Tuesday, April 01, 2008

ஆஹா !!!!! அற்புதம் காத்திருக்கிறது !!!!!!!

தமிழ்மணத்தில் இப்போது புதியதாக வரும் கூகிள் ஆட்ஸ் பாருங்கள்..(கூகிள் வழி விளம்பரம்) - நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது தமிழ் மாட்ரிமோனி வந்தது..

அதனை ஒரு தடவை க்ளிக் செய்து பாருங்கள்...உங்கள் கணினி திரையில் ஒரு அதிசயம் காத்திருக்கிறது...

ஒரு பதிவரின் குறுஞ்செய்தியை பார்த்து, ஏதோ ஏப்ரல் பூல் விவகாரம் என்று நினைத்தேன்...முதலில் நம்ப முடியாமல் - அதையே தனிமடலிலும் அனுப்பி இருந்ததால் - என்னதான் வருகிறது என்று பார்க்க க்ளிக்கினேன்...

சூப்பர்...நீங்களும் கிளிக்கி பார்த்து தெரிஞ்சுக்கோங்கப்பா...!!! அதை எழுதினால் சஸ்பென்ஸே போயிரும்...

Sunday, March 30, 2008

INTEGRITY ?




Your Integrity ? Everyone Knows about it :)))

முடியல முடியல் - கேள்வி பதில் பதிவு

வசந்தம் ரவி கேள்வி பதில் பதிவு வெளியிட்டுள்ளாரே ?

மூர்த்தியாகிய விடாது கருப்பு "சதீச்" என்று ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டாரே !!!! அதை நம்பிட்டீங்களா சாமி நீங்க :) போலிப்பயலுக்கு எல்லாம் பதில் சொல்லி நேரம் தான் வீண்...

அப்படி ரொம்ப நல்லவராக இருந்தால் தனது இந்திய தொலைபேசி எண்ணை வெளியிடட்டுமே !!!


டிபிசிடி அய்யாவின் சமீபத்திய "லொள்" பதிவு பற்றி ?

பின்னே ? அவரது ஆஸ்தான போலியாரை தாக்கி பதிவிட்டால் ஏன் அவருக்கு கோபம் வராது..அவருடைய சுபாவத்தை வெளிக்காட்டுகிறார் போலிருக்கிறது...

கோவி.கண்ணன் அய்யாவை கடுமையாக தாக்கி பின்னூட்டியது ஏன் ?

இதுவரைக்கும் மூர்த்திதான் போலி என்று ஒத்துக்கொள்ளாமல், எதுவுமே தெரியாமல் இருப்பது போல் நடிப்பது தான் எரிச்சலை கூட்டுகிறது...

மூர்த்தி என்னை ஆபாசமாக திட்டிய ( நானும் திட்டினேன்) சாட்டை அவருக்கு அனுப்பிய பிறகும் மூர்த்தி நல்லவன் என்று வலையில் எழுதி வருவது அவரது நம்பகத்தன்மையை கடுகளவு சுருக்கியது..

பிறகு விடாது கருப்புக்கு பின்னூட்டம், கடிதம் ( அந்த பதிவில் தானே என்னுடைய குடும்பத்தை அசிங்கமாக எழுதி பதிவு வந்தது ) என்று அவர் சென்றவுடன் - அதன் பிறகு அவரிடம் எப்படி எனக்கு மரியாதை ஏற்படும் ?

போலிப்பிரச்சினை எப்போது தான் முடியும் ?

100 பதிவர்களின் மன உளைச்சளுக்கு விடிவுகாலம்...பிரச்சினை முடிவை நெருங்கிவிட்டதாகவே தெரிகிறது...விரைவில் நல்ல விவரங்கள் தெரியவரும்...சட்டரீதியான நடவடிக்கை பலன் தரப்போகும் நேரம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன்...

இப்படிக்கு ரோஸ் : விஜய் டிவியில் லிவிங் ஸ்மைல் வித்யா

வரும் வியாழன் இரவு பத்துமணிக்கு "இப்படிக்கு ரோஸ்" என்ற வித்யாசமான - ரோஸ் என்னும் திருநங்கையால் நடத்தப்படும் நிகழ்ச்சியில் நமது தோழி லிவிங் ஸ்மைல் வித்யா கலந்துகொள்கிறார்....

"அலி" என்ற வார்த்தையை கேட்டவுடனே தீயை மிதித்தமாதிரி ஓடிக்கொண்டிருந்த என்னுடைய நன்பர்களுக்கு - லிவிங் ஸ்மைல் வித்யாவின் பதிவை கொடுத்து படிக்கச்சொன்னவுடன், "திருநங்கை" என்ற பதத்தை உபயோகப்படுத்துகிறார்கள்...

திருநங்கைகளை நோக்கி கனிவான பார்வையையும் செலுத்த தொடங்குகிறார்கள்...

வலைப்பதிவினர் மத்தியிலும் இந்த மாற்றத்தை ஏற்படுத்திய லிவிங் ஸ்மைல் வித்யா, இப்போது சின்னத்திரையிலும் தோன்றப்போகிறார்...

அவர்களுக்கு உண்மையான விடியல் என்பது - சமுதாயத்தின் பார்வை அவர்கள் மீது கனிவுடன் விழும்போது தான்...

அந்த பணியில் விஜய் டிவி முன்னோடியாக, "ரோஸ்" என்ற திருநங்கையை வைத்து ஒரு நிகழ்ச்சியை நடத்துவது ஒரு மைல் கல் என்றுதான் சொல்லவேண்டும்...

திருநங்கைகளுக்கு, ஓட்டுரிமை, ரேசன் கார்டு எல்லாம் "அப்பாலிக்கா" பார்த்துக்கலாம்...

உஸ்ஸு என்று கூப்பிடாமல் சகோதரி என்று அழைக்கவைத்திருக்கிறது அந்த நிகழ்ச்சி...

நம் சகோதரி, சக வலைப்பதிவர் லிவிங் ஸ்மைல் வித்யாவின் நிகழ்ச்சியை வியாழன் இரவு பத்துமணிக்கு பாருங்கள் - விஜய் டிவியில்...!!!

வாழ்த்துக்கள் லிவிங் ஸ்மைல் வித்யா அவர்களே....

Saturday, March 29, 2008

சாரு நிவேதிதாவின் பணத்தை ஆட்டைய போட்டது போலி டோண்டு மலேசியா மூர்த்தி

சாரு நிவேதிதாவின் பணத்தை ஆட்டைய போட்டது போலி டோண்டு மலேசியா மூர்த்தி என்று ஒரு திடீர் தகவல் வந்தது...

வந்தது என்னமோ அனானிமஸ் ஒருவரின் செய்திதான் என்றாலும், செய்தியின் நம்பகத்தன்மை குறித்து எனக்கு சந்தேகம் ஏதுமில்லை...

இணையத்தில் ஹேக்கிங், பிஷ்ஷிங் செய்பவர்கள் தனியான போரம், நியூஸ் க்ரூப்ஸ் என்று இயங்குகிறார்கள்...

இப்போது இணையத்தின் வலைத்தளத்தின் மூலம் இன்ஸ்ட்டால் செய்து தகவல்களை திருடும் வகையில் புதிய டெக்னாலஜியை உருவாக்கி இருக்கிறார்கள் என்று தகவல்கள் கிடைக்கின்றன...

அதன் மூலம் ஜிமெயில் பாஸ்வேர்டுகளை களவாடுவது இருபத்து நாலு மணிநேரமும் கணினி திரையை பைத்தியம் போல் பார்த்துக்கொண்டிருக்கும் விடாது கருப்பு மலேசியா மூர்த்தி மருதமுத்துவுக்கு பெரிய விசயம் அல்ல...

இன்றைக்கு தமிழச்சி தளத்தில் இருந்து வந்த பின்னூட்டம், இட்லிவடையின் ஜிமெயில் ஸ்க்ரீன்ஷாட் என, மூர்த்தியின் கையில் கிடைத்த ஸ்க்ரிப்ட் சிறப்பாகவே வேலைசெய்கிறது...

சாருவின் கணக்கிலிருந்தும் பணத்தை ஆட்டையை போட்டது அவனாகவே இருக்கலாம்..

அப்படி இருந்தால், இதுவரை பதிவர்களை மனதளவில் மட்டுமே தொல்லை செய்துகொண்டிருக்கும் மூர்த்தி மருதமுத்து, பைனான்ஸியல் க்ரைம் என்ற அளவில் இறங்கிவிட்டான் என்பதே சரியான கணிப்பாகும்...

வெர்பல் அப்யூஸ் போன்றவைகளை இந்திய சைபர் க்ரைம் பெரிய விடயமாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும், பைனான்ஸியல் க்ரைம் போன்ற விடயங்களில் இந்திய சைபர் கிரைம் சிறப்பாகவே செயல்பட்டு - குற்றவாளிகளுக்கு "ஸ்பெஷல்" ஆப்பு வைத்துக்கொண்டிருக்கிறது...

புகார் கொடுக்கப்பட்டால் இருபத்தினான்கு மணி நேரத்தில் பாஸ்போர்ட் உட்பட அனைத்தும் முடக்கப்பட்டு, இந்திய மண்ணில் இனிமேல் கால் வைக்க முடியாத அளவில் செய்தும் இருக்கிறார்கள்...

போலி டோண்டு மலேசியா மூர்த்தி மருதமுத்துவின் அத்தியாயம் முடிவுரையை நோக்கி நெருங்கிக்கொண்டிருக்கிறதாகவே எனக்கு படுகிறது...

ஸ்பெஷல் ஆப்பு வைக்க "பாபா" கவுண்டவுன் ஸ்ட்ட்ட்ட்ட்ர்ட்...ஸ்ட்டார் மீஜிக்....

ஓவராக்ட் பண்ணி கெடுத்துட்டியேடா போலி டோண்டு !!!!


அடங்க்கொக்கமக்கா !!!! இப்படி ஓவராக்ட் பண்ணி கெடுப்பேன்னு ராசி பலன்ல தெரிஞ்சிருந்தா இன்னைக்கு பதிவே போடாம இருந்து இருக்கலாமே ?
தமிழ்மணத்தில் டாப் டென் : வசந்தம் ரவி (பர்ஸ்ட்) அப்படீன்னு இனிமே பதிவு போடமுடியாதே ?

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....