.gov.in/

இந்த இணைய தளத்தை ஒருமுறை பார்வையிடுங்களேன்...

இங்கே என்ன மேட்டர் என்கிறீர்களா ?

1938 ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் இப்போது இத்தாலி நாட்டு வணிக நிறுவனங்களின் குழுமத்துடன் இணைந்து இப்போது பெங்களூர் மல்லேசுவரத்தில் பத்து ஹெக்டேர் அளவுள்ள பெரிய இடத்தி செயல்பட்டு வருகிறது...

முதலில் இந்த பொதுத்துறை நிறுவனம் என்ன வகையான ஆராய்ச்சிகளை செய்கிறது என்று பார்க்கலாம்..

எளிமையாக சொல்லப்போனால் சந்தன மரத்தில் இருந்து எண்ணையை பிழிந்து எடுக்கும் முறை, பல்வேறு மரவகைகளை ஏற்றுமத்திக்கு முன்பான ப்ராஸஸிங் ( ஒரு ரோஸ் உட் மரத்தை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யனும்னா இந்த நிறுவனத்தில் இருந்து சான்றிதழ் பெறனும்)

மேலும் பல்வகை சோப்புகள், அழகுசாதன பொருட்களில் பயன்படும் சிண்ட்ரெல்லா ஆயில், லெமன் க்ராஸ் ஆயில் போன்றவற்றை எப்படி பிரித்து எடுத்து, பதப்படுத்துவது போன்ற பல விடயங்களை சொல்லித்தருகிறார்கள்...

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருப்பவர்கள் மற்றும் புதிதாக ஏதாவது தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்கள், அல்லது இந்தியாவில் செயல்படும் பல்வேறு ஏற்றுமதி நிறுவனங்களில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை இந்த நிறுவனம் காலங்காலமாக வழங்கி வருகிறது...

500 ரூபாய் படிப்பு செலவு மற்றும் 500 ரூபாய் தங்கும் வசதிக்கான செலவு...மொத்தம் ஐந்து வார படிப்பு. ஆகக்கூடி செலவு மொத்தமே 3000 ரூபாய்.

இந்த நிறுவனத்தில் கல்விக்கான தலைவர் டாக்டர் பங்கஜ் அகர்வாலிடம் பேசியபோது இந்த கல்வியை படித்தவர்களை கேம்பஸ் இண்டர்வியூ மூலம் நேரடியாக கம்பெனிகள் தேர்ந்தெடுத்துக்கொண்டு போய்விடுவதாகவும், ஆனால் படிப்பில் சேருவதற்கு மாணவர்களுக்கு தக்க விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்...

சிறப்பாக படிப்பை முடிப்பவர்கள் இத்தாலி நிறுவனங்கள் அள்ளிச்சென்றுவிடுவதாகவும் தெரிவித்தான்...

தமிழ்கூறும் நல்லுலகம் இதனால் பயன் அடையட்டுமேன்னு இதை எழுதுகிறேன்...

இந்த சுட்டியையும் படித்துவிடுங்கள் : http://iwst.icfre.gov.in/awwtc/awwtc.htm

பேட்ச் நம்பர் 44 அடுத்த மாதம் 20.10.2008 அன்று ஆரம்பிக்கிறது, படிப்பில் சேர விரும்புபவர்கள் இந்த ஆராய்ச்சி மையத்தை தொடர்புகொண்டு உங்கள் இடத்தை உறுதிசெய்துகொள்ளுங்கள்...

கல்வியின் முழுமையான விவரம்

20/10/2008 - 25/10/2008 : முதல்நிலை படிப்பு. செலுத்தவேண்டிய கட்டணம் ரூ 500. இருப்பிட வசதி தேவை என்றால் மேலதிக கட்டணம் ரூ500 ( ஒரு வாரம்)

27/10/2008 - 08/11/2008 : முதல்நிலை படிப்பு. செலுத்தவேண்டிய கட்டணம் ரூ 500. இருப்பிட வசதி தேவை என்றால் மேலதிக கட்டணம் ரூ500 ( இரண்டு வாரம்)

10/11/2008 - 28/11/2008 : முதல்நிலை படிப்பு. செலுத்தவேண்டிய கட்டணம் ரூ 500. இருப்பிட வசதி தேவை என்றால் மேலதிக கட்டணம் ரூ500 ( மூன்று வாரம்)

பெங்களூர் மல்லேசுவரத்தில் இந்திய அறிவியல் கழகத்துக்கு அடுத்ததாக இந்த நிறுவனம் அமைந்துள்ளது...

தொடர்புகொள்ளவேண்டிய முகவரிகள்:

The Director.
Institute of Wood Science and Technology
Advanced Woodworking Training Centre
18th Cross, Malleswaram
Bangalore - 560 003
Ph: 080-23346811
080-57649559 (Direct)
Email: awtc_ice@icfre.org


The Commissioner
Italian Trade Commission
115, Maker Chambers VI
11th floor, Nariman point
Mumbai - 400 021
Ph : 022-22821125
022-22815654
Email : mumbai.mumbai@ice.it

THE Officer-in-charge, IWST
Advanced Woodworking Training Center
C/o IWST, Malleswaram 18th cross
Bangalore - 560 003
Ph : 080-23346811
Email : awtc_ice@icfre.org

நிறுவன வரைபடம் : http://iwst.icfre.gov.in/images/bangalore.jpgஉங்கள் சகோதரரோ நன்பரோ இதுபோன்றதொரு ப்ரேக்கை எதிர்பார்த்திருந்தால் அவர்களை இந்த படிப்பில் சேர்த்துவிடவும்...

வாழ்த்துக்கள்...!!!

Thursday, September 04, 2008

ஷகீலாவும், நமீதாவும் பின்னே ஞானும்.லக்கியும்,வரவணையானும்ஷகீலாவும்நமீதாவும்பின்னே வரவணையான், லக்கிலூக் , ரவியும்.

இடம்: உண்மைத்தமிழனின் சொந்த ஊர்..
தேதி : தெரியல..
பதிவோட நோக்கம் : கும்மி

ஸ்டார்ட் த மீஜிக்

ஹைய்யா...உயிர்மை புக்கு இங்க வாங்கலாமே !!!

உயிர்மை புத்தகங்களை இணையத்தில் வாங்கும் வசதியை ஏற்படுத்தி இருக்கிறாங்க...

இங்க சொடுக்கி பார்வையிடலாம் : www.uyirmmai.com

நன்றி Humanபுத்திரன்.

வால்பையனை வைத்து அதிரடி போட்டி - பரிசு

வலையுலகில் காமெடியில கலக்கிய / கலக்கிக்கிட்டு இருக்கிற மக்கள்ல எனக்கு தெரிஞ்ச பட்டாசுகள் லக்கிலுக், இளவஞ்சி, கைப்புள்ள, வெட்டிப்பயல், கொங்கு ராசான்னு ஒரு செட்டு இருக்குது...

இன்னைக்கும் மனசு சரியில்லைன்னா இவங்க பழைய பதிவு ஏதாவது படிச்சா மனசு லேசாகிடும்...

ஆனா புதுசா வந்திருக்குற கும்மி கோஷ்டிகள் வால்பையன், பரிசல், அதிஷா, ஜிம்ஷா, சின்னப்பையன், ராப் என்று இவர்களின் அட்டூழியம் அளவுக்கு மீறுது...சில சமயம் படிச்சு சிரிச்சு அலுவலகத்துல அடுத்தவங்க பைத்தியம்னு நினைக்கிற மாதிரி...

அதிரடியா ஒரு சின்ன போட்டி வெச்சு இந்த கும்மி கோஷ்டிகளின் உண்மையான திறமைகளை பரிசீலிக்க...

இதோ ஒரு போட்டி...தாம் தூம் படத்தில் அங்கங்கே ரஷ்ய வார்த்தைகள் பேசப்படுகின்றன, ஒரு மன்னும் புரியல...ஆனால் நான் கேள்விப்பட்டவரை ரஷ்ய மொழி தெரிந்த ஒரே ஒருவர் வலையுலகில், அது வால்பையன்...

வால்பையனுக்கு தெரிந்த ரஷ்ய வார்த்தை ஒன்றை பின்னூட்டத்தில் சொல்பவர்களுக்கு பாலபாரதியின் அவன் அவள் அது புத்தகம் பரிசாக கொரியரில் அனுப்பிவைக்கப்படும்...

பின்னூட்ட மட்டுறுத்தல் இல்லாததால் கும்மி கோஷ்டிகள் காத்திருக்கத்தேவையில்லை, அடிச்சு பட்டையை கிளப்பவும்...