டோண்டுவை தமிழ்மணம் நீக்கவேண்டும்...

போலிடோண்டு பிரச்சினையை முழுவதுமாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்றால் டோண்டுவை நீக்கவேண்டும் என்று குழலி பதிவிட்டிருக்கிறார்...

 

டோண்டு இணைய வனவாசம் போகவேண்டும்...அவரே ஒதுங்கிக்கொள்ள்வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம்...

 

அப்போது தான் மூர்த்தி வரைந்துள்ள மீசையில் மண் ஒட்டாது...

 

டோண்டு என்ற ஒருவர் இல்லை என்றால் போலி டோண்டு என்ற மூர்த்தியும் இல்லை...

 

சிறுபிள்ளைத்தனமான "டோண்டுவின் பதிவில்" பின்னூட்டம் போடாதே சண்டையும் இல்லை...

 

கீழ்த்தரமான அல்லக்கை முண்டங்களுக்கும் வேலை இல்லை...

 

போலி டோண்டு மூர்த்தி உன்னுடன் நடந்த மின்னஞ்சல் கான்வர்சேஷனை வெளியிட்டுள்ளானே என்று ஒரு நன்பர் கேட்டுள்ளார்...அவனுடைய நம்பிக்கையை பெற்று அவனுக்கு "ஸ்பெஷல் ஆப்பு" வைக்க செய்த முயற்சி. அதன் பலனாகத்தான் விடாது கருப்பு, மூர்த்தி, போலி டோண்டு எல்லாம் ஒன்று என்று அறிந்தேன்...

 

டோண்டு பதிவை நீக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு மீண்டும் வருகிறேன்....தமிழ்மணத்தார் நீக்குவதை விட டோண்டுவுக்கே நான் வைக்கும் கோரிக்கை, தமிழ் வலையுலகில் இருந்து விலகவேண்டும் தாங்கள்...

 

கசடு எதுவென அடையாளம் காட்டியாகிவிட்டது...இனி பணியில் கவனம் செலுத்தலாம் என்று இருக்கிறேன்...இனி மொக்கை பதிவுகள் மட்டும் இடுவேன்...வணக்கம்....

 

 

 

 

######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################

Comments

Anonymous said…
if murthy is indeed a psycho, dondu's absence wouldnt matter. That psycho would pick on someone else; that someone may be you Ravi!
".இனி மொக்கை பதிவுகள் மட்டும் இடுவேன்...வணக்கம்...."

இது மேட்டரு வாங்க திரும்ப, புல் பார்மோட்டு, அடிச்சா சிக்ஸர் சிக்ஸாரா போகனும் அப்படி வரனும் திரும்ப:))))
//போலி டோண்டு மூர்த்தி உன்னுடன் நடந்த மின்னஞ்சல் கான்வர்சேஷனை வெளியிட்டுள்ளானே என்று ஒரு நன்பர் கேட்டுள்ளார்...அவனுடைய நம்பிக்கையை பெற்று அவனுக்கு "ஸ்பெஷல் ஆப்பு" வைக்க செய்த முயற்சி. அதன் பலனாகத்தான் விடாது கருப்பு, மூர்த்தி, போலி டோண்டு எல்லாம் ஒன்று என்று அறிந்தேன்...//

இதை முழுமனதோடு ஒத்து கொள்கிறேன். உபசாரத்துக்கு கூறவில்லை. பெங்களூர் சந்திப்பில் உங்களை பார்த்து பேசியுள்ளேன். நிச்சயமாகக் கூறுவேன், உங்கள் பார்வையில் போலித்தனம் இல்லை. ஆகவே அது சம்பந்தமாக நீங்கள் போலிக்கு அனுப்பியதாகக் காட்டப்பட்ட மின்னஞ்சல்கள் எனக்குள் புன்முறுவலையே வரவழைத்தன.

I was even a little moved to think that you risked your good name in this venture. My thanks are due to you.

//தமிழ்மணத்தார் நீக்குவதை விட டோண்டுவுக்கே நான் வைக்கும் கோரிக்கை, தமிழ் வலையுலகில் இருந்து விலகவேண்டும் தாங்கள்.//
விலக வேண்டும் என்று எனக்கு இதுவரை தோன்றவில்லை. கடந்த ஏப்ரல் மாதமே என் நண்பர்களும் நண்பரல்லாதவர்களும் இதைத்தான் விரும்பினார்கள். அதற்காக பின்னவர்கள் என்னை ரொம்பவெல்லாம் சீண்டினார்கள். ஆனாலும் நான் விலக மாட்டேன் என்றே பதிவு போட்டேன். அந்த நிலையில் எந்த மாறுதலும் இல்லை. கூறப்போனால் இப்போது அதற்கானக் காரணங்களும் குறைவே. முக்கியமாக மூர்த்தி பெயருடன் அடையாளம் காணப்பட்டான்.

வேண்டுமென்றே நான் அவனை வளர்த்தேன் எனக் கூறுபவர்களுக்கு நான் என்ன கூற முடியும்? அது அவர்கள் கருத்து.

மட்டுறுத்தல் வந்த போதும் என்னை தமிழ்மணத்திலிருந்து தூக்கினால் எல்லாம் சரியகப் போகும் என்று தன்னிடம் கூறியதாக அப்போதைய நிர்வாகி என்னிடம் கூறினார். ஆகவே இப்போது அதே கோரிக்கை வைக்கப்படும்போது ஏதோ பிளேஷ் பேக் பார்ப்பது போல உள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Popular Posts