Friday, June 19, 2009

உரையாடல் அமைப்புக்கு கதை அனுப்பியவர்களுக்கு - என் விமர்சனங்கள்...



அறிவியல் கதையில் கொஞ்சம் ஆங்கில வார்த்தைகள் கலந்திருந்தால் நேட்டிவிட்டி டச் கிடைத்திருக்கும்...சைன்ஸ் பிக்ஷனிலும் பணம், கடன், கூகை, பகிர்தல் என்று எளிமைப்படுத்தியது நன்று...கதையின் முடிவு யாரும் எதிர்பாராதது...

என்னுடைய மதிப்பெண் 60 / 100



கதையின் கேரக்டருக்கு எழிலரசி என்ற அழகு பெயர்...நன்று....கதை முழுதும் நல்ல தமிழ்...கொஞ்சம் அமெச்சூரான நடை...விறுவிறுப்பு குறைவு கதையில்...முடிவு அவ்வளவாக கவரவில்லை...

என்னுடைய மதிப்பெண் 35 / 100


நசரேயனுக்கே உரிய நகைச்சுவையான மற்றும் அமெச்சூரான நடை...கொஞ்சம் எழுத்துப்பிழைகள்...சந்திப்பிழைகள்...கதையின் மேட்டர் சூப்பர். சொன்ன விதத்தில் கொஞ்சம் வளவளா. உண்மைக்கதையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை...

என்னுடைய மதிப்பெண் 40 / 100


கல்கியை கிண்டல் செய்ய ஆரம்பிக்கும் முதல் வரியிலேயே புன்னகையை வரவைக்கிறார் மணிப்பயல்...கதையின் நடுவில் வரும் ஒரு ட்விஸ்ட் கண்டிப்பாக சிரிக்கவைக்கும்...அப்புறம் இன்னோரு ட்விஸ்ட் இன்னோரு புன்னகை...கடைசியில் இன்னொரு சூப்பர் ட்விஸ்ட் என்று சுவையான கதை...எதிர்பார்ப்பு இல்லாமல் படித்தால் நிச்சயம் ரசிக்கலாம்...

என்னுடைய மதிப்பெண் 65 / 100



எளிமையான நகைச்சுவை நடையில் அதிரடியாக ஆரம்பித்துவிடுகிறது கதை...நாலு பாராவுக்கு ஒரு புன்னகை நிச்சயம்...கதையில் வரும் கேரக்டர்களின் பெயர்களுக்காகவே ரூம் போட்டு யோசித்திருப்பாரோ என்று தோன்றுகிறது...மெயின் கேரக்டர் மணிப்பயலின் தேர்தல் உரை வயிற்று வலியை வரவைக்கும்...சிரிச்சுதாங்க...கடைசி கட்ட க்ளிமாக்ஸும் கண்டிப்பாக சிரிப்பை வரவழைக்கும்..கதையில் முடிவு என்று ஒன்றும் இல்லை...

என்னுடைய மதிப்பெண் 65 / 100


கதையை படித்தவுடன் நீங்கள் எப்போதோ தின்ற நமுத்த முறுக்கு உங்கள் நியாபகத்துக்கு கண்டிப்பாக வரும்...வாத்தியாருக்கு குண்டுசவுரி சொன்ன பதில்கள் சூப்பர்...அடிக்கடி நமக்கு வெடிச்சிரிப்பு வருவதற்கான வானிலை தெரிகிறது கதையில்..முடிவு என்று பெரிதாக எதுவும் இல்லை...ஆனால் சிரிப்புக்கு க்யாரண்டி...

என்னுடைய மதிப்பெண் 68 / 100



கலவையான எண்ணங்களை கதையின் ஆரம்பத்தில் எழுப்புகிறார்...சொந்த அனுபவத்தை எழுத்தில் வடித்தது போல் இருக்கிறது...ஆங்காங்கே இருக்கும் உவமைகள் புதியவை...மகன் கேட்கும் கேள்வியாக கதையில் வருவது நெஞ்சை தொடுகிறது...கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கவனித்திருக்கலாம்...கொஞ்சம் எடிட் செய்தால் போதும்...தரமான கதை ஒன்று ரெடி...இந்தா புடி..(பரிசு)

என்னுடைய மதிப்பெண் 70 / 100





முதலில் பதிவில் வரும் படம், அதில் வரும் குழந்தையின் முகம், அது சொல்லும் செய்தி (அதில் நூறு சிறுகதைகள் உண்டு), பெண்ணின் சிரிப்பு...சூப்பர்...நெஞ்சார பாராட்டவேண்டும்..

கதையின் முடிவு நச். நீட்டி முழக்காமல் சிக்கென்ற ஒரு பக்க சிறுகதை..

என்னுடைய மதிப்பெண் 65 / 100



எளிமையான வார்த்தைகளில் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அணுகும் கதை. அன்றாட வாழ்வியல் சார்ந்த நிகழ்வுகளை அற்புதமான நடையில் சொல்கிறது கதை...குறையொன்றும் இல்லை க்ருஷ்ணா...பரிசு கிடைக்கும் என்பதை தனியாக சொல்லவும் வேண்டுமா என்ன ?

என்னுடைய மதிப்பெண் 70 / 100


கொஞ்சம் குழப்பமான ஆரம்பம்...நல்ல நடை...கதையில் வரும் சம்பவங்களை படிக்கும்போது நாமே நேரில் பார்ப்பதுபோன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை...

கடைசி பஞ்ச் வரிகளை படித்தவுடன் ஏதோ இனம்புரியாத சோகம் நெஞ்சில் வந்து அப்பிக்கொள்வதை தவிர்க்க இயலவில்லை...

வெற்றிபெற வாழ்த்துக்கள் கூட சொல்லத்தோன்ற இயலவில்லை...உண்மைக்கதையாமே ?

என்னுடைய மதிப்பெண் 72 / 100



எளிமையான கதை...சாதாரணமான வார்த்தை பிரயோகங்கள்...ஆனால் அழுத்தமான கதை...தாய்க்கும் பிள்ளைக்கும் உரையாடல் நடைபெறும் வசனங்கள் லைவ்லியாக உள்ளது...பெரிய தீம் இல்லையென்றாலும் சொல்லப்பட்ட விதத்தில் ஸ்கோர் செய்கிறது..

என்னுடைய மதிப்பெண் 55 / 100



புதிய உத்தி...தமிழுக்கு புதிது...ஆனால் புரிந்துகொண்டு ரசிக்கப்படுமா என்பது கேள்விக்குறி...கொஞ்சம் பின்னவீனத்துவம், கொஞ்சம் சர்ரியலிஸம்...பாரதி வரிகள்...ஆங்கில கலப்பு...

பிராக்கெட் பிராக்கெட்டாக போட்டு விளக்கவேண்டாம் என்று தோன்றியது...ரசிகர்களின் கற்பனைத்திறனை, அவர்கள் பார்வை விரிவடைவதை அது தடுத்துவிடுகிறது...

மற்றபடி கதை வாசிக்க நன்றாகத்தானிருக்கிறது...கொஞ்சம் குழப்பமான முடிவும்..

என்னுடைய மதிப்பெண் 60 / 100



எளிமையான நடை. இயல்பான கதை. கதை எதை நோக்கி போகிறது என்பது கொஞ்சம் யூகிக்க முடியும்படி இருந்தாலும், முடிவு நன்று....கொஞ்சம் அமெச்சூர்த்தனத்தை தவிர்க்கவேண்டும்...

லாஸ்ட் பஞ்ச் கூட நல்லாத்தான் இருந்தது...!!!

என்னுடைய மதிப்பெண் 50 / 100




எழுத்துப்பிழைகளை தவிர்க்கவேண்டும். கதையை முடித்தவுடன் ரிவ்யூ அவசியம்..ஆங்கில வார்த்தைகளை ஆங்கிலத்திலேயே உபயோகப்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்...இன்னும் கொஞ்சம் நடையை செதுக்கியிருந்திருக்கலாம்..

ஆழமான சமூக பிரச்சினைதான், இருந்தாலும் எளிமையகவே முடிந்துவிட்டது...அவை எவையையும் அலசாமல்...கொஞ்சம் நான் கடவுள் சாயல்..முடிவு நன்று.

என்னுடைய மதிப்பெண் 50 / 100


முதல் வரியிலேயே எழுத்துபிழை 'பளீர்' என்று அடிக்கிறது..கடைசி வரியிலும் அதையே ஸ்வாசிக்க வேண்டியுள்ளது...

சின்ன சம்பவம், அதை டேக்கிள் செய்த விதம் கதையாகியுள்ளது...கொஞ்சம் சுவாரஸ்யமற்ற நடை. இருந்தாலும் ஒரு முறை கண்டிப்பாக படிக்கலாம்..

என்னுடைய மதிப்பெண் 45 / 100



எளிமையான அழகான நடை. அதற்காகவே எழுத்துப்பிழைகளை மன்னித்துவிடலாம். லாஜிக் பார்க்காமல் படித்தால் ரசிக்கலாம்..

கதையின் முடிவு எதிர்பாராதது, இரண்டொரு முறை படித்தால் புரிந்துவிடும்...

என்னுடைய மதிப்பெண் 60 / 100




அசோகமித்திரன் டைப் பார்ப்பன பாஷைக்கதை. கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் கதையில் எதோ சொல்ல வருகிறார்கள் என்று மட்டும் தெரிகிறது..

இயல்பாக அங்கே இங்கே பார்க்கக்கூடிய மனிதர்களை வைத்து பின்னப்பட்டது. சொல்வதற்கு பெரிதாக எதுவுமில்லை என்றாலும், கதையின் உள்ளடக்கத்தை வைத்து ஒரு விவாதத்துக்கு இட்டுச்செல்லக்கூடிய அளவுக்கு விஷயம் உண்டு..

என்னுடைய மதிப்பெண் 50 / 100


அற்புதமான நடை. எழுத்தாளரின் ஆழ்ந்த வாசிப்பனுபவம் ஒரு அழகியலோடு வெளிப்படுகிறது..ஆங்காங்கே புன்முறுவலோடு இந்த கதையோடு நீங்கள் பயணிக்கலாம்...

'பசங்க' படத்துக்கு நான் விமர்சனம் எழுவும் எழுதவில்லை...அதற்கு காரணம் அது விமர்சனத்தை தவிர வேறு விதமான சிந்தனையை கிளப்பியது...அதே போல இந்த கதையும்..வாசியுங்க...அனுபவிங்க..

இறுதியில் வரும் கவிதையின் முரண் அழகியல் அற்புதமானது...மீள் வாசிப்பு செய்ய தூண்டும் கதை இது...

என்னுடைய மதிப்பெண் 80 / 100


இதுபோன்ற கேவலமான கதைகளை எல்லாம் எப்படி போட்டிக்கு எடுத்துக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை...

மட்டரகமான வார்த்தைப்பிரயோகம்...விளிம்புநிலை பற்றி எழுதும்போது 'ங்கோத்தா' ' தெவிடியா' என்று எழுதினால் அது கதையோடு ஒன்றி வரும்..

ஆனால் தேவை இல்லாமல் இணைக்கப்பட்ட புணர்ச்சி சம்பந்தமான வார்த்தைப்பிரயோகங்கள் அருவருப்பை தருகிறது...

எழுதியவனை பிஞ்ச செருப்பால அடிக்கலாம் என்று தோன்றுகிறது...

என்னுடைய மதிப்பெண் -200 / 100 (மைனஸ் எரநூரு)


சாதீயம் குறித்த ஒரு ஸ்னாப்ஷாட் கதை. ஈகிள்ஸ் ஐ வியூ என்று கூட சொல்லலாம்...

ஏற்கனவே படித்திருந்தாலும் மீள் வாசிப்பு செய்ய தூண்டிய கதை...இன்னும் கொஞ்சம் போல உற்சாக நடை இருந்திருக்கலாம்...

முடிவு கூட சிறப்பாகத்தான் இருக்கிறது...ஒரு நல்ல கதைக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத ஒன்று...

என்னுடைய மதிப்பெண் 60 / 100

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒவ்வொருவரும் ஒரு படைப்பை உருவாக்க உழைப்பை சிந்துகிறார்கள்...அதை எளிமையாக விமர்சனம் செய்திருக்கிறேன்..ஒவ்வொருவரின் படைப்பும் அவர்களை பொறுத்தவரை சிறப்பானதே...இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வை மட்டுமே...!!!

மற்ற கதைகளை நேரம் கிடைக்கும்போது விமர்சிப்பேன்...!!!! உங்கள் ஓட்டுகள், ப்ளஸ் கருத்துக்களை சொல்லிவிட்டு போங்க...!!!

Thursday, June 18, 2009

டேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்


ஜூன் 18, வியாழன் அன்று பிற்பகல் 2.00-4.00 இந்திய நேரத்தில் தமிழ்வெளி தளத்தின் உரையாடியில்(chat) டேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடுகிறேன்... டேட்டா எண்ட்ரி தொழில் மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றிய உங்கள் சந்தேகங்கள், விபரங்களை என்னிடம் கேட்கலாம்...

http://news.tamilveli.com/2009/06/blog-post.html

Wednesday, June 17, 2009

டேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்


ஜூன் 18, வியாழன் அன்று பிற்பகல் 2.00-4.00 இந்திய நேரத்தில் தமிழ்வெளி தளத்தின் உரையாடியில்(chat) டேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடுகிறார்... டேட்டா எண்ட்ரி தொழில் மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றிய உங்கள் சந்தேகங்கள், விபரங்களை என்னிடம் கேட்கலாம்...

http://news.tamilveli.com/2009/06/blog-post.html

Tuesday, May 05, 2009

கானா பிரபாவின் கம்போடிய உலாத்தல் புத்தகமாக



கானா பிரபா ஒரு புதிய கம்போடியாவை எங்களுக்குக் காட்டியிருக்கிறார். பல சுவையான தகவல்கள். சில தகவல்கள் எமது இலங்கைக்கேயுரிய குணங்குறிகளுடன் காணப்படுகின்றன. காட்சிகளை எமது கற்பனைக்கு மட்டும் விட்டுவிடாமல் அழகிய வர்ணப்படங்களுடன் அவற்றைத் காட்சிப்படுத்தியிருக்கிறார். பிரபாவின் எழுத்துகளில் ஒரு எள்ளல் சுவையிருக்கும். அதையும் ஆங்காங்கே தூவி விட்டிருக்கிறார். நீயும் போய்ப் பார் இந்த இடங்களை எனச் சொல்லாமல் சொல்லும் வர்ணனைகள் அவை.
-எஸ். எழில்வேந்தன்

இது முகவுரைக்கு எழில்வேந்தன் சொல்வது மட்டுமல்ல. என்னுடைய மனதிலும் இதுதான்...

முதல் முதலில் உலாத்தல் பதிவில் படித்த இந்த வரிகள் இன்னும் கூட மனதை விட்டு அகலவில்லை..

"எந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு" என்று என் அம்மா ஊரில் இருக்கும் போது என்னைப் பார்த்துச் சொன்னது போல, ஒரு இடத்தில பொறுமையாக இருக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. என்னைப்பொறுத்தவரை படிப்போ, வேலையோ, வாசிப்போ, இசையோ, அல்லது நான் படைக்கும் வானொலி நிகழ்ச்சிகளோ, அடிக்கடி மாறிக்கொண்டேயிருக்கும்.அதுபோலவே அடிக்கடி புதுசு புதுசாக இடங்களைப் பார்ப்பதும், பார்ப்பதோடு மட்டும் நின்றுவிடாது அந்த இடங்களைப் பற்றிய பதிவுகளை என் நாட்குறிப்பில் எழுதுவது கூட எனக்கு ஆனந்தம் தரும் விடயங்கள்.

கானாவின் பதிவுகளில் அவரையும் அறியாமல் வந்து ஒட்டிக்கொள்ளும் ப்ரொபஷனலிஸம் என்னை எப்போதும் கவரும்..கண்டிப்பாக இவரது வலைப்பதிவுகள் புத்தகமாக வரும் ஒரு நாள் என்று முன்பே நினைத்தேன்...இப்ப பாருங்க...கம்போடிய உலாத்தல் புத்தகமாக...

படங்கள் எல்லாம் அவரே எடுத்தது, அதுவும் பின் அட்டையில் இருக்கும் படம் எக்ஸலண்ட்...

ஏன் சார் சும்மா நாம பேசிக்கிட்டே இருக்கனும் ? ஓன்லைனில் வாங்க இங்க அழுத்தி அமுக்கவும்..., அடுத்த புக் பேர் போட்டால் அங்கே கானாவின் புத்தகத்தை காணாமல் வராதீர்...!!!

டேட்டா எண்ட்ரி செய்ய செய்ய விருப்பமா ?

டேட்டா எண்ட்ரி செய்ய செய்ய விருப்பமா ?

என்னிடம் 5 பேர் செய்யக்கூடிய அளவில் டேட்டா எண்ட்ரி ப்ராஜக்ட் உள்ளது. ஏற்கனவே டேட்டா எண்ட்ரி துறையில் இருப்பவர்கள் அல்லது டேட்டா எண்ட்ரி செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும்...

- ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை
- மிக எளிமையான பணி.
- குறைந்தபட்ச ஆங்கில அறிவு தேவை ( கண்ணால் பார்த்து டைப் செய்யவேண்டும்)
- கணிணி மற்றும் இணைய இணைப்பு வேண்டும்
- தனி நபர்களும் தொடர்புகொள்ளலாம்.
- வாரம் ஒரு முறை பண பட்டுவாடா செய்யப்படும்
- ஆண்டு முழுவதும் பணி
- தினமும் செய்த பணியை மின்னஞ்சல் அனுப்பவேண்டும்.

தொடர்புகொள்ளவேண்டிய முகவரி ravi.antone@gmail.com

பணியை நாளை தொடங்கவேண்டும், அதனால் விரைந்து தொடர்புகொள்ளவும்.

Friday, May 01, 2009

மயிலாடுதுறையை துபாயாக மாற்றிய மணிசங்கர அய்யர்




கடந்த தேர்தலில் மயிலாடுதுறையை துபாய் ஆக மாற்றுவேன் என்ற வாக்குறுதியோடு ஓட்டு வாங்கி, பெட்ரோலியத்துறை அமைச்சராக கடைசிவரை இருந்து, கடைசியில் பஞ்சாயத்து ராஜ் மற்றும் வடகிழக்கு மாநில அபிவிருத்தி துறை அமைச்சராக இருந்து ரிட்டையர் ஆகி, இப்போது மீண்டும் வாக்கு கேட்டு வந்துள்ளார் மணிசங்கர அய்யர்...

மயிலாடுதுறை துபாய் ஆக மாறிவிட்டதா ? எங்கே தோண்டினாலும் பெட்ரோல் வருகிறதா ? அல்லது துபாயில் விற்கும் விலைக்கே பெட்ரோல் விற்கிறதா ?

ஷெல் பெட்ரோல் நிறுவனம் எடுத்த ரகசிய சர்வே முடிவு கசிந்தது. இந்தியாவில் விற்பனையாகும் பெரும்பாலான பெட்ரோலில் கலப்படம் செய்யப்படுகிறது என்பது தான்...

நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள், நீங்கள் வாகனம் வைத்திருப்பவர் என்றால் தெரியும். ஒரு பெட்ரோல் பங்கில் போட்டால் 60 கி.மீ தரும் வாகனம், இன்னொரு பெட்ரோல் பங்கில் போட்டால் 50 தரும். ஷெல் பங்கில் போட்டால் 70 கி.மீ தரும். ஆனால் ஷெல்லில் பெட்ரோல் விலை அதிகம்.

ஒவ்வொரு பெட்ரோல் பங்கு உரிமையாளரும் விரைவில் கோடீஸ்வரர் ஆகிறார்கள். அல்லது கோடீஸ்வர்கள் மட்டுமே பெட்ரோல் பங்கு உரிமையாளர்களாக இருக்கிறார்கள். இராணுவத்தில் இறந்தவர்களின் மனைவிக்கு லைசென்ஸ் என்பார்கள். அதை இப்படி கொடுத்து அப்படி பணம் கொடுத்து பிடுங்கிவிடுவார்கள்.

எத்தனை எத்தனை மோசடிகளடா !!!

கடைசியாக, மயிலாடுதுறை துபாய் ஆக மாறிவிட்டிருந்தால் - இந்த ஐந்து ஆண்டுகளில், துபாயில் வசிக்கும் உடன்பிறப்புகளும் கதர் சட்டைகளும் இங்கேயே வந்து குழாய் அடைத்து ஆணி பிடுங்கவேண்டியது தானே ? ஏன் இன்னும் துபாயிலேயே இருக்கிறார்கள் ?

அடுத்து பஞ்சாயத்து ராஜ் மேட்டர். எத்தனை பஞ்சாயத்துக்களுக்கு மத்திய அரசின் நேரடி உதவி பணம் வந்துள்ளது தமிழகத்தில் ? ஆனால் காங்கிரஸ் அரசாளும் ஆந்திராவில் ? டெல்லியில் ? அய்யா சொல்லுங்கப்பா...தெரியாமத்தான் கேக்குறேன்...

அடுத்து வடகிழக்கு மாநிலங்கள்...

வடகிழக்கு மாநில அபிவிருத்தி துறை அமைச்சராம். அங்கே ஒரு இளம்பெண் கடந்த ஐந்து ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கிறாராமே ? குழாய் மூலம் வலுக்கட்டாயமாக உணவு செலுத்தப்படுகிறதாமே ? அது இவருக்கு தெரியுமா ?

அங்கே நிற்கும் ராணுவத்தை வெளியேற சொல்லி இளம் பெண்கள் நிர்வாணமாக போராட்டம் நடத்தினார்களே ? அது இவருக்கு தெரியுமா ?

நாகா இன பழங்குடியினரோடு நடந்த பேச்சுவார்த்தை வெற்றியா ? அதை பற்றி எந்த தகவலாவது இவருக்கு தெரியுமா ? ஏன் அதுபற்றி மீடியாக்களில் மூச்சு விடுவதில்லை ?

நாடு சுகந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலை வசதி, இருப்பிட வசதியின்றி வாழும் பெரும்பான்மை வடகிழக்கு மாநில மக்களுக்கு என்றுதான் விடிவு ?

நாடு சுகந்திரம் அடைந்து பெரும்பாலான ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவை அணுசக்தி ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவிடம் அடகு வைத்தது தான் காங்கிரஸ் கட்சி கடைசீ..சீ..சீ..யாக செய்த சாதனை..

தானே எந்த முடிவும் எடுக்க முடியாமல் பத்து ஜன்பத் இல்லத்தை நோக்கியே காலத்தை கழித்துவிட்ட கொஞ்சம் கூட த்ராணியே இல்லாத பிரதமர்...

பிரதமரும் ப.சிதம்பரமும் நாட்டின் இணையில்லா பொருளாதார நிபுணர்களாம். இரண்டு லட்சம் விவசாயிகளை மட்டும் தான் தற்கொலை செய்துகொள்ளவிட்டோம், மற்றவர்களை காப்பாற்றிவிட்டோம் என்று பெருமையாக சொல்லிக்கொள்ளலாம்..

இவர்களின் விவசாய கடன் உதவி திட்டத்தால் பயன் அடைந்தது சிறு, குறு விவசாயிகள் அல்ல..பெரு முதலாளிகளே...என்னுடைய சொந்த ஊரில் ஐம்பது கோடி ரூபாய் சொத்து உடைய ஒரு விவசாயிக்கு மூன்று லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பார்த்துக்கொள்ளுங்கள் இந்த கடன் தள்ளுபடியின் லட்சணத்தை ?

கடைசியாக தொடங்கிய இடத்துக்கு வருகிறேன், ஒருவர் சிறப்பாக செயல்படவில்லை என்றால் தான் அந்த பொறுப்பில் இருந்து அவரை மாற்றுவோம் ?

ஏன் கடைசி நேரத்தில் இவரது பெட்ரோலிய துறை பிடுங்கப்பட்டு முரளி தியோரா அந்த இடத்துக்கு வந்தார் ?

ஈழத்துக்கு, ஈழ தமிழர்களை அழிக்க ஆயுதம் கொடுத்த காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டுபோட தமிழர்கள் யாரும் தயாரில்லை என்பது வெள்ளிடைமலை. ஆனால் ஈழம் மட்டுமல்ல, இந்த ஐ.மு கூட்டணி அரசு எல்லா விதங்களிலும் தோல்வி அடைந்த ஒரு அரசு.

நாலு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து, உண்ணாவிரத நிறைவு நாள் அன்று, இனி காங்கிரஸ் கட்சியோடு எந்த காலத்திலும் கூட்டணி என்பதே இல்லை என்று முழங்கிய (??) திருமா, அதே காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்து ஓட்டு கேட்டு நிற்கிறார்.

மணிசங்கர் அய்யர் மட்டுமல்ல, ப.சிதம்பரம், இளங்கோவன், தங்கபாலு மற்றும் தி.மு.க கூட்டணியில் உள்ள அனைவரும் தோற்கவேண்டும்.

கை சின்னத்துக்கு ஓட்டு கேட்டு வருபவர்களின் மூஞ்சில் பீச்சாங்கையை வைக்கவேண்டும்..

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....