Showing posts with label லிப்ட் மாமா. Show all posts
Showing posts with label லிப்ட் மாமா. Show all posts

Tuesday, November 24, 2009

லிப்ட் மாமா - ஒரு பக்க கதை



நான் ஸ்வேதா. ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணி. குடும்பம் சென்னையில். பெங்களூரில் தனி வீடு எடுத்து தங்கியிருக்கிறேன்..

அலுவலகம் முடிந்து என்னுடயை அப்பார்ட்மெண்ட் லிப்டில் நுழைய எத்தனித்தேன். எதிர்த்த அப்பார்ட்மெண்ட் ஜொள்ளு மாமா ஏற்கனவே லிப்டில் நிற்கிறார்.

எப்போதும் ஒரு ஜொள்ஸ் லுக் விட்டுத்தொலையும் கிழம்.

என்னம்மா,  ஆபீஸ் முடிஞ்சதா ?

(வேற என்ன நிலாவுக்கா போயிட்டு வறேன், கிழவா.....)

முடிஞ்சது..

சுருக்கமாக பதில் சொன்னேன்...

எந்த ப்ளோர் போறேம்மா..நீ ?

நான் என்னோட பிப்த் ப்ளோர் அப்பார்ட்மெண்ட்டுக்கு.

லிப்ட் பட்டனில் கை வைப்பதுபோல மேலே உரசுகிறது கிழம்.

ஹி ஹி. வீட்டுக்கு வரவாம்மா ? ஏதாவது ஹெல்ப் வேனும்னா சொல்லு..நான் தான் நெக்ஸ்ட் மந்த்லேர்ந்து ப்ளாட் செக்கரட்டரி தெரியுமோல்லியோ ?

எதுவும் தேவையில்லை..

கையை பிடித்துவிட்டான். ..

சார். என்ன பண்றீங்க ?

நீ ரொம்ப அழகாயிருக்கே...!!

இடியட். கையை எடுய்யா ?. வயசானவராச்சேன்னு பார்த்தா ?

உனக்கு ஓக்கேன்னா சொல்லு..வயசாச்சேன்னு பார்க்காதே. நான் ரெண்டை கட்டி மேய்ச்சவனாக்கும்...

நங்கென முட்டிக்கு கீழே ஒரு உதைவிட்டேன். நிலை குலைந்து விழுந்தான் கிழம். ஐந்தாவது ப்ளோர் கதவு திறந்தது. விரைவாக வெளியே வந்து, எமெர்ஜென்ஸி லிப்ட் பவர் ஆப் என்ற லிவரை மேலே தூக்கினேன். லிப்ட் பாதியில் நின்றது.  என்னுடைய மடிக்கணினியை திறந்து லிப்ட் 10000 முறை மேலும் கீழுமாக போய் வருவது போல் எழுதியிருந்த கல்லூரி ப்ராஜக்ட் மென்பொருளை தேட ஆரம்பித்தேன்..அதில் கதவை திறக்கமுடியாதபடி ஒரு வரியை சேர்த்து இயக்கிப்பார்க்கவேண்டும்...

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....