வெள்ளிக்கிழமை நைட்டு ஸ்டார் மூவிஸ் பலான படம் கண்ணுமுழிச்சு பார்த்த எபெக்டோ அல்லது மிட்நைட் மசாலா பார்த்த எபெக்ட்டோ சரியாக நியாபகம் இல்லை....படுக்கையில் பக்கத்தில் கிடந்த அலைபேசி டண்டடக்கு டண்ண்டக்கு டண்டக்கு டண்ண்ட்டாக்கு என்று சூரியன் படத்தில் கவுண்டமணி சொன்ன ஸ்டார்ட் மீயூசிக் ரிங்டோனில் அலறியது...
பதறி துடித்து எழுந்து மணி பார்த்தால் காலை மணி ஆறு முப்பது...எவண்டா இவன் இந்த மிட்நைட்ல நமக்கு போன் பன்றவன் என்று கொலைவெறியோடு ப்ளிப் டைப் மொபைலை பிரித்து காதுக்கு கொடுத்தால் எதிர் முனையில் வலையுலக பெண் ஈய விரோதி (எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் நேரம் வரும் லாலலலா லாலல்லா) மோகன்தாஸ் லைனில்...
யோவ்....ஆசிப் அண்ணாச்சி எங்க வீட்ல இருக்காரு...எப்போ வரீங்க என்று எதிர்முனையில் அலறுகிறார்....நீங்க பேசிக்கிட்டிருங்க, இந்தா வந்துடுறேன் என்று சமாளித்து போனை வைத்துவிட்டு மறுபடியும் போர்வைக்குள் புகுந்து தூக்கத்தை கண்டினூ செய்யலாமுன்னு பார்த்தா...ம்ஹும்...பொட்டுத்தூக்கம் வரமாட்டேங்குது....போகன்தாஸை மனதுக்குள் சபித்துக்கொண்டே இப்படியும் அப்படியுமாக புரண்டு படுத்துக்கொண்டிருந்தபோது மணி ஏழரை...
சமீபகாலமாக என்னுடைய ஆக்டிவிட்டீஸை பார்த்துவிட்டு தினமும் காலையில் எலுமிச்சம் பழத்தை தலையில் நச்சநச்சவென்று தேய்த்து குளிக்கவேண்டும் என்று பக்கத்து புற்றுமாரியம்மன் கோயில் (எங்க வீட்டுக்கு பக்கத்து பில்டிங் இந்த கோயில்) பூசாரி சொன்னதாக எதிரிவீட்டு ஆண்ட்டி சொல்லி, அந்த எலுமிச்சம்பழத்தை நானே தான் வாங்கிவரவேண்டும் என்று அம்மா சொல்லி, எழுந்து ஒரு ட்டீ ஷர்ட்டை மாட்டிக்கொண்டு வெளியே வருகிறேன்...(உண்மையில் எலுமிச்சம்பழம் ஜூஸ் புழியத்தான் ஓக்கே...சந்தேகப்படாதீங்க)
அப்படியே கடையில் இருந்து மோகனா நம்ப்பருக்கு ஒரு காலை போட்டேன்...ஆசிப் அண்ணாச்சி என்னை வள் புடுங்கியத்தை பற்றி விசாரித்தார்...(மக்கா...என்னைய வெச்சி காமெடி கீமடி பண்ணல்லியே...நல்லா இருங்கடே)...வள் ??...ஆமாங்க அது தான்...அதை எப்படி என் வாயால சொல்லுவேன்...வெந்த புண்ணுல வெரலை பாய்ச்சுறமாதிரி, இந்த அண்ணாச்சி வேற "அது நல்லா இருக்கா...அதுக்கு ஒன்னும் இல்லையே...அது இப்ப எப்படி இருக்கு...அது இப்ப எங்க இருக்கு.." என்று என்னை விட்டுவிட்டு அதையே விசாரித்துக்கொண்டிருந்தார்...நற நற....
பிறகு ஒரு ஒன்பதரைக்கு ஒரு முறை அழைத்தபோது, இருவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்...ஹரி ஹரி என்றேன்..( அதாவது வேகமா...நம்ம ஹரிஹரனை நான் சொல்லுகிறேன் என்று இல்லை...அதனால் நீ அடிவருடி நுனிவருடி என்று சொன்னால் அதற்கு நான் பொறுப்பல்ல)...பிறகு ஜல்தியாக (நீ கெட்ட கேட்டுக்கு ஹிந்தி வேற...) கிளம்பி கார்சாவியை பொறுக்கிக்கொண்டு இரண்டு அனானிகளை நேராக லால்பாக்குக்கு வரச்சொல்லிவிட்டு, சரியாக பத்தரைக்கு லால்பார்க் கண்ணாடி மாளிகையை அடைந்தேன்...மோகனாவுக்கு ஒரு மிஸ் கால் கொடுத்தேன்...யாராவது போனை எடுக்கிறார்களா என்று பார்த்ததில் கண்ணாடி மாளிகைக்கு அந்தப்பக்கம் இருவர் அமர்ந்திருப்பது தெரிந்தது..அதில் ஒருவர் போனை எடுத்து காதுக்கு கொடுத்தது தெரிந்ததும் போனை நான் இந்த முனையில் கட் செய்தேன்...அதைத்தான் மிஸ் கால் என்றேன்...
தரவாத்தா ( தெலுங்குல அதுக்கப்புறம்னு அர்த்தம்)...நேரே ஆசிப் அண்ணாச்சியும் மோகனாவும் அமர்ந்திருந்த இடத்துக்கு சென்றேன்...ஆசிப் அண்ணாச்சி கருப்பு நிற ரே பாண் பீடா கூலிங் கிளாஸ் போட்டு அமர்ந்திருந்தார்...ஆள் நல்ல இளமையாக தெரிகிறார்...இளவட்டங்களிடம் மிகவும் ஜாலியாக பேசுகிறார்...என்னதான் வயசானாலும் அதை காட்டிக்கொள்ளாமல் (!!!!!) இளவட்டங்களிடம் (போதும்டே) சாலியாக பேசுவதிலும் பழகுவதிலும் தனக்கு நிகர் தான் தான் - சாத்தாங் குளத் தான் தான் என்று நிரூபித்தார்...ஆனால் பேச்சில் அவ்வப்போது சாத்தாங்குளத்தை இழுத்து, அதுல என்னமோ சாண்டாக்குரூஸ் ஏர்போட் அமைந்திருப்பதுபோல் ஒரு பில்டப் சீன் கொடுத்தார்...தானும் ஒரு பொட்டி தட்டி தான் என்பதையும் விளக்கினார்...
அதுக்கப்புறமாக அண்ணாச்சி உற்று நோக்கிய இடம், இளம்பெண்கள் ஹேண்ட் பால் ஆடும் இடம் ( வாலிபால் மாதிரியான பந்துடம் ஆடும் ஆட்டம்)...அங்கே சென்று அருகே உள்ள பெஞ்சில் அமர்ந்தால் நல்ல இயற்கை காட்சி கண்களுக்கு கிட்டும் என்று உறுதியான குரலில் தெரிவித்தார் (அண்ணி கவனிக்க)...அவருக்கே அப்படின்னா எங்களை போன்ற (?!) இளவட்டங்களுக்கு எப்படி...அதனால் அங்கேயே சென்று அருகேயே அமர்ந்து (இதற்க்டையே - பந்து பொறுக்கி போடலாம் என்ற என்னுடைய யோசனையை நிராகரித்து, ஒரு வ்ரலாற்று பிழை செய்தார் அண்ணாச்சி) அழகாக ரசிக்க ஆரம்பித்தோம்....வெட்டியாக வளையவந்த ஒரு ஒட்டு மாங்காய் கடைகாரனை அருகில் அழைத்து ஒரு முழு மாங்காய் உப்பு காரத்துடம் ஸ்பான்ஸர் செய்து மாநாடு சிறக்க உதவி செய்தார்...( அத்து ரூபாய் - அதான் பத்து ரூபாய் கன்னடத்துல)
ஆட்டம் அப்படியே சூடு பிடிக்க, ஏன் மோகன்தாஸ் பெண் ஈயத்துக்கு எதிராக முழங்குகிறார் என்று நான் கேட்டுவைத்தேன்...ஆனால் அப்படி எல்லாம் இல்லையாம்...மேலும் அவருக்கு எதிரானதாக வலையுலகில் இருக்கும் அக்காக்கள் எல்லாரிடமும் அவர் மடல்தொடர்பு வைத்துள்ளதோடு, தோழமை உணர்வுடன் பழகி வருகிறாராம்...(பத்த வெச்சுட்டயே பரட்டை)...இதை அவரே சொன்னார்...(அப்ப உண்மையாத்தான் இருக்கும்...)
அடுத்ததாக இராம் ஓசை செல்லாவுடன் வந்துவிட்டதாக அலைபேசி தகவல் வர, மிண்டும் க்ளாஸ் ஹவுஸ் பக்கம் நடையை கட்டினோம்...அங்கே ஓசை செல்லா (அம்மைக்கு பிறகு - உடல்நிலை இப்போ தான் தேறி வருகிறது என்று அவரை பார்த்தாலே தெரியுது ) மற்றும் இராம் ( புள்ள முன்னைக்கு இப்ப கொஞ்சம் கலரா தெரியுதே...எல்லாம் பெங்களூரு கிளைமேட்டு செய்யுற மாயம்...மதுரையில நாலு நால் காய வெச்சா திரும்ப பார்முக்கு வந்துருவாருன்னு நினைக்கிறேன்)....அப்படியே அந்த ஏரியாவில் காணக்கிடைத்தவர்கள் கோவிந்த், கவிதை கலக்கல்ஸ் பத்மப்ரியா, வலையுலக டெக்னிக்கல் சூறாவளி தீபா ( பட்டம் போதுமாத்தா), பிறகு அனானிகள் (தங்கராஜ் மற்றும் அர்ச்), அப்புறம் இன்னோரு நன்பர்...
பிறகு அமர வசதியான இடம் தேடி செல்கையில் காண்ப்ரன்ஸ் ரூம் அமைப்போடு எதிர்ப்புறம் இரண்டு நீள கருங்கல் பலகைகள், முன்னும் பின்னும் இரண்டு குட்டி கருங்கல் பலகைகள், மற்றும் டேபிள் அமைப்பில் பெரியதொரு கருங்கல் பலகை என அருமையானதொரு இடம் கிடைத்து, ரவுண்டு கட்டி அமர்ந்தோம்...ஸ்பேராக ஒரு பலகை பெஞ்ச்...அதில் அனானிகள் அமர்ந்தனர்...
அப்படியே ஐயப்பன் வருகிறார் என்று தகவல் கிடைத்து அவருக்காக ஒரு ஐந்து நிமிடம் காத்திருப்பு...மனைவி குழந்தையோடு பழனி முருகன் கோயிலுக்கு எலுமிச்சை சாதம், புளி சாதத்தோடு டூர் போகும் அமைப்பில் வந்து சேர்ந்தார்...பதிவர்கள் கையோடு கொண்டுவந்திருந்த பல வகை காமிராக்களை எடுத்து டேபிள் மீது விரிக்கப்பட்டு, ஓசை செல்லாவின் தமிழ் வலைப்பதிவில் முதல் முறையாக "காமிராவை கையாள்வது எப்படி, புகைப்படம் எடுப்பது எப்படி ?" என்ற - புகைப்படக்கலை பற்றியதானதொரு செஷன் ஆரம்பமானது....இந்த முயற்சி ஒரு அருமையானதொரு முயற்சி என்பதில் ஐயப்பனுக்கு கூட ஐயமில்லை...ச்ச்சும்மா ஒரு எதுகை மோனை...ஐயப்பனுக்கும் இதில் அதிக ஆர்வம் என்பதில்லாமல், செல்லாவுடன் அவரும் ப்ல டெக்னிக்கல் தகவல்களை வழங்கினார்...
புகைப்படக்கலை பற்றியதான கருத்தரங்கு என்பதால் அவ்வப்போது புகைப்படங்களை சுட்டு அது எப்படி, இது எப்படி என்று உடனுக்குடன் காட்டியது எக்ஸலண்ட் மாஸ்டர்பீஸ் என்றால் அது மிகையல்ல...பல டெக்னிக்கல் விஷயங்களில் உடனடியாக மண்டையில் ஏறியது... அப்பார்ச்சர் என்றால் என்ன, அதை எப்படி செய்வது என்பது....நாம் போட்டோ எடுக்கும் சப்ஜெக்ட் ( நாங்க இனிமே அப்படித்தான் சொல்லுவோம்...நீங்களே எங்க எதிர்ல நின்னாலும் நீங்க சப்ஜெக்ட் தான்...)...ஆங் சப்ஜெக்ட் எங்கே இருந்தால் படம் நன்றாக இருக்கும், ப்ளாஷ் எப்படி வைப்பது, ஏன் ப்ளாஷ் வைக்கவேண்டும், எஸ்.எல்.ஆர் என்றால் என்ன,டெப்த், போக்கஸ், அவுட் ஆப் போக்கஸ் என்ற பலவிஷயங்கள் விளக்கப்பட்டன...
ஆட்டத்தில் உபயோகப்பட்ட லேப்டாப்பை இராம் அறிமுகப்படுத்திய விதம் இன்னோரு கூத்து...இது (சோனி வைஸோ)என்னுடைய பொண்டாட்டி என்று அறிமுகப்படுத்தினார் இராம்...இதென்னா கூத்து என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்...வாயிலதான் நம்ம புள்ளைங்களுக்கு வாஸ்து சரியில்லாம போவுது போங்கோ...அப்போ லேப்டாப்பை ஷட்டவுண் பண்ணா, எம் பொண்டாட்டி ஷட்டவுன் ஆகிட்டா...லேப்டாப்புல பேட்டரி தீர்ந்திருச்சின்னா, எம் பொண்டாட்டிக்கு பவர் போயிருச்சி...ஆப்பரேட்டிங் சிஸ்டம் போயிருச்சின்னா, எம் பொண்டாட்டி க்ராஷ் ஆகிட்டா...என்று சொல்லலாமா என்று மனதுக்குள் கேட்டுக்கொண்டேன்...வழக்கம் போல இந்த லேப்பியை ஓப்பனும்போதும் இ-கலப்பை லோடாகி முகுந்த் மின்னல் போல வந்து சென்றார்...தமிழ் இருக்கும்வரை கூட வருவாருன்னு நினைக்கிறேன் இந்த முகுந்த்...சங்கத்துல கைப்புள்ளையோட ஆப்ஸென்ஸ்ல ஒரு கைப்புள்ளையா இருந்து சங்கத்தை காக்கும் இராயல் இராம் வாழ்க என்று ஐஸ் வைத்து அடுத்த பாராவுக்கு தாவிவிடுகிறேன்..வேணாம் விட்ருங்க என்று இராம் அலறுவது கேட்கிறது...
ஜி, மற்றும் இம்சை அரசி வந்து இணைந்தார்கள்...ஆர்ப்பனேஜ் குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டிய பிஸ்கட், சாக்லேட்டுகள் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு வந்து சேர்ந்தார்கள்...இம்சை அரசி பற்றி சொல்லவேண்டும் என்றால், நான் படித்த திருச்சி ஆ.ஈ.சி (ரீஜினல் எஞ்சினீயரிங் காலேஜ்) கல்லூரியில் எனக்கு ஜூனியராக படித்தவர்...(என்ன கொடுமை சரவணன்...உண்மை உறங்காது..பிரிய வேண்டியவங்களுக்கு பிரிஞ்சா சரி)...கல்லூரி காலத்திலேயே இவரது நாவல் மாலைமதியிலோ, இல்லை ஏதோவொரு நாவல் புத்தகத்திலோ வந்திருக்கிறது...அருமையான எழுத்தாளராக வரவேண்டியவர்...இம்சித்துக்கொண்டிருக்கிறார்...அட எதுவும் எழுதவில்லை என்று சொல்லுகிறேன்...நேரமின்மையை சாக்காக சொல்லாமல் ஏதாவது முயன்றால் ஒருவேளை அடுத்த நாவல் பிரசுரமாகலாம்...
ஜீ...என்னவோ அதிகமாக என்னிடம் பேசவில்லை...ஒருவேளை செலக்டிவ் அம்னீஷியாவாக இருக்கலாம்...(அவருக்கு)...பால்பாண்டி போன்றதொரு அருமையான க்ரியேட்டிவ்(!?) கதாபாத்திரத்தை உருவாக்கி நகைச்சுவை விருந்து படைக்கத்தெரிந்த ஜி, மேலும் நிறைய எழுதவேண்டும்...நகைச்சுவையை மட்டுமே டாபிக்காக எடுத்துக்கொண்டு...ம்ம்ம்...
இரண்டரை மணி நேரம் புகைப்படக்கலை பற்றிய செல்லாவின் நிகழ்ச்சி அரை மணி நேரம் போல இருந்தது...அவ்வளவு அருமையான செயல் விளக்கங்களோடு பட்டாசாக சென்றது இந்த நிகச்சி....நடுவில் வந்து இணைந்தவர் சுபமூகா...இவரைப்பற்றி எனக்கு அதிகம் தெரியாததனால் ( நான் மரத்தடி குண்டாந்தடி போன்ற குழுமங்களில் எழுதாததனால் மட்டுமே இவரை பற்றிய அதிக அறிமுகமில்லாமல் போனது)..அடுத்ததாக வந்து இணைந்தவர் கல்வெட்டு என்கிற பலூன் மாமா...மொக்கையாக "நீ உருப்புடமாட்டே", "அப்போ நீ மட்டும் உருப்புடுவியா" "நான் உருப்புடலைன்னாலும் பரவாயில்ல, நீ உருப்புடகூடாது" என்பது போன்ற பின்னூட்டங்களை போட்டுக்கொண்டிருக்கும் (ஆமா, யாருங்க இந்த மாதிரி பின்னூட்டம் போடுறது...ச்சே...) பலருக்கு மத்தியில் ஒரு சிறிய பின்னூட்டம் எழுதினாலும், அதில் சமூக அக்கறையும், சமகால சிந்தனையும், தெளிவான கருத்தாக்கமும் வைத்து எழுதக்கூடிய கல்வெட்டு அவர்கள் தன்னுடைய சூட்கேஸுடன் வந்து இணைந்தார்...
செஷனுக்கு நடுவில் ஐயப்பன் ஸ்பான்ஸர் செய்த சமோஸா அருமை...(பின்ன...காசு அவரு இல்ல கொடுத்தாரு)...வாட்டர் பாட்டில் கூட ஆட்டத்தில் இருந்தது...பிறகு இம்சை அரசி சில்லறை கொடுக்க, வெள்ளரிப்பிஞ்சு வேறு ஆட்டத்தில் இணைந்துகொண்டது...அருமை...பின்ன, தின்னது நானில்லையா...
புகைப்படக்கலை செஷன் முடிந்தது...ஆஸ்ரமத்துக்கு போக இரண்டு கார்கள் ஏற்பாடு செய்திருந்தார் இராம்...அவற்றை நோக்கி அனைவரும் நடையை கட்ட, நான் என்னுடைய காரை நிறுத்தியிருந்த இடம் எதிர்ப்பக்கம்...அதனால் நான் ஆப்போஸிட் டைரக்ஷனில் ஓட....இரவு கொரிய பயனத்துக்கான ஏற்பாடுகள் ஒன்றையும் செய்யாமல் இருந்ததால் ஆஸ்ரமத்துக்கு நான் போகமுடியவில்லை...அதுபற்றி மற்றவர்கள் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன்...ஆனால் இராம் சொன்னது, குழந்தைகள் ஆஸ்ரமத்தை விட்டு வெளியே வரும்போது, மனதெல்லாம் நிறைந்துபோயிருந்தது என்றார்...
இந்த வலைப்பதிவர் சந்திப்புக்கு கோவையில் இருந்து பாமரன் அவர்கள் வாழ்த்து செய்தி அனுபியிருந்தார்...விஜய் டி.வி படப்பிடிப்புக்கு சென்னை சென்றதால் அவர் வரமுடியவில்லை என்று தெரிவித்திருந்தார்...ஆனால் அதை எல்லோரிடமும் சொல்ல மறந்தது நான் தான்...மேட்டர் என்னன்னா...நல்லவேளை அவர் வரவில்லை...வந்திருந்தால் அட்டகாசமான அவரது பேச்சால் நேரத்தை மறக்கடித்துவிட்டிருப்பார்...இன்னும் இரண்டு மணி நேரம் பூங்காவில் அவர் சொல்வது கேட்டு அமந்திருந்திருப்போம்...நான் என்னுடைய விமானத்தை தவறவிட்டிருப்பேன்...பதிவர்கள் ஆஸ்ரமத்துக்கு சென்று மனநிறைவு அடைந்திருக்க முடியாது.....பலூன் மாமாவின் அட்டகாசமான பலூன் விளையாட்டால் துள்ளி குதித்து உற்சாகம் அடைந்த சின்ன குழந்தைகளும் பெரிய குழந்தைகளும் அதனை தவறவிட்டிருக்கும்கள்...
இந்த மொக்கை பதிவை விமானத்தில் அமர்ந்தபடி லேப்பியை ஓப்பின் செய்து போடுகிறேன்...பக்கத்தில் அருமையானதொரு பிகர் என்னையே நோட்டமிடுகிறது...வேறுவழியில்லை இன்னும் சிலமணி நேரம் என்னுடன் தானே அமர்ந்துவரவேண்டும்...நானும் லேப்பியை மூடிவிட்டு பிகர் எந்த நிறுவனத்தில் வேலைசெய்யுது, தாய் ஏர்வேர் பர்பெக்ட் டைமுக்கு எடுக்கிறான் என்பன போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளையோ, அல்லது அவரது லேப்டாப் பேட்டரி நீண்ட ஆயுள் தருகிறதா என்பது போன்றதொரு மொக்கை கேள்வியை கேட்டுத்தான் கான்வர்ஸேஷனை ஆரம்பிக்கவேண்டும்...
நீங்க பொழப்ப பாருங்க...நானும்....ஆங்...திரும்ப...வரமாட்டேன்னு சொல்லவந்தேன்.....வர்ட்ட்ட்ட்ட்டா...
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
16 comments:
தல எந்த ஊர்ல இருக்கீங்க.சந்த்ப்பு பற்றிய பதிவு அற்புதமாக இருக்கு
எல்லோரும் போட்டோ எடுங்க. ஆனா இங்க போட்டுடாதீங்க...நல்லா இருங்கய்யா
நல்ல தொகுப்பு ரவி!
//எல்லோரும் போட்டோ எடுங்க. ஆனா இங்க போட்டுடாதீங்க...நல்லா இருங்கய்ய//
:)))))))))))
இயல்பான நடை.
வர்ணனைகளின் கூடவே நாங்களும் பயணித்தோம். நன்றி.
சியோல்...பயணம், வரும் போது நாய் பிரியாணி செய்வது எப்படி என்று பதிவையும், தின்ற அனுபவத்தையும் எழுதவும்.
வாழ்த்துக்கள் !
:))
கலக்கல் சந்திப்பு ரவி. ஆனாலும் நம்ம வழக்கமான வாலிப வயோதிக அன்பர்கள் சந்திப்பா இது அமையாதது ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் இடம் பொருள் ஏவல் ஆகியவைகளைக் காட்டும் பரிணாமவெளியின் ஒளிக்கூட்டத்தில் இதெல்லாம் ஜகஜம் என்று புரிந்து கொள்ள முயற்சிப்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். :)))))))))
சாத்தான் குளம் <=> சாண்டா குரூஸ்...சூப்பரப்பு
நீங்க ஹத்ரூப்பாய்னு சொல்லும் போது அப்படியே பெங்களூருக்குப் போய்ட்டாப்புல இருக்கு. தமிழ் எங்க போனாலும் கூட வருது. இணையம் வழியா. வீட்டுக்குப் போன் போடுறது வழியா...இப்பிடி..ஆனா கன்னடம். இல்லையே. இப்பிடி வலைப்பூவுல கேட்டாதான் உண்டு.
அதெல்லாம் சரிப்பூ....ஏதோ போட்டோ போட்டோன்னு சொல்றீங்களே...அதப் போடுறது? மோகந்தாஸ் பக்கத்துப் போனா அது படத்தக் காட்டுவேனான்னு அடம் புடிக்குது.
ஆகா தழலாரின் பொறுப்புணர்ச்சிக்கு அளவே இல்லபா விமானத்தில பறக்கும் போது கூட பிகர் பக்கத்துல இருந்தும் கடலை போடாம பதிவு போடறாரு. என்னே உமது பொறுப்புணர்ச்சி வாழ்க (போதுங்களா நீங்க சொன்ன மாதிரியே பாராட்டி பின்னூட்டம் போட்டுட்டேன்.)
ஆஹா, ஜனியன் ஜடபோட ஆரம்பிச்சுருச்சுப்பா....
இனி இது பூவைக்காம பொட்டு வைக்காம போவாதே...!!!!
பின்னூட்டம் இட்ட மணி, அணு, ஜீ.ரா, சக்கரை, நாமக்கல் நாயகர், கோவியார் அனைவருக்கும் நன்றி...!!!
ஆறு மணி, உங்களுக்கு மிட்நைட்டா?, பாவம்யா, உங்க கிளையன்ட். மத்தபடி சந்திப்புக்கு வாராத குறைய தீத்து வச்சிருச்சு இந்த பதிவு.
ரிட்டர்ன் தேதிய முன்னாடியே எனக்கு சொல்லிடுங்க..
ஏர்போர்ட்'ல வச்சே தூக்கிரலாம்னு இருக்கேன்.
என்ன..கொரியாப் பயணமா?
அப்ப 'வள்'?
Hi Ravi,
Naa mudha thadavaiya unga blog ku vandhirken :)
(Hope u remember me) Nalla ezhuthirkeenga meeta pathi.. But u really missed the Ashram and kids.. late is better than never. better luck next time :D
Actually I was meeting all you guys for the first time but never felt so during all through.
Thanks to you all :)
///பட்டம் போதுமாத்தா///
ரவி.. இதை நான் பிரேம் போட்டு வச்சிருக்கேன்...
மொக்கை இன்னுமா முடியல? சாட்டிங்கல ரொம்ப பிஸியோ?
சந்திப்புக்கு வந்த மாதிரியே இருந்தது
Post a Comment