உங்கள்ல எத்தனைபேர் வீட்ல இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி இருக்குன்னு எனக்கு தெரியாது...ஆனா என்னோட வீட்ல இருக்கு...சமீபமா ஊருக்கு போனப்போ, கிராமத்து வீட்ல இருந்த பழைய டயனோரா டீ.விய காணல...ஆனா அதுக்கு பதிலா ஜம்முனு உக்காந்திருந்தது ஒரு குட்டி டிவி...
என்னடா இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டி வந்திட்டது போலிருக்கே நம்ம வீட்டுக்கு...அப்படீன்னு ஒரே குஜால்...பாரம்பரியமா எங்க ஊர்ல காங்கிரஸ் தான்...இருந்தாலும் ரேஷன் கார்டு இருக்கவங்க எல்லாருக்கும் வண்ண தொலைக்காட்சி பெட்டி வந்து சேர்ந்திட்டது...
ஐநூறு ரூவாய்க்கு ரெண்டுன்னு கொடுத்த ரிலையன்ஸ் போன் மாதிரித்தான் இருக்கப்போவுதுன்னு கொஞ்சம் அசமஞ்சமாத்தான் ஆன் பண்ணேன்...டப்புனு "தமிழக அரசு இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டீன்னு" ப்ளூ ஸ்க்ரீனுக்கு பதிலா வந்தது...
அப்புறம் டப்புனு படம் தெரிஞ்சுது....மொதல்ல வந்த சானல் ஜெயா டி.வி...எங்க மம்மி கடிச்சா கோல்டாமே...அத பார்த்துக்கிட்டிருந்தது போட கடைசியா...படம் ப்ளாஸ்மா டி.வி அளவுக்கு பக்காவா இருந்தது...
அப்படியே சன் டிவி...அப்புறம் ஸ்டார் மூவீஸ்...அப்புறம் பேஷன் டி.வின்னு எல்லா சேனலையும் பார்க்குறேன்...படம் சும்மா பக்காவா கீது....அடப்பாவி மக்கா...டி.வி கம்பெனிக்காரன் பொழப்புல மண்ணை போட்டுட்டீங்களேன்னு நினைச்சுக்கிட்டேன்...
முன்னெல்லாம் நம்ம கிராமத்து ஏரியாவுல மக்களுக்கு ஒரு பணக்கஷ்டம்....கொழைந்தைக்கு உடம்பு முடியாம ஆஸ்பத்திரிக்கு தூக்கினு போவனும்...இல்லன்னா...புள்ளைக்கு ஸ்கூல் பீஸ் கட்டனும்.....நோட்டு புக்கு வாங்கனும்...தீவாளி பொங்கல்னா நல்ல துணியெடுத்து கொடுக்கனும்...அப்படீன்னா...மக்கள் கூடுமானவரைக்கும் செய்ய முயற்சி பண்ணுவாங்க...
அப்படி முடியலன்னா...காதுல மூக்குல போட்டிருக்கறத அடகுவச்சுட்டு...காசு வாங்கிடுவாங்க...அப்படி எதுவுமே இல்லைன்னு வெச்சுக்கோங்க...இருக்கவே இருக்கு ரேஷன் கார்டு....அத்த கொண்டுபோய் டப்புன்னு காசு இருக்கவனுங்க கிட்ட அடகு வெச்சுட்டு....அய்நூறு ஆயிரம்னு வாங்கிட்டு வந்துருவாங்க...இது தாங்க ஏழை மக்களின் நிலை...
ரேஷன் கார்டை அடகு வெச்சுட்டா அத மூக்குற வரைக்கும் ( மீட்கும் வரை) கொஞ்சம் கஷ்டகாலம் தான்னு வெச்சுக்கோங்களேன்...ஏன்ன எண்ணை கிடைக்காது ( மண்ணென்னை)...அரிசி கிடைக்காது...கடையில காசு கொடுத்து வாங்கனும்...இல்லை ரேஷன்ல வாங்குறவங்க கிட்ட கடன் வாங்கனும்...
ஆனா இந்த வண்ணத்தொலைக்காட்சி பெட்டியில ஒரு வசதி...ரொம்ப முடியல...கஷ்டம்னா, ஒரு ஆயிரம் ஆயிரத்தைந்நூறுக்கு வித்துத்தள்ளிட்டு காசு வாங்கிட்டு வந்திடலாம்....
இப்போல்லாம் ஊர் நாட்ல பஞ்சம் இல்லை...மூனு வேளை நல்லா சாப்புடறாங்க என்பது உண்மைதான்...(வேலைக்கு உணவு திட்டத்துல நூறு ரூபாய்க்கு ஊர் தலைவர் கமிஷன் போக எண்பது ரூபாய் கிடைக்குதுங்க மக்களுக்கு....இது பற்றி அப்பாலிக்கா எழுதறேன்...)..ஆனா இந்த வண்ணத்தொலைக்காட்சி திட்டமும் ஒரு நல்ல திட்டம் தானுங்க...அதை மறுக்கவே முடியாது.....
அப்புறம் ஊர் நாடெங்கும் குளம் வெட்டும் திட்டமும் அருமையான திட்டமுங்க...அது பற்றி போட்டோவோட ஒரு பதிவு போடும் எண்ணம் இருக்கு...
எனிவே...திரு...நாகநாதன்...நன்றி...கலைஞர் அவர்களே...நன்றி....
Showing posts with label நாகநாதன். Show all posts
Showing posts with label நாகநாதன். Show all posts
Tuesday, February 12, 2008
Subscribe to:
Posts (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
நேற்று காலைவரை எனக்கு எதுவும் தெரியாது! நான் வலையுலகிற்கு வாடிக்கையாளனுமில்லை! எப்பொழுதாவது வந்துபோவேன்!! எதேச்சையாய் நேற்று நுழைந்ததில்,எல...