கடந்த பதிவில் என்னுடன் விவாதம் செய்ய முயன்ற நன்பர்களுக்கும், திட்டிய பெயர் உள்ளவர்கள், வெறும் ப்ரொபைல் மட்டும் உள்ளவர்கள் மற்றும் அனானிகளுக்கும் சரியான பதில் சொல்லமுடியாத நிலை. வேலை. வேறு காரணமில்லை, மன்னித்துக்கொள்ளுங்கள். பதிவை எழுத முயன்றபோது அதற்குள் இணையத்தில் நடந்த பல்வேறு விஷயங்கள் என்னை பாதித்தன. என்னுடைய கேள்விகள் சந்தேகங்கள் இந்த பதிவில். No Judgment. எந்த முன்முடிவும் இல்லை என்னிடம்..
இந்து ஞான மரபு.இதுபோன்ற பஸ் வேர்ட்களை (Buzz Words) இப்போது தான் பார்க்கிறேன். இந்து ஞான மரபு வாளின் மீது மதம் நடத்திய இஸ்லாமிய, அதிகாரத்தின் மீது மதம் பரப்பிய கிறித்தவ மதங்களின் அழுத்தத்தில் இருந்தெல்லாம் தாக்குபிடித்தததாக ஜெயமோகன் நிறுவுகிறார்..மேலும் ஆதிவாசிகளின், பழங்குடிகளின் தெய்வங்களையும் (வேலன் முருகன், சபரிமலை மணிகண்டன்) தன்னுள் இழுத்துக்கொண்டதாம் இந்து ஞான மரபு..அப்படி என்றால் முகமதுவையும், அல்லாவையும், இயேசுவையும், மரியாளையும் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற ஒருவரின் கேள்விக்கு பதிலை காணோம் !!
ஆனால் இந்து ஞான மரபு அதன் so Called டிவோட்டீஸ்களுக்கு என்ன செய்தது ? இந்து ஞான மரபு ஏன் அதில் இருந்து சாதி வேறுபாடுகளை களைய முயலவில்லை ? மனு தர்மம் என்பது இந்து ஞான மரபின் ஒழுங்குதானே ? மனு தர்மம் தானே சாதி அமைப்பை இன்னும் வீரியமாக நிறுவுகிறது ? இந்து ஞான மரபின் வழி வந்த சமூகம் என்றால் அதில் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை சமூகம் மேல் எழ வாய்ப்பே இல்லை என்பது தானே உண்மை ?
இந்து ஞான மரபு, தத்துவம் மற்றும் விவாதங்களினாலேயே தன்னை நிலை நிறுத்தியது என்கிறார் ஒருவர். அப்போது சமணர்கள் ஏன் படுகொலை செய்யப்பட்டார்கள் ? அவர்கள் விவாதத்துக்கு தயாராக இல்லையா என்ன ? பவுத்தமும் சமணமும் ஆபிரகாமிய மதங்களின் தாக்கத்துக்கு முன்பே அல்லவா அழிக்கப்பட்டன ?
பகுத்தறிவை பற்றி கொஞ்சம் சொல்லவேண்டும். பகுத்தறிவும், நாத்திகமும் வெவ்வேறு என்பதுவாக ஒரு கதையாடல் அப்படியே தூவப்படுகிறது இணையத்தில். அதிலும், உண்மை பகுத்தறிவு வேறாம், போலி பகுத்தறிவு வேறாம். அது என்ன என்று இன்னும் கொஞ்சம் வெளக்குங்க, வெளங்கிக்கறேன்...
ஏன் பெரியாரிஸ்டுகள், நாத்திகர்கள் இந்து மதத்தை முதலில் கையில் எடுக்கவேண்டும் ? மூடநம்பிக்கைகளை எளிதாக உள்வாங்கிக்கொள்ளும் மதம் என்ற வகையிலும், திரட்சியான மக்களால் நம்பபடும் மதம் என்ற வகையிலும் தான் என்பது என் கருத்து. மற்ற ஆபிரகாமிய மதங்களில் மூட நம்பிக்கை இல்லையா, பெண்ணடிமைத்தனம் இல்லையா, சாதி வேறுபாடுகள் இல்லையா என்றால் இருக்கிறது. அதையும் சாடவேண்டிய தேவையும் இருக்கிறது.
ஏன் இந்து மதத்தை நோக்கி கேள்வி எழுப்புகிறாய் ? இஸ்லாமின் பர்தாவை கேள்விகேள், கிறித்தவ பாதிரிமார்களின் ஒழுக்கமின்மையை கேள்விகேள் என்றால், அதையும் செய்யத்தானே போகிறோம். முதலில் உங்களை கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள். மற்ற ஆபிரகாமிய மதங்களை நாங்கள் கேள்விகேட்கும்போது அவர்கள் பதில்சொல்வார்கள்...
ஒரு மதத்தை கேள்வி கேட்கும்போது, அதனை நம்பும் மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறாயே என்கிறீர்கள் ? வலியில்லாமல் ஊசி போடமுடியுமா ? உங்களுக்கிருப்பதோ வைரஸ் காய்ச்சலாச்சே ? மாத்திரை எப்படி கொடுக்கமுடியும் ? புண்படுத்தாமல் எப்படி பண்படுத்த முடியும் ? கரடு முரடான நிலத்தை உழவு செய்யும்போது பூமிக்கு வலிப்பது போல் தோன்றினாலும், நல்ல பயிர் செய்ய நிலத்தை காயப்படுத்தி உழத்தானே வேண்டும் ?
இந்து ஞான மரபோ, ஆபிரகாமிய மதங்களோ, சோதிடமோ, மூட நம்பிக்கைகளோ, பழக்க வழக்கங்களோ, யாரையும் பாதிக்காத வரையில் யாருக்கும் எந்த தொல்லையுமில்லை. ஆனால் அப்படி இல்லையே ? ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அது தொடுகிறதே ?
மரபூர் ஜய சந்திரசேகரன் என்று ஒருவர் உண்டு. அவர் செய்வதென்ன ? எங்கெல்லாம் இந்து கோயில்கள் கவனிப்பாரற்று விடப்படுகிறதோ அங்கே சென்று இறங்கி, அந்த கோயிலை சுத்தம் செய்து பூஜைகள் நடக்க வழி செய்கிறார். அவர் கோயிலை சுத்தப்படுத்துக்கிறாரோ, மரபை காக்கிறாரோ அதை பற்றி நான் சொல்லவரவில்லை. அவர் அந்த கோவில் மூலமாக ஒரு பூஜை நடத்தும் அர்ச்சகரின் வாழ்வில் ஒளியேற்றுகிறார். இது போன்ற ஒரு சில பாஸிட்டிவ் சைட் இருந்தாலும், பல்லாயிரக்கணக்கான நெகடிவ் விஷயங்கள் நடந்துகொண்டுதானே இருக்கின்றன. ? பட்டியல் போட்டால பதிவு நாராசமாகிவிடும்...அந்த கோயிலுக்கு பக்கத்தில் இருக்கும் சேரியில் பஞ்சாயத்து டிவி பார்த்துக்கொண்டிருக்கும் தலித் குழந்தைகளுக்கு எதாவது செய்தாரா என்பதை அவர்தான் வந்து சொல்லவேண்டும்...
என்னுடைய மாமனார் தான் சார்ந்திருக்கும் ராமகிருஷ்ன மடத்துக்கு மாதம் 7 ஆயிரம் ரூபாய் தருகிறார். பூஜை புனஸ்கார நெய்வேத்தியம் மற்றும் அங்கே உழைக்காமல் வயிறு வளர்க்கும் அர்ச்சகர்களுக்காக இதை செய்கிறார். ஆனால் அவர் வீட்டில் பதினைந்து ஆண்டுகளாக சமையல் வேலை செய்யும் பிற்படுத்த்தப்பட்ட செல்விக்கு மாதம் 500 சம்பளம். 50 ரூபாயை உயர்த்துமாறு இரண்டு மாதமாக போராடுகிறார் செல்வி. இது ஒரு சிறிய உதாரணம்.
இந்து ஞான மரபை போற்றுவதால் பயன் பெறுபவர்கள் யார் ? அவர்கள் இந்து மதத்தை சார்ந்த விளிம்பு நிலை மனிதர்களா ? விதர்பாவில் ஐந்து ஆயிரம் ரூபாய் கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயி இந்து ஞான மரபை சேர்ந்தவரே. ஏன் அவருக்கு இந்து ஞான மரபு உதவி செய்யவில்லை ? ராமகிருஷ்ண மடத்தில் நெய்யாய் எரிந்த பணம் ஏன் அங்கே செல்லவில்லை ?
இந்து ஞான மரபின் உள்ளார்ந்து இணைந்துள்ள ஒன்று சோதிடம். சோதிடம் ஒரு ஹம்பக் என்று பலரும் உணர்ந்தே உள்ளார்கள். சோதிடத்தால் பயன் அடைபவர், அந்த சோதிடத்தை தொழிலாக செய்யும் சோதிடரே. (வாத்தியார் அய்யா மன்னித்தருள்க). அந்த சோதிடர் நல்லவராக இருந்து, நல்ல வார்த்தைகளை அள்ளிவிட்டால் நன்று. ஆனால் செவ்வாய் தோஷம் போன்ற தோஷம் பரிகாரம் போன்ற உடான்ஸுகளை விட்டு, அவர் பையையும் ரொப்பிக்கொண்டு, அவரை தேடிப்போனவர்களுடைய குடும்பத்திலும், வாழ்விலும் விளையாடுபவர்கள் எத்தனைபேர் ? வான சாஸ்திரத்தை (astralogy) திருடி அதை சோதிடத்துடன் இணைத்து, சோதிட பொய்களுக்கு உண்மை மேற்பூச்சு (Flavor) அடித்துவிட்டார்கள்.
2000 ஆம் ஆண்டு பாரதீய ஜனதா பார்ட்டி, சோதிடத்தை பாடமாக்க முயன்றபோது சுப்ரீம் கோர்ட்டு என்ன சொன்னது ? 'a giant leap backwards, undermining whatever scientific credibility the country has achieved so far'
வெறும் கண்ணால் வானை அளந்து நட்சத்திரங்களையும், அதன் போக்குகளையும் கண்ட முற்கால இந்திய அறிவியலாளர்களின் உழைப்பை இந்த மூட நம்பிக்கைகள் திருடிக்கொண்டதை பார்த்தால் வருத்தமாக இல்லையா ? பெங்களூரில் ஒருவர் தான் கேட்கும் பத்து கேள்விகளுக்கும் எந்த சோதிடராவது பதில் சொன்னால் பத்து லட்சம் தருவதாக கரடியாக கத்தியும் எந்த சோதிடரும் அந்த சவாலை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை ? அவர்களுக்கு தெரியும். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்... ?
மீண்டும் இந்த மத ரீதியான வன்முறைகளை பற்றி பார்க்கலாம்..இஸ்லாம் வன்முறை மதம் என்றால் ஆர்.எஸ்.எஸ்ஸும் விஹெச்பியும் பூ பறிக்கவில்லையே ? அதுவும் தனது வன்முறைகளை அவ்வப்போது வெளிக்காட்டிக்கொண்டுதானே இருக்கிது ? அவன் குண்டு வைக்கிறான், நானும் வைப்பேன் பார் என்பது தானே மாலேகான் ? இந்து மதம் அதன் ஞான மரபை ஏன் கயர்லாஞ்சியில் பிரியாங்காவின் யோனியில் ஆப்பை அடித்து சொருகிய காட்டுமிராண்டிகளுக்கு கற்றுக்கொடுக்கவில்லை ?
அப்போ அம்பேத்கார் தழுவிய புத்த மதம் அமைதியான மதமா ? பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை படுகொலை செய்து, போராளி பெண்களின் பிணத்துடன் உறவுகொண்ட சிங்கள வெறியர்கள் புத்த மதத்திரராயிற்றே ? அவர்கள் ஏன் புத்தம் சரணம் கச்சாமி என்று பாடிக்கொண்டு எறும்புக்கு கூட துரோகம் இழைக்காமல் போகவேண்டியது தானே ? அதனால் தானே சொல்கிறோம். வன்முறையாளர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள் என்று...மதங்களையும், மத பழக்கவழங்களையும் தூக்கி பிடிப்பதால் எந்த மாற்றமும் வந்துவிடாதென்று ?
பர்தா போட்டால் நற்குடியென்று பெண்ணடிமைத்தனத்தை ப்ரெயின்வாஷ் செய்து வலியுறுத்தும் இஸ்லாமும் சரி, பிரம்மச்சரிய விரதம் பூண்டு பை-செக்ஸுவல் ஆக சந்தோஷமாக இருக்கும் உரோமை கத்தோலிக்க பாதிரிமார்களும் சரி, தன்னளவில் தங்கள் மதம் செய்யும் அயோக்கியத்தனத்துக்கு ஆதரவு தெரிவிக்கவே செய்கிறார்கள். அவர்கள் செய்யும் தவறுகளை சப்பைக்கட்டுகிறார்கள். அதன் எதிர்ப்புகளை பத்வா போட்டு சரி செய்கிறார்கள்.பணத்தை கொடுத்து வாயை அடைக்கிறார்கள். இந்து ஞான மரபும் சாரு நிவேதிதா போன்ற ஐசிஐசியை பிக்ஷாந்தி இண்டலக்சுவல் மூலம் வயிறு வளர்க்கிறது. நித்யானந்த ரஞ்சிதோற்சவம்..கல்கி தம்பதி சமேத ஹெராயினோற்சவம்...
மனிதர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த இஸ்லாமிய கிருத்துவ ப்ரெயின்வாஷ் மதங்கள் தன்னளவில் தங்களது திரட்சியான பின் தொடர்பவர்களை தக்கவைக்க தன்னால் ஆனமட்டும் முயல்கிறது. கொல்கிறது. ஒருபக்கம் காக்காய் வலிப்பு வந்தவர் லட்சக்கணக்கில் உம்ராக்கள் கொடுத்தார் என்றால் இன்னொரு பக்கம் யூதர்களிடம் தரும அடி வாங்கி கோமா ஸ்டேஜ் போய் மீண்டு வந்தவர் உயிர்த்தெழுந்தவர் ஆனார். இது தானே நிஜம் ? நீங்கள் நம்பும் இறையை இப்படி திடீரென அவமதிப்பதால் ஏன் இறை எதுவுமே செய்வதில்லை ? நீங்கள் தானே கோபக்குரல் எழுப்புகிறீர்கள் ?
இந்து மக்கள் கட்சி லீனா மணிமேகலை மீது, அவர் எழுதிய இரண்டு கவிதைக்காய் வழக்கு தொடர்ந்துள்ளது. அவர் எழுதிய இரண்டு கவிதைகள் இவைதான் :
இரண்டு கவிதைகள்
1
நான் லீனா
நான் இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில்
ஆப்பிரிக்காவில் செரோஜெவாவில் போஸ்னியாவில் துருக்கியில்
ஈராக்கில் வியட்நாமில் பொலியாவில் ரெமானியாவில்
வாழ்கிறேன்
என் வேலை
என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது
நாடு கோருபவ்ர்கள்
ஜிகாத் தொடுப்பவர்கள்
புரட்சி வேண்டுபவ்ர்கள்
போர் தொடுப்பவர்கள்
ராஜாங்கம் கேட்பவர்கள்
வணிகம் பரப்புபவர்கள்
காவி உடுப்பவர்கள்
கொள்ளையடிப்பவர்கள்
நோய் பிடித்தவர்கள்
எவன் ஒருவனும்
வன்புணர்வதற்கு ஏதுவாய்
யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு
கருங்குழியென செதுக்கி வைத்துக் கொள்ள
சொல்லித் தந்திருக்கிறார்கள்
அம்மா அம்மம்மா அப்பத்தா அத்தை எல்லாரும் ஒருவரே
அவ்வப்போது
காலக்கெடுவில்
லிட்டர் கணக்கில் சேர்ந்துவிடும் விந்துவை
தூர் வாருவதையும்
படிப்பித்திருக்கிறார்கள்
எனக்கு தெரியும்
அறிவாளி ரோகி ஆசிரியன் கலைஞன்
லும்பன் தரகன் மகாராஜா தளபதி
திருடன் கணிப்பொறிக்காரன் போராளி
போதைப்பொருள் விற்பவன் மருத்துவன்
கூலித்தொழிலாளி மாலுமி விவசாயி
கணவன், தந்தை, சகோதரன், மகன்
எல்லோர் குறிகளும் ஒன்றுபோலிருப்பது எப்படி
என்ற ரகசியம்
எனக்கு மொழி தெரியாது
நிறம் கிடையாது
நாகரிகம் தேசம் கொடி அரசாங்கம்
வரலாறு ராணுவம் சட்டம் நாணயம்
ஏதொன்றையும் முகர்ந்துப் பார்த்தாலும்
என் உதிர வீச்சமடிக்கும்
பிரம்மா விஷ்ணு சிவன் புத்தன்
யேசு அல்லா இந்திரன் வர்ணன்
சூரியன் கருப்பசாமி அய்யனார்
ஆகமங்கள் இதிகாசங்கள் காவியங்கள்
யாவும்
கலைக்க முயன்றும்
என் சூலகத்தில்
தங்கிவிட்ட கருக்கள்
அணுகுண்டோ ரசாயனத்துப்பாக்கியோ
ராக்கெட்டோ கன்னிவெடியோ
எறியப்படும் குண்டுகளுக்கு
உடல் செத்தாலும்
யோனிக்கு சாவில்லை
யோனியிலும் சாவில்லை
2.
ஒரு புணர்தலின் உச்சியில் விலகி
அந்தரத்தில் விந்தைப் பீய்ச்சி
தோழர் என்றெழுதினாய்
உடலை உதறி கொண்டு எழுந்து
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்றார் மார்க்ஸ்
என்று பிதற்றினாய்
கால்களுக்கிடையே தலையை இழுத்தேன்
உபரி என யோனி மயிரை விளித்தாய்
உற்பத்தி உறவுகள் என தொப்புளை சபித்தாய்
லெனின் ஸ்டாலின் மாவோ சி மின்
பீடத்தை ஒவ்வொருவருக்காய் தந்தாய்
முலைகளைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்
மனம் பிறழந்த குழந்தை போல மம்மு குடித்தாய்
பிரஸ்த்ரோய்கா, க்ளாஸ்னாஸ்ட் என்று மென்று முழுங்கினாய்
இடையின் வெப்பத்தில் புரட்சி என்றாய்
மூச்சின் துடிப்பில் பொதுவுடைமை என்றாய்
குறியை சப்ப குடுத்தாய்
பெர்லின் சுவர் இடிந்தது
சோவியத் உடைந்தது
எழுச்சி என்றாய்
அமெரிக்கா என்று அலறி ஆணுறை அணிந்தாய்
கீழே இழுத்து
உப்பை சுவைக்க சொன்னேன்
கோகோ கோலா என்று முனகினாய்
மயக்கம் வர புணர்ந்தேன்
வார்த்தை வறண்ட
வாயில் ஒவ்வொரு மயிறாய் பிடுங்கிப் போட்டேன்
இது கட்டவிழ்ப்பு என்றேன்
ஆக்கம் : லீனா மணிமேகலை
இதுகுறித்து ஜமாலன் எழுதிய விளக்கம் சுட்டியாக கொடுத்துள்ளேன்...!!!
இதே இந்து மக்கள் கட்சி, இந்து மதத்தை அவமதித்து விட்டமைக்காய் ஏன் நித்யானந்தர் மீது வழக்கு தொடரவில்லை ? கோயிலில் வைத்து கொன்றமைக்காய், சாட்சிகளை கலைத்தமைக்காய், ஏன் சங்கரர்கள் மீது வழக்கு தொடரவில்லை ? கருவறையில் இருப்பது கல் என்று வெளிச்சம் போட்டு காட்டி, அங்கே காதல் அரங்கம் நடத்திய தேவநாதன் மீது ஏன் வழக்கு தொடரவில்லை ? அவர்கள் வலிமையானவர்களாக, அவர்கள் உங்களை சார்ந்தவர்களாக இருப்பதனாலேயேதானே ?
கட்டற்ற சுகந்திரம் வழங்கும் இணைய பெருவெளியில் இந்த கவிதையை ஆயிரம் பேர் கட் காப்பி பேஸ்ட் செய்து வெளியிட்டால் அவர்கள் மீது எப்படி வழக்கு தொடுப்பீர்கள் ? முகமற்றவர்கள் பின்னூட்டத்தில் வெளியிட்டால் ? தெரியாதவர்கள் மின்னஞ்சல் மூலம் பகிர்ந்துகொண்டால் ? இதே போன்றதொரு பத்து கவிதைகளை யாரோ ஒருவர் ஒரு குழுமத்தில் எழுதினால் ? பல்வேறு ஆபிரகாமிய சோதனைகளை கடந்துவந்த இந்து ஞான மார்க்கம் இதனை ஏன் புறங்கையால் தள்ளிவிடாமல் லீனா மணிமேகலைக்கு தண்டனை வாங்கித்தரவேண்டும் என்றும், அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூப்பாடு போடுகிறது ?
விமர்சனங்களை எதிர்த்து பதில் சொல்லும், விவாதங்களை அல்வா துண்டு போல வெட்டி வீழ்த்தும் வினவும் இது குறித்து தானும் ஒரு ஆபாச பதிவை தன் தளத்தில் வெளியிட்டு இந்து மக்கள் கட்சியுடன் கை கோர்த்துக்கொள்கிறார்கள். அல்லது ஒருவருக்கொருவர் சொறிந்துவிட்டுக்கொள்கிறார்கள்.அவர்கள் பார்ப்பனர்கள், ஆர்.எஸ்.எஸ், ஹிந்து பரிஷத் தீவிரவாதிகளாயிற்றே ? ஏன் அவர்களோடு கை கோர்த்தீர்கள் என்றால் அதை நேர்மையாக எதிர்கொண்டு பதில் சொல்வார்களா வினவு குழு ? ம்ஹும். எப்போதும் போல ஒன்று அமைதி காப்பார்கள் அல்லது அசிங்கப்படுத்துவார்கள்...அதை தானே காலங்காலமாக செய்துவருகிறார்கள் ? பெண்கள் தினத்து கட்டுரைகளை பெண்களை வைத்து எழுதிவிட்டால் போதுமா ? நீங்களும் பிற்போக்குவாதிகளாக, ஊகத்தின் அடிப்படையில் கட்டுரை தீட்டுபவர்களாக, தனிமனித ஆபாச தாக்குதல் நடத்துபவர்களாக தானே இருக்கிறீர்கள் ?
இந்த பதிவு உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். நான் உங்கள் நன்பனாகவும் இருக்கலாம். என்னை இந்த பதிவுக்கு பிறகு வெறுத்துவிடவேண்டாம். புறத்தே தள்ளிவிடவேண்டாம்...நான் தவறு செய்வதாக நினைத்தால் எனக்கு நல்ல புத்தியை கொடுக்குமாறு உங்கள் கடவுளிடம் வேண்டுங்கள்..!!! இது என்னுடைய கருத்து மட்டுமே. ஒரு நெகடிவ் ஓட்டை போட்டுவிட்டீர்கள் என்றால் எவ்வளவு பேருக்கு இந்த பதிவு பிடிக்கவில்லை என்று காண்பேன்...!! உங்களை இந்த பதிவு உண்மையில் ரொம்பவே காயப்படுத்தினால் சொல்லுங்கள். பதிவையே எடுத்துவிடுகிறேன். அது நட்புக்கு நான் செய்யும் மரியாதை...!!!
தொடர்ந்து பகுத்தறிவு !!
இருளில் இருந்து ஒளி..!!!
மூட நம்பிக்கைகளில் இருந்து நல்வாழ்வு...!!!
..
..
இருளில் இருந்து ஒளி..!!!
மூட நம்பிக்கைகளில் இருந்து நல்வாழ்வு...!!!
..
..
