ஹெச்.ஜி.வெல்ஸ் எழுதிய டைம் மெஷின் புத்தகத்தை படிச்சிருக்கீங்களா ? அட ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்ன ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பயணம் செய்தால் டைம் மெஷினை உருவாக்கலாம் அப்படீன்ங்கற தியரியப்பத்தி கொஞ்சமாவது தெரியுமா ? கவலைப்படாதீங்க. எனக்கும் மேல் சொன்ன ரெண்டு விஷயமும் ஒன்னும் தெரியாது. ஆனா இந்த பதிவில் கொஞ்ச நேரம் டைம் மெஷின்ல ஒரு முன்னூறு ஆண்டுக்கு முன்னால் போய் பின்னால் நடந்த விஷயங்களை ஆற அமர பார்க்கலாமாம்.
நேத்து பாயும் புலியும் பதுங்கும் நாகமும் அப்படீன்னு ஒரு படம் பார்த்துக்கிட்டிருந்தேன். அதாங்க க்ரச்சிங் டைகர் ஹிட்டன் ட்ராகன். அதுல ஜெட்லி ஒரு எடத்துல நிக்காம அப்படியே அந்தரத்துல தாவி தாவி. அதுக்கு பேரு உடான் கலையாம். மரத்து எலையில. மூங்கில் குச்சில..நின்னு வாளை சுழட்டி சுழட்டி அடிச்சு. அப்படியே தூங்கிப்போனதுல டைம் மெஷின்ல போறமாதிரி ஒரு கனவு. திடீர்னு மேட்ரிக்ஸ் படத்துல வர்ர மொட்டை கையில ரெண்டு மாத்திரையை நீட்டி, ஒன்ன இப்பவே போடு, உன்ன எப்பவாவது போடறேன் அப்படீன்னு மண்டையிலேயே ரெண்டு போட்டா...
விழிப்பு வந்திருச்சு...எந்திரிச்சு பார்த்தேன்...சுவரில் இருந்த கடிகாரம். அட சுவரில் கடிகாரமே இல்லை..ஆனால் நேரம் தெரியுதுங்க...நேரம் சரியாக 23 July 2310 10:20..அய்யோ. முன்னூறு வருஷம் முன்னாடி வந்துட்டமா ? கையை நீட்டுறேன்..டேபிள்ள தமிழ் நாளிதழ்..என்னய்யா இது...தினத்தந்தின்னு இருக்கு...கட்டம் கட்டி சின்னதா ஓரத்துல் விளம்பர விடீயோ ஓடுது...அதுக்கு மேல செய்தி எதுவும் புரிய மாட்டேங்குது. தாய்லாந்து எழுத்து மாதிரி இருக்கு...ஏய் இது தமிழ்தானே ? இல்லையா ? என்ன ஒன்னும் புரியல.அய்யோ..அய்யய்யோ.அய்யய்யய்யய்யோ
இணையத்தை எழுத்து கூகிள்ல டைப் செய்தேன்...tamil fonts change history. கீழ இருக்க செய்தி வந்தது..
அதுக்கு மேல இருக்க இருநூறு வருஷத்துக்கு ஏழெட்டு தடவை மாற்றிய தகவல் இருக்கு. வெறும் எண்களை மட்டும் தான் பார்க்க முடியுது. ஆனால் எழுத்தை படிக்க முடியல. அந்த கடைசி எழுத்துக்கள் எப்படி இருந்ததுன்னா..இருந்ததுன்னா..என்று யோசிச்சிக்கிட்டு இருந்தப்போ லைட்டா பொறி தட்டி இப்படி டைப் செய்தேன்..
Kind Raja Raja sculptures (ராஜராஜன் கல்வெட்டுக்கள்)
ஆஹா.. தமிழ் கல்வெட்டுக்களை அப்படியே வெறுமனே படிக்க நமது அரசும் முதல் அமைச்சர்களும் தொடர்ந்து எழுத்துக்களில் மாறுதல் செய்ய, பழமையும் புதுமையும் கலந்த எழுத்து தமிழ் எழுத்து என்று நிரூபணம் செய்ய, இப்படி செய்துள்ளார்கள். நான் தான் முண்ட கலப்பையாக என்னுடைய பழைய இ கலப்பையை வைத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களுடைய தமிழை டைப் செய்துகொண்டிருக்கிறேன்...அவ்வ்வ்வ்...
போதும் விளையாட்டு. இனி சீரியஸாக பேசலாம்..
தமிழ் எழுத்து சீர்திருத்தம் தேவையான ஒன்றா ? ரிட்டையர்டு ஆன பெருசுகள் மானாட மயிலாட ப்ரோக்ராம் பார்த்து வாழ்க்கையை ரசிப்பதை விட்டு, இப்படி இருக்கிற தமிழை திருத்துகிறேன் பேர்வழி என்று கிளம்பினால் எப்படி அய்யா ? இப்படி ஒரு சீர்திருத்தத்தின் அவசியம் என்ன ? அச்சு தொழிலுக்கு தேவையான சில சீர்திருத்தங்களை தந்தை பெரியார் செய்தபோது அதனை யாரும் எதிர்க்கவில்லையே ? மாறாக வரவேற்கவே செய்தார்கள். ஆனால் இப்போது இந்த சீர்திருத்தம் ஏன் தேவை என்று கேட்டால் அதற்கு கிடைக்கும் பதில் மிகவும் நகைச்சுவையாக அல்லவா இருக்கிறது ?
வெளிநாட்டில் இருப்பவர்களின் குழந்தைகள் தமிழ் கற்க வசதியாக தமிழை சீர்திருத்துகிறார்களாம். எந்த வெளிநாட்டு குழந்தை தமிழை கற்கிறது ? என் மகளுக்கு நான் நார்வேஜிய மொழியும் ஆங்கிலமும் அடிப்படையாக கற்றுக்கொடுக்கிறேன். காரணம் அவள் வெளியிடங்களில் செல்லும் போது குறைந்தபட்சம் சமாளிக்கவேண்டுமே, மற்ற பிள்ளைகள் நார்வேஜிய மொழி பேசும்போது என் மகள் தனித்து விடப்பட்டுவிடக்கூடாதே என்பதால் நானும் என் மனைவியும் நார்வேஜியன் பழகுகிறோம், என் மகளுக்கும் படிப்பிக்கிறோம். மேலும் ஆங்கிலமும் தேவையான மொழி என்பதால் அதனையும் கற்பிக்கிறோம். தமிழும் கன்னடமும் இயல்பாக சில வார்த்தைகள் பேசுகிறாள். அவள் தமிழ் எழுத நினைக்கும் காலத்தில் அவள் கண்டிப்பாக எந்த கடினமான மொழியையும் கற்கும் திறன் பெற்றிருப்பாள் என்றே கருதுகிறேன்...
எனக்கு கொரிய மொழி எழுத படிக்க பேச தெரியும். நான் அதனை பழகிக்கொள்ளவில்லையா ? ஜப்பானிய மொழியை ஜப்பானியர்களை விட இயல்பாக என்னுடைய நன்பன் பேசுவான். அவன் தமிழன். கொரிய சீன ஜப்பானிய மொழிகளை விடவா அய்யா தமிழ் கடினமான மொழி ? உயிர் , மெய், உயிர் மெய் என்று பிரித்த உயர்வான மொழியாயிற்றே. அதை கற்பதா கடினம் ? ஆர்வமும் தேவையும் இருந்தால் எந்த மொழியாக இருந்தாலும் பழகிவிடமாடோமா ?
மேலும் நிரலாக்கத்துக்கு தேவையான CPU வேகத்தை அதிகரிக்க Parsing வேகமாக இருக்க இந்த மாற்றம் தேவை என்று ஒரு அடிப்படை அற்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. எங்காவது மாக்கான் இருப்பான் அங்கே போய் சொல்லுங்கள். பெண்டியம் போர், கோர் டு டியூவோ, டூவல் கோர் என்று வந்துள்ள ப்ராஸசர்களின் திறன் பல மடங்கு மேம்பட்டு விட்ட நிலையில், இந்த சாதாரண பார்ஸிங் கூட செய்ய திறன் இல்லாத கணினி இப்போது அரசு அலுவலகங்களில் கூட கிடையாது.
இப்போது இருக்கும் எழுத்துருக்களை மாற்றினால், அச்சுத்துறையில் பல மாறுதல்கள் செய்யவேண்டும். இப்போது பதிப்பகத்துறையை லாபகரமாக நடத்துவது என்பது ஒரு சில சிறந்த மேலாண்மையில் இருக்கும் பதிப்பகங்களாலேயே சாத்தியப்பட்டு கைவரப்பெறுகிறது. மற்ற சிறிய பதிப்பகங்கள் நட்டம் இல்லாமல் புத்தகங்களை பதிப்பிப்பது கடினமான ஒன்றாக உள்ள நிலை. மேலும் கைக்காசை போட்டும், புத்தகங்களின் மீதுள்ள தனியாத காதலினாலும் புத்தகங்களை பதிப்பிக்க நினைக்கிறவர்களுக்கு மேலும் சுமை கூட்டும் செயல் அல்லவா இது ? இதை கற்று உணர்ந்து முனைவரானவர்கள் சிந்திக்கவேண்டாமா ?
மேலும் இப்போது நான் தட்டச்ச உதவும் இ கலப்பை மென்பொருளை இயற்றிய முகுந்த் கூட மீண்டும் இந்த மென்பொருளின் நிரலியை தேடி, அதில் மாறுதல்கள் செய்து மீண்டும் அனைவருக்கும் அனுப்பவேண்டும். அதில் ஏற்படும் வழுக்களை சரி செய்யவேண்டும். இதற்கான நேரத்தை, நிதியை அவருக்கு தருபவர்கள் யார் ? இது போன்ற இலவச மென்பொருட்களை கூட இந்த மாறுதல்கள் பாதிக்குமே அய்யா ? இதை ஏன் நீங்கள் சிந்திக்கவில்லை ?
தமிழுக்கு உண்மையில் சேவை செய்யவேண்டும் என்று நினைத்தால் என்ன பணியா இல்லை ? அறிவியல் தமிழாம் நான்காம் தமிழ் வார்த்தைகளை உருவாக்குதலும், அதை விவாதித்தலும் ஆகிய மிகப்பெரிய பணி காத்திருக்கிறதே ? தகவல் தொழில்நுட்ப துறையில், இயற்பியலில், வேதியலில் தினம் தினம் அறிஞர்கள் உருவாக்கும் சொல்லாடல்களையும் தமிழுக்கு கொண்டுவரவேண்டுமே ? செர்ன் லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் (Large Hadron Collider) என்ற வார்த்தைக்கு தமிழ் வார்த்தை என்ன ? சி.ஆர்.எம் ? பிங் பேங் ? அகலப்பாட்டை என்றால் ப்ராட்பேண்ட். Wireless LAN ? Wi-Max ? மூன்றாம் தலைமுறை அலைபேசியில் உள்ள RNC ? Node B ? இதை தமிழ்படுத்த யாரும் முயலக்கூட இல்லை என்பது வேதனை.
மேலும் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கி பீடியாவில் ஆங்கிலத்துக்கும் ஜெர்மனிக்கும் ரஷ்ய சீன மொழிகளுக்கும் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் நாளும் உருவாகின்றன. ஆனால் நாமோ சமூகம் சார்ந்து, மதம் சார்ந்து, அல்லது வெறுமனே வெட்டியாகவேனும் எதாவது மொக்கை போட்டுக்கொண்டு இணையத்தில் நேரத்தை வீணடிக்கிறோமே தவிர - என்னையும் சேர்த்து, இன்றைக்கு இரண்டு உபயோகமான கட்டுரைகளை இணையத்தில் எழுதினேன் என்ற உள்ளார்ந்த திருப்தியுடன் யாராவது செயல்படுகிறார்களா - ஒரு சிலரை தவிர ? மனதுக்கு வலிக்கிறது..
பேரும் புகழும் கிடைக்கவேண்டுமாயின் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் எங்களின் மன வருத்தத்தில் அல்ல. எங்களுக்கு தேவையில்லாத சுமையை ஏற்றி அல்ல. இந்த முயற்சியை தமிழக அரசு கைவிடவேண்டும். ஏதோ ஒரு சிலரின் ஆலோசனைகளை கேட்டு, அனைத்துலக தமிழரிடமும் விவாதிக்காமல் இந்த எழுத்து சீர்திருத்தம் செயல்படுத்தப்படுமாயின் இந்த தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்ற நிலை ஏற்படும். ஆகவே பெருந்தன்மையோடு இந்த முயற்சியை கைவிடுங்கள்.
பின் குறிப்பு
தமிழக அரசு, தமிழ் எழுத்துருக்காக லட்சக்கணக்கான தொகையினை செலவு செய்வதாக அறிந்தேன். ஒருங்குறி (unicode) என்று ஒன்று இருப்பதாக, அது முழுவதும் இலவசம் என்றும் யாரும் உங்கள் காதில் போடவில்லையா ? அண்ணாக்கண்ணன் முதல்வர் கலைஞரை சந்தித்தபோது இது பற்றி சொன்னதாக இணையத்தில் தெரிவித்தாரே ? அது பற்றி மேலும் விசாரித்து, தமிழக அரசின் இணைய தளங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் ஒருங்குறியை பயன்படுத்தினால் கோடிக்கணக்கான ரூபாய்களை மிச்சப்படுத்தலாம்.
கோவை மாவட்டத்தில் காலை சிற்றுண்டி கொடுக்கிறார்களாம் மாணவர்களுக்கு. இரண்டு கோடியாம் செலவு. கேட்டமாத்திரத்தில் கண் கலங்கியது எனக்கு. நீங்கள் சத்துணவுக்காக பசியாக காத்திருந்த மாணவர் எனில் அந்த வலி புரியும். அதைப்போல சென்னையிலும் செங்கல்பட்டிலும் விழுப்புரத்திலும் திருச்சியிலும் தஞ்சையிலும் மதுரையிலும் கொடுங்கள். இது போன்ற வீண் செலவுகளை தவிருங்கள் அய்யா..புண்ணியமாக போகும்..
.
.
.
Showing posts with label தமிழ் எழுத்து சீர்திருத்தம். Show all posts
Showing posts with label தமிழ் எழுத்து சீர்திருத்தம். Show all posts
Wednesday, March 24, 2010
Subscribe to:
Posts (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
நேற்று காலைவரை எனக்கு எதுவும் தெரியாது! நான் வலையுலகிற்கு வாடிக்கையாளனுமில்லை! எப்பொழுதாவது வந்துபோவேன்!! எதேச்சையாய் நேற்று நுழைந்ததில்,எல...