Thursday, October 29, 2009

அன்னா மரியா குமாரசாமி.....



காலையில் அலுவலகம் வந்து மின்னஞ்சலை திறந்தவுடன், 'உடனே என்னுடய இடத்துக்கு வரமுடியுமா' என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தான் க்ரிஷ்.

என்னடா அவசரம். அப்புறமா வரேன். மீட்டிங் இருக்கு. என்று பதில் அனுப்பினேன்.

ம்ஹும். அர்ஜெண்ட். உடனே வா.

அப்படி என்னடா அர்ஜெண்ட், என்றேன் அவன் இருக்கைக்கு அருகில் நின்றுகொண்டு.

அவன் கையில் இன்றைய செய்தித்தாள். அதில் தோராயமாக நடுப்பக்கம். பார். படி. என்றான்.

புதிய வரிவிதிப்பு முறைகள் பொதுமக்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பது போல ஒரு த்ராபையான தலைப்பு, ரெண்டு முழு பக்கங்களை விழுங்கியிருந்தார் எழுத்தாளர். அதில் நாலைந்து பொதுமக்களை பேட்டி கண்டு அவர்கள் கருத்தை பதிந்திருந்தார். அவர்களது படங்களும் வெளியாகியிருந்தன.

குழந்தையோடு நிற்கும் ஒரு பெண், பள்ளி செல்லும் ஒரு மாணவி, ரெண்டு முதியவர்கள் என்று வேறுபட்ட ஏஜ் க்ரூப்பில் அவர்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள்.

அதில அந்த பொண்ணு சொல்றத படி.

படத்தில் இருந்த இளம்பெண் அழகு. ஒல்லியான தேகம், நல்ல உயரம். வெண்ணிற ஆடை, தோளில் ஸ்டைலிஷான ஒரு கரிய நிற பேக். ஒற்றை வார்த்தையில் அழகு என்று சொல்லிவிட முடியாதபடிக்கு.

சூப்பரா இருக்கா இல்லையா ?

நான் அவள் சொல்றத படிக்கச்சொன்னேன்.

புதிய வரிவிதிப்பு முறைகளை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

மாறிவரும் பொருளாதார சூழ்நிலையில் அரசுக்கு இருக்கும் நிர்ப்பந்தகளின் அடிப்படையில் வரி விதிப்புகளை செய்கிறார்கள். அந்த வரி விதிப்புகள் நடுத்தர மற்றும் அதிக வருவாய் அற்ற பிரிவினரை பாதிக்காமல் இருந்தால் நன்று. அதே சமயம், இந்த வரிவிதிப்புகள் தொழில் வளர்ச்சியை தடுக்கும் வகையில் அமைந்திடாமல் காத்திடவேண்டும். அப்படி செய்தால் தான், தொழில்கள் மீண்டும் வளர்ச்சிப்பாதையில் செல்லும். பொருளாதாரமும் மீளும். இது கடினமான பணி என்றாலும், இதனை சிறப்பாக கடந்துசெல்வதம் மூலம் மக்கள் அனைவரின் ஆதரவையும் அரசு பெறும்.

காம்ப்ளிகேட்டடா பேசியிருக்கா. இல்லையா ?

அப்போதுதான் பெயர் மற்றும் வயதை பார்த்தேன். அன்னா மரியா குமாரசாமி. வயது பதினாறு. வி ஜி எஸ் பள்ளி.

என்னடா, பதினாறு வயசுன்னு போட்டிருக்கு ? பேர் என்னடா வித்யாசமா ? அன்னா மரியா குமாரசாமி ? தமிழ் பொண்ணா இருக்குமோ ?

போர்ச்சுகீஸ் மாதிரி இருக்காடா. அன்னா அப்படீங்கறதுல ரெண்டு n இல்லை. அதனால கண்டிப்பா போர்ச்சுகீஸ்.

குமாரசாமி ?

அதான் தெரியலை. ரொம்ப குழப்பமா இருக்கு. அதனால உன்னை கூப்பிட்டேன்.

நெட்ல தேடியிருப்பியே ?

இவ ரொம்ப இண்டலிஜெண்ட். தன்னை பற்றிய எந்த விவரமும் நெட்ல வராம பார்த்துக்க்கிட்டிருக்கா.

ஊப்ஸ்.

அட்ரியன் குமாரசாமின்னு ஒரு மொட்டைத்தலை வர்ரார். அவர் ஒருவேளை இவளோட அம்மாவை கல்யாணம் செஞ்சிருக்கலாம். இவளோட அம்மா டைவர்ஸ் ஆகியிருக்கலாம். ட்ரொல்லி ட்ரோன்ஸ்னு ஒருத்தவங்க இருக்காங்க நெட்ல. அவங்களோட லாஸ்ட் நேம் குமாரசாமி. எந்த தமிழ் பெண்ணோட பேரு ட்ரோல்லி ட்ரோன்ஸ் ? கண்டிப்பா அவங்க குமாரசாமியோட வொய்ப். ஒருவேளை அவங்க இவளோட அம்மாவா இருக்கலாம். அவங்களோட எக்ஸ் ஹஸ்பெண்ட் போர்ச்சுகீஸ் ஆக இருக்கலாம். அல்லது அவங்களே போர்ச்சுகீஸ் ஆக இருக்கலாம்.

என்னடா பாலச்சந்தர் படம் மாதிரி குழப்பற ? இதை எல்லாம் வச்சி உனக்கு என்ன வேனும் ?

இந்த பொண்ணோட இமெயில் ஐடி கண்டுபிடிக்கனும். அதுக்கு நீ எனக்கு ஹெல்ப் பண்ணனும்.

டேய், ஆபீஸ்ல சம்பளம் கொடுக்கறது இதுக்கா ?

அதெல்லாம் முடியாது. நீ ஓவ்ர்டைம் பார்த்து எனக்கு இவளோட இமெயில் ஐடி கண்டுபிடிச்சு தா. குழந்தையை போல அடம்பிடிக்கிறான் க்ரிஷ். விட்டால் அழுதுவிடுவான் போல.

சரி உனக்காக இன்னைக்கு ஸ்பெண்ட் பண்ணி கண்டுபிடிக்கிறேன். வீட்ல இருந்து என்னோட வொய்ப் போன் பண்ணா மீட்டிங் இருக்குன்னு நீ பொய் மட்டும் சொல்லு..

ஓக்கே டன் டன். இது க்ரிஷ்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

பயபுள்ளைக்கு காதல் கத்தரிக்காய் என்று எதுவும் கிடையாது. எந்த பார்ட்னருடனும் ஒரு டேட் கூட இது வரை கிடையாது. அட யாருடனும் ஒரு காப்பிஷாப் கூட போனதில்லை. தனிக்கட்டை. இவனை கல்யாணம் செய்துகொள்ளச்சொல்லி அம்மா கட்டாயப்படுத்தவில்லை. சொல்லப்போனால், இவன் அம்மா அடிக்கடி சொல்வது, தயவு செய்து நி யாரையும் கல்யாணம் பண்ணி தொல்லை கொடுக்காதேடா. உனக்கு அதுக்கான மெச்சூரிட்டி கிடையாது. ஷார்ட் டெம்பர் லூசு டா நீ. அவன் அம்மா அவனுக்கு ஒரு தோழியைப்போன்றவள். அவள் சொல்வதிலும் உண்மை இருந்தது.

நான் கேட்டிருக்கிறேன்.

ஏண்டா. லவ் அது இதுன்னு எதாவது ஏன் உனக்கு வரவே இல்லை.

ரவி. When it Happens. it Happens. அது நடக்கும்போது நடக்கட்டுமே. எதையும் போர்ஸ் செய்யவேண்டாமே ?

அலுவலகத்தில் என்னுடைய கணினியில் கூகிளை திறந்து அன்னா மரியா குமாரசாமி, அன் மரி குமாரா, அன்னா மரியே குமாரசுவாமி என்றெல்லாம் டைப் செய்து பார்க்க ஆரம்பித்தேன்.

ம்ஹும். அவன் சொன்னதுபோல உண்மையில் இவள் இண்டலிஜெண்ட்.

யார் யாரோ வருகிறார்கள். கூகிள் படத்தேடல், புதிய தேடு இயந்திரம் பிங், பழைய தேடு இயந்திரம் யாஹூ என்று என்னால் ஆனமட்டும். இல்லை. கணிப்பொறியை சல்லடையாக்குகிறேன். அன்னா மரியாக்களை ஜலிக்கிறேன். சிக்கவில்லை.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

ரவி. ரிப்போர்ட் எங்கே ? மேனேஜர்.

சார். ஐயாம் நாட் பீலிங் வெல் டுடே. நாளைக்கு தந்திடறேனே ?

ஓகே. வீட்டுக்கு போகவேண்டியது தானே ?

ஆக்சுவலி ஐ ஹாவ் சம் பர்சனல் ஒர்க் சார்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

ஒருமாதிரி முறைத்தபடி அவர் என் அறையில் இருந்து வெளியேற. மறுபடியும் கூகிள். வெறும் ஆன் மரி என்று தேடினால் கிடைப்பாளா ? குமாரசாமிக்கு எப்படி அன்னா மரியான்னு ஒரு மகள் இருக்கமுடியும் ?

'டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா' அலைபேசி துடித்தது.

என்னங்க, எவ்ளோ நேரம் ஆகும் வர ? எதுவும் பெரிசா வேலை இல்லைன்னு தானே சொன்னீங்க ?

இல்லம்மா, க்ளையண்ட் மீட்டிங்ல என்னை இழுத்துவிட்டுட்டாங்க.

சரி எப்ப ?

ஹாபனவர் ஆகும். பை.

அரைமணி நேரத்தில் எதுவும் முடியாமல், சரி நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம் என்று க்ரிஷிடம் சேட்டில் சொல்லிவிட்டு, கிளம்பினேன்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

காலையில் வீட்டில் காபியுடன் கணிப்பொறியை திறந்தவுடன், ஏங்க ஷேர்ட் அயர்ண் பண்ணலாம் இல்லையா ? காலையில கம்யூட்டர் திறக்கலைன்னா இந்த மனுசனுக்கு ஆவாதே ? என்ற வசவுகளுடன் கூகிள்.

முதல் பெயர் இரண்டு பெயராக இருந்தால், அதாவது அன்-மரியா என்று இருந்தால் நடுவில் ஒரு சிறிய கோடு விட்டு எழுதுவார்கள். ஒரு போரம்மில் பார்த்திருக்கிறேன். அது தூங்கும்போது நியாபகம் வந்து தொலைந்தது. பொதுவாக தூங்கும்போது எதாவது சிந்தனைகள் ஓடிக்கொண்டேயிருக்கும்..

இந்தாங்க ஷர்ட். அயண்ர் பண்றீங்களா ? இல்லைன்னா நான் அயர்ன் பண்றேன், நீங்க உப்புமா பண்ணுங்க.

இல்லை நான் அயர்ன் பண்றேன்.

ஈவ்னிங் மீட்டிங் இருக்கு, ஷாப்பிங் போகனும்னு சொன்னியே ?

இல்லை நான் நடந்து போய்ட்டு வந்திடறேன்.

ஓக்கே தேங்ஸ் மா. மதியம் மெக்டொனால்ட்ஸ்ல க்ரிஷ் ஆபீஸ் ஐடி கார்டை தொலைச்சுட்டான். உனக்கு தான் தெரியுமே ? ஐடி கார்ட் இன்ஸர்ட் பண்ணலைன்னா வெளியில வர முடியாது. அதனால அவன் வேலை முடிஞ்சு வரவரைக்கும் வெயிட் பண்ணனும். ஸாரிடா...

ஓக்கே பரவால்லைங்க. கேரி ஆன்...

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

அலுவலகம், மீட்டிங், க்ரிஷ்ஷுடன் லஞ்ச், அதன் பிறகு லேப்பில் கொஞ்சம் வேலை, அப்புறம் ஒரு டாக்குமெண்ட் சப்மிஷன். மாலையில் வீட்டில்..

ஏங்க ? ஏன் என்னிடம் சொல்லலை ?

என்ன சொல்லலை ?

மதியம் மெக்டொனால்ஸ்ட் போயிருந்தீங்களா அந்த லூசு க்ரிஷ்ஷோட ?

ஹி ஹி. உன் கிட்ட சொல்லாம போனதுக்கு சாரி. அங்க இருக்க யாரையும் நான் சத்தியமா சைட் அடிக்கலை.

உளறாதீங்க. நான் அதை கேட்கலை. அந்த லூசு ஆபீஸ் ஐடியை அங்கேயே விட்டுட்டு வந்திருச்சு. அங்க பார்ட் டைமா வொர்க் பண்ற ஒரு ஸ்கூல் பொண்ணு வந்து கொடுத்திட்டு போனா.

ஓ. வெரிகுட். ஆனா நீங்க திரும்ப போனா, அந்த கார்டை கொண்டுவந்து கொடுத்ததுக்கு அவளுக்கு ட்ரீட் தரனுமாம்.

சரி, தந்திட்டா போச்சு. அவ பேரு என்ன ?

அன்னா மரியா குமாரசாமி.....

என்னாது ???

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Tuesday, October 27, 2009

அவசர கல்வி உதவி கோரல்

இலங்கையில் நடைபெற்ற கோரமான உள்நாட்டு யுத்தம் காரணமாக மிக கடுமையாக பாதிக்கப்பட்டு தம் உறவுகளையும் , உடமைகளையும் இழந்து வாழ்வதற்கு எதுவுமற்ற நிலையில் இடம்பெயர்ந்தோருக்கான நலன்புரி நிலையங்களில் இருந்துவந்த வன்னி , முல்லைத்தீவு , கிளிநொச்சி மாவட்டடங்களை சேர்ந்த மாணவர்கள் மீண்டும் கல்வியை தொடர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது .

எனினும் தற்போதைய நிலையில் மேற்படி மாணவர்கள் தமது கல்வியை தொடர்வதற்கான எந்த ஒரு அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் உள்ளனர் . மேற்படி மாணவர்களின் குடும்பங்கள் நீண்ட காலமாக நலன்புரி நிலையங்களிலேயே தொடர்ந்தும் இருந்து வருவதினால் இம்மாணவர்கள் தமது அன்றாட வாழ்வுக்கே ஏனையோரிடம் கையேந்தி வாழ்கின்றனர் . மாணவர்கள் தமது கல்வியை தொடர்வதற்கான ஊக்கம் இருந்தும் போதிய வசதி இல்லாத காரணத்தினால் மன அழுத்ததிற்கு உள்ளான நிலையில் உள்ளனர் .

மேலும் மேற்படி மாவட்டங்களில் இருந்து தென்பகுதிகளில் உள்ள பல்கலை கழகங்களுக்கு
தெரிவான மாணவர்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது . இந்த மாணவர்கள் தமது கல்வியை தொடர மாதாந்தம் குறைந்த பட்சம் 10,000 ரூபா செலவாகிறது . எனினும் அவர்களின் பெற்றோர்கள் நலன்புரி நிலையங்களில் இருக்கும் நிலையில் , வேறு எவரும் உதவி செய்யாத நிலையில் எமது மாணவர்களுக்கு பல்கலைகழக பட்டப் படிப்பினை தொடர முடியாத நிலையில் உள்ளனர் .

எனவேதான் இந்த மாணவர்கள் தம்மிடமுள்ள ஒரே உடமையான கல்வியை தொடர்ந்து கட்டி எழுப்பவும் சிதைந்துபோன எமது சமுகத்தை புதுவாழ்வு பெறச்செய்யவும் தமக்கான அவசர நிதி உதவியினை தம் புலம்பெயர்ந்த தமிழ் உறவுகளிடம் இருந்து மிகவும் வேதனையுடன் கோரி நிற்கின்றனர் .

இவ் மாணவர்களுக்கான நிதி உதவியானது அவர்களின் பல்கலைகழக கல்வியினை பூர்த்தி செய்யும் காலம் வரை வழங்கப்படுதல் வேண்டும் .

இந்த நிலையில் சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பானது முதல் கட்டமாக 217 பாதிக்கப்பட்ட யாழ் பல்கலைகழக மாணவர்களுக்கு தலா 3000 ரூபா வீதம் அவசர நிதி உதவியினை கடந்த வாரம் வழங்கி உள்ளனர் .

மேலும் கிழக்குப் பல்கலைகழகம் , பேராதனை , மொரட்டுவ , ஜெயவர்த்தனபுர , கொழும்பு
பல்கலைகழகங்களில் தமது பட்டப் படிப்பை ஆரம்பித்திருக்கும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பினர் தலா 5000 ரூபா வீதம் 76 மாணவர்களுக்கு கடந்த வாரம் வழங்கி உள்ளனர் .

ஆனந்தராசா இளங்கோவின் இருதய சத்திர சிகிச்சைக்கான முழு உதவிகளையும் சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பே மேற்கொண்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது .

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தமது பல்கலைகழக கல்வியினை தொடர முடியாமல் தவிக்கும் 900 க்கும் மேற்பட்ட மாணவர்களின் விபரங்களை சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பினர் சேகரித்து உள்ளனர் .

இவர்களுக்கான படிப்புச் செலவுக்கான நிதி உதவியினை சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பினர் வெளிநாட்டு வாழ் தமிழ் மக்களிடம் கோரி நிற்கின்றனர் .

ஒவ்வொரு குடும்பங்களும் ஒரு மாணவனை பொறுப்பேற்பதன் மூலமாகவும் ஒவ்வொரு பொது அமைப்புக்கள் , கம்பனிகள் , கடைகள் போன்றன சில மாணவர்களை பொறுப்பேற்பதன் மூலமும் இந்த மாணவர்களின் தொடர்ச்சியான
பல்கலைகழக கல்விக்கு வழி வகுக்கலாம்.

பல்கலைகழக மாணவர்களுக்கு உதவிசெய்யும் வழிமுறைகள் .

ஒரு மாணவருக்கு மாதாந்தம் 5000 - 6000 ரூபா . அண்ணளவாக 50 டாலர்ஸ் / 30 பவுண்ட்ஸ் / 35 யுரோ உதவித்தொகை.

ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்பலாம் அல்லது 3 மாதம் , 6 மாதம் , ஒரு வருடத்திற்கான பணத்தினை சேர்த்து அனுப்பலாம் .

உதவி செய்ய விரும்புபவர்கள் குறைந்தது ஒரு வருடத்துக்கேனும் உதவி செய்ய வேண்டும் .

வங்கி விபரம்

Name : ITSO ( International Tamil Students Organization )
Bank : HSBC
Branch : Stanmore
Branch Sort Code : 40 - 43 - 46
Account Number : 31434225

SWIFT Code : MIDLGB22

IBAN : GBO3MIDL40434631434225


கணக்கறிக்கை

ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை வெளியிடப்படும்.


பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் பின்வரும் இலக்கத்தின் மூலமாக எம்மை தொடர்பு கொள்ளலாம் .

சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பு
பிரித்தானியா
தொடர்பு எண் : +447551449606
மின்னஞ்சல் முகவரி : itsonet@hotmail.co.uk

http://www.facebook.com/itsoonline

Monday, October 26, 2009

செந்தழல் ரவிக்கு பன்றிக்காய்ச்சல்

கவுஜை

எதிரித்தோழர் ஒருவர் ஒரு வரிக்கு ஒரு வார்த்தை என இயற்றிய கவிதை.

ஆஹா..
ஒரு
பன்றிக்கே
பன்றிக்காய்ச்சல். !!!!
ஆச்சர்யக்குறிஈஈ..

டயலாக்

இம்சை அரசன் படத்தில் புலிகேசி :

பன்றிக்கு நன்றி சொல்லி
குன்றின் மீது ஏறி நின்றால்
வென்றுவிடலாம் குலசேகரனை..!!

தற்காப்பு



நக்கல்



H1N1 வைரஸ்



மற்றபடி பதிவுக்கு வருவோம். தலைப்பில் கடைசி வார்த்தை விடுபட்டுள்ளது. "செந்தழல் ரவிக்கு பன்றிக்காய்ச்சல் வாக்ஸீன்". என்று இருக்கவேண்டும். வியாழக்கிழமை பண்ணிரண்டு மணியில் இருந்து இரண்டு மணிக்குள் மருத்துவமனைக்கு வந்து வாக்ஸினேஷன் பெற்றுக்கொள்ளும்படி என்னுடைய அரசு மருத்துவர் இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

மொக்கையான நன்பர்கள், ஏமாந்த எதிரிகள் (ஒரு 30 செகண்டாவது ஜாலியா இருந்ததா இல்லையா), எல்லாரும் ஆதரவோ எதிர்ப்போ, ஒரு வாக்கை செலுத்தவும். ஜெயபாரதன் அவர்களின் பதிவுக்கான சுட்டி இடப்புறம் உண்டு. வாசிக்கவும். நன்றி.

Friday, October 23, 2009

வீக் எண்ட் ஆங்கில பாடல்கள்

ரசிக்கும் & ரசிக்கவைக்கும் சில பாடல்கள்..

லம்பாடா கவோமா



மிஸ்டர் ப்ரெசிடெண்ட்



சாட்டர்டே நைட்



மெக்கரீனா



லெஸ் கேச்சப் அசரஜே



ஹிப்ஸ் டோண்ட் லை (வீடியோவை எம்பிட் செய்ய முடியவில்லை)

http://www.youtube.com/watch?v=FLQgjEhH400

பாப் மார்லி

http://www.youtube.com/watch?v=tbPEFyAbwqE (வீடியோவை எம்பிட் செய்ய முடியவில்லை)

ஹேப்பி பீட் டேன்ஸ் மட்டும்




இன்னைய கணக்கு முடிஞ்சது. முடிஞ்சா ஓட்டு போடுங்க. இல்லைன்னா வேற எதாவது நல்ல பதிவுக்கு போடுங்க. ஜெயபாரதன் பதிவுக்கு லிங்க் இருக்கு பக்கத்தில, அதில் போய் நல்ல கண்டண்ட் படிச்சுக்கோங்க.)

Wednesday, October 21, 2009

கார்த்திக் அம்மா....

2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் இறுதி பகுதி என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. மறக்க முயன்று தோற்ற நிகழ்வு. சரியாக நினைவில்லை என்றால் சந்தோஷமே.

அப்போது ஒரு நாளைக்கு அரைபாக்கெட் கிங்ஸ் வாங்குவேன். ஆங். இப்போது விட்டாச்சு சிகரெட். ஒருவருடமாகிறது புகைத்து. மீண்டும் புகைக்க விருப்பமில்லை. மனைவிக்கு கொடுத்த உறுதிமொழி மூலம் இது சாத்தியமாயிற்று. ஏற்கனவே புகைப்பதை விட்டுவிட பல முறை எடுத்த முயற்சிகள் தோல்விகளில் முடிந்ததை தனியாக எழுதவேண்டும்.

எங்கே விட்டேன் ? புகை. ஆம். அலுவலகம் வந்து பார்த்தால் சிகரெட் தீர்ந்துவிட்டிருந்தது. நான் தங்கியிருந்த பேச்சுலர் வீட்டில் ஒரே புகைவண்டிகள். காலையில் காபிக்கு பிறகு ஒரு சிகரெட் தேடினால் பாக்கெட் காலி.

டெவலப்மெண்டில் இருக்கும் விஜய ஷங்கர் சிங் வில்ஸ். இருந்தாலும் பரவாயில்லையே என்று அவனை தேடினால் அவன் ஒரு மீட்டிங்கில். மஹிபால் புகைக்கமாட்டான். இருந்தாலும் எப்போது கூப்பிட்டாலும் கம்பெனி தருவான். அவன் சீட்டில் அவனை ஆளை காணவில்லை.

இந்த பதிவு கொஞ்சம் குழப்பமாயிருக்கலாம் உங்களுக்கு. அப்படியிருந்தால் நேரத்தை வீணடிக்காமல் வேறு உபயோகமானதை தேடி படிக்கவும். பெங்களூர் இன்னர் ரிங் ரோடு என்று உண்டு. டெல் பில்டிங், அதன் பிறகு ஏஎன்ஸட் அப்புறம் எல்ஜி, மைக்ரோசாப்ட், ஐபிஎம், டார்கெட். எதிர்புறம் சாஸ்கென். அப்போது டெல் பில்டிங் முன்புறம் பீப்புள் சாப்ட் அல்லது ஹனிவெல் இருந்தது என்று நினைக்கிறேன்.

சாலை அருகே, ஏதோ கன்ஸ்ட்ரக்ஷனும் நடந்துகொண்டிருந்தது. இப்போது புதிதாக வலது புறம், இல்லை இடது புறம். ம்ஹும். கோரமங்களாவில் இருந்து வரும்போது இடதுபுறம், டொம்ளூர் பாலம் வழியாக வந்தால் வலதுபுறம். அதன் முன் ஹுண்டாய் ஷோரும். அங்கே மூன்று புறமும் தட்டி, அப்புறம் நடுவில் ஒரு டேபிளுடன் சிகரெட் விற்பார்கள்.

சாஸ்கெனில் இருந்து நடந்துவந்தேன். இதற்கெல்லாமா பைக் எடுப்பார்கள் ? வெய்யில் கொஞ்சம் அதிகம். பதினோரு மணி வெய்யிலில் புகை பிடிக்க எரிச்சலாகத்தான் இருக்கும். சிகரெட் வாங்கிக்கொண்டு ஹுண்டாய் ஊழியர்கள் வழக்கமாக பைக் நிறுத்தும் இடத்தில் இருக்கும் பெஞ்ச் போவதாக ப்ளான். நின்று கொண்டோ அல்லது வெய்யிலிலோ புகைப்பது பிடிக்காது. எங்காவது உட்கார்ந்துகொள்ளவேண்டும்..

______________ XXXX _______________


2008 ஆம் ஆண்டு. கார்த்திக் அம்மா மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். அவரது இளையமகன் செந்தில் வேலைவாய்ப்பு சம்பந்தமாக. தொலைபேசி எண் கேட்டிருந்தார்கள் கொடுத்தேன்..

கார்த்திக் அம்மாவின் கணவர் 2000 ஆம் ஆண்டு லுகேமியா அல்லது இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகம் பெருகி பெருகி உயிரை உருக்கிவிடும் நோய்க்கு ஆளாகி மரணமடைந்துவிட்டார். ரங்கராஜன் குமாரமங்கலத்துக்கு வந்ததே, அதே நோய்.

குணப்படுத்தவே முடியாதாமே ? அப்பல்லோ மருத்துவமனையில் வைத்து வைத்தியம் பார்த்திருந்தார்களாம். மேட்டூரில் வேலை பார்த்தவர் என்றும் சொன்னார்கள். கார்த்திக் அம்மாவின் தம்பி சேலத்தில் வழக்கறிஞர்.


______________ XXXX _______________


பொதுவாக இண்டர்மீடியட் ரிங் ரோட்டில் காலை மற்றும் மாலையில் மட்டுமே நல்ல ட்ராபிக் இருக்கும். அதன் பிறகு பதினோறு மணியில் இருந்து மதியம் மூன்று வரை ட்ராபிக் பெரிதாக இராது. அவ்வப்போது வரும் ஆட்டோக்கள் பைக்குகள். கால்செண்டர் ட்ராபிக் துவங்கி விட்டால் பம்பர் டு பம்பர் ட்ராபிக் இருக்கும்.

அங்கே சிகரெட் கடையை தேடிப்போன எனக்கு அதிர்ச்சி. கடையை காணோம். சாலையின் இருமருங்கிலும் பார்த்தால், கடை கிட்டத்தட்ட இருநூறு மீட்டர் அளவுக்கு இண்டர்மீடியட் ரிங் ரோட்டின் பக்கம் நகர்ந்துவிட்டிருந்தது.

பெங்களூர் அளவுக்கு குழப்பமான ட்ராபிக் போலீஸை எங்கும் காணமுடியாது. ஏன் ஒன் வே வைக்கிறார்கள், ஏன் எடுக்கிறார்கள் என்று தெரியாது. அங்கே இண்டர்மீடியட் ரோட்டின் முதல் யூ டர்ண் எதிர்புறம் ஒரு விளம்பர போர்டு வைப்பதற்கான பணிகள் ஆரம்பித்திருந்தது. அதன் அருகே கடை. ஒன்று கடை புதிதாக இருக்கவேண்டும் அல்லது கடையை நகர்த்தியிருக்கவேண்டும்..

______________ XXXX _______________


கார்த்திக் அம்மாவிடம் பேசியபோது ஒரு விஷயம் தெரிந்தது. அவரது மகன் கார்த்திகேயன், பொன்னியின் செல்வன் என்ற பெயரில் வலைபதிந்துவந்ததும், அவர் விஜய நகரம் என்ற பெயரில் வலைப்பதிவு வைத்திருந்தது. அதன் பிறகு கார்த்திக் பற்றிய ஒரு அதிர்ச்சியான உண்மையை சொன்னார். கார்த்திக், பெங்களூரில் நடந்த ஒரு சாலை விபத்தில் அகால மரணமடைந்துவிட்டார் என்பது தான் அது. அந்த அதிர்ச்சியில் இருந்து அவர்கள் மீளவில்லை, மன ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிந்தது.

அதன் பிறகு அலுவலகத்தில் இருந்த தமிழ் பையன் பாலுவையும் அவர்களுக்கு அறிமுகம் செய்தேன். காரணம் பாலு ஒரு நல்ல லிஸனர். உங்களது பிரச்சினை எதுவாக இருந்தாலும் பாலுவிடம் சொல்லி ஆறுதல் தேடலாம். நாம் அழுதால் அவனும் அழும் மனது அவனுக்கு.

கொஞ்ச நாளில் அய்யோ முடியலை என்று F1 அழுத்தினான் பாலு. அவர்கள் ரொம்பவும் மனம் உடைந்துள்ளார்கள்டா. நீ சென்று பார்த்துவா என்றான். சென்னைக்கு டிக்கெட் புக் செய்தேன். வடபழனி தாண்டி, ஆலமரம் ஸ்டாப்பிங் தாண்டி ஆற்காட்டு ரோட்டில் நேராக போய் அவர்கள் வீட்டை கண்டுபிடித்தேன்.

சாப்பிடாமலேயே உயிர்வாழ்கிறார்கள் போல கண்ணில் உயிரை வைத்துக்கொண்டு, வீடெங்கும் கார்த்திக் படம், எப்போதும் கார்த்திக் புரணம். உங்கள் இளைய மகன் செந்திலையும் கவனியுங்க என்றால் அவர்களுக்கு புரியவில்லை. எப்போதும் கார்த்திக் கார்த்திக் என்று இழந்துவிட்டவரை நினைத்து அழவேண்டாம், இளைய மகனை வழிநடத்தும் பொறுப்பு உங்களுக்கு உண்டு என்று என்னால் ஆனவரை சொன்னேன்.

ரசம் சாதமும் ஏதோ ஒரு பொரியல், நினைவில்லை. சாப்பிட்டேன். கணிபொறியை திறந்து கார்த்திக் வலைப்பதிவு, கார்த்திக் பைக், என்றெல்லாம் காட்டிக்கொண்டுவந்தபோது கார்த்திக்கின் ஒரு குறிப்பிட்ட படத்தை பார்த்தவுடன் நான் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். அவன் இவனா ? அப்போது தான் கார்த்திக் இறந்த தேதியை கேட்டேன். ஆகஸ்ட் 26. என்னுடைய கைகள் லேசாக உதற ஆரம்பித்தன. கொஞ்சம் நேரம் மேலோட்டமாக வழமைபோல பேசிக்கொண்டிருந்துவிட்டு உடல் நலனை பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு, கிளம்பினேன்.

______________ XXXX _______________


சிகரெட் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். ரோட்டில் ஆங்காங்கே க்ரீஸ். அல்லது கருப்பு திரவம். ஒழுங்காக வண்டியை பராமரிக்கமாட்டானுங்க இந்த கால்செண்டர் டிரைவருங்க. எங்கயாவது போய் இடிப்பானுங்க. ஒருமுறை நானும் என்னுடைய அப்பாவும் மஹிப்பால் ஆஸ்பிட்டல் எதிரே பைக்கில் விழுந்தோம். அல்லது எனக்கு முன்னால் போனவர் விழுந்ததால் ப்ரேக் போடமுயன்று நானும் அப்பாவும் விழுந்தோம். எனக்கு காலில் நல்ல அடி. அப்பாவுக்கு எதுவுமில்லை. அது நியாபகம் வந்து எரிச்சல்.

ஏற்கனவே கடையில் ரெண்டு பேர் சிகரெட் வாங்கிக்கொண்டிருந்தார்கள், டெல் எதிரே ஒரு பெண் சாலையை கடந்துகொண்டிருந்தாள். சிவப்பு சுரிதார். துப்பட்டா இல்லை. வெண்ணிற கார் ஒன்றும், அதை தொடர்ந்து இரண்டு மூன்று வாகனங்கள் கடந்துசென்றுகொண்டிருந்தது.கடையை சமீபித்து சில்லறையை கொடுத்து சிகரெட் வாங்கினேன். தீப்பெட்டி பாக்கெட்டிலேயே இருந்தது. பற்றவைத்து இரண்டு இழுப்பு இழுத்தேன். சுமாரான ட்ராபிக் இருந்தது. திரும்ப போக எத்தனித்தேன்.

டமார் என்று ஒரு சத்தம். "அம்மா" என்று சத்தம் கேட்டது. சாலையின் சென்றுகொண்டிருந்த ஒருவர் எகிறிவிட்டார். க்ரீஸ் ஆக இருக்கவேண்டும். எவ்வளவு சிறப்பாக ஓட்டினாலும் க்ரீஸ் தன்னுடைய வேலையை காட்டிவிடுகிறது. நானும் இரண்டு மூன்று பேரும் ஓடினோம். சில வாகனங்கள் ஜாக்கிரதையாக கடந்து சென்றன, கொஞ்சம் தள்ளி ரெண்டு மூன்று பேர் நிறுத்தினார்கள், சமீபித்து பார்த்தேன், சின்ன பையன். பள்ளிக்கூடத்து பையன் போல இருந்தான். தமிழன் போலிருக்கிறது. வலிக்கும்போது அம்மா என்று கத்துபவன் வேறு யாராயிருக்கமுடியும். உதறிக்கொண்டிருந்தான். அவன் விழுந்திருந்த இடத்தில் கற்கள். எங்கேயும் ரத்தத்தை பார்க்கமுடியவில்லை.

சிகரெட்டை அனிச்சை செயலாக எறிந்துவிட்டு ஓடிவந்திருக்கிறேன். கற்களின் மேல் கிடக்கிறானே என்று பேண்ட் அழுக்காகிவிடுமோ என்று நினைத்துக்கொண்டே தரையில் அமர்த்து மடியில் எடுத்து போட்டேன். நீலு நீலு என்று யாரோ கத்தினார்கள். தெலுங்கா கன்னடமா ? சாலையை கடந்துகொண்டிருந்த பெண்ணும் வந்துவிட்டார். அவர் தன்னுடைய பையில் இருந்து தன்னுடைய பாட்டிலை எடுத்தார். ஏழெட்டு வாகனங்கள் நின்றுவிட்டன. நிமிடத்தில் நிறையபேர் வந்துவிட்டார்கள்.

பையன் மடியில் இருந்தான், அவனுக்குத்தான் ஆக்ஸிடெண்டா என்பது போல கண்கள் மிக சாந்தமாக இருந்தது. ஏதோ பேச முயன்றான். அம்மா என்று சொல்ல முயல்கிறான் போல தெரிந்தது. தண்ணீர் கொடுக்க முயன்றபோது தண்ணீர் வழிந்து என்னுடைய பேண்டில் ஊற்றியது. ஹனிவெல் டேக் போட்ட ஒருவர், அவரது ஐடி பாக்கெட்டில் இருந்தது, ஹாஸ்பிட்டல் கொண்டுபோகலாம் என்றார்.

கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலா, மஹிப்பாலா என்று யாரோ சத்தமாக கேட்டுக்கொண்டிருந்தார்கள், ஹீ ஈஸ் எ டெல் எம்ப்ளாயீ என்று யாரோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். மாநிறத்துக்கு கொஞ்சம் கம்மியான பையன். என்னுடைய கைகளை இறுகப்பிடித்தான், பிறகு திடீரென தளர்துவிட்டது. முப்பது வினாடிகளில் ஒருமுறை அதிர்ந்து அடங்கினான். பையனை யாரோ தூக்கினார்கள், ஆட்டோவில் கொண்டுபோனார்களா அல்லது காரிலா என்று தெரியவில்லை. எனக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. பையன் என்னுடைய மடியில் கிடக்கும்போது இரண்டு வினாடிகள் ஒரு திடீர் சிலிர்ப்பு என்னுடைய உடலில் வந்து ஆட்கொண்டது. அதன் பின் பையன் கண்கள் மூடின. உயிர் பிரிந்துவிட்டதோ என்ற சந்தேகம். எங்கேயும் ரத்தம் வரவில்லையே ? கூட்டம் கலைய ஆரம்பித்தது, ட்ராபிக் போலீஸ் வந்தார்கள், பைக் ஓரமாக கிடத்தப்பட்டது.

ஹீ வாஸ் ஹோல்டிங் தட் பர்ஸன், என்று ஒரு ஹிந்திக்காரன்

டூ யூ நோ ஹிம் ?

நோ. ஹூ டேக்கன் ஹிம் ? ஆக்சுவல்லி ஐ காட் கிட்டினெஸ்.

ஐ திங்க் ஹீ வில் பி ஆல்ரைட். தேர் ஈஸ் நோ ப்ளட். ஹீ மே வேக் அப் இன் த ஹாஸ்பிட்டல். கேர் பார் எ ஸ்மோக் ? என்னுடன் சிகரெட் வாங்கிக்கொண்டிருந்தவர்.

நோ ஐ ஹாவ்.

ஹுண்டாய் ஷோரூம் நோக்கி நடந்தேன், ஏன் என்று தெரியவில்லை, உடல் சூடாகிவிட்டிருந்தது. ரெண்டு சிகரெட் தொடர்ந்து புகைத்தேன். வழக்கமாக விஜய் ஷங்கர் சிங் அப்படி புகைக்கும்போது கன்னாபின்னாவென திட்டுவேன்.

விஜய் மொபைலில் கூப்பிட்டான், ஹேய் டேமிட், வேர் ஆர் யூ ?

ஐயாம் இன் ஹுண்டாய் ஷோரும் மேன். ஐயம் நாட் பீலிங் வெல். கேன் யூ இன்பார்ம் என்.கே.ஜி ?

அடுத்தநாள் அலுவலகம் வந்தபோது, சற்றே கசங்கிய, டெல் நிறுவனத்தில் இருந்து வந்திருந்த ஒரு பொக்கே ஒன்று இருந்தது. ரிசப்ஷனில் விசாரித்தேன். ஆக்சுவலி வீ ஹாட் ரிசீவ்ட் ப்ரம் ஹனிவெல் என்றார்கள். அந்த தம்பியை தூக்கிய ஹனிவெல் நன்பர் என்னுடைய ஐடி கார்டை பார்த்து எனக்கு பார்வெர்ட் செய்திருக்கக்கூடும்

அதன் பின் எனக்கு கிட்டத்தட்ட தினமும் ஒற்றைத்தலைவலி இருந்தது. உயிர் போவது போல விண் விண் என்று வலிக்கும். பகல் நேரத்தில். வேலை எதுவும் செய்யாமல் நாட் பீலிங் வெல் என்று ஆபீசில் உள்ள பெட் ரூம் போன்ற அமைப்பில் போய் படுத்துக்கொள்வேன். அப்ரைசல் கட். கம்பெனி மாற்றினேன். ஏதாவது ஆன்சைட் கிடைக்குமா என்று கேட்டு சிட்னி, ஆஸ்திரேலியாவில் போய் ஆறுமாதம் இருந்தேன். ஆஸ்திரேலியாவிலும் ஒற்றைத்தலைவலி தொடர்ந்தது. திரும்ப இந்தியா வந்து எல்.ஜியில் இண்டர்வியூ. ஹெச் ஆரிடம் கேட்டேன். வேர் ஈஸ் த ஆபீஸ் லொக்கேஷன் மேடம் ?

இட்ஸ் இன் இண்டர்மீடியட் ரிங் ரோட். டூ யூ நோ டெல் ?

______________ XXXX _______________


கார்த்திக் அம்மா, கார்த்திக்கின் வலைப்பதிவை தொடர்கிறார்கள். பொன்னியின் செல்வன் குழுமம் கூட இருக்கிறது என்று கேள்வி. விஜயநகரம் என்ற பெயரில் உள்ளது வலைப்பதிவு.

இந்த சம்பவத்துக்கு பிறகு உறவினர்கள் நன்பர்கள் என்று யார் சொல்வதையும் கேட்பதில்லை, தான் நினைப்பதை தான் செய்வேன் என்று பிடிவாதம். சேலத்தில் உள்ள தம்பியையும் அதிகம் தொடர்புகொள்வதில்லை என்று சொன்னார்கள். இரண்டாவது மகன் கேட்கும் பணத்தை கொடுத்துவிடுகிறேன், அவன் தன்னுடைய நன்பர்களுடன் இருந்துகொள்கிறான் என்றார்கள்.

கார்த்திக் கார்த்திக் என்று இறந்துவிட்டவரை நினைத்து பைத்தியம் போல் இருந்தால் எப்படி இரண்டாவது மகன் ஒட்டுவான் ?

______________ XXXX _______________



கார்த்திக்கின் வலைப்பதிவு மற்றும் சிந்தனையோட்டங்களை பின்னாளின் படித்தேன். பெரிய சிந்தனையாளன். தமிழ்ச்சூழல் இவனை இழந்துவிட்டது. மல்ட்டிப்புள் டேலண்டட். இவன் இங்கே இருக்கவேண்டியவனே இல்லை. எங்கோ இருக்கவேண்டியவன்.

அதனால் தான் போய்விட்டானோ ? இறப்புக்கு பின் உயிர் இங்கேயே இருக்குமா ? உடல் தன்னுடைய இயக்கத்தை நிறுத்திவிட்டபின் உயிர் அமைதியடைகிறது. கணிப்பொறியை ஷட்டவுன் செய்தவுடன் அதன் இயக்கத்தை அது நிறுத்திக்கொள்வது போல. ஆனால் கணிப்பொறி அங்கேயேதான் இருக்கிறது. ம்ஹும். புரியவில்லை. பொதுவாக நான் கடவுளை நம்புவதில்லை. ஆனால் அந்த உயிர் துடித்து வெளியேறியபோது என்னுடைய கைகள் சில்லிட்டு உடல் சிலிர்ப்படைந்ததே ? அதை விளக்கமுடியுமா ? உங்களில் யார் மடியிலாவது ஒரு உயிர் பிரிந்ததுண்டா ? அவன் அந்தம்மா மடியிலேயே போயிருக்கலாம். இருந்தாலும் கார்த்திக் அம்மாவின் மன உறுதி ? இரும்பு போல இருக்கிறது. கார்த்திக் கற்றுக்கொடுத்திருப்பான். அவன் செய்வான். அவன் இன்னும் இருப்பதாகவே அவர் நம்புகிறார். இருக்கலாம். அப்படி இருந்தால் அவனுக்கு பிறந்தநாள் கொண்டாடும்போது சொல்லிவிடவும். நான் வாழ்த்து அனுப்புகிறேன்...!!!

______________ XXXX _______________

மு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது


இந்திய அரசின் செம்மொழி நிறுவனம் சங்க இலக்கியங்களில் நல்ல புலமையும் ஆராய்ச்சித் திறனும் கொண்ட இளைஞர்களுக்கு "இளம் அறிஞர் விருது" அறிவித்துள்ளது.

இவ்விருது [^]க்கு உரியவராகப் புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் மு.இளங்கோவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் சங்க இலக்கியம்,இலக்கணம் குறித்து எழுதியுள்ள நூல்கள்,ஆய்வுக்கட்டுரைகள் குறிப்பிடத் தகுந்தன. சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசைக்குறிப்புகளை விரித்துரைக்கும் ஆய்வுகளைச் செய்துள்ளார்.

முனைவர் மு.இளங்கோவன் சங்க இலக்கியத்தில் நல்ல பயிற்சியுடையவர் என்பதுடன் சங்க இலக்கிய நடையில் மாணவப் பருவத்திலேயே பாடல் எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார்.

மாணவராற்றுப்படை(1990) அச்சக ஆற்றுப்படை(1992) என்னும் நூலும், அரங்கேறும் சிலம்புகள் (2004) என்ற மரபுக்கவிதை நூலும் இதற்குச் சான்றுகளாகும்.இவர் எழுதியுள்ள பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலக அளவில் புகழ் பெற்றனவாகும்.

சங்க இலக்கியத்தில் ஒன்றான மலைபடுகடாம் நூலில் இடம்பெறும் நன்னனின் கோட்டையை, நவிரமலையைக் கண்டுபிடித்துப் படத்துடன் இதழ்களிலிலும் இணையத்திலும் வெளியிட்டதால் வெளிநாட்டு அறிஞர்கள் இக்கட்டுரையை உயர்வாக மதிக்கின்றனர். சங்க காலப் பாரியின் நண்பர் கபிலர் உயிர் துறந்த இடம் தென் பெண்ணையாற்றங்கரையில் உள்ள கபிலர் குன்று என்பதையும் வெளியுலகிற்குக் கொண்டு வந்தார்.

சங்க இலக்கியத்தில் இடம்பெறும் இசையைப் பற்றி முனைவர் வீ.ப.கா.சுந்தரம் அவர்களுடன் ஆராய்ச்சி செய்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குத் தமிழிசைக் கலைக்களஞ்சியம் நான்காம் தொகுதி உருவாக்கி வழங்கிய பெரும் பணியில் ஈடுப்பட்டவர்.

சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் கூத்து, இசை பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரை வரைந்தவர். தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் இவற்றின் முதற் பதிப்புகளை மின்னூலாக்கி இணையத்தில் வழங்கும் பெரும்பணியில் ஈடுபட்டுள்ளவர்.

சங்க இலக்கியப் புலவர்கள்,சங்க இலக்கிய ஆய்வில் ஈடுபட்ட அறிஞர்களின் வாழ்க்கையை இணையத்தில் ஒருங்குகுறி வடிவில் வெளியிட்டு வருகிறார். அவ்வகையில் சங்க இலக்கிய ஆய்விலும் பதிப்பிலும் ஈடுப்பட்ட உ.வே.சாமிநாத ஐயர்,பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், தி.வே.கோபாலையர், வீ.ப.கா. சுந்தரம், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார், பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் உள்ளிட்டவர்களின் வாழ்க்கை வரலாற்றை இணையத்தில் வெளியிட்டவர்.

சங்க இலக்கிய ஆய்வுகளை இணையம் வழியாக அடுத்த கட்டத்திற்கு உலக அளவில் எடுத்துச் செல்பவர் மு.இளங்கோவன். எனவே இவர் ஆய்வு முயற்சிகளை இலண்டன் கோல்ட்சுமிது பல்கலைக்கழகம்,மலேசியா பல்கலைக்கழகம், புத்ரா பல்கலைக்கழகம்(மலேசியா), சிங்கப்பூர் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைகழகம், இலங்கை [^] யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்அறிஞர்கள் பாராட்டி வருகின்றனர்.

இது தவிர உலக அளவில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் மு.இளங்கோவனின் இலக்கியம்,இலக்கணத்தை இணையத்தில் ஏற்றும் தமிழ் இணையப் பணியைப் பாராட்டி ஊக்கப்படுத்தி வருகின்றனர். இவர்களுள் நாசா விண்வெளி ஆய்வுமையத்தின் பொறியாளரும் தமிழறிஞருமான நா.கணேசன், தமிழமணம் முனைவர் சொ.சங்கரபாண்டி, தமிழ் மரபு அறக்கட்டளை ந.கண்ணன் (தென்கொரியா) சுபா(செர்மனி), துபாயில் உள்ள தமிழ்நாடன், சுவிட்சர்லாந்தில் உள்ள நளாயினி உள்ளிட்டவர்கள் முனைவர் மு.இளங்கோவனின் சங்க இலக்கிய ஆராய்ச்சிப் பணிக்கு ஊக்கமூட்டி வருபவர்கள்.

மு.இளங்கோவன் இதுவரை 18 நூல்களை வெளியிட்டுள்ளார். இவற்றுள் இரண்டு நூல்கள் இவர் பதிப்பித்த நூல்களாகும். உலக அளவில் நடைபெற்ற கருத்தரங்குகளில் ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள் படைத்துள்ளார். தேசிய அளவில் 42 கட்டுரைகளும், இலக்கிய இதழ்களில் 79 கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

தமிழகத்தின் முன்னணி ஏடுகளான தினமணி, தமிழ் ஓசை, செந்தமிழ்ச்செல்வி, சிந்தனையாளன், கண்ணியம் உள்ளிட்ட ஏடுளிலும் திண்ணை, தட்ஸ்தமிழ் [^], தமிழ்க்காவல், மின்தமிழ், பதிவுகள், வார்ப்பு உள்ளிட்ட இணைய இதழ்களிலும் எழுதிவருபவர்.

சிங்கப்பூர், மலேசிய நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்குகளில் கலந்து கொண்டு கட்டுரை படித்து உலக அளவில் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை, முதுகலை தமிழ் படித்தவர். புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்ட ஆய்வினை முடித்தவர். முனைவர் பட்ட ஆய்வினைத் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் "பாரதிதாசன் பரம்பரை" என்ற தலைப்பில் நிகழ்த்தி முனைவர் பட்டம் பெற்றவர்.

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,பாரதிதாசன் பல்கலைக்கழகம், கலவை ஆதிபராசக்தி கலை,அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்தவர். இந்திய நடுவண் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப் பெற்றுப் புதுச்சேரி [^] பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் இப்பொழுது பணிபுரிந்து வருகிறார்.

இவரின் பிறந்த ஊர் கங்கைகொண்ட சோழபுரம் அருகில் உள்ள இடைக்கட்டு என்னும் சிற்றூர் ஆகும்.

Thanks to : ThatsTamil


Monday, October 19, 2009

கார்ட்டூன்ஸ். குசும்பன் மன்னிக்க.











High Quality Image, Please Click on this to Enlarge. (If you really want to do so)

திருமாவை என்னுடைய ஆதர்ச நாயகனாக இந்த ஆண்டின் ஆரம்பம்வரை நம்பியிருந்தேன். இன்றைக்கு திரும்பிப்பார்க்கையில் நான் ஏமாளி மட்டுமல்ல, ஒரு கோமாளியும் கூட என்று உணர்கிறேன். சிறுத்தைகள் திருமாவின் பல்டிகளை எப்படி தாங்கிக்கொள்கிறார்கள், ஏற்றுக்கொள்கிறார்கள் என்று வியப்பாக உள்ளது. 17ஆம் தேதி பிறந்தநாள் காணும் திருமாவுக்கு வாழ்த்துக்கள்.
..
..
..

Wednesday, October 14, 2009

எடுத்துக்காட்டு...!!



பாண்டிச்சேரியில் ஹார்ட்வேர் எஞ்சினீயராக வேலைபார்த்த காலம் தொண்ணூறுகளின் இறுதியில். பக்கத்துவீட்டுக்காரன் கம்பூட்டர் வாங்கிட்டானே என்று தானும் வாங்க ஆரம்பித்த மக்களால் எங்களுக்கும் ஓயாத வேலை. சிடியை கம்ப்யூட்டரி எப்படி போடுவதில் இருந்து, கம்பியூட்டரில் ஸ்டார்ட் பட்டன் தெரியமாட்டேங்குது வரை இரவு பதினோரு மணி வரை பம்பரமாக சுற்றவேண்டிய வேலை.

சம்பளம் என்னவோ பெரிதாக இல்லை என்றாலும், நெல்லித்தோப்பு ஆபீஸுடன் இணைந்த ஓனர் வீட்டு நான் வெஜ் சாப்பாடும், பீச் காற்று முகத்தில் அறையுமாறு அரியாங்குப்பத்தில் இருந்த கம்பெனி ஓனரின் உபயோகப்படுத்தாத பீச் கெஸ்ட் ஹவுசும், அவ்வப்போது ரத்னா தியேட்டர் எதிர் சந்தில் கிடைக்கும் பீரும் இட்லியும் புரோட்டாவுமாக காலம் ஓடிய ஓட்டம் புல்லட் ரயில்வேகம்..

காலையில் எட்டுமணிக்கு ஆரம்பிக்கும் பரபரப்பான பணிச்சுமையில் இரவு வந்து படுக்கையில் விழுவது எப்போது மீண்டும் எழும்புவது எப்போது என்றே தெரியாத வகையில் இருந்ததொரு காலம். ஆங்காங்கே சிகரெட் பட்ஸும், மூலைகளில் நிறுத்திவைக்கப்பட்ட கடைசி ரெண்டு ஸிப் குடிக்கப்படாத பீர் பாட்டில்களும், வாசலில் நிற்கும் அரச மரத்தில் இருந்து எப்போதாவது உள்ளேயே பறந்து வந்து விழும் காய்ந்த சருகுகளுமாக, அந்த அழகிய கெஸ்ட் ஹவுஸ் ஒரு குட்டி குப்பைத்தொட்டியாக்கியிருந்தது.

சோம்பலானதொரு ஞாயிற்றுக்கிழமை காலை. லட்சங்களை கொட்டி வாங்கிப்போட்ட கெஸ்ட் ஹவுஸ் எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டு போகலாம் என்று காரை செல்ப் ட்ரைவ் செய்துகொண்டு வந்து என்னுடைய ஓனரே வீட்டு கதவை தட்டுகிறார். கைலி அவிழ்ந்துவிடாமல் கொஞ்சம் இறுக்கமாக கட்டிக்கொண்டு கையில் கிடைத்த ஏதோவொரு டிஷர்ட்டை எடுத்து போட்டுக்கொண்டு, கதவை திறக்கிறேன்..

உள்ளே நுழைந்தவருக்கு வீடு இருந்த கோலத்தை பார்த்து அதிர்ச்சி...ஒன்றும் பேசவில்லை..சுவரோரம் தானும் அழுக்காக நின்றிருந்த துடைப்பம் ஒன்றை எடுத்து, பரபரவென வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தார். எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. பல கோடிகளுக்கு அதிபர், இப்படி நம் வீட்டை சுத்தம் செய்கிறாரே என்று கொஞ்சம் உறைந்துதான் போனேன். கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள்.

கையை நீட்டி ஒட்டடை அடித்து, அதனையும் பெருக்கி, குப்பைகளை, பீர் பாட்டில்களை வெளியில் இருந்த குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு வந்து துடைப்பத்தை மூலையில் வைத்துவிட்டு, சரி நான் வரேன் ரவி. நாளைக்கு ஆபீஸ்ல பார்க்கலாம். என்று சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்...

நான் அதன்பின் எவ்வளவு வேலை இருந்தாலும் தினமும் வீட்டை சுத்தப்படுத்தி வைக்க ஆரம்பித்தேன்..!!!
.
.
.

UAE தமிழ் சங்கம் / முதல் பிறந்தநாள்

UAE தமிழ் சங்கம் அதன் முதல் பிறந்தாளை பதிமூன்றாம் தேதி நவம்பர் மாதம் கொண்டாடுகிறது. வாழ்த்துக்கள் UAE தமிழ் சங்கத்தினரே...(13-November-2009)

இது தொடர்பில் பட்டிமன்றம், கிரிக்கெட் போட்டி, மற்றும் பேமிலி கெட் டு கெதர் 23 ஆம் தேதி எல்லாம் வைத்துள்ளார்கள்.

பட்டிமன்றம் செலக்ஷன்:

Date : 16-October-2009, Time : 3pm, Day - Friday
Venue : Al Masjid Building, Next to King Faisal Saravana Bhavan/HSBC Sharjah
Please call our Committee Member to know the Topic & Exact Location. CONTACT US

தொடர்புகொள்ளவேண்டிய சுட்டி:

http://www.uaetamilsangam.com/contactus.asp

Tuesday, October 13, 2009

முடி திருத்தும் நிலையம்..



எங்கள் ஊர் பக்கம் உள்ள சலூன் கடை பெரியவர், திருவிழாக்களில் நாயனம் வாசிப்பார். அதிகம் வேலை இல்லாத மதிய நேரங்களில் "சானை பிடிக்கறது.." என்று டயர் இல்லாத சைக்கிள் ரிம்மும் பெடலுமுடன் கூடிய சானை பிடிக்கும் மிஷினை தூக்கிக்கொண்டும் சுற்றுவார். சில சமயங்களில் வீட்டுக்கே அவரது கத்தரியும் சில்வர் கிண்ணமும் உள்ள அழுக்கு கைப்பையை தூக்கிக்கொண்டு வந்துவிடுவதுண்டு. அதிகபட்சம் ஐந்து ரூபாய்.

கல்லூரி காலத்தில் எல்லாம், முடியை கொஞ்சம் ஸ்டைலாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை தவிர்த்து, சலூன் கடை விசிட்டுக்கு பல காரணங்கள் உண்டு. அங்கே கண்டிப்பாக தீப்பெட்டி இருக்கும். தம் போடலாம். அன்றைய பேப்பர் எல்லாம் படிக்கலாம். தினத்தந்திக்கு, தினமலருக்கு வரும் ஞாயிறு சப்ளிமெண்ட்கள், வாரம் முழுவதும் அங்கே உலாவரும்...

அங்கே கீழே விழும் முடிகளை கூட்டி வாரும் பையனிடம் ஒரு டீ வாங்கி வர சொல்லிவிட்டு, அப்படியே ட்ராயரை திறந்து சீப்பை எடுத்து தலையை வாறு வாறு என்று வாறும் நாட்கள் வந்தபோது, சலூனில் பெரியவர் போய், அவர் பையன் தொழில் செய்ய ஆரம்பித்திருந்தார்..

வீட்டில் முப்பது ரூபாயை கேட்டு வாங்கிவருவதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். ரெண்டு வாரம் முன்னாலதான முப்பது ரூபாய் கொடுத்தேன் ? என்ற வெளிப்படையான கேள்விகளும், இவன் அங்கே போறதே சிகரெட்டு அடிக்கத்தான் என்ற மறைமுக சிந்தனைகளுக்கும்பிறகு, அந்த முப்பது ரூபாய் நம் பாக்கெட்டில் வரும்...

கடையிலோ, லைட்டா கட் பண்ணிரு. பேக்ல கொஞ்சம் மேல ஏத்தி. போன்ற ஆரம்பகட்ட பேச்சுகளுக்கப்புறம், இருவத்தஞ்சு ரூவா ஹேர் கட்டிங்குக்கு, அஞ்சு ரூபாய்க்கு ஒரு கிங்ஸ் அப்புறம் ஒரு ஷாம்பு, என்ற நமது கால்குலேஷன்களை உடைக்கவே பிறப்பெடுத்தது போல, ஷேவ் பண்ணலியா சார் ? என்ற கேள்விகளுக்கு வெளிப்படையான பதிலை எப்படி கொடுக்கமுடியும் ? இல்ல, செல்ப் ஷேவிங் ஆரம்பிச்சுட்டேன் மகேசு. வேண்டாம். வேண்டாம்னா விடேன். முடியலைடா சாமீ...

சில சமயம் ஷேவிங்கும் செய்வதுண்டு. அடுத்த வாரம் ஒரு இண்டர்வியூ. மெட்ராஸ் போறீங்களா ? ஆமாம். கம்பெனிக்காரன் கேட்கிற கேள்விகளை தவிர எல்லா கேள்விகளும் கேட்கப்படும். இன்பர்மேஷன் ஈஸ் வெல்த். ஆப்போசிட் போடவா சார் ? வேண்டாம். அப்புறம் தாடி அதிகமாக வளரும் போன்ற மூட நம்பிக்கைகள்.

புது ப்ளேடு தானே ? ஆமாம் சார். இப்பத்தான் போட்டேன். உங்களுக்கு நம்பிக்கையில்லைன்னா சொல்லுங்க, இப்பவே மாத்துறேன்...இல்ல, எய்ட்ஸ் வருதுங்கறாங்க..வழித்து வழித்து, கையில் வைத்துக்கொண்டு, ஷேவிங் முடியும்வரை. அந்த கையில் எப்படித்தால் இவ்வளவு நுரையும் புகுந்து அடங்குகிறதோ ?

முகத்தில் எட்டுக்கால் பூச்சி மாதிரி அந்த நுரைக்கையை வைத்துக்கொண்டு, அந்த உள்ளங்கையில் இருக்கும் முடியும் ஷேவிங் க்ரீமும் கலந்த கலவை முகத்தில் மறுபடி ஒட்டுமோ போன்ற அவநம்பிக்கைகள், கழுத்துக்கு கீழே சரியாக கத்தி போகும்போது போகும்போது, எங்கே போன முறை டிப்ஸ் கொடுக்காமைக்கு இந்த முறை இழுத்து வெட்டிவிடுவானோ போன்ற பயங்களுடன் முடியும் ஷேவிங்.

மெஷின் கட்டிங் என்பது இன்னும் எளிமை. மெஷினை ஆன் செய்தவுடன் அதில் இருக்கும் பல்போன்ற அமைப்பு அப்படியே வழித்து எடுக்கும். கடலூர் புனித வளனார் பள்ளி உள்விடுதியில் வரிசையில் அமர்ந்து டோக்கனை கொடுத்து வழித்துக்கொண்டு வந்தது நியாபகத்தில் அலையடிக்கிறது...

பெங்களூரில் இருக்கும் சலூன்களின் செய்வது போல ஹெட் மசாஜ் தமிழகத்தில் செய்து பார்க்கவில்லை. கட்டிங் முடிந்தவுடன் டங்கிரி டங்கிரி என்று போட்டு அடித்து இரு கைகளையும் சேர்த்துக்கொண்டு நடு மண்டையில் குவிந்து வருமாறு மசாஜ் செய்வார்கள். முடிவெட்ட ஆகும் அதே காசு. எக்ஸ்ட்ரா வாங்கியதாக நினைவில்லை.

ஹீட்டர் போட்டால் அதிகம் செலவாகும் என்று ரொம்ப நாளைக்கு பயம். அப்புறம் பத்து ரூபாய் தான் அதிகம் ஆகும் என்று தெரிந்தபிறகு ஸ்ஸ்ஸ்ஸ். ஹீட்டருடன் கூடிய மசாஜ் சிறப்பு. ஆனால் அந்த டர்ர்ர் சத்தத்தில் கொஞ்சம்போல வரும் தலைவலி எக்ஸ்ட்ரா பிட்டிங்.

சார், அக்குள்ள ஷேவ் பண்ணவா என்று கேட்கும்போது கொஞ்சம் கூச்சத்தோடு, இல்ல நானே பண்ணிக்கறேன்..சில பேர் அக்குளை தூக்கி காட்டிக்கொண்டிருக்கும்போது உட்கார்ந்து பார்க்கும் எனக்கு ஒரு வகை வாந்தி சென்சேஷன். அது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை.

ஆரம்பத்தில் சட்டை பட்டனை லூஸ் செய்து போர்த்தும் பெரிய வெள்ளைத்துணிக்குள்ளேயே எல்லா முடியும் விழுந்துவிடவேன்றும் என்று நினைப்பதில் ஆரம்பித்து, அந்த துணியை போர்த்தியபிறகு மூக்கு நுனியில் அரிப்பது வரை நான் கொஞ்சம் க்ரேஸியாகத்தான் இருந்திருக்கிறேன்.

ஷேவ் பண்ணிக்கொண்டிருக்கும்போதோ, அல்லது ஹேர்கட் செய்துகொண்டிருக்கும்போதோ, அலைபேசி அழைப்பை எடுத்து, சலூன்ல இருக்கேன் மச்சி என்று ஆரம்பித்து பேசுபவர்களை பார்த்தால் எரிச்சல் வந்துவிடும்.

கடைக்குள்ளே நுழையும்போது எல்லா வெயிட்டிங் சேர்களும் யாரையாவது கொண்டிருக்க, சரி நான் அப்புறமா வரேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட முடியாது. இந்தா முடிஞ்சுருச்சு சார். டூ மினிட்ஸ். என்று எப்படியாவது கஸ்டமரை உள்ளே அமரவைக்க அவர்கள் படும் பாடு. யார் கண்டது, வெயிட்டிங் சேரில் இருக்கும் எல்லாரும் முடி வெட்டிக்கொள்ள வந்தவர்களாயிருக்காது. வட்டிக் கடை கடன்காரனாக கூட இருக்கலாமோ ?

"இங்கே அரசியல் பேசாதீர்" என்று கண்ணாடியில் சிவப்பு பெயிண்ட் எழுத்தில் ஒரு சலூனில் பார்த்திருக்கிறேன். அரசியல் அதே போன்றதொரு கண்ணாடியை உடைத்திருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டேன்...

சேரில் உட்கார்ந்து கட்டிங் ஆரம்பித்தவுடன், எதிரில் உள்ள கண்ணாடியில் பின்னால் உள்ள கண்ணாடி, அதில் உள்ள கண்ணாடியில் எதிரில் உள்ள கண்ணாடி, அதில் உள்ள கண்ணாடியில் பின்னால் உள்ள கண்ணாடி, அதில் உள்ள கண்ணாடியில் எதிரில் உள்ள கண்ணாடி. இதுவரை எனக்கு முடி வெட்டுவதை சரியாக பார்த்ததில்லை...

மனதில் பலவித சொல்லமுடியாத எண்ணங்களோடு, முடி திருத்தும் நிலையத்தில் நான் கொடுத்த சொற்ப தொகைக்கு எனக்கு முடி திருத்தி சேவை செய்த முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்..!!! வாழ்க நீ எம்மான்..!!!
.
.
.

கூகிளில் தேடிய அல்போன்ஸு



அல்போன்ஸு உண்மையில் ஆச்சர்யமாக பார்த்து மற்றும் கேட்டு கொண்டிருந்தான். அவன் இவ்வளவு ஆர்வமாக வாயை பிளந்து விசாரித்துக்கொண்டிருக்கிறான் என்றால் அது படு முக்கியமாகத்தான் இருக்கும் என்று நானும் எட்டிப்பார்த்தேன்..

தொலைக்காட்சியில் கூகிள் பற்றியதொரு நிகழ்ச்சி. கூகிள் என்று மெல்லிய பனியன் அணிந்த அழகி, கூகிள் நிறுவனம் தோன்றிய விதம், கூகிள் மூலம் என்ன என்ன தேடலாம் என்பதை விளக்கிக்கொண்டிருந்தாள்...



அவனுக்கு அவ்வளவாக இங்கிலீஷ் புரியாது என்பதால் என்னை பார்த்து இந்த கேள்வியை கேட்டான்.

அதென்ன கூகிள் சர்ச் , பாதிரியார் இருப்பாரா ? இது அல்போன்ஸ்.

முண்டம். கூகிள்னு இண்டர்நெட்ல வெப்சைட் இருக்குல்லா ? அதுடா. அதுல முகப்பு பக்கத்தில் உள்ள பெரிய பெட்டியில் எதையும் டைப் செய்து தேடலாம்.

எல்லாத்தையும் தேடலாமா ?

ஆமாம் அல்போன்ஸு. இலக்கியம், பொருளாதாரம், அறிவியல் அப்படீன்னு என்ன தேடினாலும் வரும். எந்த இடம் எங்க இருக்குன்னு தேட கூகிள் மேப். தெருத்தெருவா காட்டும். எந்த புது செய்தியாக இருந்தாலும் கூகிள் நியூஸ். ஆர்க்குட்னு ஒரு சோஷியல் நெட்வோர்க்கிங். அதுவும் கூகிள்தாண்டா. ஆனால் முக்கியமா நீ கத்துக்கவேண்டியது கூகிள் சர்ச். எதை எப்படி செய்வது என்பது கூட தேடினால் பல வலைப்பக்கங்களில் அதன் செய்முறையை தெரிஞ்சுக்கலாம். I am feeling Lucky அப்படீங்கற பட்டன் நேரடியாக அந்த இணையத்துக்கே கொண்டு சேர்க்கும். Search என்றால் பல இணைய தளங்கள் பட்டியலாகும்.

இங்கபாரு. என்னோட லேப்டாப்ல. கூகிள் முகப்பை திறக்கிறேன் பாரு. இங்க இருக்க பெட்டியில் எதை வேண்டுமானாலும் டைப் செய் பார்க்கலாம்.

சரி டைப் செய்யறேன். லேப்டாப்பை கொடு.

இந்தா அல்போன்ஸு.

அல்போன்ஸு மடிக்கணினியை கோவில் ப்ரசாதம் போல பயபக்தியோடு வாங்கினான்.

கூகிள் விண்டோவில் டைப் செய்தான்.

" How To Search in Google"

..
..
..

XP செக்யூரிட்டி டூல் வைரஸ் ?? !!!



மைக்ரோசாப்ட் எக்ஸ்பி இயங்குதளத்தில் திடீரென வைரஸ் தாக்கிவிட்டதாகவும், உம்மாச்சி கண்ணைக்குத்தாமல் இருக்கவேண்டும் என்றால் க்ரெடிட் கார்டு எண்ணை கொடுத்து வைரஸ் ப்ரொடக்ஷனை பெற்றுக்கொள்ளுமாறும் செய்தி.

என்னுடைய திரை முழுவதும் ஒன்றும் இல்லை. இந்த செய்தி மட்டுமே இருக்கிறது. மற்ற ஐக்கான்கள் எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை.

என்னவோ மைக்ரோசாப்ட்டில் இருந்து சொல்வது போலவே சொல்கின்றது இது. டாஸ்க் பார் மூலம் இதனை க்ளோஸ் செய்துவிட்டு, டெஸ்க்டாப் ஐக்கானை அழுத்தி மீண்டும் என்னுடைய திரையை பெற்றேன்.

இது உண்மையா, உண்மையிலேயே உம்மாச்சி கண்ணை குத்தியதா, இல்லை, ஏற்கனவே லைனக்ஸு இலவச திறந்தமூல இயங்குதளங்களிடம் பெரிய ஆப்புகளாக வாங்கி RIP (Rest in அமைதி) க்கு போக இருக்கும் மைக்ரோசாப்டுக்கு வைக்கப்பட்ட சூனியமா செய்வினையா மஞ்சள் குங்குமம் தடவிய எலுமிச்சம்பழமா என்று தெரியவில்லை.

தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் கும்மவும்.

Monday, October 12, 2009

சமையல் !! (ஒரு பக்க கதை)



அடுப்புல ஒரு டீஸ்பூன் நல்லெண்ணை விடுங்க ஸ்வேதா. சரியாய் ஒரு ஸ்பூன் போதும்.

ஸ்வேதா ஏப்ரன் அணிந்திருந்தாள். பக்கத்தில் அற்புதா. அவர்களைப்போலவே அவர்கள் முன் இருந்த மாட்யூலர் கிச்சன் சமயலறையும் நீட்டாக அழகாக இருந்தது. அற்புதா அவளுடைய அழகிய கன்னத்தைவிட கொஞ்சம் சிவப்பாயிருந்த பெரிய மிளகாய் துண்டுகளை கையில் வைத்திருந்தாள்.

கொஞ்சம் எண்ணை காய்ந்தபின்...இப்போ கொஞ்சம் கடுகு, அதன்பின் இந்த மிளகாய் துண்டுகளை போட்டு, அப்புறம் கொஞ்சம் வெங்காயம் தாளிக்கலாம். ஓக்கே ? இந்த நேரத்தில் கொஞ்சம் போல உப்பு சேர்த்துக்கிட்டா வெங்காயம் சீக்கிரம் டீ ஹைட்ரேட் ஆகி டேஸ்ட் கூடும்..

சரி..இது ஸ்வேதா..

அற்புதா தொடர்ந்தாள். இப்போ நாம செய்யப்போற சிக்கன் நாட்டுக்கோட்டை செட்டிநாடு அப்படீங்கற வெரைட்டி. இதுக்கு நாம ஏற்கனவே எடுத்து மஞ்சள் தூளில் ஊற வெச்சிருக்கிற போன்லஸ் சிக்கனை இப்ப எடுப்போம்.

அற்புதா, இந்த வெரைட்டிக்கு நாட்டுக்கோழி இருந்தாத்தால் நல்லா இருக்கும்னு முன்பு சொல்லியிருந்தீங்க இல்லையா ?

ஆமாம் ஸ்வேதா. ஆனா இங்க சிட்டியில நாட்டுக்கோழி கிடைக்கறதில்லை. ஆனால் அதே செட்டிநாடு மசாலா கிடைக்கறதால நாம அதே டேஸ்ட் கொடுக்கமுடியும்..

ட்ர்ர். ஒரு சின்ன வைப்ரேட்டர் சிலிர்ப்புக்குப்பின் தீபாவின் அலைபேசி ஒலித்தது..ராங்கு ரங்கம்மா ரவிக்க எங்கங்கம்மா போலாமா...

ஹல்லோ...

ஹலோ தீபூ...என்ன சமையல் ? லஞ்சுக்கு வரவா ?

இல்லடா...இன்னைக்கு நான் எந்திரிச்சதே பதினோரு மணிக்குத்தான். நீ ஆபீஸ் கேண்டின்ல லஞ்ச் முடிச்சுரு. அப்படியே பிஸ்ஸா ஹட்டுக்கு சொல்லி எனக்கொரு வெஜ் பிட்ஸா ஆர்டர் பண்ணிடு.

ஓக்கேம்மா. என்ன பண்ணிக்கிட்டிருக்க ?

டிவியில ஸ்வேதா / அற்புதா டெலிஷியஸ் செட்டிநாடு சமையல்னு ஒரு ப்ரொக்ராம் பார்த்துக்கிட்டிருக்கேன்....
..
..
..

Thursday, October 08, 2009

2009 புக்கர் பரிசு / ஹிலாரியின் வூல்ப் ஹாலுக்கு !!!



நேற்றே இது பற்றி எழுதலாம்னு நினைத்தேன். தமிழ்ச்சூழலில் புக்கர் விருது போன்ற ஒரு மாபெரும் பரித்தொகையான விருது ஒன்று இருந்தால் அந்த பரிசுத்தொகையை நோக்கிய இன்னும் சிறப்பான புத்தகங்கள் வெளிவரும் என்பது என்னுடைய தனிப்பட்ட எண்ணம். அல்லது தமிழ் எழுத்தாளர்களை வெறும் தேங்காய் மூடியை கொடுத்து உபசரிப்பது நிறுத்தப்படவேண்டும், ஒரு ட்ரிப்புள் பெட்ரூம் ப்ளாட் வாங்கும் அளவுக்காவது பரிசு கொடுக்கப்படவேண்டும் என்பதும் நீண்ட நாட்களாக என் மனதில் இருக்கும் ஒரு ஆசை...

இந்த முறை 50 ஆயிரம் பவுண்டு மதிப்புள்ள இந்த மாபெரும் பரிசு இங்கிலாந்தில் 1952 ஆண்டு பிறந்த சட்டம் படித்த சமூக சேவகி ஹிலாரி மெண்டல்லுக்கு. போஸ்ட்வானாவில் அஞ்சு வருஷம், பிறகு சவூதி அரேபியாவில் நாலு வருஷம் இருந்துட்டு, என்பதுகளின் மத்தியில் இங்கிலாந்து திரும்பினாங்க ஹிலாரி.

ஏற்கனவே பல நாவல்கள் பல விருதுகள். Eight Months on Ghazzah Street, A Place of Greater Safety, The Giant, O’Brien, Giving Up the Ghost: A Memoir (கொஞ்சம் சுய சரிதை மாதிரி இருக்கும்). Winifred Holtby Memorial Prize, Cheltenham Prize, Southern Arts Literature Prize, Hawthornden Prize அப்புறம் Commonwealth Writers Prize மற்றும் Orange Prize for Fiction ஆகிய விருதுகளுக்கு தேர்தெடுக்கப்பட்டது இவரோட புக்ஸ்.

இப்ப புக்கர் பரிசை தட்டிய Wolf Hall, இங்கிலாந்து அரச குடும்பம், அதில் உண்டான அரசியல், நம்பிக்கைகள், அப்படீன்னு நிறைய கேரக்டர்கள் மூலமாக சொல்லுது. ஹிலாரியை இங்கிலாந்தில் வாழும் அனைத்து தரப்பு இண்டலக்சுவல்களுக்கும் தெரியும் என்றாலும், இந்த புத்தகம் இன்னும் அவரை எல்லா இடத்திலும் கொண்டு சேர்க்கும் என்றால் அது மிகையல்ல.



அருந்ததி ராயின் The God of Small Things புக்கர் பரிசை வென்றது உங்களுக்கு நினைவிருக்கலாம்.



அரவிந்த் அட்காவின் The White Tiger கூட புக்கர் பரிசை ஜெயிச்சது.



எனக்கு புடிச்ச பய புள்ளையான சேத்தன் பகத்துக்கு கிடைக்கனும். கிடைக்கும். எதிர்பார்த்திருபேன்.



சேத்தன் பகத்தில் மூனு மிஸ்டேக்ஸ் இன் மை லைப் என்ற புக் ஒரு அல்ட்டிமேட் க்ளாஸிக். முடிஞ்சா படிங்க.

மற்றபடி, ஐஸ்வர்யா ராய்க்கும் சுஷ்மிதாவுக்கும் உலக அழகி பட்டம் கொடுக்கறதே, மேற்கத்திய அழகியல் கலாச்சாரத்தின் தாக்கத்தை இந்தியாவில் கொண்டுவரவே என்றும் அவை எல்லி ஐப்ரோ பென்சில்களை விற்கவே என்றும் சொல்லப்படும் கருத்தாக்கத்தையும் இந்த பதிவின் மூலம் மறுக்கிறேன். அவர்கள் உண்மையிலேயே அழகிகள். அதைப்போல சேத்தன் பகத்துக்கும் இந்த புக்கர் கிடைக்கும்போது இன்னோரு இடுகை எழுதி சந்தோஷப்பட்டுக்கறேன். மற்றபடி புக்கர் பக்கர் என்று தமிழ்ச்சூழலில் தேடிப்பார்த்து கிடைக்காததால் நானே எழுதிவிட்டேன். ஓட்டு போடப்போறவங்களுக்கு நன்றி !!!

Tuesday, October 06, 2009

லஞ்சத்தின் த்ரீ டைமன்ஷன் ???


லஞ்சத்தை காலம் காலமாக சகித்துக்கொள்ளும் பொதுமக்கள்:

க்யூவில் நிற்க என்னுடைய ஸ்டேட்டஸ் இடம் கொடாது..

என்னுடைய வேலை சீக்கிரமா முடியனும், நான் வெளிநாடு போவனும், எவன் எக்கேடு கெட்டாலும் எனக்கு கவலை இல்லை.

நான் நேர்மையானவனில்லை. என்னிடம் இருக்கிற டாக்குமெண்ட்ஸ் சட்டப்படி செல்லாது. அதனால் சட்டத்துக்கு புறம்பாகத்தான் என்னுடைய காரியத்தை முடிக்கவேண்டும்.

அய்யோ. லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் என்னுடைய காரியம் நடக்கவில்லை என்றால் ? பயமாருக்கு. என்னுடைய வேலை எனக்கு முக்கியம்.

என்னது, லஞ்சம் கொடுக்கவேண்டாமா ? அவன் மிரட்டி வாங்குறான் சார். என்ன செய்யறது ?

எல்லாரும் கொடுக்கறாங்க. நானும் கொடுக்கறேன். நான் மட்டும் என்ன விதிவிலக்கா சார் ?

அவங்கள எதிர்த்துக்கிட்டு என்ன சார் செய்யமுடியும் ? பேசாம கொடுத்துட்டு போகவேண்டியது தான்.

இது என்ன சினிமாவா ? ரியல் லைப் சார் ரியல் லைப். இந்தியன் தாத்தா படம் எப்பவோ தியேட்டரை விட்டு ஓடிருச்சு..

நாணல் மாதிரி வளைஞ்சு கொடுத்துட்டு போய்ட்டே இருக்கனும்பா. லஞ்சம் கொடுக்க மாட்டேன், முடிச்சு அவுக்கமாட்டேன் அப்படீன்னா கடைசியில படறது நாமதானே ?

போலீஸ்ல சொல்றதா ? ஹி ஹி. அவங்களே வாங்குறாங்களேப்பா.

என்னது லஞ்ச ஒழிப்பு போலீசா ? எவ்ளோ லஞ்சம் கொடுக்கனுமோ அவ்ளோ பணத்தை நாம லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு கொடுக்கனுமாம். அதுல அவங்க கெமிக்கல் தடவுவாங்களாம். அதை நான் கொண்டுபோயி லஞ்சம் கேக்குற அதிகாரிக்கிட்ட கொடுக்கனுமாம். அப்புறம் அவங்க மறைஞ்சிருந்து அதிகாரிய புடிப்பாங்ககாள். ஆனா என்னோட காசு ஆதாரமா கோர்ட்டுல சம்பிட் பண்றதுக்கு போலீஸ் எடுத்துக்குவாங்களாம். அதுக்கு நான் லஞ்சமே கொடுத்திட்டுபோவனே ? அதே செலவுதானே ?

அடப்போய்யா..எவன் கோர்ட்டு கேசுன்னு அலையறது ? மண்டையில இருக்க கொஞ்ச நஞ்ச முடியும் கொட்டிரும்...வேற ஆளைப்பாரு.

நாம மாட்டிவிடற அதிகாரி, சஸ்பெண்ட் ஆகி, வேலை போய், நாளைக்கு நடுத்தெருவுக்கு வந்துருவான். அப்புறம் கூலிப்படையை வெச்சு மாறுகால் மாறுகை வாங்கிட்டான்னா ? கையும் காலும் என்னுதாச்சே ?



காலம் காலமாக டேபிளுக்கு கீழும் மேலும், தலையை சொறிந்தும், மிரட்டியும், மக்களின் தேவைகளை பயன்படுத்தியும், அதிகாரம் செய்தும், அதிகார துஷ்ப்ரயோகம் செய்தும், "மாசக்கடைசி" என்ற சிங்கிள் வேட்டை பயன்படுத்தி கெஞ்சியும் லஞ்சம் அல்லது கையூட்டு பெற்றுக்கொண்டிருக்கும் அதிகாரிகள், அரசுத்துறையினர்

மூனு லோன், பி.எப் லோன், பிடித்தம் போக சம்பளம் மூவாயிரம் வருது சார். இந்த மூவாயிரத்துல வீட்டு வாடகை கூட கட்டமுடியாது. என்னை ஏன் வாங்கக்கூடாதுன்னு சொல்ற ?

ஒரு பையன் இஞ்சினீயரிங் படிக்கிறான். டொனேஷன் 3 லட்சம் கொடுத்தேன். அட ஹாஸ்டல் பீஸ் அம்பதாயிரம் சார். என்னை என்ன செய்ய சொல்றீங்க ?

ஊருல யாருமே வாங்கலைன்னு சொல்லுங்க. என்னையும் வாங்கவேண்டாம்னு சொல்லுங்க. நான் மட்டும் முட்டாள், ஊர்ல இருக்கறவனெல்லாம் அறிவாளி. அப்படித்தானே ?

தாலி செயின் கொஞ்சம் பெருசா வேணும்னு வீட்ல ரொம்ப டார்ச்சர். நீங்களா பணம் தரப்போறீங்க அதுக்கு ? கை நீட்டித்தான் ஆவனும்.

அம்பது வயசு வரைக்கும் வாங்கலை சார். இன்னும் வாடகை வீடு. காறித்துப்பறா என்னோட பொண்டாட்டி. இனிமேலும் பொறுக்கமுடியாது சார். சொந்தவீட்டுக்கு போயே ஆகனும்.

இன்னைக்கு கோயம்பேட்ல ஒரு கிலோ தக்காளி எவ்ளோ சார் ? என்னோட சம்பளத்தை மட்டும் நம்பிக்கிட்டிருந்தா, வெறும் தக்காளி மட்டும்தான் வாங்க முடியும். அரிசி வாங்க முடியாது.

24 மணி நேரம் டூட்டி பாக்குறோம் சார். வேற எந்த டிப்பார்ட்மெண்ட்ல இப்படி இருக்கு ? சம்பளம் எவ்ளோன்னு தயவு செஞ்சி கேக்காதீங்க. நைட் வாச்மேனுக்கும் எங்களுக்கும் பெரிசா வித்யாசமில்லை.

பேரு தான் பெத்த பேரு. கவுர்மெண்டு ஜீப்பு. பொண்டாட்டி புள்ளைங்கள ஒரு சினிமாவுக்கு ட்ராமாவுக்கு கூட்டிக்கிட்டு போவ முடியல சார். பாப்கார்ன் அம்பது ரூவா. என்ன செய்யச்சொல்றீங்க ?

ஊரே அம்மணமா திரியுது. நான் மட்டும் கோவணம் கட்டிக்கனுமா ? என்னைய பார்த்தா கேனையன் மாதிரி இருக்கா ?

என்னோட படிப்பு செலவுக்கு மொத்தம் பத்து லட்சம் ஆச்சு சார். இந்த ஊர்ல போஸ்டிங் வாங்கறதுக்கு சொளையா மூனு லட்சம் செலவாச்சு. எங்கப்பா வீட்டை வித்திருக்கார். எப்படி சார் அந்த காசை திரும்ப எடுக்கறது ?

மத்தவங்கள மாதிரி ஆயிரம் ரெண்டாயிரம்னு வாங்கறதில்லை சார் நானு. ஏதோ ஒரு நூறு எறநூறு. இல்லாதப்பட்டவங்களுக்கு ப்ரீயாவே செய்யறேன். ஆபீஸ்ல எல்லாருக்கும் டீ வாங்கித்தரச்சொல்லுவேன். ரெண்டு கொயர் பேப்பர், பத்து ரெணால்ட்ஸ் பேனா. இது போயி தப்பா ?

இவனுங்க வேலைக்கு நான் வண்டியில பெட்ரோல் போட்டுக்கிட்டு டாக்குமெண்டை தூக்கிட்டு போறேன். பெட்ரோல் என்ன என் வீட்டு கெணத்துலயா புடிக்கமுடியும் ? அம்பது ரூவா ஆவுதில்ல ? மேல ஒரு 200 போட்டு எறநூத்தம்பதா கேட்டு வாங்கிக்கறேன். இவனுங்க பாஸ்போர்ட்ட வாங்கிக்கினு வெளிநாட்ல போய் லச்ச லச்சமா சம்பாரிப்பானுங்க. நமக்கு ஒரு எறநூத்தம்பது குடுக்கமாட்டானுங்களா ?

என்ன சார் உழைப்பாளி ? நைட் ஷிப்ட்டு ? நைட்டு பண்ணண்டு மணிக்கு பொண்ணுகளோட பைக்ல வருவான். டாக்குமண்ட் இருக்காது. அப்படியே உட்டுடனுமா ? ஐநூறு ரூபாய்க்கு பீர் அடிப்பானுங்க. எனக்கு நூறு ரூபா குடுக்க மூக்கால அழுவானுங்களா ? லைசென்ஸ் இல்லைன்னு கேஸை கோர்ட்டுக்கு இழுத்துக்கிட்டு போனா அவன் ஆயிரம் ரூபா கட்டனும் சார். நான் செய்யறது உண்மையிலேயே பாவப்பட்டு. எங்கிட்ட வந்து லஞ்சம் வாங்காத பஞ்சம் வாங்கதன்னு ? போ சார் வேலைய பாத்துக்கினு.

ஐடிங்கறான். வேலைக்கு போய் ரெண்டு வருசத்துல காரை வாங்கிடுறான். ப்ளாட்டை வாங்கிடுறான். நான் முப்பது வருஷம் சர்வீஸ் பண்ணி இப்பதான் சிட்டி அவுட்டர்ல லேண்டே வாங்கியிருக்கேன். இனிமே அதுல வீடு கட்டனும். பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும். நாய் மாதிரி வேலை செஞ்சு டாக்குமெண்டை ரெடி பண்ணி கொடுத்திருக்கேன். ஆயிரம் ரூபாய் குடுக்கறான். வாங்கக்கூடாதா சார் ?

சாப்ட்வேர் கம்பெனி சம்பளம் வேண்டாம். அட்லீஸ்ட் செண்ட்ரல் கவர்மெண்டு சம்பளம் போடச்சொல்லுங்க. லஞ்சமே வாங்காத பெரியவர் கதை தெரியுமில்ல ? பி.எப் அப்ளை பண்ணி மூணு வருசமா பணம் வரலை. பொண்ணு முப்பது வயசுல நிக்குது. அந்தாளை மாதிரி லூசா இருக்கச்சொல்றீங்களா ?

சார். ஏதோ ஆயிரம் ஐநூரு கிடைக்கிறது இந்த ஊர்ல மட்டும்தான் சார். ஏதாவது அத்துவான காட்டுக்கு ட்ராஸ்பர் வந்துட்டா அதுக்கும் வழியில்லை. காற்றுள்ள போதே தூற்றிக்கறோம். இதுல என்ன தப்பு ?

முப்பது வண்டி ஓடுது அவனுக்கு. இந்த எப்.சிக்கு அவன் குடுக்குற ஆயிரம் பிச்சைக்காசு சார் அவனுக்கு. அதை போய் வாங்காதீங்கன்னு சொல்லி எதுக்கு எங்க பொழப்புல மண்ணள்ளி போடறீங்க ?

டாஸ்மாக்குல சரக்கு கூல்ட்ரிங்ஸுன்னு நூறு ரூபாய் ஆயிடும். அதுக்கு பாவம் அவம் பத்து ரூபாய்க்கு சாரயம் குடிச்சுட்டு போறான். அதைப்போய் ரெய்டு பண்ணி எதுக்கு சார் ? விட்டுத்தளுங்க. என்னது சாராய வியாபாரியா ? அவன் வாரம் அஞ்சாயிரம் கட்டுதான். அது மொத்தம் பத்து பேருக்கும் பங்கு பிரிச்சா எனக்கு வெறும் ஐநூறு வரும் சார். அதைப்போயி ? என்னது கள்ளச்சாராயமா ? குடிச்சுட்டு சாவட்டுமே ? நாட்ல மக்கள் தொகை கொறையுதுன்னு வைங்க ஹெ ஹெ.

சார் நீங்க சொல்லுங்க. டெக்னிக்கலா இந்த கவர்மெண்ட் கம்பெனியில செய்யறதை எந்த தனியார் கம்பெனியிலயாவது செய்யமுடியுமா ? சம்பளம் மட்டும் அவங்களோடதுல கால் வாசிதான். ஏன் சார் எங்களுக்கு மட்டும் இப்படி ?

நீங்க நெனைக்கிறமாதிரி ஒரு ஆளுக்கு மட்டும் போறதில்லை சார். மேலிருந்து கீழ வரைக்கும் பங்கு. குரங்கு பங்கு பிரிக்கிற மாதிரி. அதெல்லாம் பெரிய போஸ்ட்ல இருந்தாத்தான் நிறைய கிடைக்கும் சார்.

லஞ்சத்தை ஒழிக்கனுமா ? ப்ளீஸ் கெட்ட வார்த்தை பேசாதீங்க. வெகுமதின்னு சொல்லுங்க. அன்பளிப்புன்னு சொல்லுங்க. ஹோட்டல்ல டிப்ஸ் வைக்கலைன்னா உங்களுக்கு என்ன மரியாதை கிடைக்கும் ? ரெண்டு இட்லிய சர்வ் பண்றதுக்கே ரெண்டு ரூபாய் வைக்குமோது, நாப்பது லட்ச ரூவா வேலைக்கு வெறும் நாலாயிரம் வாங்கினா என்ன சார் தப்பு ?

இருக்கறவன் குடுக்கிறான். உனக்கென்ன பொச்செரிச்சல் ? வேலையை பார்த்துக்கிட்டு போய்யா.

நானும் ஆரம்பத்தில கொஞ்சம் கஷ்டப்பட்டேன். எதிர்த்து கூட பேசினேன். உனக்கு தேவையில்லைன்னா ஒதுங்கிக்கோன்னு சொல்லிட்டாங்க. அதான். நான் ஒதுங்கிட்டேன். என்னளவில் எந்த வேலைக்கும் காசு வாங்குறது கிடையாது. அவ்ளோ தான் என்னால செய்யமுடியும் சார். மத்தபடி இவங்களை போட்டுக்கொடுத்து, வேலைக்கு உலை வெக்கனும்னு எனக்கு ஆசையில்லை. எக்கேடோ கெட்டுபோறாங்க !!



அரசாங்கத்தின் வருமானத்தின் 90 சதவீதத்தை அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கே செலவு செய்யும், லஞ்ச ஒழிப்புத்துறை என்ற வீக்கான கட்டமைப்பை உருவாக்கி லஞ்சத்தை ஓரளவுக்கு ஒழிக்க முயலும் அரசு

நீங்க கம்ப்ளைண்ட் கொடுங்க சார். அவங்க பார்த்துப்பாங்க. அதுக்குத்தானே தனி டிப்பார்ட்மெண்ட் இருக்கு ?

ஐடி கம்பெனி மாதிரி நாங்க எப்படி சம்பளம் கொடுக்கமுடியும் ? எங்களுக்கு என்ன க்ளையண்ட் அமெரிக்காவிலயா இருக்கான், டாலர்ல கொட்ட ?

அவங்க உங்க வேலையை செஞ்சு கொடுக்கறதே பெரிசு சார். இதுல அதை வாங்காத இதை நோங்காதன்னுட்டு..

நாங்களும் எங்களால முடிஞ்சதை செய்துக்கிட்டு தான் இருக்கோம்.

கவர்மெண்ட்லயே இதை ஸ்ட்ரிக்டா செய்ய சொல்லலை சார். நாங்க என்ன செய்யறது ?

ஆமா. கோர்ட்டு கேஸுன்னா கொஞ்ச நாள் ஆகத்தான் செய்யும். இண்ஸ்டண்டா தீர்ப்பு சொல்ல இது என்ன நூடுல்ஸ் வெவிக்கிற விஷயமா ? புகார் காழ்ப்புணச்சியின் அடிப்படையில கூட இருக்கலாம் இல்லையா ?

நீங்க குடுக்காதீங்க. உங்களை மிரட்டி கேட்டா சொல்லுங்க. மத்தபடி நாட்ல லஞ்சம் வாங்கற எல்லாருக்கும் தண்டன கொடுக்க இது என்ன சினிமாவா ?

உங்க வேலை என்னவோ அதை பாருங்க. பெரிசா சமூக சேவைக்கு கெளம்பிட்டாரு அய்யா...

..

..

..

Monday, October 05, 2009

விழித்துக்கொள்ளவேண்டிய தமிழக சுற்றுலாத்துறை..

சில பல நாடுகளுக்கு பணி நிமித்தமாக கடந்த ஆண்டுகளில் பயணம் செய்துவருகிறேன். அங்கே தொலைக்காட்சிப்பெட்டியை உசுப்பினால், அடிக்கொரு தரம் சில விளம்பரங்களை பார்க்கலாம்.

அது பல்வேறு நாடுகளின் சுற்றுலாத்துறை, வெளியுறவுத்துறை சார்பான விளம்பரங்கள். ஆசிய நாடுகளில் மலேசியா கொலைவெறியுடன் பல்வேறு நாடுகளில் விளம்பரம் செய்துவருகிறது. ஐரொப்பிய நாடுகளில், ஆஸ்திரேலியாவில், மற்ற நாடுகளில் எல்லாம் மலேசியா ட்ரூலீ ஏசியா என்ற விளம்பரம் பார்க்கலாம். (மற்ற ஏசியா நாடுகள் எல்லாம் போலி ஏசியாவா என்று தெரியாது எனக்கு)

அபூர்வமாக இண்க்ரிடிபுள் இண்டியா என்ற விளம்பரத்தையும் பார்க்கலாம். இந்திய சுற்றுலா பற்றி யோசித்துக்கொண்டிருக்கும் வெளிநாட்டவர், இதுபோன்ற விளம்பரங்களை பார்த்தால் பட்டென்று விழுந்துவிடுவார்கள்.



நமது நாட்டின் கலை, சுற்றுலாதலங்கள், வசதிகள் ஆகியவற்றை சுருக்கமாக காட்டும் விதமாக இந்த விளம்பரங்கள் இருக்கும்.

பொதுவாக இவை நார்த் இண்டியாவையே மையமாக கொண்டிருக்கும். தாஜ்மகாலை காட்டுவார்கள். டெல்லியை காட்டுவார்கள். அதிகபட்சமாக தென்னிந்தியா என்றால் கேரளாவையும் படகு சவாரியையும், வெள்ளை சாரி சேச்சிகளையும் காட்டுவார்கள்.

இந்த இடத்தில் நான் தமிழக சுற்றுலாத்துறையை ஏன் அழைக்கிறேன் என்றால், இந்தியாவின் பிற மாநிலங்கள் தனித்தனியாக விளம்பரங்களை ஒவ்வொரு நாட்டிலும் வெளியிடுகின்றன.

கோவா Go Goa என்ற டூரிசம் கேப்பெயினை நடத்துகிறது. http://www.youtube.com/watch?v=p9DjB7nCgkU என்ற சுட்டியில் இருப்பதை போன்ற வீடியோவை ஐரோப்பிய நாடுகளெக்கும் காட்டுகிறார்கள். அந்தந்த நாட்டில் இருக்கும் ஆங்கில சேனல்களில், லோக்கல் சேனல்களில் இவை ஒளிபரப்பாகின்றன.

அட குட்டி மாநிலமான அஸ்ஸாம் கூட தன்னுடைய மாநிலத்துக்கு வருமாறு சுற்றுலா பயணிகளை அழைக்கிறது.



ஒருமுறை ஸ்வீடன் எம்பசிக்கு சென்றபோது, அங்கே பல மாநிலங்களும் தங்களது சுற்றுலா புக்லெட்டை டிஸ்ப்ளே செய்திருந்தார்கள். குமரகம், படகு போட்டி, சேச்சிகள் மசாஜ் செய்வது போன்ற கிளுகிளுப்பான போஸ்டர்களையும் கேரளாக்கார சேட்டன்கள் ஒட்டிவைத்திருந்தார்கள். ஆனால் தமிழகத்தின் சார்பில் ஒன்றுமில்லை. தமிழகம் மொத்தமாக இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலை ஸ்வீடன் எம்பஸியில் மட்டுமில்லை. ஆஸ்திரேலியாவிலும், தென் ஆப்ரிக்காவிலும், மொராக்கோவிலும், நார்வேயிலும், மலேசியாவிலும். தமிழக சுற்றுலாத்துறை உடனே விழித்துக்கொள்ளவேண்டியது முக்கியம். தமிழக அரசின் சார்பில் சுற்றுலாத்துறைக்கென டீட்டெயில்டு ப்ளான்கள் வரையறுக்கப்படவேண்டும். புகழ்பெற்ற விளம்பர படங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் தமிழரான பாலா (ரகுமானின் வந்தே மாதரம் வீடியோ) போன்றவர்களை , அல்லது வேறு சிறந்த ஆட் ஏஜென்ஸிகளை தொடர்புகொண்டு சுருக்கமான அழகான வீடியோ படங்கள் எடுக்கப்படவேண்டும்.

அவற்றில் தமிழகத்தின் பாரம்பரிய பெருமைகள், தமிழகத்தின் சிறப்புகள், கலைகள் அடங்கிய காட்சிகள் இடம்பெறவேண்டும்.அவை, உலகமெங்கும் ஒளிபரப்பட்டவேண்டும். மீடியாவுக்கென தனி சிறப்பு குழு அமைக்கப்பட்டு, அந்த குழு இதனை கவனிக்கவேண்டும்.

தமிழகத்தை பற்றிய சிறப்பான சுருக்க குறிப்புகளும் படங்களும் இணைக்கப்பட்ட பேம்ப்லெட்ஸ் உலகமெங்கும் உள்ள இந்திய தூதரகங்களுக்கு அனுப்பப்படவேண்டும். தமிழக அரசு சுற்றுலாத்துறை இணைய தளத்தில் 24 மணி நேர ஹாட்லைன் ஹெல்ப் செண்டர் இருக்கவேண்டும். இதனை ஒரு கால்செண்டருக்கு அவுட் சோர்ஸ் செய்யலாம். அதன் மூலம் சுற்றுலா பயணிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லலாம். தமிழக சுற்றுலா பயணிகள் மற்றும் மருத்துவ சுற்றுலாவுக்காக தமிழகம் வருபவர்களின் விசா விதிமுறைகள் எளிமையாக்கப்படவேண்டும்..

ஒட்டு போடுவதோடு, உங்க கருத்தையும் சொல்லிட்டு போங்க

அகண்ட பாரதம் ?



அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என்று சீன இணைய தளங்கள், போரம்கள், செமி அபிஷியன் சீன டாக்குமெண்டுகளின் இடம்பெற ஆரம்பித்துவிட்டது

நேபாளத்தில் சீன ராணுவ உதவியுடன் மாவோயிஸ்டு கொம்யுனிஸ்டுகள் ஆட்சியை பிடித்ததோடு, சீனத்துக்கான எல்லா கதவுகளையும் திறந்துவிட்டுள்ளார்கள். நேபாளத்தில் இந்திய மேலாதிக்கம் கிட்டத்தட்ட தன்னுடைய இறுதி நிமிடங்களை எண்ணிக்கொண்டிருக்கிறது.

நேபாளத்தின் எல்லைப்புறங்களில் புதிது புதிதாக முளைக்கும் சீன கேம்புகள் புற்றீசல் போல அதிகரித்துள்ளன. கடந்தமாதம் மட்டும் ஆரம்பிக்கப்பட்ட கேம்புகளின் எண்ணிக்கை 26 ஆம். அதன் தலைவர்களாக ஓய்வு பெற்ற சீன ராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்களின் முக்கிய பணி வேறு என்னவாக இருக்கும் ? லாபி, ஊடுருவல், இந்திய கள்ள பணத்தை புழக்கத்தில் விடுதல், மாவோயிஸ்டுகளுக்கு ராணுவ ரீதியாக உதவுதல் போன்றவையே..

வங்காளதேசத்தின் ராணுவம், சில வருடம் முன் உயிரோடு பிடித்த இந்திய ராணுவ வீரர்களின் கண்களை தோண்டி, பிணங்களை இந்தியாவுக்கு அனுப்பியது. வங்காளதேசம் மூலமாக பெருமளவு ஆயுதங்களும், கள்ள பணமும் வங்கதேசம் வழியாகவும் இந்தியாவுக்குள் ஊடுருவுகிறது. வங்க தேசம் பாக்கிஸ்தான் ஐ.எஸ்.ஐயின் முக்கிய கேந்திரமாக விளங்குகிறது.

இந்தபக்கம் தலிபான்களின் ஆதிக்கம் பாக்கிஸ்தான் ராணுவம் வரை நீள்கிறது. பாக் ராணுவத்தினரில் குறிப்பிடத்தகுந்த அளவில் தலிபான்களை ஆதரிப்பதாக தெரிகிறது. முழுமையான அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத இந்த நாட்டில் எப்போது எந்த முடிவை யார் எடுக்கிறார்கள் என்பதில் ஆள்பவர்களுக்கே குழப்பம் வரக்கூடிய சூழல் உள்ளது.

விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்கு பிறகு இலங்கையோ, தன்னுடைய கதவை அகல திறந்துவைத்துவிட்டு, யார் வந்தாலும் ஓக்கே என்பது போல காத்திருக்கிறது. அதன் பார்வையில் சீனாவும், இந்தியாவும், அமெரிக்காவும் ஏன் தாய்லாந்தும் கூட ஒன்றுதான். நீங்கள் பொறைக்காக காத்திருக்கும் தெருநாயை கற்பனை செய்துகொண்டால் நான் வேறு எதுவும் சொல்லமாட்டேன்.

இந்த நேரத்தில் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கவேண்டிய நிலையில் இந்திய மைய அரசு உள்ளது. இந்த பிராந்தியத்தில் சீன மேலாதிக்கத்தை தலைவணங்கி ஏற்றுக்கொள்வைதை விட தற்கொலை போன்றதொரு முடிவு வேறு எதுவும் இல்லை. கொஞ்சம் இடம் கொடுத்தால் இந்திய சிறு தொழில்கள், வியாபாரம், வளங்கள் என்று அத்தனையையும் தின்று, அழித்துவிட்டு சென்றுவிடுவார்கள் சீனர்கள்.

இதன் உடனடி தீர்வு, அகண்ட பாரதம் என்ற கருத்தாக்கத்தை வளர்ப்பதே. சுற்றியுள்ள நாடுகளை இந்தியாவின் மாநிலங்களாக இணைப்பதே, சிறந்த தீர்வாக அமையும்.

மாநிலம் 29 : இலங்கை

ராஜபக்சேவுக்கு முதல்வர் பதவி. மற்றபடி வடக்கு கிழக்கு மற்றும் கொழும்புவின் அபிவிருத்திக்கான உதவிகள். சர்வதேச அளவில் இருக்கும் அவப்பெயரினை துடைத்தல். இலங்கை தீவில் வாழும் சிங்கள,தமிழர்கள்,முஸ்லீம்களுக்கு வேலைவாய்ப்பு, தொழில் பூங்காக்கள், மற்றைய மற்றைய உதவிகள். இதெல்லாம் கொடுப்பதாக ஆபர் செய்யுங்கள்.

மாநிலம் 30 : நேபாளம்

கலாச்சார ரீதியாக இந்தியாவுடன் உறுதியான பிணைப்பை கொண்டிருக்கும் நேபாளம், முடியாட்சியின் போதே இணைத்திருக்கவேண்டும். இப்போதும் பழுதில்லை. மாவோயிஸ்டுகளோடு பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் சீன மேலாதிக்கக ஏற்பு மனோபாவத்தை உடைத்து, பிஸ்கெட் போட்டு, இந்த மாநிலத்தை இணைக்கவேண்டும்.

மாநிலம் 31: வங்காள தேசம்

மொழி ரீதியாக இந்தியாவுடன் நெருக்கமான தொடர்பு. நாம் உருவாக்கிய நாடு. அப்போதே இந்தியாவுடன் இணைத்திருக்கவேண்டும். விட்டாச்சு. இப்போது ஒன்றும் பழுதில்லை. வறுமையில், இயற்கை சீற்றங்களில் திண்டாடிக்கொண்டிருக்கும் இந்த நாட்டை இப்போது இணைக்காமல் எப்போது இணைப்பது ?

மற்றபடி, பர்மா, பூடான் போன்ற தேசங்கள் விரும்பினால் அவர்களையும் இந்திய நாட்டோடு இணைத்துகொள்ளலாம்.

இந்த நாடுகளை, அதனுடனான லாபிபை கவனிக்க தனி அமைச்சகம் உருவாக்கவேண்டியது காலத்தின் கட்டாயம். அங்கே இருக்கும் பத்திரிக்கைகளை முதலில் இழுத்து, இதுபோன்ற ஒரு கருத்தாக்கத்தை உருவாக்கவேண்டும். அப்படி சேரமாட்டேன் என்று அடம்பிடித்தால் ஒரு வாக்கெடுப்பை நடத்தி, மக்களே சேரச்சொல்லிட்டாங்கபா, என்பதுபோல இணைக்கவேண்டும். இல்லையென்றால், ரொட்டி சாப்பிட்டுவிட்டு, உறங்கிக்கொண்டிருக்கும் ராணுவத்தை அனுப்பி, ஒன்னு ரெண்டு அணுகுண்டுகளை கொழும்பிலும், டாக்காவிலும், காத்மண்டுவிலும் வீசுவோம் என்று மிரட்டி பணியவைக்கவேண்டும்.

Sunday, October 04, 2009

ஓசூர் விமான நிலையத்தின் தேவையும், சாத்தியங்களும், வாய்ப்புகளும்


உங்களிடம் அட்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகையை வைத்து, இடத்தை பார்க்கும் வசதியுள்ள மென்பொருள் ஏதும் இருக்கிறதா ?

அட்சரேகை > 12-39-40 *வடக்கு
தீர்க்கரேகை > 77-46-01 *கிழக்கு

இந்த இடத்தில் நான் சுட்டிக்காட்டுவது என்ன என்று ஒருமுறை பார்த்துவிடுங்கள். கந்தல் துணி போல ஒரு ஏர்ப்போர்ட் தெரிகிறதா ?

அது ஓசூர் ஏர்ப்போட்.

உலக அளவில் இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று புகழப்படும் பெங்களூருக்கு அருகாமையில் உள்ள, தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர் தொழில் நிமித்தமும், சுற்றுலா நிமித்தமும் வரக்கூடிய எலக்ட்ரானிக் சிட்டி, எம்ஜிரோடு, மற்ற சுற்றுலா தலங்களுக்கு கூப்பிடு தூரத்தில் உள்ள ஓசூர்.

ஆயிரக்கணக்கான பன்னாட்டு நிறுவனங்களுடன், அற்புதமான க்ளைமேட்டுடன், பல தொழில்வாய்ப்புகளையும், இந்திய அளவில் பல அறிவுசார் துறை தொழிலாளாளர்கள் வசிக்கும் பெங்களூருடன் 20 நிமிடங்களில் அடையக்கூடிய மிக எளிதான சாலை வசதியை கொண்ட ஓசூர்.

திடீரென்று ஏன் ஓசூர் விமானநிலையம்:

இந்திய விமான துறையின் டைரக்டிவ் படி, 150 கிலோ மீட்டருக்கு உள்ளே வேறு வேறு விமானநிலையங்கள் இருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்லவாம். அதனால் பெங்களூரின் மையப்பகுதில் இயங்கிவந்த HAL ஏர்ப்போட் இப்போது இயங்கவில்லை. அதற்கு பதில் BIA, பெங்களூர் சர்வதேச விமான நிலையம் முழு அளவிலான பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

5000 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த விமான நிலையம், தேவனஹள்ளியில் இருக்கிறது. விமான நிலையம் என்னவோ அருமையானதாக இருக்கிறது, நிறைய பயணிகளை கையாளும் வசதியும் இருக்கிறது.

ஆனால் நகருக்கு மிக அதிகமான தூரத்தில், கிட்டத்தட்ட 45 கிமி, இருப்பதால், பீக் அவர்ஸில் பயங்கர ட்ராபிக். உதாரணமாக ஒருவர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியிலோ அல்லது பன்னாரக்கட்டா பகுதியிலோ நிறுவனம் வைத்துள்ளார், அல்லது வசிக்கிறார். காலை 8 மணிக்கு பெங்களூர் சர்வதேச விமான நிலையம் வந்து இறங்குகிறார். அவர் தேவனஹள்ளியில் இருந்து எம்.ஜிரோடு பகுதிக்கு வர எப்படியும் 2 மணி நேரம் ஆகும். அங்கிருந்து எலக்ட்ரானிக் சிட்டிக்கு போக அரை மணி அல்லது ஒரு மணி நேரம் ஆகிவிடும்.

நல்ல பீக் அவர்ஸில் இதில் மாட்டியவர்களுக்கு சரியாக அரைநாள் வீணாகும். அதுவே அவர் ஓசூர் விமானநிலையம் வருகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஓசூரில் இருந்து 45 நிமிடங்களில் எலக்ட்ரானிக் சிட்டி வந்துவிடலாம். இதனால் நிறைய உள்நாட்டு பயணிகள் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தை விட ஓசூர் பெட்டர் என்று கருதுவார்கள்.

ஓசூரில் ஐடி பார்க்

ஓசூரை பொறுத்தவரை, பெங்களூரும் ஓசூரும் ஒன்றுதான். ஓசூரில் வசிப்பவர்கள் பெங்களூருக்கு வந்து வேலை செய்கிறார்கள். சகாய விலைக்கு வாடகை வீடுகள் ஓசூரில் இருப்பதால், நிறைய பேர் இதனை செய்கிறார்கள்.

ஓசூரில் சிப்காட் போன்ற தொழில் முயற்சிகளை அரசு வெற்றிகரமாக செய்தாலும், டைடல் பார்க் போன்றதொரு ஐ.டி பார்க் அமைக்காதது பெருங்குறை.

அதனால் அவ்வாறு இண்ப்ரா ஸ்ட்ரக்சர்களை பெருக்குவதன் முதல் படி, நல்ல தரமான விமான நிலையத்தை அமைப்பதும், அதன் பின் உள்நாட்டு விமான நிறுவனங்களை ஓசூருக்கு இயக்குமாறு ஊக்குவிப்பதும் ஆகும்.

மானிய விலையில் தரமான இண்ப்ரா ஸ்ட்ரக்சர்களை கொடுத்தால் ஐடி நிறுவனங்களுக்கு கசக்கவா போகிறது ?

ஓசூரை டெவலப் செய்ய அரசு கண்டிப்பாக முயற்சி எடுக்கவேண்டும். இப்போது ஆரம்பித்தால் கூடிய விரைவில் பெங்களூருக்கு இணையாக ஓசூரை கொண்டுவரமுடியும்.

ஜப்பானில் போர்ஸ் இண்டியா F1..

இந்திய பெருமை Force India F1 டீம் ஜாப்பனீஸ் பார்முலா ஒன்னில் க்வாலிபையரில் நான்காவதாவ வந்தது. ஆனால் ரேஸில் அவ்வளவாக சோபிக்கவில்லை.

போர்ஸ் இண்டியாவின் இரண்டு ட்ரைவர்களான Adrian Sutil மற்றும் Tonio Liuzzi முறையே பதிமூன்று மற்றும் பதினான்கு ஆகிய இடங்களை பிடித்ததோடு நின்றார்கள்.

ஏற்கனவே பெல்ஜியம் க்ரான்ப்ரியில் போல் பொஸிஷனில் நின்று வெற்றி கோப்பையை தட்டியதை எண்ணி, இந்த முறை காத்திருந்தேன். இஸ்...இல்லை.

அது பற்றி செய்தியை வெளியிடலாம் என்று கூகிளிடம் படங்களை தேடினால். கிடைத்தது என்னவோ இந்த படங்கள் தான்.



மல்லைய்யா பீர் டின்களுடன் நிற்பதை மேலும் கீழும் (இடுகையில்) காண. !!



அடுத்த ரேஸ் டே ப்ரேஸில்ல. சரி அங்கிட்டாவது பய புள்ளைக சிறப்பாக பர்பார்ம் செய்கிறதா என்று பார்ப்போம்..!!!

Saturday, October 03, 2009

வேளச்சேரி வாழ் பொதுமக்களுக்கு அறிவிப்பு.

இதனால சகலமானவர்களுக்கு அறிவிக்கறது என்னான்னா...

வலையுலகத்தில் அனைவரும் அறிந்த கவிதா அவர்கள், குழைந்தைகளுக்கான டே. கேர் ஒன்றை வழிநடத்த இருக்கிறார்கள்.

அதன் சுட்டி : http://kreativekrayonz.blogspot.com/

இங்கே யாழினி பாப்பாவின் க்ரச்சில், பிள்ளைகளை வழிநடத்தும் விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் ஒன்று.

சாப்பிடும் இடத்தில்:

யாருக்கும் சாப்பாடு ஊட்டுவதில்லை. டேபிளின் மேல் உட்கார வைத்து ஸ்பூன் போட்டு கொடுத்துவிடுகிறார்கள்.

ப்ரட், அதன் பிறகு பழங்கள் என்று தட்டில் வைத்து நீட்டுகிறார்கள், குழந்தைகள் அவர்களாக எடுத்து சாப்பிடுகிறார்கள்.

இசை பயிலும் இடத்தில்:

பல்வேறு இசைக்கருவிகளை வைத்து சொல்லிக்கொடுக்கிறார்கள். கரோகே முறையில் பாடல்கள். குழு பாடல்கள்.

ப்ளே ஏரியாவில் :

சைக்கிள்கள், ஸ்டேக் போர்டுகள் என்று எல்லா உபகரணங்களையும் போட்டுவிடுகிறார்கள். அவர்களே எடுத்து விளையாடுகிறார்கள்.

குழந்தைகளுக்கான ப்ளே ஏரியாவில்:

பல்வேறு வகையான மூளைக்கு வேலை தரும் விளையாட்டு சமாச்சாரங்களை போட்டு விளையாடவைக்கிறார்கள்.

உறங்கும் இடத்தில்:

அமைதியான உறங்கும் இடத்தில் ஸ்ட்ரோலர்களில் போட்டு உறங்கவைக்கிறார்கள். கதவை மூடிவிட்டு வந்துவிடுகிறார்கள். ஏதாவது குழந்தை அங்கே அழுதால், இங்கே ரிசப்சனில் சத்தம் கேட்குமாறு கருவி வைத்துத்துள்ளார்கள். அதன் மூலம் உடனே சென்று பார்க்கிறார்கள்.

சார்ட் மெத்தட்:

எந்த குழந்தை எங்கே இருக்கிறது என்று போர்டில், சார்டில் எழுதி வைத்துள்ளார்கள். அந்த குழந்தைகளை உடனே சென்று பார்க்கலாம்.

வீடியோ கேமரா:

கேட், உறங்கும் ஏரியா, மற்ற இடங்கள் என்று வீடியோ கேமரா மூலம் மானிட்டர் செய்ய ஒரு ஆள்.

வெளியே அழைத்து செல்லுதல்:

ஆறு ஆறு பேர்களாக பிரித்து, தினமும் இரண்டு பேர் அவர்களை வெளியே அழைத்து செல்கிறார்கள். நடக்க முடிந்த குழந்தைகள் நடந்து, சிறிய குழந்தைகளை சிறிய வண்டிகளில் அமரவைத்து. நல்ல காற்றுடன் கூட க்ளைமேட்டில் குழந்தைகள் வெளியே போய்விட்டு வந்து நன்றாக உறங்கும்.

குழந்தைகள் ரப்பஸ்ட்டாக, மிகுந்த தன்னம்பிக்கையோடு, தன்னுடைய வேலைகளை தானே செய்யும் அளவுக்கு உருவாக்குவதை பார்த்தபோது, நாமும் இது போல ஒன்று சென்னையில் ஆரம்பிக்கவேண்டும் என்று நினைத்தேன்....!!!

இப்ப அக்கா ஆரம்பிச்சிருக்காங்க. அவங்களுக்கு வாழ்த்துக்கள்.

அனில் குட்டி அய்யப்பன்:

இந்த அக்காவே ஒரு குழந்தை. அதனால குழந்தைகளை நல்லா பாத்துப்பாங்க. நம்பி விடலாம்.

க்வாட்டர் தாத்ஸ் :

“There are no seven wonders of the world in the eyes of a child. There are seven million.”

Friday, October 02, 2009

சுகுணா திவாகருக்கு வாழ்த்துக்கள் !!!

அப்பா அம்மா என்கிற உணர்வு அற்புதமானது. உட்கார்ந்து அனுபவிங்க ரெண்டு பேரும். வாழ்த்துக்கள்.




சுயமரியாதை உறுதிமொழியை அ.மார்க்ஸ் முன்மொழிய, சுகுணா திவாகர் வழிமொழிய.





திருமணத்தை வாழ்த்த வந்த பாலபாரதி எம்.எல்.ஏ, கொளத்தூர் மணி அண்ணன், அ.மார்க்ஸ்.


காலம் தான் எவ்வளவு வேகமா ஓடுது இல்லையா ?? குழந்தை படம் அனுப்பவும்...!!!

Thursday, October 01, 2009

வெண்ணை போல் ஒருவன் (அ) முடியல பார்ட் 2



நேரம் : காலை 9 மணி
இடம் : போலீஸ் கமிஷனர் அலுவலகம்.

கமிஷனர் ஏ.பீ.சீ.போறார் மொபைல் ஒலிக்கிறது.

போறார் : ஹலோ. கமிஷனர் போறார் ஹியர். ஹூ ஈஸ் திஸ் ?

மிடில் மேன் : ஹெல்லோ. நான் மிடில் மேன் பேசறேன். சி.எம் கிட்ட பேசனும். என்னோட நெகோஷியேட் பண்ணப்போறது யாரு ?

போறார் : முண்டம். சி.எம் கிட்ட பேசனும்னா சி.எம் வீட்டுக்கு போன் போடவேண்டியது தானே ? ஏண்டா எனக்கு போன் பண்றே ?

மிடில் மேன் : சென்னையில இன்னும் ஒரு மணி நேரத்துல வெடிக்கறமாதிரி குண்டு இருக்கு. அதே மாதிரி சிட்டி முழுக்க நாலு குண்டு வெச்சிருக்கேன்.அதனால தான் உங்களை கூப்பிட்டேன்.

போறார் : யோவ்...ரியல்லி ? நீ குண்டு வெச்சது உண்மையா ? ஆர் யூ சீரியஸ் ?

மிடில் மேன் : ஆமா இவர் மிர்ச்சி சுச்சி பாரு. போன் போட்டு காமெடி பண்ண ? யோவ் உண்மையிலேயே குண்டு வெச்சிருக்கேன். உடனே பாம் ஸ்க்வாடை அனுப்பி தேடு. மஞ்ச ஒயர விட்டுட்டு பச்ச ஒயர வெட்டு.

போறார் : எந்த ஒயரை வெட்டனும்னு பாம் ஸ்க்வாடுக்கு தெரியும். நீ குண்டு வெச்ச இடத்தை பத்தி சொல்லு.

மிடில் மேன் : ஐ ஐ. கஷ்டப்பட்டு குண்டு வெச்சது நானு, இடத்தை சொன்னா நீ நோவாம நோம்பி திங்கலாம்னு பாக்குறியா ? தேடி எடுய்யா நீயே ?

போறார் : மிடில் மேன். ப்ளீஸ் ப்ளீஸ். எங்க இருக்குனு ஒரு க்ளூவாவது குடேன் ப்ளீஸ்..

மிடில் மேன் : சரி ரொம்ப கெஞ்சற. இந்த மேட்டர் முடிஞ்சதும் ரெண்டு பாக்கெட் நேந்திரம் சிப்ஸ் தரேன்னு சொல்லு. க்ளூ தரேன்.

போறார் : (அல்ப்ப பாண்டி பயபுள்ள). சத்தியமா ஏற்பாடு பண்றேன். க்ளூ குடுத்து தொலை.

மிடில் மேன் : அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷன்ல தண்ணி வராத எடம் எதுன்னு பார்த்து அங்க தேடச்சொல்லு.

போறார் : பாத்ரூமா ?

மிடில் மேன் : அதே. அதே. வேற பால்கனியிலயா தண்ணி வராது ? என்ன கமிஷனரோ ? அஞ்சு நிமிசத்துல போன் பண்றேன். அப்புறம், வீட்ல எல்லாரும் சவுக்கியமா ? இந்த புட்டுல வாழைப்பழத்தை பிணைஞ்சு சாப்பிட்டா தொண்டையில அடைக்குதே அதுக்கு என்ன செய்வீங்க கேரளாவுல ?

போறார் : (போனை அக்குளில் மறைத்துக்கொண்டு) மிஸ்டர் வெல்லாரியா, சொல்ல மறந்துட்டேன். இந்த காலை ட்ரேஸ் பண்ணுங்க.

மிடில் மேன் : எனக்கும் கேட்டுது. காலை ட்ரேஸ் பண்றதை மெதுவா சொல்லக்கூட தெரியலை. நீ எல்லாம் என்ன கமிஷனர் ?

...........பீப் பீப் பீப்.........

வெல்லாரியா : சார். ரொம்ப ஷார்ட் கால். ட்ரேஸ் பண்ண முடியல.

போறார் : யோவ் மணிக்கணக்கா பேசிக்கிட்டிருந்தேனே ?

வெல்லாரியா : சார், நீங்க உங்க வீட்டம்மாக்கிட்ட பேசுறீங்கன்னு நினைச்சேன்.

போறார் : சரி அடுத்த காலையாவது ஒழுங்கா ட்ரேஸ் பண்ணித்தொலை...

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

(பாம் ஸ்க்வாட் பாமை கண்டுபிடித்து மஞ்சள் ஒயரை விட்டுவிட்டு பச்சை ஒயரை வெட்ட பாம் செயலிழக்கிறது. கமிஷனர் போறார், வார் ரூமுக்கு போறார். எல்லோரும் அங்கே அசம்பிளாகி நிற்கிறார்கள்)

போறார் : யாருக்காவது மூச்சா போகனும்னா பாத்ரூம் போய்ட்டு வாங்க.

எல்லோரும் கோரஸாக : நோ சார். ஏற்கனவே நாங்க போயிட்டோம்.

போறார் : இனிமே இந்த ரூம்ல நடக்கறது இந்த நாலு செவுத்துக்குள்ள தான் இருக்கனும்.

முந்திரி : சார், மேல ஒன்னு கீழ ஒன்னுன்னு ரெண்டு செவுரு இருக்கே, அது வழியா போலாமா ?

போறார் : இவனை தூக்கி போட்டு மிதிங்கடா. (முந்திரியை எல்லோரும் கும்முகிறார்கள்). எல்லோரும் அலர்ட்டா இருங்க. அவன் போன் பண்ணுவான். வெல்லாரியா ட்ரேஸ் பண்ணுவான். போலீஸ் போய் அவனை புடிச்சுடனும்..சி.எம், பி.எம், சீப் செக்கரட்டரி எல்லாருக்கும் போன் போட்டு சொல்லுங்க. ஆயிரம் போலீஸை சென்னை சிட்டியை சுத்தி சுத்தி வரச்சொல்லுங்க...

..ரிங் ரிங்..

போறார் : வேற நம்பர்..ஆனால் அவன் தான். ஆல் டீம் அலர்ட்...

பெண் குரல் : சார், ஐசிஐசிஐ பர்சனல் லோன் டிப்பார்ட்மெண்ட் சார். பத்து பர்சண்ட் இண்ட்ரஸ்ட். உங்களுக்கு இண்ட்ரஸ்ட் இருக்குனா சொல்லுங்க சார். பார்க், பீச் எங்கியாவது மீட் பண்ணலாம்..

போறார் : ஷிட். போனை வைம்மா. படற லோல் பத்தாதுன்னு லோன் குடுக்க வந்துட்டா. எந்த லோனும் வேண்டாம்...

வெல்லாரியா : சார். காலை ட்ரேஸ் பண்ணியாச்சு. பக்கத்து தெருவுல இருந்து வருது சார்.

போறார் : டேய்...என்ன கொலகாரனாக்காத..எரிச்சலாகிறார்.

...ரிங் ரிங்...

போறார் : இது கண்டிப்பா அவன் தான். எவ்ரிபடி அலர்ட்...

மிடில் மேன் : ஹாய். டைம் பாம் குண்டை எடுத்துட்டீங்களா ? அதுல இருந்த டைம் பீஸ் சரியா அடிக்காது. அதை யூஸ் பண்ணனும்னு நினைக்கவேண்டாம். ஒருமுறை காலை 5 மணி ட்ரெயினுக்கு அலாரம் வெச்சா, சாயங்காலம் 5 மணிக்கு அடிச்சுது.

போறார் : யோவ்..என் கிட்டயே டைம் பீஸ் இருக்கு. நீ வேற எங்க குண்டு வெச்சிருக்க அதை சொல்லு...

...பீப் பீப் பீப்....

போறார் : வெல்லாரியா...ட்ரேஸ் பண்ணியா ? கால் திடீர்னு கட்டாயிருச்சு...

வெல்லாரியா : சார். அவன் ஒரே நம்பர்ல இருந்து தான் போன் பண்ணுறான். திரும்ப அவனுக்கு ஒரு மிஸ்ஸுடு கால் கொடுங்க. ஒர்க் ஆவுதா பார்ப்போம்...

போறார் : முண்ட கலப்பை. ஏன் போனே பண்ணலாமே ? கவர்மண்டு காசு தானே ?

வெல்லாரியா : க்ரேட் ஐடியா சார்.

..கமிஷனர் போறார் திரும்ப அதே எண்ணுக்கு அழைக்கிறார்...

போறார் : ரிங் போவுது. ரிங் போவுது. ஆல் டீம் அலர்ட். எல்லோரும் அலர்ட்.

பியூன் ஆறுமுகம் : ஹல்லோ ?

போறார் : மிடில் மேன், என்ன குரலை மாத்தி பேசுற ?

பியூன் ஆறுமுகம் : யோவ். நான் எதுக்கு குரலை மாத்தி பேசனும் ? நீ யார் அதை சொல்லு..

போறார் : நான் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.பீ.சீ.போறார் பேசறேன். யாருய்யா நீ ?

பியூன் ஆறுமுகம் : சாசாசார்...நான் கீழ்ப்பாக்கம் பைத்தியக்கார ஆஸ்பத்திரி ஸ்டாப் ஆறுமுகம் பேசறேன் சார். டாக்டர் ரூம்ல மறதியா வெச்சுட்டு போன செல்போனை ஒரு பைத்தியம் எடுத்துக்கிச்சு சார். இப்பத்தான் சார் கஷ்டப்பட்டு புடுங்கினோம்.

போறார் : தேங்கியூ வெரிமச். டேக் கேர் ஆறுமுகம்...

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

முன்னாள் கமிஷனர் ஏ.பீ.சீ போறார், பீச்சில் டாபர் மேன் நாயுடன் தனியாக பேசிக்கொண்டிருக்கிறார்.

போறார் : யார் அந்த மிடில் மேன். காத்து மாதிரி வந்தான். லூசு மாதிரி பேசினான். பைத்தியத்தோட போனுக்கு சி.எம் வரைக்கும் தொந்தரவு பண்ணதால என்னோட வேலைக்கும் வேட்டு வெச்சான். பச்சை ஒயரை செவுத்துல இருந்து கட் பண்ண பாம் ஸ்க்வாட் எந்த பள்ளிக்கூடத்துல படிச்சானுங்களோ ? எனிவே..ஐ லைக் டு பீ எ மிடில் மேன். ஐ யம் எ ஜெண்டில் மேன். ஆவேனே சூப்பர் மேன். லா லா லா...
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....