
பொதுவாக பாலிவுட் திரைப்படங்களில் உறவுச்சிக்கல்கள் ஆபாசமாக அமைந்திருக்கும். அடுத்தவன் மனைவியை லவ் பண்ணுவது (??), ஆனால் அவளோ புருசனை விடுத்து இன்னோருத்தனை லவ்வுவது, அவள் புருசனோ அவளை விட்டுவிட்டு இன்னொருத்தி பின்னால் போவது என, சமுதாயத்தில் மிக குறைவாக இருக்கும் செய்திகளை மிக மலிந்திருப்பது போல் காட்டி பணம் செய்வார்கள் பாலிவுட்டார்...
தென்னிந்திய அல்லது தமிழ் திரைப்படங்களில் இந்த ஆபாச விஷயங்கள் சற்று குறைவு தான் என்று சொல்லலாம். தென்னிந்தியர்கள் பொதுவாக குடும்ப உறவுமுறைக்கு மதிப்பு தருவதுடன், கலாச்சார வேலியில் ஓனான் ஏறிவிடாமல் கல் எறிபவர்கள். அதனால் தான் பாலசந்தர் பாலுமகேந்திராவின் சில முயற்சிகள் கூட தோற்றன..
ஆனால் இப்போது அந்த ஆபாச ரசாபாசங்களை டி.வி சீரியல்கள் அரங்கேற்றிவருவது, குடும்ப உறவுகளை சிதைக்க போதுமானதாக இருக்கிறது. என்னதான் சீரியலின் முடிவில் எல்லாம் சுபமாக காட்டினாலும், கொண்டு செல்லும் விதத்தில் பல அசிங்கங்களை அரங்கேற்றுகிறது டிவி சீரியல்கள்.
அழுகாச்சிகளையே எவ்வளவு நாள் காட்டுவது என்று இந்த ஆபாச அவதாரம் எடுத்துவிட்டார்கள் போலிருக்கிறது திருக்குமரன்கள். எத்தனை எத்தனை சீரியலடா அதில் எத்தனை எத்தனை ஆபாசமடா என்று நினைக்கையில், மகளிரும் சில சமயம் வலுக்கட்டாயமாக குழந்தைகளும் பார்க்கும் டி.வி சீரியல்களின் கதைக்கும் கருப்பொருளுக்கும் கட்டாய சென்சார் தேவை என்று தோன்றுகிறது...
வசந்தம் என்று ஒரு சீரியல்.
துளசி கல்யாணமான பெண். கணவன் ஆட்டோக்காரன். அதனால் வேலைபார்க்கும் அலுவலகத்தில் தன்னுடைய முதலாளியை காதலிக்கிறாள். முதலாளியோ இவளை எப்போது கொடைக்கானலுக்கு தள்ளிக்கொண்டு போகலாம் என்ற எண்ணத்தில் திரிகிறான்...
அத்திப்பூக்கள் என்று ஒரு சீரியல்.
மேகலா ஏற்கனவே விஸ்வத்தை காதலிக்கிறாள். ஆனால் மேகலா வேலை பார்க்கும் அலுவலக முதலாளி அவளை காதலிக்கிறான்.
வேறு சில கந்தாயங்கள்
ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ள ஒருவன், இன்னோருத்தியை காதலித்து திருட்டு கல்யாணம் செய்ய முயல்கிறான்.
ஏற்கனவே கல்யாணம் ஆகி டைவர்சும் ஆனவனின் ரெண்டாவது பொண்டாட்டியை பர்ஸ்ட் நைட் கொண்டாட விடாமல் தடுக்கிறாள் முதல் மனைவி.
ரெண்டு பொண்டாட்டிக்காரன் ஒருவன், ரெண்டாவது பொண்டாட்டியின் குறைகளை கண்டறிந்து அவளுக்கு பாடம் புகட்ட அவள் வீட்டுக்கு சொத்துக்களை உதறி குடியேறுகிறான். அவளுக்கு ஏற்கனவே நான்கு காதலர்கள் மட்டும்.
காதலிப்பவன் ஒருவன், தன்னுடைய காதலியின் தந்தை அவமானப்பட வேண்டும் என்பதற்காக பத்திரிக்கை அடித்து கல்யாண மேடைக்கு மணமகள் போகும் வரை காத்திருந்து, அப்புறமாக தள்ளிக்கொண்டு ஓடுகிறான்.
எங்கே பிராமணன் என்று சாதி பெயரை வைத்து ஒரு சீரியல். அதை தயாரிப்பது மண்டையில் முடி இல்லாத ஒரு தயாரிப்பாளர்.
மகள், மேகலா, அத்திப்பூக்கள், கோலங்கள், வசந்தம், அரசி, செல்வி என ஆபாசம், அசிங்கம் இல்லாத சீரியலை காதில் கூட கேள்விப்பட்டிருக்கமாட்டீர்...
டேய் டேய் டேய் என்று ஒவ்வொரு சீரியலிலும் ஒவ்வொரு ஆபாசங்கள், சமூக தளத்தில் ஒவ்வாத விஷயங்கள்.
பரபரப்பு வேண்டும் என்பதற்காக நியாயம் இல்லாத செயல்கள், அதனை நியாயப்படுத்தும் வசனங்கள்.
இது போன்ற சீரியல்களை வைத்த கண் வாங்காமல், கணவனுக்கு உணவளிக்கக்கூட நேரமில்லாமல், குழந்தைகளை பராமரிக்கக்கூட சரியான நேரத்தை ஒதுக்காமல் பார்க்கும் சமுதாயம், உருப்படுமா ?
தொலைக்காட்சி இன்றைக்கு வீட்டில் நுழைந்து, வரவேற்பறையில் அமர்ந்துவிட்ட ஒரு விஷயம்.
அதில் பொறுப்பான விஷயங்களை காட்டவேண்டும், நல்ல விஷயங்கள் மக்களை சென்று சேரவேண்டும் என்ற பொறுப்பு கொஞ்சமாவது இருக்கவேண்டும்..
<<<<< பி.கு : இந்த சீரியல்களை எல்லாம் நீ ஏன் பார்க்கிறாய் ? என்ற கேள்வியை கேட்காமல் ஓட்டு மட்டும் போட்டுவிட்டு போகவும் அக்காங் >>>>
வாக்களிக்க