நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!!
ட்விட்டரில், பேஸ்புக்கில், ஆர்க்குட்டில், வலைப்பதிவுகளில் எல்லாம், விவாதம் விவாதம் விவாதம். அந்த வீடியோவை முதலில் கண்டுபிடித்த சிலரில் நானும் ஒருவன். உடனே யூடியூபில் இருந்த அந்த சுட்டியை ட்விட்டரில் பகிர்ந்தேன்.
ஆனால் என்ன கொடுமை பாருங்க. நான் கொடுத்த Source யூட்யூப் சுட்டி காணாமல் போக, மீண்டும் எங்கே எங்கே என்று தேட ஆரம்பித்தவர்களில் நானும் இணைந்தேன்..
இப்போது கண்டுபித்தவுடன், முதலில் செய்தவேலை, அந்த கானொளியை தரவிறக்கி, அதனை என்னுடைய சொந்த யூடியூப் அக்கவுண்டில் ஏற்றினேன்..
இப்போது போதும் போதும் என்ற அளவில் பொதுமக்களால் அந்த காணொளி காணப்பட்டது. என்னுடைய சானலை சப்ஸ்க்ரைப் செய்யவும், அந்த காணொளியின் மேல் பின்னூட்டம் எழுதவும் பலர் கிளம்பிவந்தார்கள். மேலும் சில காணொளிகளையும் இதே வகையில் ஏற்ற. ஹிட்டு அமோகம்.
முதலில் ஒரு லட்சம் ஹிட்ஸ், அப்புறம் ரெண்டு லட்சம் ஹிட்ஸ் என்று பத்தே நாட்களில் கொலைவெறியோடு அந்த வீடியோ பார்க்கப்பட்டது. இத்தனைக்கும், அந்த வீடியோ சன் டிவியின் செய்தி ஸ்னிப்பெட்டே. முழு வீடியோவை நக்கீரன் மொத்த குத்தகைக்கு எடுத்து வாடகைக்கு விட்டது தனிக்கதை.
இப்போது என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா ? கூகிள் என்னுடைய வீடியோவை டெலீட் செய்ததோடல்லாமல், காப்பிரைட் மோசடியில் ஈடுபடுவதாக என்னிடம் சொல்கிறது. இப்படி கோருபவர்கள் நித்யானந்த தயானந்த பீடமாம்.
நான் வெளியிட்டது சன் டிவியின் ஒரு வீடியோ. அதில் காப்பிரைட் க்ளைம் செய்யவேண்டும் என்றால் சன் டிவி அல்லவா செய்யவேண்டும் ? அந்த வீடியோ போலி என்றும் அதில் இருப்பது அவர் அல்ல என்று உடான்ஸ் விட்டுக்கொண்டு திரியும் இவ்வேளையில், நீங்களே அதன் காப்பிரைட் க்ளைம் செய்வது ஏன் ? ஒரு வேளை அது நித்யானந்தா தான் என்று நீங்களே ஒத்துக்கொள்கிறீர்களா ? அது என்ன சன் டிவி தயாரிப்பில் லெனின் கருப்பன் இயக்கத்தில் நித்தி - ரஞ்சி நடித்த படமா ? அப்படி இருந்தால் கத்ரீனா போன்ற இளம் நடிகைகளை போட்டு படம் எடுப்பதை விட்டுவிட்டு, தெக்கத்தி பொண்ணு போன்ற சீரியல்களில் நடிக்கும் ரஞ்சியை வைத்து தயாரித்தது ஏன் ?
மேலும் யுவராணி என்ற நடிகையை வைத்தும் ஒரு படம் இயக்குவதாக கிசு கிசு பகுதியில் வருகிறது. இவரும் மார்க்கட்டு இழந்த நடிகையே. எங்களை பார்த்தால் உங்களுக்கு பாவமாக இல்லையா ? உங்களிடம் என்ன காசு பணமா இல்லை ? நல்ல நடிகைகளை தேடுவதில் உங்களுக்கு என்ன தயக்கம் ?
அல்லது மஜா மல்லிகா போன்ற இளம் பஸ்ஸ்டாண்டு நாயகிகளையாவது வைத்து படம் எடுக்கலாமே ? என்னமோ போங்க. எல்லாம் எங்க ஹெட் ரைட்டிங்...!!
கொசுறு:

ரம்பா நல்ல கட்டை என்ற வகையில் மேஜிக் உட் நிறுவன அதிபர் இந்திரன் என்ற தியாகி அவருக்கு கிடைத்தார் என்பது எவ்வளவு பொருத்தம் ? எமது வலைப்பூவின் சார்பில் அவருக்கு வாழ்த்துக்கள்.