Posts

Showing posts from February, 2009

செந்தழல் ரவி பிலாக் கொம்பேனி சிறுகதைகள்

ரீசண்டாக எழுதிய சில கதைகளை தொகுத்து பதிவு போடச்சொல்லி கேட்ட ஆயிரக்கணக்கான < உண்மையா ஒக்கே ஒக்க > ரசிகர்களின் அன்புக்கு தலைவணங்கி...

போர்க்களம் (BattleField) - சிறுகதை

இங்கே க்ளிக்கி படிக்கவும் http://tvpravi.blogspot.com/2009/01/battlefield.html

ஜெர்மோ அக்கார்டி உருக் !!!!!!!!!!

இங்கே க்ளிக்கி படிக்கவும்

ஒரு கொலை ராகம்...!!!

இங்கே க்ளிக்கி படிக்கவும்

திருடன் திருடன் திருடன்

இங்கே க்ளிக்கி படிக்கவும்

களப்பிரன்

இங்கே க்ளிக்கி படிக்கவும்

இதில் ஒரு கொலை ராகம் கதையை ஆழி பதிப்பகத்துக்கு அனுப்பி இருந்ததால் அதனை ட்ராப்டுல போட்டிருந்தேன்...பரிசு கிடைக்கல. ஐரோப்பிய சிறப்பு பரிசு யாருக்கும் கொடுக்கலையே ? பாவிங்களா...

களப்பிரன் கதை தமிழ்மணம் விருதை குறிவெச்சு அடிச்சது. மாங்காய் என்ன பலாக்காயே விழுந்தமாதிரி இருக்கு...

ஜெர்மோ அக்கார்டியும் நிறைய பேர் பாராட்டினாங்க. ஒரு வேளை இதை போட்டிக்கு அனுப்பியிருந்தா பரிசு கிடைச்சிருக்குமோ ??

நிறைய பின்னூட்டங்கள் தந்திருக்கீங்க, தனித்தனியா பதில் போடலை என்பதால் நான் பெரிய /// மூத்த /// பதிவர் என்று எல்லாம் நினைச்சுராதீங்க...நேரமின்மை தான் காரணம்...

ஒரு கதைக்கு அரை பி…

ஹைய்யா !!! ஜாலி !!!! நான் பர்ஸ்ட்டு !!! நன்றிகள் !!!!

Image
தமிழ்மணம் விருதுகள் அறிவிப்பு வந்துருக்கு, அதில் கதை பிரிவில் நீ பர்ஸ்ட்டு என்று காலையின் மூன்று மின்னஞ்சல்கள்...

1. கவிதா
2. டிவிஆர் அய்யா
3. நவநீதன்


கதையை படித்தவுடன் அன்றே சுவனப்பிரியன், என்ன தமிழ்மணபோட்டிக்கு தயாராகிறாயா என்று கேட்டிருந்தார்...ஹி ஹி உண்மைதான்...

தமிழ்மணம் போட்டி அறிவிப்பை பார்த்துவிட்டு, என்னடா இதுவரை நாம மொக்கையை தவிர வேற எதுவும் எழுதவில்லையே, அப்படியே ஒரு கதையை எழுதி போட்டிக்கு போடலாமே என்று முயன்றேன்...

சுஜாதா நினைவு சிறுகதை போட்டி / ஆழி பதிப்பகத்துக்காக எழுதிய ஒரு கொலை ராகம் கதை எனக்கு நிறைவா இருந்தது...இணையத்தில் இல்லை, மின்னஞ்சலில் வேண்டுமானால் அனுப்பறேன்...

ஆனால் கதையை மெயிலில் அனுப்பி பி.கே.எஸ் அண்ணாச்சியிடம் கமெண்ட்ஸ் கேட்டபோது பல கமெண்ட்ஸ். உருப்புடியா நான் எழுத காரணம் பி.கே.எஸ் தான்.

கதை எழுத இன்ஸ்ப்ரேஷன் மோகன் தாஸ். சச்சின் ஸ்டைல்ல சேவாக் பேட்டை பிடிச்ச மாதிரி நான் பிடிச்சிடனும் என்று < நினைத்துக்கொண்டிருக்கிறேன் >

வரலாற்று கதைக்கு இன்ஸ்பிரேஷன் என்றால் பதிவுலகில் நரசிம். அவரோட மாறவர்மன் தேனில் நனைத்த ஹனி கேக். ஷாட் அண்ட் ஸ்வீட்டா சூப்பரா இருக்கும்...

அப்பு…

தலைமை கழகத்தில் மம்மி. படங்கள் உதவி நக்கீரன்

Image
ஏக்கபடி கபடி கபடி கபடி அஸ்ஸா உஸ்ஸா கும்தலக்கடி புஸ்ஸா கபடி கபடி கபடி....ஆத்துல குறவை என்று ஒரு மீன் இருக்கும். நாட்டு மீன் வகையறா. ரொம்ப வழுக்கும். அதை பிடிக்க இப்படித்தான் ரெண்டு கையையும் சேர்த்து எடுத்துக்கிட்டு போயி ஒரே அமுக்...பாவம் சாவியை கீழ போட்டுட்டார் போல...எப்படியும் கெடச்சிருக்கும்...கும்...கும்..பின்னால் ஒருவர் சாமி சன்னிதியில் நிற்பது போல நிற்பதை கவனிக்க...

எந்த எடத்துல போயி பத்திரிக்கை வைக்கிறார் பாருங்க...ஒருவேளை நல்லா படிங்க அப்படீன்னு சொன்னதுக்கு அங்கனயே புத்தகத்தை விரிச்சு படிச்சு காமிக்கறார் போல...பாதுகாப்பு அதிகாரியை பாருங்க....ஜிம்மி மாதிரி இல்ல ?

தலைமை கழகத்தில் மம்மி. படங்கள் உதவி நக்கீரன். நக்கீரன் டாட் காம்...நானும் இந்த அலுவலகத்துக்கு ஒரு முறை விசிட் அடிச்சிருக்கேன்...பின்னால கேண்டீன் இருக்கு, வடை சூப்பரா இருக்கும்..

ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி !!!

நான் மிகவும் விரும்பும் குரல். தீர்க்கமான பேச்சு. தீர்க்க தரிசன பார்வை. அற்புதமான மொழியறிவு. இழந்துவிட்டேனே ? உண்மையில் அழுகிறேன்...

http://blog.sajeek.com/?p=493

http://blog.sajeek.com/?p=513

கூகிள் விளம்பரங்களை க்ளிக் பண்ணவேண்டியது ஏன் ?

Image
ஆட்ஸ் பை கூகிள் என்று விளம்பரங்களை திரட்டிகளில், நிறைய தளங்களில் பார்க்கிறீர்கள்..குறிப்பா தமிழ்ஷ், விகடன் போன்ற இடங்களில் கூட இந்த கூகிள் வழி விளம்பரங்களை பார்க்கலாம்..

நிறைய வலைப்பதிவர்களும் விளம்பரங்களை போட்டுவைத்துள்ளார்கள்...(பொது சேவை விளம்பரங்களை க்ளிக் செய்து ஒன்றும் ஆகப்போவதில்லை)..

உருப்புடியாக காசு தருவது கூகிள் நிறுவனம், ஆட் ப்ரைட் போன்றவை என்று நினைக்கிறேன்..

குறைந்த வேகம் உள்ள இணைய இணைப்பில் இருக்கிறீர்கள் அல்லது பிரவுசிங் சென்டர் போன்றவிடத்தில் இருந்து கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் இணையத்தை பார்வையிடுகிறீர்கள் என்றால் பரவாயில்லை..

ஆனால் அலுவலக கணினி, சொந்த கணினி, அதி வேக கணினி போன்றவற்றில் அமர்ந்திருக்கும் தமிழ் வலைப்பதிவர்கள், கூகிள் வழி விளம்பரங்களை திரட்டிகளில், உங்களுக்கு பிடித்த தளங்களில் க்ளிக் பண்ணுங்க..

நீங்க பார்வை இடனும் என்று கூட இல்லை, க்ளிக் பண்ணி ஓப்பன் நியூ விண்டோ என்று கொடுத்துவிட்டு, பழைய படி மொக்கையை போடுங்க அல்லது படிச்சிக்கிட்டிருக்க தளத்தை படிங்க..

இது மூலமா என்னா ஆவப்போவுது என்று கேட்டீங்கன்னா, திரட்டியை, தளத்தை காசு போட்டு நடத்தி நமக்கு சேவை செய்யும் நம்ம …

Snow Sunday 2

Image

Snow Sunday 1

Image

தமிழீழத்தவர்களுக்கு முக்கிய யோசனை

Image
ஸ்ரெயிட் பார்வேர்டாக மேட்டருக்கு வந்துவிடுகிறேன்..

ஏன் தமிழ் ஈழத்தை இந்தியாவுடன் இணைத்துவிடக்கூடாது ? ஒரு இந்திய மாநிலமாக மாறிவிடுங்களேன் ? ஏற்கனவே இருக்கிற மொழிவாரி மாநிலத்தில் ஒன்றாக இணைந்துவிடுங்களேன் ?

இந்தியாவின் அருமை பெருமைகளை பட்டியல் போட்டால் ஒருவேளை நீங்கள் இந்த திசையிலும் யோசிக்கலாம்...

1. அணுகுண்டு வெடித்திருக்கிறோம்..பிரமோஸ், அக்னி என்று பல அணு ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து கடன் வாங்கிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் தயாரித்திருக்கிறோம்..

2. நிலாவுக்கு ராக்கெட் விட்டுள்ளோம்...மறுபடி ரஷ்யாவின் உதவியுடன் கிரயோஜெனிக் எஞ்சின் பொருத்தி நிலா நிலா ஓடிவா பாடலை நிஜமாக்கியுள்ளோம்...

3. விமானந்தாங்கி கப்பல் வைத்துள்ளோம்...ஐ.என்.எஸ் விக்ராந். சோமாலியா கடற்கொள்ளையர் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய அளவில் கடற்படையும் உள்ளது...

4. பங்களாதேஷ் என்ற நாட்டையே உருவாக்கியுள்ளோம்...பாக்கிஸ்தானை ஓட ஓட விரட்டி...

5. மல்லாக்க படுத்து மாளவிகாவை பற்றி கனவு கண்டால் 2020ல் இந்தியா வல்லரசாகிவிடும் என்ற மாபெரும் கருத்தை சொன்ன அப்துல்கலாம் என்ற இஸ்லாமியரை ஜனாதிபதியாக்கி பார்த்துள்ளோம்..

6. தமிழகத்து நெய்வேலி நிலக்கரியை…

சிங்களப் பேராசிரியர் Professor Sisira Jayasuriya ன் பேட்டி

Image
http://www.abc.net.au/reslib/200901/r334759_1514920.asx

இங்கே க்ளிக் செய்தால் தரவிறக்கம் செய்து பார்க்கலாம்..

Click Here

in My Views:

a person kills other = Murder
a country fights and kills other country solders = war
a country kills its own people = genoside.

example for genoside => Srilanka


ஒருவர் இன்னோருவரை கொன்றால் = கொலை
ஒரு நாடு இன்னொரு நாட்டின்மீது போர் தொடுத்து அந்த நாட்டின் படைவீரரை கொன்றால் = போர்
ஒரு நாடு அதன் சொந்த மக்களை கொன்றால் = இன அழிப்பு.

இன அழிப்புக்கு ஒரு உதாரணம் = சிரீலங்கா

மனித கேடயங்களா மக்கள் ?

Image
நேற்று உணவு மேசையில், ஈழப்பிரச்சினை குறித்து பேச்சு வந்தது..அங்கே நடைபெறும் மனித அவலம் பற்றியும், மருத்துவமனைகளில் எறிகணைகளை வீசும் நாஜி இலங்கை அரசு பற்றியும் எதிரே அமர்ந்திருந்த பலநாட்டவர்களிடம் கவலையுடன் விவரித்துக்கொண்டிருந்தபோது, ஒரு இந்தி'யர் எதிரே வந்து அமர்ந்தார்..

வந்தமர்ந்தவர், படீரென ஒரு கருத்தை தெரிவித்தார். நான் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தேன்..

ஓ ஸ்ரீலங்கா இஷ்யூ ? அங்கே விடுதலைப்புலிகள் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துகிறார்கள் தெரியுமா ? அதனால் தான் அப்பாவி மக்கள் சாகிறார்கள்...என்றார்..

மருத்துவமனையை நோக்கி பல்குழல் எறிகளைகள் மூலம் பாஸ்பரஸ் குண்டுகளையும், மீயொலி விமானங்களின் மூலம் கொத்து குண்டுகளையும் இலங்கை அரசாங்கம் வீசுவதை புதினத்தையும், தமிழ்நெட் இணையதளத்தையும் பார்த்து கவலையோடு அவதானிக்கும் நம்மைப்போல அவர் புதினம் இதழையோ, தமிழ்நெட் இணையத்தளத்தையோ பார்வையிடுபவர் அல்ல...

இந்தியாவில் இருந்து வெளியாகும் ஹிந்து, டைம்ஸ் நவ், சி.என்.என் ஐபிஎன் போன்ற ஊடகங்களை பார்வையிடுபவர்..

அவரின் இந்த கருத்தானது, ஸ்ரீலங்கா அரசு தன்னுடைய ப்ரொப்பகண்டா வார் (பரப்புரை யுத்தம்) மூலம் எவ்வள…

காணவில்லை !!!!

Image