ஆட்ஸ் பை கூகிள் என்று விளம்பரங்களை திரட்டிகளில், நிறைய தளங்களில் பார்க்கிறீர்கள்..குறிப்பா தமிழ்ஷ், விகடன் போன்ற இடங்களில் கூட இந்த கூகிள் வழி விளம்பரங்களை பார்க்கலாம்..
நிறைய வலைப்பதிவர்களும் விளம்பரங்களை போட்டுவைத்துள்ளார்கள்...(பொது சேவை விளம்பரங்களை க்ளிக் செய்து ஒன்றும் ஆகப்போவதில்லை)..
உருப்புடியாக காசு தருவது கூகிள் நிறுவனம், ஆட் ப்ரைட் போன்றவை என்று நினைக்கிறேன்..
குறைந்த வேகம் உள்ள இணைய இணைப்பில் இருக்கிறீர்கள் அல்லது பிரவுசிங் சென்டர் போன்றவிடத்தில் இருந்து கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் இணையத்தை பார்வையிடுகிறீர்கள் என்றால் பரவாயில்லை..
ஆனால் அலுவலக கணினி, சொந்த கணினி, அதி வேக கணினி போன்றவற்றில் அமர்ந்திருக்கும் தமிழ் வலைப்பதிவர்கள், கூகிள் வழி விளம்பரங்களை திரட்டிகளில், உங்களுக்கு பிடித்த தளங்களில் க்ளிக் பண்ணுங்க..
நீங்க பார்வை இடனும் என்று கூட இல்லை, க்ளிக் பண்ணி ஓப்பன் நியூ விண்டோ என்று கொடுத்துவிட்டு, பழைய படி மொக்கையை போடுங்க அல்லது படிச்சிக்கிட்டிருக்க தளத்தை படிங்க..
இது மூலமா என்னா ஆவப்போவுது என்று கேட்டீங்கன்னா, திரட்டியை, தளத்தை காசு போட்டு நடத்தி நமக்கு சேவை செய்யும் நம்ம மக்களுக்கு ஒரு உதவி கிடைக்கும்...
எங்கயோ இருக்க கூகிள் காரன் தரும் காசு நம்ம மக்களுக்கு போய் சேரட்டுமே ?
என்ன சொல்றீங்க ?
அடுத்த முறை கூகிள் வழி விளம்பரங்களை பார்த்தால் ரெண்டு க்ளிக்கை போடுங்க...
இப்ப இந்த பதிவுக்கு ஓட்டை போடுங்க...