Posts

Showing posts from November, 2008

மும்பாய் தாக்குதல் இந்தியாவுக்கு சரியான பாடம்: மகிழ்ச்சியில் சிங்கள ஊடகம்

மும்பாய் தாக்குதல் இந்தியாவுக்கு சரியான பாடம்: மகிழ்ச்சியில் சிங்கள ஊடகம்
[சனிக்கிழமை, 29 நவம்பர் 2008, 05:32 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] புதினம் செய்தி


இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பாய் மீது கடந்த வியாழக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால், அத்தாக்குதல் குறித்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு தனது பாதுகாப்பு பத்தியில் தனது மகிழ்ச்சியை மறைமுகமாக வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விடுதலைப் புலிகள் இலங்கை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்தியாவின் தலையீட்டை கோரி வருகின்றனர். இது தொடர்பில் தமிழக முதல்வர் கருணாநிதி இந்தியப் பிரதமரை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.

ஆனால், இந்திய மத்திய அரசு இலங்கையில் தலையிடுவதனை விடுத்து முதலில் அங்கு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் 170-க்கும் அதிகமான ஆயுதக்குழுக்களுடன் போராடுவது தான் சிறந்தது.

தற்போது மும்பாயில் உள்ள தாஜ்மகால் மற்றும் ஒபரோய் ஆடம்பர விடுதிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவான பொதுமக்கள் கொல்லப்பட்டத…

இது என்ன !!!

Image
இது என்ன ? கிசுகிசு பாணியில் இருக்கா ? விவசாயியக்கேளுங்கப்பா !!!!!

புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால் என்ன ஆகும் ?

Image
தமிழரங்கம் இணைய தளத்தில் இந்த கேள்வியையும் அதற்கான பதில்களையும் பார்த்தேன்...

அங்கே ஒரு பின்னூட்டமும் போட்டுவிட்டு வந்தேன்...

தமிழ்மணம் கூட மொக்கை போட ஆரம்பித்துவிட்ட இந்த காலத்தில், என்னுடைய மொக்கை திறமையை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா ?

இந்தா பிடியுங்கள் பதில் !!!

புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால் வேறு ஒன்றும் ஆகாது...அவை கீழே விழுந்துவிடும் :)))

அதுதானே நியூட்டன் விதி ?

அப்புறம் எடுத்து மண்ணு கல்லு ஆகியற்றை எண்ணை போட்டு துடைக்கவேண்டியது தான்...

சாய்பாபா !!!!!!!!!

Image
<<< நாளை பாபா பிறந்தநாள், அதனால் இந்த மீள் பதிவு >>>

சாய் பாபா செய்துவரும் சேவைகளை பற்றியதான பதிவு இது....அவர் சத்திய நாராயண ராஜுவாக நவம்பர் 1926ல் பிறந்ததையோ, ஆந்திர புக்கபட்டினத்தில் எட்டாவது அகவையில் கல்விகற்றதையோ எழுத வரவில்லை...அதை சாய் டிவோட்டிகள் எழுதுவார்கள்...பிரதமர்கள், ஜனாதிபதிகள், வெளிநாட்டு பிரமுகர்கள் வந்து சந்திக்கிறார்கள், மாதம் 800 கோடி நிதி வந்து குவிகிறது, அதை எப்படி செலவழிக்கிறார், என்றெல்லாம் கேட்டால் இந்த பதிவு அதை முழுதும் விளக்க வரவில்லை...

இந்த பதிவு அவரது சேவைகள் பற்றி, குறிப்பாக அவரது மகத்தான மருத்துவ சேவைகள் பற்றியதானது....எளியவருக்கு சேவை, அனைத்து உயிர்களிடத்தான அன்பு என்பதை போதிக்கிறார்...அதில் எளியவருக்கு சேவை என்பதை செயலில் காட்டுமுகத்தான் நாடெங்கும் அவர் அமைத்து இருக்கும் பல மருத்துவமனைகளில் ஒன்றை பற்றியதான பதிவு இது..
பாபாவின் பத்தாயிரம் ஆசிரமங்கள் மற்றும் சேரிட்டபுள் ட்ரஸ்ட்கள் நூற்றி அறுபத்தி ஆறு நாடுகளில் அமைந்துள்ளது எவ்வளவு உண்மையோ, அவற்றில், பெங்களூர் ஒயிட் பீல்டில் அமைந்துள்ள மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை மிக ப்ரம்மாண்டமா…

ஹொக்கேனக்கல் : கலைஞர் அரசு தூங்கவேண்டாம்...!!!!

Image
ஹொக்கேனக்கல் அருவியில் நான் குளித்தது ஒரே முறை...குற்றாலம் கூட ஒரிரு முறை சென்றிருக்கிறேன்...

அருவி என்றால் ரொம்ப உயரத்திலிருந்து விழுவது தான் என்பது என்னுடைய மூளையில் பதிவான ஒன்று...

ஹொக்கேனக்கல் கொஞ்சம் சிறப்பானது...

சட்டென தோளுக்கு சற்று மேலே தட தடவென விழும் நீரில் உடலின் உள்ள அத்துனை வலிகளும் பறந்துபோகக்கூடும்...

மீன் வாங்கி கொடுத்து சமைக்க சொல்லிவிட்டு போயிருதீர்கள் என்றால் குளியல் முடிந்தவுடன் அற்புதமாக ஒரு வெட்டு வெட்டலாம்...

விஷயத்துக்கு வருகிறேன்...கருநாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை சமீபத்தில் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகளை சந்தித்துவிட்டு அளித்த பேட்டி மிக முக்கியமானது...

முதலில் குறைவான அளவு நீரே எடுக்கப்படும் என்று சொல்லியிருந்த தமிழக அரசு, இப்போது 2.5 டி.எம்.சி அளவு நீரை எடுக்கப்போவதாக சொல்கிறது...

இதை எதிர்த்து இரண்டு விஷயங்களை செய்யப்போவதாக அவர் கூறுகிறார்..

1. உச்சநீதிமன்றத்தில் ஹொக்கேனக்கல் திட்டத்தை கைவிடுமாறு தமிழக அரசுக்கு வலியுறுத்த வழக்கு..

2. ஜப்பானுக்கு கருநாடக அரசு சார்பான குழு ஒன்றினை அனுப்பி, அங்கே இந்த திட்டத்துக்கு நிதியளிக்கும் துறையினரை ச…

தமிழ் பதிவர் லோஷன் கைது !!!

Image
இலங்கையில் ஊடகத்துறையை சேர்ந்த திரு லோஷன் அவர்கள், வெற்றி எப்.எம் மேலாளராக / இயக்குனராக இருக்கிறார்...

அவர் சிரீலங்கா அரசாங்கத்தால் சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்...

வெற்றி எப்.எம்மின் மற்றொரு நிர்வாகியான சஞ்ஜெய்யும் கைது செய்யப்பட்டுள்ளார்...

பயங்கரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்தார் என்று அவரை கைது செய்யப்பட்டபோது அளிப்பட்ட குற்றச்சாட்டு சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

கைது செய்யப்பட்டவர் இப்போது எங்கே இருக்கிறார் என்ற தகவல் கூட அவருடைய குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்படவில்லை...

இது ஜனநாயகமா ? இது தான் ஊடகவியலாளர்களை நடத்தும் முறையா ?

பயங்கரவாதிகளோடு தொடர்புள்ளவர் எப்.எம் நடத்திக்கொண்டு, வீட்டில் வாழ்ந்துகொண்டு இருந்தார் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது...ஊடகவியலாளர் என்ற அடிப்படையில் அவருக்கு எந்த இயக்கத்தினரையும் தொடர்புகொள்ளவோ, சந்திக்கவோ கூட உரிமை உள்ளது....

அவர் எங்கே அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என்று கூட அறிவிக்காமல் இருக்கும் சிரீலங்கா அரசு தான் பயங்கரவாத செயலில் ஈடுபட்டுள்ளத்து...

ஊடகவியளார்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டிய அரசு, பத்திரிக்கை சுகந்திரத்தை காக்கவேண்டிய அர…

அழிவு கொள்ளை தீமை கழகம்...அ.கொ.தீ.க..

எங்கள் அழிவு கொள்ளை தீமை கழகத்தின் தலைவர், எங்கள் குழுவை பற்றி விளக்கி ஒரு பதிவிட்டுள்ளார்...இங்கே க்ளிக்

உடனே நீங்கள் அங்கே சென்று மேல் விவரம் தெரிந்துகொள்ளுங்கள்...

**** குறிப்பு : இந்த பதிவு காமிக்ஸ் ஆர்வலர்களுக்கு மட்டும் ****

இட்லிவடையில் புளித்தவடை..

இதனால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்...

இன்று இட்லிவடையில் வேகாத இட்லியும் புளித்த சட்டினியும், காய்ந்துபோன ஊத்த (ஓட்டை) வடையும் இருப்பதால், இன்னும் இரண்டு நாளைக்கு கடைபக்கம் வராமல் தெரித்து ஓடும்படி கேட்டுக்கொள்கிறோம்...

அப்படி தெரியாத்தனமா வந்து சாப்பிட்டு - புடிங்கி அடித்தது என்றால் அதற்க்கு கடைமுதலாளி எந்தவகையிலும் பொறுப்பாகமாட்டார்...

காரணம் இது ஒரு சோ(மாறி) கடையில் இருந்து இரவல் வாங்கிய ஊசிய மாவு ஆகும்..

ந(ரன்)றி..

*** இந்த பதிவே ஒரு புளித்த வடைதான்...எழுதப்பட்டது 2006 மத்தியில்... **** ஆனால் இன்னும் ஆதிக்க சக்திகளின் கைக்கூலித்தனம், ரிசர்வேஷன், கோட்டா போன்றவற்றினை நோக்கி வயித்தெரிச்சலை காட்டுவது போன்றவற்றை இத்துப்போன இட்லிவடை செய்துகொண்டுதான் இருக்கிறது பாருங்கள் ***

வேர்ட் டாக்குமெண்டை (.doc) பிடிஎப் (.pdf) கோப்பாக இலவசமாக மாற்றுதல் !!

Image
பொதுவாக நீங்கள் உபயோகப்படுத்தும் வேர்ட் டாக்குமெண்ட் (.doc) என்ற பைல் எக்ஸ்டென்ஸனுடன் இருக்கும்...

வேர்ட் டாக்குமெண்ட் ஒரு எழுதி (எடிட்டர்) தான்...

நீங்கள் அனுப்பிய வேர்ட் டாக்குமெண்ட்டை எளிதாக திறந்து அதில் மாற்றங்கள் செய்துவிடலாம்...

அதனால் தான் அடோப் நிறுவனம் பி.டி.எப் என்ற வகையாக பைல்களை உருவாக்கியது...

.pdf என்ற பைல் எக்ஸ்டென்ஷனுடன் இருக்கும் இந்த வகையான கோப்புகளை எளிதில் மாற்றம் செய்ய இயலாது...

இதனால் உங்கள் தகவல்களை பாதுகாப்பாக பரிமாற்றம் செய்யலாம்...நம்பிக்கையோடு இருக்கலாம்...

https://www.pdfonline.com/convert_pdf.asp என்ற தளத்தில் மிக எளிமையாக உங்களது எம்.எஸ் வேர்டு பைல்களை பிடிஎப் கோப்புகளாக மாற்றும் வசதியை தருகிறார்கள்...

உங்கள் தேவை இணையம் மட்டுமே...மேலும் அதிகபட்சமாக 2 எம்.பி அளவுள்ள கோப்புகளை மாற்றலாம்...படத்தின் மீது க்ளிக்கினால் பெரியதாக தெரியும்...

மொத்தம் இந்த இணைய தளத்தில் நாலே ஸ்டெப்பு...

1.மாற்றப்படவேண்டிய கோப்பு எங்கே இருக்கிறது் என்பதை பிரவுஸ் பட்டனை தொட்டு கணிப்பொறிக்கு காட்டவேண்டும்..

2.எந்த பெயரில் உங்கள் கோப்பு இருக்கவேண்டும் என்பதை சொல்லவேண்டும்

3.உங்கள் மின்னஞ்சல் மு…

தேசியம் பேசும் சஞ்ஜெய் : இந்த கேள்விக்கு பதில் சொல் !!!

Image
முதலில் இந்த கேள்வியை நல்லதந்தியாரினை நோக்கித்தான் வீசலாம் என்று இருந்தேன்..நல்ல தந்தியின் ஐடெண்டிட்டி பற்றி எனக்கு முழுமையாக தெரியாததால் வேறு யார் தேசியம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று யோசித்தபோது..

அட நம்ம மாம்ஸ் சஞ்ஜெய்..அக்மார்க் காங்கிரஸ்க்காரர்...அவர் தற்போது தேசிய ஜல்லிகள் அடித்துவருவதால் அவரை கேட்பது தான் சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தேன்...

காங்கிரஸ் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது என்னுடைய தந்தையார் தான்...பல தேர்தல்களில் என்னுடைய தாயாரை காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு சொல்லியவர், தானும் அவ்வண்ணமே வாக்களித்து வருபவர்...

அவர் சொன்னதால் மட்டும் அல்லாமல், என்னுடைய மனதுக்கு மூப்பனாருக்கு நியாயம் தேவை என்று எண்ணியதால், ரசினிகோந்து (நன்றி அதிஷா) வாய்ஸ் கொடுத்ததால் அல்லது மூப்பனாருக்கு அநீதி இழைக்கப்பட்டதாக அறிவூட்டப்பட்டதால் ஒரு முறை தமிழ் மாநில காங்கிரசுக்கு வாக்களித்துள்ளேன்...

சஞ்ஜெய்க்கு வைக்கப்படும் கேள்வி !!

முந்தா நேற்றைக்கு நாளிதழ்களை ஆக்ரமித்துள்ள ஒரு செய்தி, தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் அடித்து உதைக்கப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட…

சோ - சசி - ஜெ - சூ.சுவாமி -இந்து ராம் ரகசிய மீட்டிங்

Image
ஏலகிரி மலை டமுக்கு டிப்பா எஸ்டேட்டில் சூடான தேநீரை பருகியபடி பெரிய பெரிய சோபாக்களை ஆக்ரமித்திருக்கிறார்கள்...

ஜெ: இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அறிக்கை விட்டுக்கிட்டு இருக்கிறதுன்னு தெரியல...சசி, நாளைக்கு என்ன அறிக்கை ?

சசி : ஆமாக்கா...எப்ப ஆட்சியை கலைக்கறது எப்ப நாம கோட்டைக்கு போறதுன்னு தெரியலைக்கா...கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்துல நாளைக்கு மீசை முனியாண்டி தலைமையில மின் வெட்டை கண்டித்து மறியல்...

சோ : நான் என்ன சொல்ல வர்ரேன்னா...

இந்து ராம் : அதான் வந்துட்டேளே...சொல்லுங்கோ...

சு.சுவாமி : நான் மொதல்ல சொல்றேன்னா...

சோ : டேய் நாந்தான் சொல்வேன்...

இந்து ராம் : சரி அவாளே சொல்லட்டும் விடுங்கோன்னா..

சோ : சரி சொல்லுங்கோ சுவாமிஜி

சு.சுவாமி : இப்ப குடிச்சிண்டிருக்கேளே டீ, இது மாதிரி ஒரு டீ.பார்ட்டியை நடத்தித்தான் தான் ஒபாமாவையே ஆட்சியில ஒக்கார வெச்சேன் தெரியுமோ ?

ஜெ : சார் என்ன சொல்றீங்க ?

சு.சுவாமி : ஆமா...ஹார்வர்ட்ல என்கிட்ட டியூஷன் படிச்சவன் தான் இவன்..அதுல நான் பாவம் பார்த்து பாஸ் போடலைன்னா இவன் பாஸாகியிருக்கவே மாட்டான்...சி.ஐ.ஏவில இருந்து நன்றி சொல்லி எனக்கு அவா லெட்டர் போட்டா.

சோ : நீ உடான்…

டோண்டு ராகவன் : செந்தழலின் பார்வையில்....

Image
நான் வலைப்பதிவுலகிற்கு 2006 பிப்ரவரி வாக்கில் வந்தபோது வலையுலகை உருட்டி பிரட்டிக்கொண்டிருந்த பிரச்சினை இப்போது இல்லை...

டோண்டுவை பெங்களூர் வலைப்பதிவில் சந்தித்ததில் இருந்து அவரது பதிவுகளை / மொக்கைகளை தொடர்ந்து படித்துவருகிறேன்...

டோண்டு பதிவில் பின்னூட்டம் இட்டுவிட்டு அதன் பலனை நானும் லக்கிலூக்கும் நன்றாகவே அனுபவித்துள்ளோம்...

கோவி.கண்ணன், மகேந்திரன், குழலி, செல்லா, ஜயராமன் உட்பட பலருக்கும் ஏதோ ஒரு வகையில் "மனக்கஷ்டம்" அல்லது "சைக்கோத்தனம்" அல்லது "அடுத்தவர் மீது காழ்ப்புணர்ச்சி" அல்லது "அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காண்பது" அல்லது "நல்லவர் போல் நடித்து இன்பம் காண்பது" என்று பல உணர்ச்சிகளை கொடுத்த பிரச்சினை எல்லாம் இப்போது இல்லை...

வைஸ் வர்ஸாவாக இல்லாமல் போய்விட்டது, யாருக்கு என்ன உணர்ச்சி என்பதை நீங்களே பொருத்திக்கொள்ளுங்கள்...படம் : திரு டோண்டு ராகவன் அவர்கள்...!!! (டோண்டுவின் படம் கிடைக்கவில்லை, அதனால் ஜெயகாந்தன் படத்தை போட்டிருக்கிறேன் )

டோண்டு ஒரு மசோக்கிஸ்ட் என்றார் குழலி...(அப்போது தான் அப்படி ஒரு வார்த்தை இருப்பதே எனக்கு தெரியும்...…

அமெரிக்காவின் டவுசரை கிழித்த சுல்தான் அண்ணன்...

அன்புள்ள வலைப்பதிவு மகா ஜனங்களே !!! (இதுக்கொன்னும் கொறைச்சல் இல்ல...)

அமெரிக்காவின் டவுசரை கிழிக்கும் சுல்தான் அண்ணனின் பதிவை பற்றி முன்பே எழுதவேண்டும் என்று நினைத்து மறந்துவிட்டேன்...

ஒரு காலத்தில் அமெரிக்கா என்னுடைய கனவு தேசம்...!!! அழகான வெள்ளைப்பெண்கள், சரக்கு, லாஸ் வேகாஸ், பமீலா ஆண்டர்சன் என்று பல கனவுகளை ஆக்ரமித்த ஒரு விஷயம் அமெரிக்கா...

வாழ்க்கையில் ஒரு முறையாவது அங்கே காலடி எடுத்து வைத்துவிடவேண்டும்...விமான நிலையத்தில் இறங்கும்போது மண்டியிட்டு அந்த மண்ணை முத்தமிடவேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தவன் தான் நானும்...

ஆகாயத்தில் பறக்கும் விமானத்தை அண்ணாந்து பார்த்த்து, அதை பற்றிய பகல் கனவு கண்டு வண்டியில் இருந்து கீழே விழுந்தவன் தான் நானும்...

ஆனால் இப்போது கொஞ்சம் புரிதல் வந்திருக்கிறது...

மலேசியாவில் ஒரு முறை கக்கூஸீல் நோக்கியா மொபைலை தொலைத்துவிட்டு விமானம் புறப்படும் வேளை சண்டையிட்டு, விமானத்தில் இருந்து இறங்கி, அந்த கக்கூஸை கழுவி துடைத்துக்கொண்டிருந்த தமிழரிடம்

"இங்கே மொபைல் ஏதும் பார்த்தீங்களா"

"இல்லையே, நான் எல்லா டாய்லெட்டையும் கழுவிட்டேனே" என்ற மைக்ரோரியலிஸ (இ…

டுபாக்கூர்களை கண்டுபிடிப்பது எப்படி ?

எங்களது மொட்டை பாஸ் மாயவரத்தானால் கண்டறியப்பட்டு தமிழ் வலையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட (இந்த தகவல் எவ்வளவு உண்மை என்று தெரியாது) ரீட் நோட்டிபை பற்றி ஹூரீட்மீ பற்றி...

சாதாரணமாக வலையுலகில் உடான்ஸு பேர்வழிகள், அமிஞ்சிக்கரையிலோ, அயனாவரத்திலோ ( கடந்த பதிவிலும் அயனாவரம்) உட்கார்ந்துகொண்டு, அமெரிக்காவில் சான் ஜோஸில் இருக்கிறேன், இந்தா ப்ளைட்டை பிடித்துவிட்டேன், இப்போது பிஸா திங்கிறேன் என்பது போல டுபாக்கூர் அடிப்பார்கள்..

சிலர் மின்னஞ்சலை மட்டும் வெளியே காட்டி, ஊரான் வீட்டு குழந்தை போட்டோ எதையாவது ப்ரொபைலில் போட்டுக்கொண்டு, கருத்துக்களை அள்ளித்தெளிப்பார்கள்...அதில் நேர்மையாக வாழ்வது எப்படி என்று கூட முப்பத்தைந்து பதிவு போடுவார்கள்...

இப்படிப்பட்டவர்கள் உண்மையில் எங்கே இருந்து வலைபதிகிறார் என்று கண்டறிய சில தளங்கள் உண்டு...

www.readnotify.com
www.whoreadme.com

இந்த தளங்களில் சென்று உறுப்பினராகி, அதன் மூலம் நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் கக்கூஸ்காரனில் இருந்து காய்ந்தபுல்லு வரை எங்கே இருந்து உங்கள் மின்னஞ்சலை ஓப்பன் செய்கின்றார்கள் என்று கண்டறியலாம்...

ரீட் நோட்டிபையில் இருந்து உங்கள் மின்னஞ்சலிலேயே …

அதிபர் தேர்தல் அமெரிக்காவுக்குதானே ?

Image
டேய் அமெரிக்காவுக்கு தானே தேர்தல் ?

என்னம்மோ அயனாவரம் பஞ்சாயத்து பிரெசிடெண்டு தேர்தல் மாதிரி, அவர் வீட்டு நாய்க்குட்டி வரைக்கும் அலசி துவைச்சு காயப்போடுறீங்க ?

ஆதிக்க சக்திகளுக்கு அடிவருடுதலை ஏதோ கலை மாதிரி செய்யுறீங்களேடா ?

போங்கடா போய் புள்ளகுட்டிவள படிக்கவைங்க...!!!

டேய்...கைய கால முறிச்சுடுவேன்...

Image
தமிழக அரசு கைத்தறித்துறை சார்பாக எண்பதாயிரம் பாக்கேஜ்கள் (துணிகள்) இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்கின்றன...

1. ஒரு வேட்டி
2. ஒரு சேலை
3. ஒரு கைலி
4. ஒரு நைட்டி
5. இரண்டு துண்டுகள்
6. மற்ற துணி வகைகள் நியாபகம் இல்லை

ஒவ்வொரு பேக்கேஜிலும் மொத்தம் எட்டு வகையான துணி வகைகள் இருக்கும்...இது போன்ற எண்பதாயிரம் பாக்கேஜுகள் இன்னும் இரண்டு நாளில் தயாராகிவிடும் என்று கைத்தறி துறை அமைச்சர் தெரிவித்தார்...

இவை அனைத்தும் தமிழ்மக்களுக்கு சென்று சேர முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்...

ஆனா இப்பவே சொல்லிக்கிறேன்...அவங்களுடைய கையில அது கரெக்ட்டா கிடைக்கனும்...

வடக்கு இலங்கையில் குழந்தகள் கிபிர் விமானத்து குண்டு வீச்சினால் பதுங்கு குழியில் ஒளிவது போல இலங்கை அதிபர் ராஜபக்சேவும் ஒளிந்துகொள்வதாக தகவல் கிடைக்கிறது...இவர் ஒளிந்துகொள்ளும் நேரம் வேற யாராவது அந்த துணிகளை லவட்டிக்கப்போறானுங்க...

காய்ந்துகிடக்கும் சிங்கள காடையர்கள், பிள்ளையாள் கிள்ளையான் கருணா கிருணா தூக்கிக்கினு போயிடப்போறானுங்க ( கிழக்கிலங்கைக்கும் உதவிகள் தேவைதான், ஆனால் இப்போதைய நிலையில் வடக்கு பக்கம் இருக்கும் - உள் நாட்ட…