டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www.facebook.com/groups/ancestralfoods/ ) அட்மின்கள், மாடரேட்டர்கள் சார்பாக வரவேற்கிறோம். டயபட்டீஸை உங்கள் உடலில் இருந்து விரட்டி, உங்களை ஆரோக்கியமான வாழ்வியல் முறைக்கு அழைத்து செல்வதே குழுவின் நோக்கம். குழுவில் கோப்புகள் பகுதியில் மருத்துவர்கள், சீனியர்களின் அறிவுரைகள் நல்ல தமிழில் உள்ளது. உங்கள் உள்ளுறுப்புகளின் இன்ப்ளமேஷன் எனப்படும் உள்காயத்தை குறைத்து, உங்கள் குருதியில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்க கீழ்க்கண்ட பரிந்துரைகள் கொடுக்கப்படுகிறது. என்ன என்ன உணவு சாப்பிடவேண்டும் என்பது ஆளுக்காள் மாறுபடும், ஆனால் சில பரிந்துரைகள் அனைவருக்குமானது. அவற்றை கீழே பட்டியலிடுகிறேன். பரிந்துரை-1 சிவராம் அண்ணாவின் உன்னை வெல்வேன் நீரிழிவே புத்தகம் கண்டிப்பாக முழுமையாக படித்திருக்கவேண்டும். செல்வன் ஜி யின் பேலியோ டயட் புத்தகம் படித்திருக்கவேண்டும். மல்லிகை மகள் புத்தகத்தில் நமது குழு சீனியர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு புத்தகம் படித்திருக்கவேண்டும். ----