Showing posts with label அறிவுத்திருட்டு. Show all posts
Showing posts with label அறிவுத்திருட்டு. Show all posts

Sunday, January 23, 2011

காப்பியடிக்கும் தினகரன்



நீங்கள் தினகரன் மட்டும் வாங்குபவர்களாக இருந்தால் ஓக்கே. ஆனால் உங்கள் வீட்டில் தினகரன் மற்றும் டைம்ஸ் ஆப் இண்டியா ஆகிய இரண்டு பேப்பர்களும் வந்தால் நீங்கள் ஆங்கில பேப்பரான டைம்ஸ் ஆப் இண்டியாவை தைரியமாக நிறுத்தலாம்.

காரணம், தினகரனில் வேலை செய்யும் காப்பி கேட் ஒன்று,  ஆங்கில பேப்பர்களில் வருவதை அப்படியே மொழி பெயர்த்து அடித்து விடுவதற்கே முழு நேரமாக வேலை செய்கிறது.

கடந்தமாதம் உயரமான மாடல் ஒருவரைப்பற்றிய தகவல் மும்பை டைம்ஸில் பார்த்து அடுத்த நாளே தினகரனில் அதை ஒரு வரி கூட மாற்றாமல் ( மாடலின் உயரம், எடை மற்றும் மற்ற புள்ளிவிவரங்கள்) அவரை பற்றிய செய்திகள் ஆகியவற்றை அப்படியே எழுதினார்கள்.

அது முதல் இவர்கள் உண்மையில் காப்பியடிக்கிறார்களா என்று பார்த்துவந்தேன். இன்றைய தினகரனில் உடற்பயிற்சி செய்தால் ஜலதோஷம் வராது என்ற செய்தி வரை, அம்புட்டும் படு காப்பி.

ஒரு செய்தி என்பது எல்லாருக்கும் பொதுவானது. உதாரணம், சமீபத்திய சபரிமலை சம்பவம். அதனை அனைத்து நாளிதழ்களும் வெளியிட்டனவே ? அதனை காப்பி என்று சொல்லப்போவதில்லை.

ஆனால் குறிப்பிட்ட சில செய்திகள், மற்ற நாளிதழ்களில் வருவதை அப்படியே அடுத்த நாள் அடித்து விடுவது காப்பிதான்.

அவர்களும் (ஆங்கில நாளிதழகள்) , இணைய தளங்களில் இருந்தும் மற்ற செய்தி சோர்ஸ்களில் இருந்தும் தான் செய்திகளை சேகரிக்கமுடியும். காரணம், ரஷ்யாவில் எங்கோ ஒரு மூலையில் ஒரு சம்பவம் நடந்தால் அதனை ஒரு நிறுவனத்தின் சொந்த செய்தியாளர் தான் எழுதவேண்டும் என்று இல்லை. ஆனால் இன்னொரு நாளிதழில் வந்ததை அப்பட்டமாக அடிக்கும் காப்பி, அறிவுத்திருட்டு.

ஸ்பெக்டம் ராஜா வீட்டில் சோதனை நடந்ததை பற்றி ஒரு வரி கூட எழுதாமல், காமன்வெல்த் கல்மாடி வீட்டில் நடந்த சோதனையை தலைப்பு செய்தியாக வெளியிடுவது பற்றி கூட ஒன்றும் சொல்லதவில்லை. ஏன் என்றால் உங்கள் சார்பு நிலை பற்றி எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்த அறிவுத்திருட்டை பொறுத்துக்கொள்ளமுடியவில்லையே ? சம்பந்தப்பட்ட பைத்தியங்களுக்கு உறைக்குமா ?

..

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....