Friday, March 27, 2009

கயவாளிகள் கவனத்துக்கு > காட்டிக்கொடுக்கும் கூகிள், ஸ்கைப். ஜாக்கிரதை



சில கயவாளிகள் அநாகரீக கமெண்டுகளை போடுவது போல் தெரிகிறது. அண்ணன் உண்மைத்தமிழனில் இருந்து பரிசல்காரன் வரை இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள்.

என்னுடைய எண்ணம், பழைய நபர்கள் இந்த செயலை செய்ய துணியமாட்டார்கள். அவர்களுக்கு தெரியும். தமிழக போலீசாரின் திறமை பற்றி...

நான் உங்களுக்கு சொல்வது என்னவென்றால்...பழைய தமிழ் இணைய வரலாறு தெரியாமல் தேன் கூடுகளில் கை வைக்கிறீர்கள். தமிழக சைபர் க்ரைம் சிறப்பாக செயல்படுகிறது.

கூகிளில் நிறுவனத்தில் இருந்து ஸ்கைப் நிறுவனம் வரை தமிழக போலீஸ் கேட்கும் தகவல்களை உடனே தர தயாராக உள்ளது.

போலீசார் கேட்கும் தகவல்கள் உடனுக்குடன் மின்னஞ்சலில் ஓடிவருகிறது. இந்த நிறுவனங்களில் இதற்கென தனி குழு பணியாற்றுகிறது.

நீங்கள் ப்ராக்ஸி உபயோகப்படுத்தினாலும் சரி, ப்ரவுசிங் செண்டர் கணிப்பொறியில் இருந்து திருட்டுத்தனம் செய்தாலும் சரி, கண்டிப்பாக மாட்டிக்கொள்வீர்கள்.

ஆர்க்குட்டில் ஏற்கனவே இதுபோன்ற பல விஷயங்கள் நடந்தாலும், தமிழ் இணைய உலகில் இருப்பவர்கள் இந்த விஷயங்களை ஏற்கனவே வெற்றிகரமாக முறியடித்துள்ளார்கள்.

சிறைத்துறை ஐ.ஜியில் இருந்து ஐ.ஏ.எஸ் ஆபீஸர் வரை தமிழ் இணைய தளங்களை பார்வையிடுகிறார்கள். அரசியல்வாதிகளில் இருந்து பெரிய மனிதர்கள், பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள் என அனைவரும் குழுமும் இடமாக இணைய உலகு மாறிவிட்டது.

அதனால் உங்கள் சில்லுண்டித்தனங்களை விட்டுவிட்டு மாறிக்கொள்ளுங்கள். இல்லையென்றால் மாற்றப்படுவீர்கள். மீண்டும் சொல்கிறேன், எந்த இணையம் 100 சதவீதம் பாதுகாப்பில்லை என்று நினைத்து இதுபோன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடுகிறீர்களோ, அதே இணையம் உங்களுக்கும் 100 சதவீதம் பாதுகாப்பில்லை.

இது இருபுறமும் கூரான கத்தி என்பதை உணருங்கள். ஒரே நாளில் உங்கள் வீடு தேடி போலீஸ் வரும். தயவுசெய்து திருந்திக்கொள்ளுங்கள் என்று சொல்லி முடிக்கிறேன்...

Wednesday, March 25, 2009

போலிகள் ஜாக்கிரதை


அண்ணன் உண்மைத்தமிழன் இடுகையில் என்னுடைய பின்னூட்டம்...

அனானி முன்னேற்றக்கழக கடையை நானும் பார்த்தேன்...

என்னுடைய ஒரு பதிவில் உட்டாலக்கடிதமிழன் என்ற பெயரில் ஒரு நாலு கமெண்டு வந்தது.

அனானி முன்னேன்ற்றக்கழகத்தில் உங்கள் நன்பன் சரவணன் ஐடியும் இணைந்துள்ளது.

அவரிடம் முதலில் எச்சரிக்கை செய்யவேண்டும்...

அமீரகத்தில் ஒரு சொறிநாய் இன்னும் உயிருடன் உள்ளது....

ஒன்று அதன் வேலையாக இருக்கும்....

அல்லது மீண்டும் பெரியவர் ஆட்டத்துக்கு கிளம்பிவிட்டிருந்திருக்கலாம்...

ஆறு மாதம் ஆகிவிட்டிருக்கும் இல்லையா ? அதான் கைகள் பரபரக்கின்றன...

ஆனால் புதியவர்கள் யாருக்கும் எந்த மோட்டிவும் இல்லை என்பது தான் உண்மை. இது போன்ற வித்தைகளும் அறிந்தவர் நமது அண்ணாச்சி மட்டும்தானே ?

மறுபடி ஆப்பை கூர் தீட்டவேண்டியது தான் என்று நினைக்கிறேன்...

பழைய சம்பவங்கள், சைபர் கிரைமின் திறமை போன்றவற்றை எழுதினால் ஒரு வேளை மீண்டும் பழைய சம்பவங்கள் நியாபகத்துக்கு வரலாம்...

எவ்வளவோ பண்ணிட்டோம்...இதப்பண்ணமாட்டோமா....

ஏர்டெல் சூப்பர் சிங்கர் : தமிழகத்தின் பிராமண குரல் தேடல்



ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கா பதிவோட தலைப்புல ? சாரி கோச்சுக்காதேள்...

நல்ல குரல் வளம் உள்ளவர்கள் ரிஜக்ட் ஆவதும், அவாள் மட்டும் செலக்ட் ஆவதும்...அதுக்கெல்லாம் புண்ணியம் பண்ணியிருக்கனும் ஓய்...!!!!

ஜட்ஜஸ். நீங்க நன்னா ஜட்ஜ் பண்றேள். கொஞ்சம் சூத்திரவாளையும் இந்த காம்பட்டீஷன்ல சேர்த்து பாடவைச்சி ப்ரைஸ் கொடுங்களேன்னா...? கொறைஞ்சா போயிருவேள் ?

டிஸ்கி : பதிவு எந்த தனிநபரையும் புண்படுத்த அல்ல.

Saturday, March 21, 2009

ஏன் இந்த பதிவுக்கு மட்டும் இப்படி ?


பதிவு போட்டேன். சேர்க்கமுடியல.

மீள்பதிவாக்கினேன். அப்பவும் ஆட்டத்துல சேத்துக்க முடியாது என்று சொல்லுது.

நான் என்னதான் பண்றது ? அதான் ஒரு புது பதிவு போட்டு அந்த பதிவோல சுட்டியை இதுல குடுக்கறேன்.

பார்ப்போம் இதுவாவது வருதா என்று ? போப்பாண்டவர் உளரல் பற்றிய பதிவு

இருண்ட க(கா)ண்டமும் உளறிய போப்பாண்டவரும்



கிறிஸ்தவ மதத்தில் உயர்ந்த பதவி போப் ஆண்டவர் பதவியாகும்...பங்கு தந்தைகள், ஆயர்கள், கார்டினல்கள் என்று விரியும் கத்தோலிக்க கிறிஸ்தவ மத அடிப்படை பதவிகளில் இதுவே உயர்ந்தது.

இயேசுபெருமானால் முதல் போப் ஆண்டவராக - மதத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் புனித.இராயப்பர்.

இயேசுபெருமானின் வாயினால்..

"நீ பாறை, உன் மீது எனது திருச்சபையை கட்டுவேன்" என்றும் "சொர்க்கத்தின் திறவுகோல் உன்னிடமேயிருக்கும்" என்றும் புகழப்பட்டவர்..

இயேசுபெருமானை யூதர்கள் மற்றும் பரிசேயர்கள் கைதுசெய்யவந்தபோது (Final Assualt) தன்னிடமிருந்த குறுவாளை கொண்டு ஒருவரது காதை வெட்டினார் புனித இராயப்பர்.

வழிவழியாக இராயப்பருக்கு பிறகு இந்த உயர் பதவிக்கு கார்டினல்களில் ஒருவர் நியமிக்கப்படுகிறார்.

அதற்கான தேர்தல் நடைபெற்று அதன் பின் போப் ஆண்டவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

தற்போதைய போப். இரண்டாம் பெனடிக்ட், ஜெர்மனியை சேர்ந்தவர்.

கடந்தவாரத்தில் இருந்து போப் பெனடிக்ட் அவர்களின் காண்டம் பற்றிய கருத்தை ஆங்கில ஊடகங்கள் குத்திக்குதறி கூறுபோட்டுக்கொண்டிருந்தாலும், இது தொடர்பாக தமிழ் ஊடகங்களில் ஒரு பதிவும் வரக்காணோம்.

அதனால்தான் நானே களமிறங்கினேன்...

இந்த பதிவின் மூலம் யாரையும் புண்படுத்த முயலவில்லை. ஒரு செய்திப்பதிவு மட்டுமே இது.

போப்.பெனடிக்ட் அவர்கள் தற்போது ஆப்ரிக்க கண்டத்தில் சுற்றுப்பயணம் செய்துவருகிறார்.கேமரூன் நாட்டுக்கு கிளம்பும் முன் அவர் எய்ட்ஸ் பற்றியும் காண்டம் பற்றியும் கூறிய தவறான சில கருத்துக்கள் தான் இப்போதைய விவாதப்பொருள்.

போப் சொன்னது என்னவென்றால்...

காண்டம் உபயோகப்படுத்துவதால் ஒரு புரயோசனமும் இல்லை..காண்டம் வினியோகிப்பது பிரச்சினையை மேலும் பெரிதாக்கும் செயல்தான் என்று உளறித்தள்ளிவிட்டார்.

அதுவும் ஒரு ஆப்ரிக்க நாட்டில், 22 மில்லியன் எய்ட்ஸ் நோயாளிகளை கொண்டதொரு கண்டத்தில், இப்படி காண்டத்தைப்பற்றிய அவரது உளரல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது...

உலகளாவிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு, போப் ஆண்டவரின் இந்த கருத்து "outrageous and insulting" என்று கூறியுள்ளது. மேலும் மேலும் பல நோயாளர்களைத்தான் இது உருவாக்கும் என்றும் எச்சரித்துள்ளது...

வாடிகன் பேச்சாளர் பெடரிக்கோ லம்பார்டி ஏதோ மழுப்பியுள்ளார். போப் ஆண்டவர் சொன்னது பர்சனல் ரெஸ்பான்ஸிபிலிட்டியை அதிகப்படுத்த மட்டுமே, போப் ஆண்டவர் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவே அப்படிச்சொன்னார் என்று...

முன்பெல்லாம் போப் ஆண்டவர் பதவி வானளாவிய அதிகாரங்கள் படைத்ததாகவும், அரசுகளை கட்டுப்படுத்துவதாகவும் இருந்தது...

"இப்போ எல்லாம் யாரு நம்மளை மதிக்கறா" என்று பழைய ரயில்வே ரிட்டையர்டு பார்ப்பண பெரிசுகள் மாதிரி "போப்பாண்டவரும்" சொல்லிக்கொண்டு போகவேண்டியது தான் போல இருக்கிறதே ?

*******
******
*****

பாஸிடிவ்வோ நெகட்டிவ்வோ, ஓட்டை போடுங்கப்பா..

*****
****
***

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....