Showing posts with label சுடர். Show all posts
Showing posts with label சுடர். Show all posts

Wednesday, April 11, 2007

சுடர் : கைசேர்ந்தது....

சுடர் ஏற்றும்படி பணித்த அனுவுக்கு நன்றி...அய்யா ஞானவெட்டியான் கேள்விகளுக்கு எப்படியோ வெற்றிகரமாக பதிலளித்துவிட்டு, என்னை தாளித்துவிட்டார்...

கண்டிப்பாக நேரத்தை செலவிட்டு எழுதவேண்டிய சீரியஸ் மேட்டர்களை கேள்விகளாக தந்துவிட்டார்...இருந்தாலும் கேள்விகளுக்கு பதிலளித்து அப்படியே வேலைவாய்ப்பு கல்வி மலர்ல போட்டிடலாம் போல இருக்கு கேள்விகள்...நல்ல கேள்விகளை கேட்டதுக்கு முதலில் நன்றி....

1. சில வருடங்களாக ஏறுமுகத்தில் இருந்த வளாகத்தேர்வுகள் இந்த ஆண்டு சற்று குறைந்துள்ளது. இந்த போக்கின் எதிர்காலம் என்ன?

புதிய பணி வாய்ப்புகள் உருவாகிக்கொண்டுதான் இருக்கின்றன...2007 ஆம் ஆண்டுக்கான IT மற்றும் ITES (IT Enabled Services) - தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறையின் வளர்ச்சி 31 சதவீதமாக இருக்கும் என்று நாஸ்காம் சர்வே தெரிவிக்கிறது...

ஆனால் இவை பரந்துபட்ட அளவில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் அதிக அளவில் இருக்கிறது...அதாவது பி.பி.ஓ அல்லது கால்செண்டர் ஆகிய இரண்டையும் சேர்த்துத்தான் மொத்த வளர்ச்சியை கணக்கில் கொள்கிறார்கள்...

இளம்பொறியாளர்களை விட அனுபவம் வாய்ந்தவர்களின் தேவைப்பாடு அதிகம் இருப்பதை காண்கிறேன்...

சேவைத்துறையில் (Software Service Industry) உள்ள நிறுவனங்களான டி.சி.எஸ் / இன்போஸிஸ் / விப்ரோ / சத்யம் / ஹெச்.சி.எல் / காக்னிஸண்ட் போன்றவையின் அனுபவம் வாய்ந்த பணியாளர் தேவை அதிகமாக உள்ளது...மேலும் இவர்கள் சேவைத்துறையிலும் கால்வைத்துள்ளதால் கடந்த மூன்றாண்டுகளில் Campus / Offcampus போன்றவற்றில் தேர்வாகாதவர்கள் ஏதாவது (BPO / CC போன்றவையாக இருந்தாலும் )ஒரு பணியில் உள்ளே நுழையும் நிகழ்வு மிக அதிகமாக உள்ளது...

மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் எடுக்கப்பட்ட Attrition கணக்கீடுகள், அனுபவம் வாய்ந்தவர்களை விட புதிதாக பணியில் சேர்ந்த இளம்பொறியாளர்களின் விலகல் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாக உள்ளது...இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்..

மேலும் TCS / WIPRO போன்ற நிறுவனங்கள் B.Sc / BCA முடித்தவர்களை பணிக்கு சேர்ப்பதில் பல காரணங்களுக்காக ஆர்வம் காட்டுகின்றன...அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்...

இப்படி பல இருக்கலாம்களை சொல்லி வரலாம் தான்...இருப்பினும் நிறுவனங்கள் இளம்பொறியாளர் தேர்வுகளை Off Campus ஆக நடத்துவதில் பல நிர்வாக சிக்கல்கள் குறைவதை காண்கின்றன, அதனால் Off Campus இல் அதிக ஆர்வம் காட்டுகின்றன என்று மனிதவள துறையில் பணிபுரியும் ஒரு தோழி கூறுகிறார்...

2. E-lanes வகை வேலைகள் தமிழர்கள் எந்த அளவு பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார்கள். நடைமுறையில் இந்த வகை வேலைகளின் எதிர்காலம் மற்றும் வெற்றி சாத்தியகூறுகள் என்ன?

முதலில் இந்த கேள்வி ஒரு சிலருக்கு புரியாமல் போய்விடக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு...அதனை முதலில் தடுப்போம்...ELance / GetaFreelancer.com போன்றவை இணையத்தில் சிறிய / நடுத்தர ப்ராஜக்டுகளை ஏலத்தில் எடுக்கும் வாய்ப்புடைய தளங்கள்..

இதன்மூலம் 30 $ முதல் 5000 டாலர் வரையான ப்ராஜக்டுகளை பெறலாம்...

இந்த வகையிலான ப்ராஜக்டுகளை வெற்றி பெறுவதிலும் அவற்றை சிறப்பாக செய்து முடிப்பதிலும் இந்தியர்கள் இப்போது சிறப்பாக செயல்படுகிறார்கள்...

உதாரணமாக பெயர் சொல்ல விரும்பாத ஒரு பெண்மணி, கொல்கத்தாவில் இருந்து ஒரு நாளைக்கு பத்து முதல் பதினைந்து லோகோ டிசைன் ப்ராஜக்டுகளை முடிக்கிறார்...அவர் பெறும் வருமானம் ஒரு நாளைக்கு 500 அமெரிக்க டாலர்களுக்கு மேல்...நம்ப கடினமாக இருந்தாலும் இது தான் உண்மை...

2003 - 2004 ஆண்டு பல ப்ராஜக்டுகள் செய்துள்ளேன்...கடந்த ஆண்டு சில ப்ராஜக்டுகள் எடுத்தேன்...பணிச்சுமை காரணமாக ப்ராஜக்டுகள் எடுப்பதில்லை என்று கடந்த ஆண்டு மத்தியில் முடிவு செய்தேன்...

எனக்கு தெரிந்து அமெரிக்க / ஆஸ்திரேலிய வாழ் தமிழர்கள் இதில் மிக சிறப்பாக செயல்படுகிறார்கள்...நம்மவர்கள் அதிகம் ஈடுபடாமல் இருப்பதற்கு காரணம் விழிப்புணர்ச்சி இன்மையே...

மேலும் பண பரிமாற்றத்தில் உள்ள சில பிரச்சினைகளும் நம்மவர்கள் இது போன்ற ப்ராஜக்டுகளில் அதிக வருமானம் ஈட்டும் வாய்ப்பு இருந்தும் ஈடுபடுவதில்லை...

விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக செயல்பட வேண்டும், மா.சிவக்குமார் மூலமாக தமிழ் கம்பியூட்டர் போன்ற வெகுஜன ஊடகங்களுக்கு கட்டுரைகள் அனுப்பவேண்டும் என்று நினைத்திருக்கிறேன், செயல்படத்தான் நேரமின்மை தடைக்கல்லாக இருக்கிறது...

3. நாஸ்காம் போன்ற நிறுவனங்கள் சமீபத்தில் குடுத்துள்ள அறிக்கையில் 25% மாணவர்கள் கூட வேலைக்கு தகுதியற்றவர்கள் என கூறியுள்ளது. இது குறித்து தங்களின் சொந்த கருத்து மற்றும் சொந்த அனுபவம் என்ன?

நாஸ்காம் கூறியது ஒரு வகையில் சரிதான்...இதற்கு காரணம் நமது கல்வி முறை...நான் எட்டு முறை தவறிய டிஸ்க்ரிட் மேத்ஸ் என்ற கல்லூரிப்பாடத்தை இந்த 7 ஆண்டு கணிணி துறை பணியில் ஒரு முறை கூட நான் பயன்படுத்தியதில்லை...

அந்த பாடத்தை வடிவமைத்தவர் மீது ஆசிட் ஊற்ற வேண்டும் போல் கொலைவெறி உள்ளது...(கிலியாக வேண்டாம், ப்ரீயா விடுங்க, அட்லீஸ்ட் பினாயில் ஊத்திடலாம்)

ஆனால் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நமக்கே உரிய கடின உழைப்பின் மூலம் நம் மாணவர்கள் சாதிப்பதை கண் கூடாக அதே நாஸ்காம் கண்டுள்ளது...அதன் தலைவர் இந்த கருத்தை ஒரு முறை தெரிவித்தார்...

என்னுடைய நன்பர்கள் சிலர் முன் அனுபவம் இல்லாமல் நிறுவனங்களில் என்னுடைய முயற்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் ( சிறு கயமை - கண்டுக்காதீங்க), ஆனால் பணியில் இணைந்த பிறகு IIT / REC போன்ற நிறுவனங்களில் படித்து, மெரிட்டில் கேம்ப்ஸ் தேர்வாகி பணியில் இணைந்துள்ள சக ஊழியருக்கு சற்றும் சளைக்காமல் அனாயாசமாக பணியில் சிறந்து விளங்குவதை காணும்போது "தமிழன் சளைத்தவன் இல்லையடா" என்று தோன்றும்...

4. இந்த கால இளைஞர்கள் வேலைக்கு சேர்ந்த பின்பு பொருளாதாரத்தை எதிர்காலத்திற்காக சேர்ப்பவர்கள் அதிகமா? அல்லது ஆடம்பரத்தில் மூழ்கி விடுகிறார்களா?

பெரும்பான்மை இளைஞர்கள் ஆடம்பரத்தில் மூழ்கிவிடுகிறார்கள் என்பது உண்மை...இந்த ஆடம்பரம் "தேவை" என்ற விதத்தில் வந்து சொல்லாமல் கொள்ளாமல் பாக்கெட்டை கரைத்துவிடும்...

பெரும்பாலானவர்கள் சேமிக்கும் பழக்கம் இல்லாமல் இருக்கிறார்கள்...

ஆடம்பரம் என்று சொன்னால், அடுத்தவன் ஒரு Hi-End மொமைல் வைத்துள்ளான்..இருபதாயிரம் ரூபாய்...மல்ட்டிமீடியா உள்ளது...ஆக அது போன்ற ஒரு போன் வாங்கவில்லை என்றால் Out Of Date ஆகி விடுவோம் என்ற எண்ணம் EMI கட்டியாவது அப்படி ஒரு போன் வாங்கிவிடலாம் என்று கிளம்பிவிடுகிறார்கள்...

க்ரெடிட் கார்டுக்கு தேவையில்லாத வட்டி கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்...

எனக்கு கிடைத்த தகவல்படி கொரியாவில் இளைஞர்கள் ஆடம்பர வாழ்க்கையில் மூழ்கி, க்ரெடிட் கார்டுகளுக்கு அதிக செலவு செய்து 35 வயதில் தான் திருமணம் செய்ய பெண்ணை ப்ரொபோஸ் செய்கிறார்களாம்...

ஒரு எளிமையான உதாரணம் சொன்னால், Enigma என்று ஒரு பப் (பார்) உண்டு இங்கே...அந்த பப்பில் ஒரு பியர் 300 ருபாய்...ஆனால் அதே பியர் வேறு சில பாரில் 100 ரூபாய்...அதே பியர் கடையில் 60 ரூபாய்...குடிக்க வேண்டும் என்று நினைப்பவன் எனிக்மாவில் தான் குடிக்க வேண்டுமா ? ஏன் சாதாரண கடையில் குடித்தால் ஆகாதா ? இது போன்ற ஆடம்பரத்தை நானும் விரும்பவில்லை என்றாலும் சில சமயம் குழுவாக செல்வதற்கும் பார்க்கிங் வசதிக்கும் இது போன்ற கடைகளுக்கு செல்வது தவிர்க்க முடியாதது ஆகிவிடும்...(அப்போ பில்லை எவன் தலையிலயாவது கட்டிட வேண்டியது தான் :))

ஆடம்பரத்தை நான் வெறுக்கிறேன்....


5. இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் வேலையின் உழைப்பை விட அதிக ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால்மற்ற துறையினரின் வாழ்க்கை தரமும், பொருளாதாரமும் பாதிக்கப் படுகிறது. இந்த அதீத ஊதியம் பற்றிய தங்களின் கருத்து...இது தேவைதானா?

பன்னாட்டு நிறுவனங்களில் உழைப்பை விட அதிக ஊதியம் வழங்கப்படுகிறது என்பதை நான் மறுக்கிறேன்.....(சில சமயம் உழைக்காமல் பிலாக் எழுதி / பின்னூட்டம் போட்டாலும் ஊதியம் வழங்கப்படுகிறது ஹி ஹி)

அப்படி வாங்கும் சம்பளத்தை அந்த ஊழியர்கள் என்ன அண்டார்ட்டிக்காவிலா செலவு செய்யப்போகிறார்கள் ? இங்கே தானே...

மற்ற துறைகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்ற கருத்து உண்மையில்லை...பன்னாட்டு நிறுவனங்களினால் Infrastructure / Real Estate / Communication போன்றவை வளர்ந்துள்ளன அனுசுயா...

ஆனால் இது போன்றதொரு வளர்ச்சி மற்ற துறையினருக்கு பொறாமை ஏற்ப்படுத்தும் அளவில் உள்ளது என்பது உண்மை...


அப்பாடா...எப்படியோ ஒப்பேத்தியாச்சு...இனிமேல் இந்த சுடரை யார் கையிலயாவது பிடிச்சு கொடுக்கனும்...பட்டுனு நியாபகம் வருவது வலைப்பூ சின்னக்குத்தூசி / வலைப்பூ சுனாமி லக்கி லூக் அவர்கள்...


இனிமேல் கேள்விகள்...

1. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் உண்டா ? கலைஞரை ஏன் பிடிக்கும் ? கலைஞர் புகழ் பாடுவதால் ஏதாவது ப்ரயோஜனம் உண்டா ?

2. பத்திரிக்கை துறை ஏன் இப்படி போட்டி பொறாமையில் தவிக்கும் துறையாக, வருமானம் அற்ற துறையாக உள்ளது ? இந்த நிலை மாற வழியுண்டா ? வலையுலகால் எடிட்டர் என்ற பதவியே அழிந்துவிட்டது போனது போல் உள்ளதே, அது பற்றி உங்கள் கருத்தென்ன ?

3. பள்ளி காலத்தில் அய்யர் / அய்யங்கார் சாதியில் உங்களுக்கு ஏதேனும் நன்பர்கள் உண்டா ? அவர்களுடனான உங்கள் இனிமையான அனுபவத்தை (எச்சி வெக்கறது இல்லை) எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்...

4. ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுப்பதை தி.மு.க நிறுத்திக்கொண்டதா ? வெறும் 60 ஆயிரம் மக்களை மாக்கள் போல் அடைத்துவைத்துள்ள முகாம்களின் நிலை மாறுமா ? க்வாரண்டைண் என்று சிறைகளில் அடைத்து வைக்கும் கொடுமை மாறுமா ? அவர்களின் சுகாதாரம் / கல்விக்காக ஏன அரசு (கண் துடைப்பின்றி ) நடவடிக்கை எடுக்க கூடாது ?

5. கீழ்வரும் வார்த்தைகளுக்கு ஒத்தை லைனில் குறிப்பு சொல்லவும்..

திராவிட தமிழர்கள் குழுமம்
தடாலடியார் கவுதம்
பின்னூட்ட கயமை
அதர் அனானி ஆப்ஷன்
கொலைவெறி படை
பா.க.ச
பொன்ஸ்
அய்யங்கார்
ஓசை செல்லா
தகவல் தொழில்நுட்பம்
பைக் குதிரை
மடிப்பாக்கம்
இந்துத்துவம்
ஜல்லிகள்
மொக்கை பதிவு
வெளிப்படையாக பேசுதல்
ஜெர்மன் மொழி

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....