Showing posts with label மீள்பதிவு. Show all posts
Showing posts with label மீள்பதிவு. Show all posts

Monday, March 08, 2010

ஏலியனை (வெளிகிரக உயிரினம்) பார்த்தேன்...

சென்னையில் சந்தித்தபோது, நம்மை காரில் பிக்கப் செய்யவந்த நன்பர், லக்கியாரிடம் கூறிய விஷயங்களை அரண்டு போய் பதிவிட்டிருந்தார்..

இந்த வாரம் அதிபயங்கர அதிரடியான இன்னொரு விஷயம் கொடுத்தார் நமது நன்பர்..மங்களூருக்கு அருகில் சக்லேஷ்புரா என்ற கிராமம், நம்மூரு ஊட்டி மாதிரி..அங்கே கைவிடப்பட்ட ஒரு ரயில்வே பாதை உள்ளது...(இப்போது பணிகள் நடந்துகொண்டுள்ளன)...அங்கே வார இறுதியில் ட்ரெக்கிங் செல்வது என்னு முடிவானது..



சக்லேஷ்புராவில் சிற்றுந்துகளை நிறுத்திவிட்டு ரயில் பாதையில் நடந்துசென்று, 16 கிலோமீட்டரில் உள்ள 'எருக்கமேரி' இரயில் நிலையத்தை அடைந்து டெண்ட் அடித்து தங்குவது. பிறகு மேலும் 8 கிலோமீட்டர் நடந்துசென்று, அக்கிப்பள்ளி என்ற இடத்தில் மலையில் உள்ள பாதை வழியாக இறங்கி, 3 கிலோமீட்டர் கடந்து, அதிவேகமாக ஓடும் ஆற்றை கடந்து மேலேறி தேசிய நெடுஞ்சாலை நாற்பத்தி எட்டை அடைவது..பின்னர் ஏதாவது லாரியை பிடித்து நாற்பது கி.மீ பயணம் செய்தால் மீண்டும் சக்லேஷ்புரா...பிறகு பெங்களூர்...இதுதான் திட்டம்...வழியில் உணவுக்கு ஆங்காங்கே நெருப்பை மூட்டி MTR பாக்கட்டுகளை உபயோகப்படுத்துவது....





ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் வழியெங்கும் உள்ள சிற்றருவிகளும், அதன்மேல் உள்ள ரயில்வே பாலங்களும்( அதிகபட்ச நீளம் 700 மீட்டர், கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர்), நீண்ட கும்மிருட்டு குகைப்பாதைகளும் (அதிகபட்ச நீளம் 585 மீட்டர், அரைகிலோமீட்டருக்கு மேல்), அதில் நீக்கமற நிறைந்திருந்த வவ்வால்களும்...









ரயில்வே பாலங்களை மிகுந்த எச்சரிக்கையோடு அடிமேல் அடிவைத்து கடக்கவேண்டும்..காரணம் இரண்டு ட்ராக்குகளுக்கு மத்தியில் இருக்கும் கனெக்டர்தான் ஒரே இணைப்பு..அதில் கால்வைத்து தான் நடக்கவேணும்...



இந்த ட்ரெக்கிங்கில் ஒரே ஒருவர்தான் ஹீரோ...அவர் யாரென்றால் வழியெங்கும் எங்கள் கால் / கை என மொய்த்து ரத்தத்தை உறிஞ்சிய அட்டைப்பூச்சி..

காட்டுப்பாதையை கடந்து நெடுஞ்சாலையை அடைந்தபோது மொத்தமாக என் காலில் / கையில் / வயிற்றில் கூட (இரண்டு) இருந்த அட்டை பூச்சிகள் மொத்தம் 20 க்கும் மேல். ( அனைத்தும் ரத்தம் குடித்து வயிற்றை நிரப்பிய நிலையில்)...

இந்த அட்டைப்பூச்சி நல்ல விவாதம் ஒன்றை தூண்டியது...என் நன்பர் ஒரு கருத்தை எடுத்துவைத்தார்...அது உண்மையில் எனக்கு புதிய விஷயம், அது அதிர்ச்சியளிக்ககூடியதாக இருந்தது...

அவர் கூற்றுப்படி அட்டைப்பூச்சி (லீட்ச்) பூமியின் உயிரினம் அல்ல...எங்கொ வெளிகிரகத்தில் இருந்து பூமிக்கு வந்தது என்கிறார்..அவர் எடுத்து வைக்கும் வாதங்கள்..

1. அட்டைப்பூச்சி - புற உதா கதிர்களால் பார்க்கிறது...அட்டைப்பூச்சியின் கண்ணுக்கு ப்ரிடேட்டர் படத்தில் வரும் ஏலியனுக்கு தெரிவதுபோல்தான் தெரியும்..

2. சிறிய அதிர்வையும் கண்டுகொள்கிறது...

3. அட்டைப்பூச்சி சுவாசிப்பதில்லை..

4. அட்டைப்பூச்சி உணவு ஏதும் இல்லாமல் சுமார் ஒருவருடத்துக்கு மேல் வாழக்கூடியது..

5. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படும் ரத்தம் / உயிரினங்கள் அனைத்திலும் அதிகபட்ச சத்துக்கள் கொண்டது / அதனை மட்டுமே உண்டு வாழ்கிறது.

6. இனப்பெருக்கம் செய்ய யாரும் தேவையில்லை..முட்டைகளை ரத்தத்தில் வைத்து பாதுகாக்கிறது.

7. இரண்டாக வெட்டினாலும் அடுத்த பகுதி வளர்ந்துகொள்ளும்..அது தலையாக இருந்தாலும் வாலாக இருந்தாலும்..

இவ்வாறு பல விஷயங்களை கூறுகிறார்...

மழையால் குளிர்ந்த பூமியில், எப்படி அந்த முதல் உயிரினம் வந்தது...வானத்தில் இருந்தா குதித்திருக்கும் ? என்றால், ஆமாம்...அப்படித்தான் என்கிறார்...

என் எண்ணம் எல்லாம்..அதுதானே...எந்த ஒரு செயலுக்கும் ஏதாவது ஒரு ஆரம்ப புள்ளி இருக்கவேண்டுமே ? ஒரு செல் உயிரினம் அப்படியே தோன்றிவிட்டதா ? கடவுள் படைத்தார் என்று கட்டுக்கதையை எவ்வளவு நாள் நம்புவது ? கண்டிப்பாக உயிரினம் உள்ள ஏதோவொரு கிரகத்தில் இருந்துதான் வந்திருக்க வேண்டும்...அந்த வேறொரு கிரகத்துக்கு எப்படி வந்தது என்று ஆராய விரும்பவில்லை...

இரவு முழுவது அட்டைப்பூச்சி பற்றியே சிந்தனை...உங்கள் கருத்தை சொல்லுங்க....

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....