Wednesday, July 29, 2009

ஆண்மையிழந்த அடைக்கலங்குருவிகள்....!!!!

முன்பெல்லாம் கிராமத்து வீடுகளெங்கும் காணக்கிடைக்ககூடிய ஒரு விடயம், அடைக்கலங்குருவிக்கூடு...கூரை வீடு,பனைவாரை அடித்த ஓட்டு வீடு,செங்கல் சுவர் மச்சு வீடு என்று எந்த வீடாக இருந்தாலும் மேக்கால ரூம், கிழக்கால ரூம் என்று எல்லாவிடங்களிலும் வாகான இடமாய்ப்பார்த்து கூடுகட்டியிருக்கும்...

அது கூடுகட்டும் அழகே தனி...காய்ந்த புல்,சின்ன வைக்கோல், ஏதோ ஒரு செடியின் காய்ந்த சருகு, கொஞ்சம் இறுக்கமான சின்ன குச்சி என்று எதாவது ஒன்றை அலகில் வைத்துக்கொண்டு ஆள் நடமாட்டம் குறையும் நேரம் பார்த்து முற்றத்தின் இரும்பு கம்பியிலோ, சுவர் ஒட்டி வளர்ந்திருக்கும் வேப்பமரத்து மூன்றாவது கிளையிலோ சுறுசுறுப்பாக தலையை ஆட்டி ஆட்டி சின்னக்கண்களோடு பார்த்துக்கொண்டிருக்கும்...



பாட்டி வெற்றிலைப்பாக்கு இடிக்கும் சத்தமோ, மோர் சிலுப்பும் சத்தமோ, வியர்வையோடு தாத்தா வந்தமரும் சத்தமோ, ஜெனரேட்டர் இஞ்சின் ஓடும் சத்தமோ, ட்ராக்டர் ட்ரெய்லர் மாட்டும் சத்தமோ அதை தொந்தரவு செயததாக நினைவில்லை...தான் உண்டு தன் வேலை உண்டு என்று கருமமே கண்ணாக கூண்டு கட்டுவது, தான் என்ன வேலை செய்கிறோம் என்று இந்த மனிதனுக்கு தெரியுமோ தெரியாதோ என்பது பற்றி கவலை இன்றி கூட்டின் வாசலிலோ, உள்ளோ அமர்ந்திருப்பது...

முட்டை போட்டு குஞ்சு வைத்து, அந்த குஞ்சுகளுக்கு எங்கிருந்தோ பிடித்துவந்த புழுவோ, பூச்சியோ, கீச்ச் கீச்ச் சப்தங்களுக்கு மத்தியில் ஊட்டி, வெளியே கோழிகளுக்கு போட்டிருக்கும் கம்போ கேவுறோ தனக்கொன்று பொறுக்கிக்கொண்டு உத்திரத்தில் சத்தமிட்டுக்கொண்டோ, சில நேரங்களில் சத்தமில்லாமலோ உட்கார்ந்திருக்கும்...

இன்றைக்கு அடைக்கலங்குருவிகள் இல்லை...

ஆமாம்...அழிக்கப்பட்டுவிட்டன...தானாக அல்ல...அழித்தொழிக்கப்பட்டுவிட்டன...

ஆச்சர்யமாக இருக்கிறதா என்ன ? ஆமாம். அதுதான் உண்மை.

நீங்கள் கடைசியாக அடைக்கலங்குருவியை எப்போது பார்த்தீர்கள் ? கிராமமோ, நகரமோ...மனிதர்களை தன்னுடைய தோழர்களாக நினைத்து, அவர்களிடம் அடைக்கலம் தேடிவந்தவை இந்த அடைக்கலங்குருவிகள்..

மனிதன் கட்டும் வீட்டில் நாமும் நமது வீட்டை கட்டிக்கொள்வோம்...அவனால் நமக்கு தீங்கில்லை..நன்மையே..என்று அதன் சின்ன உள்ளத்தால் சிந்தித்து மனிதனிடம் அடைக்கலம் தேடிவந்ததனாலேயே இதன் பெயரை அடைக்கலம் குருவிகள் என்று அழைத்தோம்...

இன்றைக்கு அதே மனிதன் அடைக்கலங்குருவிகளை, வேரோடு, வேரடி மண்ணோடு அழித்தொழிக்கும் பணியின் இறுதிக்கட்டத்தை நெருங்கிட்டான்...எப்படி என்று கேட்கிறீர்களா ?

புதிர் வைக்கும் எண்ணம் இல்லை எனக்கு....நான் நெஞ்சார ரசித்து பார்த்த அடைக்கலம் குருவிகளை இனிமேல் பார்ப்பேனா என்ற கேள்வி கத்தி போல் இதயத்தை ஊடுருவித்தாக்குகிறது...

ஆம்...அடைக்கலம் குருவிகள் ஆண்மையிழந்துவிட்டன...இனி உங்கள் வீட்டில் அடைக்கலம் குருவி கூடுகட்ட வாய்ப்பில்லை...முட்டையிடவோ குஞ்சு பொரிக்கவோ வாய்ப்பில்லை...

இயற்கை உரங்களை விடுத்து அதிக மகசூலுக்காக செயற்கை உரங்களை மனிதன் பயன்படுத்த ஆரம்பித்தது சரிதான்...ஆனால் இப்போது உரங்கள் இட்டும் அதன் மேலே அமர்ந்து பயிர்களை நாசம் செய்யக்கூடியதாக பூச்சிகள் திடம் பெற்றுவிட்டன...இதனால் தமிழக விவசாயிகள் அதிக வீரியம் உள்ள உரங்களை கடந்த அய்ந்தாண்டுகளாக பயன்படுத்த தொடங்கி, அதன் மூலம் புல், பூண்டு, வைக்கோல் என்று எல்லா தாவரங்களிலும் அதன் பாதிப்பு...இதன் மூலம் பொதுவாக கிராமங்களில் இருக்கும் அடைக்கலம் குருவிகள் இனவிருத்தி செய்யும் தகுதியை இழந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன...



ஆக இனவிருத்தி செய்யமுடியாமல் போன அடைக்கலங்குருவிகள், அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்து, நகரமயமாக்கலில் அதன் சிறிய உணவு தானிய இருப்பும் விஷமாகிப்போன நிலையில் ஒவ்வொன்றாக அழிந்துவிட்டன. இனி அடைக்கலங்குருவிகளின் பொம்மைகளைத்தான் நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு கொடுக்கமுடியும் போலும்..




இந்த கட்டுரையை எழுதும்போது கீச் கீச் என்று எங்கோ ஒரு ஓசை...அது அடைக்கலம் குருவியாக கண்டிப்பாக இருக்கக்கூடும்...இனிவரும் சந்ததிகள் இந்த ஓசையை கேட்கமுடியாமலே கூட போய்விடக்கூடும்...!!! மனது கனமாகிறது...!!!!!!

23 comments:

துளசி கோபால் said...

இது சிட்டுக்குருவி வகையா ரவி?

Yogi said...

ஆமாம் ரவி இப்போதெல்லாம் சிட்டுக்குருவிகளைக் காணமுடிவதில்லை. :(

சந்திரமுகன் said...

அருமையான பதிவு.உண்மையிலே கண்கள் கலங்கிவிட்டது.

ரவி said...

//இது சிட்டுக்குருவி வகையா ரவி?///

yes yes...சிட்டுக்குருவி வகை.....

ரவி said...

//ஆமாம் ரவி இப்போதெல்லாம் சிட்டுக்குருவிகளைக் காணமுடிவதில்லை. :(//

mmmmmmmmmmm

ரவி said...

///அருமையான பதிவு.உண்மையிலே கண்கள் கலங்கிவிட்டது.///

thanks my friend

நந்து f/o நிலா said...

ரவி முன்பே ஒரு தடவை செல்போன் சிக்னலால்தான் சிட்டுக்குருவி அழிகிறது என்று ஒரு பிரச்சனை கிளம்பியது.

அப்போதிலிருந்து என் சொந்தகிராமத்துக்கு போகும் போதெல்லாம் சிட்டுக்குருவியை தேடுவேன். ஒன்று கூட கண்ணில்படாது. வேதனையாக இருக்கும்.

ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்பு போனபோது நிறய சிட்டுகுருவிகள் தென்பட்டன.ரொம்ப சந்தோஷமா இருந்தது.

Thekkikattan|தெகா said...

நான் கூட பார்த்தாக நினைவிருக்கிறது. இது அந்த Munia (spp.) வகை பறவைகளிலிருந்து வந்திருக்கக் கூடும்.

இது போலவே நிறைய பருந்து வகைகளுக்கும் நேர்ந்து கொண்டிருக்கிறது, இந்த செயற்கை உரங்களின் பாதிப்பு.

உண்மையில் இந்தப் பறவைகளின் முட்டையோடு அதீத இளகுத் தன்மையடைவதால் (Leathergic), குஞ்சுகள் பொரிக்கும் தன்மையை இழக்கின்றன...

:(

நந்து f/o நிலா said...

தானியங்கள் பயிர்செய்வது குறைந்ததும் சிட்டுக்குருவிகள் காணாமல் போனதற்கு ஒரு காரணம் என்று கிராமத்தில் சொல்கிறார்கள்

Anonymous said...

இலங்கையிலும் இதே நிலைதான். விமானக் குண்டு வீச்சு, எறிகணை வீச்சில் பல விலங்கள், பறவைகள் அழிகின்றன. நேற்றும் பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து இராணுவத்தாக்குதலில் சிக்கி 11 தமிழ் பள்ளி மாணவர்கள் இறந்துவிட்டார்கள்.

மனிதர்களைக் காப்பாற்ற குரல் கொடுக்காத உலகம் தமிழ் பேசத் தெரியாத, தமிழ் இனத்தைச் சாரத பறவைகளையும் விலங்குகளையும் காப்பாற்ற முன்வரலாம்.


ஒரு ஈழத் தமிழன்

துளசி கோபால் said...

இங்கே நம்மூர்லே நிறைய இருக்கு.

நம்ம வீட்டுத்தோட்டத்துக்கு தினம் வரும் நண்பர்கள். கலபிலன்னு ஒரே கலாட்டாதான்.

அரை பிளேடு said...

//yes yes...சிட்டுக்குருவி வகை.....//


அந்த சிட்டுக்குருவிக்கே லேகியம் தேவைப்படுதா. :(

பூவுலகின் நண்பர்கள் said...

ஒரு கணிப்பொறி வல்லுனரிடமிருந்து இப்படி ஒரு பதிவை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.

சூழல் மீதான இந்த கரிசனமும், அக்கறையும் அனைத்து துறையினரிடமும் இருந்துவிட்டால்...

இன்னமும் மீதமிருக்கிறது நம்பிக்கை!

ஈரோடு கதிர் said...

//மனது கனமாகிறது...!!!!!!//

எனக்கும்

Arun said...

ஒரே ஒரு Add-தமிழ் பட்டன் விட்ஜெட் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய Add-தமிழ் பட்டன் விட்ஜெட் உங்கள் தளத்தில் இணையுங்கள் !

மேலதிக தகவல்களுக்கு www.findindia.net

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

மினுக்கு சிட்டு-மாம்பழச் சிட்டு காதல் ஜோடிதானே நீங்க சொல்றது ரவி?

அது எங்க வீட்டு முருங்கை மரப் பூவில் தேன் எடுக்கும் அழகே ரசிக்கத் தக்கது.

SUBBU said...

வலிக்கிறது :(((((((

thoaranam said...

மனித விலங்கின் தன்னலம் மட்டும் சார்ந்த எழுச்சி புவியின் இயல்பை தாறுமாறாக்கியுள்ளது, பலவற்றை அழித்துள்ளது.

-முகிலன்
தோரணம்

சுந்தரா said...

வரும் வருஷங்களில் பார்க்கமுடியுமோ இல்லையோ, இந்தமுறை கண்ணில் பட்டது.

முகம்பார்க்கும் கண்ணாடியைக் கொத்திக்கொண்டும், வீட்டுச்சன்னலில் கத்திக்கொண்டும், காக்காய்க்கு வைத்த சோற்றைத் தானும் பகிர்ந்துகொண்டும்...

ஒருவேளை,எஞ்சியிருக்கும் ஒன்றிரண்டு குருவிகள்தான் என் கண்ணில் பட்டிருக்குமோ??? மனசு கனமாகிறது.

Thekkikattan|தெகா said...

:) மேலே என்னுடைய மறுமொழியும் இருக்கிறது. ரொம்ப பீலிங்க்ஸ்வோட எழுதி இருக்கீங்க, திரும்பவும் படிச்சேன் ரவி - அருமை.

Thekkikattan|தெகா said...

இந்த பதிவோட இணைப்பும் கொடுத்திட்டேன் என்னோட பதிவில ;-), நன்றி!

cheena (சீனா) said...

அன்பின் ரவி

அருமை அருமை - இடுகை அருமை - சிந்தனை அருமை - நடை அருமை - படங்கள் அருமை

நல்வாழ்த்துகள் ரவி
நட்புடன் சீனா

Anonymous said...

நன்றி சீனா !!!!!!!!!!

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....