தேடுங்க !

Saturday, January 31, 2009

வன்னி முகாங்களில் துன்புறுத்தப்படும் தமிழ்ப் பெண்கள்: செம்மதி
வன்னி முகாங்களில் துன்புறுத்தப்படும் தமிழ்ப் பெண்கள்: செம்மதி

வவுனியா தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்களை இரவு வேளைகளில் அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறுகூடுகளுக்குள் விசாரணை என்று கூறி அழைத்துச் சென்று பலரை பாலியல் சேட்டைகளுக்கு உட்படுத்தியுள்ளனர். பலரை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளனர். இங்குள்ளவர்கள் வெளியில் சென்றுவரவோ வெளியில் உள்ளவர்கள் உட்செல்லவோ அனுமதி இல்லை. இவ்விடயம் சம்மந்தமாக இங்கு சென்று வரும் வைத்தியசாலைப் பணியாளர்களுக்கு ஒரு முறைப்பாடு கிடைத்துள்ளது. ஏனையவர்கள் வெளியில் செல்லப் பயப்படுகின்றார்கள். இதைத் தடுப்பதற்கு ஏதாவது சட்டநடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும்.

மேலும் படிக்க, http://keetru.com/literature/essays/semmathy.php

ஈழத்துச் சிக்கலும் தமிழக கட்சிகளின் குழப்படிகளும்: த.வெ.சு.அருள்

இந்த நடுநிலை என்ற சொல்லை அரசியல்வாதிகள்தான் எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள். நியாயம், அநியாயம் என்ற இரண்டுக்கு நடுவில் நடுநிலை என்பது என்ன? மதில் மேல் பூனையா? எந்தப் பக்கம் அனுகூலம் உளதோ அங்கு குதித்திட ஆயத்தமாகும் தந்திரமா? அப்படித்தான் தோன்றுகிறது நமது தமிழக நிதியமைச்சரின் கூற்று. அதாவது புலிகளை ஆதரிக்கவும் இல்லையாம் எதிர்க்கவும் இல்லையாம். இப்படி வார்த்தை ஜாலத்திலேயே நாட்களை கடத்த நினைக்கிறார்கள் போலும், தி.மு.க. அமைச்சர்கள். இப்படிப் பேசினால் இதுதான் சந்தர்ப்பம் என்று உடனே செயலலிதாவுக்கு ஆதரவு பெருக்க கிளம்பிவிடுகிறார்கள். அப்பப்பா, தமிழன்தான் என்ன செய்வான் இந்த அரசியல் ஆட்டங்களுக்கு நடுவில்.

மேலும் படிக்க, http://keetru.com/literature/essays/arul_2.php

சோதிப்பெரு வெளிச்சத்திற்கு ஒரு சின்னத்திரியின் அஞ்சலி: புதுவை இரத்தினத்துரை

இடையில் கடல்கடந்தும் வருகின்றது
உன் சிரிப்பின் ஓசை.
எமக்காக எரிந்தவனை எரிக்கவா போகின்றீர்?
கடலிலே அனுப்பி வையுங்கள்
அவன் பொன்மேனியை ஒருதரம் தழுவ,
ஈழத்தமிழரை சுமந்த இதயத்தை பார்க்க,
கண்மூடிக்கிடந்தாலும் அவன் காதோடு பேச.

மேலும் படிக்க, http://keetru.com/literature/poems/rathinathurai.php

பற்றி எரிகிறது ஈழம் - மகிழ்ச்சி கொள்ளும் 'இந்தி'யம்: க.அருணபாரதி

தற்பொழுது ஈழத்தில் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், 24 தமிழக மீனவர்களை கடத்திச் சென்றுள்ளது சி்ங்களக் கடற்படை. இதனைக் கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்து நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையிலும் கூட இந்திய கிரிக்கெட் அணியை இலங்கையுடன் விளையாட அனுப்பி வைக்கிறது 'இந்தி'ய அரசு. நமது நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்லும் சிங்கள நாட்டுடன் விளையாடச் செல்கிறோமே என்ற குற்றவுணர்வு இந்திய கிரிக்கெட் அணியில் யாருக்கும் ஏற்படவில்லை; ஏற்படாது. ஏனெனில் தமிழர்களை 'இந்தி'யர்களாக அவர்கள் பார்ப்பதே கிடையாது. நாம் தான் வெக்கமின்றி 'ஜனகணமண' பாடிக் கொண்டு 'இந்தி'ய அடிமைகளாகவே வாழ்ந்து தொலைக்கிறோம்.

மேலும் படிக்க, http://keetru.com/literature/essays/arunabharathi_5.php

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...: முத்துக்குமார்

தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:

"உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குங்கள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆள்பலம், பணபலம், அதிகார வெறியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம் என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்."

மேலும் படிக்க, http://www.keetru.com/literature/essays/muthukumar.php

Friday, January 30, 2009

நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள் !!!!!தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

வீர வணக்க வீடி்யோ காட்சி்கள்

http://video.yahoo.com/watch/4388363/11772742

Muthukumar @ Yahoo! Video

Thursday, January 29, 2009

தமிழீழ பிரச்சினை : என்ன நடக்கிறது என்று எனக்கு தெரிந்துவிட்டது..தமிழ் ஈழ பிரச்சினையில் என்ன நடக்கிறது, பிரபாகரனின் வியூகங்கள் என்ன, அரசியல் ரீதீயில் என்ன நடக்கும், புலிகள் ராணுவ வெற்றியடைவார்களா , கெரில்லா முறை போர் தீவிரமடையுமா ? ஐ.நாவின் பார்வை தமிழ் ஈழ பிரச்சினையில் மாறுமா, ஐரோப்பிய யூனியன் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குமா, அரசியல் தீர்வு கிடைக்குமா, போன்ற பல கேள்விகளின் விடை எனக்கு தெரிந்துவிட்டது...

அதை எல்லாம் எழுதி உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, மேலும் பல விஷயங்களை இப்பவே சொல்வது முறையும் ஆகாது...

பொறுத்திருங்கள்...ரொம்ப மண்டை வெடிச்சுப்போறமாதிரி இருந்ததுன்னா ஒரு ஓட்டு குத்திட்டு, சேட்ல வாங்க சொல்றேன்...

*******
*****
****
***

Sunday, January 25, 2009

'வீரத் தளபதி' ஜே.கே.ரித்தீஷ் புதிய அவதாரம்

ஜே.கே.ரித்தீஷின் புதிய அவதாரம்!'நாயகன்' படத்தின் மூலம் பரபரப்பையும், விறுவிறுப்பையும், இன்னபிறவற்றையும் கிளப்பிய 'வீரத் தளபதி' ஜே.கே.ரித்தீஷ் புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.

இப்போது அவர் பார்வை திரும்பியிருப்பது, சின்னத்திரைப் பக்கம்!

புதிய நெடுந்தொடர் ஒன்றை தயாரிக்கிறார், ரித்தீஷ். 'ஆண்டாள்' என்ற தலைப்பில் வெளியாகவுள்ள அந்த நெடுந்தொடரில் புரட்சி நாயகியாக வருகிறார், மீனா.விரைவில் ஆண்டாள்... கலைஞர் தொலைக்காட்சிகளில் திங்கள் முதல் வெள்ளிவரை ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நெடுந்தொடரை இயக்குபவர் ரஞ்சித்ஜி. இவர் அரசு, கம்பீரம் ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர்.

சின்னத்திரையிலும் முத்திரைப் பதிக்க முனைந்துள்ள ஜே.கே.ரித்தீஷ், தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ஆரிக் என்ற பெயரை வைத்துள்ளார்.

தனது தயாரிப்பு நிறுவனத்தை மிகப் பெரிய அளவில் உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார், ஜே.கே.ரித்தீஷ்!

விரைவில்... 'ஆண்டாள்' போஸ்டர்களை சென்னையில் உள்ள ஆட்டோக்களின் பின்புறத்தில் காணலாம்!

Thanks : Vikatan.com

KOSURU IMAGE:PLEASE DONT VOTE FOR THIS POST..

அனைவரும் பாராட்டவேண்டிய பறையர் சமூகம்

பறையர்களை நான் மிகவும் அட்மைர் செய்கிறேன்...தமிழகத்தில் முக்கால்வாசி பறையர்களின் வீடுகள் குடிசை வீடுகளே...வேப்பமர நிழலில் சாணி போட்டு மொழுகிய குடிசை வீட்டி தூங்கினால் எவ்வளவு இதமாக இருக்கும்...?

பறையர்களின் அடிப்படை தொழில் விவசாய கூலிகள். அதே சமயம் பெங்களூரில் இருந்து மும்பை வரை சுவீட் கடைகளில், ஓட்டல்களில் கடுமையாக உழைப்பவர்கள்....

ஆங்கிலேயர் காலத்தில் ரொட்டிக்காகவும், கோதுமை மாவுக்காகவும், அரிசிக்காகவும் கிறிஸ்தவ மதத்தை தழுவிய பறையர்களை தவிர மீதிப்பேர் இந்துக்களாகவே இருப்பது மிகவும் பெருமை..

வருணாசிரம தர்மப்படி அவர்கள் சூத்திரர் என்ற பிரிவினர் ஆவர். தமிழக முதல்வர் கலைஞர் கூட தன்னை ஒரு சூத்திரன் என்று சொல்லிக்கொண்டதுண்டு. இது பெருமை அல்லவா ?

பறையர் இனத்தில் இருந்து முதலில் அமைச்சராக இருந்தவர் கக்கன் ஆவார். காமராஜர் அமைச்சரவையில் சிறந்த அமைச்சர் என்று பெயர் பெற்றவர். கடைசி வரை சொந்த குடிசை மட்டுமே அவரது சொத்து...இது எவ்வளவு பெருமை ?

வேறு எந்த சாதிக்கும் இல்லாத வகையில் பறையர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை என்று தனி துறை, அதற்கு தனி அமைச்சர் என்ற நிலை தமிழ்நாட்டில். இது எவ்வளவு சிறப்பு ?

எந்த சாதிக்கும் இல்லாத வகையில், பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்றால் பணம், கல்லூரியில் படிக்க ஸ்காலர்ஷிப், இடைநிலை ஆசிரிய பயிற்சியில் தேர்வு பெற தனி சலுகை, திருக்கோயில்களில் இலவச திருமணம், கலப்பு மணம் செய்யும் ஆண் பறையராக இருந்தால் மானியத்தொகை என்று எத்தனை எத்தனை சலுகைகள் ?

இவ்வளவு ஏன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இந்த இனத்தை சேர்ந்தவரே...இதுவரை திருமணமே செய்துகொள்ளாமல் இன விடுதலைக்காக போராடும் அவரை பாராட்டுகிறேன்...

இரட்டைக்குவளை முறை வைத்து மற்ற சாதியால் தனி குவளையில் உணவு வழங்கப்பட்டு, தனி டம்ளரில் டீ கொடுக்கப்பட்டாலும் " ஆண்ட" என்று சொல்லி எந்த எதிர்ப்பும் காட்டாமல் வாங்கி குடிக்கும் காந்தீய சமூகம் பறையர் சமூகம்...

திருக்கோவில்களில் கருவறைகளில் அனுமதிக்க மாட்டோம் என்றால் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு, வெளியில் இருந்து கும்பிட்டு செல்லும் அற்புத சமூகம் இந்த சமூகம்...

கஞ்சி ஊற்றினால் அதை குடித்துவிட்டு, நாள் முழுவதும் சலிக்காமல், ஓயாமல் கூலி வேலை செய்யும் உடல் வலுக்கொண்ட ஆண்கள் கொண்ட அற்புத சமூகம்...

சுகந்திர போராட்டம் நடந்தபோது, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எமக்கொரு கவலையில்ல என்று படிப்பறிவை பற்றியோ, முன்னேற்றத்தை பற்றியோ சிந்திக்காமல், உயர்சாதியினர் வீட்டு அடிமைகளாக வாழ்ந்த அமைதி சமூகம் பறையர் சமூகம்...

எல்லா ஊரிலும் சேரி என்று தனியாக தள்ளிவைத்தபோதும் சரி, தொட்டால் தீட்டு என்று ஒதுக்கியபோதும் சரி, எந்தவிதமான எதிர்ப்பையும் காட்டாமல் அதை ஏற்றுக்கொண்ட மென்மை சமூகம் பறையர் சமூகம்...

மற்ற சாதியினருக்கு உட்பிரிவுகள் பல இருந்தாலும் பறையர் சமூகத்தில் அனைவரும் பறையர் என்று வழங்கியது. இதில் இருந்தே தெரியவில்லையா, அது ஒரு சமத்துவ சகோதரத்துவ சமூகம்...

அண்ணல் அம்பேத்கர் போன்ற மாபெரும் பர்சனாலிட்டிகளை கொண்டது இந்த சமூகம். அம்பேத்கர் வடநாட்டு பறையர், தமிழ்நாட்டு பறையரைவிட நல்ல பர்சனாலிட்டி...

திராவிட இயக்கங்களின் வரலாற்றில் பறையரின் பங்கு பெரும்பங்கு. பறையரிடம் ஓட்டு வாங்க ஆயிரம், ஐநூறு எல்லாம் செலவு செய்ய தேவையில்லை...பத்து ரூபாயும் சாராயமும் கொடுத்தாலே போதும். இதில் இருந்தே தெரியவில்லையா, இந்த பறையர் சமூகம் ஒரு சிறந்த சிக்கன சமூகம்...

அரசு இலவசமாக கொடுத்த சீருடைகளை அணிந்துகொண்டு, பள்ளி செல்லும் பிள்ளைகள் அரசு வழங்கும் மதிய உணவை அழகாக உண்டு, செருப்பு அணியாத கால்களில் வெய்யிலை பொருட்படுத்தாமல் வீடு திரும்புவது அழகு. இதில் இருந்தே தெரியவில்லையா ? இந்த சமூகத்தில் சகிப்பு தன்மை இயல்பிலேயே வந்துவிடுகிறது என்று ?
எல்லா சமூகத்தை பற்றியும் எழுதிவிட்டீர்களே, இனி பறையன், சக்கிளி, அருந்ததியர், ஒட்டன் என்று மற்ற சாதியை பற்றியும் பெருமையாக எழுதுங்களேன் சாதி வெறியர்களே ?

தெரு நாய்களே ? உங்கள் வருணாசிரம கொள்கை நெருப்புகள் அணைந்துவிடாம் காப்பாற்ற சாதிகளை பற்றி தொடர்ந்து எழுதி மக்களை மீண்டும் அதே அடிமைப்பாதையில் வைத்திருக்கலாம் என்ற எண்ணமா ?

ஒரு வெகுஜன சரோஜாதேவி பத்திரிக்கையில் இந்த கருமத்தை எழுதும் நாயை செருப்பால் அடியுங்கள்...சர்க்குலேஷனுக்காக மலத்தினை கூட தின்ன தயங்கமாட்டர்கள் இந்த சொறிநாய்கள்..

இன்னும் அடிமைப்பட்டு கிடப்பவனின் உணர்ச்சி எப்படி இருக்கும் என்பதை நீங்கள் உணரவில்லை !!!

உங்களை எல்லாம் அதே சேரி பாஷையில் பச்சை பச்சையாக திட்டவேண்டும் என்று எண்ணம் எழுகிறது, இருந்தாலும், என்னை மட்டுப்படுத்திக்கொள்கிறேன்...

அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி !!!!!!!!!
அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி !!!!!!!!!

Saturday, January 24, 2009

பனிவிழும் மலர்வனத்தில் நான் (In a Snowfall Garden)ஓசை செல்லாவிடம் கற்றுக்கொண்ட லீடிங் லைனோடு ஒரு படம்My Home. என்னோட வீடு...My Backyard. என்னோட தோட்டம்...Stone Deer in My Backyard. தோட்டத்திலொரு கல்மான்..Need some Ice !!! கொஞ்சம் ஐஸ் தேவை !!!
I need it Cool. இந்த வோட்கா கொஞ்சம் கூலாயிருந்தா ? ( பொண்டாட்டிக்கு தனிமடல் : பிரிஜ்ல இருந்ததுப்பா..சத்தியமா எனக்கு ஒன்னும் தெரியாது...)Waitless. வெயிட்டா ஒன்னும் இல்லை...

பதிவர் சந்திப்புக்கு போறீங்களா ? எச்சரிக்கை !!!!திருடர்களும் முகமூடிகளும் சைக்கோக்களும் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்...

சமீபத்தில் வலைப்பதிவர் சந்திப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை பார்த்தேன்..

தெரியாதவர்களை சந்திக்கும்போது உங்கள் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவதை தவிருங்கள்...

அனுபவப்பட்டவன் என்ற முறையில் சொல்கிறேன்...

பெண் பதிவர்களுக்கு முக்கியமாக...படம் எடுத்தால் தவிர்த்துவிடுங்கள்...!!!

அறிவுகெட்ட அல்ப்போன்ஸின் அனுமார் வேலை - EPISODE 1என்னுடைய நன்பன் அல்ப்போன்ஸு பார்வைக்கு டொங்கன் மாதிரி இருந்தாலும் அறிவாளி.

பள்ளிக்காலத்தில் நான் படித்த பள்ளியில் கணிப்பொறியின் உபயோகம் பற்றி ஒரு பாடம் இருந்தது.

அந்த பாடத்துக்கு செய்முறை வகுப்பும் உண்டு.

மைய கணினி (Server) ஒன்று உண்டு. ஓவ்வொரு மாணவருக்கும் அவரின் பெயரில் ஒரு கோப்புகள் சேமிக்கும் இடம் (File Folder) , அதனுள் ஒவ்வொரு வாரத்துக்கான செய்முறைகளை கோப்புகளாக சேமிக்கவேண்டும்.

கணிப்பொறி ஆசிறியரோடு அல்ப்போன்ஸுக்கு எப்போதும் ஏழாம் பொருத்தம்..

செய்முறை வகுப்பு நேரத்தில் ப்ரின்ஸ் (Prince Of Persia / DOS Game) என்ற விளையாட்டை விளையாடியதை பார்த்துவிட்டு அவனுடைய பின்புறத்தை பிரம்பை உகயோகப்படுத்தி பழுக்கவைத்துவிட்டது கூட காரணமாக இருக்கலாம்...

தமிழ் கம்ப்யூட்டர் என்ற கணினி தொடர்பான புத்தகம் ஒன்று அல்ப்போன்ஸு பத்து ரூபாய் கொடுத்து வாங்கியதில் இருந்து ஒரே ஏழரை.

அதில் வந்த ஒரு கட்டுரையில் கணிப்பொறியில் அழித்தல் வேலைகளை செய்யும் அதி புத்திசாலிகளான ஹேக்கர்களை பற்றி படித்துவிட்டு, தானும் ஒரு ஹேக்கராகனும் என்று சதா சர்வகாலமும் புலம்பித்தள்ளிக்கொண்டிருந்தான்...

கணிப்பொறி தேர்வு நெருங்கும் சமயம்...

ஒரு அதிர்ச்சியான செய்தியை முந்தின நாள் செய்முறை வகுப்புக்கு சென்ற D பிரிவு மாணவர்கள் சொன்னார்கள்...

சர்வரில் இருந்த எல்லா கோப்புகளும் அழிக்கப்பட்ட நிலையில் இருந்தது...

எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி...

யார் யாரையோ சந்தேகப்பட்டு மாணவர்கள் தங்களுக்குள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்...

தேர்வு தள்ளிப்போகுமா ? மீண்டும் எல்லாவற்றையும் உள்ளீடு செய்யவேண்டுமா என்று ஒரே பேச்சு..

எனக்கு அல்ப்போன்ஸு மீது துளியும் சந்தேகமில்லை...

இந்த மடப்பய மருமகன் அந்த அளவுக்கு இறங்கமாட்டான் என்பதல்ல, இவனுக்கு அந்த அளவுக்கு மண்டையில் மசாலா கிடையாது...

ஆனால் அதை செய்தது அல்ப்போன்ஸு தான் என்று ஆசிறியர் கண்டறிந்து, அவனை லெப்ட் ரைட் வாங்கிவிட்டார் என்ற தகவல் பேஸ்கட்பால் கோர்ட்டில் இருந்த வேளையில் வந்துசேர்ந்தது...

நூற்றைம்பது பேர் உபயோகப்படுத்தும் கணிணி செய்முறை பட்டறையில் எப்படி அல்ப்போன்ஸை மட்டும் சரியாக கண்டுபிடித்தார் என்பது எனக்கு புரியாத புதிராக இருந்தது...

அப்புறம் உண்மை தெரிந்து ரூம் போட்டு சிரித்தேன்...

உண்மை என்னவா ?

முண்ட கலப்பை...எல்லோர் கோப்புகளையும் அழித்துவிட்டு அல்போன்ஸு என்ற பெயருள்ள தன்னுடைய கோப்பை மட்டும் அழிக்காமல் விட்டிருந்தது..

*********
*******
*****
****
***
**
*

ஓட்டு போடுங்க ~~~ ஓட்டு போடுங்க ~~~ ( கவிதா மன்னிச்சுருங்க )
..

Thursday, January 22, 2009

இலங்கை -> LTTE -> இந்தியா -> DeadLockஇலங்கை பிரச்சினை பற்றி இந்திய தமிழர்கள் பேசுவது கூட குற்றமாகும் என்ற பிம்பத்தை சீமானும் திருமாவும் உடைத்தெறிந்த பிறகு இந்திய தேசியம் - சிங்கள இனவெறி - தமிழ் ஈழம் பற்றியதான என்னுடைய எண்ணங்களை பதிவு செய்யவே இந்த கட்டுரை...

இன்றைக்கு சந்தித்த ஈழ தமிழ் நன்பர் ஒருவரின் பார்வையும் அவர் கூறிய கருத்துக்களும் இந்த கட்டுரையை எழுத மேலும் ஊக்கம் தந்தது...

அவருடைய எண்ணங்களில், விடுதலைப்புலிகள் இலங்கையில் அரசியல் தீர்வை எட்ட அவர்களுக்கு கிடைத்த பல வாய்ப்புகளை நழுவவிட்டுவிட்டார்கள் என்பதேயாகும்...

புலிகளுக்கு கிடைத்த வாய்ப்புகள் என்ன ?

புலிகளுக்கும் அதன் தலைவர் வே பிரபாகரன் அவர்களுக்கும் இந்தியா முன்வைத்த தீர்வுத்திட்டம், மாநில சுயாட்சி போன்றதொரு அரசு.இன்றைக்கு காஷ்மீர் மாநிலத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை மேற்கோள் காட்டி முன்வைக்கப்பட்ட இந்த திட்டம் பிரபாகரன் அவர்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்டது...

அந்த கூட்டத்தில் ராஜீவ் காந்திக்கு எதிரே அமர்ந்திருந்த தேசத்தின் குரல் என்று அழைக்கப்பட்ட திரு.ஆண்டன் பாலசிங்கம் காலமாகிவிட்டார்...

ஆனால் எம்.ஜி.ஆரின் பிரதிநிதியாக அதில் கலந்துகொண்ட திரு.பண்ரூட்டி ராமச்சந்திரன் இன்னும் இருக்கிறார்...அவரிடம் கேட்டால் அவர் சொல்லக்கூடும்...அங்கே என்ன பேசினார்கள் என்று ? பத்திரிகையாளர்கள் யாராவது அவரிடம் கேட்டு வெளியிடுங்களேன்..கிட்டத்தட்ட ஜெயவர்த்தனேயை ஒரு மிரட்டு மிரட்டித்தான் ராஜீவ் அவர்கள் இந்த உடன்படிக்கைக்கு உடன்பட வைத்தார்...சிங்களருக்கோ - தமிழர்களுக்கு தனி நாடு அல்ல, தனி கூடு கூட உருவாவதை ஏற்றுக்கொள்ளாத மனோ நிலைதான் அன்றைக்கு இருந்தது...அதனால் தான், அப்படிப்பட்ட ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைத்த திரு.இராஜீவ் காந்தியை துப்பாக்கி கட்டையை திருப்பி அடித்த ராணுவ வீரன் ஹீரோ அளவுக்கு சிங்கள இனவாதிகளால் பார்க்கப்பட்டான்..இந்திய தேசியத்தின் திட்டம் என்ன ?

இந்திய தேசியம் ஏன் அவ்வாறான திட்டத்தை முன்மொழிந்தது ? அந்த திட்டத்தை எப்படி சிங்களர்கள் ஏற்றுக்கொண்டார்கள் ? கொஞ்சம் பார்ப்போம்...

மொழியால் இனத்தால் வேறுபட்டவர்களை இந்திய தேசியம் மற்றும் ஒருமைப்பாடு என்று கட்டி வைத்து ஆட்சி செய்வது போல நீங்களும் தமிழர்களை இறுதிவரை ஆளலாம் என்று ஜெயவர்த்தனே கன்வின்ஸ் செய்யப்பட்டிருக்கவேண்டும்...

தமிழ் ஈழம் என்ற சொல்லாடலை ஏன் இந்தியா ரசிக்கவில்லை ? தமிழருக்கு தனி நாடு உருவாகிவிடுவதை ஏன் இந்தியா அனுமதிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் மிக எளிது.

ருஷ்யா என்ற நாடு (அல்லது ரஷ்யா, நான் எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பித்த, 1985 ஆம் ஆண்டு வாக்கில் என்னுடைய தந்தையாரின் முயற்சியால் நான் ஒவ்வொரு மாதமும் வாசித்த யுனெஸ்கோ கூரியர் என்ற புத்தகத்தில் இப்படித்தான் எழுதுவார்கள்) உடைந்து சிதறிப்போனதை பார்த்தபிறகும் இந்தியா அப்படி ஒரு ஆபத்தான முயற்சியை ஆதரிக்குமா ?பழைய உடையாத யூ எஸ் எஸ் ஆர்இப்போதுள்ள ரஷ்யா

ஆக இந்தியா தனி ஈழக்கோரிக்கையை ஒரு காலத்திலும் ஆதரிக்கப்போவதில்லை...

கணிப்பொறி மொழியில் இதை DeadLock என்போம்...கோழியில் இருந்து முட்டை வந்ததா முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பது போன்ற விடை தெரியாத கேள்வி.

ராஜீவ் காந்தி ஏன் கொல்லப்பட்டார் ?

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தினை பார்த்தால், IPKF தமிழ் பெண்களை கற்பழித்தது போன்ற பல விடயங்கள் சொல்லப்பட்டாலும், தமிழர்களுக்கான தனி நாடு கொள்கையை எதிர்த்தவர்கள் எல்லாரும் புலிகளால் அழித்தொழிக்கப்பட்டார்கள்...

அதில் ராஜீவும் ஒருவர் என்பதே நிஜம். அமிர்தலிங்கத்தில் இருந்து பத்மநாபா வரை, சிங்களத்தின் குறைந்தபட்ச அரசியல் தீர்வை ஏற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தவர்களை புலிகள் வேரறுத்தார்கள்...

தமிழகத்தில் நடந்தது என்ன ?

தனித்தமிழ்நாடு என்ற கோரிக்கையை அறுபதுகளில் எழுப்பிய அண்ணா, தேர்தல் அரசியலுக்காகவும், மைய அரசில் இருந்து வந்த குடைச்சலாலும், அந்த கொள்கையை தூர எறிந்துவிட்டு ஆட்சியை பிடிக்கவில்லையா ?

அண்ணா கொள்கையை காம்ப்ரமைஸ் செய்துகொள்ளவில்லையா ?

அது போல பிரபாகரன் இராஜீவ் வழங்கிய தீர்வுத்திட்டத்தை ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும்..

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவம் நடந்த பிறகு இந்தியாவின் நிலையை உற்று கவனிக்க தவறிவிட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும்..

குறைந்த பட்சம் இரண்டாயிரத்தின் ஆரம்பத்தில் நார்வே அரசு மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன் வைக்கப்பட்ட திட்டத்தை புலிகள் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்...

கிடைத்தவரை லாபம் என்று தமிழீழத்தின் முதல்வராக அமர்ந்திருந்தால் எவ்வளவு அருமையாக இருந்திருக்கும் ?

அண்ணா காம்ப்ரமைஸ் செய்துகொண்டதைப்போல பிரபாகரனும் காம்ப்ரமைஸ் செய்துகொண்டிக்கவேண்டும்.

அதன்பிறகு தேர்தல் அரசியல் மூலம் சிங்கள மத்திய அரசை ஆட்டிவைத்திருக்கலாம். இன்றைக்கு இந்திய மத்திய அரசில் எத்தனை தமிழர்கள் ? தகவல் தொடர்பு, சுகாதாரம், சாலைப்போக்குவரத்து, நிதி என்று எங்கே எல்லாம் அமர்ந்துவிட்டார்கள் ?

அப்படி இருந்திருந்தால் இன்றைக்கு மக்கள் மீது குண்டுகளை பொழிந்து ஆற்றொணா துயரத்துக்கு ஆளாகும் அவல நிலையை தவிர்த்திருக்கலாம்...

சர்வதேச ஈழத்தமிழ் சமூகம் என்ன செய்கிறது ?

தினமும் தாயகத்தில் இருந்து வரும் செய்திகளை கவலையோடு பார்த்துக்கொண்டிருந்த சர்வதேசம் எல்லாம் பரந்து வாழும் ஈழ தமிழ் சமூகம், இப்போது பொருள் ஈட்டுவது, வீடு வாங்குவது, மகிழ்வுந்தில் வலம் வருவது போன்ற சுயநல போக்குகளிலும், கேளிக்கைகளிலும் நாட்டத்தை செலுத்துகிறது...

பொறுப்பாளர்கள் சொல்லும் ஒன்றுகூடல்களில் திரளக்கூட நேரமில்லை...அய்யோ...அலுவலகத்தில் அதிக வேலை...என்று சலித்துக்கொள்கிறது ஈழ தமிழ் சமூகம்...அங்கே சேட்டிங் தான் செய்யப்போகிறார்கள் என்பது வேறு விடயம்...

பத்தாண்டுகளுக்கு முன்னால் தாய்க்கு அனுப்பவேண்டிய பணத்தை புலிகளுக்கு அனுப்பியவர்கள் இன்றைக்கு டிஸ்கொத்தேவுக்கு செலவழிக்கவும், செண்டு பாட்டில் வாங்கவும், உயர்தர சோபா செட் வாங்கவும் செலவழிக்கிறார்கள்...

இதற்கு இரண்டு காரணமிருக்கலாம்...ஒன்று முல்லைத்தீவில் அவர்களது உறவினர் யாரும் இல்லாமலிருக்கலாம்...அல்லது வலித்து வலித்து மரத்துப்போயிருக்கலாம்...வலி என்பதே மறந்துபோயிருக்கலாம்...

இப்போது என்ன தீர்வு ?

இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் சிங்கள இனவெறியர்களை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவருவது மிக கடினம்.படிப்படியாக ஈட்டும் வெற்றிகள் - நூற்றுக்கு பத்து பேர் உயிரிழந்தால் கூட, சிங்கள இனவெறி ராணுவத்துக்கு பயத்தை விதைக்கவில்லை...

மாறாக சர்வதேசங்களும் வழங்கும் ஆயுதங்களுடன் இன்னும் கொலைவெறியோடு மூளைச்சலவை செய்யப்பட்ட பிசாசுகளாக, ஆயுதங்களோடு நிற்கும் விடுதலை புலிகளிடம் மட்டுமல்ல மக்கள், ஆடுகள், மாடுகள், பள்ளிகள், ஆலயங்கள் அனைத்திலும் தாக்குதல் நடத்துகிறார்கள்...

மாசேதுங்கின் ராணுவத்திடமும், வியட்நாமிய மக்களிடமும் சர்வதேசங்கள் நல்ல பாடங்களை பெற்றுவிட்டன...

அதனால் முதலில் குண்டுகளை வீசி அனைவரையும் அழித்துவிட்டு, அல்லது உள ரீதியான அவர்களின் மனோபலத்தை சிதைத்துவிட்டே, உள்ளே வருகிறார்கள்...

இப்போதைக்கு புலிகள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான்...

மொத்த பலத்தையும் திரட்டி மாபெரும் தாக்குதல் ஒன்றை நடத்தி ஆயிரக்கணக்கானவர்களை வீழ்த்தவேண்டும், அல்லது வீழவேண்டும்...

இதில் எது நடந்தாலும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசை தூசி தட்டப்படும்...

பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பித்தால் என்ன செய்யவேண்டும் ?

அதில் புலிகள் இருந்தால் இந்த முறை அரசியல் தீர்வுத்திட்டத்தை ஏற்றுக்கொண்டுவிடுங்கள்...பிடிவாதத்தை கைவிட்டுவிடுங்கள் பிரபாகரன் அவர்களே...

அதன்பிறகு மாநிலத்தை எப்படி முன்னேற்றுவது என்பதை சர்வதேசமெங்கும் வாழும் தமிழ் சமூகம் பார்த்துக்கொள்ளும்...

அந்த பேச்சுவார்த்தை மேசையில் ஆனந்த சங்கரியும் டக்ளஸ் தேவானந்தாவும், போனாப்போகுது என்று மனோ கனேசனும் இருந்தால், அப்போதும் ஒரு அரசியல் தீர்வு திணிக்கப்படும்...

அதை பெற்றுக்கொள்ளுங்கள் தோழர்களே...அதன் பிறகு இலங்கைதீவை சொர்க்கபுரியாக உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மாற்றுவார்கள்...

******
*****
****
***
**
*

தொங்கபாலு பாண்டிச்சேரியில் உண்ணாவிரதம் இருப்பாரா ?

தமிழகத்தில் கள் இறக்குவதை கண்டித்து உண்ணாவிதம் இஎஉந்த தொங்கபாலு ப்பாண்டிச்சேரியில் பல்வேறு வகை சரக்குகளையும், அரசாங்கமே சாராயக்கடை, கள்ளுக்கடை போன்றவற்றை நடத்துவதை காண்டித்து நெல்லித்தோப்பிலோ அல்லது லாப்போர்த் வீதியிலோ உண்ணாவிரதம் இருப்பாரா ?

தமிழக காங்கிரசில் இருக்கும் முப்பந்தைந்து கோஷ்டிகளில் எந்த எந்த கோஷ்டிகள் இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டன ?
இவர்களின் இரட்டை வேடத்தை மக்கள் பிரிந்துகொள்ளவேண்டும்..!!!

ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தால் மன்னித்துவிட்டு எவ்ளோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கிறதோ அதுக்கு தகுந்த மாதிரி ஓட்டை குறைத்துக்கொண்டு மீதி ஓட்டை போடவும்..

கொசுறு நியூஸ் :

பாண்டிச்சேரியில் ஒரு அரசு சாராயக்கடையின் பெயர் "சொர்க்கம்"..
அங்கே முட்டை பொரியல் மிக சிறப்பாக வறுக்கப்படும்..செல்வம் ஊறுகாய் மட்டை விலை ரூ 1 மட்டும். பாண்டிச்சேரி செல்பவர்கள் ட்ரை பண்ணவும்..ஐஸ் பியர் என்று பாண்டிச்சேரியிலேயே தயாராகும் பியர் கிடைக்கும், அது கிங்பிஷ்ர் போல லைட்டாக கசக்காமல் கொக்கோ கோலா போல இனிக்கும்..

கொசுறு கால்குலேட்டர் :

பா.ஜ+ தி.மு.க + பா.ம.க + வி.சி + ம.தி.மு.க = 40

காம்மன் மினிமம் புரோகிராம் நிபந்தனை ரெண்டு.

1. பிரமோஸ் ஏவுகணையை கொழும்பில் பரிசோதிக்கவேண்டும
2. இலங்கையில் அரசியல் தீர்வை எட்டும் உடன்படிக்கையில் அத்வானி கையெழுத்திடவேண்டும்..

கொசுறு எரிச்சல் :

காலையில் சாப்பிட்டுவிட்டு மதியம் லஞ்சு சாப்பிடாமல் இரவு சாப்பிடுவதற்கு பெயர் உண்ணாவிரதமா ? அப்படியென்றால் நான் முப்பத்தேழாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறேன்.

Sunday, January 18, 2009

இரா.நடராஜ் ஐபிஎஸ் அவர்களின் வலைப்பூ//ஏராளமான பாவனைகளை கொண்டது நம் சமூகம். பாவனைகள் வழியாகவே நாம் பலவற்றை அடைந்திருக்கிறோம் அல்லது அடைந்திருப்பதாக கற்பனை செய்துகொள்கிறோம். ஆனால் எதார்த்தங்களோ பாவனைகளுக்கு அப்பால் மிதந்துகொண்டிருக்கின்றன. "When a man reaches a certain age, there are many things he can feign; happiness is not one of them; என்கிறார் இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கிய படைப்பாளியான ஜார்ஜ் லூயிஸ் போர்ஹஸ். போர்ஹஸைப் போலவே நானும் மனநிறைவை கற்பனைகள் வழியாகவோ பாவனைகள் வாழியாகவோ அடையமுடியாது என்றே நம்புகிறேன். நம் இருப்பை அர்த்தப்படுத்திக்கொள்ள மனநிறைவு தேவை. மனநிறைவை அடைய செயல்கள் தேவை. செயல்களுக்கு மேன்மையான அர்த்தம் தேவை. மேன்மையான அர்த்தங்களுக்கு மேன்மையான லட்சியங்கள் தேவை. மேன்மையான லட்சியங்களை நான் என் தந்தையிடம் தான் கண்டடைந்தேன்.

ஒரு தகப்பனாகவும் ஒரு படைப்பாளியாகவும் என்னை மிகவும் பாதித்த மனிதர் அவர். அவருடைய படைப்புகள் முழுவதும் எளிய மனிதர்களே நிறைந்திருந்தார்கள். சாமானி்யர்களிடமும் ஓடுக்கப்பட்ட மனிதர்களிடமும் அவர் கொண்ட நேசம் நெகிழ்ச்சி தரதக்கது. கழுத்தை நெறிக்கும் பிரச்சனைகளோடு அலையும் அம்மனிதர்களுக்கு குறைந்த பட்ச ஆசுவாசம் சமூகவிடுதலையிலும் சமூகநீதியிலும் தான் அடங்கியுள்ளது என்பது அவருடைய தரிசனம். அவருடைய லட்சியத்தின் கற்பனையின் உன்னத வடிவம் தான் என் காவல்துறை பணி.

ஏற்றதாழ்வுகள் மலிந்த ஒரு சமூகத்தில் சமூக நீதிக்கான தேவை என்றும் இருந்துகொண்டே இருக்கிறது. ஒரு களப்பணியாளராக; ஒரு காவல்துறை அதிகாரியாக; ஒரு எளிய பிரஜையாக, சமூக நீதிக்கான போரட்டங்களில் ஜனநாயகத்திற்கு உட்பட்ட; சாத்தியப்பட்ட வழிகளியெல்லாம் தொடர்ந்து என்னை ஈடுபடுத்தி வந்திருக்கிறேன். கடந்த முப்பத்திநாலு வருட என் காவல்துறை பணியைக்கூட அவ்வாறே தான் நான் நம்புகிறேன் அல்லது அவ்வாறாக அர்த்தப்படுத்திக்கொள்கிறேன்.

எரியும் பிரச்சனைகளோடு ஒரு எளிய பிரஜை வெளியில் காத்துகொண்டிருக்கிறான் என்ற பிரக்ஞை எனக்கு என்றும் உண்டு. அவனை சென்று அடைவதற்கான மற்றொரு பாதை எனத்தான் இணையத்தையும் நம்புகிறேன். ஒரு சாமானிய மனிதனுக்கு நீதிகிடைக்க அல்லது உதவிபுரிய இத்தளம் பயன்படுமேயானால் நான் உவகை கொள்வேன்.
///

Saturday, January 17, 2009

http://www.tamilaruvifm.com/

http://www.tamilaruvifm.com/

Friday, January 16, 2009

டாக்டர் காப்பாத்துங்க...

ஒரு குளிர் நாட்டில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இந்தியாவில் இருந்து பணியாற்றுவதில் மூன்று அசவுகரியங்கள் இருக்கின்றன...

1.குளிர்..
2.அதிக குளிர்ர்ர்..
3.ரொம்ப ரொம்ப குளிர்ர்ர்ர்..

உர்ரென்று ஆகாதீர்கள்...
2003 ல் முதல் முறையாக கோவை சென்றபோது எடுத்த படம்...அப்போ எனக்கு மீசை என்று ஒன்று இருந்தது...

இது ஒருத்தனுக்கு உடம்பு சரியில்லாம போன கதை...

ரெண்டு நாளா ஒரே சளி இருமல்...சரி இன்னும் ரெண்டு நாள்ல சரியா போயிடும்னு நெனைச்சா...நோ...போய்த்தொலையவே இல்லை...இதுவே இந்தியாவா இருந்தா ரெண்டு மூனு நாள்ல சரியாகிடும்...அவலை நினைச்சு உரலை இடிச்ச கதையா...இங்கேயும் சரியா போயிரும்னு நினைச்சு உட்கார்ந்திருந்தது எவ்ளோ வேஸ்ட்..(பழமொழிக்கெல்லாம் விளக்கம் கேட்டுறாதீங்க)...

முக்கு சிந்தி சிந்தி ஸ்வெட்டரையே வாஷிங் மெஷின் ட்ரையர்ல போட்டு காயவைக்க வேண்டியதாயிருச்சு...

இங்கே எல்லாம் டாக்டரை அப்படியே நேரா போயி பாக்க முடியாதாமே ? அப்பாயிண்மெண்டு வாங்கிக்கிட்டு தான் போகோனுமாம்...

இதுக்கும் மேல பொறுக்க முடியாது..டாக்டருக்கு போனைப்போட வேண்டியது தான்...அப்பாயிண்மெண்ட் கேட்டுற வேண்டியது தான்..

டாக்டர் குட் மார்னிங்...

டெல்மீ சன்...என்ன பிரச்சினை ?

டாக்டர் ரன்னிங் நோஸ்...சளி....

வேற என்ன பிரச்சினை ?

ஒரே இருமல் இருமலா வருது டாக்டர்..

அடப்பாவமே...சரி வேற என்ன இருக்கு ? சுரம் ?

சுரம் எல்லாம் இல்லை டாக்டர்...

வேற எதுவும் இல்லையா ?

எங்காத்தா முப்பாத்தா சத்தியமா இல்லை டாக்டர்...சளி இருமல் மட்டும்தான்...

ஓ அப்படியா...

டாக்டர் ? எப்ப வந்து உங்களை பார்க்கலாம் ? அப்பாயிண்மென்ட் வேணும்....

தம்பி நான் ஒன்னு சொல்றேன் கேக்குறியா ?

சொல்லுங்க டாக்டர்...

இந்த சளி இருமல் எனக்கும் இருக்கு...

லொக் லொக் லொக்...

உனக்கு மட்டும் இல்ல...சுவீடன்ல நூத்துக்கு தொன்னூறு பேருக்கு இருக்கு...

நீ என்ன செய்யுற, வீட்டுலே உக்காந்து இருக்காம, ஸ்வெட்டர் எதாவது மாட்டிக்கிட்டு அப்படியே வெளிய போய் நல்ல காத்து வாங்கு...தன்னால சரியா போயிரும்...

லொக் லொக் லொக்...

வேற எதாவது பெரிசா...இதயம் அடைச்சுருச்சு, கல்லீரல் காணாமே போயிருச்சு, மண்ணீரல் மண்டைய போட்டிருச்சு, நுரையீரல் உறைஞ்சு போச்சு, இந்த மாதிரி இருந்தா மட்டும் போன் பண்ணு...

ஓக்கே ? லொக் லொக்...

புத்தாண்டு வாழ்த்துக்கள்...போனை வைத்துவிட்டார்...

உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...வெளியே மைனஸ் 2 டிகிரி...நான் வெளியே போறேன்...

ஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ் ( சிறுகதை)இந்த உருளை கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டை பிரிக்கிறது மட்டும் ஆவாது எனக்கு...இன்னைக்கு அப்படித்தான்...டர்ருன்னு கிழிச்சதுல அப்படியே எல்லாம் கீழ கொட்டிக்கிச்சு...

அள்ளி ஒரு பீங்கான் பாத்திரத்துல போட்டு வெச்சிருக்கேன்...புது பாக்கெட்...கொட்டவும் மனசில்ல, திங்கவும் முடியல...ஹும்...

*******************

இந்த ஹவுஸ் ஓனருங்க தொல்லை தாங்க முடியல சாமியோவ் என்று கூவலாம் போல் உள்ளது...அதுவும் இன்னும் ஒரு மாசத்துல காலி பண்றேங்க...அட்வான்ஸ் அமவுண்டை தந்திருங்க...என்று சொல்லிவிட்டால் போதும்...

நாம என்னம்மோ அவனுங்க கிட்ட ரெண்டு வட்டிக்கு கடன் கேட்ட மாதிரி ஒரு லுக்கு விடுவானுங்க...என்னுடைய ஹவுஸ் ஓனரும் அப்படித்தான் இப்போதெல்லாம் அப்படித்தான் லுக்குகிறார்...நான் அடுத்த மாசம் காலி பண்ணுறேன்..

நீங்க எல்லாம் கம்பூட்டர்ல வேலையே செய்யாம ஆயிரம் ஆயிரமா சம்பாதிக்கிறீங்க தம்பீ...(இவனை எல்லாம் மூனு மாசம் பெஞ்சுல உக்கார வெச்சு அண்டார்ட்டிக்காவுக்கு ஆன்சைட் அனுப்பினா தெரியும்) நான் படிச்ச காலத்துல கம்பியூட்டர் எல்லாம் இல்லை...(இருந்திருந்தா மட்டும் டீச்சருக்கு லவ் லெட்டர் கொடுத்து டீ.சி வாங்கி ஆட்டோ ஒட்டியிருக்க மாட்டாரு இவரு)

மொக்கையா ரெண்டு ரூமு, மட்டமா ஒரு கிச்சன், ஹால் என்ற பெயரில் ஒரு கற்கால மனிதன் குகை. இதுக்கு எட்டாயிரம் வாடகை, எண்பதாயிரம் அட்வான்ஸ்...

*******************

வீட்டு மோட்டர் ஓடலை...எங்க வீட்டுல தான் மோட்டர் இருக்கு...ஹவுஸ் ஓனர் வெவரமா சுவிட்சை மட்டும் அவங்க வீட்டுல வெச்சிருக்கார்...

நல்லா தூங்கிட்டு இருக்கும்போதுதான் இவனுங்களுக்கு தண்ணி தீரும்...பனியன் போட்ட சனியனுங்க...ங்கொய்யுன்னு மோட்டர் சத்தம் எழுப்புச்சு...

தடக் கரக் முரக்குன்னு ஏதோ சத்தம் மோட்டர்ல...மோட்டர் நின்னுருச்சு...காயில் போயிருச்சுன்னு நினைக்கிறேன்..

*******************

ஹவுஸ் ஓனர் மெக்கானிக்கோட வந்து பெல்லடிக்கிறார்...ஒருவேளை மோட்டரை கழட்டி எடுப்பாருன்னு நெனைக்கிறேன்..

பாவிப்பய...அட்வான்ஸ்ல ஏழாயிரம் புடிக்கப்போறானாம்...பெயிண்டு அடிக்கனுமாம்...இவனுங்க வீட்டை பெயிண்ட் அடிக்க நம்ம தலையில மொளகா அரைக்குறானுங்க...

போலியாக ஒட்டவைத்துக்கொண்ட சிரிப்புடன்...ஹி ஹி வாங்க சார்...

மூனாவது பாஸாகாத கட்டப்பஞ்சாயத்து டோமரை எல்லாம் சார் போட்டு கூப்பிடவேண்டியதா இருக்கு...

இந்தாங்க சிப்ஸ் சாப்பிடுங்க சார்...!!! பீங்கான் பாத்திரத்தை நீட்டினேன்...

**************

Thursday, January 15, 2009

முரட்டு வைத்தியம் (life story)

நாட்டு வைத்தியம் பிரபலமாக இருந்த காலத்தில் முரட்டு வைத்தியம் என்ற சொல்லாடல் இருந்தது...

அமுக்கு விடாதே என்று கஷாயத்தை திணித்து - உடல்வலி குணமாகிறதோ இல்லையோ, தொண்டைவலி, மூக்குவலி என்று இல்லாத திருகுவலியும் வந்துசேரும் - அதிஷ்டவசமாக குணமாகித்தொலைவதும் உண்டு..

என்னுடைய தந்தைவழி பாட்டி நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் ராஜபேதி கீரை என்ற கீரையை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை எங்களுக்கு பொரியல் செய்து தருவார்கள்..

கீரையின் பெயரே சொல்லிவிட்டதே, வேறு விளக்கம் எதற்கு ? பிச்சிக்கும்...

நான் எல்லாம் ராஜ பேதி கீரை சாப்பிட்டால் டவுசரை மொத்தமாக கழட்டிவிடுவது வழக்கம்...

சும்மா சொல்லக்கூடாது, பழங்கால வைத்திய முறைகளில் பல இன்றைக்கும் வேலை செய்கிறது...

நான் சொல்ல வந்த விஷயம் வெறும் "முரட்டு வைத்தியம்" என்ற சொல்லாடலை வைத்து எழுந்த எண்ணங்கள்...

வறட்டு இருமலுக்கு முரட்டு வைத்தியம் ஐஸ்க்ரீமை அள்ளி தின்பது என்று என்னுடைய கல்லூரி சீனியர் சொல்லி இன்றும் கடைபிடித்துவருகிறேன்...

நான் இருக்கும் இடத்தில் இருந்து அலுவலகம் மூன்று கிலோமீட்டர்..

பேருந்து வசதி இல்லாத நிலையில் நடந்து செல்வதை தவிர வேறு வழியில்லை...

பக்கத்து அறையில் பக்காவாக தங்கியிருக்கும் தைவான் நாட்டு மங்கையிடம் காலையில் அவர் செல்லும்போது என்னையும் அழைத்து செல்லுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன்...

காலை ஏழரை மணிக்கு சரியாக பொத்தானை அழுத்திவிட்டார்...

பத்து நிமிடம் முன்புதான் எழுந்து அமர்ந்து தை ஒன்றை பொங்கல் அன்று வரவழைத்தது போல் கிறிஸ்மஸ் அன்று ரம்ஜான் வருமாறு மாற்றிவிட்டால் நோன்பு கஞ்சி அருந்தியபடியே கேக்கும் சாப்பிடலாமே என்ற யோசனையில் இருந்தேன்...
அய்யய்யோ. இப்ப நாம கிளம்பி இல்லைன்னா தைவான் மங்கை தமிழனை சோம்பேறி என்று நினைக்கும் வாய்ப்பு உண்டே ? சமாளிப்போம்..

சரி, ஒரு நாள் குளிக்கலைன்னா என்னா குடியா முழுகிடப்போவுது ?

ஐந்தே நிமிடத்தில் கிளம்பினேன்... டிரஸ் ஐ மட்டும் மாட்டிக்கொண்டு..

ஆக்சுவலி ஐ வேக் அப் அட் ஸிக்ஸ் ஓ க்ளாக் யூ நோ ? டமில் பீப்பிள் ஆர் வெரி பாஸ்ட்...

தமிழன் என்று சொல்லடா !!!
தலை நிமிர்ந்து நில்லடா !!!
குளிக்காமல் அலுவலகம் செல்லடா !!!

குள்ளமாக இருப்பவர்களுடன் நடப்பது ரொம்ப கஷ்டம்...ரொம்ப வேகமாக நடக்கிறார்கள்... உடன் நடந்து பாருங்க தெரியும். ஹும்..

முரட்டு வைத்தியம் என்று தலைப்பு வைத்துவிட்டு அதைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் என்ன வளவளவென்று இழுக்கிறாய் என்கிறீர்களா ?

நடந்து செல்வது என்று தீர்மானித்து, காலையில் வந்து அழைத்துப்போகிறேன் என்ற நன்பர்களின் பேச்சையும் மீறி...

வாக்கிங் போன மாதிரி ஆச்சே...என்று இரண்டாவது நாளாக முரட்டு வைத்தியம் செய்திருக்கிறேன்...

இன்றைக்கு மூன்றாவது நாள்...வெற்றிகரமாக உணருகிறேன்...அற்புதம்...போக மூன்று வர மூன்று ஆக மொத்தம் ஆறு...இரண்டு நாட்களுக்கும் சேர்த்து பன்னிரண்டு கிலோமீட்டர் நடந்திருக்கிறேன்...மைனஸ் இரண்டு டிகிரி குளிரில்..

ஆங்...சொல்ல மறந்துட்டேன்...ரெண்டு நாள் நடந்ததுல டயர்ட் ஆகி இன்னைக்கு பதினோரு மணி வரை தூங்கிட்டேன்..

அரை நாள் அலுவலகத்துக்கு லீவு...

வாழ்க முரட்டு வைத்தியம்...வாழ்க நமது முன்னோர் !!! வாழ்க ராஜபேதி கீரை...!!!

Monday, January 12, 2009

மின்னஞ்சல் (குட்டிக்கதை)


செல்வா@ஜிமெயில்:

டேய் மச்சி சேட்ல இருக்கியா ?

ரவி@யாஹூ:

இருக்கேண்டா...சொல்லு...என்ன மேட்டர் ?

செல்வா@ஜிமெயில்:

ஹிந்தி கஜினி நல்லாருக்காம்...ஆமிர்கான் நல்லா பண்ணியிருக்கானாம்டா..அசின் பிச்சு உதறியிருக்காளாம்...போலாமா ?

ரவி@யாஹூ:

இல்ல மாமா..தீபா ப்யூட்டி பார்லர் கூட்டிப்போக சொல்லியிருக்கா...ஹேர் கலரிங் பண்ணப்போறாளாம்...பைக்கை எடுத்துட்டு இன்னும் ஹாபனவர்ல போறேண்டா...

செல்வா@ஜிமெயில்:

டேய்., டிக்கெட் நான் போடறேண்டா...வாடா...பாப்கார்ன் வாங்கித்தரேன்...

ரவி@யாஹூ:

மாமா, தீபூகூட போனா லெப்ட் கன்னத்துல ஒன்னு, ரைட்டு கன்னத்துல ஒன்னு, செண்டர்ல ப்ரெஞ்ச் ப்ரை ஒன்னுன்னு தரேன்னு சொல்லியிருக்கா...

செல்வா@ஜிமெயில்:

டேய் பிகரை பாத்தவுடனே ப்ரெண்ட கட் பண்ணிவுடுற பாத்தியா ? அவ்ளோதானாடா ? நீயும் நானும் அப்படியா பழகுனோம் ?

செல்வா@ஜிமெயில்:

டேய் இருக்கியா ? பதில் சொல்லுடா ?

செல்வா@ஜிமெயில்:

டேய்......

எரிச்சலான செல்வா, லேப்டாப்பை மடித்துவிட்டு, கையில் கிடைத்த டென்னிஸ் பேட்டை எடுத்துக்கொண்டு ரவியை ரெண்டு போடலாம் என்று அவன் அறைக்கதவை தள்ளிக்கொண்டு உள்ளே...டேய்ய்ய்ய்....

பி.கு : ரவியும் செல்வாவும் ஒரே அப்பார்மெண்டில் இரு வேறு அறைகளில் தங்கியிருக்கிறார்கள்..

Saturday, January 10, 2009

தமிஷ் : Bury (எரி) பொத்தானை அழுத்துவது ஏன் / எப்படி ?

ஒரு சில நன்பர்கள் சில விரும்பத்தகாத லிங்குகளை தேடி பிடித்து கொண்டுவருகிறார்கள்...

அவர்களுக்கு தேவை ஹிட்ஸ்...

ஆனால் தமிழ்ஷ் தளத்தில் எரி என்று ஒரு பொத்தான் இருப்பதை மறந்துவிட்டீர்கள்...

திரிஷா சீன், ஜோதிகா ஹாட் எல்லாம் பார்க்கும் கட்டத்தை தாண்டி ஒரு நல்ல தளமாக உருவாக்க வேண்டும் என்றால் இதுபோன்ற மொக்கையான லிங்குகளை எரித்துவிட்டு நல்ல லிங்குகளை படிக்க வைக்கவேண்டும்...உங்கள் வீட்டு லைப்ரரியில் சரோஜாதேவி புத்தகம் இருப்பதை விரும்புவீர்களா என்ன ?

அதனால் விரும்பத்தகாத லிங்குகள், தேவையற்ற வாசகங்கள் இருந்தால் எரி (Bury) என்ற பொத்தானை அழுத்துங்கள்... ( ஒரு முக்கோணம் இருக்கா ? )

ஒரு பயனாளராக நான் விரும்புவதைத்தான் மற்ற பயனாளர்களும் விரும்புவார்கள்...

இந்த பதிவுக்கு முக்கோணத்தை அமுக்காதீங்கடே !!!!!!!

*******
****
***\

திருடன் திருடன் திருடன்

அலுவலக விஷயமாக ஆன்சைட் வந்து ரெண்டு வாரம் ஆகுது...நேற்று அலுவகத்தில் இருந்து நேரம் கழித்து வந்து டிவிடியில் ரெண்டு ஆங்கிலப்படத்தினை அடுத்தடுத்து பார்த்துவிட்டு களைத்து உறங்கியதில்....

குளிருக்கு இதமாக ஹீட்டருக்கு அருகில் பெரிய போர்வையுடன் படுத்தால் திருடன் வந்தால் கூட...ஆங்...

சன்னல் ஓரம் என்னுடைய படுக்கை....

வெளியே ஏதோ சத்தம்...யாரோ நடப்பது போல , ஓடுவது போல...

என்னுடைய அப்பார்ட்மெண்ட் ரொம்பவே செக்யூர்ட். ஒரு குறிப்பிட்ட எண்ணை உள்ளீடு செய்யவில்லை என்றால் மெயின் டோரையே திறக்க முடியாது...

யாரோ மெயின் டோரை திறக்கும் சத்தம் கேட்கிறது...

அப்படியே திருடன் உள்ளே வந்தாலும் நான் தான் அறைக்கதவை உள்பக்கமாக பூட்டியிருக்கிறேனே ?

என்ன பெரியதாக இருக்கிறது என்னிடம் ? மடிக்கணினி, ஒரு இருமல் மருந்து பாட்டில், சலவை செய்து இஸ்திரி போடப்படாத துணிகள், வேலட்டில் ஒரு க்ரெடிட் கார்ட், யூரோ கார்ட், ஐம்பது யூரோ நோட்டு ஒன்று, ஐநூறு சுவீடிஷ் க்ரோனர் மற்றும் ஒரு ஐந்து யூஸ் டாலர் நோட்டு...அப்புறம் இரண்டாயிரம் இந்திய ரூபாய்கள்...

உண்மையிலேயே கண்ணை திறந்து பார்க்க முடியவில்லை என்பது தான் உண்மை...கொஞ்சம் கஷ்டப்பட்டு முயற்சி செய்தேன்,ம்ஹும்...முடியலை...

எதையாவது எடுத்துக்கிட்டு போங்கப்பா...ஆளை விடுங்க...இந்த குளிரில் தூக்கத்தை கெடுக்காமல் இருந்தால் போதும் எனக்கு...

ஒரு சிறிய க்ளக் சத்தம்...

கார்ப்பெட்டில் யாரோ நடக்கும் சத்தம் கேட்கிறது...அய்யய்யோ...வந்துட்டீங்களாடா...

துப்பாக்கியால ஏதும் சுட்டுத்தொலையாதீங்கடா...

தடக் தடக் என்று இதயம் கூட்ஸ் வண்டிமாதிரி துடிக்க ஆரம்பிக்கிறது...

இப்போது யாரோ நடக்கும் சத்தம், இரண்டு மூன்று பேர் கிசுகிசுக்கும் சத்தம்...

என் அருகில்...என் படுக்கைக்கு மிக அருகில்...

மெதுவாக ஓர கண்ணை திறந்து பார்க்க முயற்சி செய்கையில் ஏதோ முகமூடியணிந்த உருவம் என் முகத்துக்கு வெகு அருகே...ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....

ஏதோ ஸ்ப்ரேயை ப்யீச்ச்சி....நான் அப்படியே செமி ஸ்லீப் நிலைக்கு...

முழுமையாக மயங்குவதற்கு முன், காவல் துறையினர் வந்தால் ஸ்ப்ரேயை அடித்தது வரை சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்

****************
**************
************
**********
********

இது ஒரு சிறுகதை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்...(அதை நீ சொல்லித்தான் தெரியவேண்டியிருக்கு என்று சலித்துக்கொள்ளாமல் ஓட்டு குத்தவும் )

*******
******
*****
****
***

நார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை

நான் சுவீடனில் இருப்பதாக தெரிந்துகொண்டு ஆயிரக்கணக்கில் வந்து சந்தித்த அனைத்து ரசிகப்பெருமக்களுக்கும் (????!!!!!) நன்றி...அதிலும் சுவீடன்காரர்களும் என்னுடைய வலைப்பதிவின் சுவீடிஷ் மொழிபெயர்ப்பை படித்துவிட்டு வந்து ஆட்டோகிராப் வாங்கியது சிறப்போ சிறப்பு...ரயில்வே ஸ்டேஷனில் சந்தித்த கருப்பின நன்பரிடம் ஜிம்பாப்வே மற்றும் ராபர்ட் முகாபே பற்றி தெரிந்துகொண்டதோடு போதும் என்று நினைக்கிறேன்...அடுத்து ? நார்வே...!!!

நார்வேயிலயாவது சாம்பார்ல புளி போட்டு செய்யவேண்டும் என்பதை தவிர வேறு பெரிய லட்சியம் இல்லை...தயவு செய்து புளி எங்க கிடைக்கும்னு சொல்லுங்கப்பா...!!!

பி.கு 1: குளிர் காற்று வீசும்போது மூக்கை மூடிக்கனும்னு கடைசீ நாள்ல சொல்லுறாங்க...சாதாரண குளிர் 0 டிகிரி, ஆனா குளிர் காத்துல -15 டிகிரியாம்..நுரையீரல் உறைந்து போய் க்றிஸ்மஸ் நியூஇயர் படுத்த படுக்கை....தொலைபேசியில் வாழ்த்து சொன்ன யோகன் அண்ணன், லீனா ரோய், மலைநாடன் அனைவருக்கும் நன்றி...

பி.கு 2: நான் வேடிக்கை பாக்குறமாதிரி போஸ் கொடுப்பது என்னுடைய சிங்கிள் ரூம்..ஹி ஹி

Friday, January 09, 2009

வினவு நூல்கள் புத்தக சந்தையில்

வினவு தளத்தில் உள்ள தொடர் கட்டுரைகளும், பல தொகுப்பு கட்டுரைகளும் நூலாக பதிக்கப் பட்டுள்ளது.

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கத்தின் எண் 99-100 அரங்கில் கிடைக்கும் வினவு நூல்கள்.

வலைப்பதிவுகள் மட்டுமல்லாது அதன் பின்னூட்டங்களும் புக்ஸ்ல இருக்காம்...

http://supperlinks.blogspot.com/2009/01/blog-post_9629.htmlhttp://suunapaana.blogspot.com/2009/01/blog-post_08.html

வலைப்பதிவுகள் புக்ஸா வரது சந்தோஷம்..!!!

Thursday, January 08, 2009

என்னுடைய தார்மீக ஆதரவு

மேட்டருக்கு இந்த சுட்டியை க்ளிக்கவும்

ஓட்டு குத்தவும்..!!!!!

_/\_

Wednesday, January 07, 2009

மொள்ளமாறி முடிச்சவுக்கி எக்ஸாம்பிள் பிச்சர்ஸ்பெங்களூரில் செந்தழல் ரவியும் பொட்டீக்கடையாரும்...!!!!

கல்கியின் வலைப்பூ

கல்கி எழுதவந்திருக்காங்க...வழக்கம்போல் பாலபாரதி அண்ணன் அழைத்து வந்துள்ளாரா என்று தெரியவில்லை...கல்கி ஒரு திருநங்கை...ஏற்கனவே லிவிங் ஸ்மைல் வித்யா பலபேரோட கண்களை திறந்தது மாதிரி இவங்களும் நிறைய எழுதனும் என்று வாழ்த்துகிறேன்..

கல்கியின் வலைப்பதிவை படித்து உற்சாகப்படுத்த

அக்னிஹோத்திரமும் ஆபாச சல்மா அயூப் ஜெயராமனும்அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் இறைவனடி(?) சேர்ந்துவிட்டார்...அவரது மறைவுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...

மக்களிடம் உள்ள பல்வேறு மூட நம்பிக்கைகளை களைவதற்காக 100 வயதில் அயராது உழைத்து அவர் வெளியிட்ட கருத்துக்கள், அதில் உறைந்துள்ள உண்மைகள்...அடேங்கப்பா ரகம்...

என் கண்ணுக்கு அவர் இன்னொரு பெரியாராக தெரிகிறார்...அவரது இந்துமதம் எங்கே போகிறது என்ற கட்டுரை தொகுதிகள் (நக்கீரனில் வெளிவந்தது), இணையத்தில் சிந்திக்க உண்மைகள் பதிவில் தொடர்ந்து வெளியிடப்பட்டது...(தாத்தாச்சாரியார் என்ற டேகின் கீழே 46 பதிவுகள் உண்டு)

சிந்திக்க உண்மைகளின் அயராத உழைப்பின் மூலம் அந்த பதிவுகளை படித்தேன், தெளிந்தேன்...நன்றி சிந்திக்க உண்மைகள் !!! ஒரு சாம்பிள் பதிவு !!!

***********************


சில புதிய பதிவர்களுக்கு போலி டோண்டு பிரச்சினையே என்ன என்று தெரியவில்லை, மறந்துவிட்டார்கள்...போலி டோண்டு என்றால் யார் என்றே தெரியாதவர்களுக்கு போலி சல்மா என்றால் தெரியுமா ?

அதனால் இந்த போலி சல்மா விவகாரம் பற்றி ஒரு சின்ன ஸ்னாப்ஷாட்...

சல்மா அயூப் என்ற பெயரில் இஸ்லாம் / இஸ்லாமியர்களை பற்றி கடுமையாக சாடி திரட்டியில் ஒரு பதிவு இணைந்திருந்தது..

ஒரு முஸ்லீம் பெண் இது போன்ற கேள்விகளை எழுப்புவதால் இஸ்லாமியர்களும் ஓடி ஓடி விளக்கம் கொடுத்து மாய்ந்தார்கள்...இந்துத்துவ / மனு தர்ம சிந்தனையுள்ளவர்களோ உள்ளூர சிரித்து சந்தோஷத்தில் திக்குமுக்காடினார்கள்...

இந்த விஷயம் ஒரு பக்கம் நடந்துகொண்டிந்தபோது, அப்போது வலை உலகில் அற்புதமாக எழுதிக்கொண்டிருந்த ஒரு பெண் பதிவர் ( பெயர் / மேல் விவரம் வேண்டாம் ) பெயரில் ஒரு போலி தளம் உருவாக்கப்பட்டது...

அந்த தளத்தில் அருவருப்பானவைகள் எழுதப்பட்டு, அவை அந்த பெண்ணே எழுதுவதுபோல ஜோடிக்கப்பட்டது...

இங்கே ஒரு முட்டாள் தனத்தையும் செய்தார் போலிப்பதிவு உருவாக்கியவர்...

சல்மா அயூப் என்ற மின்னஞ்சல் முகவரியிலேயே இந்த போலி தளத்தை உருவாக்கியது தான் அவர் செய்த மிகப்பெரும் தவறு...

ஏன் என்றால் சல்மா அயூப் ப்ரொபைலை க்ளிக் செய்தால் இந்த அருவருக்கத்தக்க ஆபாச தளமும் கூடவே தெரிந்தது...

பிரச்சினையில் தீவிரம் கருதி பொறிவைத்ததில் எலி சிக்கியது...

அது எலியல்ல, பெருச்சாளி என்று பிறகு தான் தெரிந்தது...

தீவிர இந்துத்துவ கருத்துக்கள் கொண்ட (அதில எந்த பிரச்சினையும் கிடையாதே ? ) இவர் சல்மா அயூப் என்ற இஸ்லாமிய பெண்ணின் பெயரை வைத்து இஸ்லாத்தை பற்றி கேவலமாக எழுதியதோடு அல்லாமல் ( இது பற்றி இஸ்லாமியர்கள் தான் சொல்லவேண்டும்), பதிவுலகில் அற்புதமாக எழுதிக்கொண்டிருந்த ஒரு பெண்ணின் பெயரில் போலி தளம் அமைத்து ( இதுல தான் இந்த போலியின் மீது வெறி) அருவருப்பு கருத்துக்கள் எழுதவேண்டிய அவசியம் என்ன ?

ஒரு பிரபல பத்திரிக்கையாளர் முன்னிலையில் தான் செய்த அனைத்தையும் ஒப்புக்கொண்டு ( டேப் செய்யப்பட்டது), மன்னிப்பு கேட்டுவிட்டு, எழுதி கையெழுத்தும் போட்டு கொடுத்துவிட்டு வெளியேறினார் இந்த போலி சல்மா ஜெயராமன்...

இவரது குடும்பம், உயர்ந்த பதவி, சமூகத்தில் இவருக்கிருந்த மதிப்பு போன்ற அனைத்தையும் கருத்தில் கொண்டும், சம்பந்தப்பட்ட பெண் விட்டுத்தொலைங்க என்றும் கூறியதால் இவரது டவுசர் கிழிந்துபோகாமல் தப்பித்தது...

இதை இப்போது எழுதக்காரணம், பகுத்தறிவுக்கருத்துக்களை யாராவது எழுதினால் கோபம் கொப்பளிக்க வந்து சாடுகிறார்...

இட்லிவடையின் இந்த பதிவின் பின்னூட்டத்தில் பார்க்க

அருவருப்பாக இருக்கிறதாம்...ஆபாசமாக இருக்கிறதாம்...

நான் கேட்பது இது தான்...போலி சல்மாவாகவும் அருவருப்பாக எழுதியபோதும், ஜோதி என்ற
பெயரில் ஆபாச கதைகள் எழுதியபோதும் வராத அருவருப்பும் ஆபாசமும் இப்போது எப்படி வந்து தொலைந்தது திரு ஜெயராமன் அவர்களே ?

Tuesday, January 06, 2009

த லயன் கிங் : ஒரு விஷுவல் ட்ரீட் !!!

இப்போது வந்துள்ள மடகாஸ்கர் 2 பழைய நினைவுகளை கிளப்ப, ஓடிச்சென்று இணையத்தில் பார்த்த படம் லயன் கிங்..

http://www.watch-movies.net/movies/the_lion_king/

இது ஒரு விஷுவல் ட்ரீட்...!!! பாடல், காமெடி, செண்ட்மெண்ட், காதல், வீரம், வேகம், குரோதம், துரோகம் என்று பல உணர்ச்சிகளை கலவையாக கொடுத்திருக்கிறார் டைரக்டர்...

அதிகம் பேச விரும்பவில்லை, இந்த படத்தை இணையத்தில் பார்த்து எஞ்சாய் பண்ணுங்க...

இது உண்மையில் ஒரு விஷுவல் ட்ரீட் !!! படத்தை பார்த்துவிட்டு அக்கியுனா மட்டாடா பாடுங்க..!!! அக்யூனா மட்டாடா !!!! அக்யூனா மட்டாடா !!!

Monday, January 05, 2009

திருமங்கலம் - தி.மு.க முன்னிலை

திருமங்கல ஓட்டுபெட்டியை வலது பக்கத்தில் வைத்திருக்கிறேன் இல்லையா ? வாக்கெடுப்பு முடியறதுக்கு முன்னாடி இண்டர்மீடியட் ரிசல்ட்ஸ்.

தி.மு.க (முன்னிலை) : 52 ஓட்டு
அ.தி.மு.க : 36 ஓட்டு
தே.மு.தி.க : 29 ஓட்டு
ஜனதா விமுக்தி பெரமுன : 24 ஓட்டு.

பேசாம அதிமுக ஜேவிபியோட கூட்டு வெச்சிருக்கலாம், அப்படின்னு சொல்லுறீங்களா ? இப்பவே அப்படித்தான இருக்கு கி கி

என்னோட போர்க்களம் சிறுகதை லின்க் இந்தா இருக்கு...படிங்க உங்க கருத்தை சொல்லுங்க...

இந்த டெம்ப்ளேட் வேனும்னா மெயில் போடுங்க...படத்துல என்னோட எதிர்ல இருக்கறது ஒரு மலையாளத்தான்...உண்மையில் சிங்களன் எப்படி தமிழர் வெறுப்பு கொண்டிருக்கிறானோ அதே மாதிரி மல்லுக்களிடம் அதே தமிழர் விரோத போக்கு உள்ளது...

இளைய தலைமுறையிடம் குறைந்துள்ளது, இருந்தாலும் உலகெங்கும் உள்ள இண்டியன் எம்பசிக்களில் 50 - 60களில் ரா தலைவராக இருந்த ஒரு மலையாளியால் இன்ஸ்டால் செய்யப்பட்டு, பார்ப்பனர்கள் வங்கி கேஷியர் பதவிகளை தங்கள் சாதியை சேர்ந்தவர்கள் அல்லது தங்கள் பிள்ளைகளுக்கு கொடுப்பதுபோல் இண்டியன் எம்பசிகளில் மீண்டும் மீண்டும் மலையாளிகளே உட்காருகிறார்கள்...

ஷகீலா தவிர உங்களுக்கு வேறு மலையாளி அனுபவம் இருந்தால் சொல்லுங்களேன்...

போர்க்களம் (BattleField) - சிறுகதை


எதிரி வரான், வளைச்சி அடிடா மாப்ள...

ஏய் பல்குழல் எறிகணை அடிக்கறான் பதுங்குடா...

ரவியண்ணை, சரி ரெண்டு மோர்ட்டர் அடிப்பம் !!!

கினி கினி...கினி கினி....சாட்டிலைட் போன் சினுங்குகிறது...

தம்பி...கிபிர் வரான்...நீங்க நாலு பேரும் அப்படியே பின்னால வாங்க...இழப்பு எதுவும் இல்லாமல் இருப்பது தான் முக்கியம்...

அண்ணை எதிரி கண்ணுக்கு முன்னால நிக்கிறான், மகேசனும் நானும் ஹெவியை வெச்சு நிக்கிறம், சூரியனை மோர்ட்டர் மட்டும் அடிக்கச்சொல்லுங்க...முப்பது தலையை உருட்டிருவம்...

ஏய் சொன்னா கேளு...முப்பதுபேருக்கு பின்னால முன்னூறு பேர் சாக வரானுங்க...மல்ட்டி பேரல்ல மாட்டிருவீங்க...எழும்பி வாடா...

சரி ஸ்னைப்பர் கன்னை கொடுங்க நான் அப்படி மரத்தில் ஏறி நாலு மாங்காய் பறிக்கிறன்...

நோ. பின்னால். தலைவர் சொல்லிட்டார்.

வேறு எதுவும் பேசாமல் துப்பாக்கிகளை தூக்கிக்கொண்டு பின்னால் வருகிறார்கள்...

இவருக்கு இதே வேலையாப்போச்சு...பின்னால பின்னால வரச்சொல்லுறார்.. எப்போ நாம போய் அடிக்கிறது ? புலம்பினான் மகேசன்...

அட தலைவர் சொல்லிட்டார். இழப்புகள் இருக்ககூடாதாம்...அப்போ எதோ இருக்கப்பா...விடு...

சரி டீமோட மொத்த பாயிண்ட் எவ்ளோ பாரு...

BattleField 2 மல்ட்டி ப்ளேயர் கம்ப்யூட்டர் கேமில் பாயிண்ட்களை பார்க்கிறான் மகேசன்....கேமை ஜெயிக்க இன்னும் 40 பாயிண்ட்ஸ்...டீம் கமாண்டராக செயல்படும் செந்தில் ஹெட் போனில் " வி வில் கெய்ன் கண்ட்ரோல்...வொர்க் ஹார்ட் சோல்ஜர்" என்று மெசேஜ் தருகிறார்...

Friday, January 02, 2009

ஆலப்புழை அச்சப்பன் : கிரேசி மோகன்

http://sharereel.com/view/2291/crazy-mohans-sirithidu-seasame/

ஆலப்புழை அச்சப்பனை பற்றி தெரியனுமா ? இந்த க்ரேஸி மோகன் நாடகத்துல போய் பாருங்க...

லிங்க்...

ரைட்ல ஓட்டு பெட்டிய பாருங்க...ஓட்டு போட மறக்காதீங்க...

திருமங்கலம், யாருக்கு ? ஓட்டளியுங்கள்...

ப்ளையிங் ஸ்குரில் கேம்னு சொன்னாங்க...மேல ஏத்துனானுங்க...கீழ வரும்போதுதான் ஒழுங்கா புடிக்காம தரையில லேண்ட் ஆக்கி வுட்டுட்டானுங்க..மூக்கு பேந்து பல்லு உழுந்து வாயி கிழிஞ்சு...அதுக்கு முன்னால பலியாடு எப்படி சிரிக்குது பாருங்க காமெடி பண்ணிக்கிட்டு...சமீபத்தில் ரசித்த படம் ஒன்று...கிளிநொச்சி மருத்துவமனை அருகே பாட்டியும் பேரனும்...காப்பிரைட் இல்லாமல் போட்டிருக்கிறேன்....படத்துக்கு சொந்தக்காரர்கள் வந்து சொன்னால் அவர்கள் தளத்தை இணைக்கிறேன்...ஓட்டு பெட்டி ரைட்ல இருக்கு பாருங்க...ஓட்டுக்கு ரெண்டாயிரம் எல்லாம் என்னால கொடுக்கமுடியாது...வலைப்பதிவு எதுன்னு சொன்னீங்கன்னா, நீங்க மொக்கை பதிவு எழுதுனாலும் ஆ வூ ன்னு புகழ்ந்து ரெண்டு பின்னூட்டம் போடுறேன்...

Thursday, January 01, 2009

திருமங்கலம் யாருக்கு ? ஓட்டளியுங்கள்..

அங்கன் ரைட்ல ஓட்டு அளிக்குற பெட்டிய வெச்சிருக்கேன் பாருங்க..அப்பாலிக்கா ஒரு ஓட்டை குத்திட்டு போங்க..ரெடி ஜூட்...!!!

பி.கு1: போட்டோவுல நான் அ.தி.மு.க, ப்ரதீப் தி.மு.க, விஜய் தே.மு.தி.க.
பி.கு2: 1996 தேர்தல்ல தமிழ் மாநில காங்கிரசுக்காக ஓட்டுக்கு இருவது ரூபாய் கொடுத்தோம்..நான் தான் டேபிள் இன்ச்சார்ஜ். பூத் ஸ்லிப் இருந்தாத்தான் காசு. பூத் ஸ்லிப் இல்லாத கிழவிங்க வந்து என் பேரு இருக்கா பாரு தம்பி என்று கேட்டது மனதை உறுத்துகிறது...நாங்கதான் அந்த பேருல ஏற்கனவே ஓட்டு போட்டுட்டமே ?