
கிறிஸ்தவ மதத்தில் உயர்ந்த பதவி போப் ஆண்டவர் பதவியாகும்...பங்கு தந்தைகள், ஆயர்கள், கார்டினல்கள் என்று விரியும் கத்தோலிக்க கிறிஸ்தவ மத அடிப்படை பதவிகளில் இதுவே உயர்ந்தது.
இயேசுபெருமானால் முதல் போப் ஆண்டவராக - மதத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் புனித.இராயப்பர்.
இயேசுபெருமானின் வாயினால்..
"நீ பாறை, உன் மீது எனது திருச்சபையை கட்டுவேன்" என்றும் "சொர்க்கத்தின் திறவுகோல் உன்னிடமேயிருக்கும்" என்றும் புகழப்பட்டவர்..
இயேசுபெருமானை யூதர்கள் மற்றும் பரிசேயர்கள் கைதுசெய்யவந்தபோது (Final Assualt) தன்னிடமிருந்த குறுவாளை கொண்டு ஒருவரது காதை வெட்டினார் புனித இராயப்பர்.
வழிவழியாக இராயப்பருக்கு பிறகு இந்த உயர் பதவிக்கு கார்டினல்களில் ஒருவர் நியமிக்கப்படுகிறார்.
அதற்கான தேர்தல் நடைபெற்று அதன் பின் போப் ஆண்டவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
தற்போதைய போப். இரண்டாம் பெனடிக்ட், ஜெர்மனியை சேர்ந்தவர்.
கடந்தவாரத்தில் இருந்து போப் பெனடிக்ட் அவர்களின் காண்டம் பற்றிய கருத்தை ஆங்கில ஊடகங்கள் குத்திக்குதறி கூறுபோட்டுக்கொண்டிருந்தாலும், இது தொடர்பாக தமிழ் ஊடகங்களில் ஒரு பதிவும் வரக்காணோம்.
அதனால்தான் நானே களமிறங்கினேன்...
இந்த பதிவின் மூலம் யாரையும் புண்படுத்த முயலவில்லை. ஒரு செய்திப்பதிவு மட்டுமே இது.
போப்.பெனடிக்ட் அவர்கள் தற்போது ஆப்ரிக்க கண்டத்தில் சுற்றுப்பயணம் செய்துவருகிறார்.கேமரூன் நாட்டுக்கு கிளம்பும் முன் அவர் எய்ட்ஸ் பற்றியும் காண்டம் பற்றியும் கூறிய தவறான சில கருத்துக்கள் தான் இப்போதைய விவாதப்பொருள்.
போப் சொன்னது என்னவென்றால்...
காண்டம் உபயோகப்படுத்துவதால் ஒரு புரயோசனமும் இல்லை..காண்டம் வினியோகிப்பது பிரச்சினையை மேலும் பெரிதாக்கும் செயல்தான் என்று உளறித்தள்ளிவிட்டார்.
அதுவும் ஒரு ஆப்ரிக்க நாட்டில், 22 மில்லியன் எய்ட்ஸ் நோயாளிகளை கொண்டதொரு கண்டத்தில், இப்படி காண்டத்தைப்பற்றிய அவரது உளரல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது...
உலகளாவிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு, போப் ஆண்டவரின் இந்த கருத்து "outrageous and insulting" என்று கூறியுள்ளது. மேலும் மேலும் பல நோயாளர்களைத்தான் இது உருவாக்கும் என்றும் எச்சரித்துள்ளது...
வாடிகன் பேச்சாளர் பெடரிக்கோ லம்பார்டி ஏதோ மழுப்பியுள்ளார். போப் ஆண்டவர் சொன்னது பர்சனல் ரெஸ்பான்ஸிபிலிட்டியை அதிகப்படுத்த மட்டுமே, போப் ஆண்டவர் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவே அப்படிச்சொன்னார் என்று...
முன்பெல்லாம் போப் ஆண்டவர் பதவி வானளாவிய அதிகாரங்கள் படைத்ததாகவும், அரசுகளை கட்டுப்படுத்துவதாகவும் இருந்தது...
"இப்போ எல்லாம் யாரு நம்மளை மதிக்கறா" என்று பழைய ரயில்வே ரிட்டையர்டு பார்ப்பண பெரிசுகள் மாதிரி "போப்பாண்டவரும்" சொல்லிக்கொண்டு போகவேண்டியது தான் போல இருக்கிறதே ?
*******
******
*****
பாஸிடிவ்வோ நெகட்டிவ்வோ, ஓட்டை போடுங்கப்பா..
*****
****
***
22 comments:
ஏன் பதிவை அப்டேட் செய்யமுடியல ?
யாருக்காவது இந்த பிரச்சினை இருக்கா
தம்பி ரவி,
கிறிஸ்தவம் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கட்டுப்பாடுடையது. தன் சொந்த மனைவியுடன் உறவு கொள்பவனுக்கு ஒரு உறையும் தேவைஇல்லை அதைத்தான் போப்பாண்டவர் இப்படி சொல்லி இருக்கலாம்.
செல்வராஜ்
Yup. As you are in europe, you come to hear about him.
புள்ளிராஜாவுக்கு எயிட்ஸ் வந்தால் அவன் மனைவி என்ன செய்ய வேண்டும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
\\போப் சொன்னது என்னவென்றால்...
காண்டம் உபயோகப்படுத்துவதால் ஒரு புரயோசனமும் இல்லை..காண்டம் வினியோகிப்பது பிரச்சினையை மேலும் பெரிதாக்கும் செயல்தான் என்று உளறித்தள்ளிவிட்டார்.
அதுவும் ஒரு ஆப்ரிக்க நாட்டில், 22 மில்லியன் எய்ட்ஸ் நோயாளிகளை கொண்டதொரு கண்டத்தில், இப்படி காண்டத்தைப்பற்றிய அவரது உளரல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது...\\
கருத்து யார் சொல்லி இருந்தாலும் தவறுதான்...
\\கிறிஸ்தவம் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கட்டுப்பாடுடையது. தன் சொந்த மனைவியுடன் உறவு கொள்பவனுக்கு ஒரு உறையும் தேவைஇல்லை அதைத்தான் போப்பாண்டவர் இப்படி சொல்லி இருக்கலாம்.\\
உடல்நிலையை கருத்திற்கொண்டு,
இரு குழந்தைகள் உள்ள என் கிறித்துவ நண்பர் ’உறை’ உபயோகிக்கிறார். அவர் என்ன செய்ய
வேண்டும்?????
//கிறிஸ்தவம் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கட்டுப்பாடுடையது. தன் சொந்த மனைவியுடன் உறவு கொள்பவனுக்கு ஒரு உறையும் தேவைஇல்லை அதைத்தான் போப்பாண்டவர் இப்படி சொல்லி இருக்கலாம்.//
அண்ணே வருகைக்கு நன்றி...
ஒர்வேளை பாதிரியார்களை மட்டும் சொல்லியிருப்பாரோ ? ஹி ஹி...
குடும்ப கட்டுப்பாட்டுக்கு அரசாங்கமே உறையை வினியோகிக்கும் நாட்டில் அல்லவா இருக்கிறோம் ?
//Yup. As you are in europe, you come to hear about him.
Saturday
//
இது எல்லா ஊருலயும் தெரிஞ்சுபோச்சு...
//புள்ளிராஜாவுக்கு எயிட்ஸ் வந்தால் அவன் மனைவி என்ன செய்ய வேண்டும்?//
நமக்கு அடிக்கடி பின்னூட்டம் போடும் புள்ளிராஜா என்பவரை நினைவில் உள்ளதா ?
அவரிடம் வேண்டுமானால் கேட்கலாம்...
\\
"இப்போ எல்லாம் யாரு நம்மளை மதிக்கறா" என்று பழைய ரயில்வே ரிட்டையர்டு பார்ப்பண பெரிசுகள் மாதிரி "போப்பாண்டவரும்" சொல்லிக்கொண்டு போகவேண்டியது தான் போல இருக்கிறதே ?
\\
அது சரி.... :)
முதல்ல புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா அந்தக்கேள்விக்கே விடை தெரியலைண்ணே...
அன்புடன்
ராச ராச சோழன்...
:)
வா கி
எனக்கும் இது மாதிரி நிறைய தடவை நடந்திருக்கு..!
காரணம் என்னன்னுதான் கண்டுபிடிக்க முடியல..!
எல்லாம் நேரம்தான்..!
ஆனா நீ நம்ப மாட்டே..
போட்டே ஆகணும்னு நினைச்சு உக்காந்தீன்னா உன்னால ஒண்ணுமே செய்ய முடியாது..
போப் ஆண்டவரின் உளறல் என்று நீயே சொல்லிவிட்டாய்..
ஸோ.. நானும் உன் கருத்தையே ஏற்றுக் கொள்கிறேன்.
காண்டம் மட்டும் இல்லாதுபோனால் ஆப்ரிக்க கண்டத்தின் கதி என்னவாகும் என்று திருவாளர் போப்பரசருக்குத் தெரியுமா..?
//செந்தழல் ரவி said...
Saturday, March 21, 2009
ஏன் பதிவை அப்டேட் செய்யமுடியல ?
//
இளைய குத்தூசி, நான் இந்த பதிவை ஏற்கனவே தமிழ் மணத்துல பார்த்தேனே? இருங்க வர்றேன்!
http://tamilmanam.net/forward_url.php?url=http://feedproxy.google.com/~r/tvpravi/~3/gX6klw4BDeQ/blog-post_21.html&id=338343'
//காண்டம் மட்டும் இல்லாதுபோனால் ஆப்ரிக்க கண்டத்தின் கதி என்னவாகும் என்று திருவாளர் போப்பரசருக்குத் தெரியுமா..?///
மீண்டும் அரண்ய காண்டத்துக்கு போகவேண்டியதுதான்...
நன்றி பழமைபேசி...
ஓரங்கட்டிட்டாங்களோன்னு பாத்தேன் ஹி ஹி
இப்போ இருக்கவரு பதினாறாம் பெனடிக்ட், நீங்க இரண்டாம் பெனடிக்ட்னு குறிப்பிட்டு இருக்கீங்க.
அப்றம் காண்டம் பத்தி அவருக்கு என்னாங்க தெரியும்? ஏதோ அறியாதவரு தெரியாம சொல்லிப்புட்டாரு போல.
இந்த விஷயத்தைக் குறித்த உங்களது கருத்துக்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனது கருத்துக்களை இங்கே எழுதியிருக்கிறேன்.
நேத்து செண்ட்ரல் லண்டனில் நடந்த இண்டலிஜெண்ட்ஸ் ஸ்கொயர் டிபேட்ல கிறிஸ்தவம் கத்தோலிக்கம் தோற்றது.
2000 பேரில் 200 பேர் மட்டுமே கத்தோலிக்கம் இந்த உலகுக்கு ஏற்றது என்கிறார்கள்.
இங்கே பதிவு செய்கிறேன்.
Post a Comment