Tuesday, February 06, 2007

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு துளிகள்

வணக்கம் எல்லோருக்கும்...

வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை வலைப்பதிவர் சந்திப்பு பற்றிய பதிவு இது...உடனே பதிவிடலாம் என்று நினைத்தபோது பணிச்சுமை காரணமாக முடியவில்லை...இப்போது தான் சிறிது நேரம் கிடைக்கிறது...

இப்படி எழுத ஆசைதான்...ஆனால் வழக்கமாக எழுதறமாதிரியே எழுதி தொலைக்கலாம்...இதுல என்ன பார்மாலிட்டி வேண்டிக்கிடக்கு ?

பெங்களூரில் நான் சென்ற "என்னோட" விமானம், பனிப்பொழிவு காரணமா 4 மணி நேரம் தாமதமா மதியம் மூன்று மணிக்கு தான் சென்னைக்கு போய் சேர்ந்தது...பசி வயத்தை கிள்ளியது...பிரதர் ப்ளாட் இருக்கும் வேளச்சேரிக்கு போய் சேர மணி மூணு முப்பது...அப்படியே விஜயநகர் பக்கத்தில் இருக்க ரத்னா கேப் போனா, அங்கே இட்லி தோசை மட்டும் தான் இருக்கு என்றார் சர்வர்...

சரி ரெண்டு முறை சாம்பார் இட்லியும், ஒரு தோசையையும் உள்ளே தள்ளிவிட்டு அண்ணன் வீட்டில் படுத்து ஒரு குட்டி தூக்கம் போடுவதற்குள் வலைப்பூ சுனாமியிடம் இருந்து ( அதான் லக்கிலூக்) ஒரு குறுஞ்செய்தி...இன்னா வரியா வர்லியா ? என்று...அப்படியே கவிஞர் பாலபாரதிக்கு ஒரு போனை போட்டேன்...'ந்தா கிளம்பிக்கிட்டே இருக்கேன் தல' என்றார்..

அப்படியே எழுந்து ஒரு குளியல் போட்டு, (அட அட அட, சென்னையில் ஹீட்டர் போடாமலேயே சுடத்தண்ணி விடுறானுங்கப்பா), அண்ணனின் "சொந்த" பைக்கை எடுத்துக்கொண்டு நடேசன் பார்க்கை நோக்கி விரைந்தேன்...முதுகில் லக்கிலூக் / பத்மகிஷோர் / சந்தனமுல்லைக்கு கொடுக்க வேண்டிய பரிசுகள் (இங்கே பாருங்க ஏன் பரிசுன்னு). அப்புறம் "லாபிங் புத்தா" குட்டி ஸ்டேச்சுயூக்கள் ஐந்து...அப்புறம் நான் மிகவும் விரும்பும் சில எழுத்தாளர்களுக்கு சில புத்தக பரிசுகள்...!!! அப்புட்டுத்தேன்...

இதில் சந்தனமுல்லையை மின்னஞ்சல் மூலமாக அழைத்திருந்தேன்...அவங்களுக்கு வேலை இருப்பதால் வரவில்லை என்று சொல்லிவிட்டார்கள்...பத்மகிஷோரையாவது அழைத்திருக்கலாம்...சென்னை கிளம்பும்போது நான் இருந்த அவசரத்தில் எதையும் செய்யமுடியவில்லை...(பேட்டரி ப்ரச்சினையான ஒரு போனை சுனாமிக்கு எடுத்து சென்றுவிட்டேன் - அதை அடுத்தவாரம் தான் ரீப்ளேஸ் செய்யனும்)...

என்ன சென்னை வலைப்பதிவர் சந்திப்பு துளிகள்னு வெச்சுட்டு ஒரே சொந்த கதையா இருக்குன்னு பாக்குறீங்களா ? சத்தியமா இது என்னோட பதிவுங்க...நானே போலி பெயர்ல கூட பின்னூட்டம் போடுவேன்...ஆமாம்...

நடேசன் பார்க்கில் நுழைந்தவுடன் லக்கிக்கு போன் அடித்தேன்...அவர்கள் உள்ளே அமர்ந்திருப்பதாக சொன்னார்கள்...அப்படியே முன்னேறி சென்றால் கவிஞர் பால பாரதி, முத்து (தமிழினி),மா சிவக்குமார், லக்கிலூக் அமர்ந்திருந்தார்கள்...மிக நீண்ட நாளாக சந்திக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த மா.சிவக்குமார், மிகவும் மென்மையாக, இளமையாக தெரிகிறார்...நான் இதுவரை பார்த்திராத பாலராஜன் கீதா அமர்ந்திருந்தார்...அப்படியே அவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கையில் நமது "சுந்தர்" வந்து சேர்ந்தார்...

மிதக்கும் வெளியும், வரவணையானும் வெளியே சென்றதாக தகவல் கிடைத்தது...அவர்கள் சரக்கு ஏற்ற போய்விட்டார்கள் என்ற கடுமையான வதந்தி உலவியது...

இன்னும் சற்று நேரம் மொக்கை போட்டுக்கொண்டிருக்கையில் விக்கி வந்து சேர்ந்தார்...நான் நினைத்ததை விட இளமையாக இருந்தார்...டெக்னிக்கல் குழுவில் இவர் ஆக்டிவாக இருப்பது தெரிந்தது தான்..பார்க்கவே டெக்னிக்கல் பர்சன் மாதிரி இருந்தார்..

பிறகு டோண்டு வந்துசேர்ந்தார்...கீழே உட்காரவியலாமல் சற்று நொந்தார்...எப்போதும் வாடகைக்காரில் வருபவர் "தன்னுடைய" எலக்ட்ரிக் ட்ரெயினில் வந்ததாக சொன்னார்...இவர் எப்போது எலக்ட்ரிக் ட்ரெயின் வாங்கினார் என்று தெரியவில்லை...தான் எப்படி அடித்து பிடித்து தன் க்ளையண்டிடம் பணம் வாங்கினார் என்று எழுதி உள்ளார்..இப்படி சம்பாதித்தால் கட்டாயம் வாங்கினாலும் வாங்குவார்..மேற்சொன்ன பதிவில் கட்டாயம் பின்னூட்டங்களை படிங்க...சின்னதாக ஒரு முறை சாட்டையை சுழற்றினேன்...பிறகு ஜகாவும் வாங்கினேன்..

பிறகு ஈழ சகோதரர் சோமி வந்தார்....உருப்படியாக பேசியவர் இவர்தான்...நிறைய சிந்தனை...ஆழமான அறிவு....வாழ்வில் நன்றாக உயர்வார்...

பிறகு சிவஞானம்ஜி வருகிறார்...தும்பைப்பூ நிற வேட்டி, அதே நிற மீசை...பார்க்கும்போதே ஒரு மருவாதி வந்து ஒட்டிக்கொள்கிறது..."உங்கள் பதிவெல்லாம் படிப்பேன்....நானும் கலாய்ச்சு பின்னூட்டம் போடலாம் என்று தான் நினைப்பேன்...ஆனால் டி.பி.ஆர் எல்லாம் சொல்கிறார், இவ்ளோ வயசுக்கு பிறகு உனக்கு இது தேவையா என்று" என்று சொன்னார்...அட நீங்க போடுங்க சார்...சும்மா ஜாலியா...கடலூரில் (பிறந்த இடம்) நான் பிறக்காத முன்னாடியே வேலை பார்த்ததாக சொன்னார்...மூத்த வலைப்பதிவராக இருப்பதும், அந்த வயதுக்கு தகுந்ததுபோல் மிக அழகாக நடந்துகொள்வதும் இவர் மீது ஒரு தனி மரியாதையை அனைவருக்கும் ஏற்படுத்தி இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல....(டி.பி.ஆரை மூத்த வலைப்பதிவர் லிஸ்டில் இருந்து தூக்கி, வாலிபர் சங்கத்தில் சேர்த்துட்டாங்க, மனுசன் கலக்குறாரு)...

குடுகுடுவென ஜெய சந்திரசேகரன் வந்தார்...படபடவென எல்லாரிடமும் அறிமுகம் ஆனார்...பொலிவிழந்த கோயில்களுக்கு ரீச் பவுண்டேஷன் சார்பாக கைங்கர்யம் செய்வது பற்றி பேசினார்...என்னை வழக்கமா எங்க வீட்ல "உருப்புடாத கோயில்ல உண்டை சோறு வாங்கி தின்றவனே" என்று திட்டுவாங்க...ஏனோ அது நியாபகம் வந்து தொலைத்து லைட்டாக சிரித்துக்கொண்டேன்..

பிறகு அப்படியே ஒரு டீ அடிக்க போகலாம் என்று வெளியேறினால் அங்கே 'தம்' போட்டுக்கொண்டு மிதக்கும் வெளியும், வரவணை செந்திலும் நின்றிருந்தாங்க...அப்படியே ஆளுக்கொரு டீ...எல்லா டீயையும் ஸ்பான்ஸர் செய்தது பாலராஜன் கீதா...ஒரு தண்ணி(வாட்டர்) பாட்டில் ஸ்பான்ஸர் செய்தது ஜெய சந்திரசேகரன்...அங்கே இருக்கவங்க தாகமாயிருப்பாங்க, பெரிய பாட்டிலா வாங்கிக்கறேன் என்று அவரது "ஹிட்டன்" தாயுள்ளம் வேலை செய்தது..

பிறகு உள்ளே போய் அமர்ந்தவுடன் வந்தவர்கள் பூபாலன், ரோசா வசந்த், மற்றும் ஐகாரஸ் ப்ரகாஷ்...ரோசா வசந்த் மிகவும் இளமையாக இருக்கிறார்...எழுத்தின் வீச்சை வைத்து பெரியவராக இருக்கும் என்று நினைத்த என் எண்ணத்தில் மண்...ஐகாரஸ் ப்ரகாஷின் அமைதி மிகவும் கவர்ந்தது...

கும்பல் கும்பலாக கூடி பேசினார்கள், சிரித்தார்கள், முறைத்தார்கள், ஓட்டினார்கள், ஓட்டப்பட்டார்கள்...கடைசியில் கொசு வந்து இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரு விடிவு காலம் கொடுத்தது...என்னவோ தெரியலை, மரபூராரை பல கொசுக்கள் கும்மி அடித்து கடித்துக்கொண்டிருந்தன...

ஒவ்வொருவராக கிளம்பினார்கள்...பாலா அப்பீட்...நாங்கள் வலைப்பதிவர் சந்திப்பை நடத்தலாம் (!!!!????) என்று தி.நகர் ஈகிள் பார் கிளம்பினோம்...எங்களுடன் பாருக்கு வந்தவர்கள் நான், லக்கி ( ஒன்லி சைடிஷ்), மிதக்கும் வெளி, ஓகை, வரவணை, முத்து (தமிழினி), ரோசா வசந்த், சோமி, டோண்டு மற்றும் சுந்தர்...

(சென்சார் கட் பார் 2 ஹவர்ஸ்)

ஓகை வந்து கை கொடுத்தார்..நீங்கள் செய்யும் வேலை வாய்ப்பு செய்திகள் நல்ல விஷயம்...ஆனால் உங்கள் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு கிடையாது என்றார்...(இதென்ன கொடுமை, எனக்கு ஏது கருத்து என்று நான் விழித்தேன்...) அவருக்கு தேவையான 4 டிப்ளமோ ஹோல்டர் பணிவாய்ப்பை அறிவித்தார்...நன்றி அதற்கு...

டோண்டு ராகவன் அருமையாக ஒரு கிங் பிஷரை உள்ளே தள்ளி, சிக்கன் பிரியாணி வெட்டினார்...நான் அவரை மாதவன் என்று அழைத்தேன்..."மின்னலே" படத்தில் ரீமா சென்னிடம் தான் சிக்கன் சாப்பிடுவேன் என்று பொய்சொல்லி சாப்பிட்ட ஒரு ஸ்டைல் தெரிந்தது...சாப்பாட்டை முடித்தவுடன் பாத்ரூம் விரைந்தது சந்தேகத்தை கிளப்பியது...

முத்து தமிழினி செய்த குட்டி கலாட்டா கொடுமையின் உச்சம்..திடீரென வலைப்பூ சுனாமியை அழைத்து, ரோசா வசந்திடம் ஒரு பெரியாரிஸ பின்னவீனத்துவ முற்போக்கு திராவிட கொள்கையை விளக்க சொன்னார்...அவர் அடித்த இரண்டு லார்ஜுக்கு இது ஓக்கே...பாவம் லக்கி என்ன செய்வார் ? விளக்கி சொல்லிக்கொண்டிருதார்...

நானும் ஒரு பத்துமணிவாக்கில் "உம்மாச்சி கண்ணை குத்திவிடும்" என்று சொல்லி அப்பீட் ஆனேன்...ஏதாவது டவுட் இருந்தா கேளுங்க..!!!!!

39 comments:

ரவி said...

இப்படித்தான் ஒரு பின்னூட்டம் போட்டு ஸ்டார்ட் சொல்வோம்.

ரவி said...

இது ஒரு கேவலமான பதிவு.!!!

மனோஹர் ஜோஷி.

Anonymous said...

இதத்தான கேட்டேன்...

:))))))))))))))

Anonymous said...

மனோஹர் ஜோஷி.???

dondu(#11168674346665545885) said...

"சாப்பாட்டை முடித்தவுடன் பாத்ரூம் விரைந்தது சந்தேகத்தை கிளப்பியது..."

:))
ஆனால் உங்கள் சந்தேகம் அடிப்படையற்றது என்பதை இவ்விடத்தில் அறிவிக்கிறேன். எனக்கு பிடித்தது மீன், ஆனால் சிக்கன் பிரியாணியும் பிடிக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

SP.VR. SUBBIAH said...

கொண்டுசென்ற பரிசுப்பொரு்ட்களைக் கொடுத்தீர்களா - இல்லையா?
அதைச் சொல்லவில்லையே?

மங்கை said...

இந்த சந்திப்புக்கு பேர் என்ன சொன்னீங்க???...

ஜோ/Joe said...

//இதென்ன கொடுமை, எனக்கு ஏது கருத்து என்று நான் விழித்தேன்//

சிரிச்சு சிரிச்சு கண்ணுல இருந்து தண்ணியா வருது!

உங்கள் நண்பன்(சரா) said...

நல்ல லைவ் பதிவு ரவி! நேரில் வந்ததைப் போன்ற உணர்வு நன்றி!

பதிவில் ஆங்காங்கே தற்பொழுதைய தமிழ்மண நிலவரத்தை தூவி இருப்பது ரசனை!( "என்னோட" விமானம், அண்ணனின் "சொந்த" பைக்):)))))

டவுட் 1,சென்சார் கட் பண்ணிய அந்த 2 ஹவர்ஸ்சை எப்போ பதிவிட உத்தேசம் ?

டவுட் 2 , சந்திப்பில் ஃபோட்டோ எடுக்கலையா?


//சின்னதாக ஒரு முறை சாட்டையை சுழற்றினேன்...பிறகு ஜகாவும் வாங்கினேன்..//
உங்களின் சாட்டையையும் ஜகாவையும் ரசித்தேன்:)))


அன்புடன்...
சரவணன்.

கதிர் said...

கலக்கல்ஸ் ஆப் சென்னை பதிவர் சந்திப்பு!

ஒரு புண்ணியவான் போன் பண்றேன்னு நம்பர் வாங்கிட்டு போனே பண்ணல, அவர பாத்தா என்னான்னு கேளுங்க ரெட்பயர்!

Anonymous said...

ரவி

நானும் வந்தேனுங்களே மீட்டிங்குக்கு மட்டும்.. :)

அன்புடன்...ச.சங்கர்

Anonymous said...

// நான் நினைத்ததை விட இளமையாக இருந்தார்...டெக்னிக்கல் குழுவில் இவர் ஆக்டிவாக இருப்பது தெரிந்தது தான்..பார்க்கவே டெக்னிக்கல் பர்சன் மாதிரி இருந்தார்..

நன்றிங்கணோவ் :)

// மிகவும் விரும்பும் சில எழுத்தாளர்களுக்கு சில புத்தக பரிசுகள்.

அடப்பாவமே, இது தெரியாம என் கைல கொடுத்த புக்க நான் திருப்பி கொடுத்திட்டேனே. எழுத்தாளர்ங்கிற பேர் வாங்கிற நல்ல சான்ஸ் மிச்சமாயிடுச்சே ;)

ரவி,
எனக்கு புத்தகங்களை பரிசாக கொடுப்பது/வாங்குவது/சுடுவது ;) மிகவும் பிடித்த விஷயம். தொடருங்கள்

துளசி கோபால் said...

ரவி,

உங்க 'விமானம்' போலதான் டோண்டுவின் 'ரயில்':-))))

வடுவூர் குமார் said...

ஹூம்!!
ஒரே கலக்கலாகத்தான் இருந்திரீக்கீங்க போல??
பின்னூட்டம் வரையா?
:-))

ரவி said...

////கொண்டுசென்ற பரிசுப்பொரு்ட்களைக் கொடுத்தீர்களா - இல்லையா?
அதைச் சொல்லவில்லையே? ////

எல்லாவற்றையும் இஸ்ஸியூ செய்தேன்...:)))

ரவி said...

மன்னிக்கனும் ஷ்ங்கர்....அவசரமாக எழுதியதால் மறந்துவிட்டேன்...ஹியூமன் பால்ட்...இப்போது சேர்க்கலாம் என்றால் ப்லாகர் சொதப்புகிறது...( உங்களைப்பற்றி எழுத ஒரு பாரா இருக்கு)

gulf-tamilan said...

நல்ல லைவ் பதிவு

ரவி said...

///மனோஹர் ஜோஷி.??? ////

சிந்தா நதி, விரைவில் உண்மையை புரிந்துகொள்வீர்கள்...!!! பிறகு சிரிக்கலாம்.

ரவி said...

///
ஆனால் உங்கள் சந்தேகம் அடிப்படையற்றது என்பதை இவ்விடத்தில் அறிவிக்கிறேன். எனக்கு பிடித்தது மீன், ஆனால் சிக்கன் பிரியாணியும் பிடிக்கும்.
///

வருகைக்கு நன்றி டோண்டு ராகவன், மீனில் எந்த மீன் பிடிக்கும் ? பாறையா / கிழங்கானா அல்லது வஞ்சிரமா ?

ரவி said...

////இந்த சந்திப்புக்கு பேர் என்ன சொன்னீங்க???... ///

மேடம், வலைப்பதிவர் சந்திப்புதானுங்க...:))

ரவி said...

////ஒரு புண்ணியவான் போன் பண்றேன்னு நம்பர் வாங்கிட்டு போனே பண்ணல, அவர பாத்தா என்னான்னு கேளுங்க ரெட்பயர்! ///

மன்னிக்கவும்...அது நான் தான்ன்னு நெனைக்கிறேன்...என்னிடம் ஐ.எஸ்.டி அலுவலகத்திலேயே இருக்கிறது...இருந்தாலும் நேரமின்மை காரணமா போன் செய்யலை தலைவா...அதான் அபி.அப்பா பேசினாரே !!! :))

ரவி said...

நன்றி கல்ப் தமிழன்.

சென்ஷி said...

//...(இதென்ன கொடுமை, எனக்கு ஏது கருத்து என்று நான் விழித்தேன்...)//

சூப்பர் :):):)
வலைப்பதிவு சந்திப்புல போட்டோ ஏதும் எடுக்கலையா?


சென்ஷி

ரவி said...

போட்டோக்கள் எடுக்கப்பட்டது...நான் லக்கி / வரவணை / பாலா மற்றும் மிதக்கும் வெளி ஒரு போட்டோ எடுத்துக்கொண்டோம்...மற்றபடி இட்லிவடை லாங் ஷாட்டில் ரெண்டு போட்டோ அடித்தார்..

Anonymous said...

ஆமா செந்தழலாரே, கடந்த வெள்ளியன்று நடந்த மினி பெங்களூர் மீட்டிங் பத்தி ஓருத்தரும் வாயே திறக்கமாட்டேங்கறீங்களே ஏன்?...

இன்னுமொறு கேள்வி, ல்ஜி மொபைல் (ரிசண்ட் மாடல் என்ன?) கம்பனி ரெட்டுக்கு வாங்க உங்க கிட்ட ஏதாவது உதவி கிட்டுமா?.

ரவி said...

ஓமம்...எல்.ஜி மொபைலை வாங்கலாம்...எந்த மாடல் வேண்டும் என்று சொல்லவும்...மேலும் டி.வி. பிரிஜ் / வாஷிங் மெஷின் என்று எல்லா எல்ஜி ப்ராடக்டும் 40% டிஸ்கவுண்டில்..

Anonymous said...

ராகவன் அய்யங்கார் சிக்கன் சாப்பிட்டாரா? எங்க ஜாதிக்கே கேவலம் :-(

அவருக்கு பிராமணர்களை பற்றி பேச தகுதியே கிடையாது.

ரவி said...

அய்யா ஐஸ்ப்ரூட்,

ராகவன் உங்கள் சாதி அல்ல. நீங்கள் அய்யர், அவர் அய்யங்கார்..

முதலில் அவரை தூற்றுவதை நிறுத்தி தொலையும்.

ரவி said...

வருகைக்கு நன்றி விக்கி...!!!!

உங்கள் நண்பன்(சரா) said...

எனது முதலாவது பின்னூட்டம் தாங்களால் படிக்கப்படாமலேயே பதிவிடப்பட்டு விட்டது என்று நினைக்கின்றேன்:(

அன்புடன்...
சரவணன்.

ரவி said...

சரவணன், விரிவாக ரிப்ளை செய்யலாம் என்றிருந்தேன் தலை. டோண்ட் ஒர்ரி..கொஞ்சம் வேலை..புரிஞ்சுப்பீங்கன்னு நினைக்கிறேன்..

டவுட் 1,சென்சார் கட் பண்ணிய அந்த 2 ஹவர்ஸ்சை எப்போ பதிவிட உத்தேசம் ?

வேண்டுமானால் தனிமடலா அனுப்பறேன்.

டவுட் 2 , சந்திப்பில் ஃபோட்டோ எடுக்கலையா?

எடுத்தோம்...பதில் சொன்னேனே:

செந்தழல் ரவி said...
போட்டோக்கள் எடுக்கப்பட்டது...நான் லக்கி / வரவணை / பாலா மற்றும் மிதக்கும் வெளி ஒரு போட்டோ எடுத்துக்கொண்டோம்...மற்றபடி இட்லிவடை லாங் ஷாட்டில் ரெண்டு போட்டோ அடித்தார்..

Wednesday, February 07, 2007

இப்போ சரியா ?

Anonymous said...

//ராகவன் உங்கள் சாதி அல்ல. நீங்கள் அய்யர், அவர் அய்யங்கார்..//

அப்பன்னா ராகவனால எங்க ஜாதிக்கே கேவலம்னு சொல்றீங்களா?

உங்கள் நண்பன்(சரா) said...

//சரவணன், விரிவாக ரிப்ளை செய்யலாம் என்றிருந்தேன் தலை. டோண்ட் ஒர்ரி..கொஞ்சம் வேலை..புரிஞ்சுப்பீங்கன்னு நினைக்கிறேன்..
//

உண்மையில் கோபம் இருந்தது, அதன் வெளிப்பாடு தான் முந்தைய பின்னூட்டம்.தற்பொழுது ஜகா,
( சாட்டையடி,ஜகா தங்களிடம் கற்றது தான்:))))
நான் தான் அவசரப்பட்டு விட்டேன் என்று நினைக்கின்றேன். மன்னிக்கவும்

//இப்போ சரியா ?//

எப்பவுமே சரிதான்:)))))

அன்புடன்...
சரவணன்.

கார்த்திக் பிரபு said...

yo soopera eluhi irukeeru valthukal..adutha meetuku nan um kandippa varanum

கார்த்திக் பிரபு said...

yo soopera eluhi irukeeru valthukal..adutha meetuku nan um kandippa varanum

Anonymous said...

ஆக கூட்டமா குடிச்சிட்டு ரோட்ல விழுந்து கிடந்த கூட்டம் நீங்க தானா? ;)

வாழ்த்துக்கள் :)

இரா.சுகுமாரன் said...

அப்பாடி நான் தப்பிச்சேன் போல இருக்கு சென்னையில் நடக்கும் தமிழ் மென்பொருட்கள் கண்காட்சியையும் பார்த்துவிட்டு இந்த சந்திப்பில் கலந்து கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். கடைசியில் வர இயலவில்லை.

என்னப்பா பேசினீர்கள், டீகுடிச்சோம், கொசு அடிச்சோம் பாருக்கு போனோம், என்றால் எதற்க்கையா பெங்களூரிலிருந்து வந்தீர்கள்.

போனமுறை என்னான்னா போண்டா சாப்பிட்டோம் என்று எழுதுகிறார்கள் அதுக்கு ஏனய்யா இங்கு வரவேண்டும் அங்கேயே வாங்கி சாப்பிட வேண்டியது தானே!.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது வலைப்பதிவர் சந்திப்பு என்பது ஒரு பயனற்ற வேலை போல் தெரிகிறது நண்பர்கள் நேரடி அறிமுகம் தவிர.

அடுத்தமுறை பயன்படும்படி எழுதுங்கள். பயன்படும்படி சந்தியுங்கள். இல்லையென்றால் வலைப்பதிவில் எழுதாமல் நண்பர்கள் தனித்தனி அழைப்பாக விடுத்து என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். இதற்கு ஏன் இத்தனை விளம்பரம்?.

Anonymous said...

//தாராளமாக இருங்கள். உங்கள் தயவெல்லாம் இனிமேல் தேவையில்லை.
அனானி ஆப்ஷன் திறந்தாயிற்று//
http://pithatralgal.blogspot.com/2007/02/187.html
இதுக்கு என்ன சொல்றீங்க? உங்கள் தயவெல்லாம் இனிமேல் தேவையில்லை ங்கரதுக்கு என்ன அர்த்தம்?
இதுக்கு மேல ஒரு அவமானம் தேவையா?நீங்க எல்லாம் போய் தூக்கு மாட்டிக்கலாம்.

SurveySan said...

த.வெ.உ போடோ அனுப்பலியே. என்ன ஆச்சு?

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....