தேடுங்க !

Friday, July 30, 2010

நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலடா !!

விளம்பரம் : டிஸ்கவரி புக் பேலஸ்

தமிழ் புத்தகங்களின் சங்கமாக விளங்கும் DISCOVERY BOOK PALACE- இப்போது சென்னை கே கே நகரில் விரைவாக வளர்ந்துவருகிறது, இதுவரை 50 க்கும் மேற்பட்ட புத்தக வெளியீட்டு நிகழ்வுகள் மற்றும் விமர்சன கூட்டம் என அவ்வப்போது எழுத்தாளர்களின் மிகப்பெரிய ஒரு சந்திப்பு முனையாகவும் மாறியுள்ளது. தாங்கள் மற்றும் தங்களைப் போன்ற புத்தகவிரும்பிகளின் வரவை மேலும் எதிர்பார்க்கிறோம். அனைத்து புத்தக நிறுவனங்களின் ஒத்துழைப்பையும் இன்னும் கூடுதலாக எதிர்பார்க்கிறோம். உங்களின் வாசிக்கும் வசதிக்காக இப்போது புத்தகங்களை இணையதளத்திலும் வாங்கும் வசதியை அறிமுகம் செய்கிறோம் .


எமது இணைய விற்பனையில் புத்தகங்களை பெற http://www.discoverybookpalace.com/ என்ற தொடுப்பை க்ளிக் செய்யவும்.

முகவரி: டிஸ்கவரி புக் பேலஸ்.
எண்:6 , மஹாவீர் காம்ளக்ஸ்
முனுசாமி சாலை,
கே கே நகர் மேற்கு. சென்னை- 78
செல்- 9940 44 6650

--
தமிழ் புத்தகங்கள் அனைத்தும் இப்போது டிஸ்கவரி புக்பேலஸ்-ல் கிடைக்கிறது, தொடர்பு கொள்ளவும் 9940446650

Thursday, July 29, 2010

கார்க்கி - ஜெகநாதன் - ஆதி - லைனக்ஸ் பெங்குவின்

  அப்போது ஏழுமலை தண்ணியடிப்பதை ஒரு மாத காலம் நிறுத்தியிருந்தான்.பாலாஜியின் நண்பன் ஒருவனின் பிறந்த நாள் ட்ரீட்டில் மட்டும் அடிப்பதற்கு ஆறுவிடம் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
2011 ஜுலை - கென்னடி விண்வெளி மையம், ப்ளோரிடா: ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஏலகிரி உலா மிகவும் எளிமையாக, வித்தியாசமாக இருந்தது. மூவரே சென்றிருந்ததால் கூட்டாக ரசித்த மாதிரியும் இருந்தது, அதே நேரம் கும்மாளமில்லாமல் இருந்ததால் ஒருவர் இன்னொருவரின் தனிமையில் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


இவர்களில் என்ன ஒற்றுமை வேற்றுமை ?

லைனக்ஸ் பெங்குவின் மட்டும்தான் குளிர் கண்ணாடி போட்டு உதார் விடலை. இந்த போஸ்டில் 12 மணிக்கு மேல கும்மி அடிப்பவர்களுக்கு ஒரே ஒரு பொற்காசு வால்பையன் ஆண்(ன்)லைனில் ஆர்டர் செய்வார். அல்லது விஜய் ஆதிராஜ் புதிதாக தோன்றும் டாய்லெட் க்ளீனர் ஒரு டஜன் வழங்கப்படும். இல்லை என்றால் கார்க்கி ஆதியின் நீலகிரி பயணத்தில் நான்காவது நபராக (ட்ரைவர்) சேர்த்துக்கொள்ளப்படும். இதன் எதிர்பதிவு போடப்பட்டால் அதில் தமிழ்மணம் கார்க்கி பெயரை கூர்க்கி என்று காட்டுமாறு admin @ tamilmanam.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன்.

Friday, July 23, 2010

சவுக்கு சங்கர் கைது : அராஜக காவல்துறைவளைத்து பிடித்து ஒரு பொய் வழக்கின் மூலம் கைது செய்யப்பட்டிருக்கிறார் ஒரு பத்திரிக்கையாளர், வலைப்பதிவர். அவர் சவுக்கு என்னும் வலைப்பதிவை நடத்தும் திரு சங்கர்.நானும் ஒரு பத்திரிக்கையாளன் என்று சொல்லிக்கொள்ளும் தமிழக முதல்வர் கலைஞர் ஆட்சியில் தான் இது நடந்தேறியிருக்கிறது.

இது குறித்து, பிரபல பத்திரிக்கைகளில் குப்பை கொட்டும் சக வலைப்பதிவர்களோ, பத்திரிக்கையாளர்களோ, மூச்சு விடக்காணோம். அதிகாரத்தில் இரு அல்லது அதிகார மையத்துக்கு அல்லக்கையாக இரு என்பது போன்றதொரு ஸ்டேட்டர்ஜியை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

பதிவர் சவுக்கு சங்கர் செய்த குற்றம் என்ன ? அவரது சமீபத்திய பதிவில் மிக முக்கியமான இரு காவல் அதிகாரிகளை பற்றி ஆதாரங்களோடு சில குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இதே குற்றச்சாட்டுகளை வைத்து ஒரு பொது நல வழக்காக தொடர்ந்திருப்பாராயின் இது சட்ட ரீதியாக கொண்டு செல்லப்பட்டிருக்கும். இப்போது இந்த குற்றச்சாட்டுகளுக்கு சம்பந்தமே இல்லாத, ஜாமீன் இல்லாத ஒரு பிரிவின் மூலம் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிகிறேன்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த குற்றச்சாட்டு பொய் எனில் சவுக்கு சங்கர் மீது மானநஷ்ட வழக்கு தொடரலாம். அல்லது பொது மக்கள், இந்த குற்றச்சாட்டு பற்றி மேல் விவரம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சொத்து விவரம் ஆகியவற்றை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டறியலாம். இப்படியான சட்ட ரீதியான செயல்கள் இருக்கும்போது சவுக்கு சங்கர் சம்பந்தபடாத ஒரு பொய் வழக்கின் மூலம் அவரை கைது செய்வது அநீதியாகும்.

இது குறித்து, மனசாட்சி உள்ள பத்திரிக்கையாளர்கள் கேள்விகேட்கவேண்டும். மாநில அரசுக்கும், எதிர் கட்சிக்கும், மற்ற அமைப்புகளுக்கும் இது குறித்து தகவல் அளித்து, சவுக்கு சங்கரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இது போன்ற நடவடிக்கைகளால் காவல்துறை மீதுள்ள நம்பிக்கை குறையுமே தவிர அதிகரிக்காது !! வலைப்பதிவர்கள் தங்களால் ஆன வகையில் இதனை பதிவு செய்யவேண்டும்.

Monday, July 19, 2010

பிராமணர் = பறையர். கண்டுபிடித்தார் ஜெயமோகன்.

Jeyamohan.jpg Jeyamohan image by ramnrom

பார்ப்பணீயம் பார் டம்மீஸ் இரண்டாவது வெர்ஷன் எழுதவேண்டும் என்று ரொம்பநாளாகவே தொண்டைக்குள் இருக்கிறது, ஆனால் நேரம் அல்லது சூழல் அமையவில்லை. முதல் பதிவு எழுதியபோது இருந்த கண்ணோட்டங்களில் பல மாற்றங்கள் வந்துள்ளது. அதுபற்றி அதிகம் தொடப்போவதில்லை. இருப்பினும், பார்ப்பணரும் பறையரும் ஒரே தளத்தில் வண்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்கிறார் ஜெயமோகன்.

அதில் எத்தனை வீதம் உண்மை ? எத்தனை வீதம் பொய் ? ஆரோக்கியமாக விவாதிக்கலாம். அதன் முன் சமீபகாலங்களில் ஊடகங்களில் என் பார்வையில் பட்டவைகளை பற்றி சொல்கிறேன்.

பார்வையில் பட்டது 1

ஹனிமூன் ஜோடிகள் என்று ஒரு ப்ரொக்ராம். அதில் பிரசன்னா என்ற நடிகர் ஒரு கேள்வி கேட்கிறார். கேட்பது, 40 ஆண்டுகள் தாம்பத்திய வாழ்க்கை வாழ்ந்த அய்யங்கார் ஜோடி ஒன்றிடம் ( ஒரு அய்யர் ஜோடியும், ஒரு ஆதிக்க சாதி சோடியும் கூட அந்த நிகழ்ச்சியில்)

இ.வே.ராமசாமி நாயக்கர் கண்டறிந்த இயக்கம் எந்த இயக்கம் ? ஆப்சன் ஏ : வெள்ளையனே வெளியேறு இயக்கம். ஆப்சன் பி: தீண்டாமை இயக்கம் ஆப்சன் சி : ஏதோ ஒரு ஆப்சன்

பதில் சொல்கிறார் பாட்டி : தீண்டாமை இயக்கம்.

பிரசன்னா : ராமசாமி நாயக்கர் கண்டறிந்தது தீண்டாமை இயக்கம். லெட்ஸ் ஸீ. கரெக்டான்னு பார்ப்போம்.

BANG !!!!! GREEN LIGHT !!!!

தீண்டாமை இயக்கம். சரியான விடை !!! பாட்டியின் வாயெல்லாம் பல்.

பார்வையில் பட்டது 2

கண்ட கண்ட புள்ளைங்களோட ஆட்டோவுல ஈஷிண்டு போறல்ல. அதான் என்கிறது ஹமாம் என்ற நேர்மையான சோப்பின் விளம்பரம். கேரம் போர்டை அழுத்தி அடிக்கும் கிழவர் எல்லா விளம்பரங்களிலும் வருபவர்.

பார்வையில் பட்டது 3

ஏதோ ஒரு தமிழ் ஊடகத்தில் வரும் விளம்பரத்தில் பேசுபவரின் பெயர் இடது ஓரம் வெள்ளை எழுத்துக்களில். ஆனந்தி அய்யர்.

ஊடகங்களை ஆக்ரமித்து ஸ்டூல் போட்டு உட்கார்ந்திருக்கும் பிராமணர் பறையர் அளவுக்கு வண்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்களாம். என்ன கொடுமை சரவணன்.

ஜெயமோகனார் சொல்வது போல சாதி பெயர்களை பொது வெளியில் புழங்குவது தமிழகத்தில் உளச்சிக்கலாக இருந்தால் ஜாதி பெயர்களை புழங்கினால் ஜோட்டாலப்போம் என்று பெரியாரால் இனிஷியேட் செய்யப்பட்ட இயக்கத்தை ஸ்கிப் செய்து எப்படி ஒரு திராபை விளம்பரத்தில் ஆனந்தி அய்யர் என்று அவரது பெயரை குறிக்கிறார்கள்.

பார்ப்பனர்களும் பறையர்களும் ஒரே நிலையில் தான் இருக்கிறார்கள் என்கிறார். ஆமாம் பறையர்கள் சேரிகளில். பார்ப்பணர்கள் அக்கிரகாரத்தில். பறையர்கள் குடிசைகளில். பார்ப்பணர் அப்பாட்ர்மெண்டுகளில்.

பறையர் என்ற வார்த்தையே உறுத்தலாக இருப்பதால் தலித் என்று உபயோகப்படுத்தும் இக்காலத்தில் கூச்ச நாச்சமின்றி அந்த பதத்தை உபயோகிக்கிறார். பறையர் என்று திட்டுவது வன்கொடுமை என்றும் பத்தாயிரம் அபராதம் என்றும் இருக்கிறது இல்லையா ? அதனால் இண்டலிஜெண்டலியாக சொல்கிறார். பறையர் என்பவர் மிக உயர்ந்த நிலையில் இருந்தவர்களாம். ஆதாரம் இருக்கிறதாம். இருந்துவிட்டு போகட்டும். இன்றைய நிலை என்ன ? பறையர் என்ற பதம் உவப்பானதாக இருக்கிறதா ? தான் ஒரு ஆதிக்க சாதியை சேர்ந்தவன் என்பதையும் ஒரு மலையாள அப்பா கதை மூலம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதை போல ஏற்றி வாசிப்பவரின் உள்ளே இறக்குகிறார்.

ஜெயமோகன் சொல்கிறார் : பிராமணர்கள் கிட்டத்தட்ட தலித்துக்கள் அளவுக்கே புண்பட்ட மனநிலையில் இருக்கிறார்கள் என்பது இன்னொரு ஆச்சரியம். மொத்த தமிழகமும் தங்களை வெறுப்பதாகவும் வேட்டையாடுவதாகவும் அவர்கள் நினைக்கிறார்கள். தாங்கள் அனைத்து ஊடகங்களிலும் வரலாறுகளிலும் அவமதிக்கப்படுவதாகவும் அதை தமிழகமே வேடிக்கைபார்ப்பதாகவும் சொல்கிறார்கள். தலித்துக்களைப்போலவே சிறு சொல்கூட பிராமணர்களை ஆழமாக புண்படுத்திவிடும்.

அனைந்து ஊடகங்களிலும் அவமதிக்கபடுவதாக நினைத்தால் பார்ப்பணர்கள் மட்டுமே சோப்பு போட்டு குளிப்பதாகவும் மற்றவர்கள் செங்கல் போட்டு குளிப்பதாகவும் காட்டும் விளம்பரம் எப்படி வரும் ? ஈவேராமசாமி நாயக்கர் என்று பெரியாரின் பெயரை வன்மத்தோடு சன் டிவியில் காட்டும் பார்ப்பணீயப்பாம்பு எப்படி ஊடகத்தின் உள்ளே நுழையும் ?

என்னைப்பொறுத்தவரை பார்ப்பணரையும் கூட அவர்களது சாதிப்பெயரை சொல்லி திட்டுவதை ஏற்கமாட்டேன். அதுவும் ஒரு வன்கொடுமையே என்பதில் இப்போது உறுதியாக நிற்கிறேன். ஆனால் என்னுடைய சாதி உயர்ந்தது, I feel Blessed என்று விஜய் டிவியில் சொன்ன ஐய்யங்கார் லாவண்யாவை செருப்பை கழட்டி அடிக்கவேண்டும் என்றும் சொல்கிறேன். பிரம்மனின் மண்டையிலிருந்து வந்தவர்கள் நாம் என்று குழந்தைகளுக்கு சுலோகம் சொல்லிக்கொடுத்து, உயர்சாதி பாசத்தை அவர்களுக்கு ஏற்றுவதையும் கண்டிக்கிறேன்.

சுகுணா திவாகர் சொன்னார். தான் ஆதிக்க சாதியில் பிறந்ததனால் குற்ற உணர்வில் இருப்பதாக. தேவை இல்லை. எந்த சாதியில், மதத்தில், உட்பிரிவில் பிறக்கும் பிறப்பை தீர்மாணிக்கும் நிலையில் குழந்தை இல்லை. ஆகவே அதனால் குற்ற உணர்ச்சியை கொள்ள தேவையில்லை. அப்படி பார்த்தால், ரொட்டி துண்டுக்காகவும், அழகிய வெள்ளைக்கார பிகர்களுக்காகவும், அரசியல் ஆட்சி அதிகாரம், கவர்னர் சர் பதவி, இங்கிலாந்து படிப்பு என்றெல்லாம் ஆசை காட்டி கிறித்தவ மதத்துக்கு மாறிய, மாற்றப்பட்ட என் பாட்டன் பூட்டனுங்களுக்காக நான் எந்த மசிருக்கு வருந்தவேண்டும் ? இயேசுவே ஒரு டம்மி பீசு...

பார்ப்பணரை சாதி பெயரை சொல்லி திட்டுவதன் மூலமாக சமூக நீதி போராளிகள் சாதிக்கப்போவது எதுவும் இல்லை. அதைவிட சமூக நீதிக்கு செய்யவேண்டிய பல வேலைகள் காத்திருக்கின்றன. பெரியார் காலத்தில் இருந்த அளவுக்கு பார்ப்பண ஆதிக்கம் இன்றைக்கு இருக்கிறதா ? பாம்பை பார்த்தால் பாம்பை விட்டு பார்ப்பானை அடி என்ற அளவுக்கு மனித உரிமைக்கு மாறாக செயல்படவேண்டுமா என்ற கேள்வியை வாசிப்பவர்களுக்கே விட்டுவிடுகிறேன்.

பார்ப்பணரை வெறுமனே நீ பார்ப்பான் அதனால் நீ இழிவு செய்யத்தக்கவன் என்று சொல்லி இழிவு படுத்துவதன் மூலம் சமூக நீதி போராளிகள் சமூக நீதி போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பை முற்றிலுமாக இழந்துவிடுகிறார்கள். முக்கியமான பிரச்சினைகளில் எக்கேடோ கெட்டுப்போ என்று அவர்கள் அமைதியாக இருந்துவிடுகிறார்கள்.

தனிப்பட்ட முறையிலான அவர்களது அடையாளங்கள், மொழி போன்றவற்றை கடிப்பதை விட்டுவிட்டு, சமூகநீதி போராட்டம் குவியும் மையம் அதுவல்ல என்று உணரவேண்டும். உண்மையில் திராவிட இயக்கங்கள் நீர்த்துப்போனதால் சமூகநீதியை பொறுத்தவரை நாம் எவ்வாறானான முன்னேற்றங்களையும் அடையாமல் இன்னும் ஊருக்கு வெளியே சேரியும், இரட்டை குவளை முறையும் இருப்பதே இதன் சாட்சி. தி.கவில் வாரிசு அரசியல், வெறும் ஆசிரியர் புகழ்மாலையாக விடுதலை, பெரியார் தி.க தலைவர் கொளத்தூர் மணியை துரோகி என்று வசைபாடுதல், சன் டிவியிலேயே பெரியாரை இழிவு செய்ய அணுமதித்தல், ஒரு குடும்பம் தமிழகத்தை பங்கு போட்டு பாகம் பிரித்தல் என்று பல பிரச்சினைகள் உண்டு (கலைஞர், ஜெ என்று இருவரையும் இங்கே பொருத்தலாம்).

இருந்தும் தி.மு.க அரசு ஒரு சில நல்ல காரியங்களை முடிந்த அளவு நிறைவேற்றுவதை இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் சமூக நீதியை பொறுத்தவரை, அமைதியாக ஏற்றுக்கொள்ள, சகித்துக்கொள்ள பழகிவிட்டார்கள். அல்லது இப்போதைக்கு முடிந்தவரை சுருட்டுவது தான் முக்கியம் என்று பிஸியாக இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

அதனால் இந்த அறிவுஜீவி கும்பல், தான் கக்குவதை அப்படியே நம் வாயின் உள்ளே தள்ள முனைவதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா ?

க்ரீமி லேயர் என்று ஒரு விஷமமான பிரச்சாரம். க்ரீமி லேயரில் முதல் தலைமுறையில் தாசில்தார் ஆன ஒருவனின் சுற்றம் நட்பு குடும்பம் எத்தனை பேர் அவர்களும் மணியக்காரராக அரசு ஊழியராக இருக்கிறார்கள் ? ஆனால் வங்கிப்பணியை இழக்கும் ஒரு உயர்சாதி பார்ப்பணரின் மச்சான் அமெரிக்காவில். மாமா ஐரோப்பாவில். அத்திம்பேர் ஆப்ரிக்காவில். சட்டகர் ஐ.ஐடியில் என்று அனைவரும் கல்லா கட்டும் சூழலில் க்ரீமி லேயர் காரன் படித்துவிடகூடாது, உயர் பதவி அடையக்கூடாது என்று எவ்வளவு வன்மம் தெறிக்க பார்ப்பணீய ஆங்கில ஊடகங்கள் / இந்து ராம் போன்ற கும்பல் கச்சை கட்டுகிறது ?

ஜெயமோகன் கூற்றுப்படி, பறையரும் பார்ப்பணரும் ஒரே நிலையில் இருக்கிறார்கள் இல்லையா ? ஏன் தலித் மற்றும் பழங்குடியினரை FC என்று சொல்லிவிடக்கூடாது ? ஜெயமோகன் கடைசீயாக எந்த சேரியில் எந்த குடிசையில் ஒரு ரூபாய் அரிசியும் கொஞ்சமே கொஞ்சம் பருப்பும் போட்ட சாம்பார் சாதம் சாப்பிட்டார் ?

சாதி பேசாமல் இருப்பது என்பது யாரிடமும் நெருக்கமாக பேசாமல் இருப்பது மட்டுமே என்கிறார். ஆக அவர் சொல்வது, எல்லோரும் அவன் அவன் சாதியை பேசுங்கள். தலித் என்பவர்களை இன்னும் சாதியை சொல்லி இழிவு படுத்துங்கள் என்பதே ! இது போன்ற முட்டாள்தன இந்துத்துவ புரட்டுகளை கண்டிக்க சாரு சொல்வதைபோல விஷ்ணுபுரம் படிக்கவேண்டும் என்றில்லை. படிக்காமலேயே துப்பலாம்.

Sunday, July 18, 2010

பெங்களூரில் சாக்லெட் க்ருஷ்ணா

null

பெங்களூரில் க்ரேஸி மோகன் நடத்தும் சாக்லெட் க்ருஷ்ணா நாடகம் மல்லேஸ்வரம் சவுடய்யா ஹாலில் நடக்கிறது. தேசிகன் சென்னையில் இதுக்கு போன போது கேண்டீனில் தோசை சரியாக வரவில்லை என்பதை தவிர வேறு நெகட்டிவ் பீட் பேக் எதுவும் இல்லாத 100 முறைக்கு மேல் அரங்கேறிய நாடகம். சாக்லெட் க்ருஷ்ணா யுவ க்ருஷ்ணா போல தூள் கிளப்புகிறார் போலிருக்கிறது.

என்னிடம் கொஞ்சம் டிக்கெட்ஸ் இருக்கு. பெங்களூர்வாசிகளில் தேசிகன் ஏற்கனவே இதை பார்த்திருப்பதால் வரமாட்டார். அரவிந்தனை ஆன்லைனில் காணோம். சந்தோஷுக்கு என் பதிவு பிடிக்கல. இது போன்ற எந்த கன்ஸ்ட்ரெயின்ஸும் இல்லை என்றால் தொடர்புகொள்ளுங்கள். டிக்கெட்டை தருகிறேன்.

தடாலடியார் கவுதம் போல போட்டி எல்லாம் வைத்து கொடுக்க இது சினிமா டிக்கெட் இல்லை என்றாலும், நகைச்சுவைக்கு கியாரண்டி என்கிறார்கள்.

நடைபெறும் இடம் சவுடய்யா ஹால், மல்லேசுவரம். நேரம் 4 மணி 7 மணி. இங்கே கேண்டின் இருக்கிறதா என்ற தகவல் என்னிடம் இல்லை.