Showing posts with label JKR. Show all posts
Showing posts with label JKR. Show all posts

Wednesday, December 24, 2008

வாழ்க வீரத்தளபதி ஜே.கே.ரித்திஷ்...!!!! வ.வா சங்கம் ஒழிக..



ஏன் இப்படி ஒரு பதிவு என்கிறீர்களா ? இது காலத்தின் கட்டாயம்...!!!!

அந்த குழந்தை முகத்தை பாருங்கடே !!! அந்த பரந்த நெஞ்சை பாருங்கடே !!! அந்த ஸ்டைலை பாருங்கடே !!! அந்த வாக்கை பாருங்கடே !!! அந்த டாக்கை கேளுங்கடே !!!!



இன்னுமா வருத்தப்படாத வாலிபர் சங்கம் அது இதுன்னு டைமை வேஸ் பண்ணுவீங்க ? வெறும் காமெடியனுக்கு போய் சங்கம் அது இதுன்னு ?



பாருங்கடா...எங்க தல ஒரு ஹீரோடா...(என்ன தலன்ன அது அசீத்து மட்டும்தானா ? எங்க தல ரஜினி கமலுக்கே சவால் உட்டவருடா...அஜித் ஒரு சுண்டக்கா)...அந்த துப்பாக்கிய புடிச்சிருக்க ஸ்டைலை பாருங்கடே...அமெரிக்க சி.ஐ.ஏக்கிட்ட ப்ராக்டீஸ் எடுத்த ஜேமுசு பாண்டு புடிப்பானா அப்படி துப்பாக்கிய ? ஒரு ஸ்டில்ல காட்டுங்க...எதோ நேரா புடிச்சு சுடுவான்..இப்படி தில்லா துப்பாக்கியை சைடு வாட்டத்துல வெச்சுக்கினு நீக்க முடியுமாடே ?



சின்னி ஜெயந்து ஒரு காமெடியன்...அவனை சரிக்கு சமமா உக்கார வெச்சுருக்கார் பாருடா எங்க தல..என்ன தான் மூஞ்சு க்வாட்டர் அடிச்ச குரங்கு மாதிரி இருந்தாலும் சின்னி ஜெயந்த விட எங்க தல அழகுடா...போட்டோவ பாத்து நீயே தெரிஞ்சுக்கடா..எங்க தல புகழ் பாடுடா...



இந்த படத்த பாருங்கடே !!! என்ன குழப்பமா இருக்கா ? சிம்பு நயந்தாராவுக்கும் எங்க தலைக்கும் என்ன சம்பந்தம்னு ? அட இந்த போட்டோவை எடுத்ததே எங்க சிங்கம் ஜே கே ரித்திஷ்தாண்டா....( சனியன் கூகிள் சர்ச்சு இப்படி ஏன் குழப்புது )



ஆடுங்கடா தலய சுத்தி, இவன் அய்யனாரு பட்டாக்கத்தி !!! கூலிங் க்ளாஸ் எல்லாம் ஆந்திரா ஹீரோஸ் தான் போடுவாங்களாம்...என்ன அந்த ஸ்டைலு அவனுங்களுக்கு எழுதி கொடுத்தாச்சா ? இந்த ஒரே ஸ்டில்லுல எல்லாத்தையும் ஒடைச்சு போட்டுட்டாருடா எங்க தல...



எவண்டா அவன்...என் தலைய பார்த்து கரடின்னு சொன்னது ? ஒரு ஷேவிங்கு ரெண்டாயிரம் செலவு பண்றம்டா...உண்மையான கரடி படம் போட்டிருக்கேன்...பார்த்துக்கோங்க...



கடைசியா எங்க தலையோட கொசுறு படம் இந்தாங்க...எங்க தலையை கிண்டல் செய்யும் நான் ஆதவன், மற்றும் வ.வா சங்கத்து ஆளுக்க எல்லாம் பின்னங்கால் முன்னால் இருக்கவன் பிடறியில் அடிக்க ஓடுங்க..!!! இதுக்கு மேலயும் எங்க தலையை கிண்டல் அடிப்பீங்க ?

சங்கத்துக்கு ஒரு வேண்டுகோள் : சங்கத்தின் சுவீடன் கிளை கொள்கை பரப்பு செயலாளர் பதவியை சத்தம் போடாமல் எனக்கு வழங்கவேண்டும்...கொஞ்சம் அசந்தால் வினையூக்கி அந்த பட்டத்தை பறிக்கும் வாய்ப்பு உண்டு...தாமிரா வேற ரெக்கமண்டு பண்ணியிருகார்..எனக்கு ராப்பை தெரியும்..எனக்கு கார்க்கியை தெரியும்...எதாவது பார்த்து செய்யுங்கடே..

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....