Showing posts with label ப்ராக்டிக்கல் நாலேஜ். Show all posts
Showing posts with label ப்ராக்டிக்கல் நாலேஜ். Show all posts

Thursday, August 28, 2008

சாம்பார் பதிவின் நீட்சியாக எழுந்த விளைவுகள்...

என்னுடைய சாம்பார் பதிவின் தொடர்ச்சியாக...என்னுடைய நூற்றுக்கணக்கான(??) வாசகர்களின் நலனை முன்னிட்டு, இன்று இரவு என்னுடயை ரெசிப்பி படி நானே சாம்பார் வைத்து (தூயா கவனிக்க), அதை உலகத்தமிழர்ர்கள் பார்வைக்கு வைப்பது என முடிவானது...



அதன் விளைவு தான் இந்த புரட்சி திருமணம்...ச்சே சாம்பார்...முதல் படத்தில் வெங்காயம் தக்காளி தாளிக்கப்படும் காட்சி...



இரண்டாவது படத்தில் புளித்தண்ணீர், பருப்பு தண்ணீர், மஞ்சள் தூள், சாம்பார் பொடி மற்றும் உப்பு போடப்பட்டு கொதிக்கவைக்கப்படும் காட்சி...

படத்தின் மீது பெரிதாக்க படத்தை க்ளிக்கி ( இதை எல்லாம் பெரியதாக பார்த்து என்ன செய்யப்போகிறீர்...சும்மா போவும்...இது என்ன நமீதா படமா ? )

கொதிக்கும் வாசனை அடிக்கிறதா ? இப்போது நான் சொல்ல மறந்த கடைசி பஞ்ச்...இதில் மேலாக்க கொஞ்சம் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்...

முந்தைய பதிவில் பின்னூட்டம் போட்ட வெட்டிப்பயல், இதற்கு நெத்திலி வறுவல் சூப்பர் காம்பினேஷன் என்று கூறியிருந்தார்...நானும் அதை ஆமோதிக்கிறேன்...வெஜிட்டேரியன் மக்கள்ஸ், நீங்கள் உருளைக்கிழங்கு வறுவலோ அல்லது கருணைக்கிழங்கு வறுவலோடு அப்படியே ஓரங்கட்டிக்கொள்ளுங்கள்...

நெத்திலியை மசாலா தடவி பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொண்டு, அப்படியே நாம ஒதுங்கிங்கலாம்...(இந்த பதிவெல்லாம் சூடான இடுகையில வந்து என்ன செய்யப்போகுது ? ப்ளீஸ் இதை யாருக்கும் ரெபர் செய்யாதீங்க)

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....