Showing posts with label பருப்பு சாம்பார். Show all posts
Showing posts with label பருப்பு சாம்பார். Show all posts

Monday, September 10, 2007

பருப்பு சாம்பார்...........

நான் இப்போ இருக்க நாட்டுல சைவம், அசைவம் என்று எல்லாம் பிரிவினைவாதம் கிடையாதுங்க...எல்லாரும் எல்லாமும் திங்கற ஊரு...சரி நேத்து அப்பார்ட்மெண்ட்ல சாம்பார் வெக்கலாம்னு முடிவெடுத்து, தேடும்போது இந்த சமையல் குறிப்பு கிடைச்சுது...

இதுல இருந்து சில விஷயங்களை போட்டு ஒரு பதிவு போட்டுடலாம்னு...எதுக்குங்க வளவளன்னு...(வளவளன்னு தான்...வள் வள்னு இல்ல...)...மேட்டருக்கு வருவோம்...

முருங்கைக் காய் - 2
புளி - எலுமிச்சை அளவு
தக்காளி - 2
துவரம் பருப்பு - 1/2 கப்
சாம்பார்ப் பொடி - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - சிறிது

மசாலா அரைக்க:
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 1
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித் தழை - சிறிது

தாளிக்க - எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.



செய்முறை:

புளியை நீர்க்க இரண்டு மூன்று முறைகளாகக் கரைத்துவைத்துக் கொள்ளவும்.
துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.

முருங்கைக் காயை 3 அங்குலத் துண்டுகளாகவும் தக்காளியை மெல்லிதாக நீளவாக்கிலும் நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.

அதில் நறுக்கிய முருங்கைத் துண்டுகளைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் அரை கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, வாணலியை மூடிவைக்கவும்.

ஐந்து அல்லது எட்டு நிமிடங்களில் முருங்கை பாதி வெந்திருக்கும்; இப்போது புளித் தண்ணீர் சேர்க்கவும்.

மேலே உப்பு, மஞ்சள்தூள், தக்காளி, அரைத்த மசாலா, சாம்பார்ப் பொடி சேர்த்துக் கொதிக்க விடவும்.

புளிவாசனை போனபின், வேகவைத்த துவரம் பருப்பைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்களுக்குக் கொதிக்கவைத்து இறக்கவும்.

கொத்தமல்லித் தழை நறுக்கித் தூவி, பரிமாறவும்.

இந்த பதிவுப்படி பல விஷயங்களை சாம்பார்ல போட்டுட்டேன்...பட்...முருங்கைக்கா மட்டும் கிடைக்கல...அதுக்கு பதிலா கடையில இருந்து வாங்கிகிட்டு வந்த பிஷ் பிரையில் இருந்து ஒரு ரெண்டு மீனை எடுத்து உள்ளாற போட்டுட்டேன்...

நீங்களும் செஞ்சு சாப்பிடுங்க...!!!! நல்லாருந்துச்சு...!!! இந்த பதிவு மாதிரியே...!!!

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....