Friday, May 09, 2014

எங்க தாத்தா ஒரு இன்னவேட்டர் !!


திருக்கோவிலூர் பக்கம் திருவண்ணாமலை போற வழியில பத்து கிலோமீட்டர்ல வரும் எங்க கிராமம்..மேல்கரையார்னு சொல்வாங்க அவரை..தஞ்சை பத்தூர் மேல்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு குடிவந்தவர். அந்த காலத்திலேயே அப்பா (தஞ்சையில் ஹெட்மாஸ்டர்) எதிர்ப்பை மீறி காதலித்து (2 வயது மூத்த அத்தை மகளை) திருமணம் செய்தவர்..

சுகந்திர போராட்ட காலத்தில் தஞ்சை தபால் ஆபீஸ் தபால் பெட்டியில் நெருப்பை கொளுத்தி போட்டு, அதனால் தேடப்பட்ட குற்றவாளியாகி, ஜெயராஜ் <<சாதி பெயர்>> உடனே ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ஆங்கிலேய அரசிடம் இருந்து நோட்டீஸ் வர, இவரது தந்தையார் இவருக்கு பதில் வேறொரு ஜெயராஜை ஆஜர் படுத்தி, சிறைக்கு அனுப்ப, அவர் கடைசி காலம் வரை தியாகி பென்ஷன் வாங்கியதாக கேள்வி...

அதனால் உனக்கு சொத்து எதுவும் கிடையாது போ என்று சொன்ன அப்பாவிடம் கோபித்துக்கொண்டு திருக்கோவிலூர் வந்து, நிலம் வாங்கி செட்டில் ஆனவர்...

விவசாயம் செய்தாலும், பல தொழில்களை செய்தவர். அனைத்திலும் பெரிய வெற்றி எதுவும் அடைந்ததில்லை...

ஒரு டீமை அமைத்துக்கொண்டு சாத்தனூர் அணையில் மீன் பிடிக்க போவார். சாத்தனூர் அணையில் வலை விடும்போது அது என்னடா தூரத்தில் பனை மரங்கள் மிதந்து  வருது என்று ஒருவர் கேட்க, அட பக்கிப்பயலே அது முதலைகள்டா என்று வடிவேலு பாணியில் வலைகளை விட்டுவிட்டு டீமோடு அப்பீட் ஆன கதைகள் சொல்வார்...

சாராயம் விற்றிருக்கிறார்..கிளாஸில் ஒன்றுக்கு ஆறு என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றப்பட்ட சாராயத்தின் மேல் வத்திக்குச்சியை கிழித்து போட்டு அதன் தரத்தை உறுதிசெய்து ஓரே மூச்சில் அவர் குடிப்பதை பத்து வயதில் பார்த்திருக்கிறேன்..

சோடா மெஷின் அமைத்து 40 பைசாவுக்கு கிராமத்தில் பன்னீர் சோடா விற்றிருக்கிறார்..30 காசுக்கு கம்பெயினில் இருந்து வேறு ஏதோ ஒரு பானத்தை விற்க, இலவசமாக தருகிறேன் வந்து குடிங்கடா என்று அந்த பிஸினஸையும் பாட்டில்களையும் கிடாசியிருக்கிறார்...

ஊரில் எல்லாரும் மிலிட்டிரிக்கு போக, நிறைய மிலிட்டிரிக்காரன் பொண்டாட்டிகளுக்கெல்லாம் “ஆதரவாக” இருந்திருக்கிறார்...எந்த வீட்டில் சைக்கிள் நிற்கிறது என்பதை வைத்து “கண்டுபிடிக்க” வேண்டியிருக்கும் என்று எங்க ஆயா கரித்துகொட்டுவதை கேட்டிருக்கிறேன்...சில இடங்களில் ஆண்டு கணக்கில் தினமும் சைக்கிள் நிற்கும்...இந்த ஸ்டாப் கேப் மேட்டர்களையும், அவரைது “திறமைகளை”யும் நினைத்தால் இப்பவும் வயிறு எரியுது :)

70 வயதில் கிணற்றில் விழுந்து ஒருமுறை இடுப்பு உடைந்து படுக்கையில் இருந்து, அதன் பிறகு எழுந்து நடந்து சைக்கிள் ஓட்டியிருக்கிறார்..

தண்ணீரில் வாடும் பயிர்களை காக்க / தனது நிலத்துக்கு தண்ணீர் கொண்டுவர ஊர் கட்டுப்பாட்டை மீறி ஒரு ஊரின் ஏரியில் இருந்து அவரது நிலத்துக்கு (சுமார் 5 கிலோமீட்டர்) - இரவோடிரவாக தன்னுடைய இரண்டு மகன்களையும் வைத்து வாய்க்கால் வெட்டியிருக்கிறார்..

இன்னொரு சுவாரஸ்யமான சம்பவத்தை சொல்லாமல் இந்த குறும்பதிவை நிறைவு செய்ய முடியாது !!

முப்பதுகளின் மத்தியில் அவரது கை உடைந்துபோக, புத்தூரில் கட்டு கட்டியிருக்கிறார்கள்..ட வடிவத்தில் மடக்கி கட்டப்பட்ட கை, கட்டு பிரித்ததும் அப்படியே ப்ரீஸ் ஆன நிலையில் நின்றுவிட்டது. கையை நீட்ட முடியவில்லை..இப்படியே ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், வீட்டு வாசலில் பிச்சை கேட்டு ஒரு சித்தர் சாமி வந்து நின்றுள்ளார்..

வாட் நான்ஸென்ஸ் நீ பிச்சை எடுக்கிறே மேன், கம் இன்ஸைட் இந்தா சாராயம் என்று கொடுக்க, அதில் மகிழ்ந்த சித்தர் சாமி, என்னப்பா உன் கை இப்படி கிடக்கிறது என்று கேட்டிருக்கிறார்.

இவர் புத்தூர் கட்டினால் ட வடிவமாகிப்போன கையை காட்ட, சற்றுநேரம் கையை அனலைஸ் செய்த சித்தர்சாமி, ஒரு சொம்பை எடுத்து, அதில் மண் நிரப்பி, அந்த சொம்பை ஒரு முழ நீளம் உள்ள ஒரு கயிற்றில் கட்டி, அதனை பழுதடைந்து இறுகிப்போன கையின் நுனியில் கட்டிவிட்டு, இதனை 48 நாளைக்கு எடுக்காதே என்று சொல்லிவிட்டு போய்விட்டார்..

இவரும் கர்மசிரத்தையாக எங்கு போனாலும் அந்த சொம்போடு அலைய, ஊர் மக்கள் சிரித்து கிண்டல் செய்துள்ளார்கள்..ஆனால் ஆச்சர்யம் நாற்பதாவது நாளில் ஆரம்பித்தது..மெல்ல மெல்ல இறுகிப்போன ட வடிவ கைகள் நேராக, சரியாக 48 ஆவது நாளில் கை முழுமையும் நேராகி, முழுமையாக இயங்கும் வடிவத்தில் வந்துவிட்டது !!

என்ன அவ்வபோது கொஞ்சம் பேட் வேர்ட்ஸ் பேசுவார், ஏய் ”அலங்காரம்மா” ஸ்டுப்பிட் நான்ஸென்ஸ் இடியட், கண்டாரஓழி என்று திட்டி கிலியை கிளப்புவார்..சுருட்டு பிடிப்பார்..பீடி பிடிப்பார்..கடைசி காலத்தில் சாராயத்துக்கு பதில் அப்பா / சித்தபா அவரை க்வாட்டருக்கு (MC) மாற்றினார்கள்...

உங்க தாத்தா நினைவுகளை எழுதுங்களேன்....

3 comments:

கவிதா | Kavitha said...

சூப்பர் தாத்தா... :)

//உங்க தாத்தா நினைவுகளை எழுதுங்களேன்....//

நான் எழுதிவச்சி ரொம்ப நாளாச்சி இன்னும் போஸ்ட் பண்ணல....

Unknown said...

romba nallaa irukku unga writing

Ramesh DGI said...

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....