Friday, December 12, 2008

டி.வி நடிகைகளுடன் கருத்து கந்தசாமி..



நமது கருத்து கந்தசாமிக்கு டி.வி நாடகங்கள் என்றால் உயிர். அவர் உயிராக பார்க்கும் நாடகங்கள் லிஸ்ட் மிக பெரியது. வலைப்பதிவில் சில சமயங்களில் டி.வி நாடகங்கள் பார்ப்பவர்கள் பேடிகள், ஒன்றுக்கும் உதவாத சோற்றால் அடித்த பிண்டங்கள் என்றெல்லாம் கருத்து சொல்லியிருந்தாலும், கோலங்கள், ஆனந்தம், வைரநெஞ்சம் உட்பட சமீபத்திய தெக்கத்தீ பொண்ணு வரைக்கும் தினமும் பார்ப்பவர்

தினமும் நாடகங்களை பார்க்காவிட்டால் அவருக்கு அன்றைய பொழுதே சாயாது...இவர் நாடகத்தில் இருக்கும் கதைக்காத்தான் பார்க்கிறார் என்று சில பேர் "எங்கே தெக்கத்தி பொண்ணு கதையை சொல்லுங்க பார்ப்போம்" என்றதுக்கு வழமை போல ஆடு திருடியதுபோல இரண்டு முண்டைக்கண்களையும் போட்டு திருதிருவென விழிக்கிறர்...

வேறு எதற்காக பார்க்கிறீர்கள் என்று நோண்டி நோண்டி கேட்டபோது உண்மையை ஒப்புக்கொண்டார். டி.விக்களில் வரும் மார்க்கட்டு இழந்த பழம் பெரும் நடிகைகளை தரிசிப்பதுதான் அவரது முதன்மையான நோக்கம்...

யானைபோல இருக்கும் நளினியை என்ன ரசித்துவிடமுடியும் ? ஒய் விஜயாவிடன் என்னத்தை கண்டீர் என்றெல்லாம் குறுக்கு விசாரனை செய்தபோது ஒரு உண்மை வெளிவந்தது...

அதாவது கருத்து கந்தசாமியின் பள்ளி பருவத்தில் அவரது தந்தையாரிடம் பள்ளியை கட்டடித்துவிட்டு சினிமா பார்த்து மாட்டியுள்ளார்..அவர் அடி பின்னிவிடவே, கந்தசாமி அதன் பிறகு சினிமாவே பார்க்கவில்லை...அந்த சோகத்தை படித்து முடித்து யாரோ புண்ணியவான் போட்ட பிச்சையில் சிங்கப்பூரில் கம்பி கட்டும் வேலை கிடைத்தவுடன், அதை நம்பி சிங்கப்பூர் வந்து, கிட்டத்தட்ட செட்டில் ஆகி, இன்று நல்ல நிலையில் உள்ளார். அதாவது கம்பி கட்டுவதில் இருந்து பிரமோஷன் பெற்று ஆணி புடுங்குகிறார்.

நிற்க...



நேற்று கருத்து கந்தசாமி ஓரே சோக பீலிங்ஸோடு இங்கேயும் அங்கேயும் குட்டி போட்ட பன்றி போல சுற்றிக்கொண்டிருந்தார்...குட்டி போட்ட பூனை என்று சொல்லியிருக்கலாம் தான்...ஆனால் நீண்ட நெடுங்காலமாக ஓரே இடத்தில் அமர்ந்து ஆணி புடுங்குவதால் பன்றியைபோல பெருத்து தொப்பையை தூக்கிக்கொண்டு நடக்கவே கஷ்டப்படுகிறார்...

க.க, என்ன மேட்டர் ? ஏன் ஒரே டென்ஷன் ?

அது ஒன்னுமில்லை...

சொல்லுங்க பரவாயில்ல...என்ன தேவயானி புட்டுக்கிட்டாளா ? இல்லை ரஞ்சிதா ஓடிப்போயிட்டாளா ?

அதெல்லாம் ஒன்னும் இல்லை...

அப்புறம் என்ன ஆச்சு ? ஏன் இந்த கலவரம் ?

என்னை ஒரு டி.வி நடிகை அறைஞ்சுட்டா...

என்னது டிவி நடிகை அடிச்சாளா ? ஏன் ? எங்க பார்த்த ? எப்போ இது நடந்தது ?

நேத்துதான்...நேத்தும் வழக்கம்போல என் பொண்டாட்டி என்னை செட் தோசை வாங்க சென் தோசா வுக்கு அனுப்பினாள்..

அங்கே ஓட்டல்ல ஒய் விஜயாவை பார்த்தேன். ஏதோ சூட்டிங் வந்திருப்பா போல...நிக்க வெச்சு ஒரு போட்டோ எடுக்க முயற்சி பண்ணேன். அவ மாட்டேன்னா. நான் கம்ப்பல் பண்ணேன். திரும்பவும் மாட்டேன்னா. விடாம மறிச்சு நின்னு போட்டோ எடுக்கப்பாத்தேன். பளார்னு அறைஞ்சுட்டு உள்ளே போய்ட்டா.

யோவ் இது என்னய்யா அநியாயமா இருக்கு...ஒரு போட்டோவுக்கு போஸ் குடுக்கமாட்டாளாமா ? அதுவும் டி.வி நடிக...

ஆமா அப்படி எங்க அவசரமா போனாளாம் ? எதுவும் ப்ளைட்டை புடிக்க நேரமாயிருக்கும்னு நெனக்கிறேன்...

கருத்து கந்தசாமியின் முகம் இன்னும் கொஞ்சம் வழக்கத்தை விட கோணலானது..

நான் லேடீஸ் டாய்லெட் வாசல்ல இல்ல போஸ் குடுக்க சொன்னேன்...

ஙே !!!!!!!

******************************************
******************************************

Thursday, December 11, 2008

சிங்கையில் கூட தெருநாய்களா ? ஆச்சர்யம்தான்.



சிங்கப்பூரில் தெரூநாய்களூக்கு உணவளீக்குமொரு வாலண்டீயர்...!!!

தெருவில் நின்றால் நாய் சிங்கப்பூரில் இருந்தால் என்ன ? நாகர்கோயிலில் இருந்தால் என்ன ? தெருநாள் தெருநாய்தான் !!!!!

பீ'னிக்ஸ் பறவைங்கறாங்க...மூஞ்சியப்பாத்தா பீ'னிக்ஸ் பறவை இல்ல, காக்கா கக்கா (எழுத்து வித்தியாசத்தை கவனிக்கவும்) போனமாதிரி இருக்கு...

எதுவுமே தெரியாத அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக்கொள்பவர்களிடம் சாக்கிரதையாக இருக்கவும், கொஞ்சம் அசந்தால் பொண்டாட்டி ரெஸ்யூம் உங்கள் மெயில் பாக்ஸ் வந்துவிடும் வாய்ப்புண்டு...

வந்ததே வந்துட்டீங்க,இந்த பதிவுல மிஸஸ் டவுட் அக்கா என்ன சொல்றாங்கன்னு பாருங்க...!!!!

என்னது ??? கிளிநொச்சியை பிடித்துவிட்டார்களா ??

அதிர்ச்சியான செய்திதான்...

இருந்தாலும் சொல்லித்தானே ஆகவேண்டும் ??

இலங்கை ராணுவம் இப்போது கிளிநொச்சியை பிடித்துவிட்டார்கள்...இன்னும் இரண்டு வாரத்தில் கிளிநொச்சியை பிடித்துவிடுவோம் என்று மூன்று ஆண்டுகளுக்கு முன் பொன்சேகா சொன்னது உங்களுக்கு நினைவிருக்கலாம்...

இப்போது கிளிநொச்சியில் இருந்து பதினேழு பார்வேர்ட் டிபன்ஸ் லைனை திறந்து அப்படியே யாழ்ப்பாணம் வழியாக ராமநாதபுரம், நெல்லை, மதுரையை கைப்பற்றிவிட்டாங்கள்...

அப்படியே முல்லைத்தீவு பக்கம் இருபத்தோரு பார்வேர்ட் டிபன்ஸ் லைனை திறந்து, ஏதோ டிப்பன் பாக்ஸை திறக்கிறமாதிரி, நேராக வந்து, எல்லாத்தையும் பிடித்துவிட்டு, அதுக்கப்புறம் கடல்மார்க்கமாக கிளம்பிவந்து பாண்டிச்சேரியை அடைந்துள்ளார்கள்..

அங்கே டீப் பெனிட்டிரேஷன் யூரின் சாரி யூனிட் பாண்டிச்சேரியில் லாப்போர்த் வீதியில் நாலு கிளேமோர் தாக்குதல் நடத்தி, அங்கே நாற்பது பல்குழல் எறிகணைகளை நிறுவி, அங்கிருந்து வழுதாவூர், திருபுவனை, விழுப்புரம் வரை குண்டுகளை எறிகிறார்கள்..

டாக்டர் ராமதாஸ் வசிக்கும் திண்டிவணத்தில் நான்கு வெளிச்ச குண்டுகளை எறிந்து ஆழ ஊடுருவி தாக்கும் குண்டுகளை தைலாபுரம் தோட்டத்தில் கிபிர் ரக விமானங்கள் மூலம் எறிய நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்...

மதுரையை நோக்கி 57 ஆவது படையணி செல்கிறது. திரு.அழகிரியை ஆயுதங்களை களையுமாறு ஏற்கனவே பதினேழு முறை கோத்தபாய ராஜபக்ச கேட்டும் அவரும் அவருடன் இணைந்து இயங்கும் ஆயுத குழுக்கள் ஆயுதங்களை கீழே போடவில்லை.

அப்படியே புரண்டு படுத்தபோது, பக்கத்தில் வைத்திருந்த மொபைல் உறுத்தியதால் எழுந்துவிட்டேன்...

ச்சே என்ன ஒரு கனவு ??



நேத்து ஆபீஸ் முடிந்து வந்தபோது வெறும் சைக்கிள், இப்போ பனி சைக்கிள். ( டேட்டா கேபிள் இல்லாததால் படம் ட்ரான்ஸ்பர் செய்ய இயலவில்லை, அதனால் அதற்கு ஈக்குவலான நெட் படம்)

Wednesday, December 10, 2008

அநாகரீக கொமண்டு விவகாரம், கருத்து கந்தசாமி நடுநிலைவியாதி

அதிகம் சொல்ல ஏதுமில்ல...முரளி பதிவில் அவை ஏற்கனவே நீக்கப்பட்டுவிட்டாலும் டோண்டு சார் பதிவில் அந்த கொமண்டு தொடந்து இருக்கு...ஏன் அந்த கொமண்டை டோண்டு சார் எல்லோர் பார்வையிலும் படுமாறு தொடந்து விட்டுவைத்திருக்கிறாரோ தெரியவில்லை...

போலி விவகாரம் முடிஞ்சுருச்சு.."எங்களுக்கும் கொம்பேனி நடக்கனுமில்ல" என்று எங்கிருந்தோ புரளிமனோஹர் கத்துகிறான்...!!!

இருந்தாலும் பெயரிலி போட்ட அந்த கொமண்டுக்கு என்னுடைய கண்டனங்களை கன்னாபின்னாவென தெரிவித்துக்கொள்கிறேன்...

சோ, இந்து ராம், சு.சுவாமி வகையறா, தொகையறாக்களை திட்ட தன்னுடைய சொந்த வலைப்பூவை பயன்படுத்துமாறு பெயரிலி அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்...



எனக்கு தெரிந்து ஒரு சிலர் கழுத்து பட்டியில் அலைபேசியை மாட்டிக்கொண்டு திருதிருவென ஆடு திருடியது போல் விழித்துக்கொண்டு நிற்பார்கள்...

அவர்கள் ரொம்ப நல்லவர்கள் என்று நினைத்துக்கொண்டு கிட்டே போகவேண்டாம்...ஒரு வேளை ரயிலில் மயக்க பிஸ்கட் கொடுத்து திருடும் கும்பல் ஆக இருக்கவேண்டும்...

ஆகவே ரயிலில் செல்லும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்...கிட்ட வந்து எதாவது கருத்து சொல்ல ஆரம்பித்தால் முகத்தை திருப்பிக்கொள்ளவும், பிஸ்கட் கொடுத்தாலோ, பழக வந்தாலோ அதற்கு ஒத்துழைக்கவேண்டாம்...

சமீபகாலமாக இன்றைக்கு இஸ்லாம், நாளைக்கு இந்து மதம், அடுத்த நாள் புத்த மதம், அப்பாலிக்கா கிறிஸ்தவ மதம் என்று நாளைக்கு ஒரு மதம், பொழுதுக்கு ஒரு சாதி என்று சாடி பதிவுகள் இட்டு நடுநிலைத்தன்மையை நிரூபிக்கவேண்டிய நிலையில் சில கருத்து கந்தசாமிகள் இருக்கிறார்கள்...

ஒரு வேளை அவர்கள் "மெய்யாலுமே" நடுநிலைவியாதிகளாக இருக்கலாம்...வெள்ளிக்கிழமை மட்டும் புள்ளையார் கோயிலுக்கு போய் பிரசாதம் வாங்கி துன்னலாம். பட்டையை அடித்துக்கொண்டும் பருப்பு சாதம் சாப்பிட்டுக்கொண்டும் !!!

சரி வந்த வேலை முடிந்தது !!!

Tuesday, December 09, 2008

ஒரு சுவீடிஷ் பெண்ணும் நானும்...

நேற்று அலுவலகம் முடிந்து பேருந்து நிலையத்துக்கு 199 ஆம் நம்பர் பஸ்ஸை பிடிக்க போனால் அந்த பஸ்ஸில் "ஹெல்லேஸ்கார்கடன்" என்பதுக்கு பதில் வேற என்னமோ எழுதி இருந்தது...

என்னடா இது, நம்ம பஸ்ஸு தானா, இல்லை வேற எங்கியாது கொண்டுபோய் எறக்கி விட்டுடப்போறானா என்று மண்டை காய்ந்தது...

பேருந்தில் ஏற்கனவே ஏறி அமர்ந்திருந்த ஒரு பெண்ணை அழைத்தேன்...பள்ளிக்கோ கல்லூரிக்கோ சென்று வரும் பெண் போல...

அந்தம்மாவுக்கோ ஸ்வீடிஷ் தவிர ஏதும் தெரியவில்லை...

நான் கேட்டது, ஈஸ் திஸ் பஸ் கோயிங் டு ஹெல்லேஸ்கார்கடன் ?

அவள் சொன்னது, ஆஷு ஹ்ஜீ ஜ்ஜு க்கா க்கூ ஹே அஷி ஷி ஹ்ஷி ஷ்...

நான் கேட்டது, கேன் யூ ஸ்பீக் இங்கிலீஷ் ?

அவள் சொன்னது, ஷி ஷி ஷு ஷு ஹா ஹெல்லோ ப்ளூண்டா டோர்க் 99 ?

நான் வேற வழியில்லாம சொன்னது, ங்கொக்கமக்கா, இந்த வண்டி நான் போற எடத்துக்கு போவுமா போவாதா ?

அவள் திரு திரு வென விழித்தபடி, ஹி சு ஷெ ஹே ?

அப்புறம் வேற வழியில்லாம அந்த வண்டியிலேயே ஏறி, போற பக்கம் போவட்டும்யா என்று விட்டதில் வீட்டு முன்னால் சரியாக வண்டியை நிறுத்தினார் டிரைவர் பெண்மணி. கதவும் திறந்தது. இறங்கி அந்த லேடீஸ்க்கு ஒரு டாட்டா காட்டியபடி வீட்டுப்பக்கம் நடையை கட்டினேன்...

>> வினையூக்கி மட்டும்தான் சுவீடன்ல இருந்து கதை எழுதுவாரா ? நானும் ஜாயினிங் த க்ளப்.

>> சுவீடனில் என்னை தொடர்புகொண்டு மொக்கை போட விரும்புபவர்கள் அழைக்கவேண்டிய தொலை பேசி இலக்கம் +46 700598845 அல்லது 0700598845.

>> சுவீடனில் எங்கே இட்டிலி கிடைக்கும் என்று சொன்னீர்கள் என்றால் வசதியாயிருக்கும்...

>> சுவீடனில் ஆட்டோ இல்லாததால் அனுப்ப மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் ஏரியா உட்பட சொல்லிவிட்டேன்...

Sunday, December 07, 2008

அய்ரோப்பாவில் வசிப்பவர்களுக்கு கெட்ட நேரம்

அய்ரோப்பாவில்..அதாவது சுவீடன், நார்வே, பின்லேண்ட், பிரான்ஸ், யேர்மனி போன்ற நாடுகளில் செறிவாக வாழும் தமிழர்களுக்கு கெட்டகாலம்...

சனி வந்து உங்கள் வீட்டு வாசலை தட்டுகிறது...

நேரடியாக விஷயத்தை சொல்வது என்றால்...

இணைய ரவுடி, கம்புயூட்டர் போலீசு, அழுகாச்சி ஆறுமுகம், எதிர் கருத்து ஏகாம்பரம், தான் பின்னவீனத்துவவாதி என்று தனக்கே தெரியாத (நன்றி : லக்கி) பின்னவீனத்துவவாதி, உருப்புடாத கோயில்ல உண்ட சோறு வாங்கி திண்ற மடப்பய மருமவன் ( அட எவ்ளோ பெரிய செண்டண்ஸ்) செந்தழல் ரவி அங்கே வருகிறேன்...

சுவீடனில் விணையூக்கி, லண்டனில் சின்னக்குட்டி, பிரான்ஸில் யோகன் பாரீஸ், அப்புறம் மலைநாடன், திரு, யேர்மணியில எங்க தமிழ்நாடு டாக் தந்த தங்கம் ( தமிழ் போக்கிரி நான் அல்ல), அப்புறம் ஏராளமான பெண் ரசிகைகள் என பலரை சந்திக்க ஆசை...

பிரான்ஸில் தமிழச்சியையும் சந்திக்க அப்பாயிண்மெண்ட் கேட்கவேண்டும்...!!! (சோபா சக்தியின் கிழிந்த டவுசரை தைக்க ஒரு ஊசியும் கொண்டு போகிறேன் ஹி ஹி)

கருத்து கந்தசாமி ரசிகர்கள் எந்த திசையில் இருக்கிறீர்கள் என்று முன் கூட்டியே சொல்லிவிட்டால் அந்த பக்கம் என் மூச்சு காற்று படுவதை தவிர்க்கிறேன்...

என்னுடைய மொபைல் போன் எண் இதே பதிவில் அப்டேட் செய்கிறேன்...

தொலைபேசி மொக்கையர்கள் பிங் செய்யலாம்...

மற்றபடி உங்கள் தொலைபேசி எண் தரும் விருப்பம் இருந்தால் இந்த பதிவில் பின்னூட்டமாக இடவும்...

இந்த பதிவில் மட்டுறுத்தல் உள்ளது, அதனால் ரகசியம் காக்கப்படும்...

பை பை சீ யூ !!!

Wednesday, December 03, 2008

வலம்புரி சங்கு வேண்டும்...

எனக்கு மிக நெருக்கமான ஒருவர் தனக்கு ஒரு வலம்புரி சங்கு (பூசைப்பொருள்) வேண்டும் என்று கேட்டுவிட்டார்...

என்னை நோக்கி பூரிக்கட்டையை எறியும் பவர் உள்ளவர் என்பதால் மட்டும் அல்ல, அவருடைய விருப்பங்களை நிறைவேற்றுதல் என்னுடைய கடமை என்பதாலும், இந்த வலம்புரி சங்கை பெற்று தரவேண்டிய நிர்பந்தம் உள்ளது...

வலம்புரி சங்கை பற்றி நான் அறிந்தவரை அது ஒரு ம்யூட்டண்ட் ( ட்ரிப்பிள் எக்ஸ் படத்தில் வருமே இந்த வார்த்தை), ஒரு பிழற்சி மூலமாக உருவாகும் ஒரு உயிரினம் என்று அறிகிறேன்...

ஆறு விரல் மாதிரி, அபூர்வமாக ஏற்படக்கூடிய பிழற்சி !!!

உங்களில் யாருக்காவது தெரியுமா ? இந்த வலம்புரி சங்கை எங்கே கொள்வனவு செய்வது அல்லது பெறுவது என்று ?

உதவி செய்யவும்...!!!!

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....