Saturday, January 29, 2011

உலக கோப்பையை புறக்கணிப்போம்.



எம் இனம் கடலில் ரத்தம் சிந்தும்போது , களிப்புடன் பார்ப்பேனா கிரிக்கெட் ? கிரிக்கெட் உலக கோப்பையை புறக்கணிக்கிறேன். சேப்பாக்கத்தில் போட்டி நடந்தால் தெரு நாய் மட்டுமே பார்வையாளராக இருக்கட்டும்.

Tuesday, January 25, 2011

லிப்ட் - குட்டிக்கதை

மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசே நடத்தும் பந்த். செண்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்திரங்கிய பாவனா கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வந்து பொறியியல் படிக்கும் மாணவி.

சாலைகளில் சிற்சில தனியார் வாகனங்களை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆட்டோ, டாக்ஸி எல்லாம் முடங்கி, துடைத்துவிட்டது போல சாலைகள்.



ஸ்கூட்டி வைத்திருக்கும் தோழியின் மொபைலோ நாட் ரீச்சபுள். செய்வதறியாது தவித்தாள்..

செந்நிற சாண்ட்ரோவில் வந்த இளைஞன் சுகுமார், அழகிய இளம்பெண் லிப்ட் கேட்கும்போது நிறுத்தாமலா போய்விடுவான் ?

ப்ளீஸ். உட்காருங்க. எங்கே போகனும் சொல்லுங்க. நான் ட்ராப் பண்ணிடுறேன். என்றான்.

தேங்ஸ். எப்படி வீட்டுக்குக்கு போறதுன்னு தெரியாம ரொம்ப பயமாயிருச்சு..

ஐந்தே நிமிடங்கள் தான்.

நான் இந்த ஜங்ஷன்ல இறங்கிக்கறேன் சார். நிறுத்துங்க. என்றாள் பாவனா.

அண்ணா நகர் போகனும்னு சொன்னீங்களே மேடம். நான் அங்கயே ட்ராப் பண்றேன்.

நோ தேங்ஸ்.

குழப்பத்துடன் புறப்பட்டது சாண்ட்ரோ !

வேறு ஒரு தோழிக்கு அலைபேசியில் அழைத்து, அவளுடைய வண்டியில் ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தவுடன், கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கும்போது டைரியில் இப்படி எழுதினாள்.

கார் ஏஸியில் இருந்து ம்யூஸிக் வரை அடுத்தவரின் உணர்வுக்கு மதிப்பளிக்காத ஒரு முட்டாளின் காரில் ஒரு கிலோமீட்டர் லிப்ட் கேட்டு வந்தேன். முற்றுப்புள்ளி.

Sunday, January 23, 2011

ப்ரீலான்ஸ் வெப் டெவலப்பர்கள் தேவை

இணைய தள வடிவமைப்பில் ஆர்வம் / அனுபவம் கொண்டவர் தேவை. வீட்டில் இருந்தே அல்லது ஓய்வு நேரத்திலும் கூட பணியாற்றலாம்.

இணைய தளத்துக்கான டேட்டாபேஸ் உருவாக்கம், ஸ்க்ரிப்டிங், வெப் சர்வர் மெயிண்டனன்ஸ் போன்றவற்றில் அனுபவம் இருந்தால் முன்னுரிமை தரப்படும்.

தகுந்த சம்பளம் வழங்கப்படும்.

தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல் : ravi.antone@gmail.com

தமிழ் ஓவியாவின் காமெடி



சமீபத்தில் வலைப்பதிவர் தமிழ் ஓவியா வெளியிட்ட " கலைஞர் தந்த அற்புத கருத்தோவியக் காவியம் இளைஞன்" என்ற அற்புதமான விமர்சனத்தை கண்டேன்.

உண்மையிலேயே கிலி ஏற்பட்டு, அலறி துடித்தேன். இந்த கொடூரத்தை செய்ய மிஸ்டர் தமிழ் ஓவியாவுக்கு எப்படி மனசு வந்தது என்று தெரியவில்லை.

ஏழு ஓட்டுக்கள் தனக்குத்தானே போட்டுக்கொள்வது கூட பரவாயில்லை. ஆனால் இது போன்ற கொடுமைகளை செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

திரு வீரமணி அவர்கள் தமிழர்களே ப்ரட்டு சாப்பிடுங்கள் என்று சொல்லியதை கூட ஜீரணிக்கமுடியும். ஆனால் இளைஞன் திரைக்காவியத்தை எல்லாரும் பாருங்கள் என்று சொல்வது கொடுத்த காசுக்குமேல் கூவுவதை போல இல்லையா ?

பெரியார் இருந்தால் இதை கண்டிப்பாக தாங்கிகொள்ளமாட்டார். பகுத்தறிவு பிரச்சாரம் செய்ய நேர்மை முக்கியம் :))

காப்பியடிக்கும் தினகரன்



நீங்கள் தினகரன் மட்டும் வாங்குபவர்களாக இருந்தால் ஓக்கே. ஆனால் உங்கள் வீட்டில் தினகரன் மற்றும் டைம்ஸ் ஆப் இண்டியா ஆகிய இரண்டு பேப்பர்களும் வந்தால் நீங்கள் ஆங்கில பேப்பரான டைம்ஸ் ஆப் இண்டியாவை தைரியமாக நிறுத்தலாம்.

காரணம், தினகரனில் வேலை செய்யும் காப்பி கேட் ஒன்று,  ஆங்கில பேப்பர்களில் வருவதை அப்படியே மொழி பெயர்த்து அடித்து விடுவதற்கே முழு நேரமாக வேலை செய்கிறது.

கடந்தமாதம் உயரமான மாடல் ஒருவரைப்பற்றிய தகவல் மும்பை டைம்ஸில் பார்த்து அடுத்த நாளே தினகரனில் அதை ஒரு வரி கூட மாற்றாமல் ( மாடலின் உயரம், எடை மற்றும் மற்ற புள்ளிவிவரங்கள்) அவரை பற்றிய செய்திகள் ஆகியவற்றை அப்படியே எழுதினார்கள்.

அது முதல் இவர்கள் உண்மையில் காப்பியடிக்கிறார்களா என்று பார்த்துவந்தேன். இன்றைய தினகரனில் உடற்பயிற்சி செய்தால் ஜலதோஷம் வராது என்ற செய்தி வரை, அம்புட்டும் படு காப்பி.

ஒரு செய்தி என்பது எல்லாருக்கும் பொதுவானது. உதாரணம், சமீபத்திய சபரிமலை சம்பவம். அதனை அனைத்து நாளிதழ்களும் வெளியிட்டனவே ? அதனை காப்பி என்று சொல்லப்போவதில்லை.

ஆனால் குறிப்பிட்ட சில செய்திகள், மற்ற நாளிதழ்களில் வருவதை அப்படியே அடுத்த நாள் அடித்து விடுவது காப்பிதான்.

அவர்களும் (ஆங்கில நாளிதழகள்) , இணைய தளங்களில் இருந்தும் மற்ற செய்தி சோர்ஸ்களில் இருந்தும் தான் செய்திகளை சேகரிக்கமுடியும். காரணம், ரஷ்யாவில் எங்கோ ஒரு மூலையில் ஒரு சம்பவம் நடந்தால் அதனை ஒரு நிறுவனத்தின் சொந்த செய்தியாளர் தான் எழுதவேண்டும் என்று இல்லை. ஆனால் இன்னொரு நாளிதழில் வந்ததை அப்பட்டமாக அடிக்கும் காப்பி, அறிவுத்திருட்டு.

ஸ்பெக்டம் ராஜா வீட்டில் சோதனை நடந்ததை பற்றி ஒரு வரி கூட எழுதாமல், காமன்வெல்த் கல்மாடி வீட்டில் நடந்த சோதனையை தலைப்பு செய்தியாக வெளியிடுவது பற்றி கூட ஒன்றும் சொல்லதவில்லை. ஏன் என்றால் உங்கள் சார்பு நிலை பற்றி எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்த அறிவுத்திருட்டை பொறுத்துக்கொள்ளமுடியவில்லையே ? சம்பந்தப்பட்ட பைத்தியங்களுக்கு உறைக்குமா ?

..

Tuesday, January 11, 2011

பின்னூட்ட வெளாட்டு ! வாரீகளா ?

ஒரு மொக்கை பதிவை போடுவதற்கு பதில் நாலு நல்ல பதிவுக்கு பின்னூட்டம் போடலாம் - இப்படிக்கு அனானிமஸாக கடந்த ஆண்டு பின்னூட்டம் போட்ட கணேஷ் என்பவரின் புதிய தத்துவ திரட்டு பக்கம் 232.



உண்மையில் நீங்க படித்துக்கொண்டிருக்கும் பதிவு ஒரு புதிய பின்னூட்ட புரட்சி. இது உங்களை பிரட்டி எடுக்கப்போவுது.

இந்த வெளாட்டின் ரூல்ஸ் கீழே.

1. பத்து நல்ல பதிவுக்கு (இடுகைகளுக்கு) பின்னூட்டம் போடனும். (கொஞ்சம் குஷ்டந்தான், இருந்தாலும் தேடுங்க)
2. ஐஞ்சு பேர இந்த ஆட்டத்துக்கு அழைக்கனும்.
3. எந்த எந்த நல்ல பதிவுக்கு பின்னூட்டம் போட்டீங்க, ஏன் போட்டீங்க அப்படீங்கறத எழுதி, 'என்னோட பின்னூட்ட வெளாட்டு' ' நானும் ஆடிட்டேன்' 'பிச்சுப்புட்டேன் பிச்சு' அந்த மாதிரி எதாவது தலைப்பு வெச்சு ஒரு பதிவா போடனும்.

வெளாட்ட நான் ஆரம்பிக்கறதால நான் அஞ்சு பயபுள்ளைகள கூட்டுட்டு, கெளம்பறேன். என்னோட பின்னூட்ட வெளாட்டு ரிசல்ட் அடுத்த பதிவா வரும்.

1. பட்டாப்பட்டி
2. சித்ரா
3. எம் அப்துல் காதர்
4. படைப்பாளி
5. சசிகுமார்

ஹேப்பி வெளாண்டிங். ஹேப்பி பின்னூட்டம் போட்டிங்.

Sunday, January 09, 2011

கோவில்பட்டி கல்லூரிக்கெதிராக ஆர்ப்பாட்டம் - ஜெ அறிவிப்பு

.
.
.முதலில் இது பற்றி அண்ணன் உண்மைத்தமிழனின் பதிவை வாசித்துவிடுங்கள்.

வணக்கம் உண்மைத்தமிழன்  அவர்களே,
                              
தங்கள் வாசகனான எனக்கு தங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்து கொள்ளும் அவசியம் இன்று வந்துள்ளது. குறிப்பாகச் சொன்னால் தங்கள் உதவி எனக்கு தேவைப்படுகிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக ஒரு உதவியை உங்களிடம் நாடுகிறேன்.

தமிழக அரசு இந்தக் கல்வியாண்டில் குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று அறிவித்து இருந்தது. இந்த ஆண்டில் அட்மிஷன் போடப்பட்ட மாணவ மாணவிகளில் பெரும்பான்மையானோர் இந்த சலுகையை நம்பி சேர்ந்தவர்கள்தான். பலரும் வறுமையில் வாடும் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

கோவில்பட்டியை சேர்ந்த பிரபல "நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி" ஆரம்பத்தில் முதல் பட்டதாரி மாணவ மாணவியரிடம் அட்மிசனின்போதே அரசாங்கத்தின் அறிவிப்புக்கு மாறாக பதினைந்தாயிரம் பணத்தை வாங்கிக் கொண்டார்கள். 

எங்கள் பிள்ளைகள் எப்படியாவது இன்ஜினியரிங் படித்தால் போதும் என்ற வேகத்தில் நாங்களும் எப்படியோ பணத்தை கட்டிவிட்டோம்.  இப்போது மிகவும் சூட்சுமமாக கல்வியாண்டிண் நடுப்பகுதியில் மேலும் Rs.12700 கட்ட சொல்லி முதல் பட்டதாரி மாணவ மாணவிகளை வற்புறுத்துகின்றனர். கணக்கு பார்த்தால் வருடத்திற்கு முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் வருகிறது. எந்த வகையில் இது நியாயம்..? பெற்றோர்கள் எல்லாம் செத்து சுண்ணாம்பாக ஆகிக் கொண்டு வருகின்றனர். 

அரசாங்கம் "கல்விக் கட்டணம் இலவசம்" என்ற பசப்பு வார்த்தையை நம்பி எங்கள் பிள்ளையை சேர்த்த நாங்கள் இப்போது நடுக்காட்டில் தவிக்கும் நிலைக்கு வந்து விட்டோம்.

தயவு செய்து இந்த கடிதத்தோடு நான் இணைத்துள்ள ஆதாரத்தை பார்த்து, அதை தங்கள் தளத்தில் பிரசுரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த அநியாயத்தை எதிர்த்து நீங்கள் பதிவு எழுத வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு ,
அனானிமஸ்
கோவில்பட்டி







Read more: http://truetamilans.blogspot.com/2011/01/blog-post_08.html#ixzz1AW1v0EQN



இந்த கடிதம் போலியாகவோ உண்மையில்லாமலோ இருக்க வாய்ப்பில்லை !டைரக்டர் கையொப்பத்துடன் தெளிவாகவே உள்ளது. அதிலும் அண்ணனுக்கு முருகனே லெட்டர் எழுதியிருக்கிறார். சம்பந்தப்பட்ட மாணவ மாணவியரை கண்டறிந்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அதனால் அவரது பெயரை நீக்கிவிடுமாறு உண்மையாரை கேட்டுக்கொண்டுள்ளேன். 


இதுகுறித்து செல்வி ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை.


கோவில்பட்டியில் இருக்கும் நேஷனல் பொறியியல் கல்லூரியில் நிர்ணயித்த தொகையை விட அதிக தொகையை வசூலிப்பதாக தெரிகிறது. இது மைனாரிட்டி திமுக அரசு வகுத்த விதிமுறைகளுக்கு மாறாக உள்ளதோடு, மைனாரிட்டி திமுக அரசின் அமைச்சர்கள், திட்டங்களை அறிவிப்பதோடு அதனை பற்றி அக்கறை கொள்வதில்லை என்று தெளிவாக அறிவிக்கும் செயலாகும். 


தனியார் பள்ளி கட்டண குறைப்பும் சரி, இதுபோன்ற அறிவிப்புகளும் சரி, வெறும் கண்துடைப்புதான் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.


எனது தலைமையில் கழக ஆட்சி வரும்வேளையில், இது போன்ற கல்லூரிகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.


இது குறித்து வருகின்ற ஜனவரி 17 ஆம் தேதி, சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரிக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். கழக முன்னனியினர், கூட்டணி கட்சி தோழர்கள், பொதுமக்கள் ஆகியோர் பெரும் திரளாக கலந்துகொள்ளவேண்டும். மேலும் மாணவர் அணி, வழக்கறிஞர் அணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, எம்ஜியார் மன்றம், ஜெ பேரவையினர் பெருந்திரளாக கலந்துகொண்டு ஆதரவு நல்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 


-- அம்மா அறிக்கை விடுவதற்கு கண்டண்ட் நானே டைப் செய்து கொடுத்துவிட்டேன். !!

Saturday, January 08, 2011

திமுகவுக்கே ஓட்டு போடலாம்னு இருக்கேன் !!!

.

இணையத்தில் மட்டும் வீசும் திமுக எதிர்ப்பலை, இப்ப இன்னும் கொஞ்சம் அதிகமாயிட்டதோ என்று தோன்றும் அளவுக்கு, கொஞ்சம் கொலைவெறியோடு அலைகிறார்கள். அதற்கு பல காரணங்கள். பல நியாயங்கள். பல கற்பிதங்கள்.

ரசினிகோந்து வாய்ஸ் கொடுத்ததால் ஏமாந்து திமுக-தமாக கூட்டணிக்கு 96 அடியேன் ஓட்டு போட்டது வரலாற்று நிகழ்வு, அதை பற்றி அதிகம் வேண்டாம், ஆனால் இந்த முறை, திமுகவுக்கு ஓட்டு போடுவது என்று முடிவெடுத்துவிட்டேன்.

காரணங்களை கீழே அடுக்குறேன் !!!

சூப்பரா இருக்கு இதெல்லாம்.

1. கடந்த அதிமுக ஆட்சியின் ஹிட் திட்டங்களை (மகளிர் சுய உதவிக்குழு, மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் போன்ற பல) ஒழிக்காமல் அப்படியே செயல்படுத்தியது. அம்மா ஆட்சியில் உழவர் சந்தை, சமத்துவபுரம் திட்டங்கள் பொலிவிழந்துபோனது போல் இல்லாமல்.

2. மத்திய அரசின் நூறு நாள் வேலைத்திட்டத்தை சுணங்கடிக்காமல் செயல்படுத்தி, கிராம அளவில் நல்ல பணப்புழக்கம் ஏற்பட வகைசெய்தது.

3. ஒரு ரூபாய் அரிசி ! இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டி. வயிறும் மனசும் நிறையும் திட்டங்கள்.

4. கிராம குளங்கள் / ஏரிகள் தூர்வாறப்பட்டு, புதிய நீர் ஆதாரங்கள் தமிழகமெங்கும் உருவாக்கப்பட்டுள்ளது.

5. அரவாணிகள், நரிக்குறவர்கள் மேல் அக்கறையான நடவடிக்கைகள், தனி நல வாரியம் அமைத்தது.

6. அரசு பள்ளிகளில் கட்டணம் ரத்து, வாரத்தில் ஐந்து நாளும் முட்டை(புள்ளைங்களா, பாடத்துல இதை வாங்கிடாதீங்க) !

7. வீட்டு வசதி திட்டம் (முன்னால அவர் பெயரை சேர்த்துக்கோங்க. நான் அதிமுகக்காரன், அம்மாவுக்கு மொட்டை கடுதாசி போட்டுடுவாங்க)

8. இலவச மருத்துவ காப்பீடு

9. அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, வாத்தியார்கள் / டீச்சர்களுக்கு வழக்கம்போல சம்பள உயர்வு ( இவர் ஆட்சின்னாலே இவங்களுக்கு தனி குஷி தெரியுமா)

10. 108 ஆம்புலன்ஸ் சேவை. (நான் கூட ஒரு ஆக்ஸிடெண்ட் அப்போ போன் செய்தேன். அதி அவசர சேவை. வெரிகுட்)

11.  இலவச எரிவாயு அடுப்புகள் மற்றும் இணைப்புகள்

12. கனிமொழி தலைமையில் நடக்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி முகாம்கள். லட்சக்கணக்கானோர் பயனடைந்துள்ளனராம்.

13. தேசிய கடல்வாழ் பல்கலையை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்தது.

14. புதிய பொறியியல், மருத்துவ கல்லூரிகள் அமைக்க சீரிய முயற்சிகள் ( கடலூர் திண்டுக்கல் மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் வரப்போவுதாமே)

15. உடல் ஊனமுற்றோர் என்ற பதத்தை ஒழித்து மாற்றுதிறனாளிகள் என்று அழைக்கவேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தது

இன்னும் பல இருக்கு. தமிழகம் பல துறைகளில் இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருக்குன்னு ஸ்டேட் சொல்லுது.

இனி, என்ன என்ன செய்யவேண்டிய தேவை :

தனியார் பள்ளி கட்டணங்களை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதே பெரிய சாதனைதான். தொடர்ந்து இதனை கவனித்து, இந்த பெருமுதலாளிகள் சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்துவிடாமல் காத்து, கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்

கள் இறக்க அனுமதி கொடுக்கவேண்டும். கள் என்பது உடலுக்கு ஊறு விளைவிக்காத சாதாரண சரக்கு. இதை ஏன் சட்டம் போட்டு தடுக்கவேண்டும் ? டாஸ்மாக் மது விற்பனை செய்யும் நாட்டில் கள்ளுக்கு ஏன் அனுமதி மறுக்கவேண்டும் ? புரியாத புதிர். இதில் பனைப்பொருள் நலவாரியத்துக்கு ஒரு உருப்புடாத கோயில்ல உண்டசோறு வாங்கி தின்ற குமரி அனந்தன் தலைவர். கொடுமை.

கிராம சாலைகள் எல்லாம் என்றைக்கு தான் சரியாகும் ? மத்திய அரசின் சாலைகள் எல்லாம் பள பளவென மாறிய பிறகும் நீங்கள் திருந்தவேண்டாமா ?

சேது சமுத்திர திட்டம், மத்திய அரசின் சட்டையை பிடித்து பெறவேண்டிய ஒன்று. விடவேண்டாம். வொர்க் ஹார்ட் !

ஈழத்தமிழர்களின் நாடுகடந்த தமிழ் ஈழ அரசை வெளிப்படையாக ஆதரித்து சட்டமன்றத்தில் தீர்மானம் போடவேண்டும்

அனைத்து மக்களுக்கும் - குடும்ப அட்டைக்கு ஒன்று - என்று இலவச மொபைல் வழங்கிடவேண்டும். இதை விட மாநிலத்தை நாலு கால் பாய்ச்சலில் முன்னேறவைக்க ஒரு திட்டம் தேவையில்லை.

104 சேவை. குஜராத் அரசின் சிறப்பான திட்டம். 24 மணி நேரமும் மருத்துவரை அழைத்து காய்ச்சல் தலைவலி பெண்கள் பிரச்சினை என்று எதுவாக இருந்தாலும் சொல்லி மருந்து கேட்கலாம். கண்டிப்பாக செயல்படுத்துங்கள், சூப்பர்ஹிட் ஆகும்.

ஆன்லைனில் வெப்சைட் ஆரம்பித்த துணைமுதல்வர், ஏன் மக்களுடன் நேரடியாக தொலைபேசியில் உரையாடக்கூடாது ? ஜனநாயகத்துக்கு பெயர்போன(?) பாகிஸ்தான் பிரதமர் பேசுகிறார். நீங்களும் செய்யலாமே ?

சின்னத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கவேண்டும். ஆபாசம், மூடநம்பிக்கைகளை சொல்லும் நிகழ்வுகளை தடுக்கவேண்டும்.


இந்த ஆர்டிஓ ஆபீஸ், தாலுக்கா ஆபீஸ்ல எல்லாம் லஞ்சம் வாங்கக்கூடாதுன்னு ஒரு போர்டு வைங்க. முடிந்தால் கர்நாடகாவில் இருப்பது போல ஒரு பவர்புல் லஞ்ச ஒழிப்பு துறையை (லோக் அயுக்தா) ஆரம்பிங்க. ட்ராபிக் ராமசாமியை இதுக்கு தலைவரா போட்டுடுங்க. அப்புறம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் வேட்டி இன்ஸ்டண்டா உருவப்படும்.

தமிழகம் எங்கும் உள்ள தீண்டாமை / பாவச்செயல் / பெருங்குற்றங்களை தயவு தாட்சண்யம் இல்லாமல் நசுக்கவேண்டும். இங்கெல்லாம் காவல்துறை ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக செயல்படுவதை தடுக்கவேண்டும். ( உதா: திருச்சி தீண்டாமை கல்லறைகள்)

மலையாளிகள் அவர்களது சுற்றுலாத்துறையை எப்படி எப்படியோ பிரபலப்படுத்துகிறார்கள். எந்த நாட்டு இந்தியன் எம்பஸி போனாலும் அங்கே குமரகத்தில் மஸாஜ் செய்ய அழைக்கிறார்கள். தமிழகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சென்னை ஏர்ப்போட்டில் இருந்தே ஆப்பு தான் காத்திருக்கிறது. தேவை எபக்ட்டிவ் மார்க்கெட்டிங் in சுற்றுலா துறை மற்றும் வரவேற்ப்புக்கு என்று தனி வாரியம் and படித்த ஊழியர்கள்.

கோபம் - இது சரியில்ல

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த காத்திரமான நடவடிக்கை இல்லாமை.

லஞ்ச ஊழல் செய்யும் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் மீது தயவு தாட்சண்யம் இல்லாத நடவடிக்கை தேவை. சமூக சேவகர் என்று பொய் சொல்லி வீட்டு வசதி வாரிய நிலம் வாங்கி அப்பார்ட்மெண்ட் கட்டும் ஒரு அதிகாரி, முதல்வர் கையால் பதக்கம் வாங்கி குத்திக்கொள்கிறார். வெட்கக்கேடு.

கொலைவெறியொடு நடக்கும் மணல் கொள்ளை, நிலத்தடி நீரை பாதாளத்துக்கு தள்ளுகிறது. முந்தைய அதிமுக அரசில் கட்டாயமாக செயல்படுத்தப்பட்ட மழைநீர் சேமிப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது வருத்தமே !

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்காது, அது ஒரு ரவுடி ராஜ்ஜியம் என்ற பெயரை தொடர்ந்து காத்துவருகிறது இந்த அரசு.

தலையை சொறிந்து சொறிந்து தமிழகத்தையே இருளில் மூழ்கடிக்கும் மின் தட்டுப்பாடு

சுட்டுக்கொல்லப்படும் தமிழக மீனவர்களை காக்க லெட்டர் எழுதுவதை தவிர எதுவும் செய்யாதது

ஊடக ஏகாதிபத்தியம். சினிமா துறையிலும். ஏம்பா மீதி பேரும் கொஞ்சம் பொழைக்கட்டும் விடுங்களேன்.

மற்றபடி, பொதுவாக இது ஒரு சிறப்பான ஆட்சி என்பதில் சந்தேகமில்லை. மீண்டும் திமுக அரசை தேர்ந்தெடுக்கவில்லை என்றால் இப்படி நினைக்கலாம், (ஒருவேளை அதிமுக வென்று ஆட்சியில் அமர்ந்தால், ஆட்சியாளர்கள் நினைப்பார்கள், என்னடா, திமுக அவ்வளவு பணிகள் செய்தும் மக்கள் மாற்றித்தானே குத்தினார்கள், ஆக மக்கள் பணியை பார்க்காமல் மணியை தான் பார்க்கிறார்கள் என்று, ஆக ஒரு பணியும் நடைபெறாது.). விடுங்க அது சும்மா லூலுவாயி. முதல் மதிப்பெண் பெற்ற மாணவனை பாராட்டுவதில்லையா ? அதுபோல சிறப்பாக செயல்படும் திமுக அரசை பாராட்டாமல் என்ன செய்ய ? ஆகவே என்னுடைய ஓட்டு திமுகவுக்கே.



ஆனால் பாவம் இந்த ஸ்டாலின். இவர் ஆறாவது முறையாக முதல்வர் பதவியில் தொடர, இவர் துணை முதல்வராகவே குப்பை கொட்டவேண்டியிருக்கும். பேசாம தமிழ்மணம் அல்லது பஸ் / ட்விட்டர் பக்கம் வந்திருங்களேன் ஸ்டாலின், ஓட்டு போட்டு லைக் பண்ணி ரீ ட்வீட் பண்றோம்.  கும்தலக்கடி கிரிகிரியா இருக்கும் !!!

Monday, January 03, 2011

ஒப்பீடு வலைப்பூவில் இணைய விருப்பமா ?

வணக்கம் வலைத்தமிழர்களே. முந்தைய பதிவின்சுட்டியை படித்துவிட்டீர்கள் என்றால் இந்த வலைப்பூவின் நோக்கம் முழுமையாக தெரிந்துபோகும்.

ஒப்பீடு வலைப்பூ என்பது பல்வேறு பொருட்களை / சேவைகளை ஒப்பிடப்போகிறது. ஆனால், ஒரு சேவையை அல்லது பொருளை, கண்ணால் கூட பார்க்காமல் / பயன்படுத்தி பார்க்காமல் அதனை மற்றொன்றோடு ஒப்பிட முடியாது.

அப்படி செய்தால் அது அந்த சேவைக்கு / பொருளை தயாரிக்கும் நிறுவனத்துக்கு பெரும் இழப்பாகும். அவ்வாறான தவறும் இவ்வலைப்பூவில் நிகழ அனுமதியோம்.

ஒப்பீடு வலைப்பூவில் இணைவது குறித்தான பதிவு இங்கே 

Sunday, January 02, 2011

ஒப்பீடு வலைப்பூ பற்றி !!

ஒப்பீடு வலைப்பூ ஏன் ?

நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன். ஒரு பொருளை வாங்குதற்கு முன் பல முறை யோசிக்கிறோம். அந்த பொருளின் விலை, நம்முடைய பட்ஜெட், நமக்கு அந்த பொருள் அல்லது சேவை உண்மையிலேயே அவசியமான ஒன்றா ? போன்றவை அவற்றில் சில.

அப்படி பல விஷயங்களை யோசித்தாலும், அந்த பொருளை வாங்கி உபயோகப்படுத்தினால் தான் அதன் உண்மையான தரம் தெரியவரும். சிலர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு அந்த பொருளை பற்றி பலரிடம் விசாரிப்பார்கள். அந்த பொருளை தயாரிக்கும் நிறுவனம் பற்றி, அந்த குறிப்பிட்ட பொருளைப்பற்றி இணையத்தில் கிடைக்கும் ரிவ்யூக்களை வாசிப்பார்கள். (பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருக்கும்).

இந்த ரிவ்யூக்களை தமிழில் வழங்குவதுதான் திட்டம். அதே நேரம் இதுபோன்ற நேரடியான ரிவ்யூக்களை ( எல்ஜி / சாம்சங் / வீடியோகான், எந்த வாஷிங் மெஷின் சிறந்தது ) வெகுஜன ஊடகங்களால் நேரடியாக வெளியிடுவது கொஞ்சம் கடினமே. காரணம் இது அந்த பொருளின் மார்க்கெட்டை நேரடியாக பாதிக்கும் விஷயம். வெகுஜன ஊடகத்தில் இது பற்றிய ரிவ்யூ வேண்டுமானால் வெளியிடலாம், ஆனால் அதில் எது சிறந்தது என்று எழுதினால் எழுதியவரை நோக்கி ஆட்டோ அனுப்பபடலாம். ஆனால் ஒரு வாடிக்கையாளராக நமக்கு மிகவும் தேவையான விஷயம் இது.

மேலும் படிக்க 

போண்டா மாதவன் லெட்டர் டு மன்னார்

மன்னார் மெரினாவில் சுண்ட கஞ்சி காய்ச்சி விற்கும் குடிசைத்தொழிலை செய்யும் எளிய விவசாயி(?) அல்லது பிஸினஸ் மேக்னட். அவரிடம் சுண்டக்கஞ்சி ஆர்டர் செய்த போண்டா மாதவனுக்கு சரக்கு ரெடியாகிவிட்ட தகவலை தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவேண்டும். இதனை சரியாக அனுப்புவது எப்படி ?

ஒரு வாடிக்கையாளர் அல்லது க்ளையண்ட் அல்லது மேலாளர் எரிச்சலடையாமல் மின்னஞ்சலை அனுப்பித்தொலைவது எப்படி என்ற தகவலை இந்த பதிவின் மூலம் தெரியப்படுத்துவது நோக்கம். இமெயில் எத்திக்ஸ் பார் டம்மீஸ் அப்படீன்னு வெச்சுங்க. வேற மேட்டர் (?) எதிர்பார்த்து பதிவில் குந்தியிருந்தா கெடக்காது ஆமாம் சொல்லிப்பிட்டேன். அப்பாலிக்கா என்ன வைய கூடாது.

இந்த படத்தின் மேல் க்ளிக் செய்து பார்த்தால் பெரிதாக தெரியும். பட்டென உங்கள் கண்ணில் படுவது சப்ஜெக்ட் இல்லை.  அலைன்மெண்ட் சரியில்லை. அவ்வளவு தானே ?

இப்போது அடுத்த படம்.

இந்த ரெண்டாவது படத்தை க்ளிக் பண்ணி பெரிசா பார்தீங்களா ? சப்ஜெக்ட் லைன் இருக்கு.  டியர் மிஸ்டர் என்று ஆரம்பிக்கிறது. சல்யூட்டேஷன் என்பது ஒரு நல்ல முறை. மிஸ்டர், மிஸ், மிஸஸ் என்று ஆரம்பிப்பது. டியர் என்று ஆரம்பித்தால் பெண்ணாக இருந்தால் கோச்சுக்குவாங்களோ என்று நினைப்பது முட்டாள்தனம்.

தேவையான இடங்களில் முற்றுப்புள்ளி, தேவையான இடத்தில் கமா (அரைப்புள்ளி) சேர்ப்பது தேவையானது.

க்ரீடிங்ஸ், குட் டே என்று மின்னஞ்சலை ஆரம்பித்தால் அழகாக இருக்கும் இல்லையா ? அதுக்கு மேல நன்றி என்று முடிப்பதும் நன்றே.

Thanks and Regards
Best Regards,

என்று முடிக்கலாம்.

மின்னஞ்சலின் முடிவில் உங்கள் மின்னஞ்சல், உரல் (இணைய முகவரி), அலைபேசி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிடுவது சரியான
முறையாகும்.

பெயரை எழுதும்போது mannaar என்று சின்ன எழுத்தில் போடாமல் Mannar என்று முதல் எழுத்து பெரிய எழுத்தாக போடுவது நன்று.

அதே சமயம் மின்னஞ்சல் பெட்டி திறந்தவுடன் ஸ்பேஸ் பாரை டொக்கு டொக்கு என்று அழுத்தி மின்னஞ்சலின் நடுவில் இருந்து ஆரம்பிப்பது சிலருடைய பழக்கம். அது தேவையில்லை. பார்மெட்டிங் பிரச்சினை கொடுப்பதோடு (சிலர் அவுட் லுக், இண்க்ரிடிமெயில், லோடஸ் நோட்ஸ் போன்ற மின்னஞ்சல் க்ளையண்ட் அப்ளிகேஷன் (தமிழ்ல இன்னாபா இது) உபயோகப்படுத்துவார்கள். அதில் தொல்லை தரும் இந்த ஸ்பேஸ்.

அதே சமயம் மின்னஞ்சலில் எண்ணிக்கை, விலை, ஆகியவற்றை சரியாக குறிப்பிடுவதும் சரியான முறையாகும்.

மின்னஞ்சல் நீளமாக போனால், ஒரு அட்டாச்மெண்ட் பைல் ஆக உங்கள் மின்னஞ்சலை அனுப்பலாம்.

PFA  என்றால் Please Find Attached.  சல்லூட்டேஷன் எல்லாம் போட்டுவிட்டு, PFA, Details attached என்று சொல்லிவிடலாம்.

ஆங்காங்கே Kindly, Please என்ற வார்த்தைகளை பயன்படுத்துவது உங்கள் மின்னஞ்சலுக்கு அழகு சேர்க்கும்.

எனக்கு தெரிந்தவரை / முடிந்தவரை சொல்லியிருக்கிறேன்.  நீங்களும் உங்களுக்கு தெரிஞ்சவரைக்கும் உதவுங்கள். நச் பாய்ண்ட் ஆக இருந்தால் மெயின் பதிவில் சேர்த்து பதிவை அழகூட்டலாம்.

எல்லாரும் போதையேற்றியிருப்பதேயன்றி வேறொன்றுமறியேன் போண்டா மாதவனே - மன்னார், புதிய தத்துவம் 133434 1-1-11 அன்று.
.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....