தீபா : திரைவிமர்சனம்
படத்தை டி.வி.டியில் பார்க்க நேர்ந்தது...நேரம் கிட்டத்தட்ட அதிகாலை....அரைத்தூக்கம்....ஆங்காங்கே பார்ஸ்ட் பார்வர்ட் அடித்து பார்த்ததால்...படத்தை பாதி பார்த்தேன் என்றால் அது உண்மையானதொரு கூற்றுதான்...அதனால்தான் தீபாவளி(லி) படத்தை "தீபா" விமர்சனம் என்று சொல்லுகிறேன்...
படத்தை பற்றிய ஒரு க்விக் லுக்...டைரக்டர் லிங்குசாமிதான் தயாரிப்பாளர்....எஸ்.எழில் இயக்கம்...யுவன் ஷங்கர் ராஜா இசை...பெருத்த எதிர்பார்ப்போடுதான் பார்க்க ஆரம்பித்தேன்...எல்லா நேரமும் நமது எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில்லையே...என்ன செய்ய...
படத்தில் ஜெயம் ரவி / பாவனா இணைந்து நடித்திருக்கிறார்கள்...விஜயகுமார் ஒரு மொக்கையான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்...வையாபுரி இருக்கிறார்...மகாநதி ஷங்கர் இருக்கிறார்...வேறு யார் யாரோ இருக்கிறார்கள்...அதை விடுங்க...முக்கியமான விஷயத்துக்கு வருவோம்...
நம்ம ஜெயம் ரவிக்கு இந்த படத்தில் ப்ரமோஷன் கிடைத்திருக்கிறது....என்ன ப்ரமோஷன் என்று கேட்கிறீர்களா ? கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்..அதாவது முந்தைய படங்களில் பை வாக் போய்க்கிட்டிருந்தார்...இந்த படத்தில் எதுக்கெடுத்தாலும் ப்ளையிங் தான்...நோ வாக்கிங்...பைட் சீன்களில் கயிறை கட்டி பறக்க வைத்திருக்கிறார்கள்.....படத்தை விளம்பரம் செய்யும்போது, தூள் பறக்கும் சண்டைக்காட்சிகள் என்று விளம்பரம் செய்யாமல், ஜெயம் ரவி பறக்கும் சண்டைக்காட்சிகள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.....பாவம் புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்த நியூட்டன் பார்த்தால் நாண்டுக்கிட்டு செத்துப்போவார்...
படத்தில் ஜெயம் ரவியின் பெயர் 'பில்லு'...அசமஞ்சமாக அரைத்தூக்கத்தில் 'பில்லு' 'பில்லு' என்று விழுந்தது...நான் படத்தில் எதோ ஒரு காட்சியில் எவனோ கரண்ட் பில் கட்டவோ, மாட்டுக்கு பில்லு போடவோ போகிறான்கள் என்று நினைத்தேன்...பிறகுதான் தெரிஞ்சது அது ஜெயம் ரவியோட பேருன்னு..பில்லு பில்லு என்று ஒரே பில்லா இருக்கு படத்தில்...கண்டிப்பாக யாராவது வேலை மெனக்கெட்டு கணக்கெடுத்தால் ஒரு ஆயிரம் முறையாவது உச்சரிக்கப்படுகிறது இந்த 'பில்லு'...
சில சமயம் ஹீரோயினால் பில்லூலூ என்று செல்லமாக....சில சமயம் ரவுடிகளால் "டேய் எவண்டா பில்லே..." என்று அழுத்தமாக...சிலசமயம் படித்த பண்பாளர்கள் 'பில்'...டைரக்டர் கரண்டு பில்லாலோ, போன் பில்லாலோ பாதிக்கப்பட்டிருப்பார் போல...அதான் பில்லை அடிங்கடா...பில்லை வெட்டுங்கடா...பில்லை குத்துங்கடா...பில்லை தீத்துருங்கடா என்று பில்லை அதகளப்படுத்தி பழிவாங்குகிறார்...
ஆங், படித்த பண்பாளர் என்று சொன்னேனே...அது வேறு யாரும் இல்லை...நம்ம ரகுவரன் தான்...மெத்த படித்த டாக்டராக வருகிறார்...நரம்பு சம்பந்தமான அம்னீசியா நோய்களை கரெக்ட் செய்யும் டாக்டர்...பக்கா டீசண்டாக கோட்டு சூட்டுதான் காஸ்ட்டியூம் தலைவருக்கு...ஒரு புரியாத நோயை மனப்பாடம் செய்துவைத்திருக்கிறார்...பிறகு 'பில்லு' எப்ப போன் செய்தாலும் பக்கா டீசண்டாக பதில் சொல்லுகிறார்....ஹீரோயினுக்கு வந்துள்ள வியாதியை ஹீரோவுக்கு விளக்குகிறார்...
அட அதையும் ஓப்பன் பண்ணிட்டனா...ஹீரோயினுக்கு வியாதிங்க...என்னன்னு டீட்டெயிலா கேக்காதீங்க...சரி பரவால்லை சொல்லிடறேனே...அது ஒரு கொடுமையான வியாதிங்க...அதாவது மூனு வருஷத்துக்கு முன்னால நடந்த ஒரு கார் ஆக்ஸிடெண்டுல தலையில் அடிபட்டு பழைய விஷயங்கள் எல்லாம் மறந்திடுது....இப்போ மேட்டர் அது இல்லை...ஹீரோயின் யாரை பார்த்தாலும் அவங்களை ஹீரோயினால நியாபகம் வச்சுக்க முடியலியா...அதனால அவங்க ஹீரோயினை "என்னை தெரியலியா, மறந்துட்டியான்னு" கேட்டா ஹீரோயின் மகா எரிச்சல் ஆகிறாங்க....அதனை மறக்கத்தான் ஹீரோயின் சென்னை ராயபுரத்தில் இருக்கிற, முன்பு தன்னோட தந்தையிடம் வேலை பார்த்த சேட்ஜி ( சத்தியமா அந்த மாதிரி தெரியலை இவரைப்பார்த்தா) வீட்டுல வந்து தங்குறாங்க...அங்கதான் ஹீரோவை மீட்டிங்...அதை விடுங்க...
சேட்ஜி பொண்டாட்டியா நம்ம தேவதர்ஜனி..இவங்க லோக்கல் பாஷை பேச முயற்சி செய்யுறதை பார்க்க பக்கா காமெடியா இருக்கு...அதை விட கொடுமை ஹீரோவோட அப்பா விஜயகுமார் சென்னை பாசை பேசுறது....லூஸ்ல விடுங்க அதெல்லாம்...
நம்ம ஹீரோ பயங்கர பலசாலிங்க...அது எப்படின்னா, ஹீரோயினோட அப்பா தாடிக்கார தம்புசாமி தன்னோட பொண்ணை ஜெயம் ரவிக்கு கட்டிக்கொடுக்க மறுத்து, திரும்ப பெங்களூருக்கே கூட்டிக்கினு போறாரு...அப்போ சண்டைக்கு வர்ற பிளையிங் ஜெயம் ரவியை பின்னால் இருந்து தாக்குறார் ஒரு முடிவளத்த சடையாண்டி...அப்புறம் நேஷனல் ஹைவேஸ்ல முட்டிபோடவச்சி லாரி முட்டிபோகட்டும்னு உடறானுங்க...லாரி ஜெயம் ரவிமேல பட்டு அப்படியே ப்ளையிங் ஆவறார் பாருங்க...
என்னத்தை சொல்ல...
அங்கங்கே பெங்களூருவை காட்டுறாங்கப்போய்...போரம், நேஷனல் ஹைவேஸ்ல பெங்களூர் இத்தனை கிலோமீட்டர் என்று போட்ட போர்டு, எல்லாம் அப்படியே பெங்களூரை நியாபகப்படுத்துங்க...
கடிசியில் இன்னா ஆச்சுன்னு டி.வி.டி திரையில் காண்க....இந்த திரைப்படத்தை மாஸ் மூவிங்கறாங்க...தெலுங்குல வேற ரீமேக் பண்ணப்போறாங்களாம்..(ஹி ஹி, நேரக்கொடுமை...!!!)...
தீபாவளி = தீபாவலி !!!
######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################
26 comments:
kayamai.
ரவி,
பில்லு விடுங்க, சுசி அப்படினு ரவி எத்தனை தடவை அந்த படத்தில் கூப்பிடுறார் அப்படினு ஒரு போட்டி என்ன கின்னஸ்க்கே அனுப்பலாம்
பில்லு விமர்சனம் அருமை..சுசிக் கொடுமையும் இருக்கு..லிங்குசாமி இதை விட நல்லா நொந்து விமர்சனம் எழுதுவார்..
எப்படித் தான் இத எல்லாம் remake செய்ய துணியுறாங்களோ :)
சுசிக்காக, ச்சி பாவனாவுக்காக மன்னிச்சு விடலாம்.
படம் நேத்துதான் வீட்டுக்கு வந்துச்சு.
இப்பப் பாக்கணுமா வேணாமான்றதுதான் பெரிய தலை'வலி'
//சுசிக்காக, ச்சி பாவனாவுக்காக மன்னிச்சு விடலாம். //
யோவ்வ்வ்வ்வ்வ்வ்
உன்னைய எல்லாம்....
சிவா, எங்கே இருக்கு அந்த நட்சத்திர பதிவு...
ஒரு லிங்கை தாங்கோ...!!!
டீச்சர், பார்த்த்ருங்க...நாங்க மட்டும் கொடுமைய அனுபவிப்போம்...நீங்க கிடையாதா ?
:)))))))))))))
பில்லுன்னு கூப்பிடுவதே ஒரு லொள்ளு.. நான் ஏதாச்சும் நாய் பூனைக்கு வைக்கிற பெயரை இப்படி கதாநாயகனுக்கு வச்சிருக்காங்க!
அப்பால, அந்த "போகாதே" பாட்டுல லக்ஷ்மண் ஜூலா கணக்கா, ஒரு பாலம் காட்டுறாங்களே ரவி, அது நெசமாவே பெங்களூரா? அந்தப் பாலத்தை மட்டும் நெறைய பாட்டுல, நெறைய முறை காட்டிட்டாங்க.. அது பெங்களூரு தானான்னு சந்தேகம் எனக்கு.. எங்க வருது?
அந்த பாலம் பெங்களூர் தான்..ஓல்டு மெட்ராஸ் ரோட்ல கே.ஆர் புரம் நோக்கி போனால் வருது...
எனக்கு பர்ஸ்ட் முறை அந்த தொங்கும் பாலத்தையும் ப்ரம்மாண்டமான தாங்கி நிற்கும் ரோப்களையும் பார்த்தபோது ஆச்சர்யமா இருந்தது...
டைரக்டர் பெங்களூருக்கு பர்ஸ்ட் முறை வரார் போல...அதனால் சுத்தி சுத்தி அந்த பாலத்தை காட்டிட்டார்...
நல்ல ட்ராபிக் நேரத்திலும் இந்த பாலத்தில் அழகாக போலாம்..
:)))
நேத்துப் பல்லைக் கடிச்சுக்கிட்டு மகா தில்லோட இந்த பில்லுவைப் பார்த்தேன்.
நல்லா கைமாக் கொத்திட்டாங்க நம்மளை(-:
நம்ம வீட்டுலே ஒரு பழக்கம். படத்துலே வர்ற ஒரு பேரை அந்தந்த சமயத்துக்கு
நம்ம கோபாலகிருஷ்ணனுக்கு வச்சுக் கூப்புடறது. நேத்து முதல் அவன்'பில்லு'
பில்லு வாடா..........
பில்லு வண்ட்டான்.......
பில்லு மரியாதையாக் கொடுக்கறதைத் தின்னு,
பில்லு........ துணிக்கூடையில் படுத்து தொவைச்ச துணிகளை நாசம் பண்ணாதே.......
ரவி,
ஒண்ணு சொல்ல விட்டுப்போச்சேப்பா.
ஜெயம் ரவிக்கும் உங்களுக்கும் கொஞ்சம் முகச்சாடை ஒண்ணுபோல இருக்கேன்னு
நேத்துப் படம் பாக்கறப்ப நினைச்சுக்கிட்டு இருந்தேன். இப்ப உங்க பதிவுலே இருக்கற உங்க
படத்தை கோபால்கிட்டே காட்டுனதுக்கு அவரும் 'ஆமாஞ்சாமி' போட்டுட்டார்.
துளசியக்கா!
என்னதான் இருந்தாலும் ஜெயம் ரவியை நீங்க இந்த அளவுக்கு ஓட்டக்கூடாது!
16
17
18
19
20
21
22
23
24
டெஸ்ட்
Anonymous said...
16
Friday, March 16, 2007
Anonymous said...
17
Friday, March 16, 2007
Anonymous said...
18
Friday, March 16, 2007
Anonymous said...
19
Friday, March 16, 2007
Anonymous said...
20
Friday, March 16, 2007
Anonymous said...
21
Friday, March 16, 2007
Anonymous said...
22
Friday, March 16, 2007
Anonymous said...
23
Friday, March 16, 2007
Anonymous said...
24
Friday, March 16, 2007
Anonymous said...
டெஸ்ட்
Friday, March 16, 2007
inthaa vechikko
EXAMMMMMMMMMMMM
Post a Comment