Showing posts with label தமிழக அரசியல். Show all posts
Showing posts with label தமிழக அரசியல். Show all posts

Sunday, October 05, 2008

ஈழத்தமிழர்களுக்காக கிளர்ந்தெழும் தமிழக அரசியல் தலைவர்கள் !!!!

உலகத் தமிழர் தலைவர் டாக்டர் கலைஞர் இந்திய பிரதமருக்கு எழுதியுள்ள சூடான கடித்ததில் இந்திய இலங்கை கூட்டு ரோந்து தேவையில்லை என்று சாடியுள்ளார்...



புரட்சித்தலைவி டாக்டர்.ஜெ.ஜெயலலிதா விடுத்துள்ள சூடான அறிக்கையில் இந்திய அரசு அரியானா மாநிலத்தில் இலங்கை ராணுவத்துக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளித்த விவரம், இந்திய அதிகாரிகள் மூன்று மாதத்துக்கு ஒரு முறை இலங்கை செல்வது, இந்திய ரேடார்கள் இலங்கை ராணுவத்துக்கு தமிழர்களை கொல்ல உபயோகப்படுவது என்று மத்திய அரசை கிழி கிழி என்று கிழித்துள்ளார். மத்திய அரசை கையில் வைத்திருக்கும் தமிழகத்தை சேர்ந்த பத்து மத்திய அமைச்சர்கள் என்ன ஆணி புடுங்கிக்கொண்டுள்ளனர் என்றும் அவர் சாடியுள்ளார்...




டாக்டர் அய்யா திரு ராமதாசு அவர்கள், சமீப காலங்களில் எந்த தமிழக அரசியல் தலைவரும் தெரிவிக்காத சூடான ஆதரவு கருத்துக்களையும் தமிழ் ஈழம் அமையவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் கலைஞரையும் சாடியுள்ளார். இலங்கை ராணுவத்துக்கு ராணுவ உதவிகள் வழங்கும் இந்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். இன்னும் பதினெட்டு நாளில் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றவில்லை என்றால் அதனை எதிர்த்து தமிழ் ஈழத்துக்காக சட்டமன்றத்தில் உண்ணாவிரதம் இருப்போம் என்று தமிழக அரசுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்...



இலங்கை தமிழர்களின் நம்பிக்கைக்கு எப்போதும் பாத்திரமான திரு.வைகோ அவர்கள் இலங்கையில் நடக்கின்ற இனப் படுகொலைக்கு மத்திய அரசு உதவுகிறது என்று சாடியுள்ளார்..ஐ.நா.வின் மனித உரிமைகள் கமிஷனின் தலைவர் லூயிஸ் ஹார்பர் தமிழர் வாழும் பகுதிகளுக்குச் செல்ல இலங்கை அரசு அனுமதி தர மறுத்துவிட்டது. கொழும்பில் ஐ.நா. அலுவலகத்தை திறக்க கடந்த ஓராண்டாக அனுமதி கேட்டும் அனுமதி கிடைக்கவில்லை.

தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து சர்வதேச தொண்டு நிறுவனங்களை இலங்கை அரசு வெளியேற்றியுள்ளது. இந்த நடவடிக்கைகள் இலங்கை அரசு இனப்படுகொலையில் ஈடுபடுகிறது என்பதற்கான சாட்சியங்கள்...

உணவும், மருந்தும் கிடைக்காமல் தமிழர்கள் சாகிறார்கள். இதற்கு இந்திய அரசு துணைபோகிறது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன். மத்திய அரசு உணவும், மருந்தும் அனுப்ப மறுப்பதற்கு முதல்வர் கருணாநிதிதான் காரணம்...

என்று மத்திய அரசையும், தமிழக முதல்வரையும் கடுமையாக சாடியுள்ளார்....




சிறிலங்காவில் உள்ள மகிந்த அரசு தமிழர்களைக் கொல்ல, தடை செய்யப்பட்ட இரசாயன குண்டுகளை வீசி வருகிறது. இவை காற்றில் உள்ள ஆக்சிஜனை உறிஞ்சும் சக்தி கொண்டவை. உணவுப் பஞ்சம் என்று கூறி யாழ்ப்பாணத் தமிழர்களை சிறிலங்கா அரசு பட்டினிபோட்டு வருகிறது. உணவை ஆயுதமாக பயன்படுத்தும் இரக்கமற்ற அரசாக மகிந்த அரசு உள்ளது.

தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியா ஆயுத உதவி செய்வது தமிழர்களுக்கு இழைக்கப்படும் பச்சைத் துரோகமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்காக நாடுதழுவிய போராட்டம் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்....



தேசிய கட்சியான பாரதீய ஜனதா ஈழத்தமிழர்களை ஆதரித்து கருத்து வெளியிடுவது இது முதல் முறையாகும்...பாரதீய ஜனதா ஆட்சியை பிடித்தால் ஈழத்தமிழர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் என்று புதினத்துக்கு அளித்த செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார்...



செந்தழல் ரவி என்ன தெரிவிக்கிறார் என்று பார்க்க கீழே !!!





















தேர்தல் வந்துவிட்டது...

தேர்தல் வந்துவிட்டது...

தேர்தல் வந்துவிட்டது...

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....