க்ரோம் என்ற பெயரில் ஓ.எஸ்ஸை அறிமுகப்படுத்தவிருக்கிறது. இதுபற்றிய தகவல் கூகிளின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் காணக்கிடைக்கிறது...அதன் சுட்டி
லைனக்ஸ் அடிப்படையில் இயங்கப்போகும் இதில் மின்னஞ்சல்களை ப்ரவுசர்களை திறக்காமலே பார்க்கும் வசதி, அனைத்தும் ஓப்பன் சோர்ஸ், வெப் பேஸுடு ஆர்க்கிடெக்சர் என்று கச்சைகட்டுகிளார்கள் கூகிளார்.
இணையத்தை வெறும் சர்ச் எஞ்சினை வைத்து ஆக்ரமித்த கூகிள், அதன் பிறகு ஜிமெயில், கூகிள் எர்த், ஆர்க்குட், அண்ட்ராய்ட் மொபைல், இப்போது ஓ.எஸ். என்று நம்முடைய கணினி பயன்பாட்டின் மிகப்பெரிய பங்கை கொண்டுள்ளது.
இது ஆபத்து. எதிர்காலத்தில் தனி நபரின் ப்ரைவஸியை கூகிள் விழுங்கக்கூடிய சாத்தியம் 100 சதவீதம் உள்ளது. இதில் இருந்து தப்பிக்க நாம் செய்யவேண்டியது இரண்டு.
ஒன்று > கூகிளை புறக்கணிப்பது !!!!
அல்லது
இரண்டு > கூகிள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துவிடுவது...!!!
பொதுவா அதிகமா சிரிச்சா லூசுங்கறாய்ங்க...!!!