இஸ்ரேலில் நடக்கும் அரசியல் நாடகங்களுக்கேற்ப பாலஸ்தீனம் பற்றிய கேள்விகள் அதிகமாக வந்ததால் நண்பர் வருண் அவர்களது ஆலோசனைக்கேற்ப அவற்றுக்கு இப்பதிவில் பதில் அளிக்க முயற்சி செய்கிறேன்.
குறைசிம்மா:
1. பாலஸ்தீனியர்கள் அழிவது யூதர்களுக்கு நல்லதா?
ஆம். ஏனெனில் அவர்கள் கணினி மொழியில் கூறுவதென்றால் கரப்ட் ஆன கோப்புகளாகி விட்டனர். பல வைரஸ்கள் அவர்களிடம் குடி கொண்டு விட்டன. கர்ணபிரபுவே நாணும் வண்ணம் மற்றவருக்கு அவற்றை தானமாக அளிக்கின்றனர். கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தால் கொல்லப்பட்டவர்களே அதிகம். நேரடியாக கொல்வதோடு மட்டுமின்றி அப்பாவி மக்களையும் கேடயமாக்கி தாம் தப்பிக்க முயலுகின்றனர், இப்போது செய்வது போல.
மலையகபாலஸ்தீனியன்
1) தன்னையே கொல்ல திட்டமிட்ட யாசர் அராபத்தை மன்னித்து, பாலஸ்தீனத்தில் அவனால் கஷ்டப்படும் மக்கள் மீது கூட இஸ்ரேல் ராணுவம் கொலைகளை செய்துவிடக்கூடாது என்று இவ்வளவு முயற்சி எடுக்கும் கோல்டா மேயர் பாராட்டுக்குரியவர்தானே?
தன்னை கொல்லத் திட்டமிட்ட யாசர் அராபத்தை கோல்டா மேயர் மன்னித்தாரா என்பது பற்றி கூற என்னிடம் கருத்து இல்லை. ஏன் இஸ்ரேல் முன்னாள் பிரதமர் கோல்டா மேயர் மேல் இந்த கொலை வெறி உங்களுக்கு?
2) காசா தெற்கு முனையில் இஸ்ரேலிய ராணுவம் வெற்றிகொண்டபோது இவ்வளவு கூப்பாடு போடாத வெளிநாட்டு வாழ் பாலஸ்தீனியர்களும், இந்தியாவில் இவ்வளவு பிரச்னைகளை தூண்டிவிடும் ஆயிரம் விளக்கு பகுதி வாழ் பாலஸ்தீனியர்களும், காசா முனைக்கு வடக்கில் ராணுவம் யாசர் அராபத்தின் கல்லறையை நெருங்குவதாலேயே இவ்வளவு கூப்பாடு போடுகிறார்கள். ஆகையால், அடிப்படையில் காசா முனை மேலாதிக்கத்துக்காகத்தான் கூப்பாடு போடுகிறார்கள் என்று கூறலாமா?
பதில்: கண்டிப்பாக சொல்லலாம்.
3) யூத கோல்டா மேயர் கொடுத்த பணத்துக்காக மற்ற இயக்கங்களில் இருந்த பாலஸ்தீனியர்களை கொன்றொழித்த யாசர் அராபத் துரோகியாகாமல் மற்ற இயக்கங்களில் இருந்தவர்கள் துரோகியானது எப்படி?
பதில்: கோல்டா மேயர் இதற்காக பணம் கொடுத்தார் என எங்கும் படித்ததில்லை. இருப்பினும் தன் சுயமுனைப்புடனேயே கொலைகளை செய்வித்து வரும் யாசர் அராபத்தின் சீடர் முகமது அப்பாஸின் பங்கை உங்கள் கேள்வி குறைத்து மதிப்பிடுகிறது என நினைக்கிறேன்.
4.நேற்றுவரை பாலஸ்தீனியர்களை கடுமையாக விமர்சனம் செய்துவந்த தா பாண்டியன் இன்று ஆதரவாக பேசுவதன் மர்மம் என்ன?
பதில்: அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.
ஆனந்த குமார்:
1. பாலஸ்தீனியர்கள் ஐ.நா அமைதி படையை எதிர்த்து சண்டை போட இஸ்ரேல் ராணுவத்திடம் ஆயுதங்கள் பெற்றாற்களா? உண்மையாகவே நடந்த ஒன்றா?
பதில்: அவ்வாறு ஆயுதம் பெற்றது பற்றி தெரியாது. ஆனால் இருவருக்குமே ஐ.நா அமைதிப்படை ஆகாது என்பதில் சந்தேகம் இல்லை.
2. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தவர்கள் நம்ப கூடியவர்களா?
பதில்: இல்லை
3. இட ஒதுக்கீடு தான் இந்த பிரச்சனைக்கு காரணமாமே உண்மையா?
பதில்: இதென்ன புதுக்கதை? இக்கேள்வி இங்கு எப்படி வந்தது?
4. காசா முனை பாலஸ்தீனியர்களால் வெஸ்ட் பேங்க் பகுதி பாலஸ்தீனியர்கள் அடிமையாக நடத்தப்படுகிறார்களா?
பதில்: பாலஸ்தீன சிக்கல் ஒரு இடியாப்பச் சிக்கல். காசா முனை பாலஸ்தீனியருக்கும்
வெஸ்ட் பேங்க் பகுதி பாலஸ்தீனியருக்கும் ஆகாது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினருக்கும், பாலஸ்தீன யூதருக்கும் ஆகாது. இன்னும் யாருக்கும் யாருக்கும் ஆகாது என்பது தெளிவாக இல்லை.
5. இஸ்ரேலில் பல லட்சம் பாலஸ்தீனியர்கள் இருக்கிறார்களாமே, தனி பாலஸ்தீனம் கிடைத்தால் அவர்கள் கதி என்ன?
பதில்: யாருக்கு தீமையோ தெரியாது. ஆனால் இப்போதைய சூழ்நிலையில் தனி பாலஸ்தீனம் கிடைப்பது பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் நலனுக்கு மட்டுமே உரியது என நினைக்கிறேன்.
6.யாசர் அராபத் மட்டும் ஏன் தன் பிள்ளைகளை தற்கொலை படையாக மாற்றவில்லை?
பதில்: ஊரான் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே.
7. இதிலும் யூத துவேஷம் காட்டுவோர் பற்றி?
பதில்: அப்படி காட்டாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.
..
..
..
வணக்கம் எல்லாருக்கும்...டோண்டு சாரின் பதிவை மிமிக்ரை செய்ய முயற்சி செய்துள்ளேன்...கலகலப்பை உருவாக்கும் என்று நம்புகிறேன்...(பல விஷயங்கள் எடிட் செய்யாமல் அப்படியே பொருந்துகின்றன...நேரமின்மை காரணமாக இத்துடன் முடிக்கிறேன்..)
..
..
..
தமிழ்ஷ் மற்றும் தமிழ்மணம் கருவி பட்டையில் ஓட்டு குத்தவும்...
Wednesday, October 29, 2008
Thursday, October 23, 2008
கள் இறக்க அனுமதி மற்றும் திவ்யாவுக்கு ஏழாயிரம் ஹிட்ஸ் by ரமேஷ்

நானும் மணிவண்ணனும் சேர்ந்து பி.எஸ்.ஸி ப்ராஜக்ட் செய்தோம்..."இண்ட்ரப்ட் For பிகினர்ஸ்" என்று "C" மொழியில்...
ஒரு எம்.சி.ஏ சீனியர் (பெயர் கண்ணன், புத்தனாம்பட்டி, திருச்சி மாவட்டம்), கொடுத்த ஐடியா, சி எடிட்டரில் மெனு, சப் மெனு, ஹெல்ப் பைல்ஸ் எல்லாம் போட்டோம்...
சின்ன ஐடியாவை ஊதி ஊதி பெரிதாக்கியது மணிவண்ணன் தான்...நான் அவ்வளவாக காண்ட்ரிப்யூட் செய்யவில்லை என்றாலும் ஒரு அல்லக்கை நொள்ளக்கையாக கூடவே இருந்தேன்...
திருச்சி துறையூரில் ப்ராஜக்ட் டாக்குமெண்டேஷனுக்காக ஒரு இரவு ஒரு ப்ரவுஸிங் செண்டரை வாடகைக்கு எடுத்து டைப்போ டைப்பு என்று டைப்பினான்...
நான் கண்கள் சொருக தூங்கினேன்...அப்பப்போ "தம்" போட மணிக்கு கம்பேனி கொடுத்ததோடு சரி...
வைவாவின் போது நான் அதிகமாக சைட் அடித்த மேடம் மற்றும் ஹெச் ஓ டி எதிரில், என்னவோ மணி அதிகம் பேசவில்லை...நான் ஏதோ உளறிக்கொட்டி படபடவென்று பேசி எப்படியோ ஒப்பேத்தினேன்...
ரிசல்ட் வந்தபோது, என்னுடைய மார்க் 99. மணிவண்ணன் 98...
எப்போதும் 75 சதவீத மதிப்பெண் வைத்திருக்கும் மணி என்னை விட ஒரு மார்க் கம்மி...
நாற்பது மதிப்பெண்ணை எப்படியாவது பெற்றுவிடவேண்டும் என்று போராடும் நான் அவனை விட ஒன்று அதிகம்...
ஓ என்று ஒரே அழுகாச்சி...
சரி என்று நான், இளமாறன் அப்புறம் செல்வமணி தம்பி ஸ்டீபன் (மலை மாடு மாதிரி இருப்பான்), நாலு பேரும் கள்ளு குடிக்க பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமத்துக்கு போனோம்...ஓமாந்தூர் என்று நியாபகம்...
நான் கொஞ்சம் விவரம் தெரிஞ்சு கள்ளு குடிப்பது அது தான் முதல் முறை, ஏற்கனவே பதனி தண்ணீர் கொஞ்சம் சாப்பிட்டிருக்கேன், அது தான் கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்...
ஸ்டீபன் தான் எல்லாருக்கும் கள் வாங்கினான்...இளமாறன் காசு கொடுத்தானா என்று தெரியவில்லை..(அவன் ஒரு முடிச்சு அவிழ்க்காத முடிச்சவுக்கி...அதான் காசு எப்பவும் தரமாட்டான் ஹி ஹி சாரிடா இளம..எல்லாம் ஒரு பில்டப்பு தாண்டா)
படபடவென குடித்தேன்..கொஞ்சம் புளிப்பாக...கொஞ்சம் துவர்ப்பாக...மாங்காய் ஊறுகாயோடு கொஞ்சம் அஜால் குஜாலாகத்தான் இருந்தது...
மணிவண்ணனின் அழுகாச்சி அடங்கியதா என்று நினைவில்லை...!!
போதை சுமாராக ஏறியது...டி.வி.எஸ் பிப்டியிலோ, நடந்தோ, பஸ்ஸிலோ ரூமுக்கு வந்தோம்..சரியாக நினைவில்லை...
நிற்க !!!!!!!!!!!!!!!
தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் நான் பார்த்தவரை சாராயத்துக்கு வாரம் 1000 ரூபாய், கள்ளுக்கு வாரம் 500 ரூபாய் மாமூல்...
ரைட்டரிடம் மாமூல் கட்டியவர்கள் தாராளமாக தொழில் செய்யலாம்...
என்னோட சித்தப்பா ஏட்டைய்யாவாக இருந்த காவல் நிலையத்தில் இதனை கவனித்திருக்கிறேன்...
வாழ்க வளமுடன்...
நிற்க !!!!!!!!!!!!!!!!!
தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது...அரசு ஆணை...
பனைப்பொருள் வாரியத்தலைவர் பெயர் குமரி அனந்தன் என்று நினைக்கிறேன்...
காந்தியவாதி...
காந்தி கள் குடிக்காதே என்று சொன்னாராம்..
அதனால் யாரும் கள் இறக்காதீர்கள் என்கிறார்...
இதனால் மரபு சாரா தொழிலாளர்கள் உண்மையில் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்...பனை பொருள் சங்கத்தலைவர் நல்லசாமி என்பவர், தடையை மீறி கள் இறக்கும் போராட்டம் ஜனவரி 21 முதல் அறிவித்துள்ளார்...
பனைமரத்தில் இருந்து கள் மட்டுமல்ல, பதனீர் போன்ற சாதாரண பொருட்களை கூட தயாரிக்க குடுவை கட்ட முடியாது..
அப்படி குடுவை கட்டவேண்டும் என்றால் மாமூல் கட்டவேண்டும்...வாரம் 500 ரூபாய் மாமூல் கட்டவேண்டும் என்றால் பெரும் வியாபாரியாக இருந்தால் தான் முடியும்...
ஆறு மாதம் ஒரு முறை, கேஸ் கிடைக்கவில்லை என்றாலோ, அதிகாரிகளில் ப்ரஷர் தாங்கமுடியவில்லை என்றாலோ, உங்கள் மீது பெட்டி கேஸ் விழும், நீங்கள் உள்ளே இருக்கவேண்டியிருக்கும்...
யார் கண்டா...குண்டர் சட்டம் கூட பாயலாம்..
டாஸ்மாக் கடைகள் மூலம் அரசாங்கமே மது சப்ளை செய்துகொண்டிருக்கும் நிலையில், உயிருக்கு தீங்கு விளைவிக்காத கள்ளை இறக்கவும், விற்பனை செய்யவும் தடுப்பது ஏன் ?
தமிழகத்தில் சாராயம் விற்பனை செய்யப்படுவதில்லை என்று யாராவது சொன்னால் அவர்களிடம் பந்தயம் கட்டத்தயார்...இன்றைய நிலைமைக்கு ஒவ்வொரு கிராமத்திலும் சாராயம் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது...
சட்டரீதியாக அட்லீஸ்ட் கள் இறக்க அனுமதித்தால் எத்தனை குடும்பங்கள் வாழும் ?
60 ரூபாய் கொடுத்து க்வாட்டர் ஓல்ட் மங் அடிப்பதற்கு 10 ரூபாய் கொடுத்து கள்ளை குடித்துவிட்டு போகட்டுமே ?
வலைப்பதிவு செய்யும் பத்திரிக்கை நன்பர்கள் இதனை வெகுஜன ஊடகங்களுக்கு கொண்டு சென்று ஒரு நல்ல தீர்வை கொண்டுவரவேண்டும்...
லாட்டரியை அழித்தீர்கள்...அதனால் எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்பட்டன என்று தெரியுமா ?
இலங்கை தமிழர்களுக்காக உணர்வோடு எழும்பும் குரலை மனமார பாராட்டுகிறேன்...அதே நேரம் தமிழர்களின் வாழ்வாதாரம் சிறக்க அவ்வப்போது நடவடிக்கை எடுக்க தயங்காதீர்கள் முதல்வர் அவர்களே !!!!
நிற்க !!!!!!!!!!!!!!!!
ப்ளீச்சிங் பவுடர் என்று ஒரு கொண்டை எழுதிய பதிவை படித்தேன்...அது கொண்டை என்று தெரிந்துவிட்ட பிறகு எதிர்வினை ஆற்ற விரும்பவில்லை...கொண்டையை தலைகீழாக பார்த்தாலும் அது கொண்டை தான்...
ஆனால் அதற்கு எதிர்வினை ஆற்றிய ஜோசப் பால்ராஜ் காஷ்மீர் பிரச்சினை பற்றி சரியான தெளிவின்றி இருக்கிறார் என்பது என்னுடைய எண்ணம்..ஜோசப் பால்ராஜ்..தமிழ் சசி காஷ்மீர் பிரச்சினை பற்றி எழுதிய நான்கு இடுகைகளையும் நீங்கள் படிக்கவேண்டும் என்று ஹோம் ஒர்க் மற்றும் இம்போசிஷன் தருகிறேன்...
நிற்க !!!!!!!!!!!!!!!!!
Wednesday, October 22, 2008
Tuesday, October 21, 2008
கிளுகிளு நமீதா சொல்கிறார் : வேண்டாம் பாலித்தீன்....
டேய் தம்பிகளா...வேண்டாம்டா...வேண்டாம்...அது நல்லதில்லைடா...நான் உங்களோட தாத்தா மாதிரிடா...என்று சேலத்தை சேர்ந்த சித்த வைத்தியர் தொலைக்காட்சியில் இப்போது புலம்பிக்கொண்டுள்ளார்...
ஆனால் அதைவிட ஒரு பெரிய பிரச்சினை..இந்த பாலித்தீன் பைகள்...சுற்றுச்சூழலை குத்திக்கிளறி புண்ணாக்கும் இந்த வீணாய்ப்போன பிரச்சினை, வரும் சமுதாயத்துக்கும் மாபெரும் கேடு...
நல்ல பதிவுகளை எழுதாமல் மொக்கை போட்டாலும் பரவாயில்லை...பாலித்தீன் பைகளை குப்பையாக போடுவதை முடிந்தவரை தவிருங்கள் மக்கா...

இந்த பாலித்தீன் சம்பந்தமான பொருட்கள் - உலகம் முழுவதும் 60 மில்லியன் டன்கள் ஒவ்வொரு ஆண்டும் உருவாகின்றன..
நீ புடுங்குற எல்லா ஆணியுமே தேவை இல்லாத ஆணி தான் என்பது போல எல்லாமே மக்காத குப்பைகள் தான்...
ஒரு ஜெர்மன்காரன் 1898ல ஆக்ஸிடெண்டலா கண்டுபிடிச்சது இந்த பாலித்தீன் என்னும் பொருள்...டயாஸோமித்தேனை சூடாக்கிக்கிட்டிருந்தானாம்...அப்போ வழவழன்னு வந்த இந்த சனியனை ஆராய்ஞ்சிருக்கான்...வந்திருச்சு பாலித்தீன்...
இந்த பாலித்தீன்ல ஒரு சில வெரைட்டீஸை ரீசைக்கிள் பண்ணமுடியும் தான்...ஹும்...இருந்தாலும் முக்காவாசி பாலித்தீன் ரீசைக்கிள் ஆகமுடியாத வகையிலேயே உருவாக்கப்படுதாம்...
டேனியல் பர்டுன்னு ஒரு பதினாறு வயசு கனடா பையன்...ஸ்ப்ஹின்கோஹோமஸ் அப்படீன்ற பாக்டீரியா பாலித்தீனை சாப்பிடுது, 40 சதவீதம் வரைக்கும் பாலித்தீன் பொருட்களோட வீரியம் குறைச்சு அழிக்கிது அப்படீன்னு இந்த வருஷம் (2008) மே மாசம் கண்டுபிடிச்சிருக்கானாம்...
எந்த அளவுக்கு பயன்பாட்டுக்கு வரும்னு தெரியல...
நான் உங்களை கேட்டுக்கறது என்ன தெரியுமா ? முடிஞ்ச வரைக்கும் பாலித்தீனை அவாய்ட் பண்ணுங்களேன்....
கடைக்கு போகும்போது சணல் பைகளையோ, அல்லது கூடையையோ எடுத்துக்கிட்டு போங்களேன்...
அதுல என்ன பெரிய கவுரவ குறைச்சல் ?
பாலித்தீன் கவர்ல குப்பை எல்லாம் போட்டு வெளிய போடலாம் தெரியுமா ? அப்படீங்கறீங்களா ?
சார் / மேடம் ? அதுதானே வேண்டாம்னு இவ்ளோ கரடியா கத்திக்கிட்டு இருக்கேன்...
குப்பைக்கு ஏதாவது பர்மனெண்ட் குப்பைத்தொட்டி மாதிரி வீட்ல வெச்சுக்கோங்களேன்...
நமீதாவுக்கு இந்த விசயம் பற்றி மெயில் அனுப்பினேன்...
அவங்க மச்சீ...நான் சொன்னதா சொல்லு மச்சீன்னு திரும்ப மெயில் அனுப்பியிருக்காங்க...சந்தேகம் இருந்தா WWW.நமீதா.com க்கு மெயில் அனுப்பி நீங்களே கேட்டுக்கோங்க...ஜொள்ளர்களை ஏமாற்றவேண்டாம் என்றும், தன்னுடைய படம் ஒன்றை வெளியிட்டுக்கொள்ளுமாறும் தெரிவித்தார் நமீதா...

நன்றி நமீதா சிஸ்டர் !!!! என்னைய மச்சான்னு கூப்பிடுறவங்க எல்லாம் வரிசையா வந்து பின்னூட்டம் வைங்க, ஆங்...மறந்துடாதீங்க...கடைக்கு போவும்போது வயர் கூடையோ, சணல் பையோ எடுத்துக்கிட்டு போங்க...ப்ளீஸ்...

Monday, October 20, 2008
கஞ்சா குடிக்கி...
நமது கல்லூரிக்காலம் நமக்கு பல அனுபவங்களை கொடுக்குது இல்லையா....களவும் கற்று மறன்னு வேற சொல்லிட்டாரு நம்ம திருவள்ளுவர் தாத்தா...(எனக்கு அப்படி நியாபகம் இல்லையே: மனசாட்சி)...அட எவன் சொன்னா என்ன ? நாம இப்போ மேட்டருக்கு வருவோம்...
தம் அடிக்கிறவனை பார்த்திருப்பீங்க, தண்ணியடிக்கறவனையும் பார்த்திருப்பீங்க...கஞ்சா குடிக்கிகளை பார்த்திருக்கீங்களா ? தம் எல்லா ஊர் கடையிலயும் கிடைக்குது...டாஸ்மார்க் இல்லாத தெருவே இல்லை நம்மூருல இப்போ...ஆனா இந்த கஞ்சா எங்கே கிடைக்கிது உங்க ஊருல சொல்ல முடியுமா ? இந்த மேட்டர் நடந்து ஒரு எட்டு வருசம் இருக்கும்...
கஞ்சா விக்காத ஊரு எதுவும் கிடையாதுமோய்...கஞ்சா குடிக்கிக்கு தெரியும்...எந்த ஊருல எந்த தெருவுல கஞ்சா விக்குறானுங்கன்னு...நம்ம பெரிமா பையன் கோபுன்னு...இவன் ப்ளஸ் 2 முடிச்சிட்டு காலேஜில முதல் வருஷம்...நானும் முதல் வருஷம்...நான் படிச்சது திருச்சியில...இவன் ஊருலேயே புதுசா ஆரம்பிச்ச காலேஜில கம்பியூட்டர் சேர்ந்துட்டான்...
நமக்கு முதல் செமஸ்டருக்கு ஒரு பத்து நாள் லீவு..அதான் அப்படியே ஊருபக்கம் டச்சு பன்னிக்கிட்டு போயிரலாமுன்னு வந்திருந்தேன்...எப்போவும் இந்த கோபு நாயோட தான் சுத்துவேன்...சுத்துறதுக்கு பெரிய பெரிய இடமெல்லாம் கிடையாது எங்க ஏரியாவில...மொத்தமே நாலுதெரு...அதுல நடுவுல பஸ்ஸ்டாண்டு...அப்புறம் கடைத்தெரு...கபிலர் குன்று கோயிலு...தென்பெண்ணை ஆத்துல முருகம்பாற...உலகளந்த பெருமாள் கோயிலு..கேள்ஸ் ஐஸ்கூல்...பஸ்டாண்டை ஒட்டி பாய்ஸ் ஐஸ்கூல்...தெப்பக்குளம்...தபோவனத்து நீச்சல் கொளம் ( கிணறுதான்) அவ்ளோதான்...
வெள்ளிக்கிழமை ராத்திரி வந்திட்டேன்...நைட்டு வீட்ல சாப்ட்டு படுத்திட்டேன்..காலையில் ஏந்திரிச்சவுடனே ( ஒம்போது மணிக்கு) பெரிமா வீட்டுக்கு போனை போட்டேன்...பெரிமா, எங்கே அது...(வீட்ல தலைவருக்கு பயங்கர மரியாதைன்னு வெச்சிக்கங்களேன்)...அதுவா...காலையில ஏந்திரிச்சி முடிவெட்றேன்னு ஒரு இருவது ரூபாய வாங்கிக்கினு போச்சு...என்னா விஷயம் ? ......அப்படீன்னாங்க... ஒன்னுமில்ல பெரிமா சும்மாத்தான்...சரி பெரிமா நான் போனை வெச்சிடறேன்...
இவனுக்கு வீட்ல காச வாங்கறதுக்கு இத விட வேற ஐடியாவே கிடைக்காதே...என்று மனசுல நினைச்சிக்கிட்டே...எங்கே இருப்பான் இவன்....கழுதை கெட்டா குட்டிச்செவுரு...கோபு காலையில கிளம்பிட்டா அங்கவை சங்கவை பெண்கள் பள்ளி காம்பவுண்டு...அத்தை வீட்டு டீவிஎஸ் பிப்டியை எடுத்துக்கிட்டு ஒரு அழுத்து...வழக்கம்போல நாய் அங்கேதான் இருந்தது...என்னை பார்த்ததும் வாயெல்லாம் பல்லு...ஹி ஹி என்று இளித்தது...காரணம் இது "பச்சை பாவாடையில் வரவும்" என்று ஒரு ஸ்கூல் பொண்ணுக்கு லவ் லெட்டர் குடுத்த காலம் அது...
நலம் எல்லாம் விசாரித்து முடிந்த பிறகு, என்னடா...என்ன செய்யலாம்...என்று கேட்டபோது, கஞ்சா அடிக்கும் தன் முற்போக்கு திட்டத்தை முன்வைத்தது பன்றி கோபு...(குண்டாயிருக்கறதால பன்றி என்று பாசமுடன் அழைப்பது வழக்கம்)..அறகண்ட நல்லூர் (சங்க காலத்தில் அறம் கண்ட நல்லூர் - ஒரு ராஜா சாமியார் வேசம் போட்டுக்கிட்டு அவனை கொல்ல வந்தவனை மன்னிச்சி ஊருக்கு வெளிய உட்டுட்டு வரச்சொன்ன எடமாம்..தத்தன், முத்தநாதன் அப்படீன்னு பேரெல்லாம் ஸ்கூல் புக்ல வருமே...ராஜா பேரு மறந்திருச்சி...) ரயில்வே ஸ்டேஷன் போகலாம் என்பது தான் பிளான்...அதுக்கு முன்னாடி சைலோம் அருகில் பத்து ரூபாய்க்கு கஞ்சா பொட்லம் வாங்குவது...பிறகு சாதா சிகரட் ஒரு அரை பாக்கெட் வாங்கி அதில் போட்டு இழுப்பது...
குறு குறு என்று இருந்தது...தான் கஞ்சா குடிப்பதில் கின்னஸ் சாதனை செய்தது போல ஒரு கம்பீர பார்வை பார்த்தான் கோபு....டிவிஎஸ் பிப்டி மின்னல் வேகத்தில் பறக்க, சைலோம் அருகே வண்டியை நிறுத்தி ஒரு தம் அடித்துக்கொண்டிருந்தபோது அவசரமாக பத்து ரூபா கொடுத்து வாங்கிய பொட்டலத்தை கைலிக்குள் போட்டுக்கொண்டு, எடு எடு எடு வண்டியை என்று நாட்டாமை சரத்குமார் ஸ்டைலில் துள்ளினான் கோபு...
விரைவாக ரயில்வே ஸ்டேஷன்...சாதா கோல்டு பிளாக் முன்பே வாங்கியாச்சு...ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை மட்டுமே ரயில் வரும் மாநிலத்திலேயே சிறந்த ஸ்டேஷன்..."பயனிகளின் உடன் வருபவர்கள் ப்ளாட்பார்ம் டிக்கெட் வாங்கி செல்லவும்" என்று ஒக்கே ஒக்க போர்டு...இங்கிட்டு ஒரே ஒரு ப்ளாட்பார்மை வெச்சிக்கினு இந்த நாயிங்களோட அளும்ப பாருடா என்று திருச்சி பாசையில் ஒரு தெறிப்பு...
கஞ்சா இலை பொட்டலமாக வரும்...பத்து ரூபாய்க்கு ஒரு 50 கிராம் இலை இருந்தால் அதிகம்..அதை கையில் எடுத்து கொஞ்சம் கசக்கி, சாதா கோல்டு பிளாக் சிகரெட்டில் ( பஞ்சு வைக்காத சிகரெட்) இருக்கும் புகையிலையை கொஞ்சம் எடுத்துவிட்டு அதில் உள்ளே அடைத்து, மீண்டும் புகையிலையை வைத்து மூடி பத்தவெச்சு இழுக்க வேண்டியதுதான்...
ஆளுக்கு ஒரு சிகிரெட்டு தயாரித்தான் கோபு...ஏதோ பி.ஹெச்.டி வாங்கியவன் போல கையில் வைத்து உருட்டி நெளித்து இலையை அருமையான துகள்களாக மாற்றி சிகரெட்டில் அடைத்தான்...
காலை பதினோரு மணி இருக்கும் அப்போது...ப்ளாட்பார்ம் அருகில் வேப்ப மரத்து நிழலில் இருந்த மர பெஞ்சில் கஞ்சா பயணத்தை ஆரம்பித்து, கஞ்சா குடிக்கி என்ற பட்டத்தை பெறும் வேளை...
ஒரு நாலு இழுப்பு...லைட்டா தலை சுத்துது...கோபுவுக்கும் தான்.....அவன் அதிக கஞ்சாவை சுயநலத்தோடு அடைச்சிக்கிட்டான் போலிருக்கு...பய அப்படியே பெஞ்சில சாயறான்...நான் இன்னோரு இழுப்பு இழுத்துக்கிட்டே நாங்க நிறுத்தின டி.வி.எஸ் பிப்டி பக்கம் கழுத்தை சாச்சு வண்டி இருக்கான்னு பாக்கறேன்...கண்ணுல பட்டாம் பூச்சி பறக்குது...
டேய் வாடா, தண்டவாளத்தில தலைகானி இருக்கு...அங்கே படுக்கலாம் என்கிறான்...ழேய் வேழாண்டா என்று வாழ் குழற ழொல்லுறேன்...
தண்டவாளத்துல பழுக்க வேழாண்டா, டிழெயிழ் வழும் என்று சொல்லுவது அவன் காதில் விழுவதாக தெரியலை....
எங்க ஊருக்கு வரும் ஒரே ட்ரெயின் காலை மணி 12 க்கு வரும் என்பது தெரியும்...தொலைவில் ட்ரெயின் வரும் குக்கூ சத்தம் கேக்குது...அது ஏதோ மண்டைக்குள்ளே ஒலிக்கிற மாதிரி இருக்கு...
தண்டவாளத்துக்கு போக முயற்ச்சி செய்யறவனை இழுத்து ப்ளாட்பார்ம் பெஞ்சுல போழ முயழ்ச்சி செய்யழேன்...
பழ்ழி, என்னா கழம் கழக்குது என்று சொல்லிக்கொண்டே பெஞ்சுக்கு இழுத்துவந்துவிட்டேன்...
விஷயம் என்னன்னா ட்ரெயின் மிக அருகில் வந்துவிட்டது...நான் கோபுவை இழுக்கும்போது ட்ரெயின் கிட்டத்தட்ட நூறு மீட்டர் தூரத்தில் இருக்கு...அதுதான் ரயில் ஓசை மண்டைக்குள் ஒலித்தமாதிரி ஒரு ப்ரமையை ஏற்ப்படுத்த காரணம்...ஸ்டேஷன் இன்சார்ஜ் யாரும் இல்லை, காரணம் தெரியவில்லை...
ஒரு வழியாக அவனை இழுத்துவந்து பெஞ்சில் படுக்க வைத்து, நானும் படுத்து தூங்கி, எழுந்தோம்...டிவி.எஸ் வண்டி அப்படியே இருந்தது...அடி பம்பில் தண்ணி அடித்து முகம் கழுவி, அவன் மூஞ்சியில் கொஞ்சம் ஊத்தி எழுப்பி இழுத்துவந்து வண்டியில் ஏறு டா என்றேன்...
அவன் கொஞ்சம் தெளிவாகியிருந்தான்...
என்னை பார்த்து சொன்னான்....
பிரதர்...பாத்து வண்டி ஓட்டுங்க...கஞ்சா எல்லாம் போட்ருக்கீங்க...எங்கியாவது சொருவிடப்போறிங்க.....முடியலன்னா சொல்லுங்க...நான் ஓட்றேன்...
நான் வண்டியை நிறுத்தி, திரும்பி, எரித்துவிடுவது மாதிரி பார்த்தேன்...
நான் ரசிக்கும் சூப்பர் கன்னட பாடல் !!!
ஏதோ ஒரு அதிர்வு உள்ள பாடல் இது...முழுமையாக பார்த்தால் உங்களுக்கே புரியும்...படத்தில் ஆடுபவர் ராஜ்குமார் மகன்...!!! படம் மிலனா !!! கூட ஆடுற அழகி யார் என்று தெரியவில்லை...அழகிய சிரித்த முகம்...!!!
கத்து கத்து நோடுன்னா கன்னடத்துல மொறைச்சு மொறைச்சு பாக்குறதுன்னு அர்த்தம்...உங்களுக்கு உண்மையிலேயே முழு பாடலோட அர்த்தம் வேனும்னா பின்னூட்டத்துல கேட்கவும்...!!!
இந்த சீரீஸ்ல இன்னும் ரெண்டு கன்னட பாடல்களையும் போடலான் என்றுள்ளேன்...!!! இதுல நீங்க அடிக்கிற கும்மிய பொறுத்து !!!!
அப்புறம் கேப்பங்கஞ்சி வித் கவிதாவுடன் செந்தழல் ரவி படிச்சுட்டீங்களா ? படிக்கலைன்னா இங்கே க்ளிக் !!!!
Sunday, October 19, 2008
தமிழக கிறிஸ்தவர்களிடையே சா'தீ'யம்...பாதிரியார்களையும் விட்டுவைக்கவில்லையே...
தமிழகத்தில் சாதீயத்துக்கெதிராக முழு அளவில் போராட்டம் நடத்தியவர் என்றால் அது பெரியாரை மட்டும் தான் சொல்லமுடியும்...அதன் பிறகு பல பெரிய தலைவர்கள் உருவானாலும் (திரைத்துறையில் இருந்து அதிகபட்சமாக), உருப்படியாக சாதியை எதிர்த்து அறிக்கை கூட விட முடியாத நிலையில் இருக்கிறார்கள் இந்த ஓட்டுப்பொறுக்கிகள்...
சாதியை எதிர்த்து - இரட்டைக்குவளை ஒழிப்பு என்று பெரியார் தி.க / கொளத்தூர் மணி தலைமையில் போராட்டம் நடத்தியது எனக்கு தெரிந்தவரை சாதீய எதிர்ப்புவாத போராட்டம்...
தமிழக இசுலாமியர்களிடையே சாதீயம் இருக்கிறதா என்பது பற்றி எனக்கு தெரியாது...ஆனால் தமிழக கிறிஸ்தவர்களிடையே இருக்கும் சாதீயம் - படு கேவலமானது...
பாதிரியார்கள் பாப்பாக்களை கர்ப்பமாக்கும் மேட்டர் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுவது...ஆனால் இந்த சாதீயம், தமிழகத்தில் வாழும் அத்துனை கிறிஸ்தவர்களிடமும் ஒட்டிக்கொண்டுள்ளது...(பெரும்பான்மையாக)...

பொதுவாக கிறிஸ்தவ மதத்தினர் என்றால் அனைவரும் நினைப்பது அவர்கள் அனைவரும் தலித் / தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அல்லது மீனவர்கள் என்றுதான்...ஆனால் அப்படி இல்லாமல், நாடார், செட்டியார், தேவர், முதலியார், உடையார், வேளாளர், பிள்ளைமார் என்று எல்லா சாதியிலும் கிறிஸ்தவர்கள் உள்ளனர்...
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தலித் கிறிதவர்கள், கடலோர மாவட்டங்களான நாகை, கன்னியாக்குமரியில் மீனவர்கள், திருநெல்வேலி பகுதியில் நாடர்கள்,தஞ்சை பகுதியில் முதலியார்கள், திருச்சி பகுதியில் பிள்ளைமார்கள்,புதுக்கோட்டை பகுதியில் தேவர்கள்,விழுப்புரம்,திண்டிவனம்,கடலூர் பகுதியில் வன்னியர்கள், பாளையங்கோட்டை பகுதியில் வேளாளர்கள் என்று எல்லா சாதியிலும் எல்லா பகுதிகளிலும் பரவிக்கிடக்கிறார்கள்...
இதில் எங்கே வந்தது சாதீயம் என்கிறீர்களா ? கிறிஸ்தவராக இருந்தாலும் அவரவர் சாதியில் தான் பெண் கொடுப்பதும் எடுப்பதும் செய்கிறார்கள்...அதிலும் உட்பிரிவெல்லாம் சரியாக இருக்கவேண்டும்...
கிறிஸ்தவ மதத்தில் திருமணத்துக்கு முன்பாக பங்கு கோயிலில் ( Local Church) பதிவு செய்யவேண்டும்...மூன்று வாரங்களுக்கு அதனை ஞாயிறு பூசைகளில் (Mass) பங்கு தந்தை (Parish Priest) படிப்பார்...திருமணத்துக்கு ஆட்சேபம் தெரிவிப்பவர்கள் தெரிவிக்கலாம் என்று அறிவிப்பார்கள்...
இந்த முறையில் இந்த திருமணம் சிறப்பாக நடைபெறுவதையும், மணப்பெண், மணமகன் இருவரையும் பங்கு தந்தை நேரில் சந்தித்து அளவளாவுவதையும் ஒரு சடங்காக வைத்துள்ளார்கள்...
நான் இந்த பதிவில் பேச வந்த விடயம் அது அல்ல...உடையார்கள் அதிகமாக உள்ள கிராமத்தில் ஒரு தலித் பாதிரியார் பணி செய்ய இயலாது...அப்படி பணி செய்தாலும், திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் உடையார் சாதியை சேர்ந்த பாதிரியாரை அழைத்து வந்தே செய்வார்கள்...

மேலும் அதிக வருமானம் வரும் பங்கு கோயில்களில் (உதாரணம் : வேளாங்கண்ணி மாதா கோயில்), குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே பங்கு தந்தையாக அமர்வார்கள்...அப்படி வேறு சாதியினர் அந்த கோயிலில் நியமிக்கப்பட்டால், பிஷப் வரை சென்று அவரை மாற்றும் வரை ஓயமாட்டார்கள் அந்த சாதியினர்...
மேலும் பங்கு கோயில்களில் வரும் வருவாயில் நன்றாக குடிப்பது, பெண் சகவாசம் வைத்துக்கொள்வது என பாதிரியார்கள் கூத்தடிக்கிறார்கள்...குடிக்காத, புகைக்காத சாமியார்களை தமிழகத்தில் விரல்விட்டு எண்ணிவிடலாம்...
பிஷப் ஹவுஸ் என்பது வெளிநாட்டு நிதியம் குவியும் இடம்...பொதுவாக மாவட்ட தலைநகரங்களில் இருக்கும்...அங்கே இந்த செயலாளர், அந்த செயலாளர் என்று நியமன உத்தரவை பிஷப் இடம் இருந்து வாங்கிவிட்டால் நல்ல துட்டு பார்க்கலாம் என்பதே நிலை...
அதனால் பாதிரிமார்கள் பெரிய தொகையை லஞ்சமாக கொடுத்து, இது போன்ற பதவிகளை பிடிக்கிறார்கள்...இதிலும் பாதிரியார் குறிப்பிட்ட சாதியினராக இருந்தால்தான் பதவி கிடைக்கும்...
மேலும் டீச்சர் ட்ரெயினிங் முடித்தவர்கள் பதிவு செய்யும் மாவட்ட தலைநகரில் - பிஷப் ஹவுஸில் லஞ்சம், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் படிக்கும் இடத்துக்கு லஞ்சம், நல்ல வருமானம் உள்ள ஊரில் பாதிரியாராக பணிபுரிய லஞ்சம் என எங்கெங்கு காணினும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது...
ஹும்...இவர்கள் தான் மக்களை இயேசுவின் வழியில் இறைவனிடம் கொண்டுசெல்லப்போகிறார்களாம்...ஒரு லோன் போட்டு பணத்தை கொடுத்து நேராக சொர்க்கத்துக்கு ரெண்டு டிக்கெட் சொல்லப்போகிறேன்...வாரீயளா...

Subscribe to:
Posts (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
நேற்று காலைவரை எனக்கு எதுவும் தெரியாது! நான் வலையுலகிற்கு வாடிக்கையாளனுமில்லை! எப்பொழுதாவது வந்துபோவேன்!! எதேச்சையாய் நேற்று நுழைந்ததில்,எல...