டோண்டுவை பெங்களூர் வலைப்பதிவில் சந்தித்ததில் இருந்து அவரது பதிவுகளை / மொக்கைகளை தொடர்ந்து படித்துவருகிறேன்...
டோண்டு பதிவில் பின்னூட்டம் இட்டுவிட்டு அதன் பலனை நானும் லக்கிலூக்கும் நன்றாகவே அனுபவித்துள்ளோம்...
கோவி.கண்ணன், மகேந்திரன், குழலி, செல்லா, ஜயராமன் உட்பட பலருக்கும் ஏதோ ஒரு வகையில் "மனக்கஷ்டம்" அல்லது "சைக்கோத்தனம்" அல்லது "அடுத்தவர் மீது காழ்ப்புணர்ச்சி" அல்லது "அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காண்பது" அல்லது "நல்லவர் போல் நடித்து இன்பம் காண்பது" என்று பல உணர்ச்சிகளை கொடுத்த பிரச்சினை எல்லாம் இப்போது இல்லை...
வைஸ் வர்ஸாவாக இல்லாமல் போய்விட்டது, யாருக்கு என்ன உணர்ச்சி என்பதை நீங்களே பொருத்திக்கொள்ளுங்கள்...
படம் : திரு டோண்டு ராகவன் அவர்கள்...!!! (டோண்டுவின் படம் கிடைக்கவில்லை, அதனால் ஜெயகாந்தன் படத்தை போட்டிருக்கிறேன் )
டோண்டு ஒரு மசோக்கிஸ்ட் என்றார் குழலி...(அப்போது தான் அப்படி ஒரு வார்த்தை இருப்பதே எனக்கு தெரியும்...அதன் அர்த்தம் இன்றுவரை புரியவில்லை)..டோண்டுவே !!! தமிழ் வலைப்பதிவுலகை விட்டு வெளியேறு !!! என்று நானே பதிவிட்டுள்ளேன்...அது தவறு என்று அப்போதே உணர்ந்தேன்..ஆனான் அதற்காக இந்த இடத்தில் மன்னிப்பு கோருகிறேன்...
தனிப்பட்ட வாழ்வை விடுங்கள்...இந்த மூன்று ஆண்டுகளில நட்பு, கோபம், உணர்வு, பாசம், கண்ணீர், வேகம் என்று பல உணர்ச்சிகளும், அறிவியல்,அரசியல் போன்ற அறிவும் இந்த வலையுலகம் மூலமாகவும் வந்து சேர்ந்துள்ளன...
ஜஸ்ட் லைக் தட் கடந்துபோகவேண்டிய பதிவுலகம், என்னை இவ்வளவு தூரம் ஆக்ரமித்தது என்றால் அதற்கு டோண்டு ராகவன் பதிவில் போட்ட ஒரு சிங்கிள் பின்னூட்டமும் காரணம்...
பதிவுலகம் என்னை மெருகேற்றியிருக்கிறது. நிறைய பொறுமை, உலகை பற்றிய அறிவு, என்னுடைய சொந்த எழுத்து திறமை, நிறைய நன்பர்கள், ஆளுமை திறமை போன்றவை இந்த பதிவுலகம் எனக்கு கொடுத்த கொடைகள்...
அதனால் டோண்டு ராகவனுக்கு என்னுடைய ஸ்பெஷல் நன்றிகள்...
இந்த பதிவு டோண்டு ராகவனை பற்றியது என்று திடீர் என்று நினைவுக்கு வந்து தொலைக்கிறது...
டோண்டு ராகவன் பற்றி சின்னதாக ஒரு பின்னூட்டம் போட்டு முடித்துவிடமுடியாது என்பதால் தான் இந்த தனிப்பதிவு...
அவருடைய என்னை புரட்டிப்போட்ட அந்த ஞாயிற்றுக்கிழமை , முரட்டு வைத்தியம் (சீரிஸ் பதிவுகள், முரட்டு வைத்தியம் என்ற லேபிளின் கீழ் பார்க்கவும்) போன்ற பதிவுகளை எப்போது மனக்கஷ்டம் ஏற்பட்டு உடைந்து போனாலும் படிப்பேன்...
தன்னை உணர்ந்தவனின் சுய பரிசோதனைகள் அவை...
ஆராதிக்கப்படவேண்டியவை...
கண்ணீரின் உப்பு வாயில் நனைக்க நனைக்க மீண்டும் மீண்டும் படிக்கப்படவேண்டியவை...
என்னைப்பொறுத்தவரை இதுவரை எந்த எழுத்தாளராளும் எழுதப்படாதவை...
பொக்கிஷமாக பாதுகாக்கப்படவேண்டியவை...
இளவஞ்சி எழுதியிருப்பார்...தனித்துவமானவன்...உங்களைப்போலவே...
என்று...
டோண்டுவின் சில தனிப்பட்ட (யுனீக்) குணங்கள் பற்றி சொல்லியே ஆகவேண்டும்...நீங்கள் தனித்துவமானவர் என்று எண்ணினால் இதுபோன்ற உங்களின் குணங்களை நீங்கள் பட்டியலிட முடிகிறதா என்று பாருங்கள்...
1. அசாத்திய பொறுமை : இதற்கு எடுத்துக்காட்டுகள் சொல்லவேண்டுமா என்ன ?
2. போராட்ட குணம் : தான் சரி / தவறு என்று நம்புவதை இறுதிவரை விடாமல் போராடும் குணம்...தன்னுடைய போலியோடு அவர் போராடியதை சொல்லலாம்...
3. போராட்ட குணம் : தான் சரி / தவறு என்று நம்புவதை இறுதிவரை விடாமல் போராடும் குணம்...சல்மா அயூப் விவகாரத்தை சொல்லலாம்...சல்மா என்பவர் ஒரு குறிப்பிட்ட நபர் என்று ஆதாரங்களோடு விளக்கியும் இன்னும் தன்னுடைய நிலையில் இருந்து மாறவில்லை...ஒரு வேளை ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை மாறலாம்...
4. நேர்மை..ஒரு வெள்ளிக்கிழமை கேள்வி எதுவும் வரவில்லை, அதனால் பதிவு போடவில்லை என்று சொல்லும் நேர்மை எத்தனைபேரிடம் இருக்கிறது ?
5. நெஞ்சுரம் : சகல தொழில்நுட்பங்களிலும் வித்தகரான அவருடைய போலியிடம் போராட அவரிடம் நெஞ்சுரத்தை தவிற வேறென்ன இருந்தது ? நாட்டாமையில் இருந்து ஹாரி பாட்டர் வரை கிளம்பி வந்தார்களே ?
மேலும் அவருடைய முரட்டு வைத்தியம் பதிவில் தொழிற்சங்கத்தை சேர்தவர்கள் பஸ்ஸில் ஏறவிடாமல் தடுத்தபோது அவர் செய்தது இது !!!
நான் என்ன செய்தேன் தெரியுமா? "நீ யாரடா ஜாட்டான் என்னை பஸ்ஸில் வர வேண்டாம் என்பது, நான் கூறுகிறேன் உன் பஸ் எனக்கு வேண்டாம்" என்று ஒரு சைக்கிள் வாங்கி அதில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். வீட்டிலிருந்து அலுவலகம் 20 கிலோமீட்டர். போக ஒரு மணி நேரம் வர ஒரு மணி நேரம் என்று 40 கிலோமீட்டர் பயணம் தினசரி. அப்போது எனக்கு வயது 42. ஆனால் சைக்கிளை கண்மண் தெரியா வேகத்தில் ஓட்டிச் செல்வேன். காற்றின் எதிர்த் திசையில் மனிக்கு 20 கி.மீ. வேகம், நேர்த் திசையில் 30 கி.மீ. வரை வேகம். திசம்பர், ஜனவரி மாதங்களில் அலுவலகம் அடைந்ததும் ஸ்வெட்டரைக் கழற்றி சட்டை வியர்வையால் உடம்பில் ஒட்டிக் கொள்ள நின்றவன் நான் ஒருவனாகத்தான் இருப்பேன். பகல் நேர வெப்ப அளவு 15 டிக்ரி செல்சியஸ் போல இருக்கும்.
சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் தலைமை அலுவலகத்துப் பொது மேலாளர் P.G. Zalani என்னை நேஷனல் ஹைவேயில் வியர்வையுடன் சைக்கிள் செலுத்தி வருவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். என்னைக் கூப்பிட்டு விசாரிக்க நான் அவரிடம் யூனியன்காரர்கள் செய்ததைக் கூற, உடனே அவர் அவர்களைத் தன் அறைக்கு வரவழைத்துக் கேட்டிருக்கிறார். அவர்களோ தாங்கள் ராகவனைக் குறித்துப் பேசவில்லை அவர் எப்போது வேண்டுமானாலும் பஸ்ஸில் வரலாம் என்றுக் கூறினர்.
இருந்தாலும் நான் ஒத்துக் கொள்ளவில்லை. "இதை ஒரு உடற்பயிற்சியாகச் செய்துக் கொள்கிறேன், நன்றி" என்றுக் கூறி விட்டேன்.
6. விடா முயற்சி : அவரே சொல்கிறார் பாருங்கள்...
ஊர் சுற்றியக் காலங்களில் நிறைய சினிமா பார்த்திருக்கிறேன் என்று தோன்றியது. ஒரு வெறுப்பில் இனிமேல் கோர்ஸ் முடியும் வரை திரைப் படம் பார்க்காமல் இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தேன். என்னால் முடியாது என்று என் நண்பர்கள் என்னை வெறுப்பேற்ற என் வெறி அதிகமாயிற்று. 1969 ஜூலை வரை ஒரு படமும் பார்க்காமல் இருந்தேன். கோர்ஸ் முடிந்தப் பிறகுதான் படம் பார்த்தேன். ("பார் மகளே பார்")
என் அப்பாவே என்னிடம் அம்மாதிரியெல்லாம் சபதம் செய்ய அவசியமில்லை என்று கூறினாலும் நான் பிடிவாதமாக இதை சாதித்தேன். எது எப்படியானாலும் இது எனக்கு ஒரு வித நிறைவை அளித்தது. பிற்காலத்தில் பல விஷயங்களுக்குப் போராடியிருந்தாலும் என்னுடைய இந்த முதல் போராட்டம் என் மனதில் இப்போதும் நிலைத்து நிற்கிறது. "உன்னால் முடியும் தம்பி" என்று கூறுகிறது.
7. நியாபக திறன்...தொடர்ச்சியாக பல சம்பவங்களை ஏதோ நேற்று நடந்தது போல நினைவில் வைத்திருப்பது...
மச்சினிச்சி கல்யாண வீடியோயில் இருந்து பள்ளிக்கூடத்தில் வாத்தியார் நடத்திய பாடம் வரை இன்றுவரை நியாபகம் வைத்து சொல்வது...
வாழ்க்கையின் மீது தெளிந்த பார்வை உடையவர்களாலேயே இப்படி நியாபகம் வைத்திருக்கமுடியும்...
8. இளமை : இன்றும் இளைஞராகவே திரிவது, தன்னுடைய துனைவியாரை அவ்வப்போது இழுத்து அவர் மீது உள்ள அன்பை அடிக்கடி வெளிப்படுத்துவது...
எக்ஸ்கியூஸ்மீ ரவி.. ஒரு கிங்ஸ் கிடைக்குமா என்று பியர் அடித்து லெக் பீஸை கடித்துக்கொண்டே தி.நகர் பாரில் அவர் கேட்டதை நான் வெளியே சொல்லியிருக்கிறேனா என்ன ?
கடைசீயாக...
என்மேல் கிளப்பப்பட்ட பல அவதூறுகளுக்கு எல்லாம் நான் அவரிடம் சென்று விளக்கம் அளிக்கும் முன்பே உண்மையை அறிந்துகொண்ட கூரிய அறிவு...!!!
யாராவது அவதூறு கிளப்பினால், அதனால் டோண்டு சார் என்ன நினைத்துக்கொள்வாரோ என்று கவலை கொள்ளத்தேவையில்லை...காரணம் அவர் நம்மை நம்புகிறார் என்ற உணர்வே தெம்பைத்தரும் தெரியுமா ?
கருத்து ரீதியாக எனக்கும் அவருக்கும் பல வேறுபாடுகள் இருந்தாலும் நிபந்தனை அற்ற எதிர்பார்ப்புகள் அற்ற நட்பை தொடர்ந்து பாராட்டிவருவது...
ஏன் தொடர்ந்து காண்டு கஜேந்திரன் பதிவை எழுதி போதை ஏற்றிவரும் லக்கிலூக் தான் அவரது ஜெயா டிவி பேட்டியை பல இன்னல்களுக்கிடையே சி.டியில் காப்பி செய்து அவரை தேடி சென்று கொடுத்தவர்...
தீவிர திராவிட சிந்தனை உள்ளவரான லக்கியிடம் அவருக்கு நட்பு என்ற செய்தி, அவர் நட்பு பார்க்க மற்ற வடகலையார்கள் செய்வது போல தோள் சட்டையை தொட்டு பார்ப்பவர் அல்ல என்ற செய்தியை சொல்கிறதல்லவா ? ( என்ன வரவணையான் என்றால் தான் அவருக்கு கொஞ்சம் ஆகாது கிகிகி - டோண்டு சார் அடித்த கிங்ஸுக்கு வரவணை பில்லு போட்டது தான் காரணம் கிகிகி)

நானும் வரவணையானும் (இருவரும் மப்பில்)
படத்தை எடுத்தவர் ஓசை செல்லா !!!! லக்கிலூக் எதிர் பக்கத்தில் தண்ணியடிப்பதால் அவர் இந்த படத்தில் இல்லை...
அவ்வளது தான் டோண்டு சார் புராணம்...
இந்த பதிவு யாருக்கு கோபம் தரும், யாருக்கு நிறைவு தரும் என்பதை பற்றிய கவலை எனக்கில்லை...
எனக்கு நிறைவாக இருக்கிறது...!!!