Friday, April 28, 2006

"விஜய்காந்தை நம்பமாட்டோமாக.. - ரவி

இது விஜய்காந்தை நம்புவோமாக அப்படின்னு சிட்டுகுருவி எழுதியதுக்கு பதில்...

விஜயகாந்தை நம்பலாம் சரி...அவரிடம் உள்ள விசிலடிச்சான் குஞ்சுகளை நம்பி எப்படி ஆட்சியை கொடுப்பது...

இது என்ன காஷ்மீர் தீவிரவாதிகளை பக்கம் பக்கமா லியாகத் அலிகான் வசனத்தையும் புள்ளி விவரங்களையும் பேசி கொல்லற விஷயமா ?? ( அதுவும் தமிழ் ல ஹி ஹி )

2011 ல வேனா விஜயகாந்தை நம்பலாம்... ( அப்ப தனுஷ் கட்சி ஆரம்பிக்கரேன் னு அடம் புடிப்பார்..சிம்பு, கலைஞர் என்னோட குரு அப்படின்னு அ(று)றிவிப்பார்..அஜீத் ஏதாவது ஒரு சாதி கட்சியோட தமிழக தலைவரா மல்லு கட்டுவார்..விஜய் ஸ்டாலின் மகன் உதய நிதிக்கு முடிசூட்ட பாக்கறாங்கன்னு தி.மு.க வில இருந்து விலகி அ.தி.மு.க வில சேருவார் ( சங்கீதா முகத்துல சுரத்தே இருக்காது ஹி ஹி )

அதனால இப்ப விட்டுடுவோம் அவர..

Thursday, April 27, 2006

தமிழன் அவ்வளவு முட்டாளா தெரிகின்றானா குமுதத்துக்கு

குமுதம் இனைய இதழை படிக்க முயற்ச்சிக்கையில் உறுப்பினர்களுக்கு மட்டும் தான் என்று தெரிந்தது...

New Registration என்ற சுட்டியை தொட்டேன்..

அதில் முதல் கேள்வி Your e-mail id* -----------------

நியாயம் தான, இதுல என்ன உனக்கு ப்ரச்சனை னு கேக்கறீயளா ?

"Do not give kumudam.com " அப்படின்னு ஒரு வரி அதுக்கு கீழ இருக்கு..

ஏம்பா, மின்னஞ்சலுக்கும் இணைய முகவரிக்கும் வித்தியாசம் தெரியாதவனா தமிழன் ?

இத கேக்க யாருமே இல்லையா ? ( அதான் எழுதிட்டியே ரவி..தமிழ்மன தமிழர்கள் பூந்து விளையாடிடுவாங்க )

தயாநிதி அ.தி.மு.க வில் சேர்ந்தார்................

"திமுகவில் குடும்ப அரசியல்தான் நடக்கிறது!" - அதிமுகவில் இணைந்த தயாநிதி மாறன் பேச்சு.

திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் திமுகவிலிருந்து விலகி இன்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பிறகு நிருபர்களை சந்தித்த அவர் திமுகவில் குடும்ப ஆதாயங்களுக்கே முன்னுரிமை கொடுக்கபட்டு வருவதாக கூறினார். "கருணாநிதி தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கே பதவியும் செல்வாக்கும் இருக்க வேண்டும் என்று செயல்படுகிறார். ஆனால் அவர் என்னை போன்று கட்சிக்கு உழைத்தவர்களை கண்டுகொள்வதில்லை. தக்க சமயத்தில் நண்பர் நடராசர் எனக்கு திமுகவில் இழைக்கபட்ட கொடுமைகளை தெளிவு படுத்தியதால், திமுகவிற்கும், சன் டிவிக்கும் பாடம் புகட்ட அதிமுகவில் இனைந்திருக்கிறேன். என் முடிவை வரவேற்று, புரட்சி தலைவி அவர்கள் 'மிடாஸ்' மதுபான தொழிற்சாலையில் எனக்கு ஒரு கணிசமான பங்கு தருவதாக கூறி கவுரவப்படுத்தியுள்ளார். ஜெயா டிவியில் தினமும் ஒரு மணி நேரமாவது என் முகத்தை காட்ட ஆவன செய்யப்படும் என்று அருமைச் சகோதரர் டிடிவி தினகரன் வாக்குறுதி அளித்துள்ளார். அதிமுகவில் சேர்ந்த பிறகுதான் நான் மன நிம்மதியுடன் இருக்கிறேன்" என்று மேலும் கூறினார். தேர்தலுக்கு சிறிதும் சம்மந்தம் இல்லையென்றாலும், தெரியாவிட்டால் பலபேர் மண்டை வெடித்துவிடும் என்பதால் இனி அவரை சன் டிவியில் இருட்டடிப்பு செய்வார்களா என்ற முக்கிய கேள்விக்கு தான் கலராக இருப்பதால் அவ்வாறு செய்ய இயலாது என்றும், அவ்வாறு செய்தால் தான் பேசவிருக்கும் அதிமுக தேர்தல் பொது கூட்டங்களில் இதற்கு முழு முக்கியதுவம் கொடுக்க போவதாக அவர் கூறினார்.

"ஏய் தயாநிதி, நீ ஆம்பிள்.." என்று தீவிர பிரச்சாரத்தில் இருந்த வைகோவிற்கு அதிமுகவில் தயாநிதி மாறன் இணைந்த செய்தி துண்டுச்சிட்டின் மூலமாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர் பேசியதாவது: "தம்பி தயாநிதி மாறன் திமுகவில் இருந்தபோதும் அவர் மீது எனக்கு தனி அன்பு உண்டு. அந்த அன்பின் வெளிப்பாடாகத்தான் நான் அவரை 'ஏய்' என்றும், அவர் என்னை 'நீ','வா','போ' என்றும் பேசினோம். தயாநிதி மாறன் அதிமுகவில் சேர்ந்துவிட்டதால் இனி கலைஞரால் அம்மாவின் ஆட்சியையல்ல அவர்கள் வீட்டு டிவியில் சேனலைக்கூட மாற்ற முடியாது". தயாநிதி மாறன் டாட்டாவை மிரட்டிய விவகாரம் பற்றி நிருபர்கள் கேட்டதற்க்கு, இதை எழுப்பிய நாங்களே மறந்துவிட்டோம் நீங்கள் ஏன் இன்னும் கவலைப்படுகிறீர்கள் என்று பதிலளித்தார்.

சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி நிருபர்களை சந்தித்த போது "தயாநிதி மாறன், நடிகர் சரத்குமார் கூறியது போல திமுகவை தயாநிதி முன்னேற்ற கழகமாக(த.மு.க) பெயர் மாற்றும்படி நிர்பந்தம் செய்துவந்தார். தேர்தல் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில் இதை செய்தால் வீன் குழப்பம் நேரிடும் என்பதால் அதை மறுத்துவிட்டேன். இதை பெரிதாக்கி உளவுத்துறையை ஏவி தயாநிதி மாறனை அதிமுகவிற்க்கு இழுத்துவிட்டார்கள். பல கோடிகள் கைமாற்றபட்டதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. யார் மூலமாக யாருக்கு என்று என்னை கேட்காதிர்கள்" என்று கூறினார். தயாநிதி மாறன் டாட்டாவை மிரட்டினாரா என்ற கேள்விக்கு "அவர் டாட்டாவை மிரட்டினாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது ஆனால் அவர் தாத்தாவையே மிரட்டினார்" என்று பதிலளித்தார். "பேராண்டி பேர்-ஆண்டியான கதை" என்ற தலைப்பில் கலைஞரின் கவிதை இன்றைய முரசொலியில் வெளியிடப்பட்டுள்ளது.
--

போகிற போக்கை பார்த்தால் மேற்கண்டவாறு நடந்தாலும் வியப்பில்லை!!

இப்படி இட்லிவடை யில் எழுதி இருக்கிறார் ஒரு அனானி....படிச்சிட்டு ரொம்ப நேரம் சிரித்தேன்...

ரவி...

திருடனுக்கு டீ போட்டு தரலாமா ?

இது எங்க அய்யன பத்தினது...( சில பேர் அப்பாங்கறாங்க)...இப்ப உள்ள புள்ளங்க டாடீ ங்குங்க..அதுல சில பேருக்கு பெரும..அதாவது பெருமைக்கு பேயோட்டுவாங்க...ப்ரச்சன அது இல்ல..எங்க அய்யன் ஒரு போலீஸ் அதிகாரி..சில ஆண்டுகளுக்கு (2002) முன்னால நான் பாண்டிச்சேரியில வேல பாத்துக்கிட்டு இருந்தப்போ அவர் கடலூர் ல இருந்தார். அதனால நானும் அவரும் ஒண்னா தங்க வேண்டி வந்தது...

சனி ஞாயிறு விடுமுறை..அப்போ நான் வீட்டுல அவரோட இருக்க வேண்டி வரும்..ரொம்ம கடுமையானவர் எல்லாம் கிடையாது..எதாவது கம்யூட்டர நோண்டறது, சமையல் பண்றது அப்படின்னு காமடி பண்ணிக்கிட்டு திரிவார்..

மேட்டருக்கு வர்ரேன்...

அவர பாக்க நிரய பேர் வருவாங்க..எல்லாருக்கும் டீ போடறது, ஸ்னாக்ஸ் தற்ரது எல்லாம் பண்னுவேன்..போலீஸ் காரங்க தவிர சில பார்ட்டிங்க வரும்..அழுக்கு வேட்டி, கிழிஞ்ச சட்டை, வாழ்க்கையில இவன் தலை வாரி இருக்கவே மாட்டான் அப்படின்னு சொல்லற மாதிரி ஒரு மண்டை..சத்தியமே பண்னலாம், இவன் கடந்த பத்து நாளா குளிச்சி இருக்க மாட்டான் அப்படின்னு...

இவங்க வந்தாலும் சோபாவுல உக்காருங்க, வாங்க வாங்க அப்படின்னு மரியாதை பறக்கும்...டேய்...சாருக்கு டீ போடு டா..ப்ரிட்ஜ் ல இருந்து ஸ்னாக்ஸ் எடுத்து குடு..பேன் போடு...அப்படின்னு ஒரே ஆர்ப்பாட்டம் பண்னுவார்...

எனக்கா..ஏகத்துக்கும் கடுப்பு ஏறும்..

அவங்க போனதுக்கு அப்புறம், கேப்பேன்...வந்துட்டு போன சார் என்ன பிசினஸ் பண்றாரு...இல்ல என்ன பண்னிக்கிட்டு இருந்தாரு...

அய்யன் பதில் என்ன தெரியுமா...இவர் நம்ம அர்பன் பேங்ல கொள்ள அடிச்சவர் டா..இப்ப திருந்தி பாண்டியில இருந்து சாரயம் கடத்தி வித்துகிட்டு இருக்காரு..

இந்த மாதிரி ஒரு பதில் வரும்..அதாவது பெரிய தப்பு பண்ணிக்கிட்டு இருந்தவர திருத்திட்டாராம் எங்க அய்யன்...

என்னுடைய கேள்வி என்னனா, ஒரு முறை குற்றம் செஞ்சவன் திருந்துவானா என்ன ???

Wednesday, April 26, 2006

தோழி.காம் இல் கவிதா...

திரைப்படங்களில் பெண்கள் சித்தரிக்கப்படும் விதம் பற்றித் திரும்பத் திரும்ப எழுதுவது சலிப்பைத் தரும் விஷயமாகவே இருக்கிறது. ஆனால் நம் திரைப்பட இயக்குநர்கள் பெண்களை அசிங்கமாக சித்தரிப்பதை எந்த வித அலுப்பும் இல்லாமல் தொடர்ந்து தங்கள் படங்களில் செய்யும்போது அதை எதிர்த்துக் குறைந்தபட்சம் தொடர்ந்து கட்டுரைகளாவது எழுதுவது தார்மீகக் கடமையாகத் தோன்றுகிறது.
தமிழ்த் திரையுலகின் சமீபத்திய கண்டுபிடிப்பு என்ன தெரியுமா? பெண்களுக்கு அழகு இருந்தால் போதும். படிப்பு, பட்டமெல்லாம் தேவையில்லை. பரமசிவன் படத்தில் தனக்கு படிப்பு இல்லை என்று வருந்தும் கதாநாயகி லைலாவுக்கு கதாநாயகன் அஜீத் தரும் அறிவுரை இது: _"பட்டம் இல்லேன்னெல்லாம் எதுக்கு வருத்தப்படறீங்க? உங்க அழகே உங்களுக்கு போதும்._"

அஜீத்தின் அறிவுரை எதை நினைவுபடுத்துகிறது? அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்ற அரதப் பழசான வாதத்தைத்தான். பல சிக்கல்கள், தடைகள் தாண்டி பெண்கள் இப்போதுதான் தங்கள் இருப்பை ஸ்திரப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம் திரைப்படங்கள் பெண்களை மீண்டும் அடுப்படிக்குள் தள்ளும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. அதன் இன்னொரு விளைவுதான் பரமசிவன்.


எம்.ஜி.ஆர்., ரஜினி, விஜய் போல அடாவடியாக இல்லாமல் இதில் அஜீத் ஆறுதலுக்காக இப்படி ஒரு வசனத்தை அவிழ்த்து விடுகிறார். விஷத்தை வலுக்கட்டாயமாகத் தொண்டைக்குள் திணித்தாலும் பாயசத்தில் கலந்து பரிவோடு கொடுத்தாலும் விளைவு ஒன்றுதான். பெண்களை இழிவுபடுத்தியோ மட்டம் தட்டியோ பேசுவதுதான் ஹீரோயிசம் என்று நம் இயக்குனர்களும் கதாநாயகர்களும் நினைக்கும் அவலம் என்றுதான் முடிவுக்கு வருமோ தெரியவில்லை.
பெண்கள் என்று மட்டுமில்லை. இப்போது வரும் படங்களில் பல சமூக ரீதியான பிரச்சினைகளும் இருக்கின்றன. குட்டி ரேவதி சர்ச்சைக்காக சமீபத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட சண்டக்கோழி படத்தில் நம் கவனத்துக்கு வராமல் போன ஆபத்தான விஷயங்கள் பல இருக்கின்றன. தமிழ்த் திரைப்படங்கள் ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சமூகத்தை இது வரை இலைமறை காய்மறையாக மட்டுமே புகழ்ந்துவந்தன. சண்டக்கோழி அதை மிக வெளிப்படையாக செய்கிறது.

திரைப்படங்களில் சாதீய வன்முறையின் வெளிப்படையான குறியீடாகத்தான் சண்டக்கோழி படத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இதை எதிர்த்து இது வரை பெரிய அளவில் எந்தக் குரலும் ஒலிக்காதது வேதனையான விஷயம். குட்டி ரேவதி சர்ச்சையைத் தொடர்ந்து சென்னையில் நடந்த 'திரைப்படங்களில் பெண்கள் மீதான வன்முறை' குறித்த கருத்தரங்கத்தில் இந்தப் போக்கை எதிர்த்து ஒரு தீர்மானம் இயற்றப்பட்டது ஓர் ஆறுதல்.

தமிழ்த் திரைப்படங்களில் பெண்கள் மீதான வன்முறையும் சாதீய வன்முறையும் அதிகரித்து வரும் அவலமான காலகட்டம் இது. வெறும் பொழுதுபோக்கு ஊடகம் என்பதைத் தாண்டி சமூகத்தில் பல நச்சுகளை விதைக்கத் தொடங்கியிருக்கின்றன திரைப்படங்கள். இப்போதே இதை எதிர்த்துக் குரல் எழுப்பாவிட்டால் நாம் விபரீதமான விளைவுகளையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.


* * *

திரையுலகத்தைத் திருத்த என்ன வழி? எப்படி எதிர்ப்பு தெரிவிக்கலாம்? பெண்களைக் கேவலப்படுத்தும் வசனங்களையும் காட்சிகளையும் கொண்ட திரைப்படங்களைப் புறக்கணிப்பது பலனளிக்குமா? உங்கள் யோசனைகளைச் சொல்லுங்கள்!

என்னோட பின்னூட்டம் ( பதிவ தேடிக்கிட்டு இருக்கேன்)

மிக அழுத்தமான பதிவு..எனக்கு தெரிஞ்சத சொல்லுவேன்..

மதலேன் மரியாள் ( இது தான் வீரமாமுனிவர் கொடுத்த பெயர் ) பல இடங்களில் வருகிற ஒரு பெயர்.

அவருக்கு ஒரு சகோதரியும் ஒரு சகோதரனும் உண்டு என்று காண்கிறோம்..

கிருஸ்து உயிர்த்து எழுந்ததாக சொல்லப்படும் நிகழ்ச்சியை இராயப்பர், மற்றும் அருளப்பர் ( கிருஸ்துவின் அன்புக்கு உரிய சீடர் என்று பைபிள் சொல்லும் நபர்) ஆகியவர்களுக்கு முதலில் அறிவித்தவர் மதலேன் மரியாள்..காரணம் மூண்றாம் நாள் சடங்குக்காக அதி காலையில் கல்லரையை அடைகிறார்..

இதற்க்கு முன்பு, ஒரு விருந்துக்கு முன்னதாக இயேசுவின் கால்களை விலை உயர்ந்த நறுமண தைலத்தால் கழுவி, தன் கூந்தலால் துடைக்கிறாள். இதனை இயேசுவை காட்டி கொடுத்ததாக சொல்லப்படும் யூதாஸ் ஸ்காரியேத்து கண்டிக்கிறார். யூதாஸ் சொல்லும் காரணம் அந்த பணத்தில் ஏழைகளுக்கு உதவி செய்யலாமே என்பதாகும்.ஆனால் இயேசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ( ஆதாரம் : பைபிள்)

இயேசு மதலேன் மரியாளின் வீட்டில் மட்டும் தங்கியதாக குறிப்புகள் உண்டு...

மேலும் இயேசு எந்த பெண்னோடும் பேசும் வழக்கம் கொண்டவர் அல்லர்..ஒரு சம்பவம் பைபிளிள் இடம் பெறுகிறது..இயேசு ஒரு சமாரியப் பெண்ணுடன் பேசும் சம்பவம். இந்த நிகழ்ச்சியை காணும் உணவு வாங்கி வர போய் திரும்பிய அவரது சீடர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்..ஆனால் அவர் அந்த பெண்ணுடன் என்ன பேசினார் என்று எவரும் கேட்க வில்லை...ஆனால் அவர் நிலை வாழ்வை கொடுக்கும் தண்ணீரை பற்றி பேசியதாக அந்த பெண் அறிவிக்கிறார்..

மதலேன் மரியாளின் சகோதரன் இறக்கும் சம்பவம் பைபிளிள் இடம் பெறுகிறது..இயேசு இதனால் மனம் உடைந்து அழுததாக அறிகிறோம்..இயேசு மனம் உடைந்து அழுததாக வேறு ஒரே இடத்தில் தான் குறிப்பு உண்டு..அது கெத்சமெனி தேட்டத்தில் ரத்த வியர்வை சிந்தி அழுத இடம்..சிலுவையில் மரிக்கும்போது கூட இயேசு அழுததாக காண கிடைக்கவில்லை..

மேலும் அவர் மதலேன் மரியாளின் சகோதரரை உயிர்ப்பித்ததாக காண கிடைக்கிறது...

மேலும் அவர் தன் தாயை தன் சீடரிடம் ஒப்படைக்கும் தருணத்தில் (சிலுவையில் மரிக்கும்போது) மதலேன் மரியாள் இல்லையே ? இது கூட சிந்திக்க வேண்டிய விஷயம்..

டாவின்சி கடைசி இரவு உணவு சம்பவத்தை கண்ணால் கண்டவர் இல்லையே ? அதனால் அவரது கற்ப்பனை ஒவியம் கேள்விக்கு உரியது...

Tuesday, April 25, 2006

மாயவரத்தான் (ஹிந்தி எதிர்ப்பு) பதிவும் என்னோட பதிலும்..

பதிவு இங்கே...

http://mayavarathaan.blogspot.com/2006/04/2006-287.html

இந்த மாதிரி ஒரு தலைப்ப தானே இவ்வளவு நாள் எதிர் பார்த்தேன்...

இந்த திருக்குவள கிழவர ( கிழவர்தான ??) ரயில உட்டு நசுக்கி கொண்ணு இருந்தா நான் இப்படி கஷ்டபட வேண்டி இருந்து இருக்காது..

//ஒரு தலைமுறையையே ஹிந்தி படிக்க முடியல.//

இது கொப்புரான சத்தியமா உண்மை..மாயவரத்தாருக்கு எடுத்துக்காட்டு வேணுமா...என் பேர சொல்லுங்க...எவன் என்ன சப்ப கட்டு கட்டினாலும் நான் இருக்கேன்..

என்னால ஹிந்தி பேச முடியாது..என் வயசு கார தமிழர்கள் யாராலயும் பேச முடியாது..கொஞ்சம் வசதியான வீட்டு பசங்க அல்லது அய்யர் வீட்டு பசங்க அல்லது அரசு வேலைல இருந்தவங்க வீட்டு பசங்க ஹிந்தி படிச்சாங்க..ஆனா எல்லாரும் இல்ல..

படிச்சு முடிச்சு பெங்களூருக்கு வேல தேடி வந்தா, எல்லாருக்கும் ஹிந்தி தெரியுது...வேலயில சேந்து கொஞ்சம் உயர முயற்ச்சி எடுத்தா என்ன சுத்தி இருக்க எல்லாரும் ( மானேஜர் உள்பட) எல்லாரும் ஹிந்தி காரன் தான்...என்ன தான் திறமை இருந்தாலும் அவன் மொழி பேசுனாதான் மதிக்கறான்...

வெட்டி பய அனானி, பால்ராசு, அருன்மொழி இவங்களுக்கு சொல்லறது என்ன தெரியுமா ? மும்பை போங்க..தெலுங்கு தேசம் போங்க..கொஞ்ச நாள் இருந்து பாருங்க...அப்ப தெரியும்...சும்மா எதிர்(ப்பு) கருத்து போடனும் அப்படிங்கறதுக்காக கண்டத எழுதாதீங்க..

ஹிந்தி பேசனும்னு நினைக்கறது நல்ல ஹிந்தி பிகர டாவடிக்கறதுக்கு இல்ல ராசா...எல்லாருக்கும் தெரியர பாஷ நமக்கு தெரியல...அதுக்கு காரணம் ஒரு சட்டி பயலோட வெட்டி அரசியல்..

இன்னும் வாயில என்ன எனமோ வருது..

/////நான் கல்லூரியில் படித்தது 80களில். அது ஒரு அரசு கலை கல்லூரி. அங்கும் ஹிந்தி படிக்க வாய்ப்பு இருந்தது.////

நான் கல்லூரியில் படித்தது 98 களில்..அங்கு ஹிந்தி படிக்க வாய்ப்பு இல்லையே...இதுக்கு என்ன பதில்...

லக்கிலூக்கு..
////திமுகவின் சமூகநீதி கொள்கைகளால் தங்கள் அதிகாரம் பறிபோன பிராமண சமூகம் திமுகவுக்கு எதிராக சேறு வாரி பூச நினைக்கிறது... மே8ல் தமிழர்கள் அவர்களுக்கு சேறு பூச போகிறார்கள்.... //////

என்னய்யா உங்க சமூகநீதி கொள்க ? சுத்த பேத்தல் இது...நான் ப்ராமின் கிடயாது..திமுகவின் ( மட்டமான) சமூகநீதி கொள்கைகளால் பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவி (அட பாவி)

தயாநிதி ஹிந்தி படிக்கட்டும் என்ன வேனா பண்னட்டும்..எனக்கு எதுவும் இல்ல...என்ன ஏண்டா படிக்க விடல..

பதில் சொல்லுங்க சமூகநீதி கொள்(ளை)கையாளர்களே.....
http://mayavarathaan.blogspot.com/2006/04/2006-287.html

Monday, April 24, 2006

ஒரு பொண்னு உங்கள மறுக்கும்போது..

10) உன்னை என் சகோதரன் போல நினைத்துக்கொண்டிருக்கிறேன். (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

9) நமக்குள் ஒரளவுக்கு வயசு வித்தியாசம் இருக்கிறது (நீ என் அப்பா மாதிரி இருக்கிறாய், அல்லது உனக்கு வழுக்கை விழுந்துவிட்டது)

8) உன் மேல் எனக்கு 'அதுமாதிரி ' கவர்ச்சி இல்லை (நீ மிகவும் அசிங்கமாக இருக்கிறாய்)

7) என் வாழ்க்கை தற்சமயம் மகா சிக்கலாக இருக்கிறது (எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள்)

6) எனக்கு ஏற்கெனவே ஒரு ஆண் நண்பன் இருக்கிறான் (உன்னைப் பார்த்தால் என் வீட்டுப் பூனையும் குல்பி ஐஸ் ம் மேல்)

5) நான் வேலை செய்யும் இடத்திலேயே ஒரு ஆளை காதலிப்பதை விரும்புவதில்லை (நீ உலகத்திலேயே, அல்லது இந்த பேரண்டத்திலேயே ஒரே ஒரு ஆண்மகனாக இருந்தாலும் உன்னை காதலிக்க மாட்டேன், ஒரே கட்டிடத்தில் இருக்கிறோம் என்பதற்காக காதலித்துவிடுவேனா ?)

4) நீ காரணமில்லை, நான்தான் காரணம் ( நீதான் காரணம்)

3) இப்போதைக்கு என் வேலையில் முன்னேற உழைத்துக்கொண்டிருக்கிறேன் (மகா அலுப்படிக்கும் என் வேலையே உன்னை விட பரவாயில்லை)

2) நான் திருமனம் செய்து கொள்ளவேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன் (உன்னைப் போன்ற ஆட்கள் இருப்பதால்தான்) எல்லாவற்றிலும் தலையாய சொல்லப்படும் காரணம்.....

1) நாம் நண்பர்களாக இருப்போம் (நான் உன் கூடவே இருந்து நான் சந்திக்கும் ஆண்களைப் பற்றி எல்லாம் புகழ்ந்து உன்னை வெறுப்பேற்றத்தான்)

http://www.thinnai.com/ ல இருந்து எடுத்தேன்....நம்ம ஆளு இதுல முக்கா வாசி டெலிவர் பண்ணிடுச்சி....இன்னும் கொஞ்ஞம் தான் பாக்கி... நான் செய்தது ஒரு சின்ன மாற்றம். அருண் ஐஸ் என்று ஒர்ஜினல் பதிவில் இருந்தது..நான் மாட்றியது குல்பி ஐஸ்....

கொரங்கு லவ்வுது...

நானு ஒரு வேல விஷயமா தாய்லாந்து ல இருக்கேன்...இங்க ஓட்டல் ரூம்ல ஒரு படம் பாத்தேன்....king Kong...இந்த படத்த நான் பெங்களூர்ல இருக்கும் போதே பாக்கனும்னு நினச்சேன்...ஆனா முடியல....

இந்த படத்துல ஒரு பெரிய size குரங்கு ஒரு செவத்த புள்ள மேல ஆச பட்டுடுது..அந்த பொண்ண காப்பாத்த போயி வில்லன் க்ரூப் கிட்ட மாட்டிக்குது....

கடைசியில உயரமான பில்டிங் மேல ரொமான்டிக் லுக் உட்டுக்கினு பிராணன உடுது....

அடங் கொக்க மக்கா...கொரங்கு லவ்வு கூட பெய்லியர் ஆகிடுச்சே....எவனோ ஹாலிவுட் பாலா எடுத்திருப்பானோ ??

Tuesday, April 18, 2006

என்னை உருக்கும் தமிழ் பாடல்கள் !!!!

எல்லாருக்கும் பாட்டு கேக்க பிடிக்கும்....மென்மையான இசையை ரசிக்காதவங்க யாரிருக்கா ? எனக்கும் இசையை ரசிப்பது ரொம்ப விருப்பமான விஷயம் தான்...புதிய தமிழ் பாடல்கள் அவ்வளவாக என்னை கவர வில்லை என்றாலும் பழய தமிழ் பாடல்களை ரசிக்கும்போது ஏற்ப்படும் இன்பமே தனி தான்....

யாரோ சொன்னாங்களாம்....

"செவிக்குணவு இல்லதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்...." அப்படின்னு....

என்னோட சின்ன இதயம் நல்ல தமிழ் பாடல்களை கேட்கும்போது உருகும்....யார் இசை அமைத்தது, எந்த திரைப்படம், யார் பாடியது, யார் நடிதது எதுவும் எனக்கு தெரியாது...

வரிசைபடுத்தி சொல்ல முடியாது...எனக்கு என்ன ரசனை என்று எனக்கே தெரியாது...எந்த பாட்டு என்ன ராகம் - சுத்தமா தெரியாது...எனக்கு தெரிந்தது எல்லாம் ரசிக்க மட்டுமே.....

பொன்னை விரும்பும் பூமியிலே...என்னை விரும்பும் ஓர் உயிரே....என்ன அழகான வரிகள்.....

உன்னை கானாத கண்னும் கண்ணல்ல...உன்னை என்னாத நெஞ்சும் நெஞ்சல்ல......உயிரை உருக்கும் வரிகளன்ரோ.....

நேற்றுமுதல் நீ யாரோ நான் யாரோ...இன்று முதல் நீ வேறோ நான் வேறோ...காதலின் ஆரம்பத்தை வேறு யார் இதை விட அழகாக சொல்ல முடியும்.....

பாட்டு தலைவன் பாடினால் பாட்டுதான்...கேட்டு ரசிக்க.....பாடலின் ஆரம்பமே உற்சாகத்தின் ஊற்றில் நனைவது போல் உள்ளதன்ரோ.....

சொல்லத்துடிக்குது மனசு...சுகம் அள்ள துடிக்கிர வயசு.....நூறு வயாக்ரா மாத்திரை சாப்பிட்டமாதிரி உற்சாகம் அள்ளுகிரதே.....

கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம்....கடலை வானம் கொள்ளை அடித்தால் மேகம் என்று அர்த்தம்....வைரமுத்துவின் வைர வரிகளை பாருங்கள்.....

விழிகளின் அருகினில் வானம்..வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்...இது ஐந்து புலன்களின் எக்கம்...இது அதிசய அனுபவம் ஹொ யெ...என்ன ஒரு உயிர்ப்பு இந்த வரிகளில்.....

மேகம் கருக்குது மழைவர பாக்குது...வீசி அடிக்குது காத்து....பாடலை கேட்கும்பொழுதே லேசாக குளிர்வது போல இருக்கிறதா ???

ஏரிக்கரை பூங்காற்றே...நீ போற வழி தென் கிழக்கு....தென் கிழக்கு வாசமல்லி...அட அட அட....பாக்கியராஜ் கற்பனையில் / இசையில் உருவாகி கருவாகி நம் காதுகளை வந்து அடைந்த இந்த பாடல்...யாரால் மறக்க முடியும்.....

suppose உன்ன காதலிச்சு suppose நானும் பேதலிச்சு...suppose என்ன கட்டிகோன்னா என்ன செய்வாய்....மனம் துள்ளுது இல்லையா....

m.s.v, இளையராஜா, ரகுமான் ஆகியவரின் இசையில் பல காலதால் அழியாத பாடல்கள் என் மனதில் தங்கி விட்டன.....மற்றவர் இசையிலும் பல பாடல்கள் பிடிக்கும்....

- தொடரும்....

துரியோதனன் நட்பு கதை

கர்ணன் முன்பாக துரியன் மனைவி. இருவரும் சொக்கட்டான் ஆடுகிறார்கள். கர்ணனுக்கு கை ஓங்கி இருக்கிறது ஆட்டத்தில்... அந்த நேரம்... கர்ணனின் பின்னால் இருந்த பக்கமாய் துரியன் வருகிறான். அதைக் கண்ட பானுமதி எழ முயல... அதை அறியாத கர்ணன் அவள் ஆட்டத்தில் தோற்பதால் விலகுவதாய் நினைத்து... எங்கே போகிறாய் என்று அவளை இழுத்து உட்கார வைக்க முயல... அவன் கை அவள் இடையில் இருக்கும் மணி மேகலையில் பட்டு முத்து அறுந்து கூடம் எங்கும் சிதறுகிறது. அப்புறம் தான் பின்னால் வந்த நண்பனைக் கவனிக்கிறான்....


இப்போது இருவரின் நிலை பரிதாபம்... நிற்பவன் அரசன்... அடைக்கலம் தந்து வாழ்வித்தவன்... அவன் முன்னால் அவன் மனைவி மடி பிடித்து இழுத்து மேகலை அறுந்து போகுமாறு செய்தவனை மன்னிப்பானா என்று கர்ணனும், என்ன சொல்லுவானோ கணவன் என்ற அச்சத்தில் பானுமதியும் நிற்க...

துரியன் சொல்கிறான்... கர்ணா... எடுக்கவா கோர்க்கவா என்று.....

அதில் பொதிந்த அர்த்தம் தான் என்ன....


சிதறிய முத்துக்களை எடுக்க நிதானம் வேண்டும். கோபம் கொண்ட மனதில் நிதானம் வராது. எடுக்கும் போதே முத்து வழுக்கும், அதனால் கோபம் அதிகமாகும்... கோபத்தை வெகுவாக அடக்கி அதை எடுத்தப் பின்னாலும் மனதில் சற்றேனும் சலனம் இருப்பதாய் நீங்கள் நினைத்தால்... எடுத்த அந்த முத்தைக் கோர்ப்பேன்...


சலனமடைந்த மனதால் அந்த நுண்ணிய செயல் செய்ய இயலாது... நண்பனே...


என் சகியே... சொல்லுங்கள் எடுக்கட்டுமா கோர்க்கட்டுமா என்று. இருவரும் தீயவர்கள் தான்... ஆனாலும் அவர்களிடையே இருந்த நற்பண்புகளையும் எடுத்துக் காட்டியது. ஒரு சிறந்த நட்புக்கு பரிணாமம் காட்டியது..

மஹாபாரதம்

இங்க இருந்து எடுத்தேன்..http://iyappan.blogspot.com/

Monday, April 17, 2006

தமிழ் தொண்மையான மொழியா ? ஒர் ஆராய்ச்சி !!!

என்னுடய நன்பனொருவன் கேள்விக்கு பதில் கொடுக்கும் முகமாக இந்த பதிவு...முதல்ல எனக்கு தேவை ஆதாரம்...ஒலை சுவடி அல்லது கல்வெட்டு எதாவது...google ல தேடலாமா ? ஹி ஹி ஹி

போலி டோண்டு

சரி. தமிழ் இணைய உலகிற்க்கு வந்தாயிற்று...எத பத்தி எழுதறது ? தூய தமிழ் ல எழுதறதா இல்ல LOCAL தமிழ் ல எழுதறதா அப்படின்னு ஒரே குழப்பம். ஒரு வழியா என்ன தமிழ் தட்டச்சு செய்ய முடியுதோ அந்த தமிழ் ல எழுதறது அப்படின்னு முடிவு செய்தேன்.

சரி. இப்பொ என்ன எழுதறது ?? அப்படின்னு முடிவு செய்யனும். எதயாவது எழுதி டாக்டர் பட்டம் வாங்குர அளவுக்கு போகனும். அது தான் நம்ம லட்சியம்.

இணையத்துல இப்போ என்ன ரொம்ப பிரபலமான டாப்பிக்...???

வந்துடேன்யா !!! வந்துடேன்யா !!!


நானும் ஒரு பதிவு ஆரம்பிக்க வேண்டிய கட்டயம் எதுவும் இப்போ இல்ல தான்....இருந்தாலும் நமக்கே நமக்காக ஒரு பதிவு இருந்தா நல்லா இருக்கும்னு தோனுச்சி...சொந்த வீடு மாதிரி. இந்த பதிவ படிக்கரவங்க எதாவது பிழை இருந்தா மன்னிக்க வேண்டுகிரேன்.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....