தேடுங்க !

Monday, March 29, 2010

சென்னை வலைப்பதிவர் கம்பெனி

தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்துக்கு வாழ்த்துக்கள்...!!! நான் உங்கள் பக்கம்...!! என்னையும் ஆட்டத்துல சேர்த்துப்பீங்கதானே ? பத்தி எழுத்து பத்தி பத்தியா (பத்தி எழுத்துன்னா ஒரு பத்திதானே இருக்கனும் ? )எழுத நேரம் இல்லாதததால் ஒரு வீடியோ வலைப்பதிவாக போட்டுட்டேன்..!!! என்னுடைய கருத்தாக சென்னை வலைப்பதிவர் கம்பேனி அல்லது தமிழ் வலைப்பதிவர் கொம்பேனி என்ற பெயரையும் முன்மொழியுமாறு கேட்டுக்கொள்கிறேன்..!!உண்மைத்தமிழன் புனிதப்போர் குறும்பட டெக்னிக்கை வீடியோவில் உபயோகித்துள்ளேன்..உங்கள் கருத்துக்களையும் ஓட்டுக்களையும் அள்ளி தெளிங்க. நீங்களும் நேரத்தை மிச்சப்படுத்த வீடியோ பதிவுகள் போடுங்க. கதை, கவிதை, கட்டுரை போன்ற ஊடக வடிவங்கள் செத்துக்கொண்டுவருவதை உறுதிபடுத்துங்க...!!!

Wednesday, March 24, 2010

டைம் மெஷினும் தமிழ் எழுத்து சீர்திருத்தமும்

ஹெச்.ஜி.வெல்ஸ் எழுதிய டைம் மெஷின் புத்தகத்தை படிச்சிருக்கீங்களா ? அட ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்ன ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பயணம் செய்தால் டைம் மெஷினை உருவாக்கலாம் அப்படீன்ங்கற தியரியப்பத்தி கொஞ்சமாவது தெரியுமா ? கவலைப்படாதீங்க. எனக்கும் மேல் சொன்ன ரெண்டு விஷயமும் ஒன்னும் தெரியாது. ஆனா இந்த பதிவில் கொஞ்ச நேரம் டைம் மெஷின்ல ஒரு முன்னூறு ஆண்டுக்கு முன்னால் போய் பின்னால் நடந்த விஷயங்களை ஆற அமர பார்க்கலாமாம்.

நேத்து பாயும் புலியும் பதுங்கும் நாகமும் அப்படீன்னு ஒரு படம் பார்த்துக்கிட்டிருந்தேன். அதாங்க க்ரச்சிங் டைகர் ஹிட்டன் ட்ராகன். அதுல ஜெட்லி ஒரு எடத்துல நிக்காம அப்படியே அந்தரத்துல தாவி தாவி. அதுக்கு பேரு உடான் கலையாம். மரத்து எலையில. மூங்கில் குச்சில..நின்னு வாளை சுழட்டி சுழட்டி அடிச்சு. அப்படியே தூங்கிப்போனதுல டைம் மெஷின்ல போறமாதிரி ஒரு கனவு. திடீர்னு மேட்ரிக்ஸ் படத்துல வர்ர மொட்டை கையில ரெண்டு மாத்திரையை நீட்டி, ஒன்ன இப்பவே போடு, உன்ன எப்பவாவது போடறேன் அப்படீன்னு மண்டையிலேயே ரெண்டு போட்டா...

விழிப்பு வந்திருச்சு...எந்திரிச்சு பார்த்தேன்...சுவரில் இருந்த கடிகாரம். அட சுவரில் கடிகாரமே இல்லை..ஆனால் நேரம் தெரியுதுங்க...நேரம் சரியாக 23 July 2310 10:20..அய்யோ. முன்னூறு வருஷம் முன்னாடி வந்துட்டமா ? கையை நீட்டுறேன்..டேபிள்ள தமிழ் நாளிதழ்..என்னய்யா இது...தினத்தந்தின்னு இருக்கு...கட்டம் கட்டி சின்னதா ஓரத்துல் விளம்பர விடீயோ ஓடுது...அதுக்கு மேல செய்தி எதுவும் புரிய மாட்டேங்குது. தாய்லாந்து எழுத்து மாதிரி இருக்கு...ஏய் இது தமிழ்தானே ? இல்லையா ? என்ன ஒன்னும் புரியல.அய்யோ..அய்யய்யோ.அய்யய்யய்யய்யோ

இணையத்தை எழுத்து கூகிள்ல டைப் செய்தேன்...tamil fonts change history. கீழ இருக்க செய்தி வந்தது..

அதுக்கு மேல இருக்க இருநூறு வருஷத்துக்கு ஏழெட்டு தடவை மாற்றிய தகவல் இருக்கு. வெறும் எண்களை மட்டும் தான் பார்க்க முடியுது. ஆனால் எழுத்தை படிக்க முடியல. அந்த கடைசி எழுத்துக்கள் எப்படி இருந்ததுன்னா..இருந்ததுன்னா..என்று யோசிச்சிக்கிட்டு இருந்தப்போ லைட்டா பொறி தட்டி இப்படி டைப் செய்தேன்..

Kind Raja Raja sculptures (ராஜராஜன் கல்வெட்டுக்கள்)


ஆஹா.. தமிழ் கல்வெட்டுக்களை அப்படியே வெறுமனே படிக்க நமது அரசும் முதல் அமைச்சர்களும் தொடர்ந்து எழுத்துக்களில் மாறுதல் செய்ய, பழமையும் புதுமையும் கலந்த எழுத்து தமிழ் எழுத்து என்று நிரூபணம் செய்ய, இப்படி செய்துள்ளார்கள். நான் தான் முண்ட கலப்பையாக என்னுடைய பழைய இ கலப்பையை வைத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களுடைய தமிழை டைப் செய்துகொண்டிருக்கிறேன்...அவ்வ்வ்வ்...

போதும் விளையாட்டு. இனி சீரியஸாக பேசலாம்..


தமிழ் எழுத்து சீர்திருத்தம் தேவையான ஒன்றா ? ரிட்டையர்டு ஆன பெருசுகள் மானாட மயிலாட ப்ரோக்ராம் பார்த்து வாழ்க்கையை ரசிப்பதை விட்டு, இப்படி இருக்கிற தமிழை திருத்துகிறேன் பேர்வழி என்று கிளம்பினால் எப்படி அய்யா ? இப்படி ஒரு சீர்திருத்தத்தின் அவசியம் என்ன ? அச்சு தொழிலுக்கு தேவையான சில சீர்திருத்தங்களை தந்தை பெரியார் செய்தபோது அதனை யாரும் எதிர்க்கவில்லையே ? மாறாக வரவேற்கவே செய்தார்கள். ஆனால் இப்போது இந்த சீர்திருத்தம் ஏன் தேவை என்று கேட்டால் அதற்கு கிடைக்கும் பதில் மிகவும் நகைச்சுவையாக அல்லவா இருக்கிறது ?

வெளிநாட்டில் இருப்பவர்களின் குழந்தைகள் தமிழ் கற்க வசதியாக தமிழை சீர்திருத்துகிறார்களாம். எந்த வெளிநாட்டு குழந்தை தமிழை கற்கிறது ? என் மகளுக்கு நான் நார்வேஜிய மொழியும் ஆங்கிலமும் அடிப்படையாக கற்றுக்கொடுக்கிறேன். காரணம் அவள் வெளியிடங்களில் செல்லும் போது குறைந்தபட்சம் சமாளிக்கவேண்டுமே, மற்ற பிள்ளைகள் நார்வேஜிய மொழி பேசும்போது என் மகள் தனித்து விடப்பட்டுவிடக்கூடாதே என்பதால் நானும் என் மனைவியும் நார்வேஜியன் பழகுகிறோம், என் மகளுக்கும் படிப்பிக்கிறோம். மேலும் ஆங்கிலமும் தேவையான மொழி என்பதால் அதனையும் கற்பிக்கிறோம். தமிழும் கன்னடமும் இயல்பாக சில வார்த்தைகள் பேசுகிறாள். அவள் தமிழ் எழுத நினைக்கும் காலத்தில் அவள் கண்டிப்பாக எந்த கடினமான மொழியையும் கற்கும் திறன் பெற்றிருப்பாள் என்றே கருதுகிறேன்...

எனக்கு கொரிய மொழி எழுத படிக்க பேச தெரியும். நான் அதனை பழகிக்கொள்ளவில்லையா ? ஜப்பானிய மொழியை ஜப்பானியர்களை விட இயல்பாக என்னுடைய நன்பன் பேசுவான். அவன் தமிழன். கொரிய சீன ஜப்பானிய மொழிகளை விடவா அய்யா தமிழ் கடினமான மொழி ? உயிர் , மெய், உயிர் மெய் என்று பிரித்த உயர்வான மொழியாயிற்றே. அதை கற்பதா கடினம் ? ஆர்வமும் தேவையும் இருந்தால் எந்த மொழியாக இருந்தாலும் பழகிவிடமாடோமா ?

மேலும் நிரலாக்கத்துக்கு தேவையான CPU வேகத்தை அதிகரிக்க Parsing வேகமாக இருக்க இந்த மாற்றம் தேவை என்று ஒரு அடிப்படை அற்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. எங்காவது மாக்கான் இருப்பான் அங்கே போய் சொல்லுங்கள். பெண்டியம் போர், கோர் டு டியூவோ, டூவல் கோர் என்று வந்துள்ள ப்ராஸசர்களின் திறன் பல மடங்கு மேம்பட்டு விட்ட நிலையில், இந்த சாதாரண பார்ஸிங் கூட செய்ய திறன் இல்லாத கணினி இப்போது அரசு அலுவலகங்களில் கூட கிடையாது.

இப்போது இருக்கும் எழுத்துருக்களை மாற்றினால், அச்சுத்துறையில் பல மாறுதல்கள் செய்யவேண்டும். இப்போது பதிப்பகத்துறையை லாபகரமாக நடத்துவது என்பது ஒரு சில சிறந்த மேலாண்மையில் இருக்கும் பதிப்பகங்களாலேயே சாத்தியப்பட்டு கைவரப்பெறுகிறது. மற்ற சிறிய பதிப்பகங்கள் நட்டம் இல்லாமல் புத்தகங்களை பதிப்பிப்பது கடினமான ஒன்றாக உள்ள நிலை. மேலும் கைக்காசை போட்டும், புத்தகங்களின் மீதுள்ள தனியாத காதலினாலும் புத்தகங்களை பதிப்பிக்க நினைக்கிறவர்களுக்கு மேலும் சுமை கூட்டும் செயல் அல்லவா இது ? இதை கற்று உணர்ந்து முனைவரானவர்கள் சிந்திக்கவேண்டாமா ?

மேலும் இப்போது நான் தட்டச்ச உதவும் இ கலப்பை மென்பொருளை இயற்றிய முகுந்த் கூட மீண்டும் இந்த மென்பொருளின் நிரலியை தேடி, அதில் மாறுதல்கள் செய்து மீண்டும் அனைவருக்கும் அனுப்பவேண்டும். அதில் ஏற்படும் வழுக்களை சரி செய்யவேண்டும். இதற்கான நேரத்தை, நிதியை அவருக்கு தருபவர்கள் யார் ? இது போன்ற இலவச மென்பொருட்களை கூட இந்த மாறுதல்கள் பாதிக்குமே அய்யா ? இதை ஏன் நீங்கள் சிந்திக்கவில்லை ?

தமிழுக்கு உண்மையில் சேவை செய்யவேண்டும் என்று நினைத்தால் என்ன பணியா இல்லை ? அறிவியல் தமிழாம் நான்காம் தமிழ் வார்த்தைகளை உருவாக்குதலும், அதை விவாதித்தலும் ஆகிய மிகப்பெரிய பணி காத்திருக்கிறதே ? தகவல் தொழில்நுட்ப துறையில், இயற்பியலில், வேதியலில் தினம் தினம் அறிஞர்கள் உருவாக்கும் சொல்லாடல்களையும் தமிழுக்கு கொண்டுவரவேண்டுமே ? செர்ன் லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் (Large Hadron Collider) என்ற வார்த்தைக்கு தமிழ் வார்த்தை என்ன ? சி.ஆர்.எம் ? பிங் பேங் ? அகலப்பாட்டை என்றால் ப்ராட்பேண்ட். Wireless LAN ? Wi-Max ? மூன்றாம் தலைமுறை அலைபேசியில் உள்ள RNC ? Node B ? இதை தமிழ்படுத்த யாரும் முயலக்கூட இல்லை என்பது வேதனை.

மேலும் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கி பீடியாவில் ஆங்கிலத்துக்கும் ஜெர்மனிக்கும் ரஷ்ய சீன மொழிகளுக்கும் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் நாளும் உருவாகின்றன. ஆனால் நாமோ சமூகம் சார்ந்து, மதம் சார்ந்து, அல்லது வெறுமனே வெட்டியாகவேனும் எதாவது மொக்கை போட்டுக்கொண்டு இணையத்தில் நேரத்தை வீணடிக்கிறோமே தவிர - என்னையும் சேர்த்து, இன்றைக்கு இரண்டு உபயோகமான கட்டுரைகளை இணையத்தில் எழுதினேன் என்ற உள்ளார்ந்த திருப்தியுடன் யாராவது செயல்படுகிறார்களா - ஒரு சிலரை தவிர ? மனதுக்கு வலிக்கிறது..

பேரும் புகழும் கிடைக்கவேண்டுமாயின் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் எங்களின் மன வருத்தத்தில் அல்ல. எங்களுக்கு தேவையில்லாத சுமையை ஏற்றி அல்ல. இந்த முயற்சியை தமிழக அரசு கைவிடவேண்டும். ஏதோ ஒரு சிலரின் ஆலோசனைகளை கேட்டு, அனைத்துலக தமிழரிடமும் விவாதிக்காமல் இந்த எழுத்து சீர்திருத்தம் செயல்படுத்தப்படுமாயின் இந்த தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்ற நிலை ஏற்படும். ஆகவே பெருந்தன்மையோடு இந்த முயற்சியை கைவிடுங்கள்.

பின் குறிப்பு

தமிழக அரசு, தமிழ் எழுத்துருக்காக லட்சக்கணக்கான தொகையினை செலவு செய்வதாக அறிந்தேன். ஒருங்குறி (unicode) என்று ஒன்று இருப்பதாக, அது முழுவதும் இலவசம் என்றும் யாரும் உங்கள் காதில் போடவில்லையா ? அண்ணாக்கண்ணன் முதல்வர் கலைஞரை சந்தித்தபோது இது பற்றி சொன்னதாக இணையத்தில் தெரிவித்தாரே ? அது பற்றி மேலும் விசாரித்து, தமிழக அரசின் இணைய தளங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் ஒருங்குறியை பயன்படுத்தினால் கோடிக்கணக்கான ரூபாய்களை மிச்சப்படுத்தலாம்.

கோவை மாவட்டத்தில் காலை சிற்றுண்டி கொடுக்கிறார்களாம் மாணவர்களுக்கு. இரண்டு கோடியாம் செலவு. கேட்டமாத்திரத்தில் கண் கலங்கியது எனக்கு. நீங்கள் சத்துணவுக்காக பசியாக காத்திருந்த மாணவர் எனில் அந்த வலி புரியும். அதைப்போல சென்னையிலும் செங்கல்பட்டிலும் விழுப்புரத்திலும் திருச்சியிலும் தஞ்சையிலும் மதுரையிலும் கொடுங்கள். இது போன்ற வீண் செலவுகளை தவிருங்கள் அய்யா..புண்ணியமாக போகும்..
.
.
.

Monday, March 22, 2010

பகுத்தறிவும் இந்து ஞான மரபும் !!

எல்லாருக்கும் ஏற்ற இடுகை அல்ல..Non G. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், குழந்தைகள், மெல்லிய இதயம் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள், இந்த பதிவை படிக்காமல் தவிர்க்கவும்...இடுகையை வலது மூலையில் X இருக்கும் பொத்தானை அழுத்து மூடிவிடவும்..!!கடந்த பதிவில் என்னுடன் விவாதம் செய்ய முயன்ற நன்பர்களுக்கும், திட்டிய பெயர் உள்ளவர்கள், வெறும் ப்ரொபைல் மட்டும் உள்ளவர்கள் மற்றும் அனானிகளுக்கும் சரியான பதில் சொல்லமுடியாத நிலை. வேலை. வேறு காரணமில்லை, மன்னித்துக்கொள்ளுங்கள். பதிவை எழுத முயன்றபோது அதற்குள் இணையத்தில் நடந்த பல்வேறு விஷயங்கள் என்னை பாதித்தன. என்னுடைய கேள்விகள் சந்தேகங்கள் இந்த பதிவில். No Judgment. எந்த முன்முடிவும் இல்லை என்னிடம்..

இந்து ஞான மரபு.இதுபோன்ற பஸ் வேர்ட்களை (Buzz Words) இப்போது தான் பார்க்கிறேன். இந்து ஞான மரபு வாளின் மீது மதம் நடத்திய இஸ்லாமிய, அதிகாரத்தின் மீது மதம் பரப்பிய கிறித்தவ மதங்களின் அழுத்தத்தில் இருந்தெல்லாம் தாக்குபிடித்தததாக ஜெயமோகன் நிறுவுகிறார்..மேலும் ஆதிவாசிகளின், பழங்குடிகளின் தெய்வங்களையும் (வேலன் முருகன், சபரிமலை மணிகண்டன்) தன்னுள் இழுத்துக்கொண்டதாம் இந்து ஞான மரபு..அப்படி என்றால் முகமதுவையும், அல்லாவையும், இயேசுவையும், மரியாளையும் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற ஒருவரின் கேள்விக்கு பதிலை காணோம் !!

ஆனால் இந்து ஞான மரபு அதன் so Called டிவோட்டீஸ்களுக்கு என்ன செய்தது ? இந்து ஞான மரபு ஏன் அதில் இருந்து சாதி வேறுபாடுகளை களைய முயலவில்லை ? மனு தர்மம் என்பது இந்து ஞான மரபின் ஒழுங்குதானே ? மனு தர்மம் தானே சாதி அமைப்பை இன்னும் வீரியமாக நிறுவுகிறது ? இந்து ஞான மரபின் வழி வந்த சமூகம் என்றால் அதில் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை சமூகம் மேல் எழ வாய்ப்பே இல்லை என்பது தானே உண்மை ?

இந்து ஞான மரபு, தத்துவம் மற்றும் விவாதங்களினாலேயே தன்னை நிலை நிறுத்தியது என்கிறார் ஒருவர். அப்போது சமணர்கள் ஏன் படுகொலை செய்யப்பட்டார்கள் ? அவர்கள் விவாதத்துக்கு தயாராக இல்லையா என்ன ? பவுத்தமும் சமணமும் ஆபிரகாமிய மதங்களின் தாக்கத்துக்கு முன்பே அல்லவா அழிக்கப்பட்டன ?

பகுத்தறிவை பற்றி கொஞ்சம் சொல்லவேண்டும். பகுத்தறிவும், நாத்திகமும் வெவ்வேறு என்பதுவாக ஒரு கதையாடல் அப்படியே தூவப்படுகிறது இணையத்தில். அதிலும், உண்மை பகுத்தறிவு வேறாம், போலி பகுத்தறிவு வேறாம். அது என்ன என்று இன்னும் கொஞ்சம் வெளக்குங்க, வெளங்கிக்கறேன்...

ஏன் பெரியாரிஸ்டுகள், நாத்திகர்கள் இந்து மதத்தை முதலில் கையில் எடுக்கவேண்டும் ? மூடநம்பிக்கைகளை எளிதாக உள்வாங்கிக்கொள்ளும் மதம் என்ற வகையிலும், திரட்சியான மக்களால் நம்பபடும் மதம் என்ற வகையிலும் தான் என்பது என் கருத்து. மற்ற ஆபிரகாமிய மதங்களில் மூட நம்பிக்கை இல்லையா, பெண்ணடிமைத்தனம் இல்லையா, சாதி வேறுபாடுகள் இல்லையா என்றால் இருக்கிறது. அதையும் சாடவேண்டிய தேவையும் இருக்கிறது.

ஏன் இந்து மதத்தை நோக்கி கேள்வி எழுப்புகிறாய் ? இஸ்லாமின் பர்தாவை கேள்விகேள், கிறித்தவ பாதிரிமார்களின் ஒழுக்கமின்மையை கேள்விகேள் என்றால், அதையும் செய்யத்தானே போகிறோம். முதலில் உங்களை கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள். மற்ற ஆபிரகாமிய மதங்களை நாங்கள் கேள்விகேட்கும்போது அவர்கள் பதில்சொல்வார்கள்...

ஒரு மதத்தை கேள்வி கேட்கும்போது, அதனை நம்பும் மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறாயே என்கிறீர்கள் ? வலியில்லாமல் ஊசி போடமுடியுமா ? உங்களுக்கிருப்பதோ வைரஸ் காய்ச்சலாச்சே ? மாத்திரை எப்படி கொடுக்கமுடியும் ? புண்படுத்தாமல் எப்படி பண்படுத்த முடியும் ? கரடு முரடான நிலத்தை உழவு செய்யும்போது பூமிக்கு வலிப்பது போல் தோன்றினாலும்,  நல்ல பயிர் செய்ய நிலத்தை காயப்படுத்தி உழத்தானே வேண்டும் ?

இந்து ஞான மரபோ, ஆபிரகாமிய மதங்களோ, சோதிடமோ, மூட நம்பிக்கைகளோ, பழக்க வழக்கங்களோ, யாரையும் பாதிக்காத வரையில் யாருக்கும் எந்த தொல்லையுமில்லை. ஆனால் அப்படி இல்லையே ? ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அது தொடுகிறதே ?

மரபூர் ஜய சந்திரசேகரன் என்று ஒருவர் உண்டு. அவர் செய்வதென்ன ? எங்கெல்லாம் இந்து கோயில்கள் கவனிப்பாரற்று விடப்படுகிறதோ அங்கே சென்று இறங்கி, அந்த கோயிலை சுத்தம் செய்து பூஜைகள் நடக்க வழி செய்கிறார். அவர் கோயிலை சுத்தப்படுத்துக்கிறாரோ, மரபை காக்கிறாரோ அதை பற்றி நான் சொல்லவரவில்லை. அவர் அந்த கோவில் மூலமாக ஒரு பூஜை நடத்தும் அர்ச்சகரின் வாழ்வில் ஒளியேற்றுகிறார். இது போன்ற ஒரு சில பாஸிட்டிவ் சைட் இருந்தாலும், பல்லாயிரக்கணக்கான நெகடிவ் விஷயங்கள் நடந்துகொண்டுதானே இருக்கின்றன. ? பட்டியல் போட்டால பதிவு நாராசமாகிவிடும்...அந்த கோயிலுக்கு பக்கத்தில் இருக்கும் சேரியில் பஞ்சாயத்து டிவி பார்த்துக்கொண்டிருக்கும் தலித் குழந்தைகளுக்கு எதாவது செய்தாரா என்பதை அவர்தான் வந்து சொல்லவேண்டும்...

என்னுடைய மாமனார் தான் சார்ந்திருக்கும் ராமகிருஷ்ன மடத்துக்கு மாதம் 7 ஆயிரம் ரூபாய் தருகிறார். பூஜை புனஸ்கார நெய்வேத்தியம் மற்றும் அங்கே உழைக்காமல் வயிறு வளர்க்கும் அர்ச்சகர்களுக்காக இதை செய்கிறார். ஆனால் அவர் வீட்டில் பதினைந்து ஆண்டுகளாக சமையல் வேலை செய்யும் பிற்படுத்த்தப்பட்ட செல்விக்கு மாதம் 500 சம்பளம். 50 ரூபாயை உயர்த்துமாறு இரண்டு மாதமாக போராடுகிறார் செல்வி. இது ஒரு சிறிய உதாரணம்.

இந்து ஞான மரபை போற்றுவதால் பயன் பெறுபவர்கள் யார் ? அவர்கள் இந்து மதத்தை சார்ந்த விளிம்பு நிலை மனிதர்களா ? விதர்பாவில் ஐந்து ஆயிரம் ரூபாய் கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயி இந்து ஞான மரபை சேர்ந்தவரே. ஏன் அவருக்கு இந்து ஞான மரபு உதவி செய்யவில்லை ? ராமகிருஷ்ண மடத்தில் நெய்யாய் எரிந்த பணம் ஏன் அங்கே செல்லவில்லை ?

இந்து ஞான மரபின் உள்ளார்ந்து இணைந்துள்ள ஒன்று சோதிடம். சோதிடம் ஒரு ஹம்பக் என்று பலரும் உணர்ந்தே உள்ளார்கள். சோதிடத்தால் பயன் அடைபவர், அந்த சோதிடத்தை தொழிலாக செய்யும் சோதிடரே. (வாத்தியார் அய்யா மன்னித்தருள்க). அந்த சோதிடர் நல்லவராக இருந்து, நல்ல வார்த்தைகளை அள்ளிவிட்டால் நன்று. ஆனால் செவ்வாய் தோஷம் போன்ற தோஷம் பரிகாரம் போன்ற உடான்ஸுகளை விட்டு, அவர் பையையும் ரொப்பிக்கொண்டு, அவரை தேடிப்போனவர்களுடைய குடும்பத்திலும், வாழ்விலும் விளையாடுபவர்கள் எத்தனைபேர் ? வான சாஸ்திரத்தை (astralogy) திருடி அதை சோதிடத்துடன் இணைத்து, சோதிட பொய்களுக்கு உண்மை மேற்பூச்சு (Flavor) அடித்துவிட்டார்கள். 

2000 ஆம் ஆண்டு பாரதீய ஜனதா பார்ட்டி, சோதிடத்தை பாடமாக்க முயன்றபோது சுப்ரீம் கோர்ட்டு என்ன சொன்னது ? 'a giant leap backwards, undermining whatever scientific credibility the country has achieved so far'  

வெறும் கண்ணால் வானை அளந்து நட்சத்திரங்களையும், அதன் போக்குகளையும் கண்ட முற்கால இந்திய அறிவியலாளர்களின் உழைப்பை இந்த மூட நம்பிக்கைகள் திருடிக்கொண்டதை பார்த்தால் வருத்தமாக இல்லையா ? பெங்களூரில் ஒருவர் தான் கேட்கும் பத்து கேள்விகளுக்கும் எந்த சோதிடராவது பதில் சொன்னால் பத்து லட்சம் தருவதாக கரடியாக கத்தியும் எந்த சோதிடரும் அந்த சவாலை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை ? அவர்களுக்கு தெரியும். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்... ?

மீண்டும் இந்த மத ரீதியான வன்முறைகளை பற்றி பார்க்கலாம்..இஸ்லாம் வன்முறை மதம் என்றால் ஆர்.எஸ்.எஸ்ஸும் விஹெச்பியும் பூ பறிக்கவில்லையே ? அதுவும் தனது வன்முறைகளை அவ்வப்போது வெளிக்காட்டிக்கொண்டுதானே இருக்கிது ? அவன் குண்டு வைக்கிறான், நானும் வைப்பேன் பார் என்பது தானே மாலேகான் ? இந்து மதம் அதன் ஞான மரபை ஏன் கயர்லாஞ்சியில் பிரியாங்காவின் யோனியில் ஆப்பை அடித்து சொருகிய காட்டுமிராண்டிகளுக்கு கற்றுக்கொடுக்கவில்லை ?

அப்போ அம்பேத்கார் தழுவிய புத்த மதம் அமைதியான மதமா ? பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை படுகொலை செய்து, போராளி பெண்களின் பிணத்துடன் உறவுகொண்ட சிங்கள வெறியர்கள் புத்த மதத்திரராயிற்றே ? அவர்கள் ஏன் புத்தம் சரணம் கச்சாமி என்று பாடிக்கொண்டு எறும்புக்கு கூட துரோகம் இழைக்காமல் போகவேண்டியது தானே ? அதனால் தானே சொல்கிறோம். வன்முறையாளர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள் என்று...மதங்களையும், மத பழக்கவழங்களையும் தூக்கி பிடிப்பதால் எந்த மாற்றமும் வந்துவிடாதென்று ?

பர்தா போட்டால் நற்குடியென்று பெண்ணடிமைத்தனத்தை ப்ரெயின்வாஷ் செய்து வலியுறுத்தும் இஸ்லாமும் சரி, பிரம்மச்சரிய விரதம் பூண்டு பை-செக்ஸுவல் ஆக சந்தோஷமாக இருக்கும் உரோமை கத்தோலிக்க பாதிரிமார்களும் சரி, தன்னளவில் தங்கள் மதம் செய்யும் அயோக்கியத்தனத்துக்கு ஆதரவு தெரிவிக்கவே செய்கிறார்கள். அவர்கள் செய்யும் தவறுகளை சப்பைக்கட்டுகிறார்கள். அதன் எதிர்ப்புகளை பத்வா போட்டு சரி செய்கிறார்கள்.பணத்தை கொடுத்து வாயை அடைக்கிறார்கள். இந்து ஞான மரபும் சாரு நிவேதிதா போன்ற ஐசிஐசியை பிக்ஷாந்தி இண்டலக்சுவல் மூலம் வயிறு வளர்க்கிறது. நித்யானந்த ரஞ்சிதோற்சவம்..கல்கி தம்பதி சமேத ஹெராயினோற்சவம்...

மனிதர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த இஸ்லாமிய கிருத்துவ ப்ரெயின்வாஷ் மதங்கள் தன்னளவில் தங்களது திரட்சியான பின் தொடர்பவர்களை தக்கவைக்க தன்னால் ஆனமட்டும் முயல்கிறது. கொல்கிறது. ஒருபக்கம் காக்காய் வலிப்பு வந்தவர் லட்சக்கணக்கில் உம்ராக்கள் கொடுத்தார் என்றால் இன்னொரு பக்கம் யூதர்களிடம் தரும அடி வாங்கி கோமா ஸ்டேஜ் போய் மீண்டு வந்தவர் உயிர்த்தெழுந்தவர் ஆனார். இது தானே நிஜம் ? நீங்கள் நம்பும் இறையை இப்படி திடீரென அவமதிப்பதால் ஏன் இறை எதுவுமே செய்வதில்லை ? நீங்கள் தானே கோபக்குரல் எழுப்புகிறீர்கள் ?

இந்து மக்கள் கட்சி லீனா மணிமேகலை மீது, அவர் எழுதிய இரண்டு கவிதைக்காய் வழக்கு தொடர்ந்துள்ளது. அவர் எழுதிய இரண்டு கவிதைகள் இவைதான் :


இரண்டு கவிதைகள்

1

நான் லீனா
நான் இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில்
ஆப்பிரிக்காவில் செரோஜெவாவில் போஸ்னியாவில் துருக்கியில்
ஈராக்கில் வியட்நாமில் பொலியாவில் ரெமானியாவில்
வாழ்கிறேன்
என் வேலை
என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது


நாடு கோருபவ்ர்கள்
ஜிகாத் தொடுப்பவர்கள்
புரட்சி வேண்டுபவ்ர்கள்
போர் தொடுப்பவர்கள்
ராஜாங்கம் கேட்பவர்கள்
வணிகம் பரப்புபவர்கள்
காவி உடுப்பவர்கள்
கொள்ளையடிப்பவர்கள்
நோய் பிடித்தவர்கள்
எவன் ஒருவனும்
வன்புணர்வதற்கு ஏதுவாய்
யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு
கருங்குழியென செதுக்கி வைத்துக் கொள்ள
சொல்லித் தந்திருக்கிறார்கள்
அம்மா அம்மம்மா அப்பத்தா அத்தை எல்லாரும் ஒருவரே
அவ்வப்போது
காலக்கெடுவில்
லிட்டர் கணக்கில் சேர்ந்துவிடும் விந்துவை
தூர் வாருவதையும்
படிப்பித்திருக்கிறார்கள்


எனக்கு தெரியும்
அறிவாளி ரோகி ஆசிரியன் கலைஞன்
லும்பன் தரகன் மகாராஜா தளபதி
திருடன் கணிப்பொறிக்காரன் போராளி
போதைப்பொருள் விற்பவன் மருத்துவன்
கூலித்தொழிலாளி மாலுமி விவசாயி
கணவன், தந்தை, சகோதரன், மகன்
எல்லோர் குறிகளும் ஒன்றுபோலிருப்பது எப்படி
என்ற ரகசியம்
எனக்கு மொழி தெரியாது
நிறம் கிடையாது
நாகரிகம் தேசம் கொடி அரசாங்கம்
வரலாறு ராணுவம் சட்டம் நாணயம்
ஏதொன்றையும் முகர்ந்துப் பார்த்தாலும்
என் உதிர வீச்சமடிக்கும்
பிரம்மா விஷ்ணு சிவன் புத்தன்
யேசு அல்லா இந்திரன் வர்ணன்
சூரியன் கருப்பசாமி அய்யனார்
ஆகமங்கள் இதிகாசங்கள் காவியங்கள்
யாவும்
கலைக்க முயன்றும்
என் சூலகத்தில்
தங்கிவிட்ட கருக்கள்


அணுகுண்டோ ரசாயனத்துப்பாக்கியோ
ராக்கெட்டோ கன்னிவெடியோ
எறியப்படும் குண்டுகளுக்கு
உடல் செத்தாலும்
யோனிக்கு சாவில்லை
யோனியிலும் சாவில்லை2.

ஒரு புணர்தலின் உச்சியில் விலகி
அந்தரத்தில் விந்தைப் பீய்ச்சி
தோழர் என்றெழுதினாய்
உடலை உதறி கொண்டு எழுந்து
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்றார் மார்க்ஸ்
என்று பிதற்றினாய்
கால்களுக்கிடையே தலையை இழுத்தேன்
உபரி என யோனி மயிரை விளித்தாய்
உற்பத்தி உறவுகள் என தொப்புளை சபித்தாய்
லெனின் ஸ்டாலின் மாவோ சி மின்
பீடத்தை ஒவ்வொருவருக்காய் தந்தாய்
முலைகளைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்
மனம் பிறழந்த குழந்தை போல மம்மு குடித்தாய்
பிரஸ்த்ரோய்கா, க்ளாஸ்னாஸ்ட் என்று மென்று முழுங்கினாய்
இடையின் வெப்பத்தில் புரட்சி என்றாய்
மூச்சின் துடிப்பில் பொதுவுடைமை என்றாய்
குறியை சப்ப குடுத்தாய்
பெர்லின் சுவர் இடிந்தது
சோவியத் உடைந்தது
எழுச்சி என்றாய்
அமெரிக்கா என்று அலறி ஆணுறை அணிந்தாய்
கீழே இழுத்து
உப்பை சுவைக்க சொன்னேன்
கோகோ கோலா என்று முனகினாய்
மயக்கம் வர புணர்ந்தேன்
வார்த்தை வறண்ட
வாயில் ஒவ்வொரு மயிறாய் பிடுங்கிப் போட்டேன்
இது கட்டவிழ்ப்பு என்றேன்

ஆக்கம் : லீனா மணிமேகலை 


இதுகுறித்து ஜமாலன் எழுதிய விளக்கம் சுட்டியாக கொடுத்துள்ளேன்...!!!


இதே இந்து மக்கள் கட்சி, இந்து மதத்தை அவமதித்து விட்டமைக்காய் ஏன் நித்யானந்தர் மீது வழக்கு தொடரவில்லை ? கோயிலில் வைத்து கொன்றமைக்காய், சாட்சிகளை கலைத்தமைக்காய், ஏன் சங்கரர்கள் மீது வழக்கு தொடரவில்லை ? கருவறையில் இருப்பது கல் என்று வெளிச்சம் போட்டு காட்டி, அங்கே காதல் அரங்கம் நடத்திய தேவநாதன் மீது ஏன் வழக்கு தொடரவில்லை ? அவர்கள் வலிமையானவர்களாக, அவர்கள் உங்களை சார்ந்தவர்களாக இருப்பதனாலேயேதானே ? 

கட்டற்ற சுகந்திரம் வழங்கும் இணைய பெருவெளியில் இந்த கவிதையை ஆயிரம் பேர் கட் காப்பி பேஸ்ட் செய்து வெளியிட்டால் அவர்கள் மீது எப்படி வழக்கு தொடுப்பீர்கள் ? முகமற்றவர்கள் பின்னூட்டத்தில் வெளியிட்டால் ? தெரியாதவர்கள் மின்னஞ்சல் மூலம் பகிர்ந்துகொண்டால் ? இதே போன்றதொரு பத்து கவிதைகளை யாரோ ஒருவர் ஒரு குழுமத்தில் எழுதினால் ? பல்வேறு ஆபிரகாமிய சோதனைகளை கடந்துவந்த இந்து ஞான மார்க்கம் இதனை ஏன் புறங்கையால் தள்ளிவிடாமல் லீனா மணிமேகலைக்கு தண்டனை வாங்கித்தரவேண்டும் என்றும், அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூப்பாடு போடுகிறது ? 

விமர்சனங்களை எதிர்த்து பதில் சொல்லும், விவாதங்களை அல்வா துண்டு போல வெட்டி வீழ்த்தும் வினவும் இது குறித்து தானும் ஒரு ஆபாச பதிவை தன் தளத்தில் வெளியிட்டு இந்து மக்கள் கட்சியுடன் கை கோர்த்துக்கொள்கிறார்கள். அல்லது ஒருவருக்கொருவர் சொறிந்துவிட்டுக்கொள்கிறார்கள்.அவர்கள் பார்ப்பனர்கள், ஆர்.எஸ்.எஸ், ஹிந்து பரிஷத் தீவிரவாதிகளாயிற்றே ? ஏன் அவர்களோடு கை கோர்த்தீர்கள் என்றால் அதை நேர்மையாக எதிர்கொண்டு பதில் சொல்வார்களா வினவு குழு ? ம்ஹும். எப்போதும் போல ஒன்று அமைதி காப்பார்கள் அல்லது அசிங்கப்படுத்துவார்கள்...அதை தானே காலங்காலமாக செய்துவருகிறார்கள் ? பெண்கள் தினத்து கட்டுரைகளை பெண்களை வைத்து எழுதிவிட்டால் போதுமா ? நீங்களும் பிற்போக்குவாதிகளாக, ஊகத்தின் அடிப்படையில் கட்டுரை தீட்டுபவர்களாக, தனிமனித ஆபாச தாக்குதல் நடத்துபவர்களாக தானே இருக்கிறீர்கள் ?

இந்த பதிவு உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். நான் உங்கள் நன்பனாகவும் இருக்கலாம். என்னை இந்த பதிவுக்கு பிறகு வெறுத்துவிடவேண்டாம். புறத்தே தள்ளிவிடவேண்டாம்...நான் தவறு செய்வதாக நினைத்தால் எனக்கு நல்ல புத்தியை கொடுக்குமாறு உங்கள் கடவுளிடம் வேண்டுங்கள்..!!! இது என்னுடைய கருத்து மட்டுமே. ஒரு நெகடிவ் ஓட்டை போட்டுவிட்டீர்கள் என்றால் எவ்வளவு பேருக்கு இந்த பதிவு பிடிக்கவில்லை என்று காண்பேன்...!! உங்களை இந்த பதிவு உண்மையில் ரொம்பவே காயப்படுத்தினால் சொல்லுங்கள். பதிவையே எடுத்துவிடுகிறேன். அது நட்புக்கு நான் செய்யும் மரியாதை...!!!

தொடர்ந்து பகுத்தறிவு !! 
இருளில் இருந்து ஒளி..!!!
மூட நம்பிக்கைகளில் இருந்து நல்வாழ்வு...!!!


..
..

Tuesday, March 16, 2010

ருத்ரன், ஹுஸைன் மற்றும் ஹிந்துத்துவாவும்..


வழக்கம்போல அக்கப்போரை ஆரம்பித்துவிட்டாயா ரவி என்று டென்ஷன் ஆகவேண்டாம். அநீதியான ஒன்றை கடந்துசெல்லும்போது இயல்பாகவே கோபம்வருகிறது. அதை உருவாக்குபவர்கள் மேலும் அனுமதிப்பவர்கள் மேலும் அதைவிட அதிகமாக அமைதியாக கடந்துசெல்பவர்கள் மேலும்.


முட்டாள்தனமான இந்த பதிவை பற்றி நான் எதையும் சொல்லப்போவதில்லை. சட்டியில் இருப்பதே அகப்பையில் வரும் என்ற ச = அகப்பை ஸ்கொயர் முப்பாத்தா தியரியில் எனக்கு நம்பிக்கை. ஆனால் அந்த பதிவை பயன்படுத்தி அங்கே பின்னூட்டத்தில் பெரிய மனிதர்கள் நடத்தும் லீலைகள் ஒரே நித்யானந்தமயம்.அந்த பதிவின் பின்னூட்டம் ஒவ்வொன்றும் அனுமதிக்கப்பட்டே வருகிறது. ஏற்றுக்கொள்ளாத கருத்தை ஒருவர் பின்னூட்டத்தில் தெரிவித்தால் அதனை மறுக்கவோ, வெளியிட மறுக்கவோ செய்யலாம். டாக்டர் ருத்ரனுக்கு மனநல மருத்துவர் தேவை என்றும் அவர் கீழ்ப்பாக்கம் போகவேண்டும் என்று சொல்வதை ஏற்றுக்கொண்டு நன்றியும் கூட சொல்லப்படுகிறது.இந்த பதிவும் பின்னூட்டங்களும் மருத்துவருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் என்று நான் நம்பவில்லை. நீங்கள் மெக்ஸிக்கோவும் போங்கள், ஆஸ்திரேலியாவும் போங்கள் என்று எடுத்தெறிந்து பேசுவதை அவர் எளிமையாக கடந்து செல்லக்கூடும். ஒரு வேளை அடுத்தவரை புண்படுத்துவது பற்றி எந்த ப்ரக்ஜையுமே இல்லாத ஒருவராக அவர் இருக்கக்கூடும்.  மருத்துவர் போட்ட முதல் பின்னூட்டம் ஒன்றுக்கு என்ன பதில் சொன்னார் எனறு ஒரு முறை தேடி எடுத்துப்பார்க்கட்டும்..இதில் உச்சபட்ச காமெடி என்னவென்றால் மேற்குறிப்பிட்ட பதிவில் தான் நான் கலெக்டிவ்வாக எல்லா so called ஆபாச படங்களையும் பார்த்தேன். கருப்பு பேக்ட்ராப்பில் கோடு கோடா ? இதில் என்ன மங்காணி ஆபாசம் ? ஹுசைன் சரியாவே வரையமாட்டேங்குறாருப்பா !!! இந்து மத புராணங்களில் இல்லாத ஆபாசமா இந்த படங்களில் வந்துவிடப்போகிறது ?திருவாளர் நோ. அவர்கள், இணையத்தில் எழுதுவது குப்பைத்தொட்டியை நிரப்புவது என்று நம்புகிறவர். அவருடைய உற்சாக பின்னூட்டம் கூட உள்ளது. அதைவிட பேசவேண்டிய ஒன்று கால்கரி சிவாவின் பின்னூட்டம். எழுதுவதை குறைத்துக்கொண்டவர். ஹிந்துத்துவா ஆதரவாளர் என்று வலையுலகினரால் நம்பப்படுபவர். யார் நம்புகிறார்களோ என்னவோ நான் நம்புகிறேன்.1970 இல் வரைந்த படங்களுக்கு இப்போது ஏன் கால்கரி சிவா சார் எதிர்ப்பு ? சரஸ்வதிக்கும் காளிக்கும் உண்மையில் சக்தியிருந்தால் ஹுசைன் தாடி எரிந்து சாம்பலாக்கி கொன்றிருக்கவேண்டாமா ? ஏன் கோர்ட்டில் வழக்கு நடக்கிறது ? இந்த ஜுஜுபி சக்தி கூட இல்லாத கடவுள் என்ன ஆணி புடுங்கப்போகிறது ? என்ன தேதியில் வரைந்த படத்துக்கு என்ன தேதியில் வழக்கு போடப்பட்டது ? யார் போட்டது ? விலாவாரியாக சொல்லுங்கள் பார்ப்போம்..முஸ்லிம் முன்னூறு இடத்தில் குண்டு வைக்கிறான். நான் மாலேகானில் வைக்கிறேன். என்றால் so called இந்து மத சகிப்புத்தன்மை எங்கே போனது ? அது முஸ்லிம் தீவிரவாதம் என்றால் இது இந்து தலிபானியம். மஞ்சள் துணியை கழுத்தில் கட்டிக்கொண்டு காதலர் தினத்தன்று ஜோடிகளை தொல்லை செய்கிறது..வன்முறை இந்துவின் கையில் இருந்தாலும் முஸ்லிமின் கையில் இருந்தாலும் அது தவறே. அன்பை போதிக்கும் மதம் அதற்கான வாய்ப்பு வரும்போது வெடிமருந்தை டிப்பன் பாக்ஸில் நிரப்புகிறது தானே ?சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன். தெரியாத விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஒரு விஷயத்தை பற்றி பக்கம் பக்கமாக எழுதுமுன் அதை பற்றிய அடிப்படையை புரிந்துகொள்ளுங்கள். கூகிளில் டைப் செய்து வரும் தகவல்களை மேலோட்டமாக நுனிப்புல் மேய்ந்துவிட்டு அதை வைத்தும் இயல்பாக இருக்கும் எழுத்தின் மீதும் மொழியின் மீதும் உள்ள ஆளுமையை பயன்படுத்தியும் குப்பையாக எழுதவேண்டாம். !

வலைப்பதிவில் எழுதினாலும் குப்பை குப்பையே !!!

ஹுசைனின் பல்வேறு படங்களை பதிவில் பயன்படுத்தியுள்ளேன். பிடித்திருந்தால் வாக்களியுங்கள் !!!
.
.
.

Monday, March 15, 2010

பனங்காய் பனியாரமே !!!!!!!!நார்வே வீ,என் மியூஸிக் ட்ரீம்ஸ் செய்த பனங்காய் பனியாரம். நீங்களும் சுவைத்து மகிழுங்கள்..!!

Thursday, March 11, 2010

எனக்கென்னமோ இந்தாளை ரொம்ப பிடிச்சிருக்கு...http://www.youtube.com/watch?v=tgiFa5uQt7k

நீங்க என்ன வேணா சொல்லுங்க...எனக்கு இந்தாளை ரொம்ப பிடிச்சிருக்கு...நான் வாய்ப்பு கிடைச்சா ஆசிரமம் போறேன், சந்திக்கறேன், பேசறேன்.....நீங்க ?

Wednesday, March 10, 2010

கணிப்பொறி தேவை !!!

உபயோகப்படுத்தாத கணினி அல்லது மடிக்கணினி உங்களிடம் இருக்கா ? ஒரு மாணவர் ஒரு ப்ராஜக்ட் செய்வதற்காய் சென்னையில் ஒரு கணினி தேவைப்படுகிறது. இரண்டு மூன்று மாதங்கள் தேவைப்படலாம். வாடகைக்கோ அல்லது விலைக்கோ பெற்றுக்கொள்ளத்தயார். கணிப்பொறிக்கு தகுந்த வாடகையோ அல்லது நீங்கள் சொல்லும் விலையோ, ஏற்புடையதாக இருந்தால் உடனே கொடுத்து கணிப்பொறியை பெற்றுக்கொள்கிறேன்..நன்றி...

தொடர்புகொள்ளவேண்டிய முகவரி : ravi.antone@gmail.com

நட்புடன்..!!

Monday, March 08, 2010

ஏலியனை (வெளிகிரக உயிரினம்) பார்த்தேன்...

சென்னையில் சந்தித்தபோது, நம்மை காரில் பிக்கப் செய்யவந்த நன்பர், லக்கியாரிடம் கூறிய விஷயங்களை அரண்டு போய் பதிவிட்டிருந்தார்..

இந்த வாரம் அதிபயங்கர அதிரடியான இன்னொரு விஷயம் கொடுத்தார் நமது நன்பர்..மங்களூருக்கு அருகில் சக்லேஷ்புரா என்ற கிராமம், நம்மூரு ஊட்டி மாதிரி..அங்கே கைவிடப்பட்ட ஒரு ரயில்வே பாதை உள்ளது...(இப்போது பணிகள் நடந்துகொண்டுள்ளன)...அங்கே வார இறுதியில் ட்ரெக்கிங் செல்வது என்னு முடிவானது..சக்லேஷ்புராவில் சிற்றுந்துகளை நிறுத்திவிட்டு ரயில் பாதையில் நடந்துசென்று, 16 கிலோமீட்டரில் உள்ள 'எருக்கமேரி' இரயில் நிலையத்தை அடைந்து டெண்ட் அடித்து தங்குவது. பிறகு மேலும் 8 கிலோமீட்டர் நடந்துசென்று, அக்கிப்பள்ளி என்ற இடத்தில் மலையில் உள்ள பாதை வழியாக இறங்கி, 3 கிலோமீட்டர் கடந்து, அதிவேகமாக ஓடும் ஆற்றை கடந்து மேலேறி தேசிய நெடுஞ்சாலை நாற்பத்தி எட்டை அடைவது..பின்னர் ஏதாவது லாரியை பிடித்து நாற்பது கி.மீ பயணம் செய்தால் மீண்டும் சக்லேஷ்புரா...பிறகு பெங்களூர்...இதுதான் திட்டம்...வழியில் உணவுக்கு ஆங்காங்கே நெருப்பை மூட்டி MTR பாக்கட்டுகளை உபயோகப்படுத்துவது....

ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் வழியெங்கும் உள்ள சிற்றருவிகளும், அதன்மேல் உள்ள ரயில்வே பாலங்களும்( அதிகபட்ச நீளம் 700 மீட்டர், கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர்), நீண்ட கும்மிருட்டு குகைப்பாதைகளும் (அதிகபட்ச நீளம் 585 மீட்டர், அரைகிலோமீட்டருக்கு மேல்), அதில் நீக்கமற நிறைந்திருந்த வவ்வால்களும்...

ரயில்வே பாலங்களை மிகுந்த எச்சரிக்கையோடு அடிமேல் அடிவைத்து கடக்கவேண்டும்..காரணம் இரண்டு ட்ராக்குகளுக்கு மத்தியில் இருக்கும் கனெக்டர்தான் ஒரே இணைப்பு..அதில் கால்வைத்து தான் நடக்கவேணும்...இந்த ட்ரெக்கிங்கில் ஒரே ஒருவர்தான் ஹீரோ...அவர் யாரென்றால் வழியெங்கும் எங்கள் கால் / கை என மொய்த்து ரத்தத்தை உறிஞ்சிய அட்டைப்பூச்சி..

காட்டுப்பாதையை கடந்து நெடுஞ்சாலையை அடைந்தபோது மொத்தமாக என் காலில் / கையில் / வயிற்றில் கூட (இரண்டு) இருந்த அட்டை பூச்சிகள் மொத்தம் 20 க்கும் மேல். ( அனைத்தும் ரத்தம் குடித்து வயிற்றை நிரப்பிய நிலையில்)...

இந்த அட்டைப்பூச்சி நல்ல விவாதம் ஒன்றை தூண்டியது...என் நன்பர் ஒரு கருத்தை எடுத்துவைத்தார்...அது உண்மையில் எனக்கு புதிய விஷயம், அது அதிர்ச்சியளிக்ககூடியதாக இருந்தது...

அவர் கூற்றுப்படி அட்டைப்பூச்சி (லீட்ச்) பூமியின் உயிரினம் அல்ல...எங்கொ வெளிகிரகத்தில் இருந்து பூமிக்கு வந்தது என்கிறார்..அவர் எடுத்து வைக்கும் வாதங்கள்..

1. அட்டைப்பூச்சி - புற உதா கதிர்களால் பார்க்கிறது...அட்டைப்பூச்சியின் கண்ணுக்கு ப்ரிடேட்டர் படத்தில் வரும் ஏலியனுக்கு தெரிவதுபோல்தான் தெரியும்..

2. சிறிய அதிர்வையும் கண்டுகொள்கிறது...

3. அட்டைப்பூச்சி சுவாசிப்பதில்லை..

4. அட்டைப்பூச்சி உணவு ஏதும் இல்லாமல் சுமார் ஒருவருடத்துக்கு மேல் வாழக்கூடியது..

5. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படும் ரத்தம் / உயிரினங்கள் அனைத்திலும் அதிகபட்ச சத்துக்கள் கொண்டது / அதனை மட்டுமே உண்டு வாழ்கிறது.

6. இனப்பெருக்கம் செய்ய யாரும் தேவையில்லை..முட்டைகளை ரத்தத்தில் வைத்து பாதுகாக்கிறது.

7. இரண்டாக வெட்டினாலும் அடுத்த பகுதி வளர்ந்துகொள்ளும்..அது தலையாக இருந்தாலும் வாலாக இருந்தாலும்..

இவ்வாறு பல விஷயங்களை கூறுகிறார்...

மழையால் குளிர்ந்த பூமியில், எப்படி அந்த முதல் உயிரினம் வந்தது...வானத்தில் இருந்தா குதித்திருக்கும் ? என்றால், ஆமாம்...அப்படித்தான் என்கிறார்...

என் எண்ணம் எல்லாம்..அதுதானே...எந்த ஒரு செயலுக்கும் ஏதாவது ஒரு ஆரம்ப புள்ளி இருக்கவேண்டுமே ? ஒரு செல் உயிரினம் அப்படியே தோன்றிவிட்டதா ? கடவுள் படைத்தார் என்று கட்டுக்கதையை எவ்வளவு நாள் நம்புவது ? கண்டிப்பாக உயிரினம் உள்ள ஏதோவொரு கிரகத்தில் இருந்துதான் வந்திருக்க வேண்டும்...அந்த வேறொரு கிரகத்துக்கு எப்படி வந்தது என்று ஆராய விரும்பவில்லை...

இரவு முழுவது அட்டைப்பூச்சி பற்றியே சிந்தனை...உங்கள் கருத்தை சொல்லுங்க....

ச்செக்கப்பானிட் !!!!சொல்றதுக்கு எதுவுமில்லை. இந்த பாட்டு பிடிச்சிருந்தா நீங்களே இதைப்பற்றி தேடி தெரிஞ்சுக்குவீங்க...யூடூப் சுட்டி

[Slim Thug]
You need to stop playing round with all them clowns and the wangstas
Good girls gotta get down with them gangstas
Go head girl put some back and some neck up on it
While I stand up in the background and check up on it

[Chorus]
Ohh Boy you looking like you like what you see
Won't you come over and check up on it, I'm gone let you work up on it
Ladies let em check up on it, watch it while he check up on it
Dip it, pop it, twork it, stop it, check on me tonight

If you got flaunt it, boy I know you want it
While I turn around you watch me check up on it
Oohhh you watchin me shake it, I see it in ya face
Ya can't take it, it's blazin, you watch me in amazement
You can look at it, as long as you don't grab it
If you don't go braggin, I'ma let you have it
You think that I'm teasin, but I ain't got no reason
I'm sure that I can please ya, but first I gotta read you

[Chorus]
Ohh Boy you looking like you like what you see
Won't you come over and check up on it, I'm gone let you work up on it
Ladies let em check up on it, watch it while he check up on it
Dip it, pop it, twork it, stop it, check on me tonight [x2]

I can tell you wanna taste it, but I'm gone make you chase it
You got to be patient, I like my men patient
More patience, you take might get you in more places
You can't be abrasive, have to know to pace it
If I let you get up on it, you gotta make a promise
That you gone put it on me, like no ones put it on me
Don't bore me, just show me, all men talk but don't please
I can be a tease, but I really wanna please you

[Chorus]
Ohh Boy you looking like you like what you see
Won't you come over and check up on it, I'm gone let you work up on it
Ladies let em check up on it, watch it while he check up on it
Dip it, pop it, twork it, stop it, check on me tonight [x2]

[Slim Thug]
I'm checking on you boo, do what chu do
And while dance I'ma glance at this beautiful view
I'm keep my hands in my pants, I need to glue em w/ glue
I'm in a trance all eyes on you and your crew
Me and my mans don't dance, but to feel ya'll bump and grind
It won't hurt if you gone try one time
They all hot, but let me see this ones mine
Its slim thug and DC outta H town

[Chorus]
Ohh Boy you looking like you like what you see
Won't you come over and check up on it, I'm gone let you work up on it
Ladies let em check up on it, watch it while he check up on it
Dip it, pop it, twork it, stop it, check on me tonight [x4][Slim Thug]
You need to stop playing round with all them clowns and the wangstas
Good girls gotta get down with them gangstas
Go head girl put some back and some neck up on it
While I stand up in the background and check up on it

[Chorus]
Ohh Boy you looking like you like what you see
Won't you come over and check up on it, I'm gone let you work up on it
Ladies let em check up on it, watch it while he check up on it
Dip it, pop it, twork it, stop it, check on me tonight

If you got flaunt it, boy I know you want it
While I turn around you watch me check up on it
Oohhh you watchin me shake it, I see it in ya face
Ya can't take it, it's blazin, you watch me in amazement
You can look at it, as long as you don't grab it
If you don't go braggin, I'ma let you have it
You think that I'm teasin, but I ain't got no reason
I'm sure that I can please ya, but first I gotta read you

[Chorus]
Ohh Boy you looking like you like what you see
Won't you come over and check up on it, I'm gone let you work up on it
Ladies let em check up on it, watch it while he check up on it
Dip it, pop it, twork it, stop it, check on me tonight [x2]

I can tell you wanna taste it, but I'm gone make you chase it
You got to be patient, I like my men patient
More patience, you take might get you in more places
You can't be abrasive, have to know to pace it
If I let you get up on it, you gotta make a promise
That you gone put it on me, like no ones put it on me
Don't bore me, just show me, all men talk but don't please
I can be a tease, but I really wanna please you

[Chorus]
Ohh Boy you looking like you like what you see
Won't you come over and check up on it, I'm gone let you work up on it
Ladies let em check up on it, watch it while he check up on it
Dip it, pop it, twork it, stop it, check on me tonight [x2]

[Slim Thug]
I'm checking on you boo, do what chu do
And while dance I'ma glance at this beautiful view
I'm keep my hands in my pants, I need to glue em w/ glue
I'm in a trance all eyes on you and your crew
Me and my mans don't dance, but to feel ya'll bump and grind
It won't hurt if you gone try one time
They all hot, but let me see this ones mine
Its slim thug and DC outta H town

[Chorus]
Ohh Boy you looking like you like what you see
Won't you come over and check up on it, I'm gone let you work up on it
Ladies let em check up on it, watch it while he check up on it
Dip it, pop it, twork it, stop it, check on me tonight [x4]

Sunday, March 07, 2010

ரஞ்சிதா மேட்டருக்கு பின் ஆசாமி நித்யானந்தா முதல் பேட்டிhttp://www.youtube.com/watch?v=PUdfYxUyFB0

செய்திகளை முந்தித்தருவது உங்கள் ரெட்ப்ளேம். இந்த பேட்டியில் அவருக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு நன்றி என்றும், தான் சட்டத்துக்கு புறம்பாக எதுவும் செய்யவில்லை என்றும் அனைவரும் கொஞ்ச நாள் காத்திருக்கவேண்டுமாறும், ஆதாரங்களை கொடுப்பதாகவும் சொல்கிறார். நான் நம்பிட்டேன். நீங்க ?

மற்றபடி, அமெரிக்காவில் அறிமுகமான ஒரு மலையாள குட்டியின் கேரளா கெஸ்ட் ஹவுஸில் நித்யானந்தா இருப்பதாக (ரஞ்சிதாவும் அவருடன் இருக்கிறாரா என்பது எனக்கு தெரியாது) ஒரு தகவல் உலவுகிறது. மொபைல் கேமாராவில் எடுத்த வீடியோவை ரிலீஸ் செய்யும் அளவுக்கு ஆகிவிட்டார் (ஆ)சாமிஜி. எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன் ???

இதற்கு முன் யூடுபில் என்னுடைய இடத்தில் அப்லோட் செய்த நித்யானந்தா வீடியோ, நான்கு நாட்களில் ஒரு லட்சத்தி எட்டாயிரம் முறை பார்வையிடப்பட்டுள்ளது. (ரெண்டு மணி நேரத்துக்கு முந்தைய கணக்கு, டைப் செய்துவிட்டு ஒரு முறை வெரிபை செய்ய முயன்றபோது இன்னும் ஒரு அய்ந்தாயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்) இது எத்தனை லட்சம் போவுமோ தெரியாது ?

Wednesday, March 03, 2010

நித்யானந்த ரஞ்சிதோற்சவம் : மனித உரிமை மீறல்


நித்யானந்தர் எனக்கு அறிமுகம் குமுதம் இதழின் வழியேதான். ஒல்லியாக காவியுடுத்தி, ஏதோ ஒன்றிரண்டு பக்கங்களை நிரப்பியிருப்பார்கள். ஆன்மீகம் என்ற தலைப்பில்..

என்னுடைய ஏரியா நடுப்பக்கத்தில் தொடங்கி நடுப்பக்கத்திலேயே முடிந்த காலம் அது, அதிகமாக கண்டுகொண்டதில்லை.

சாரு நிவேதிதாவின் பக்கத்த்தில் நித்யானந்தர் குறித்து கேள்விப்பட்ட உடான்ஸ் செய்தியொன்றின் அடிப்படையில் (நித்யானந்தர் பாடி விட்டு பாடி பாய்ந்து அரைமணி நேரத்தில் கேன்ஸரை சரிப்படுத்தினாராம், சாரு நிவேதிதா மூளையை கழட்டி டாய்லெட்டில் போட்டுவிட்டார் என்று நினைத்துக்கொண்டேன்) இணையத்தில் தேட கிடைத்த சுட்டி படு காமெடி. 

ஜனவரி 1 1978 இல் திருவண்ணாமலையில் ஜோதிட பித்து பிடித்த பெற்றோருக்கு பிறந்த ராஜசேகரன், பத்து வயதில் துறவறம் பூண்டவர். அவர் இஞ்சினீயரிங் படித்த்தாக நித்யானந்தரின் தயானந்த பீடம் கூறிவரும் பொய்மூட்டையை நிரூபிக்க, நித்யானந்தர் படித்த பாலிடெக்னிக் கல்லூரிக்கு ஒரு லட்சம் நன்கொடையாக கொடுத்த உடான்ஸை, அந்த வருடத்தில் பன்னிரண்டு வயது நித்யானந்தர் எப்படி பாலிடெக்னிக் படித்தார் என்று கேள்வி எழுப்பியிருந்தார்கள் அந்த தளத்தில்..

இதனை என்னுடைய ட்விட்டர் முகவரியான senthazalravi மூலம் பகிர, அதனை பார்த்த அமெரிக்க மின்னொபோலிஸில் வசிக்கும் நடராஜ், அங்கே நித்யானந்தர் கூட்டத்துக்கு தலைக்கு 300 டாலர் சார்ஜ் செய்வதாக தகவல் தெரிவித்தார். அவரிடம் மேற்சொன்ன சுட்டியையும்  பகிர்ந்தேன்.

நித்யானந்தர் பற்றிய என்னுடைய இம்சை தளத்தில் வெளியான பதிவு, இந்த அஜால் குஜால் வீடியோ காட்சியை கூகிள், யாகூ என்று தேடி அலையும் தாகம் கொண்ட தமிழினத்தின் வாயில் பாலை வார்க்கவே. பர்ப்பஸ் ஸால்வுடு. 

உண்மையில் இந்த செய்தி தொடர்பாக எழுந்த எண்ணங்களை பதிவு செய்யவேண்டும் என்று நினைத்து பதிவுகளை பார்த்துக்கொண்டிருந்தபோது, பட்டர்ப்ளை சூர்யா அனுப்பிய வால்பையன் பதிவில் சுட்டியில், கல்வெட்டு எழுதியிருந்த பின்னூட்டம், என்னுடைய எண்ணங்களுக்கு அப்படியே மேட்ச் ஆகிறது. 

முதலில் சன் டிவி என்ற ஊடகம் செய்துள்ளது அப்பட்டமான மனித 
உரிமை மீறலாகும்...

ஒருவரின் படுக்கை அறையில் அவரது அனுமதியின்றி உள்நுழைந்து படக்கருவியை பொருத்தி, அதை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

வழக்குரைஞர் பிரபு ராஜதுரையின் பதிவில் (பதிவர் கல்வெட்டு கொடுத்துள்ள சுட்டி இது) எது விபச்சாரம் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். 

ஒரு ஆணும் பெண்ணும் இசைவுடன் உறவு கொள்வது இந்திய தண்டனை சட்டப்படி குற்றமல்ல. 

ஒரு பெண் பணத்துக்காக அல்லது பொருளுக்காக உடலுறவுக்கு இசைந்துபோவது குற்றமல்ல.

ஒரு விபச்சார விடுதியை நடத்துவது மட்டுமே குற்றமாகும். 

பெரும் தனவந்தரான நித்யானந்த சாமியார், ஒரு விபச்சார விடுதிக்கு செல்வார் என்பது பொருந்தாத வாதமாகும்..

மேலும் வழக்குரைஞரின் முந்தைய பதிவு ஒன்றில், எது கற்பழிப்பு என்று கூட தெளிவாக சொல்லியுள்ளார். அது இந்த பதிவுக்கு தேவையற்றது. இருந்தாலும் இங்கே குறிப்பிடவேண்டியது, சாமியார் நடிகையை அணைத்து லைட்டை அணைக்கும் அழகை பார்த்தால் கற்பழிப்பது போல தெரியவில்லை.

மிகப்பெரிய செய்தி காட்சி ஊடகமான சன் டிவியின் மீது, சம்பந்தப்பட்ட சாமியாரும் நடிகையும், தன்னுடைய மாடஸ்டியை குலைத்தமைக்காக அவதூறு வழக்கு தொடரலாம்.

மேலும் சாமியார் இருக்கும் நிலையை பார்த்தால் அவருக்கும் நடிகைக்கும் நீண்டகால தொடர்பு இருக்கும் போலிருக்கிறது என்று ஊகத்தின் அடிப்படையிலான ஒரு செய்தியையும் சன் டிவி போகிறபோக்கில் தெளிக்கிறது. 

சாமியார் லைட்டை அணைத்துவிட்டு என்ன வேண்டுமானாலும் செய்வார். ஏன், கட்டிப்பிடிப்பது போல கட்டிப்பிடித்து, பின் லைட்டை அணைத்துவிட்டு யோகா செய்வார். முழுமையான தகவல்கள் தெரியாமல் இப்படி சாமியாரின் மாடஸ்டியை குலைப்பது எவ்வாறு நியாயம் ? 

அமெரிக்க அய்க்கிய நாட்டில் சுவாமிஜியின் ஒரு நாள் வகுப்பை அட்டெண்டு செய்ய 300 அமெரிக்க டாலர்கள், இந்திய மதிப்பில் 15000 ரூபாய் வசூலிக்கிறார்கள். இவ்வளவு காஸ்ட்லி சாமியார், ஒரு நடிகைக்கு அமவுண்டு செட்டில் செய்து ஜில்பான்ஸாக இருக்கமாட்டாரா ? என்ன வண்புணர்ச்சியா செய்யப்போகிறார் ?

மேலும் இந்த தகவல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பின், நித்யானந்தரின் பல சொத்த்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் நோக்கில் வன்முறையாளர்களையும் ஏவி விட்டுள்ளது ஆட்சியில் இருக்கும் பகுத்தறிவு கட்சி. பொது சொத்துக்கு மட்டுமல்ல, தனியார் சொத்துக்கும் சேதம் விளைவிப்பது குற்றமாகும். காவல் துறை இதனை வேடிக்கை பார்ப்பது முறையல்ல.

மேலும் பிட்டு படங்களில் வருவதைப்போன்றதொரு பேக்ரவுண்டு மியூசிக் ஒன்றை வேறு போட்டுத்தொலைகிறது சன். போகிற போக்கை பார்த்தால், என்.டி.திவாரி வித் ஆந்திரா மீல்ஸ் + காஞ்சிபுரம் தேவநாதன் வித் காஞ்சிபுரம் பேமிலி இட்லி + சாமியார் நித்தியானந்தன் வித் மார்க்கெட்டு இழந்த நடிகைகள் என்று தனி பிட்டு படமே வெளிவந்து, சிறந்த வெளிநாட்டு படம் பிரிவில் ஆஸ்கர் வெல்லும் போலிருக்கிறது..

பிட்டு படங்களை ஒளிபரப்ப ஆயிரத்தெட்டு கண்டிஷன், தியேட்டர் தடை, பிட்டு பட தியேட்டரில் பீடி விற்க, சமோசா விற்க தடை, சென்ஸார், காவல்துறைக்கு லஞ்சம் என்று எவ்வளவு தொல்லைகள் ? இந்த நடிகைக்கு பதில் ஷகீலா அவ்வளவு தானே வித்யாசம் ? ஏன் தொலைக்காட்சிக்கில்லை சென்ஸார் ?

ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்றால் ? வேண்டாம் அதை விடுங்கள். இந்து தருமத்தில் எங்கும் சாமியார்கள் இல்வாழ்வில் ஈடுபடக்கூடாது என்று சொல்லப்படவில்லையே ? அப்படி இருக்க சாமியார் நித்யானந்தர் என்ன குற்றம் செய்தார் ?? பொறுப்பற்ற ஊடகமான சன் டிவி தான் குற்றம் செய்துள்ளது...
.
.