Monday, September 20, 2010

அநீதி ஆக செயல்படுதல்

அநீதி ஆக செயல்படுதல் என்பது இரு பக்கமும் கூர்மையான கத்தியை போன்றது. என்னுடைய முந்தைய பதிவை பார்த்த சம்பந்தப்பட்டவர்கள் அதனை உண்ர்ந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

காரணம் வலி என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் எது வலி என்று உணராதவர்களுக்கு கொஞ்சமாக குத்தித்தான் உணரவைக்கவேண்டும் என்ற நிலையில் எனக்கு வேறு வழி தெரியவில்லை.

அதன் காரணமாகவே, அவர்கள் குத்திய அதே அறம் இல்லாத, அநீதி ஆக செயல்படுவதான கத்தியை நானும் பயன்படுத்தினேன்.

எப்போதும் எதிரி தான் நாம் எந்த ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கிறான் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

அண்ணா சொன்னதுபோல வன்முறை என்பது இருபுறமும் கூர்மையான கத்தியாகும். 

நான் வன்முறையை எடுக்கும்போதே, அதே வன்முறை என்னை தாக்கும்போது எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று மனதளவில் என்னை தயார்படுத்திக்கொண்டுதான் இருந்தேன்.

ஆனால் சம்பந்தப்பட்டவரிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை. ஒருவேளை ஆக்சன் ப்ளான் இனிமேல் தான் ரெடியாகும் போல. அதுபற்றி கவலை இல்லை. குறைந்தபட்சம், நான் என் தரப்பில் என்னுடைய முந்தைய பதிவை நீக்கிவிட்டேன்.

தன்னுடைய பதிவு இன்னொருவரை மனதளவில் பாதிக்கும் என்று தெரிந்தும் அப்படியே வைத்திருக்க நான் ஒன்றும் புனைவெழுத்தாளர்கள் அளவுக்கு அநீதியானவன் இல்லை. நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, இதனை நான் நம்புகிறேன்.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....