Wednesday, May 31, 2006

குருவி சுடுவது எப்படி ? வேட்டைதான்...



அட படத்தில இருப்பது நான்தான்...சும்மா பில்டப்புக்காக எடுத்தத்து...இதன் பெயர் நாட்டு துப்பாக்கி ( Mussle loading Gun). நம்ம ஊர்ல ஜெர்மன் நாடோடிகள் (அட நரிக்குறவர்கள் தான் - எங்க அய்யாவோட கண்டுபிடிப்பு இது) வைத்திருக்கும் ரகம்....

லோடு செய்யவேண்டும் என்றால், முதலில் கொஞ்சம் கருப்பு மருந்து ( கந்தகம் + அடுப்பு கரி வைத்து, தண்ணீர் சேர்த்து மைய அரைக்கப்பட்டது - பிறகு காயவைக்க வேண்டும்), போடவேண்டும்...பிறகு சிறிய தேங்காய்பஞ்சு வைத்து கிடிக்க வேண்டும்..அதனை கிடிக்க சிறிய கம்பி ( ஸ்லாக் கம்பி என்று அழைக்கப்படும்) துப்பாக்கியிலேயே அட்டச்மென்ட் ஆக இருக்கும்..

பிறகு, ரவை சிறிதளவு போட்டு சிறிய தேங்காய்பஞ்சு வைத்து கிடிக்க வேண்டும்...உப்புமா செய்ய பயன்படுத்தும் ரவை இல்லைங்க்க..பால்ரஸ்...சிறிய குண்டுகள்..சில ஆண்டுகளுக்கு முன்பு ஈயம் பயன்படுத்தப்பட்டது...ஈயத்தினை காய்ச்சி தண்ணீரில் ஊற்றினால் சிறிய ஈய குண்டுகள் கிடைக்கும்..இப்போது, சைக்கிள் மொத்த விற்ப்பனை கடைகளில் 100 கிராம் 200 கிராம் என்று வாங்கலாம்...அதாவது DEFECTIVE பால்ரஸ்..

இப்போது துப்பாக்கியை தரையில் நன்றாக தட்டி, மருந்து குதிரை பகுதியில் உள்ள பாயிண்டுக்கு வருகிறதா என்று பார்க்க வேண்டும்...அதாவது குதிரை ( Trigger) யை இழுத்தவுடன் வேகமாக சென்று அடிக்கும்...அந்த இடத்தில் கந்தகத்தினை வெடிக்கச்செய்ய தீக்குச்சி மருந்தினை சிகரெட் பேப்பரில் வைத்து பொருத்துவோம்..ஏன் என்றால் சிகரெட் உடன்வரும் மஞ்சள் நிற தாள் எளிதாக மடிக்கவும், மடிப்பு கலையாமல் இருக்கவும் எளிதில் எரிந்து கந்தகத்தினை வெடிக்க செய்யவும் பயன்படும்...

துப்பாக்கி வெடித்ததும் புஜத்தில் ( Shoulder) கும் என்று ஒரு இடி இடித்துவிட்டு நீள சிறிய குழாய் (Barell) மூலம் சிறிய குண்டுகள் பாய்ந்தோடும்...தூரம் செல்ல செல்ல பெரிய அளவில் பரவி, கடுமையாக தாக்கும்...

ஒரு சிறிய பால்ரஸ் பட்டால்கூட பறவை காலிதான்...

சட்ட சிக்கலுக்காக, முயல், மற்றும் குருவிகளை மட்டுமே சுட்டேன் என்று கூறிக்கொள்கிறேன்...மான் சுட்டதே கிடையாது..மான்கறி அருமையாக இருக்கும் என்றும் சொல்லமாட்டேன்...

நீர்பறவைகளை சுடும்போது, ( நீர்கோழி / வக்கா ) அடுத்த வினாடியே தண்ணீரில் பாயவேண்டும்..இல்லை என்றால் எங்காவது தண்ணீருக்கடியில் சென்று செட்டிலாகிவிடும்...பெரும்பாலும் ஏரிகள், வயல்வெளிகள், சிறுகாடுகள் இங்குதான் நமது வேட்டை...

விடுபட்ட விஷயங்களை பிறகு எழுதுவேன்...

அன்புடன்,
செந்தழல் ரவி..

பா.ராகவனின் நிலமெல்லாம் ரத்தம்..முழுமையாக

என் மனதுக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் இந்த பா.ரா. முதல் முதலில் தமிழினை இனையத்தில் காணச்செய்தவர் ( என்னை பொறுத்தமட்டில்). தினம் ஒரு கவிதை யாஹூ குழுமத்தில் வாசிக்கும் பழக்கமுடையவன் நான்..அங்கு தரமாக எழுதுவார்.

பா.ராகவன்

அவர் எழுதி, குமுதத்தில் வெளிவந்தது இந்த நிலமெல்லாம் ரத்தம்...அராபத் மறைவிலிருந்து ஆரம்பிக்கிறது...

நிலமெல்லாம் ரத்தம்

அவர் பெயர் வைத்து கூகுளில் தமிழில் தேடியபோது, யாரோ ஒரு நன்பர் ( புரொபைல் வேலைசெய்யவில்லை) முழுமையாக தொகுத்து இருப்பது தெரியவந்தது...கீழே உள்ள சுட்டியை தொடவும்.

நிலமெல்லாம் ரத்தம்..முழுமையாக

வாசித்து இன்பம் பெறுக...

அன்புடன்,
செந்தழல் ரவி

Tuesday, May 30, 2006

கொரியா நினைவுகள்..


நான் குப்பை கொட்டுவது எல்.ஜி என்று பலருக்கு தெரிந்திருக்கும்..அதனால் கொரியா பற்றி எழுதவேண்டும் என்ற ஆசை...

கொரியர்களை பற்றி சில தகவல்களை சொல்லவேண்டும்...





மேற்க்காணும் படத்தில் இருப்பவர் தோழி ஜங் லீ. பக்கத்தில் இளிப்பது நான்தான் என்று சொல்லவும் வேண்டுமா...

30 சதவீதம் புத்த மதத்தினை சார்ந்துள்ளார்கள்..40 சதவீதம் கிறித்தவம்..மீதி உள்ள 30 சதவீதம் எந்த மதத்தினையும் சாராதவர்கள். நாத்திகர்கள் என்று சொல்லலாம்...

தோழி கூறுகிறார்..அவரது தாயார் அவ்வப்போது சர்ச்சுக்கு செல்வாராம்..இவர் போவதில்லை...(அதாவது கடைசி முப்பதில் இருக்கிறார்..)



தலைநகர் சியோல் ( சோல் - soul என்று ப்ரனவுன்ஸ் செய்கிறார்கள்) மேற்க்கத்திய நாகரீகத்தில் மிதக்கிறது..

கிட்டத்தட்ட அனைவரும் புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் உள்ளவராக உள்ளனர்.




மேற்க்கானும் புகைப்படத்தில் உள்ள பாட்டில் சோஜு ( soju) கொரியாவில் உள்ள சுண்டக்கஞ்சி மது. 20 சதவீதம் ஆல்க்கஹால் உள்ளது...சூப்பரா கீதுபா..( தேவைப்படுபவர்கள் தனிமடலில் கேட்கலாம்...என்கிட்ட கொஞ்சம் இருக்கு ஹி ஹி)

போக்குவரத்துக்கு பைக் / கார் இரண்டும் பயன்படுத்துகிறார்கள்...

அபார்ட்மென்ட் வாழ்க்கைமுறை...சிறிய நாடு அல்லவா...

பெண்கள் காதல் மணம் புரிகிறார்கள்...திருமணம் 28 - 30 வயதில் செய்துகொள்கிறார்கள்...திருமணத்துக்கு முன் பலமுறை யோசிப்பார்களாம் பெண்கள்..





உணவுப்பழக்கத்தினை பொறுத்தமட்டில் அரிசி உணவு உண்டு..இறைச்சி கண்டிப்பாக உண்டு..சிறிய டேபிள்..அதனை சூழ்ந்து அமர்ந்து உண்கிறார்கள்..




மேற்க்கானும் படத்தில் உள்ளது கிம்சீ..( Kim Chi ) என்னும் உணவு..

நான் பார்த்தவரை ஆங்கிலத்தில் சற்று வீக்காக இருந்தாலும், கடுமையான உழைப்பளிகள்...பழகிவிட்டால் போதும்..மிக நட்பாக இருப்பர்..அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டியது இவை மட்டும்தான் என்று என்று எண்ணுகிறேன்...



நம்சமீதா..( நமஸ்காரம்..)

Monday, May 29, 2006

முட்டை - பருப்பு தொக்கு...சூப்பரா இருக்குபா...



பொதுவா பருப்பையும் முட்டையையும் ஒண்ணா சேர்க்கவே மாட்டோம். இந்த டிஷ் வித்தியாசமானது. இதை பாசிப்பருப்பு பயன்படுத்தியும் செய்யலாம்.

தேவையானப் பொருட்கள் :

1 கப் துவரம் பருப்பு
3 முட்டை
1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
3 தக்காளி பொடியாக நறுக்கியது
3 காய்ந்த மிளகாய்
1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
2 டேபிள்ஸ்பூன் நெய்

சிறிது மஞ்சள் தூள்
சிறிது கடுகு
சிறிது சீரகம்
1 கப் தேங்காய்த்துருவல்
சிறிது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
தேவையான உப்பு

செய்முறை :

* துவரம் பருப்பை போதுமான நீரில் வேக வைக்கவும். முக்கால்வாசி வெந்ததும் வெங்காயம், தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

* எல்லாம் நன்கு குழைந்து வெந்ததும், முட்டைகளை உடைத்து அதில் ஊற்றவும்.

* சிறிது நேரம் கொதித்ததும் நெய்யில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், தாளித்துக்கொட்டி, தேங்காய்த்துருவல், கொத்தமல்லி சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

எம்.எஸ்.என் தமிழ் வலைப்பதிவு ஆரம்பித்து உள்ளனர்..

http://content.msn.co.in/Tamil/Cookery/Recipies/0605-23-2.htm

இங்கே பார்க்கவும்..

சட்டசபையில் பெண் சிங்கம் புகுந்தது !!!!



ஆங்கிலத்தில் GUT's ( கட்ஸ்) என்று சொல்லுகிறார்கள்...தமிழில் தில் ( 'தில்' தமிழா...குன்றத்திலிருப்பவரை தான் கேட்கவேண்டும்) என்று சொல்லுவார்கள்..

முன்னாள் முதல்வரை தான் சொல்லுகிறேன்...

தனது கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையில் இருந்து நீக்கப்பட்டுவிட்ட நிலையில், தன்னந்தனியாக எதிர்க்கட்சியை எதிர்கொண்டார்...

இந்த தைரியம் முதல்வர் கலைஞருக்கு வரவில்லையே...அவர் எதிர்க்கட்சியில் இருந்தபோது..

ஜெயலலிதா சட்டசபையில் எடுத்து வைத்த வாதம்..

1. கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யும் முயற்ச்சியில் இருக்கும் அரசு( கிட்டத்தட்ட 7000 கோடி) , தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அவர்கள் வாங்கிய கடனையும் செலுத்துமா..( காரணம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வட்டி விகிதம் குறைவு)

2. ஏற்க்கனவே கடனை திருப்பி செலுத்திய விவசாயிகளின் பணத்தினை அரசு திருப்பி தருமா ? ( Reimbose)

3. சிறு மற்றும் குறு விவசாயிகளின் கடனை மட்டும் அரசு திருப்பி செலுத்துமா, அல்லது அனைத்து விவசாயிகளின் கடனையும் திருப்பி செலுத்துமா ? ( இப்படி கேட்டதற்க்கு காரணம், 17 லட்சம் / 20 லட்சம் கடன் வாங்கிய விவசாயிகளிம் இருக்கிறார்கள்..)

இவ்வாறு பேசுகையில் அவை முன்னவர் அன்பழகன் அடித்த நக்கல் என்ன தெரியுமா..

அவங்க மாமன் மச்சான் கிட்ட வாங்கின கடனை எல்லாம் திருப்பி செலுத்த முடியாது..

அவையில் வெடிச்சிரிப்பு...

4. தரிசு நிலம் பற்றியது...அரசுக்கு சொந்தமான தரிசு நிலம் 3 1/2 ஏக்கர் தான் உள்ளது..அதனை எப்படி ஒரு கோடியே எழுபது லட்சம் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு கொடுப்பீர்கள் ( மொத்தம் 85 லட்சம் விவசாய கூலி தொழிலாளர்.. தலா இரண்டு ஏக்கர் ) ?

இதற்க்கு முதல்வர் கலைஞர் பதில் என்ன தெரியுமா ? அனைவருக்கு தரிசு நிலம் கொடுக்கப்படும்..அது அரசிடம் இருந்தாலும் / தனியாரிடம் இருந்தாலும்..

அவையில் பலமான கைத்தட்டல்...( அல்லது பெஞ்சு தட்டல்)

இதற்க்கு என்ன அர்த்தம் ? மொத்தம் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் உள்ளது என்று கரடியாக கத்திய தி.மு.க ஹீரோ ( தேர்தல் அறிக்கைங்க) பொய் என்று முதல்வரே ஒத்துக்கொண்டுள்ளாரே ??

இதில் உண்மை என்ன என்றால் - ஒரு மண்ணும் பிரயோஜனமில்லாத நிலம் ( மண் கூட) தான் தரிசு நிலம்..நானும் தரிசு நிலத்தில் கால்வைத்து நடந்து உள்ளேன்...அதுல என்ன வெளையும்..கல்லும் மண்ணும் தான்...இதுக்கு இப்படி ஒரு சண்டையா..கிராமத்துல கேட்டுப்பாருங்க தெரியும்...அதுல முப்போகம் இல்ல..ஒரு போகம் கூட விளையாது...

சட்டசபையில் யாராவது பேசும்போது யார் குறுக்கிட வேண்டும் என்று மரபு உள்ளது...முதல்வர் குறுக்கிட்டு பேசலாம்...அல்லது அவை முன்னவர் பேசலாம்...இப்போது நடப்பது என்ன தெரியுமா...

மாயி படத்தில் ஒரு கேரக்டர், ஏ ஏ மாயண்ணன் வந்திருக்காக...மாப்புள மொக்கச்சாமி வந்திருக்காக என்பது போல..அமைச்சர் துரைமுருகன் அவர்கள்..ஏ ஏ ஏ என்று எதற்க்கெடுத்தாலும் குரல் விடுவது வேடிக்கையாக உள்ளது...

கடைசியாக ஒரு விஷயம்...சட்ட சபையில் சன் டி.வி க்கு மட்டுமே அனுமதி....ஜெயா டி.விக்கு கிடையாது...ம்ம்ம்...அவங்க ஆட்சியில நம்மை அனுமதிக்கல..நம்ம ஆட்சியில அவங்களை அனுமதிக்க கூடாது என்று சின்னபுள்ளத்தனமா ( நன்றி: வடிவேல்) இருக்காம பெருந்தன்மையாக நடந்துகொள்ள வேண்டும்....

அன்புடன்,
ரவி

Friday, May 26, 2006

தாய்லாந்து பயணம் - கொஞ்சம் நினைவுகள்

சமீபத்தில் (போன மாதம்)தாய்லாந்து நாட்டிற்க்கு போயிருந்தேன்...என்னுடைய மனதில் தாய்லாந்து பற்றி எண்ணியிருந்தது அடியோடு மாறியது...காரணம் சூப்பர் பாஸ்ட் ஹைவேக்களும் சாலையில் அதிவேகத்தில் பறக்கும் கார்களுமாக சிங்கப்பூரையும், மலேசியாவையும் நினைவுபடுத்தியது...நாடு 13 சதவீத வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்று போர்ப்ஸ் பத்திரிக்கையில் படித்தது எவ்வளவு உண்மை என்று தெரிந்தது..




விசா ஆன் அரைவல் திட்டத்தில் நான் சென்றேன்....இதற்க்கு உங்கள் பாஸ்போர்ட், இரண்டு புகைப்படம் (வெள்ளை பேக்ரவுண்டு), மற்றும் திரும்புவதற்க்கான ரிட்டன் டிக்கெட், மற்றும் 1000 தாய் பாட் ( கிட்டத்தட்ட 1500 ரூ) கொடுத்தால் 14 நாட்கள் விசா தருகிறார்கள் ஏர்போட்டில்..அதனால் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக விளங்குகிறது...

திரும்ப வரும்போது ஏர்ப்போட் டாக்ஸ் என்று ஒரு 500 பாட் ( 750 ரூ) வாங்குகிறார்கள்...சுத்தமான ஏர்போர்ட்..கொடுக்கலாம் என்று தோன்றுகிறது...

நான் தங்கி இருந்த நகரத்தின் பெயர் சோன்புரி..தாய்லாந்தில் இருந்து 50 முதல் 60 கிலோமீட்டர் தூரம் உள்ள சிறுநகரம்..அதனால் யாருக்கும் சுட்டு போட்டாலும் ஆங்கிலம் தெரியாது...நமக்கு தெரிந்த சைகை பாஷையை வைத்து அட்ஜஸ்ட் பன்ன வேண்டியது தான்...

அதுவும் இல்லாமல் நாம் இந்தியாவிலிந்து வந்து இருக்கிறோம் என்றால் தொட்டு பார்த்து மகிழ்வர் இந்த சிறுநகரில்..காரணம் அவர்கள் தெய்வமான புத்தர் பிறந்த நாட்டிலிருந்து வருகிறோம் என்ற உணர்வு...

உணவு பழக்கத்தினை பொறுத்த வரையில் இந்தியர்களுக்கு பிரச்சினையே இல்லை...அதுவும் நான்வெஜ் அப்படின்னா சும்மா புகுந்து விளையாடலாம்..தொம்.யம்.கூங்..இது பிரபலமான நூடுல்ஸ் பெயர்..லெமன் வாசனையோடு கொஞ்சம் இறால் சேர்த்து சும்மா சூப்பரா இருக்கும்...
ரொட்டி என்ற பெயர்ல நம்ம பரோட்டாவ வித்துக்கிட்டு இருந்தான் ரோட்டு கடையில...5 தாய் பாட் (பாட் - தாய்லாந்து காசு) விலையில்...

அப்படியே நம்ம பரோட்டா..அதனை வெண்ணையில தடவி உள்ள தள்ளிக்கிட்டு இருந்தாங்க நிறைய பேர்..



மேற்கானும் படம் தாய்லாந்து தோழியொருவரின் திருமணம்



இவரும் தோழி தானுங்க....சுனாமி வந்து வாரிக்கிட்டு போன புக்கட் தீவில் எடுக்கப்பட்டது..

மொத்தத்தில் வெளிநாடு எதாவது சுற்றுலா சென்று வரலாம் என்று எண்ணுபவர்கள் தாய்லாந்தினை நிச்சயமாக கணக்கில் எடுத்து கொள்ளலாம்..

Thursday, May 25, 2006

தென்னாப்பிரிக்கா மற்றும் மொராக்கோ பயணம்

அடுத்த வாரம் தென்னாப்பிரிக்கா ( ஜோகன்ஸ்பர்க்) மற்றும் மொராக்கோ ( காசாபிளாங்க்கா) ஆகிய நாடுகளில் உள்ள எ.ஜி அலுவலகங்களுக்கு வேலை விஷயமாக செல்கிறேன்...

உலகிலேயே அதிகபட்ச குற்ற சதவீதம் ( Crime Rate) உள்ள நகரம்ஜோகன்ஸ்பர்க்...மிக அதிகமாக வைரம் / தங்கம் கிடைக்கும் இடம் கூட என்று அறிந்தேன்...மற்ற மேற்கத்திய நகரங்களுக்கும் சிறிதும் குறைந்தது அல்ல என்பதினை கீழ்க்கானும் ஜோகன்ஸ்பர்க் படம் அறிவிக்கிறது..




ஜோகன்ஸ்பர்க் பற்றிய இணைய உரல் http://www.joburg.org.za/...

இங்கு மேயராக கறுப்பினத்தை சேர்ந்த அமோஸ் மசோண்டோ (Amos Masondo) இருக்கிறார்..

மற்ற விஷயங்களை நேரில் பார்த்து தான் எழுதவேனும்...

காசாபிளாங்கா ( casablanca ) என்று ஒரு ஷாப்பிங் மால் உண்டு பாண்டிச்சேரியில்..மொராக்கோவின் தன்னிகரற்ற தலைநகரம் என்று இனையத்தில் உள்ளது..



மேற்கானும் படத்தில் இருப்பவர் மொராக்கோ இளம்பெண்...

அப்பாடா...ஏதோ மொக்க போட்டு ஒரு பதிவு அளவுக்கு மேட்டர் தேத்தியாச்சி..
:)
பொறவு பயண கட்டுரைன்னு எதாவது எழுதிட வேண்டியது தான்...

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....